♥ யாசிக்கிறேன் உன் காதலை - 5 ♥
"முடியாது.. முடியாது..", என்று நேசமணி கத்திக்கொண்டே இருந்தார். சிறியவர்கள் பதறி வேகமாகக் கூட்டத்தை விலக்கிவிட்டு முன்னால் வந்தனர். "முடியாது! குணா!! இவகிட்ட சொல்லு, எனக்கு ஊசி போட வேண்டாம்னு", என்றார் நேசமணி சிறு பிள்ளையைப் போல்.
"தாத்தா உங்களுக்கு பிபி அதிகமா இருக்கு, இன்ஜக்ஷன் போட்டுத்தான் ஆகணும், நீங்களா காட்டுறீங்களா இல்ல உங்களப் பிடிக்கச் சொல்லட்டா??", என்று பேபிடால் மிரட்டினாள்.
சிறியவர்களுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றனர். "அபிமா!! நீயாச்சும் சொல்லு அவ கிட்ட, மாத்திரை மட்டும் போதும்னு", என்றார் அபியிடம் கெஞ்சலாக.
"தாத்தா!! இது வலிக்காது காட்டுங்க, குழந்தைகளே போட்டுக்குறாங்க உங்களுக்கு என்ன??", என்றாள் அபி சமாதானமாக.
துருவைப் பார்த்ததும், "துருவா!! நீயாச்சும் சொல்லுடா", என்றார் பாவமாக.
"அட!! என்னங்க!? குழந்தை மாதிரி பண்ணிக்கிட்டு, சின்ன பாப்பா!? நீ ஊசி போடு இவருக்கு", என்று அபிராமி கட்டளையிட்டார்.
பேபிடால் நமட்டுச் சிரிப்போடு நேசமணியின் கையில் ஊசியைப் போட்டாள். "ஆ...." என்று கத்தினார்.
"ஒன்னும் இல்ல தாத்தா, சரியாப் போயிடும்", என்று தேய்த்து விட்டுவிட்டு, "நெக்ஸ்ட் வாங்க!!", என்று உட்கார்ந்தாள்.
அவள் முன் ஓர் டேபிளும் ஓர் சேரும் இருந்தது. வீட்டில் உள்ள அனைவரையும் பரிசோதித்துத் தேவையான மாத்திரையை எழுதிக் கொடுத்தாள். பெரியவர்களும் கலைந்து சென்றனர். "ஏய்! பிராடு!!", என்றான் துரு பேபிடாலின் காதைப் பிடித்து.
"விடு துரு!! எல்லாரும் லைன்ல வாங்க! உங்களுக்கும் செக் பண்றேன்", என்றாள் அவன் கையை விலக்கிச் சிரிப்புடன்.
"பேபிடால்!! என் ஹார்ட்ல யாரு பேரு சொல்லுதுன்னு சொல்லு", என்றான் ரிஷி வேகமாக.
"என் ஹார்ட்ல உன் பேரைத் தான் சொல்லுது பேபிடால்!! செக் பண்ணிப் பாரு", என்றான் விரு வேகமாக.
"ஓ... அப்ப உங்க ரெண்டு பேரோட ஹார்ட்லயும் என் நேம் தான் சொல்லுது அப்படித்தானே!!", என்றாள் கிண்டலாக.
"ஆமா... ஆமா..", என்று இருவரும் வேகமாகத் தலையை ஆட்டினர்.
"சரி!! செக் பண்ணிப் பாக்குறேன்", என்றாள். ரிஷி வேகமாகப் பக்கத்தில் இருந்த சேரில் உட்கார்ந்தான்.
பேபிடால் ஸ்டெத்தஸ்கோப்பை காதில் வைத்து ரிஷியின் மார்பில் சிரிப்புடன் வைத்து, " நல்லா மூச்சை இழுத்து விடு", என்றாள். அவனும் அவள் சொன்னபடி செய்தான். "உன் ஹார்ட்பீட் குட் கண்டிஷன்ல இருக்கு", என்று அவன் கை நாடியைப் பிடித்துப் பார்த்தாள்.
"கங்கிராஜுலேசன் ரிஷி!! யூ ஆர் பிரக்னண்ட்", என்றாள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
"வாட்???", என்றான் பதறியபடி. சிறியவர்கள் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். "நீ போலி டாக்டர் போடி!!", என்று முறைப்புடன் எழுந்து மற்றவர்களைப் பார்த்து, "இது பேபிடால் இல்ல டெவில்டால்", என்றான் பாவமாக. அனைவரும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தனர்.
"நீ நகரு டா! நா உட்காருறேன்", என்று விரு உட்கார்ந்து, "இங்க பாரு பேபிடால்!! நா பிரக்னன்டா இல்லையானுல நீ பார்க்கத் தேவையில்லை, என் ஹாட்ல உன் பேர் சொல்லுதானு மட்டும் பாரு போதும்!", என்றான் தீவிரமாக.
பேபிடால் பரிசோதனை செய்துவிட்டு, "உனக்கு நா லாஸ்ட்டா சொல்றேன் விரு! நீ எழுந்திரு!!", என்றாள். ரிஷி அவளை முறைத்துக் கொண்டே இருந்தான். "ரிஷி!! உன் ரிசல்ட நோட் பண்ணி வச்சிருக்கேன், வெயிட் பண்ணு! உனக்கும் லாஸ்ட்டா சொல்றேன்", என்று சிரித்தாள்.
ரிஷி தலையை ஆட்டினான். பிறகு சந்தோஷ், நந்து, சந்தியா மித்ராவிற்கு பரிசோதனை செய்துவிட்டு துருவை உட்காரச் சொன்னாள். "துரு மாமா!! இப்ப உங்க ஹார்ட்ல யார் நேம் சொல்லுதுன்னு சொல்லப் போறா, யார் நேம் சொல்லும் மாமா??", என்றாள் அபி கிண்டலாக.
"அத டாலு தான் கண்டுபிடிக்கணும் அபி, டாலு!! என் ஹார்ட் என்ன சொல்றதுன்னு சொல்லு", என்றான் சிரிப்புடன்.
"உன் ஹார்ட் என்ன சொல்லுதுன்னு தான் எங்களுக்குத் தெரியுமே", என்றனர் சிறியவர்கள் கோரசாக, அபி மற்றும் பேபிடாலைத் தவிர. இருவரும் முழித்தனர்.
"மாமா!! எங்களுக்குத் தெரியாம சீக்ரெட் இருக்கு போல, பேபிடால்!! மாமா ஹார்ட்ல யார் நேம் சொல்லுதுன்னு கேட்டு சொல்லு", என்றாள் அபி சிரிப்புடன்.
"ஆமாடா! நீ கேளு! கேளு!", என்று சிரிப்புடன் அபியைப் பார்த்தான்.
பேபிடால் சிரிப்புடன் பரிசோதித்தாள். "துரு! மூச்சை இழுத்து விடு!", என்றாள். மூச்சை இழுத்து விட்டான்.
"என்ன டாலு கேட்குதா??", என்றான் துரு புருவம் உயர்த்தி.
"ம்ம்.. கேட்குது கேட்குது, ரிஷி விரு ஹார்ட்ல என் நேம் கேட்ட மாதிரி உன் ஹார்டுலயும் என் பேரு தான் கேக்குது", என்றாள் தலையைச் சாய்த்து கண்ணடித்து.
துரு அவள் தலைமுடியைக் கலைத்துவிட்டு, "கேட்கும் டி கேட்கும், உனக்கு நல்லா கேட்கும்", என்றான் சிரித்துக்கொண்டே.
"பேபிடால்!! அப்ப எங்க ஹார்ட்ல உன் நேம் கேட்டதா??", என்றனர் விரு மற்றும் ரிஷி வேகமாக.
"ம்ம்... கேட்குது கேட்குது, மூன்னு பேர் ஹார்டுலயும் என் நேம் மட்டும் தான் கேட்குது, இப்படி இருந்தா அபி, சந்தியா நேம் எப்ப தான் கேட்குறது??", என்று கிண்டலாகப் போட்டுக் கொடுத்தாள். அபி மற்றும் சந்தியா முறைத்தனர்.
"அடப்பாவி!! உங்க மூணு பேரையும் எவ்வளவு பாசமா மாமா.. மாமானு நா கூப்பிடுறேன், ஒருத்தன் ஹார்டுலயாச்சும் என் பேரு கேட்டதா?? இதுல சாப்பிட வேற கொண்டு வந்து தரேன்", என்றாள் சந்தியா ஆத்திரமாக. மூவரும் முழித்தனர்.
"திஸ் இஸ் டூ மச் துரு மாமா, விரு , ரிஷி" என்றாள் அபி பொய்யான முறைப்புடன். சந்தோஷ், நந்து, மித்ரா பேபிடால் நான்கு பேரும் சிரிப்புடன் வேடிக்கைப் பார்த்தனர்.
"அபி!! சந்தியா!! டாலு பொய் சொல்லுறா, என் ஹார்டுல ஹார்ட்பீட் மட்டும்தான் கேட்டுருக்கும்", என்றான் துரு வேகமாக.
"நானா?? நீதான் துரு நீதான்..", என்றாள் பேபிடால் வேகமாக.
"மாமா...!!" என்றனர் சந்தியா மற்றும் அபி கோவமாக.
"ஹேய்!! டாலு!! உன்னால தான்டி எல்லாம்", என்று துரு அடிக்கத் துரத்தினான்.
"அவள சும்மா விடக் கூடாது துரு.. நா ப்ரெக்னன்டா டி?? மாட்டுன டி", என்று ரிஷி மற்றும் விருவும் துருவுடன் சேர்ந்து துரத்த ஆரம்பித்தனர். பேபிடால் ஓட ஆரம்பித்தாள். மூவரும் சுற்றிவளைக்கப் பார்த்தனர். பேபிடால் தாழ்வாரத்தில் இருந்து ஹாலுக்கு ஓட ஆரம்பித்தாள். மற்ற சிறியவர்களும் மூவருடன் இணைந்து பின்தொடர்ந்தனர்.
"டாலு!! ஒழுங்கா வந்தா ஒரு அடியோட போச்சு, நாங்க பிடிச்சா நீ கைமாதான்டி", என்றான் துரு துரத்தியபடி.
"பிடிக்கமுடியாது, போ மேன்!!", என்று திரும்பிப் பார்த்தபடி முன்னால் சென்றவள் எதிரே வந்த நேசமணியின் மேல் வேகமாக மோதி கீழே விழப்போனாள். பின்னால் வந்த துரு அவளை விழாமல் பின்னாலே அணைத்தபடி நிற்க வைத்தான்.
நேசமணி பார்த்ததும் அனைவரும் அதிர்ந்தனர். "என்ன விளையாட்டு?? எல்லாரும் என்ன சின்னப் பிள்ளையா?? வேற வேல எதுவும் இல்லையா???", என்றார் முறைப்புடன்.
பேச வாயைத் திறக்கப் போன பேபிடாலைப் பின்னால் நின்றபடி அவள் வாயைக் கை வைத்து மூடி தன் மார்பில் சாய்த்து, " ஒன்னும் இல்ல தாத்தா, சும்மாதான், வாங்க போலாம்", என்று துரு தாத்தாவின் பதிலை எதிர்பார்க்காமல் பேபிடாலை அப்படியே நகர்த்தித் தாழ்வாரத்திற்கு இழுத்து வந்தான். மற்றவர்களும் பின்னால் வந்தனர்.
பேபிடால் அவன் கையைத் தட்டிவிட்டு, "என்ன துரு பண்ற?? நா தான் பேசப் போனேன்ல!?", என்றாள் முறைப்புடன்.
"நீ பேசக்கூடாதுன்னு தான் வாய மூடினேன்", என்றான் கூர்மையானப் பார்வையுடன்.
"ஏன் துரு இப்படி பண்ற??"? என்றாள் சலிப்புடன்.
"தாத்தாகிட்டக் கோவமா பேசாத டாலு, அவருக்கு வயசாச்சு, அவரால நம்ம என்ஜாய்மென்ட்ட அண்டர்ஸ்டாண்ட் பண்ண முடியாது", என்றான் கொஞ்சலும் கெஞ்சலுமாக.
"போ துரு!!", என்றாள் சலிப்புடன் அவன் மார்பில் குத்தியபடி.
"நீ பேச ஆரம்பிச்சா மறுபடியும் ஒரு பிராப்ளம்தான் வரும், இதனால உன் மூடுதான் ஸ்பாயிலாகும்", என்றான் பொறுமையாக அவள் கையைப் பிடித்துக் குத்துவதைத் தடுத்து.
"ஆமாடா!! எதுக்கு வேஸ்டா அதெல்லாம்?", என்றான் சந்தோஷ் சமாதானமாக.
"பேபிடால்!! நாம விளையாடலாமா?? இல்ல நாம பேசலாம், ஆதி.. தியா கிட்ட இன்னும் நாம பேசவே இல்ல", என்றாள் அபி பேச்சை மாற்றி.
"ஆமால!!", என்றாள் சந்தோஷமாக.
"யார் அவங்க??", என்றனர் மற்றவர்கள்.
"தியா என் க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆதியும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட் தான்", என்றாள் பேபிடால் குஷியாக.
"ஆதியோட ஃபுல் நேம் ஆதிரா, நம்ம துரை அங்கிள் இருக்காங்கள்ளா?? அதாம்பா என் டாடி மம்மி லவ்வுக்கு ஹெல்ப் பண்ணி மேரேஜ் பண்ணிவச்சாங்களே.. அவங்களோட பொண்ணுதான், நானும் அவளும் சேம் ஸ்கூல் காலேஜ் எல்லாம், தியா நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு, நாங்க நாளு பேரும் ஒன்னாதான் வளர்ந்தோம், ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் நாங்க, தியாக்கும் பேபிடாலுக்கும் ஒரே ஏஜ் தான்", என்றாள் அபி சந்தோஷமாக.
"அப்ப ரெண்டு டாக்டர் ரெண்டு இன்ஜினியரா??", என்றான் நந்து கிண்டலாக.
"இல்ல!! நா மட்டும்தான் டாக்டர் அவங்க மூணு பேரும் இன்ஜினியர்"? என்றாள் பேபிடால் சிரிப்புடன்.
"உங்க ரெண்டு பேருக்கும் பாய் ஃப்ரெண்ட் இருக்காங்களா??", என்றான் ரிஷி.
"ஓ... இருக்காங்களே!!", என்றனர் இருவரும்.
"என்னது!! பாய் ஃப்ரெண்ட் இருக்காங்களா??", என்றனர் மித்ரா மற்றும் சந்தியா அதிர்ச்சியுடன்.
"ஏய்!! எதுக்கு ஷாக் ஆகுறீங்க பேபிடாலுக்கு ரெண்டு பாய் ஃப்ரெண்ட், எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட்", என்றாள் அபி விளக்கமாக.
"பேபிடாலுக்கு ரெண்டா..??", என்றாள் மித்ரா ஆச்சரியமாக.
"ஏய்!! அவங்க ஊர்ல பாய் ஃப்ரெண்ட்னா பாய் ஃப்ரெண்ட் மட்டும்தான்", என்றான் விரு சிரிப்புடன்.
"பாய் ஃப்ரெண்ட்னா பாய் பிரெண்ட் தானே!!", என்றனர் குழப்பமாக.
"இங்க அப்படி இல்லக்கா, லவ்வர பாய் ஃப்ரெண்டுன்னு தான் சொல்லுவாங்க", என்றான் நந்து சிரிப்புடன்.
"நாங்க லவ்வர லவ்வருன்னு தான் சொல்லுவோம், என்ன அபி?", என்றாள் பேபிடால் கிண்டலாக அபியைப் பார்த்து.
அபி பேபிடாலைப் பொய்யாக முறைத்துவிட்டு, "லவ்வர்னு சொல்றதுல என்ன இருக்கு??", என்றாள்.
"இங்க இப்படித்தான் அபி", என்றான் சந்தோஷ்.
"மை டியர் பேபிடால்..!! டார்லிங்..!!", என்று ரவீன் உள்ளே வந்தான்.
"ரவீன்..!!", என்று இருவரும் அவனிடம் ஓடினர். மற்றவர்களும் பின்னால் சென்று வரவேற்றனர்.
"ஹே!! பேபிடால்!! டார்லிங்!! இந்தாங்க சிம்", என்று இருவருக்கும் தந்தான். இருவரும் வாங்கிக் கொண்டனர். ஆண்கள் நான்கு பேரும்( துரு, சந்தோஷ், விரு, ரிஷி) இவர்களுக்கு சிம் தாங்கள் வாங்காதது தவறு என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"ரவீன் மாமா!! நானும் உங்களுக்கு அத்தப் பொண்ணுதான், எனக்கும் ஏதாச்சும் வாங்கித் தரலாம், என்னையும் கவனிக்கலாம், நா கோச்சுக்க மாட்டேன்", என்றாள் சந்தியா கிண்டலாக
"சரிங்க அத்த பொண்ணே!! இப்ப எதுவும் உனக்கு வாங்கிட்டு வரல, நெக்ஸ்ட் டைம் வாங்கிட்டு வரேன், அமெரிக்கால இருந்து வரும்போதே சிம் வேணும்னு ரெண்டு பேரும் சொல்லிட்டுதான் வந்தாங்க, நா தான் மறந்துட்டேன்", என்றான் சிரிப்புடன்.
"எங்ககிட்ட கேட்டுருக்கலாம்ல?", என்றான் சந்தோஷ் இருவரிடமும்.
"அப்ப உன்ன மீட் பண்ணல சந்தோஷ், அதான் ரவீன வாங்க சொன்னோம்", என்றாள் அபி.
"ம்ம்..", என்றான் அரைமனதுடன்.
"யாரு வாங்குனா என்ன? விடுடா!", என்றான் துரு. சந்தோஷ் அரைமனதுடன் தலையை ஆட்டினான்.
"பேபிடால்!! இப்ப என்கூட வீட்டுக்கு வரியா??", என்றான் ரவீன் புருவம் உயர்த்தி.
பேபிடால் அனைவரின் முகத்தையும் பார்த்தாள், கடைசியாகத் துருவைப் பார்த்தாள். அவன் கண்களில் போகாதே என்று சொல்வதுபோல் தோன்றியது, "இல்ல ரவீன்! நெக்ஸ்ட் வீக் வரேன்", என்றாள் துருவைப் பார்த்தபடி. அவள் அப்படி சொன்னதும் துருவின் முகம் மலர்ந்தது. மற்றவர்களும் சிரிப்புடன் பார்த்தனர்.
சந்தோஷ் பேபிடாலின் தோளில் கைபோட்டு, "இவ என் தங்கச்சி, அங்க வரணும்னா என்கிட்ட தான் பர்மிஷன் கேக்கணும் மாமா!", என்றான் ரவீனைப் பார்த்துக் கிண்டலாக.
நந்து பேபிடாலின் மறுபக்கம் வந்து நின்று, " உங்க வீட்டுக்கு இப்ப விட முடியாது, உங்ககூட தான் மூணு மாசம் இருந்தங்கல்ல, அந்த மூணு மாசம் நாங்க இருந்ததுக்கு அப்புறம் அங்க அனுப்புறோம்", என்றான் அபியின் தோளில் கையைப் போட்டு பேபிடாலைப் பார்த்து.
ரவீன் சிரிப்புடன், " ஒன்னு கூடிட்டாங்கய்யா..!! ஒன்னு கூடிட்டாங்க!!", என்று பொய்யாகத் தலையில் கை வைத்தான். அனைவரும் சிரித்தனர். சிறிது நேரம் பேசிவிட்டு ரவீன் கிளம்பிச் சென்றான். அகிலா பேபிடாலுக்கும் அபிக்கும் சரியாக உணவைக் கொடுத்துத் தூங்க அனுப்பினார். இருவரும் தூங்கச் சென்றனர்.
"அண்ணா!! ஏன் ரெண்டுபேரும் தூங்கப் போயிட்டாங்க??", என்றாள் மித்ரா குழப்பமாக.
"அவங்க ரெண்டு பேருக்கும் இங்க இன்னும் டைமிங் பழகல டா, டாலு சாப்பிடும்போதே தூங்கி வழிஞ்சா, அபியும் டயர்டா இருந்தா அதான் போய்ட்டாங்க", என்றான் துரு விளக்கமாக.
"மாமா!! அப்ப நீங்க கனடாவில படிச்சு அங்கயே கொஞ்ச நாள் வொர்க் பண்ணுனீங்கலே!! அப்பறம் இங்க வந்தப்ப உங்களுக்கு எப்படி இருந்தது??", என்றாள் சந்தியா சந்தேகமாக.
"வந்த புதுசுல எனக்கும் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது, அப்புறம் சரியா போச்சு டா", என்றான் சிரிப்புடன். பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர்.
மாலையில் தாத்தாக்களைத் தவிர மற்ற அனைவரும் வீட்டில் இருந்தனர். அனைவருக்கும் டீ ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு வேலையாளிடம் சமைக்கச் சொல்லிவிட்டுப் பெண்கள் அனைவரும் தாழ்வாரத்தில் கீழே வந்து உட்கார்ந்தனர். குணா ஓர் தூணில் சாய்ந்து காலை நீட்டி போட்டு உட்கார்ந்து தம்பிகளிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் பக்கத்து தூணில் அகிலா அதே மாதிரி உட்கார்ந்து மற்ற பெண்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். பேபிடால் மற்றும் அபி கீழே வந்ததும், பேபிடால் குணாவின் மடியில் தலைவைத்து அகிலாவின் மேல் காலை வைத்தபடி படுத்தாள். அபி அகிலாவின் மடியில் படுத்து குணாவின் மேல் கால் வைத்தபடி படுத்தாள். அப்பா அம்மா இருவரும் ஓர் கையால் ஓர் மகளின் தலையை வருடியபடி மறுகையால் இன்னொரு மகளின் காலைப் பிடித்து விட்டபடி பேசிக்கொண்டிருந்தனர். இதனை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். இரு பிள்ளைகளும் தன் பிள்ளைகளே என்பதைச் செயலிலும் காட்டினர்.
"மாமா!! அத்த!! நீங்க கிரேட்! உங்க ரெண்டு பிள்ளைகளும் ஒன்னு தான்னு பாசத்துல மட்டும் இல்ல செயலிலும் காட்டுறீங்க", என்றான் துரு மனதாரப் பாராட்டி. நான்கு பேரும் சிரித்தனர்.
"ஆமா! துருவா சொல்றது கரெக்ட் தான்", என்றார் பார்வதி சிரிப்புடன். மற்றவர்களும் அதனை ஏற்பது போல் தலையை ஆட்டினர்.
"குணாப்பா!! உங்க லவ் ஸ்டோரிய சொல்லுங்க, நா கேட்க ஆர்வமா இருக்கேன்", என்றான் நந்து ஆர்வமாக.
"ஆமா! நாங்களும்!!", என்றனர் மற்ற சிறுவர்களும் வேகமாக. பெரியவர்கள் சிரித்தனர்.
"நா படிச்சு முடிச்சுட்டு ஊருக்கு வந்தேன், அப்ப ஊர்ல தண்ணி பஞ்சம் அதிகமாயிருந்தது, நம்ம வீட்டுல எப்போதுமே!! தண்ணீ பிரச்சனை வந்தது இல்ல, ஊர்ல நிறைய பேரு நம்ம வீட்டுப் பின்பக்கம் இருக்க பைப்ல தான் தண்ணி புடிக்க வருவாங்க, அப்பதான் அகிலாவ முதல் முதல்ல பார்த்தேன்".
"நா, மத்த மாமா எல்லாருமே ஹாஸ்டல்ல தான் தங்கி படிச்சோம், அதனால ஊர்ல இருக்க உறவுக்காரங்க யாரும் எங்களுக்கு தெரியாது, அன்னையிலிருந்து எனக்கே தெரியாம அகிலாவ கவனிக்க ஆரம்பிச்சேன், கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சோம்", என்றார் காதலுடன் அகிலாவைப் பார்த்து.
"அப்புறம்!?", என்றனர் சிறியவர்கள் ஆர்வமாக. பேபிடால் மற்றும் அபி எழுந்து உட்கார்ந்து கதை கேட்க ஆரம்பித்தனர்.
"அப்புறம் அகிலா நம்ம உறவுக்காரப் பொண்ணுதான்னு தெரிஞ்சது, அகிலாவுக்குப் படிப்புல ஆர்வம் அதிகம், ஊர்ல படிக்க விட மாட்டேங்குறாங்கனு சோகமா என்கிட்ட சொன்னா, உன்ன நா படிக்க வைக்கிறேன், நீ என்னைய கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன்", என்றார் சிரிப்புடன்.
"அதுக்கு அகிமா என்ன சொன்னாங்க?? அகிமா என்ன சொன்னீங்க???", என்றாள் சந்தியா ஆர்வமாக.
"நா பயந்து ஓடிட்டேன் டா", என்றார் சிரிப்புடன்.
"அப்புறம்!?", என்றனர் சிறியவர்களுடன் சேர்ந்து பெரியவர்களும் ஆர்வமாக.
"அப்புறம் ஒரு வாரம் அகி வரவே இல்ல, எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது, அகி வீட்டில அப்ப ரொம்ப கஷ்டம், அதனால காட்டு வேலைக்குப் போவா, காட்டுல எப்படியாச்சும் மீட் பண்ணனும்னு முடிவு பண்ணி நா போறப்ப என் எதிர்ல வந்தா, ஏன் விலகிப் போற?? என்னையப் பிடிக்கலையான்னு கேட்டேன், உங்களப் பிடிச்சுடுமோன்னு பயந்து தான் விலகிப் போறேன்னு அழுதா, அதுக்கப்புறம் எங்க காதலும் நாங்களும் வளர ஆரம்பிச்சோம். எனக்கு அடுத்த வாரமே சென்னையில ஒரு பெரிய ஐடி கம்பெனில இன்டர்வியூ போனதுக்கு வேலை கிடைச்சது, நானும் கிளம்பிப் போயிட்டேன், வருஷக்கணக்கா லெட்டர் மூலமா பேசிக்கிட்டோம் அப்பப்ப ஊருக்கு வருவேன், அகி படிக்க நானே ஏற்பாடு பண்ணி புக் எல்லாம் வாங்கிக் கொடுத்தேன்", என்றார் சிறப்புடன்.
"மாமா!! அத்த நம்ம சொந்தம் தானே? அப்புறம் ஏன் வீட்டை விட்டுப் போனீங்க???", என்றான் ரிஷி சந்தேகமாக. பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அப்படி என்ன நடந்தது??? ஏன் பெரியவர்கள் பிள்ளைகளிடமிருந்து மறைக்கின்றனர்???? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..........................................................
யாசிப்பு தொடரும்....................................................................................
Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 5
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 5
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.