நீயே என் இதய தேவதை 3

Bharathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலையில் அலுவலகம் வந்தபின் கணினியில் சிறிது உலாவிவிட்டு கையில் ஒரு பிரிண்ட் செய்யப்பட்ட காகிதத்தை எடுத்துச் சென்றான். பல தரப்பட்ட பொருட்களின் உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலை அது. எப்போதும் ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருக்கும். அங்கு வேலை செய்யும் அநேகம் பேர் மற்ற மாவட்டங்களிலிருந்து வேலைக்காக சென்னை வந்த தொழிலாளர்கள் (contract employees) . படித்தவர்களும் இதில் அடக்கம். நிறைய பேர் 20 லிருந்து 30 வயது வரை இருக்கும் இளைஞர்கள்.

அன்பரசன் அவன் பொறுப்பிலிருந்த பிரிவிற்கு அன்றைய வேலைகளை சொல்லிவிட்டு நேற்று தயாரிக்கப்பட்ட பொருட்களின் தரம் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்தான்.

காலை உணவு இடைவேளையில் நேற்று திட்டிய பையனிடம் மன்னிப்பு கேட்டும் இருந்தான். அவன் பெயர் பிரபு. திருச்சியிலிருந்து வேலைக்காக சென்னை வந்த பையன்.

பிரபுவிற்கு தனது பிரிய அன்பண்ணன் திட்டியதெல்லாம் பெரிதாக தோன்றவில்லை. என்னண்ணா என்கிட்ட போய் சாரியெல்லாம் கேட்குற என்றபடி அருகில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
மேனேஜர் இன்ஜினியர் தொழிலாளர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது அங்கே. எல்லாருக்கும் அதே உணவுதான்.

திரும்பவும் என்ன அதே வேலை இயந்திரங்களோடு இயந்திரமாக அதை செய்யும் மனிதர்கள் என பொழுதை கடத்திவிட்டு மாலை 5. 30 மணிக்கு மேல் வெளிவந்தவன் மொபைல் போனை எடுத்து நண்பனை அழைத்து வீட்டுக்கு வந்து பேசுடா எதிர்முனையில் என்ன பதிலோ... ம்ம்ம்.. வாங்கிட்டு வா காசு நான் தரேன் என்றபடி போனை அணைத்தான்.

இரவு 7. 30 மணிக்கு தன் வீட்டில் உறவுக்கார நண்பனுடன் உளறலாக பேசிக் கொண்டிருந்தான்.

@@@@@@@@@@@@

சுகி சித்தி காலிங் என்று ஒளிர்ந்த மொபைலை ஆன் செய்து காதுக்கு கொடுத்தாள்.

ஹலோ.. சொல்லுங்க சித்தி

ஹலோ கவி ... நீ பாப்பாவ கூட்டிட்டு நாளைக்கே நம்ம ஊருக்கு கெளம்பி வா

என்னாச்சு சித்தி

நீ வேலை கேட்டிருந்தல்ல. இங்க பக்கத்தில இருக்க கம்பெனில லேபர்க்கு ஆள் எடுக்கறாங்க. 8, 000 சம்பளம்.

நல்ல செய்தி தான் ஆனா நான் சித்தி வீட்ல தங்க அவங்க வீட்டாளுங்க ஒத்துக்க மாட்டாங்களே என யோசித்தாள்.

ஹலோ ஹலோ என்னடி பதிலே காணோம்.

அது வந்து சித்தி

நீ என்ன யோசிக்கிறனு எனக்கு புரியுது. அந்த கம்பெனில வேலை செய்ய வேற ஊர்லருந்து வர பொண்ணுங்களாம் எங்க மேன்சன்ல தான் வாடகைக்கு இருங்காங்க. உனக்கும் ஒரு ரூம் கேட்டு வச்சிருக்கேன். நீ அங்க தங்கிக்கோ.வாடகைலாம் வேணாம். உனக்கு பாதுகாப்பான இடம்தான். நான் பக்கத்துல தான இருக்கேன்.

வேலைக்கு எடுக்கமாட்டேன் சொல்லிட்டா என்ன பண்றது சித்தி.

இல்லடி அந்த கம்பெனி ஒரு கான்டரக்ட் சூப்வரைசர்னு ஒரு பையன்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். கணடிப்பா வேலை கிடைச்சிடும். நாளைக்கு ஞாயித்துக்கிழமை கெளம்பி வா. திங்கள் கெழம போய் வேலைக்கு கேப்போம்.

பின்னர் குழந்தை நலம் பற்றி கேட்டு இயல்பான உரையாடலுக்கு பிறகு போனை வைத்திருந்தாள் சுகுணா சித்தி.

சுகுணா பணக்கார குடும்பத்தில் வாக்கப்பட்டவள்.புகுந்த வீட்டில் கொஞ்சம் அடிமை போல் நடத்தப்படுபவள். சந்திர சேகரின் அம்மா வரதட்சணை மோகம் பிடித்து திருமண வயதில் அவர்க்கு பார்த்த எல்லா பெண்களையும் நிராகரிக்க ஒரு கட்டத்தில் வயதானவர் என்று பெண் வீட்டினர் அவரை நிராகரித்தனர். வேறு வழியின்றி ஒரு ஏழைப் பெண்ணான சுகுணாவைப் பார்த்து திருமண செலவுகள் எல்லாவற்றையும் ஏற்று தன் மகனுக்கு மணம் முடித்தாள்.அதை குத்தி காண்பிக்கவும் ஒரு நாள் கூட தவறியதில்லை அவர்.ஆரம்பத்தில் அழுது கரைந்து கொண்டிருந்தவளுக்கு பின்னர் அதுவே பழகிப் போனது.அவளின் அமைதியான குணம் எதிர்த்து வாதம் செய்ய விரும்பியதில்லை.

சுகுணாவிற்கு கவிதாவின் மேல் சற்று ஒட்டுதல் அதிகம் தான். கவிதாவும் அவள் தங்கை சத்யாவும் தன்னைப் போன்று பெற்றவர்கள் கடமை முடியவென்று மட்டும் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள். சத்யாவிற்கும் புகுந்த வீட்டில் சிறு சிறு சண்டை சச்சரவு இருந்தாலும் கவிதா அளவிற்கு மோசமில்லை அவள் வாழ்வு. அத்துடன் அவளும் புகுந்த வீட்டுடன் பொருந்தி விட்டாள்.

இப்போது கவிதாவிற்காக மட்டும் கணவனிடம் கெஞ்சி கேட்டு இந்த உதவியை வாங்கியிருந்தாள். அவளால் முடிந்தது இது மட்டுமே.


காத்திருந்து பார்ப்போம் கவிதாவுக்கு காலம் என்ன செய்ய காத்திருக்கிறது என அறிய

-தொடரும்
 
Last edited by a moderator:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN