சோர்வாய் அவன் அறைக்குள் நுழைந்தாள். எப்பவும் க்ளீன் அண்ட் நீட்டாகத்தான் ருத்ரன் அறை இருக்கும். அவளை போன்றே அவனுக்கும் மியூசிக் மிகவும் பிடித்த ஒன்று.

அருமையான டிஜிட்டல் டெக்னாலஜி பாஸ் சிஸ்டம் அவன் அறையில் வைத்திருந்தான். மயூராவிற்கு அதை கண்டதும் குஷி கிளம்பிவிட்டது. அதை ஆன் செய்து குத்து சாங்சை தெறிக்க விட்டாள்.

ஆல்ரெடி க்ளீன்னா இருக்கற ரூம்தானே.எதுக்கு சுத்தம் செய்ய வேண்டும் என்ற வாக்கில் டப்பாங்குத்து போட்டுக்கொண்டிருந்தாள்.வெகு நேரமாய் மயூரா அரவம் தென்படாத நிலையில், தன் அறையிலிருந்து அதி சத்தமாய் பாட்டு வருவதை உணர்ந்த ருத்ரன் தன் அறைக்கு விரைந்தான். மேல் மாடியில் தான் இவர்கள் மூவரின் அறைகளும் உள்ளது. படியேறுகையில் கையில் துடைப்பத்துடன் மது அறை வாசலை பெருக்கிக் கொண்டு வருவதை கண்டான்.

அவளை கடந்து அவன் அறைக்குள் நுழைந்தால் , மயிலு மன்மதராசா பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தாள். ஒரு கணம் அவள் அங்க அசைவுகளில் அவன் மனம் தடுமாறினாலும், சுதாரித்துவிட்டான். தன்னை மறந்து ஆடுபவளை "அடியேய் கருப்பாயி, உன்னை ரூம் க்ளீன் பண்ண சொன்னா, டான்ஸ் ஆடிட்டு இருக்கியா? உன் பனிஷ்மென்ட்டை பாவம் ஒரு தப்பும் பண்ணாத மது செஞ்சிட்டு இருக்கா. உனக்கு இருக்குடி மவளே'' நச்சுனு ஒரு கொட்டு அவள் தலையில் வைத்தான்.

மயூராவிற்கு தலை கிறுகிறுத்து விட்டது.ஏற்கனவே நல்ல பசி வேற அவளுக்கு. அவன் கொட்டிய வலி வேற அவள் மண்டைகுள் வண்டு குடைய வைத்துவிட்டது.

"டேய் நெட்ட கொக்கே, பார்க்காமல் பேசாத பேசாதனு எத்தனை வாட்டி சொல்றது? யாரு ரூம் எல்லாம் கிளீன் பண்ணா? உன் அருமை மதுவா? எங்க கொஞ்சம் கூப்பிட்டு கேளு பார்க்கலாம்.எதையும் முழுவதும் தெரிஞ்சிக்காம உன் பாட்டுக்கு பேசறதே வேலையா வெச்சிட்டு திரியர '' மயூரா பொரிந்து தள்ளிவிட்டாள்.

"நீயே உன் ரூம் கிளீன் பண்ணிக்கோ'' அவனை முறைத்து விட்டு அவன் அறையை விட்டு அகன்றாள்.

அதற்குள் அங்கு வந்த மது, "என்ன மாமா நீங்கள், எதுவும் தெரியாமல் பேசிடிங்க.அக்காதான் எல்லாம் அறைகளும் கிளீன் பண்ணினா.நான் என் ரூம் வாசலில் பக்கம் இருந்த பூ ஜாடியை தெரியாம இடிச்சு அது ஒடைஞ்சி போய்டுச்சு. அததான் கூட்டி கிளீன் பண்ணிட்டு இருந்தேன். பாவம் அக்கா, எதுவும் சாப்பிட கூட இல்லை. நீங்க வேற ஏசிட்டிங்க. இனி வேதாளம் எப்ப முருங்கை மரத்த விட்டு இறங்கும்னு சொல்லமுடியாது '' மது வருத்தமாய் சொல்லி விட்டு அகன்றாள்.

அவனுக்குதான் ஏதோ போல் ஆயிற்று. எல்லாம் வகையிலும் தெளிவாய் இருப்பவன், மயூரா விஷயத்தில் மட்டும் அவன் இப்படிதான் அன்று முதல் இன்று வரை இருக்கிறான். அவள் கோவம் அவன் அறிந்தது.ரோசக்காரி வேற. அவன் கூட சண்டைனா அவன் சமைச்சது கூட அவள் தொட்டு பார்க்கவே மாட்டாள். இன்னைக்கு வீட்ல என்ன கச்சேரி இருக்கோ தெரியல. ருத்ரா நொந்து கொண்டே சமைக்க சென்றான்.

மதிய உணவாய் அவன் அவளுக்கு பிடித்தவற்றையே சமைத்திருந்தான்.நாட்டுக்கோழி பிரியாணி, தயிர் பச்சடி, முட்டை வறுவல், அது இதுன்னு நிறைய சமைத்து இருந்தான். ஆனால் அவள் அதை தொடவே மாட்டாள் என்பது அவனுக்கு சர்வ நிச்சயம்.

மதியம் வரை மயூரா தன் அறையை விட்டு வரவே இல்லை. உறவினர் திருமணதிற்கு பெரியவர்கள் அனைவரும் சென்று விட்டிருந்ததால், இளையவர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

மதுவுக்கும் நல்ல பசி.அக்காவை சாப்பிட அழைத்தால் வர மாட்டாள். பேசாமல் ருத்ரனுடன் சாப்பிட அமர்ந்தாள். அந்த வேளைதான் நம்ம அந்தரன் வர்மா @ வண்டு முருகன் ஆஜர் ஆனான். அந்தரன் மதுவின் அத்தை மகன் அதாவது தேவ்ராஜின் தங்கை மரகதத்தின் மகன் ஆவான். அவனை கண்டதும் மதுவின் முகம் வெட்க சாயம் பூசிக் கொண்டது. ருத்ரனை போலவே உயரம்.கன்னத்தில் குழி விழும் புன்சிரிப்பு தாங்கிய முகம். கோவங்கள் கண்டறியாத கண்கள்.ருத்ரனின் எதிர்ப்பதம் அந்தரன்.

சிறுவயதிலிருந்து மயூராவின் விளையாட்டுத் தோழன் அந்தரன் தான். ருத்ரா கூட அடிதடினா அவள் தலை சாயும் தோள் அவன் தான்.அவள் குணத்தை நன்கு அறிந்தவன்.பல சமயங்களில் அவளுக்காய் வாதாடி பல தண்டனைகளில் இருந்து அவளை காக்கும் அவளுடைய வக்கீல் வண்டு முருகன்.

ருத்ரனை பார்த்து புன்னகையித்தவன், சாப்பாடு மேஜையில் இருந்த அயிட்டங்களைப் பார்த்து கண்ணை விரித்தான். "வாவ் எல்லாம் மயிலு அயிட்டகளா இருக்கு, எங்க அவள் சாப்பிட வரலியா? கேட்டுக் கொண்டே மயூராவைத் தேடினான்.

அதற்கு மதுதான் "அக்காக்கும் மாமாக்கும் சண்டை அத்தான். அக்கா கோவிச்சிட்டு சாப்பிட வரலை. மேலே மாடில இருக்கா ''.

"ஓ அதான் சங்கதியா? இன்னைக்கு சமையல் ருத்ராவா? அவள் கடுப்பா ஆயிட்டா நீ சமைச்சது சாப்பிட மாட்டாளே, என்ன ருத்ரா நீ, அவள் பசித்தாங்க மாட்டாள்.ஒரு நாள் ஆச்சும் சண்டை போடாம இருக்கிங்களா பாரு. எனக்கு போன் பண்ணி, வீட்டுல என்ன சமைச்சு இருந்தாலும் அள்ளிட்டு வானு சொல்லிட்டா ''

அந்தரன் கையில் இருந்த டிபன் பாக்ஸ்சை காட்டினான். "இன்னைக்கு அங்கேயும் பிரியாணிதான். ரெண்டு பேரும் வெயிட் பண்ணுங்க , நா அவளுக்கு சாப்பிட கொடுத்துட்டு உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன். ''.

கொண்டு வந்த பிரியாணி வகையறாக்களை அழகாய் தட்டில் வைத்து அவள் அறைக்கு கொண்டு சென்றான். அங்கே குப்புற படுத்திருந்த மயூரா அந்தரன் வரும் ஓசைக் கேட்டு எழுந்தாள்.

"என் தேவிக்கு என்ன அவ்வளவு கோவம்? இப்படி சாப்பிடாம உக்காந்து இருக்கீங்க? அதுவும் மணக்க மணக்க உன் மாமன் உனக்காக பிரியாணி பண்ணி வெச்சிருக்கான், நீ அத சாப்பிடாம என்னை சாப்பாடு கொண்டு வர சொல்லற. நல்ல வருவே ராசாத்தி. இந்தா சாப்பிடு '' மயூராவிடம் உணவு தட்டை நீட்டினான்.

"தேங்க்ஸ் வண்டுமுருகா. எம்புட்டு பசி தெரியுமா? Aik பிரியாணி.. அத்தை செஞ்சாங்களா? கொண்டா கொண்டா'' ஆவலாய் அவன் கையில் இருந்த தட்டை பறித்து உண்ணத் துவங்கினாள்.

"இரு இரு மெதுவா சாப்பிடு '' தட்டை அவளிடம் கொடுத்தான் .

மயூரா சாப்பிட்டவாறே, "நீ போய் அவங்க கூட சாப்பிடு. அந்த நெட்டக் கொக்கு பிரியாணி நல்லா செய்வான். அப்டியே உனக்கு மதுவை சைட் அடிக்க சான்ஸ் கிடைக்கும். ஓடு ஓடு. பட் பார்த்துக்கோ, அந்த எம்டன் அங்க தான் இருப்பான் '' மயூரா அவனை சாப்பிட அனுப்பினாள்.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.