உன்னை
மட்டும் எண்ணி
என் நாட்கள் கடந்திட
உன் உயிர் என்னுள்
சங்கமிப்பது எப்போதடி...??
இப்போது ஆதிரா சற்று நடக்கத்தொடங்கியிருந்தாள்... தன் கணவனின் தரமான கவனிப்பாலும் சீக்கிரம் குணமாகிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்ததாலும் இப்போது நடக்கத்தொடங்கியிருந்தாள்....
ஒருநாள் தனது லாப்டொப்பில் மும்முரமாயிருந்த ஷாகரின் அருகே மெதுவாக நடந்து வந்த ஆதிராவை கண்டவன் அவளக்கு தன் கையை கொடுத்து அவள் அமர்வதற்கு உதவியவன் மீண்டும் தன் வேலையில் மூழ்கிவிட அதை பார்த்த ஆதிரா
“ஆபிஸ் வர்க்கா ஷாகர்??”
“ஆமா ஆது...”
“இப்போ ஆபிஸ் போகலாமே ஷாகர்.. இப்போ தான் எனக்கு சரியாகிடுச்சே...” என்று ஆதிரா கேட்டாள்..
ஏற்கனவே ஆபிஸ் போகவில்லையா என்று ஆதிரா கேட்டதுக்கு ஷாகர் அவளுக்கு முழுதாய் குணமாகும் வரை ஆபிஸ் வேலையை வீட்டிலிருந்தே பார்க்கபோவதாக கூறினான்.. அதனால் ஆதிரா அதை பற்றி மறுபடியும் விசாரிக்கவில்லை... இப்போது தனக்கு குணமாகியபின்னும் ஷாகர் வீட்டிலிருக்கவே அவள் அவ்வாறு கேட்டாள்..
“எந்த ஆபிஸிக்கு போகச்சொல்லுற ஆது??”
“என்ன விளையாட்டு இது ஷாகர்??”
“ஹேய்.. இதுல என்ன விளையாட்டு இருக்குமா??”
“ஷாகர் நான் சீரியஸாக தான் கேட்குறேன்.. நம்ம ஆபிஸிற்கு போகலையா??”
“இல்லை பேபி...நான் ரிசைன் பண்ணிட்டேன்...”
“என்னது ரிசைன் பண்ணிட்டீங்களா?? என்ன சொல்லுறீங்க ஷாகர்...??”
“ஆமா பேபி...நான் என்னோட எம்.டி போஸ்டை ரிசைன் பண்ணிட்டேன்..”
“ஏன் ஷாகர் அப்படி பண்ணீங்க?? மாமா எப்படி நீங்க இல்லாமல் தனியாக சமாளிப்பாங்க..??”
“ஹேய் அது எனக்கு முன்னாடி அப்பா கவனிச்சிக்கிட்ட கம்பனிமா... அவருக்கு தெரியாததா???”
“என்ன ஷாகர் இப்படி பொறுப்பில்லாமல் பேசுறீங்க??”
“ஹேய் என்னை வேறென்ன பண்ண சொல்லுற??? வீட்டை விட்டு வந்தபிறகு எந்த உரிமையில கம்பனிக்கு போகமுடியும்??? அதான் அப்பாவா சொல்றதுக்கு முதல்ல நானா என்னோட போஸ்டை ரிசைன் பண்ணிட்டேன். உன்னோட ரெசிக்னேஷன் லெட்டரையும் அப்பாவுக்கு மெயில் பண்ணிட்டேன்...”
“நீங்க பண்ணது ரொம்ப தப்பு ஷாகர்.. குடும்ப பிரச்சினையை ஆபிஸ் வரைக்கும் கொண்டு போறது தப்பு ஷாகர்.. இப்போ ஆபிஸ்ல அவ்வளவு பேருக்கும் நம்ம பிரச்சினை தெரிந்திருக்கும் ஷாகர்...” என்று வருத்தத்துடன் ஆதிரா கூற ஷாகரோ
“இங்க பாரு ஆதிரா.. அப்பாவோட பிசினஸ்ஸை நான் டேக் ஓவர் பண்ணது அவரோட சந்தோஷத்துக்காக தான்.. ஆனா எனக்கு அதுல எந்த இன்ட்ரஸ்டுமே இல்லை.... ஏன்னா எந்தவொரு வெற்றியிலும் மிஸ்டர் பிரகஸ்பதியோட சன் அப்படினு தான் என்னை ரெகக்னைஸ் பண்றாங்க... எனக்கு அப்படியொரு மரியாதை தேவையில்லை.. எனக்கான தனி அடையாளத்தை உருவாக்கனும்னு தான் எனக்கு ஆசை... அதுக்கான சரியான நேரம் இது தான்னு எனக்கு தோன்றுது..”
“ஷாகர் நீங்க புரியாமல் பேசுறீங்க...இதை நீங்க நம்ம பிரச்சினைக்கு முதல்லயே செய்திருந்தீங்கனா அது உங்களோட வெற்றி.. ஆனா இப்போ நீங்க இப்படி பண்ணுறதை உங்க குடும்பத்தவர்கள் வேற மாதிரி தான் பார்ப்பாங்க.. நான் உங்களை அவங்ககிட்ட இருந்து பிரிக்கத்தான் இப்படி செய்ய சொல்றதா நினைப்பாங்க.. ப்ளீஸ் ஷாகர்.. மறுபடியும் ஆபிஸ் போங்க... நம்ம பிரச்சினை எல்லாம் முடிந்ததும் இதை பத்தி யோசிக்கலாம்....”
“நோ ஆது...மறுபடியும் ஆபிஸ் போனா என்னால என்னோட ட்ரீமை அசீவ் பண்ணமுடியாது... சோ இது தான் என்னோ மிஸனை எக்சிகியூட் பண்ண சரியான நேரம்.. சோ ப்ளீஸ் என்னை தடுக்காத... நிச்சயம் அம்மாவும் அப்பாவும் என்னை புரிஞ்சிப்பாங்க....”
“ஷாகர்.. சொன்னா...”
“இல்லை ஆதிரா.. இது தான் என்னோட முடிவு... எதுக்காகவும் நான் என்னோட முடிவை மாத்திக்கிறதா இல்லை.. அப்பாவோட உதவி இல்லாமல் இதை நான் செய்யபோறேன்.. நீ எனக்கு உதவியாக இருந்தா நிச்சயம் என்னால ஜெயிக்க முடியும்...சோ நோ மோர் ஆர்கியூமென்ட்ஸ்..” என்று ஷாகர் அறுதியும் இறுதியுமாய் கூற ஆதிராவிற்கு அதற்கு மேல் எதுவும் சொல்லமுடியவில்லை...
வசுமதியை நாடியவளுக்கும் எந்த உதவியும் கிட்டாமல் போக ஷாகர் விருப்பப்படி அவனுக்கு உதவுவதற்கு முன் வந்தாள்...
ஒரு நாள் ஷாகர் ஆதிராவிடம்
“ஆது.... ஒரு சூப்பர் மார்கெட் விலைக்கு வருது. அதை வாங்கலாம்னு நினைக்கிறேன்..நீ என்ன நினைக்கிற??”
“எந்த இடத்துல ஷாகர்...?”
“xxxxxxxxx இந்த இடத்துல for sale னு போர்ட் போட்டு இருந்தாங்க.... போய் விசாரிச்சு பார்த்தப்போ கம்மி ரேட்டுல கொடுக்குறதா சொல்றாங்க... அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு...”
“அந்த ஏரியால எல்லாம இடத்துக்கும் நல்ல டிமாண்ட்.... ஆனா ஏன் கம்மி விலைக்கு விற்கிறாங்க..?”
“அதே டவுட்டு தான் எனக்கும்.. அதான் ஆத்விகிட்ட சொல்லி விசாரிக்க சொல்லியிருக்கேன்...பார்ப்போம்...”
“ஷாகர்... அந்த கடையோட அட்ரஸை எனக்கு வாட்சப் பண்ணுங்க... நானும் யார்கிட்டயாவது விசாரிக்கிறேன்...” என்று ஆதிரா ஷாகரிடமிருந்து அந்த கடையின் அட்ரஸை வாங்கியவள் நேரே சென்று அந்த கடையை பார்வையிட்டாள்......
பெரிய இடம் என்றபோதிலும் அந்த சூப்பர் மார்க்கட் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் நஷ்டத்தில் இருந்ததது..... அந்த சூப்பர் மார்க்கட் அமைந்திருந்த இடம் அதிக மக்கள் நடமாட்டமுள்ள இடம்...அதோடு அங்கு உரிய பார்க்கிங் வசதியும் இருந்தது.... அனைத்து வசதிகளும் இருந்தபோதிலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டுமென மனதில் குறித்துக்கொண்டவள் அந்த ஏரியாவில் இருந்த மற்ற கடைகளையும் பொருள் வாங்குவதை போல் பார்வையிட்டாள்...
தனக்கு வேண்டிய குறிப்புக்களை எடுத்துக்கொண்டவள் ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தாள்.... அப்போது ஷாகர் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருக்க அவன் செயலில் குழம்பிய ஆதிரா மெதுவாய் அவனை அழைத்தாள்..
ஆதிராவை பார்த்த ஷாகர் நொடிக்கூட தாமதிக்காது அவளிடம் வந்து அவளை இறுக்கி அணைத்துக்கொண்டவள் அவளு முகமெங்கும் முத்தம் வைத்திட ஆதிராவோ அவனது செயலில் திகைத்து நின்றாள்... அவனது அணைப்பு அவளுள் இருந்த பெண்மையை தட்டியெழுப்பிக்கொண்டிருந்தது.. அதுவும் அவன் இதழ் அவள் முகமெங்கும் தன் முத்திரைகளை பதித்தபடியிருக்க அவளுக்கோ அடிவயிற்றில் ஏதோவொரு இனம்புரியாத உணர்வு... இவ்வாறு உணர்வுகள் அவளை தாறுமாறாய் பாடாய் படுத்தியபடியிருக்க கடைசியில் அவன் இதழ்கள் இவள் அதரங்களை மொத்தமாய் கவ்விக்கொண்டது...
உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்தவளை மொத்தமாய் அவன் தன்னவளாக்கிக்கொண்டிருந்தான்....அவளும் அமைதியாய் அவனுக்கு ஒத்துழைப்பு தந்திட அவன் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றான்.... அவளை தங்களறைக்கு தூக்கி சென்றவன் அவளை மெத்தையில் கிடத்தி தங்கள் இல்லற வாழ்வை தொடங்கியிருந்தான்.....
அந்த கூடல் முழுவதும் ஒரு பரிதவிப்பும் பயமும் இருந்ததை ஆதிரா கண்டுகொண்டபோதிலும் உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தவளுக்கு அப்போது அது பெரிதாய் தெரியவில்லை.... அதோடு அவள் காதல் மனமும் அதற்கு இடம்கொடுக்காமல் பிற்போட முழு விருப்போட அந்த சங்கமத்தில் இணைந்தாள்...
சங்கமும் முடிந்ததும் ஷாகர் அவளிடமிருந்து பிரிந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்... அவனது இந்த செயலில் குழம்பிய ஆதிராவை மேலும் யோசிக்கவிடாது அவள் உடல் சோர்வு தடுக்க அவளும் ஷாகரை அணைத்தபடியே உறங்கிப்போனாள்....
இரவு எட்டு மணியளவில் கண்விழித்த ஆதிரா ஷாகரை தேட அவனோ அங்கு இல்லை...குளியலறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவள் ஷாகரை தேட அவனோ வீட்டில் இல்லை... அவனது போனிற்கு முயற்சிக்க அது வீட்டிலிருந்தது... ஏதேனும் வேலையாக வெளியே சென்றிருப்பான் என்று எண்ணியவள் தன் வேலைகளை கவனிக்க தொடங்கினாள்..
மணி பத்தை தாண்டியும் ஷாகர் வராமல் இருக்க ஆதிராவிற்கோ பயம் தொற்றிக்கொண்டது... வாசலையே பார்த்திக்கொண்டிருந்தவளுக்கு நொடிக்கு நொடி பயம் அதிகரிக்க என்ன செய்வதென்று பரிதவித்து நின்றவளை அழைத்தது அழைபேசி...
எடுத்து பார்க்க ஆத்வி என்று திரையில் விழ தன் பயத்தை தன்னுள் புதைத்துக்கொண்டவள் அழைப்பை ஏற்றாள்...
“சொல்லு ஆத்வி....”
“அக்கா அத்தான்...
“ ஷாகருக்கு என்னாச்சு ஆத்வி....??”
“அத்தான் பப்ல நல்லா ட்ரிங் பண்ணிட்டு போதையில மயங்கிட்டாரு.....”
“என்ன சொல்ற ஆத்வி??? ஷாகருக்கு தான் ட்ரிங்க்ஸ் ஒத்துக்காதே..”
“ஆமா அக்கா.. ரொம்ப ட்ரிங்க பண்ணிட்டாரு போல.. எல்லாத்தையும் பப்லயே வாமிட் பண்ணிட்டாரு.. நான் இப்போ தான் அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்து காமிச்சேன்... டாக்டர் எதுவும் இல்லைனு சொல்லிட்டாங்க... நாங்க இப்போ வீட்டுக்கு தான் கிளம்பிட்டோம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திடுவோம்...”
“சரி ஆத்வி... நீங்க பத்தரமா அவரை கூட்டிட்டு வாங்க..” என்று அழைப்பை துண்டித்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது...
தனக்கு ஒத்துக்கொள்ளாது என்ற காரணத்திற்காக மதுவை எடுக்காதவன் இன்று தேடிப்போய் குடிப்பதற்கான காரணம் என்ன?? இன்று தமக்குள் நடந்த சம்பவத்தை எண்ணி வருந்தி தான் அவன் இவ்வாறு நடந்து கொண்டானா??? ஆனால் அவன் தானே தொடங்கினான்..?? அவனது இந்த செயலுக்கான காரணம் என்ன??? என்னால் தான் இவ்வாறு நடந்துகொண்டானா??? இத்தனை நாள் வேண்டுமென்று விரும்பியவனுக்கு இன்று கசந்துவிட்டதோ??? நான் இதை விரும்பவில்லை என்று எண்ணிவிட்டானோ???? அவன் ஆசைப்பட்ட போதிலும் நான் அதை மறுக்காதது தான் தவறா???? இவ்வாறு அவளது தனிமை அவளை அவசியமற்ற கோணத்தில் யோசிக்கத்தூண்டிட தன்னுள் உழன்றபடியிருந்தாள் ஆதிரா...
அப்போது வெளியே கார் சத்தம் கேட்க வெளியே சென்று பார்த்தவள் ஆத்வியின் காரினை கண்டாள்.. விரைந்து காரின் அருகே சென்றவள் ஆத்வியின் உதவியுடன் ஷாகரை கைத்தாங்கலாய் அழைத்து வந்தவள் கட்டிலில் படுக்க வைத்தாள்... ஆத்வி ஷாகரின் உடைகளை தளர்த்தி அவன் உறங்குவதற்கு அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு ஆதிராவோடு வெளியே வந்தான்...
“ரொம்ப தேங்க்ஸ் ஆத்வி.. நல்லவேளை நீ இருந்ததால எந்த ப்ராப்ளமும் வரலை...”
“என்ன அக்கா நீங்க... நன்றி அது இதுனு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு... அக்கா பஸ்ட் டைம் அத்தான் ட்ரிங்க் பண்ணப்போ அவருக்கு அது ஒத்துக்காம உடம்பு முடியாமல் போயிருச்சு.. அதான் ஒரு சேப்டிக்கு டாக்டர்ட காமிச்சேன்.. அவரு எந்த ப்ராப்ளமும் இல்லைனு சொல்லிட்டு... அவரை பார்த்துக்கோங்க அக்கா..நான் வர்றேன்..”
“ஆத்வி ஒரு விஷயம்..”
“சொல்லுங்க அக்கா..”
“இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது.. முக்கியமா அத்தைக்கு..”
“நான் சொல்லமாட்டேன் கா...நீங்க பயப்படாதீங்க.. நான் வர்றேன்..” என்று ஆத்வி விடைபெற்றான்...
அவன் சென்றதும் கதவை அடைத்துவிட்டு தங்கள் அறைக்கு வந்த ஆதிரா ஷாகரை பார்க்க அவனோ நல்ல தூக்கத்தில் இருந்தான்..
அவனருகே சென்று அமர்ந்தவள் அவன் கையை பிடிக்க ஷாகர் போதையில் உளறத்தொடங்கினான்..
“ஆது உன்னை யாருக்கிட்டயும் விட்டுக்கொடுக்கமாட்டேன்.. நீ எனக்கு மட்டும் தான்... என்னோட ஆது பேபி எனக்கு மட்டும் தான்... அந்த சுப்ரமணியோ தங்கமணியோ எவன் வந்தாலும் என்னோட ஆதுபேபியை கொடுக்க மாட்டேன்...” என்று போதையில் கூட காதலை உளறியவனை கண்டு ஆதிராவின் மனம் கர்வம் கொண்டது.. ஆனால் அவளின் மனதை உறுத்திய விடயம் அவன் குடித்ததற்கான காரணம் என்ன என்பதே...
வேறு ஏதாவது விடயம் அவன் மனதை காயப்படுத்திவிட்டதா என்று கேள்வி மனதில் எழுந்த போதிலும் அதற்கு பதில் சொல்ல வேண்டியவன் நிதானத்தில் இல்லை..
ஷாகரின் முன்னுச்சியில் மென்மையாய் அவள் இதழ் பதித்தவள் அவனை அணைத்துக்கொண்டு உறங்கிவிட்டாள்....
காலையில் கண்விழித்த ஷாகருக்கு தலை விண் விண்ணென்று தெறித்தது.. தலையை பிடித்தபடி எழுந்து அமரந்தவனுக்கு தலை வலியை பொறுக்கமுடியவில்லை...
அப்போது அவன் முன் எலுமிச்சை சாறு கோப்பை நீட்டப்பட அதை கையில் வாங்கியவன் நிமிர்ந்து பார்க்க ஆதிரா அங்கிருந்து நகர்ந்தாள்..அந்த எலுமிச்சம் சாற்றை குடித்ததும் சற்று தலைவலி மட்டுப்பட மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான் ஷாகர்....
குளித்து முடித்து தயாராகி வந்தவன் ஹாலிற்கு வர அங்கு ஆதிரா இல்லை.. அவள் எங்கே என்று தேடியவன் அவள் சமையலறையில் இருப்பது தெரிய உள்ளே செல்லமுயன்றவனை தடுத்தது ஆதிராவின் குரல்..
“என்னடி பேசுற?? நீ பேசுறதுல ஏதாவது நியாயம் இருக்கா??? எந்த பிரச்சினைனாலும் குடிச்சா சரியாகிடுமா??என்னை பொறுத்தவரை பிரச்சினையை தைரியமாக சமாளிக்கத்தெரியாத கோழைகளுக்கு இது ஒரு சாக்கு.. நாம ஒவ்வொரு நாளும் பப்ளிக் ட்ராண்ஸ்போட்டுல போகும் போது சில பொறுக்கிகளால படுற கஷ்டத்துக்கு ஒரு கடையையே வாங்கிக் குடிக்கலாம்.... சொல்லப்போனா ஆம்பிளைகளை விட பொண்ணுங்க நமக்கு தான் எல்லா இடத்துலயும் விதவிதமான பிரச்சினை... நாம தைரியமா சமாளிக்கலையா....??? நான் குடிக்கிறது தப்புனு சொல்லலை... ஆனா கவலையை மறக்க குடிக்கிறேனு சொல்லுறது தான் தப்பு.. எந்த பிரச்சினையையும் சம்பந்தப்பட்டவங்களோடு இருந்து பேசி நிதானமா முடிவெடுத்தாலே தீர்வு கிடைச்சிடும்.... அதைவிட்டு குடிக்கிறாங்களாம்..ஏதோ... சொல்லவேண்டியதை சொல்லிட்டேன்.. இனி நீ தான் பார்த்துக்கனும்... சரிடி.. கொஞ்சம் வேலை இருக்கு.. நான் பிறகு கூப்பிடுறேன்..” என்றவள் அழைப்பை அணைத்துவிட்டு தன் வேலையை தொடர சமையலறையின் வாசலில் இருந்த ஷாகர் சத்தமின்றி தங்களறைக்குள் புகுந்துகொண்டான்..
அவன் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட ஆதிரா எப்படியும் தன்னிடம் வந்து ஷாகர் அவனது பிரச்சினையை விலக்குவான் என்று உறுதியாக நம்பினாள்.. பின் ஆத்விக்கு அழைத்த ஆதிரா அவனை வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்..
ஷாகரோ தங்களறையில் சிந்தனையில் மூழ்கியிருந்தான்.... தன் செயல் தவறென்று புரிந்தபோதிலும் அந்த நேரத்தில் உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தவன் நிலை தவறிவிட்டான்...
ஆதிரா வெளியே சென்றிருக்க தன் வேலையில் மும்மரமாயிருந்த ஷாகரை கலைத்தது அவனது அலைபேசி அழைப்பு.. ஏதோ புதிய நம்பரிலிருந்து அழைப்பு வந்திருக்க யோசனையோடு அழைப்பை எடுத்தான் ஷாகர்..
“ஹலோ.... பட்டணத்து தம்பி..”
“ஹலோ யாரு பேசுறீங்க??”
“ஹாஹா என்ன தம்பி அதுக்குள்ள மறந்துட்டியளா??? நான் தான்பா உன் மாஜி பொண்டாட்டிய கட்டிக்க இருந்த சுப்பிரமணி...”
“டேய்...”
“என்ன தம்பி கோபப்படுறீங்க??? நான் உண்மையை தானே சொன்னேன்.. அவ உனக்கு மாஜி பொண்டாட்டி தானே... அவளும் நீயும் புருஷன் பொண்டாட்டினு உங்க ஊருல யாருக்கும் தெரியாதாமே...??”
“யூ ப்ளடி ராஸ்கல் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே இப்படி பேசுவ??”
“உண்மையை சொல்ல இந்த சுப்பிரமணி என்னைக்குமே பயந்ததில்லபா... ஆமா உன் மாஜி பொண்டாட்டி வீட்டுல இருக்காளா??”
“இப்போ நீ போனைவைக்க போறியா இல்லை போலீசுக்கு கால் பண்ணவா??”
“என்ன தம்பி நான் எவ்வளவு தன்மையா பேசுறேன்... நீங்க ஏன் எறிஞ்சி விழுறீங்க?? உங்க மாஜி பொண்டாட்டி வீட்டுல இல்லைனு சொல்லாமல் எதுக்கு இப்படி கோபப்படுறீங்க??”
“டேய்....”
“இருங்க தம்பி. . .. பொறுமை ரொம்ப அவசியம்... உங்க மாஜி பொண்டாட்டி என் முன்னுக்கு தான் இருக்கா..”
“டேய்..”
“அட இருங்க தம்பி... சொல்லுறதை முழுசா கேளுங்க... உங்களுக்கு அவ மாஜி பொண்டாட்டி தான்... ஆனா பாருங்க இந்த சுப்பிரமணிக்கு அந்த சிறுக்கி மேல ஒரு கிறுக்கு... இத்தனை நாளாகியும் அந்த கிறுக்கு தெரியலை.. அதான் அவளை தூக்கிட்டு போய் என்னோட பொண்டாட்டி ஆக்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்....”
“டேய்....”
“ஆனாலும் பாருங்க தம்பி.. இந்த சுப்ரமணிக்கு எச்சிக்காயை ருசிக்கிறதுல ஒரு சொட்டு கூட விருப்பம் இல்லை.. அந்த சிறுக்கியை கூட இத்தனை நாள் மறந்து தான் இருந்தேன்... ஆனா அவ மாமன்காரன் வந்து சொன்னப்போ கூட உங்க உறவு உங்க வீட்டுக்கு தெரியாதுனு தான் நினைச்சேன்.. ஆனா அந்த சிறுக்கி அவ கூட்டாளி புள்ளகிட்ட பேசுனதை கேட்ட என்னோட ஆளு சொன்னதும் தான் தெரிஞ்சது அந்த சிறுக்கி இன்னும் எச்சில படாமல் இந்த சுப்பிரமணிக்காக காத்திருக்குனு... இதை தவறவிட்டா நான் ஆம்பிளைனு சொல்லிக்கிறதுல அர்த்தமே இல்லை.. அதான்...”
“டேய்.. அவளை எதுவும் பண்ணிடாதடா... அவளை விட்டுரு..”
“அவளை விடுறதா??? ஹாஹா யாராவது கைக்கு கிடைச்ச அமிர்தத்தை தவறவிடுவாங்களா??? அவளை....” என்றதும் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட பதறிய ஷாகர் மீண்டும் அந்த எண்ணிற்கு முயற்சிக்க அதுவோ ஸ்விச் ஆப் என்று வர ஆதிராவிற்கு முயற்சித்தான்...
ரிங் போனதே ஒழிய அவள் எடுத்தபாடில்லை... ஷாகருக்கோ அடுத்து என்ன செய்வதென்று புரியாமலிருக்க மீண்டும் மீண்டும் ஷாகர் ஆதிராவிற்கு அழைக்க அழைப்பு எடுக்கவில்லை.. என்ன செய்வதென்று புரியாது நடைபயிலத்தொடங்கிய கணம் வெளியே சென்றிருந்த ஆதிரா உள்ளே வர இத்தனை நேரம் பயத்தில் உயிரை பிடித்துக்கொண்டிருந்தவன் அவளை கண்டதும் உணர்ச்சிவசப்பட்டு அவளை கட்டியணைத்தான்.... அதோடு சுப்ரமணியத்தின் வார்த்தைகளும் ஆதிராவின் ஒதுக்கமும் அவனுள் ஆதிராவை இழந்துவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தியிருக்க, அனைத்தும் சேர்ந்து அவனை சிந்திக்கவிடாமல் செய்து அந்த நொடியே அவளை தன்னவளாக்கிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்க தான் என்ன.செய்கிறோமென்ற உணர்வே இல்லாமல் ஆதிராவை தன்னவளாக்கிக்கொண்டாள்....
ஆனால் கூடல் முடிந்து கண்ணயர்ந்தவன் கண்விழித்தபோது அருகிலே தன்னை அணைத்தபடி கலைந்த ஓவியமாய் உறங்கியபடியிருந்த ஆதிராவை கண்டான்....
அவளை கண்டவனது மனம் குற்றவுணர்ச்சியால் தத்தளித்தது... எவனோ ஒருவனின் வார்த்தைக்கு பயந்து இப்படி அவள் அனுமதி கூட கேட்காது மிருகத்தை விட கேவலமாக நடந்துகொண்டோமே... இதற்காக தான் இத்தனை நாட்கள் நல்லவன் வேடமிட்டாயா என்று அவன் மனசாட்சி சாட்டையாய் கேள்விகளை அள்ளி வீச ஷாகரோ குற்றவுணர்ச்சியில் தவித்துப்போனான்... அவனது செயலை அவனாலே ஏற்கமுடியவில்லை... மனைவியே என்றாலும் அவள் முழுச்சம்மதமின்றி அவளோடு இணைவதென்பது ஆண்மைக்கு இழுக்கே...
அதுவும் தாம்பத்தியத்தின் தொடக்கமே அவள் சம்மதத்தை பெறாமல் தன் பயத்தை போக்குவதற்காக அவன் செய்த செயலை அவனது மனசாட்சி காறி உமிழ்ந்தது... அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காதவன் வெளியேறினான்.. எப்போதும் அவன் குழப்பங்களுக்கு தீர்வாய் அமையும் பீச்சிற்கு செல்ல கடற்கரையும் கூட கடல் அலைகளால் அவன் செயலை தூற்றிவது போன்றொரு பிரம்மையை உருவகித்தது.. மேலும் அங்கிருக்க பொறுக்காதவன் அங்கிருந்து நடக்கத்தொடங்க அங்கிருந்த பப் கண்ணில் பட அங்கு நுழைந்துவிட்டான்...
மனதின் கோள்விகளுக்கு பதில் கூறமுடியாது தத்தளித்தவனது கண்களுக்கு மதுப்போத்தல்கள் பட தற்காலிக வலி நிவாரணியாக அவளை உட்கொள்ளத்தொடங்க அது அவனுக்கு சேராமல் வாந்தியெடுத்து அந்த இடத்தை அசுத்தப்படுத்த எதிர்பாரா விதமாய் அங்கு வந்த ஆத்வி அவனை அங்கிருந்து அழைத்து சென்றான்...
இவற்றை எண்ணிபார்த்தவனுக்கு தன் செயல்கள் அனைத்திலுமே தவறிருப்பது அப்பட்டமாய் தெரிந்தது.. ஆனால் இதை எவ்வாறு ஆதிராவின் முகம் பார்த்து ஷாகர் விளக்குவான்?? ஏற்கனவே அவளை பிரிந்து செல்ல முயன்றவள் இதை எவ்வாறு எடுத்துக்கொள்வாள்??? ஒருவேளை தன்னை வெறுத்துவிட்டால்...?? அதன் பின் உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை... ஆனால் நான் செய்த காரியம் அவள் முகம் பார்த்து நேரிடையாய் கதைக்கும் தைரியத்தை சிதைத்துவிட்டதே..எப்படி அவளை எதிர்கொள்வேன்.....
இவ்வாறு சிந்தனையில் உழன்றவனை கலைத்தது ஆதிராவின் குரல்..
“ஆத்வி வந்திருக்கான்..”
“ம்.. வரேன்..” என்று கூறிய ஷாகர் வெளிய வர ஹாலில் ஆத்வி அமர்ந்திருந்தான்..
“வாடா.. என்ன திடீர்னு இந்த பக்கம்??”
“ஏன் அத்தான்.. நான் எங்க அக்கா வீட்டுக்கு வரக்கூடாதா?”
“பார்டா.. இப்போலாம் உனக்கு இந்த அத்தான் கண்ணுக்கு தெரியலை.. அக்கா தான் கண்ணுக்கு தெரியிறாங்க..”
“என்ன அத்தான் நீங்க??”
“சும்மா டா.. சொல்லு என்ன விஷயம்??”
“நான் தான் அவனை வர சொன்னேன்.. ஆத்வி ஷாகர் சொன்ன இடத்தை பத்தி விசாரிச்சியா??”
“ஆமா அக்கா... லீகல் இசியூஸ் எதுவும் இல்லை... அவங்க இன்வெஸ்மண்டை ரிக்கவர் பண்ணா போதும்னு தான் லோ ரேட்ல விற்கிறாங்க... மத்தபடி அந்த இடத்தை வாங்கி கொஞ்சம் மொடரேட் பண்ணா நல்ல ப்ராபிட் பார்க்கலாம்.... வேறு எந்த இஷ்யூசும் இல்லை... இப்போவே வாங்குறது நல்லது... அவங்க பெரிசா அட்வடைஸ் பண்ணாததால இன்னும் நிறைய பேருக்கு இந்த ப்ராபர்ட்டி சேலுக்கு இருக்குனு தெரியாது... வேற யாராவது வந்து வாங்குறதுக்கு முதல்ல நாம வாங்கிட்டா நல்லது..”
“நானும் அந்த இடத்தை பார்த்தேன்.... எனக்கும் அந்த இடம் சூப்பர் மார்க்கெட்டுக்கு ஓகேனு தான் தோனுது.... நான் சுத்தி பார்த்த வரைக்கும் அங்கு எல்லா ரிசோசும் இருக்கு... அவங்க அதை சரியாக யூஸ் பண்ணாததால தான் நஷ்டப்பட்டிருப்பாங்க.. நாம அதை சரியாக யூஸ் பண்ணோம்னா நம்ம கோலை அசிவ் பண்ணமுடியும்...”
“அப்போ இந்த இடத்தை ஓகே பண்ணிரலாமா??” என்று ஷாகர் கேட்க ஆதிராவும் ஆத்வியும் ஆம் என்று கூறிட
“ஓகே.. நான் நாளைக்கே போயிட்டு அந்த சுப்பர்மார்க்கட்டோட ஓனரை பார்த்து பேசுறேன்..” என்று ஷாகர் கூற அதை ஆதிராவும் ஆத்வியும் ஆமோதித்தனர்..
இவ்வாறு நாட்கள் நகர தன்னிடமிருந்த இருப்பினையும் ஆதிராவின் பர்சனல் லோனின் மூலமும் பணம் திரட்டிய ஷாகர் அந்த இடத்தை வாங்கி அதை ஆஷா சுப்பர் மார்க்கட்ஸ் என்ற பெயரில் ஆரம்பித்தான்..
சுப்பர் மார்க்கட் திறப்பு விழாவிற்கு ஆதிராவோடு சென்று தன் பெற்றோரையும் அத்தைமார் குடும்பத்தையும் உரிய முறையில் அழைத்தான்..
அவர்களும் அவனது முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்டு அவனை மகிழ்வித்தனர்...
வசுமதி தன் மகனுக்கும் மருமகனுக்கும் வாழ்த்து கூற பிரகஸ்பதியோ ஆதிராவிற்கு மட்டும் வாழ்த்து கூறிவிட்டு ஆபிஸிற்கு கிளம்பிவிட்டார்..
ஷாகரின் அத்தைகள் குடும்பமும் ஷாகரை மட்டும் வாழ்த்தியவர்கள் ஆதிராவை கண்டுகொள்ளவில்லை... ஆனால் ஷாகரின் அத்தைமார் பெத்த ஐந்து ரத்தினங்களும் ஆதிராவை தூக்கிக்கொண்டாடிக்கொண்டிருந்தனர்..
இவ்வாறு ஷாகரின் விருப்பப்படி அவனது முயற்சியில் புதிய தொழிலை ஆரம்பித்துவிட்டான்.. ஆனால் அவன் விரும்பிய வாழ்க்கை அவன் விரும்பியபடி மாறுமா???