என்னை தீண்டிவிட்டாய் 16

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தேவதையின்
வரம் அனைவரையும்
வளமாக்க
அந்த தேவதைக்கே சாபம்
விடுத்தது விதி....

இன்றோடு ஆதிரா ஹாஸ்பிடலிலிருந்து வந்து ஒரு மாதமாகிவிட்டது... மீண்டும் வேலையென்று கிளம்பியவளை தடுத்த வசுமதி எந்த வேலையென்றாலும் வீட்டிலிருந்தபடி பார்க்குமாறும் தேவையேற்படின் மட்டும் வெளியே செல்லுமாறும் உறுதியாக கூறிவிட அவரை மறுத்துப்பேசமுடிவில்லை... ஷாகரும் பிரகஸ்பதியும் வசுமதி சொல்வது சரியென்று ஒப்புக்கொள்ள ஆதிராவுக்கும் வேறு வழியிருக்கவில்லை.....

அன்றும் ஆபிஸ் வேலையில் பிசியாயிருந்தவளுக்கு ஜூஸ் எடுத்து வந்தார் வசுமதி...

“என்ன அத்தை... கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனா... நீங்க எதுக்கு கஷ்டப்படுறீங்க...?”

“என் மருமகளுக்கு நான் செய்றேன்..இதுல என்ன கஷ்டம் எனக்கு???சரி. நீ ஜூசை குடி..” என்று வசுமதி கூற அவரிடமிருந்து வாங்கி ஜூசை குடித்துமுடித்தாள் ஆதிரா...

“ஆதிரா.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்மா...”

“சொல்லுங்க அத்தை...”

“நம்ம ஜோசியரை பார்க்க போயிருந்தேன்...அவரு உங்க இரண்டு பேருக்கும் நேரம் சரியில்லைனு சொன்னாரு...”

“ம்ம்ம்...”

“ஷாகர் உன் கழுத்துல கட்டுன தாலி அம்மன் சன்னிதானத்துல அம்மனுக்கு காணிக்கையாக கொடுத்த தாலியாம்... அது தான் உங்க இரண்டு பேருக்கும் இத்தனை சிக்கலை கொடுத்திருக்காம்...”

“அத்தை இன்னுமா இதெல்லாம் நம்புறீங்க...?”

“ஆதிரா அந்த ஜோசியர் சொன்னது எல்லாமே இதுவரைக்கும் நடந்திருக்குமா... ஷாகர் கல்யாணம் எங்க முன்னாடி நடக்காதுனு சொன்னாரு... அதே மாதிரி யே நடந்துச்சு...”

“அத்தை நீங்க இவ்வளவு தூரத்திற்கு நம்பும் போது உங்க நம்பிக்கையை கெடுக்க நான் விரும்பலை... சரி ஜோசியர் வேற என்ன சொன்னாரு....”

“அந்த தாலி உன் கழுத்துல இருக்கிற வரைக்கும் இரண்டு பேருக்கும் மாற்றி மாற்றி பிரச்சினை வந்திட்டு தான் இருக்குமாம்.. அதனால இப்போ இருக்க தாலியை உங்க கல்யாணம் நடந்த கோவில் உண்டியலில் போட்டுட்டு மறுபடியும் அந்த அம்மன் சன்னிதானத்துல ஷாகர் உன் கழுத்துல தாலி கட்டுனா எல்லா பிரச்சினையும் சரியாகிடும்னு சொன்னாரு...”

“அத்தை..”

“ஆமாமா.. உன்னோட ஊருக்கு போயிட்டு இந்த பரிகாரத்தை பண்ணிட்டு வரலாம்மா..”

“அத்தை.. இங்க உள்ள கோவில்ல அந்த பரிகாரத்தை பண்ணமுடியாதா??”

“அதையும் கேட்டேன்மா. ஜோசியர் அங்க தான் பண்ணனும்னு சொல்லிட்டாரு..”

“ஆனா அத்தை.. அங்க.. எப்படி..”
“நீ சரினு சொல்லு.. நான் எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணுறேன்..ஷாகர்கிட்ட கேட்டப்போ உனக்கு விருப்பம்னா போகலாம்.. இல்லைனா வேணாம்னு சொல்லிட்டான்.. கட்டாயம் இந்த பரிகாரத்தை பண்ணா இனி உங்க வாழ்க்கையில எந்த சிக்கலும் வராதுனு நான் நம்புறேன்... பரிகாரத்தை பண்ணிடலாம்மா..” என்று வசுமதி மீண்டும் மீண்டும் கேட்க ஆதிராவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. . அவள் மனம் அந்த பயணத்தை விரும்பவில்லை... அதற்காக தன் அத்தையின் வேண்டுதலையும் அவளால் நிராகரிக்கமுடியவில்லை.. ஷாகரிடம் பேசிவிட்டு முடிவெடுக்கலாம் என்று எண்ணியவள்

“அத்தை எனக்கு மறுபடியும் என்னோட ஊருக்கு போறதுல துளி கூட விருப்பம் இல்லை... ஆனாலும் நீங்க கேட்டு என்னால மறுக்கமுடியல... எனக்கு கொஞ்சம் டைம் தாங்க அத்தை.. ப்ளீஸ்...”

“உன் நிலைமை எனக்கு புரியிது ஆதிரா.. எனக்கும் கூட உன்னை அங்கு கூட்டிட்டு போறதுல விருப்பமில்லை.. ஆனா இது சாமி விஷயம்.. அதான் இவ்வளவு தூரம் சொல்றேன்.. நீ ஷாகர் கூட பேசிட்டு சொல்லு..” என்றவர் அறையிலிருந்து வெளியேறினார் வசுமதி..

அன்று இரவு ஷாகர் வரும் போது மணி பத்தாகியிருந்தது... அறைக்கு வந்தவன் உடைமாற்றிவிட்டு மீண்டும் லாப்டொப்போடு அமர்ந்துவிட அதை பார்த்த ஆதிரா

“என்ன ஷாகர் இது.. எத்தனை தடவை சொல்லுறது.. வீட்டுக்கு வந்தா இதை தூக்கிக்கிட்டு உட்காராதீங்கனு.. வர்றதே லேட்டு... இதுல வந்ததும் இதை தூக்கிட்டு உட்கார்ந்தா என்ன பண்ணுறது????”

“ஆது வேலை குவிந்து கிடக்குமா.. உனக்கே தெரியும்... நீயே இப்படி பேசுனா எப்படி பேபி..”

“அதுக்காக வந்ததும் இப்படி சாப்பிடாமல் உட்கார்ந்தா சரியா.. வாங்க சாப்பிட்டு வரலாம்....”

“ஹேய் நீ இன்னும் சாப்பிடலயா?? ஏன் இன்னும் சாப்பிடாமல் இருக்க...?? டாக்டர் சரியான நேரத்துக்கு சாப்பிட்டு டேப்லெட் எடுத்துக்க சொல்லியிருக்காங்க தானே... தினமும் இப்படி தான் எனக்காக சாப்பிடாமல் இருக்கியா?? இந்த அம்மா கூட கவனிக்கலையா??”

“நீங்களே உங்க பொண்டாட்டியை கவனிக்கிறதில்ல... இதுல அத்தையை எதுக்கு குறை சொல்லுறீங்க.... வேணும்னா நீங்க வீட்டுல இருந்து உங்க பொண்டாட்டியை கவனிச்சுக்கோங்க... “

“ஓ... என்பொண்டாட்டிக்கு அப்படியொரு ஆசையிருக்கா...???சரி... அப்படினா இனிமே வீட்டுலயே டேரா போட்டுற வேண்டியது தான்...”

“எப்படா சான்ஸ் கிடைக்கும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க??? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை... இப்போ வாங்க சாப்பிடலாம்...” என்று ஆதிரா கூறிவிட்டு அங்கிருந்து நகர முயல அவளை கைபிடித்து தடுத்த ஷாகர்

“ஹேய் என்ன இப்படி சொல்லிட்ட... நான் எவ்வளவு ஆசையா இருந்தேன்னு தெரியுமா???”

“ஆமா அப்படியே இருந்துட்டாலும் என்னை கொஞ்சிட்டு தானே இருப்பீங்க...??”

“அப்போ நான் கொஞ்சமாட்டேனு சொல்லுறியா...??”

“நான் சொல்லலைப்பா... அதான் நிஜம்..”

“அப்படியா சொல்ற??” என்றபடி மறுகையால் லாப்டொப்பினை எடுத்து தள்ளி வைத்தவன் ஆதிராவை இழுக்க அவள் அவன் மடியில் வந்து விழுந்தாள்..
மடியில் விழுந்தவளை வளைத்துபிடித்தவன் பார்வையால் அவள் விழிகளை வேட்டையாட முயல அவள் விழிகளோ நில்லாமல் அலைபாய்ந்தது...

படபடக்கும் விழிகளோடு அதரங்களும் நாக்கால் ஈரப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்க கன்னங்களோ நொடிக்கு நொடி தன்மேல் பூசிக்கொண்ட சிவப்பினை அதிகரித்துக்கொண்டிருந்தது... ஆதிராவின் அண்மை ஷாகரின் உணர்வுகளை தூண்டிட அவள் இதழ்நோக்கி குனிந்திட ஆதிராவோ கண்மூடிக்கொண்டாள்...ஆனால் அவள் எதிர்பார்த்தது தான் நடைபெறவில்லை.. கண்விழித்தவள் நிமிர்ந்து அமர்ந்து கண்மூடி தன்னை நிதானப்படுத்திக்கொண்டிருந்த ஷாகரை கண்டாள்..
மெதுவாக அவன் கன்னத்தில் ஆதிரா கை வைக்க ஷாகரோ அவள் கையை தன் கன்னத்தோடு இறுக்கி பிடித்தபடியிருக்க ஆதிரா தன் மறுகையால் ஷாகரின் தலையினை வருட அதில் தெளிந்தவன் மெதுவாக அவளை விலக்கிவிட்டு அவளை விட்டு எழுந்து பால்கனியில் சென்று நின்றுகொண்டான்...

ஷாகரின் நடவடிக்கைக்கு காரணம் புரியாத ஆதிரா அவனை பின் தொடர்ந்து வந்த ஆதிரா பால்கனி வாசலில் நின்றபடி

“என்னாச்சு ஷாகர்..”

“இ..இல்.இல்ல.. கொஞ்ச நாளைக்கு இதெல்லாம் வேணாம்...”

“காரணம் தெரிஞ்சிக்கலாமா??”

“வேணாம்னு தோனுது...”

“இவ்வளவு நேரம் வேணும்னு தோன்றியது ஏன் இப்போ வேணாம்னு தோன்றுது???”

“தோனுது.. அவ்வளவு தான்.. ஐ ப்ளடி காண்ட் கிவ் எக்ஸ்ப்ளனேஷன் டூ சச் சில்லி திங்க்ஸ்..”

“ஓ.. அப்போ என்னோட பீலிங்சோட விளையாடுறது உங்களுக்கு சில்லியான விஷயமா போச்சுல???”

“சொன்னா புரிஞ்சிக்கோ ஆது.. வேணாம்னா விட்டுரு...”

“ம்ஹூ... எனக்கு நீங்க நினைக்கிறீங்கனு புரியிது.. ஏற்கனவே உணர்ச்சி வேகத்துல நடந்துக்கிட்டாதல உருவான குழந்தை நிலைக்கலை.. மறுபடியும் அப்படியே நடந்திடுமோனு பயப்படுறீங்க.. அதானே...” என்றா ஆதிரா கேட்க இப்போது அதிர்வது ஷாகரின் முறையானது...

சட்டென ஒரு பயத்துடன் ஆதிராவை திரும்பி பார்த்தவன்

“நீ.. நீ.. என்ன சொல்ல வர்ற???”

“எனக்கு எல்லாம் தெரியும் ஷாகர்.. நான் கர்ப்பமாக இருந்தது.... அது எனக்கு அடிப்பட்டதால கலைந்தது... அதை நீங்க எல்லாரும் சேர்ந்து மறைச்சது... எல்லாமே தெரியும் ஷாகர்..” என்றா கூறிய ஆதிரா கட்டிலில் சென்று அமர ஷாகருக்கோ தான் கேட்டதை நம்பமுடியவில்லை.... எப்படி அவளுக்கு தெரிந்தது.. அவளுக்கு தெரியக்கூடாது என்று தானே இத்தனை நாள் கவனமாக இருந்தோம்... யார் கூறியிருப்பார்கள்.. என்று தன்னுள்ளே யோசித்தபடியிருந்தவனுக்கு அப்போது தான் ஆதிராவின் நினைவு வர அறைக்குள் சென்று ஆதிரா அமர்ந்திருந்த கட்டிலுக்கு கீழ் அமர்ந்த ஷாகர் ஆதிராவை அழைக்க அவளோ இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை வெளிக்கொட்டிட முழந்தாளிட்டு அமர்ந்த ஷாகர் அவள் முகத்தை தன் கைகளால் தாங்கி பிடித்தபடி

“ஆது இங்க பாரு.. என்னை பாருமா.. ப்ளீஸ் அழாத.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... யாரு உனக்கு இப்படி சொன்னது...அப்படி எல்லாம் எதுவும் இல்லைமா...”

“ஏன் ஷாகர் இன்னமும் மறைக்கிறீங்க .. நம்ம குழந்தையை என்னோட கெயார்லஸ்ஸால நானே கொன்னுட்டேன்...” என்றவள் மீண்டும் அழ ஷாகருக்கு உள்ளே வலித்தது...

“பேபி அப்படியெல்லாம் எதுவும் இல்லை பேபி... அது ஒரு ஆக்சிடன்ட்... இதுல உன்னோட தப்பு எதுவும் இல்லை.. ப்ளீஸ் பேபி அழாத...”

“இல்லை... நான் தான் என்னோட குழந்தையை கொன்னுட்டேன்.. அந்த கடவுள் எதையும் எனக்கு நிரந்தரமா நிலைக்கவிட்டதில்லை.. என் வயித்தில உருவாகுன பாவத்துக்கு உங்க வீட்டு வாரிசையும் அவனே திரும்பி எடுத்துக்கிட்டான்....” என்று ஆதிரா மீண்டும் மீண்டும் அழ ஷாகருக்கோ அவளை சமாளிக்க முடியவில்லை... தன் கோபத்தை காட்டினால் மட்டுமே அவள் அழுகையை நிறுத்துவாள் என்றுணர்ந்த ஷாகர்

“ஆமா நம்ம குழந்தை கருவிலேயே கலைஞ்சு போச்சு.. இப்போ அதுக்கு என்ன பண்ண சொல்லுற??? இப்படியே அழுது அழுது உடம்பை கெடுத்துக்கபோறியா??? சொல்லு.... அதான் இல்லைனு ஆகிடுச்சே.... பிறகு என்ன பண்ணுறது...??? என்னோட அவசரத்தால உன்னோட கருவில் உருவான நம்ம குழந்தை நம்மை விட்டு போயிடுச்சு.. அவ்வளவு தான்... இதுல உன்னோட தப்பு எதுவும் இல்லை.... அப்படியே தப்புனா அது என்மேல தான்.... என்னோட அவசரத்தால தான் நீ ப்ரக்னன்டான.. என்னோட சுயநலத்துக்காக நீ ஸ்ரெயின் பண்ணி உன்னோட ஹெல்த்தை கவனிக்காம விட்ட.. அதனால தான் உன்னோட பரெக்னென்சி உனக்கு தெரியாமல் போனது... நான் உன்னை சரியாக கவனிக்காததால தான் இதெல்லாம் நடந்தது.. இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம்... நான் தான் காரணம்...” என்று கோபத்தில் பொங்கியவன் அறையிலிருந்து வெளியேறிவிட ஆதிராவோ கட்டிலில் கவிழ்ந்து அழுதவள் தன்னை அறியாமல் உறங்கிவிட்டாள்

வீட்டிலிருந்து வெளியே வந்த ஷாகர் தோட்டத்தில் நடை பயில தொடங்கினான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN