மழைவரும் அறிகுறி

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தாயின் கருவறையைப்போல்

இருளால் ஆட்கொள்ளப்பட்ட வானம்!!!

மல்யுத்த களத்தில்

போரிடும் வீரர்களாய்

கும்மிருட்டு சூழ்ந்த வானில்

தமக்கிடையே மோதிக்கொள்ளும்

மழை மேகங்கள்!!!

இரு கற்கள் உரசுகையில்

பற்றிக்கொள்ளும்

சிறு தீயினை போல்

மழைமேகங்கள் உரசுகையில்

தோன்றும்

மனதை கிலிகொள்ளச்செய்யும்

மின்னளொளி!!!!

போரில் வென்ற

படையினர் முழங்கும்

வெற்றி முரசினைப்போல்

காதை பிளக்கும்

இடியோசை!!!!

சுயம்வரம்தனில் மணமாலைபெற்ற

அரசனுக்கு நடைபெறும்

மரியாதை அணிவகுப்பை போல்

இறைவனின் கொடையாய்

உருவகிக்கப்படும்

மழையின்

வரவை அறிவுறுத்துவதாய்

நிகழும் நிகழ்ச்சிகள்....

இயற்கையின் விசித்திரங்களா???

அதிசயங்களா????
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN