தீண்டல் -1
ஹாய் ஹல்லோ வணக்கம் வந்தனம் ஸ்வாகதம்...நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது மெட்ரோ ரேடியோ 97.9 FM. இப்ப நேரம் சரியா காலையில் ஒன்பது மணி இருபது நிமிடம்...நான் உங்க நீலா... இப்ப நீங்க கேட்கிற ஷோ காஸிப் முனியம்மா.....இஇஇ சும்மா காஸிப் கண்மணிசில்லென்ற கோவைங்கிறது இப்பதாங்க சரியா இருக்கு! வெளியே நல்லா குளு குளுன்னு பெய்ற இந்த மழையில நாம சூடான ஒரு காசிப் ஒன்னு பாக்கலாமா.... அந்த வெள்ளை நிற நடிகைக்கும் மீசை நடிகருக்கும் என்ன??? காதலா!!நீங்க யாருனு யோசிச்சிட்டே இருங்க உங்களுக்காக அடுத்த பாடல் இதோ!!
வானம் மேக மூட்டத்துடன் காண படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இது கால மழை அல்ல காதல் மழை
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை... கண்களை....
இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை...
என்று அந்த காலை வானிலைக்கு ஏற்ப பாடல் அந்த வீட்டையே பரப்பிக்கொண்டிருந்தது. பாவம் ஆனால் அங்கு இருந்தவர்களுக்கோ நிதானமாக அதை ரசிக்க நேரம் காத்திருக்கவில்லை.....
அம்மா! என் டிபன் பாக்ஸ்ஸ்ஸ் என்று அந்த வீட்டின் மூத்த வாரிசு கத்த .... மா! என் ஆரஞ்ச் லிப்ஸ்டிக் பாத்தியா , காணோம் என்று இளைய வாரிசு கேட்க .... மதுரா ரெடி ஆகிட்டியா! லேட் ஆகுதுப்பாரு நான் ரெடி என்று அந்த வீட்டின் தலைவரான இலகுபரன் வினவ அனைவரிடமும் வரேன்! வரேன்! என்று பதிலளித்தார் வீட்டின் தலைவியான மதுரதட்சனி.
கடவுளே! அந்த காலத்துல எல்லாம் எப்படி தான் பத்து பதினைந்துன்னு பெத்து வளத்துனாங்களோ வளர்த்துனாங்களோ ; இந்த இரண்ட வச்சிட்டே என்னால சமாளிக்க முடியல என்று தலையில் அடித்துக்கொண்டார்.
அதற்குள் முத்தவன் அம்மா ! என்று அழைக்க இதோ வந்துட்டேன் டா ....இந்த உன் டிபன் பாக்ஸ், பிடி! என்று கையில் திணித்தார். அதற்குள் இளையவள், மா !!! என சிணுங்க, ஏய் இரு வரேன்.......எரும மாடு இங்க தானே கண்ணுமுன்னாடி இருக்கு உன் லிப்ஸ்டிக்....ஒரு இடத்துல வச்சா தானே ..எங்கயாவது வச்சிரவேண்டியது அப்புறம் என் உயிரை வாங்குறது. ஏய் மதியனத்திற்கு லஞ்ச் பேக் பண்ணட்டுமா என்றார் . இல்ல மா வெளிய போற வேளையிருக்கு , அங்க பாத்துக்கிறேன் என்றுவிட்டாள்.
அதற்குள் இலகுபரன், மதுரா நேரம் ஆகுது பாரு என்றார். அவரிடம் இரண்டு நிமிஷங்க! ஸேரி அட்ஜஸ் பண்ணிட்டு வந்துடுறேன். வெளிய கார்ல வெயிட் பண்ணுங்க என்றார்.அவர் எல்லா வேலையை முடித்து வெளியே வந்து வீட்டை பூட்டும் போது , யாரோ கத்திக்கொணடிருக்கும் சத்தம் வர, யாருடா! என்று திரும்பிப்பார்த்தவர்.......இவர் பெற்ற மகான்கள் இரண்டும் கார்போர்ட்டிக்கோவில் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தனர்.
ஏய்! எதுக்கு இப்படி இரண்டு பேரும் சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க... அம்மா! இங்க பாருமா இவன, மழை எப்படி பெய்து, நான் எப்படி ஸ்கூட்டியில போறது. அதான் டிராப் பண்ணச் சொன்னேன். முடியாது! னு சொல்றான். இங்க பாருங்க நீலா பத்துவாட்டி கால்பண்ணிட்டா! அடுத்து என் ஷோ தான் ...நான் இன்னும் ஸ்கிரிப்ட் கூட ரெடி பண்ணல. போய் தான் பண்ணனும். இவனுக்கு பத்தரைக்கு தான ஆபிஸ் .... லேட் ஆகுதுமா! விட சொல்லுங்க என்று முறையிட்டாள் இளையவள்.
டேய்.....என்று அவர் கூற
அம்மா! அருண் கார் ரீப்பேர். நான் தான் பிக் அப் பண்ணனும் என்றான். ஆமா! அந்த வீணாப் போனவன் தான அப்படியே சாருக்கு ஆபிஸ் அவினாசியில இருக்கு , லட்சுமி மில்ஸ்ல இருந்து காந்திபுரம் வர, என்ன ஒரு இருபது நிமிஷம் ஆகுமா? அவன இப்பவே நடக்க ஸ்டர்ட் செய்ய சொல்லு ஹாப் அன் ஆர் முன்னாடியே இருப்பான் ஆபிஸ்ல என்றாள் சின்னவள்.
சரி சொல்ரல்ல, நீ நட குனியமுத்தூர்ல இருந்து சாய்பாபா காலனிக்கு என்றான். அம்மா! பாருமா இவன என அவள் தரையில் காலை அடித்துக்கொண்டு கூற ,
டேய் ! நவிலா...பிளிஸ்டா எனக்காக அழைச்சிட்டு போடா. மழைனால தானா தென்றல் கேக்குறா. நீ கூட்டிட்டு போ ...அம்மா! உனக்கு நைட் மட்டன் பிரியாணி செய்து வைக்கிறேன் என்று கூற வேண்டாவெறுப்பாய்.. சரி ஏறி தொலை என்றான்.
அதற்குள் இலகுபரன் ஆரன் அடிக்க , சரி பை இரண்டுபேருக்கும் அப்பா கூப்பிடுறார். தென்றல் மறக்காமா கேட்டை பூட்டிக்கொண்டு போங்க என்று அவள் ஓடிவிட்டார்.
அவளைப் பார்த்து இதோ பாரு உனக்காக எல்லாம் இல்ல , அம்மா கடைசியா சொன்ன வார்த்தைக்காக தான் ஏத்துறேன் என் கார்ல என்றவனிடம் அதான்! தெரியுமே நீங்க பிரியாணிக்கு வாக்கப்பட்டவர் என்று அவள் கூற, என்ன??? அது உங்கள் சித்தம் மன்னா என்று காவலன் தலைக்குனிந்து வணக்கம் செலுத்துவது போல கூறிவிட்டு அவன் காரில் ஏறினாள்.
அவங்க மெட்ரோ ரெடியோ ஸ்டேசன் போறத்துக்குள்ள அவங்கள ஒரு குட்டி இன்டிரோ பாத்துரலாம்.
இவர்கள் இருவரும் பெற்று எடுத்த , மழலைச்செல்வங்கள் தான் மேல இருந்த இரண்டு பேரும்.
முத்தவன் நவிலன்இலகுபரன். அட நம்ம ஹூரோங்க! வயது முப்பத்து. படிச்சது பி.இ ஐ.டி இன் அண்ணா யுனிவர்சிட்டி சென்னையில. இப்ப கோவையில இருக்க தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தேவைக்கு அதிகமான சம்பளத்துடன் வேலையில் இருக்கிறான்.
அடுத்து பல வருடம் கழித்து பிறந்தவள் தான் நம்ம வாயாடி , ஹூரோவேட தங்கை தென்றல்....சாரி சாரி ...ஆர். ஜே. தென்றல் இலகுபரன். அப்படி சொன்னா தான் அவளுக்கு பிடிக்கும். வயது 23. படிச்சது அப்பா இருக்க கல்லூரில் விஸ்காம். அப்புறம் அப்படியே முயற்சி பண்ணி தனக்கு பிடிச்ச வேலையான ஆர்.ஜேயிங்க கோவையின் பிரபலமான பன்பலையில் வேலை செய்கிறாள். அவள் வருமானம் முழுவதும் அவளுக்கு மட்டுமே. யாரும் ஒரு பைசா கூட கேட்கமாட்டார்கள். சுருக்கமாக , மேடம் இராஜா வீட்டு கன்னுக்குட்டிங்க!
டெய் உன் நண்பன் கால் பண்றான் டா! யாருடி......அதான் அந்த தடியன் அருண். ஏய்!!!!! லவுட் ஸ்பீக்ர்ல போடு. டிரைவ் பண்றேன்ல என்றான். அவள் ஆன் செய்யவும் , மச்சான்! சொல்லுடா மாப்பிள்ள என்றான். எங்க இருக்க , இங்க உனக்காக நான் குடைப்பிடித்துக்கொண்டு வெயிட்டிங் . கம் சூன் ! மாச்சான் என்றான். டேய் ஒரு ஆப் அன் ஆர் ஆகும், தென்றல அவ ஸ்டேஷன்ல விடனும் என்றான்.
வாட்!!!!!என வாய் பிளந்தவன், ஏன் அந்த வாயாடிக்கு வண்டியில்லையா.... அப்படியே என் பேபி என் குட்டிபாப்பா என்று கொஞ்சுவாள் , டேய் எதுக்குடா அவள எல்லாம் வண்டியில ஏத்துற அன்னைக்கு அவசரம் என்று வண்டிக்கேட்டதுக்கு என்ன பேச்சு பேசுச்சு என்றான் அருண் லவுட் ஸ்பீக்ர்ல இருப்பது தெரியாமல் , பாவம் பயப்புள்ள செத்தான்.
டேய் வீணாய் போனவனே! உன்னையெல்லாம் என் அத்த எந்த நேரத்துல பெத்தாங்களோ.... வந்துட்டான் அப்படியே! அங்கிருந்து அப்படியே கொடைப்பிடிச்சிட்டே நடந்துப்போ , போன மாசம் பிரேக் அப் பண்ணியே தீஷிதாவ நினைச்சிட்டே போய் சேர்ந்துடுவ! இரு உன் பிரேக் அப் லிஸ்ட் எல்லாத்தையும் வீட்ல போட்டு விடுறேன் என்றவளை அய்யோ முதலுக்கு மோசம் வச்சிடுவாளே!!!! சரி சமாளிப்போம் என்று நினைத்தவன் , ஏய் செல்லக்குட்டிமா! என் பூச்சியில்ல ....டேய் அது பூச்சியில்ல புச்சிடா என்றான் நவிலன் இடையில்.... இவன் வேற டேய் மவனே எல்லாம் உன்னால தான், நீ வாடி மவனே உனக்கு இருக்கு என்றவன் மறுபடியும் அவளை சமாளிக்கும் விதம் , தென்னுமா வீட்ல போட்டுவிடாதடி அடுத்த வாரம் இந்த மாமா உனக்கு புது டிரஸ் வாங்கி தரேன் என் செல்லமே என்றான் தலையில் அடித்துக்கொண்டே எல்லாம் என் நேரம்.
ஹா ஹா ஹா அப்படி வாடி வழிக்கு என் அத்தை பெத்த ரத்தினமே. இனி என்னை திட்டுற மாறி நியூஸ் வந்தது நீ செத்த என்றவள் அங்கயே வெயிட் பண்ணு அண்ணன் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துரும் ...பாத்து நில்லு உனக்கு தான் மழை சேராதுல...அப்புறம் அத்தை தான் அதுக்கு அழுகனும்....என்று போனை வைத்தவளின் குரலில் கோபத்தை மீறி அத்தை மகன் மீது அக்கறையிருந்தது...
பள்ளிப்படிப்பு முதல் வேலை செய்யும் இடம் வரை அருணும் நவிலனும் சேர்ந்தே பயணிப்பவர்கள். நவிலனுடைய தந்தை வழி அப்பத்தாவும் , அருணுடைய தாய் வழி அம்மாயியும் உடன் பிறந்தவர்கள். எஸ் இலகுபரனும் அருண் அம்மா காயத்ரியும் பெரியம்மா பையன் சித்தி பொண்ணு. எனவே மிகவும் நெருங்கிய சொந்தம் . நவிலனுக்கு அனைத்துமானவன் அருண்.
அருணுடைய அம்மா காயத்ரி கோயம்புத்தூரில் பிரபலமான கையினகாலஜிஸ்ட்; அப்பா சந்தானம் வெட்னரி டாக்டர். தங்கை அமிர்தாவும் ஆப்வியஸ்லி எம்.பி.பி.எஸ் பைனல் இயர். இவன் அப்பா சாமி எனக்கு இது எல்லாம் செட்டாகாதுங்கயா என்று நவிலனுடன் ஒட்டிக்கொண்டான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹாய் மக்கா முதல் அத்தியாயம் பதிச்சாச்சி....படிச்சிட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க.
நன்றி
சகிமொழி

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலிருக்க கணபதிபாளையம் தான் இலகுபரனுடைய சொந்த ஊர். கோவையில இருக்கிற ஒரு பிரபலமான கலைக்கல்லூரின் சோசியாலஜி டிப்பார்ட்மேன்ட் புரோப்பசர். அத்தனை சொந்தங்களுக்கும் அங்கு இருக்க , வேலை நிமித்தமா கோயம்புத்தூர்ல செட்டில் ஆகிட்டார்.
அடுத்து அவர் வாழ்க்கை துணைவி மதுரதட்சனி . வீட்டின் இதயமே இவர் தான். இவரும் ஒரு பிரபலமான அரசு வங்கியின் மேலாளர்.இவர்கள் இருவரும் பெற்று எடுத்த , மழலைச்செல்வங்கள் தான் மேல இருந்த இரண்டு பேரும்.
முத்தவன் நவிலன்இலகுபரன். அட நம்ம ஹூரோங்க! வயது முப்பத்து. படிச்சது பி.இ ஐ.டி இன் அண்ணா யுனிவர்சிட்டி சென்னையில. இப்ப கோவையில இருக்க தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தேவைக்கு அதிகமான சம்பளத்துடன் வேலையில் இருக்கிறான்.
அடுத்து பல வருடம் கழித்து பிறந்தவள் தான் நம்ம வாயாடி , ஹூரோவேட தங்கை தென்றல்....சாரி சாரி ...ஆர். ஜே. தென்றல் இலகுபரன். அப்படி சொன்னா தான் அவளுக்கு பிடிக்கும். வயது 23. படிச்சது அப்பா இருக்க கல்லூரில் விஸ்காம். அப்புறம் அப்படியே முயற்சி பண்ணி தனக்கு பிடிச்ச வேலையான ஆர்.ஜேயிங்க கோவையின் பிரபலமான பன்பலையில் வேலை செய்கிறாள். அவள் வருமானம் முழுவதும் அவளுக்கு மட்டுமே. யாரும் ஒரு பைசா கூட கேட்கமாட்டார்கள். சுருக்கமாக , மேடம் இராஜா வீட்டு கன்னுக்குட்டிங்க!
டெய் உன் நண்பன் கால் பண்றான் டா! யாருடி......அதான் அந்த தடியன் அருண். ஏய்!!!!! லவுட் ஸ்பீக்ர்ல போடு. டிரைவ் பண்றேன்ல என்றான். அவள் ஆன் செய்யவும் , மச்சான்! சொல்லுடா மாப்பிள்ள என்றான். எங்க இருக்க , இங்க உனக்காக நான் குடைப்பிடித்துக்கொண்டு வெயிட்டிங் . கம் சூன் ! மாச்சான் என்றான். டேய் ஒரு ஆப் அன் ஆர் ஆகும், தென்றல அவ ஸ்டேஷன்ல விடனும் என்றான்.
வாட்!!!!!என வாய் பிளந்தவன், ஏன் அந்த வாயாடிக்கு வண்டியில்லையா.... அப்படியே என் பேபி என் குட்டிபாப்பா என்று கொஞ்சுவாள் , டேய் எதுக்குடா அவள எல்லாம் வண்டியில ஏத்துற அன்னைக்கு அவசரம் என்று வண்டிக்கேட்டதுக்கு என்ன பேச்சு பேசுச்சு என்றான் அருண் லவுட் ஸ்பீக்ர்ல இருப்பது தெரியாமல் , பாவம் பயப்புள்ள செத்தான்.
டேய் வீணாய் போனவனே! உன்னையெல்லாம் என் அத்த எந்த நேரத்துல பெத்தாங்களோ.... வந்துட்டான் அப்படியே! அங்கிருந்து அப்படியே கொடைப்பிடிச்சிட்டே நடந்துப்போ , போன மாசம் பிரேக் அப் பண்ணியே தீஷிதாவ நினைச்சிட்டே போய் சேர்ந்துடுவ! இரு உன் பிரேக் அப் லிஸ்ட் எல்லாத்தையும் வீட்ல போட்டு விடுறேன் என்றவளை அய்யோ முதலுக்கு மோசம் வச்சிடுவாளே!!!! சரி சமாளிப்போம் என்று நினைத்தவன் , ஏய் செல்லக்குட்டிமா! என் பூச்சியில்ல ....டேய் அது பூச்சியில்ல புச்சிடா என்றான் நவிலன் இடையில்.... இவன் வேற டேய் மவனே எல்லாம் உன்னால தான், நீ வாடி மவனே உனக்கு இருக்கு என்றவன் மறுபடியும் அவளை சமாளிக்கும் விதம் , தென்னுமா வீட்ல போட்டுவிடாதடி அடுத்த வாரம் இந்த மாமா உனக்கு புது டிரஸ் வாங்கி தரேன் என் செல்லமே என்றான் தலையில் அடித்துக்கொண்டே எல்லாம் என் நேரம்.
ஹா ஹா ஹா அப்படி வாடி வழிக்கு என் அத்தை பெத்த ரத்தினமே. இனி என்னை திட்டுற மாறி நியூஸ் வந்தது நீ செத்த என்றவள் அங்கயே வெயிட் பண்ணு அண்ணன் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துரும் ...பாத்து நில்லு உனக்கு தான் மழை சேராதுல...அப்புறம் அத்தை தான் அதுக்கு அழுகனும்....என்று போனை வைத்தவளின் குரலில் கோபத்தை மீறி அத்தை மகன் மீது அக்கறையிருந்தது...
பள்ளிப்படிப்பு முதல் வேலை செய்யும் இடம் வரை அருணும் நவிலனும் சேர்ந்தே பயணிப்பவர்கள். நவிலனுடைய தந்தை வழி அப்பத்தாவும் , அருணுடைய தாய் வழி அம்மாயியும் உடன் பிறந்தவர்கள். எஸ் இலகுபரனும் அருண் அம்மா காயத்ரியும் பெரியம்மா பையன் சித்தி பொண்ணு. எனவே மிகவும் நெருங்கிய சொந்தம் . நவிலனுக்கு அனைத்துமானவன் அருண்.
அருணுடைய அம்மா காயத்ரி கோயம்புத்தூரில் பிரபலமான கையினகாலஜிஸ்ட்; அப்பா சந்தானம் வெட்னரி டாக்டர். தங்கை அமிர்தாவும் ஆப்வியஸ்லி எம்.பி.பி.எஸ் பைனல் இயர். இவன் அப்பா சாமி எனக்கு இது எல்லாம் செட்டாகாதுங்கயா என்று நவிலனுடன் ஒட்டிக்கொண்டான்.
அவளை இறக்கிவிட்டவன் , பைடி சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு என்றான். டேய் மறந்துட்டேன் இன்னைக்கு நைட் ஷோ இருக்கு எனக்கு எட்டு மணிக்கு வந்து பிக் அப் பண்ணிக்கோ ......இஇஇஇ என்று ஓடிவிட்டாள். உன்ன!!!! என்று கூறிக்கொண்டே வண்டியை எடுத்தவன் அருணைப் பிக் அப் செய்துக்கொண்டு நேராக நின்ற இடம் அந்த லேடிஸ் ஹாஸ்ட்டல் முன்பு தான்!!!!
பயணிப்போம்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹாய் மக்கா முதல் அத்தியாயம் பதிச்சாச்சி....படிச்சிட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க.
நன்றி
சகிமொழி
Author: sagimoli
Article Title: தீண்டல் - 1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.