நீயே காதல் என்பேன் 1

sizzling_saran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மென்மையான ராகத்தில் அந்த அறையில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதை தனக்குள் முணுமுணுத்தப்படி கடந்த வாரம் தன் உயிர் தோழிகளான அனுஷியா மற்றும் சாதனாவுடன் எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தால் மாதவி....

அந்த அறை கதவை திறந்த இயக்குநர் ரித்விக்கின் அலுவலகத்தின் வரவேற்பாளர் அவர் இன்றும் வர இயலாததை கூற மாதவி கோபமாக வெளியேறினாள்...

கைப்பேசியில் அனுவை அழைத்து வழக்கம் போல் ரித்விக்கை திட்டி முடித்தாள்...சற்று கோபம் தணிந்தவளாக அடுத்த நாள் சாதனாவின் பிறந்தநாளைக் கொண்டாட தான் செய்ய வேண்டியதை கேட்டறிந்தாள்

கைப்பேசியை துண்டித்தவள்,அந்த அலுவலகத்தில் உள்ள சுவற்றில் கவர்ச்சியான புன்னகையை சிந்தியவாறு இருந்த ரித்விக்கின் புகைப்படத்தை பார்த்தவள்....

இடியட்....சிரிக்கர்த பாரு!!!!

மனசில மிக பெரிய இயக்குநர்னு நினைப்பு

சொன்னா சொன்ன நேரத்திற்கு வரது இல்லைஎன்று மனதார அவனை திட்டி முடித்தவள் அங்கிருந்து வெளியேறினாள்...


மாதவியிடம் பேசி முடித்த அனு...சிரித்தவாரே புயல் அடிச்சி முடிந்தது போல் உள்ளது,இவள் திட்டியதுரித்விக் சார் நிலைமை ரொம்ப பாவம் என்று எண்ணியவளாய் கணினியில் தன் வேலையை தொடர்ந்தாள்....

முகநூலில் இருந்து அவனின் குறுஞ்செய்தி வர....முகம் மலர்ந்தவளாய் தான் செய்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு அவனுக்கு பதில் அனுப்பினாள்...

அவனிடம் பேசுவதில் தான் எத்தனை ஆனந்தம்!!!!

இவை அவன் தன் மாமன் என்பதினால் வரும் ஈர்ப்பா அல்லது பெயரிட முடியாத வேறு ஏதும் உணர்வா என்று மிகவும் குழம்பி இருந்தால் அனு....

அனைத்து எண்ணத்தையும் ஒதுக்கி வைத்தவளாய்....சாதனா பிறந்தநாளைக்கு தான் செய்ய வேண்டிய வேலைகளை தன் கைப்பேசியில் குறித்துக் கொண்டால்...


இன்றும் நான்கு பேர் உயிருடன் விளையாட வேண்டும் என்ற முடிவுடன் சாதனா ஓட்ஷ் இட்லி செய்துக் கொண்டிருந்தால்...

தினமும் புது புது உணவு வகைகளை செய்து அதை வேண்டாம் என்று காலில் விழாத குறையாக கெஞ்சினாலும் அவற்றை வலுகட்டாயமாக மாதவி மற்றும் அனு வாயில் திணிப்பதே ஒரு வழக்கமாக கொண்டிருந்தால் சாதனா....

அந்த சோதனைக்கு பிறகும் இளித்தவாரே பாரட்டிற்காக காத்திருப்பாள்...

இந்த குழந்தைதனமான சாதனாவே கல்லூரியில் ஒரு பொறுப்பான பேராசிரியராக பணியாற்றுகிறாள்

அனு ஒரு ஐடி நிறுவனத்தில் எச்.ஆர் ஆக உள்ளாள்...

இவர்கள் மூவரும் வார நாட்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை ஒன்றாகவே கழிப்பனர்...

இது சிறு வயது முதலே இவர்கள் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கமாகும்...



Intro
 

Author: sizzling_saran
Article Title: நீயே காதல் என்பேன் 1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN