முதல் அத்தியாயம் படித்தமைக்கு நன்றி.
அத்தியாயம் -2
அன்று புயல் எச்சரிக்கை கேள்விபட்ட ரோஜா ட்யூஷன் எடுக்க செல்லவில்லை. வீட்டிலேயே இருந்துவிட தன் தம்பி ரவியுக்கும் ராதாவிற்கும் உணவு பரிமாறிவிட்டு தானும் சாப்பிட்டு ஓய்வு எடுக்க கண் அயர்ந்தாள்.
ரவியோ நியூஸ் சேனலை பார்த்தபடி அமர்ந்திருக்க..
"ஏய் ராதா இங்கே பாருடி நாளைக்கு நமக்கெல்லாம் ஸ்கூல் லீவுனு சொல்லிட்டாங்க" என்று கத்த..அந்த சத்தத்தில் எழுந்தவள்.
"ஏண்டா ரவி இப்படியா கத்துவ நல்ல தூக்கத்தை இப்படி கெடுத்துட்டியே" என்று அதட்டினாள் ரோஜா. ரோஜாவின் அன்புக்கும் அதிகாரத்திற்கும் கட்டுபட்டவர்கள் ரவியும் ராதாவும். ஆம் பெற்றோர் இறந்து மூன்று வருடங்கள் ஆயிற்று. எனினும் யாரிடமும் கை ஏந்தாமல் தன் தம்பி தங்கையை படிக்க வைத்து ,வீட்டு செலவுகளையும் கவனித்து தாயுக்கு தாயாக தந்தைக்கு தந்தையாக இருப்பவள் ரோஜா.
"அக்கா சாரி " என்றான் ரவி முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு. அதை கண்ட ராதா அவன் தலையை வருடி "விடு டா ரவி இதுக்கு எதுக்கு முகத்தை வாட்டமா வச்சிக்கிற என்றாள். சரி எழுந்தாச்சு எதாவது விளையாடலாம் என்றழைத்தாள் ரோஜா.
மூவரும் என்ன விளையாடலாம் என்று யோசித்தபடி அமர்ந்திருக்க,அங்கு தூசி படிந்தபடி பக்கவாட்டில் சாய்ந்து கொண்டிருந்த கேரம்போர்ட் எடுத்து நடுவே வைக்க, ஒரு ஆள் குறையுதே என்று யோசித்து கொண்டிருக்க எதர்ச்சையாக பக்கத்து வீட்டு கலையரசி வந்தாள்.
"என்னடி ரோஜா கேரமா இதோ நானும் ஒரு ஆட்டம் ஆடுறேன்" என்று புன்னகையித்தபடி அமர்ந்தாள். ரோஜாவும் கலையும் நெருங்கிய தோழிகள். கலையின் தந்தை தாய் தான் நம் ரோஜா மற்றும் தம்பி தங்கைக்கு பாதுகாப்பு. ரோஜாவின் பெற்றோர் இருந்த காலத்திலிருந்து நல்ல பழக்கம்...
கலையின் அண்ணணோ எம்.பி.ஏ படிக்க லண்டன் சென்றுள்ளான். ஆம் லண்டன் யுனிவர்சிட்டியில் படிக்க அவன் முன்பு படித்த கல்லூரியே ஸ்பான்ஸர் செய்தது. அதனால் தான் இந்த வாய்ப்பு.. கல்லூரியில் நன்கு படிக்கும் மாணவர்களில் அவனும் ஒருவன். பெயர் கதிர்.
கதிர் லண்டன் சென்ற பிறகு கலையரசியிற்கு உடன்பிறப்பு இல்லாத கவலையில் சிறிது கவலையுடன் இருக்க ரவியும் ராதாவும் இவளுடன் சகோதத்துவ அன்போடு பழகவே இவர்களை சுற்றி சுற்றி வருவாள் கலை.
"ரோஜா நம்ப வொயிட் காயின்" என்று முடிவெடுத்து ஆடத்துவங்க ...ஆட்டம் சுவாரஸ்யமான நிலையில் போய்க்கொண்டு இருந்தது. இடையே பேச்சுக்களும் சுவாரஸ்யத்தின் உட்சகட்டத்தில் சென்று கொண்டிருந்த நிலையில்..
"ரோஜா உனக்கு ஒன்று தெரியுமா டி"
"என்ன" என்பது போல் உயர்த்தினாள் தன் திருத்திய புருவத்தை.
"அதான் டி அந்த ஆர்யா இருக்கானே"
"ஆர்யாவா"? என்றாள் கேள்வி எழுப்பியபடி.
"ம்ம்ம்.. அதான் டி அந்த மீன் கடை பரிமளம் ஆண்டி பையன் டி"..
"ஆமாம்" அதற்கென்ன..?
"அவன் என் காலேஜ்ல தான் படிக்கிறான். என்கிட்ட பேச முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கான் ஆனால் நான் தான் பேசுறது இல்லை"..
"ஏன்...உனக்கு அவனை பிடிக்கலையோ"என்றாள் ரோஜா.
"பிடிக்காம ஒன்னுமில்லை ஆனால் என் மனசுல தேவை இல்லாத ஆசை வளர்த்துக்க வேண்டாமேனு தோன்றுது" என்றாள் கலை.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் தான் கலையின் அம்மா தட்டு நிறைய முறுக்குடன் வந்தார்.
"இந்தாங்க பசங்களா சாப்பிட்டே விளையாடுங்க" என்று நீட்ட முறுக்கு பார்த்த ஆவலில் அந்த பேச்சு அப்படியே நின்று போனது. மழைக்கதுக்கும் இப்படி சூடா எதாவது சாப்பிட்டா நல்லா இருக்குல என்று தோழிகள் இருவரும் கொரித்துக்கொண்டே விளையாட்டில் ஆர்வம் காட்ட அன்றைய பொழுது அப்படியே போனது...
மணி...6.50 மாலை,அங்கு ஆராதனா பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியின் ப்ளவுஸ் க்கு ஊக்கு தைத்து கொண்டிருக்க அன்று இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்த நிலையில் பங்கஜம் மாமி சுட சுட பொங்கலும் புலியோதரையும் எடுத்து வந்து தர...
"என்ன மாமி இன்னைக்கு இரண்டு பண்ணிருக்கிங்க என்று கேட்க"..
"இல்லைடி மா பொங்கல் உங்கள் வீட்டு ராஜேஷுக்கு பிடிக்கும், இதோ புலியோதரை நம்ப ஆர்யாவுக்கு பிடிக்கும் னு எடுத்து வந்தேன்" என்று இன்முகத்துடன் தர...
"எப்படியோ இன்னைக்கு டின்னர் ரெடி" என்றபடி பரிமளமும்,பார்வதியும் நினைத்துக்கொள்ள அன்று இரவு உணவு அந்த பொங்கலுடனும் புலியோதரையுடனும் இனிதே நிறைவேறியது.
....
பங்கஜம் மாமியிற்கு திருமணம் ஆகி பத்து வருஷம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை... எனவே பரிமளத்தின் பிள்ளைகள் மீது அளவுக்கடந்த பாசம். எந்நேரமும் இவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து எடுத்து வந்து பரிமாறுவதில் அலாதியான பிரியம். பிரியம் மட்டுமல்ல மனநிறைவும் கூட. திருமணம் ஆனதே 30 வயதில் பத்து வருஷம் கடந்த நிலையில் 40 வயது ஆகவே சிகிச்சையும் பயனளிக்காமல் போனது. பங்கஜத்திற்கு இவர்கள் குடும்பம் ஒரு பெரிய ஆறுதல். அந்த ஆறுதலை அனுபவிக்க பழகியதால் வீட்டை கூட காலி செய்ய மனமில்லாமல் இங்கேயே வாடகை தந்து கொண்டு தங்கிவிட்டார் தன் கணவனுடன்.
இரண்டு நாட்கள் கழிந்தன...
ஆராதனா ப்ளவுஸ் வேலையை முடித்துவிட்டு பங்கஜத்திற்கு எடுத்து போய் தந்துவிட்டு வரலாம் என்று உள்ளே நுழைய அங்கு டிப்டாப் ஆசாமி அமர்ந்திருக்க ....
சித்தி உங்களை யாரோ பார்க்க வந்திருக்காங்க என்று குரல் தரவே சமையல்கட்டுல இருந்து விரைந்து வந்த பங்கஜம்.
"ஆராதனா வா வா..என்ன அப்படியே நின்னுட்ட வந்து உக்காரு" என்று கூற தலையசைத்தபடி அமர்ந்தாள். அவளுக்கு எதிரே அந்த டிப்டாப் ஆசாமி இருக்க அவளுடைய பார்வை அவனை எதிர்நோக்கியபடி இருந்தது.
"என்னடிமா இது யாருன்னு தெரியலையோ...என் அக்கா மகன் பெயர் ஆகாஷ். பெங்களூர்ல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பாக்குறான்." என்று சொல்லி முடிப்பதற்குள் அவனது வயதை மனதில் கணக்கு போட்டாள் ஆராதனா எப்படியோ ஒரு 35 வயசு இருக்கும் என்று நினைத்தவள்...
"ஓ...சரி சரி உங்கள் மனைவி கூட்டிக்கொண்டு வரலையா" என்று தற்செயலாக கேட்க..
"இல்லை... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை" என்று அவனது கம்பீரம் கொண்ட குரலில் உரைக்க அவளோ சற்று நிமிர்ந்து பார்த்து "சாரிங்க.. நான் கல்யாணம் ஆகிடுச்சு என்று நினைத்து கேட்டேன்" என்று சொல்லி விட்டு ப்ளவுஸ் தைத்த கூலியை பெற்றவள்
"ஓகே மாமி நான் அப்றம் வரேன் பை" என்றபடி ஓட்டம் பிடித்தாள் தன் வீட்டிற்கு. வீட்டிற்கு சென்றபின் தன் அறைக்குள் புகுந்தவள் தன் ஜடை பின்னலை வருடியபடி ஆகாஷ் பற்றிய சிந்தனைக்குள் மூழ்கினாள்,அவளறியாமல் சிரிப்பு வந்தது .
இதுவரை அவள் கண்டிராத ஓர் உணர்வு இன்று வந்தது ஏனோ,புரியவில்லை. ஆனால் மறுபடியும் அவனை பார்க்க துடித்தது அவளது மனம். இதுவரை காதல் வாசமே இல்லாமல் இருந்தவளுக்கு இந்த மாற்றம் பெரியது தான். ஆனால் அவன் மனம் பற்றி என்ன தெரியும். அதற்கு நாம் காத்திருக்க வேண்டும்.
தொடரும்.
மாற்றம் ஒன்றே மாறாதது . அத்தியாயம் -1
மாற்றம் ஒன்றே மாறாதது -3

Author: Bhagya sivakumar
Article Title: மாற்றம் ஒன்றே மாறாதது அத்தியாயம் -2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.