2.யஸ்வந்தினி பாகம் 2

Vijay Navin

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
டேய் அவளை கொன்னுடலாமா?


என்றதும் அதிர்ச்சியில் பார்த்தனர், ஆதித்தியனை.


அவனது நண்பர்கள்.........!


ஏன் டா இப்படி பாக்குறீங்க... நமக்கு இங்க டியுட்டு போட்டு 12 டேய்ஸ் ஆயிற்று டா,


இங்க வந்த நாள்ள இருந்து நான் அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு


பயமா இருக்கு டா.


எப்ப? எங்க? என்னை கொல்ல போறானு தெரில என, ஆதித்தியன் பயத்தில் உளரினான்.


ரவி குறுக்கிட்டு டேய் அப்படிலாம் அவ்வளவு சீக்கிரம் உன்ன கொல்ல முடியாது டா,


உன் கிட்ட தான் கன் இருக்கு,


அது மட்டும் இல்லை அவள்


சாதாரண பொண்ணு டா,


அவள் உன்னை கொன்னுறுவானு நினைக்கிறியா?


டேய் நிச்சயம் தெரியும் அவள் என்ன கொன்னுடுவாள் மச்சா! என ஆதி பேசிய மறுகணம்,


பயங்கர சிரிப்பலையில் ஆதி ஆதி என ஓடி வந்தாள் தற்போதைய யஷ்வந்தினி,


கண நேர சுதாகரிப்பில்,


என்ன வென எரிந்து விழுந்தான் ஆதி.....


இது அவளுக்கு பெரியதாய் படவில்லை, டேய் எப்பவும் நீ கோவமாய் தான் இருப்பிய என்ற பாவனையில் பார்த்துவிட்டு


ரவியிடம் அண்ணா!


என் பெட் எங்கனு கேட்டல, இதோ வந்திடிச்சி!


பாரு......


டா டான் என்றதும்


குடுசையின் வெளியில் இருந்து இரண்டு சிறுத்தைகள் யஸ்வந்தினியை நோக்கி பாய்ந்தன,


அனைவரும் பயத்தில் பின்வாங்க, யஷ்வந்தினி மட்டும் அதை கொஞ்சி கொண்டிருந்தாள்.


இது தான் என் பெட், நான் சோல்லுர வரை யாரை கடிக்காது, என்று பேய் சிரிப்பு சிரித்தாள்


யஷ்வந்தினி என்னவோ நிலவுடன் போட்டியிடும் அழகை கொண்டிருந்தாலும்


அவள் சிரிப்போ மரணு ஓலத்தையே மிஞ்சிவிடும்,


எப்போதும் அவளை கண்டு ஆதியே முதலில் பயப்படுவான், இந்த முறை அவனோடு சேர்த்து அவனது நண்பர்களும் பேச்சு மூச்சில்லாமல் நின்றனர்,


ஆதியே இந்தமுறை குறுக்கிட்டு சிறுத்தையை யாராது வளர்ப்பாங்களா?


நம்ம கவர்மென்ட் ரூல்ஸ் படி வன விலங்களை வளர்க்க கூடாது, என்று தெரியாத உனக்கு என மேலும் அடுக்கிகொண்டே போக...


டேய் ஆதி நான் இதை வளர்க்க வில்லை சரியா?


இதெல்லாம் காட்டுலதான் வாழும்


பட் வீக் ஒன்ஸ் என்னை பார்க்க எப்படியாது வந்திடும் என்று முறைத்தாள், அவள் முறைத்ததால் என்னவோ சிறுத்தைகளும் அவன் மேல் பாய தயாராக இருந்தன.


சரி சரி யஸ்வந்தினி ப்ளிஸ் வெளிய கூட்டிட்டு போரீயா என்றான் ஆதி.


ம்ம்ம்ம்ம் என்ற படி வெளியே போனாள்.


ஆதியின் நண்பர்கள் சற்று நெர இடைவெளியில் இவளை கொன்னுறலாம் டா,


இவ கண்டிப்ப உன்ன கொல்ல வந்தவள் தான் என கோரஸ் ஆக சொன்னார்கள்...


ஆதித்தியன் பேச ஆரம்பிக்க...


சாளுக்கிய,


பல்லவ,


மன்னவர்களின் தலை கொண்ட சோழப்புலி ஆதித்தியன் கரிகாலன் வரான் வரான் என்று ஒருவன் முழங்கியது கேட்க...


திடுகிட்டு இந்த பக்கம், அந்த பக்கம் திரும்பி பார்த்தான், பிரம்மை என உணர்ந்தப் பின்பு


டேய் எப்படி டா அவளை கொல்லுறது என சொல்லி வாய் மூட...


ஆதித்தியா என்னை நீ கொல்ல போறாயா! ஹா ஹா ஹா


என்னை என்ன ஆற்றில் போகும் அரலை மீன் என நினைத்தாயா, நான் பாண்டியனின் திமிங்கலம் என்று அடுத்த குரல்...


திரும்பவும் அங்கும் இங்கும் பார்த்து விட்டு இதுவும் பிரம்மைத்தான் போல உணார்ந்தவன்...


ஏதோ தோன்றியவனாய்


ரவியிடம் கண்காட்டி அந்த மிசீனை தலையில் மாட்ட சொன்னான்,


ஏன் என நண்பர்கள் வினாவ,


அனைவரையும் முறைத்தான்


வேறு வழியின்றி அவர்களும் மாட்டி கணினியை பார்த்தனர்...


அங்கே நண்பா பல்லவனை வென்றுவிட்டோம், சாளுக்கியனை துரத்தி விட்டோம், அடுத்து என்ன கங்கை மீது போர் தொடுப்போமா... என ஒருவன் ஆர்வமாய் கேட்க,


அவன் ரவியை போல் இருந்ததை பார்த்து திகைத்தனர், அனைவரும்


இல்லை வல்லவராயா, அடுத்து படையெடுப்பது வீர பாண்டியனின் மேல் என்றதும் அப்போதைய வல்லராயன் தற்போதைய ரவி இளவரசே! பாண்டியனின் படை நம்மை விட மூன்று மடங்கு பெரியது என அதிர்ச்சி கொண்டான்


ஆதித்தியன் நமது ஒவ்வொரு சோழ புலிகளும் ஆயிரம் மீன்களுக்கு சமம் என பதிலுக்கு முறைதான்


இதற்குமேல் பேசுவது மரியாதை அல்ல என சரி இளவரசே என பேச்சை முடித்தான்


இருவரும் அவர்கள் வென்ற பல்லவனின் அரண்மனைக்கு சென்று ஆதித்தியன் தனது படைத்தளபதிகளுக்கு அழைப்பு விடுத்தான்,


அனைவரும் வந்த பின்பு சோழரின் புலி சின்னத்தை காப்பாற்ற போராடும் தமிழக சிங்கங்களே! அடுத்து நமது இலக்கு பாண்டியன் என்றதும் சற்று விழிபிதுங்க பார்த்தனர் ஆதித்தியனை அனைவரும்


ஆதிதியன் உங்கள் கருத்தை சொல்லுங்கள் என முகத்தில் கர்வமும் குரலில் கோபத்துடன் சொல்ல, அனைவரும் அமைதியானார்கள்,


வல்லவராயன் குறுக்கிட்டு இளவரசே நம்மிடம் யானைப்படைகள் குறைவாகவே உள்ளன, நாம் சோழ தேசத்தில் அரசரிடம் படைகளை அனுப்ப கோரலாமா? என்றதும்,


தந்தை அதற்கு அனுமதி தருவது கடினம் என்றான், இதுவரை தெளிவாய் இருந்த அவனது முகம் சிறுது கடுகடுத்தது,


அடுத்து ஓர் படை தளபதி இளவரசே


நமது படைகள் அடுக்கடுக்கான போரின் மூலம் சோர்ந்துள்ளன, அதற்காக! அவர்களுக்கு போர் என்றால் அச்சம் அல்ல, இருப்பினும் இங்குள்ள படைகள் பாண்டியனிடம் ஒப்பிட்டுப்பார்த்தால் மிகவும் குறைவு, அரசரிடம் படைகள் கேட்டு வேண்டுமானால் என அவர் இழுத்தார்


இதுவும் அவனுக்கு சரியென பட, சற்று நிதானித்து


சரி தளபதியாரே


தந்தையிடம் படைகள் கேட்டு மடல் அனுப்புங்கள் என்று கட்டளையிட்டான்


பின்பு அனைத்து தளபதிகளிடமும் நீங்கள் சோழ நாடு சென்று ஓய்வெடுங்கள், நானும் என் நண்பன் வல்லவனும் பாண்டிய நாட்டுக்கு ஒற்றுக்கு செல்கிறோம் என்றான்


இவனை வேணாம் என்று நம்மால் தடுக்க முடியாது என்ற படி அமைதி காத்து அவரவர் அரண்மனைக்கு அனைவரும் கிளம்பினர்


அடுத்தநாள் காலை


இளவரசரும் அவரது நண்பர்களும் குதிரையில் கிளம்பினர்,


துங்கப்பத்திரை அற்றில் பயணத்தை தோடங்கப்பட்டது,


ஒரு வார பயணத்தில்,


இக்கரையில் கண்டால் அக்கரை தெரியாத காவிரியையும் கடந்தாயிற்று,


அடுத்து பொதிகை மலை அதையையும் தாண்டி வைகையை அடைந்தனர்


அடைந்ததும்


நண்பா முத்தமிழ் வாழ்த்திய பாண்டிய நாட்டை அடைந்தோம், என ஆதித்தியன்சொன்னான்,


வல்லவராயன் இளவரசே நாம் இன்று இந்த ஆற்று படுகையில் ஓய்வெடுத்து விட்டு காலையில் பாண்டிய நாட்டிற்குள் செல்லலாம் என்றான்


ஆதித்தியன் நண்பா நமக்கு ஓய்வே கிடையாது, நாளை பாண்டிய நாட்டின் அரசனை கவனிக்கலாம், இன்று பாண்டிய காட்டின் அரசனை கவனிக்கலாம் என்ற படி வேட்டைக்கு தன் நண்பனை அழைத்தான்.


வல்வராயனும் உற்சாகத்துடன் காட்டிற்கு கிளம்பினான் ஏன்? என்றால் அவனுக்கு வேட்டை என்றால் கொள்ளை பிரியம் அதனால்,


இருவரும் சூரிய ஒளிக்கூட செல்ல, தயங்கும் பாண்டியனின் அடர்ந்த காட்டிற்கு அடியெடுத்து வைக்க


ஆதித்தியன் விர பாண்டியனிடம் உள்ள பழியை இங்குள்ள சிங்களிடம் காட்டி விடுகிறேன் என்று நண்பனிடம் சொல்லி சிரித்தான்,


அதே கணத்தில்


ஹா ஹா ஹா ஹா என்ற சிரிப்பிற்கு பின்


“நள்ளென்றன்றே, யாமம் சொல் அவித்து,


இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று,


நனந்தலை உலகமும் துஞ்சும்


ஓர் யான் மற்ற துஞ்சாதேனே”


என்ற பாடல் குயிலினும் இனிய குரலில் பாடியது,


முதலில் சிரித்த குரலுக்கும் பாடலின் குரலுக்கும் சம்மந்தம் இல்லாததால் சற்றே அதிக கவனத்துடன் தான் பாடலில் திசைக்கு சென்றனர்.


திரும்பவும் அதே குரலில் அதே பாடல் ஒலிக்க,


அதித்தியன் அவள் அழகு என்றான்.


அதே நேரத்தில்,


அதே கணத்தில்,


சற்றும் வேறுபாடின்றி,


வல்லவராயன் அழகு அவள் என்றான்.


இருவரும் ஒரு மௌன புன்னகையில் ஒருவரை ஒருவர் பார்த்தனர், இதற்கு பொருள் குதிரை பந்தயம்.


ஆதித்தியன் தனது பாதினொன்றாம் வயதில் போர்களம் புகுந்தவன், வல்லவராயனும் சற்றும் சளைத்தவன் அல்ல பதினெட்டாம் வயதில் போர்களம் பார்த்தவன்,


நமது வீரர்கள் தன் வாளை நேசித்த அளவில் பெண்ணின் மேல் கவனம் இதுவரை சென்றதில்லை.


அது இன்று மாறிடும் வகையில் ஒருவருக்கொருவர் வேகமாக குதிரையை விட்டு சென்றனர்அந்த குயிலோசை பெண்ணை சந்திக்க...,


அதிவேகத்தில் சீறும் சிறுத்தை மானை அறிந்ததும் சிறிது யோசிக்குமாம், அதுபோல் தான் இலக்கை அடைந்த அவர்கள் அப்படியே திகைத்து நின்றனர்,


குயிலோசை தொடர்ந்து சென்றவர்களும் மயிலைக்கண்டதும் அதன் அழகை கண்டு குயிலை மறந்த கதை ஆயிற்று அவர்கள் நிலைமை,


குயிலிசை பெண்ணின் மயிலிடை கவர்ச்சியால் வலைக்குள் சிக்குண்ட மீனாய் நின்றனர்


தனது காந்த பதித்த கண்களால் யார் என வினாவ,


ஆதித்தியன் நாங்கள் ஈழ நாட்டு வியாபாரிகள் பாண்டிய நாட்டில் வியாபாரம் செய்ய வந்திருக்கிறோம் என்றான்,


வால்வராயன் இன்னும் அவள் கவர்ச்சியில் இருந்து வெளி வந்தவனாய் தெரியவில்லை,


அவர்களை பார்த்தபடியே நடந்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை திரும்பவும்


நள்ளென்றன்றே, யாமம் சொல் அவித்து,


இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று,


நனந்தலை உலகமும் துஞ்சும்


ஓர் யான் மற்ற துஞ்சாதேனே”


என்ற பாடலை பாடினாள்.


அருமை பெண்ணே அருமை பெண்ணே என அவள் பெயர் என்ன வென ஆதித்தியன் வினாவ,


காவரியின் தவ புதல்வனை கொல்ல வந்திருக்கும் தாமர பரணியின் வீர மகள் என கையில் இருந்த வேலை தூக்கி எறிந்தாள்,


அதை எதிர்பார்தவனாய் அதை தனது கையால் பிடித்தான்,


வல்லவராயனுக்கு என்ன நடக்கிறது என புரிய சிறிது கணம் பிடித்தது,


புரிந்ததும்


தனது இளவரசரை காப்பாற்ற கிழே குதித்தான்,


ஆதித்தியன் தவறு செய்தாய் சப்தலிக்கா, உன்னுடைய அழகிய இடைகளுக்கு "சேர வில்கள் வேண்டுமென்றால் ஏமாரலாம்" நான் சோழ புலி என திருப்பி எறிந்தான்,


அவள் ஹா ஹா ஹா ஹா என சிரித்தவளாய், தான் சப்தலிக்கா இல்லை யஸ்வந்தியினி என முழங்கிய படி தன் வாளை எடுத்தாள்,


வல்லவராயன் பெண்ணை தாக்க கூடாது என விதிக்கொண்டவன், அதே சமயம் தன் உயிருள்ளவரை இளவரசரை காக்க வேண்டும் என உறுதி கொண்டவன், இரண்டுக்கும் நடுவே குழம்பி கொண்டிருக்க,


இளவரசன்


வேகமாக ஓடி யஸ்வந்தியை தாக்கினான்,


ஆதித்தியன் ஓரே வெட்டில் சிங்கத்தையும் கொன்றிருப்பவன், இன்று அதே வேகத்தில் அவளை தாக்க சற்றும் அசையாமல் அவள் நின்றாள், அப்போது தான் தனக்கு இணையான பலம் கொண்டவள் என அவன் அறிந்தான்,


அவனும் அவளும் அர்சுனனும் பீமனும் போல சளைக்காமல் சண்டை யிட வல்லவராயன் அவளை தாக்கலாமா? கூடாத? என்ற படி சிந்தித்திருந்தான்,


இதே சமயத்தில் நமது கதாநாயகி தனது பலத்தால் ஆதித்தியனுக்கு வலது கையில் வாள் பதித்தாள், இரத்தம் சொட்ட சொட்ட ஆதித்தியன் சண்டை யிட அவன் மனதில் தோன்றியது,


இவள் எங்கே வைத்திருந்தாள் இவ்வளவு பலத்தை, முகத்தை பார்க்கும் போது பிறந்த குழந்தையை மிஞ்சிவிடும் சிரிப்பு, சரியான கள்ளிதான் போல என சண்டையிட்டே அவளை குத்த போக,


ஆதித்தியன் வாளுக்கும் அவளின் அழகிய இடைக்கும் சிறிது இடைவெளி தான் நினைத்தால் குத்திடலாம், என்று இருந்தும் அவளது இடையை காயமாக்க விரும்பாமல் தள்ளிவிட்டான்,


இரண்டடி பின்னால் சென்றாள்,


யார் நீ வாளின் தேவதையை மிஞ்சிடுவாய் போல என்று அவளிடம் வினாவ?


முத்தமிழின் காவலன் வீரபாண்டியனின் புதல்வி என்று தனக்கே உரிய வீரத்தில் சொன்னாள்


இதுவரை சிரித்திருந்த ஆதித்தியன், கொடுர பார்வையில் அவளை நோக்கி பாய்ந்தான்


இதுவரை பெண்ணை துன்புறுத்தாத வல்லவராயனைக் கூட அவளிடம் சண்டையிட வைத்தது வீர பாண்டியனிடம் அவன் கொண்ட வெறுப்பு


இப்போது


இங்கே இருவர்! அங்கே அவள்!


வாளை இருவரும் வீச இவள் சற்று பின்னால் வந்து திரும்பி வல்லவராயனை ஆதித்தியனிடம் இருந்து தனியே பிரித்தாள்,


இப்போது இருவரும் எத்ர் எதிரே நிற்க, இவள் நடுவில் இருந்தாள், அவர்கள் இவளை கொல்ல முன்னெடுக்க இவள் சற்று விலகினாள்,


இருவரும் நூலிலையில் தப்பித்தனர், தாங்களே தங்களைமாற்றி கொன்றிருக்க நேரும் சிறுது நல்ல நேரத்தில் தப்பித்தனர்,


அவள் ஆதித்தியனை குத்த வாளை எறிந்தாள், இளவாரசர் உயிர் காக்க, வல்லவராயன் குறுக்கே நின்றான்.


நண்பனின் உயிர் காக்க வல்லவராயனை தள்ளி விட்டான், இளவரசன்


ஆதித்தியனை வாள் வலது தோள் பட்டையில் பாய்ந்தது, ஆதித்தியன் என்னே பாண்டிய மகளின் வீரம் என்ற படி வல்லவராயனை பார்த்தான்


வல்லராயன் அவளிடம் சண்டை யிட்டிருக்க, அவன் கண்ணில் கண்ணீர் ஒழுகியது, காரணம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


ஆதித்தியன் வல்லவராயனை விலக்கி அவளின் மார்பில் ஓர் அடி விட்டான், இதுவரை பாறை போல் நின்றவள் சற்று திடுக்கிட்டாள்,


அடுத்த தாக்குதலுக்கு அவள் செல்லும் முன் திரும்பவும் மார்பில் ஓங்கி முட்டால் இடித்தான், சற்று அசையாது நின்றவள்


கொஞ்சம் வரை பீமனை போல் சண்டையிட்டவள், கதி கலங்கி நிற்க இருவரும் தனது முட்டியால் அவளின் மார்பில் மிதிக்க அப்படியே விழுந்தாள்,


விழுந்தும் ஆத்திரம் அடங்காமல் அவளின் இடையில் மிதித்து கத்தியால் குத்த சென்றான் ஆதித்தியன்,


திடீரென்று நின்றவனாய் என்னை குத்தியதால் உன்னை உயிரோடு விடுகிறேன் நண்பனின் மேல் துளி கத்தி பட்டிருந்தாலும் உயிர் உனக்கல்ல என்றான்


அவள் ஹா ஹா ஹா என்ற பேய் சிரிப்பு சிரித்து அடேய் மூடா என்று சொன்னாள்.


இளவரசன் அவளை முறைத்து பார்த்துவிட்டு இவள் நம்மை வாழ் நாளில் நம்மை மறக்க கூடாது என்ற படி


தனது வாளை அவளின் அருகில் கொண்டு சென்று அவள் கழுத்தால் தனது கத்தியால் மீனை வரைந்திருந்தான், அவள் வலியில் கத்திட்டுருக்க, அமைதி சப்தலிக்கா என்றான்


என் பெயர் சப்தலிக்கா இல்லை என அவள் வலியுடன் சேர்த்து கத்தினாள்.


எங்கள் நாட்டில் நடு சாமத்தில் ஆண்களை மயக்கி உயிரை கொல்லும் துர் ஆத்மா ஒன்றுள்ளது அது போல் நீயும் ஆகவே சப்தலிக்கா என்றேன்.


என வரைந்து முடித்தான் ஆதித்தியன்


1.யஸ்வந்தினி முதல் பாகம்
 

Author: Vijay Navin
Article Title: 2.யஸ்வந்தினி பாகம் 2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN