முன் ஜென்ம காதல் நீ - 3

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
kl.JPG


சிறையில் என் உயிர்

மறுநாள் போட்டி நடக்க இருந்த இடத்திற்கு தன் குதிரையில் விரைந்தான் அருள் வர்மன். அவன் குதிரையை விட வேகமாக அவன் மனது அங்கே சென்றது எப்படியாவது அந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. முத்தூர் முத்துகளின் சிறப்புக்காகவே புகழ்பெற்ற நாடு கடற்கரையும் அதனை ஒட்டி நடைபெறும் முத்து வணிகமும் உலக பிரபலம். குமரிக் கண்டத்தின் செல்வம் மிக்க நாடுகளில் அதுவும் ஒன்றாகும். அதனை நீதி நெறி தவறாமல் ஆண்டு வந்தவன் அரசன் இந்திரவர்மன். மக்களின் வசதிக்கேற்ப வரிகள் விதித்து மக்களை செழிப்பாக வாழ வைத்தவன். அந்த நாட்டில் செல்வத்திற்கு குறை ஒன்றும் இல்லை. இந்திரவர்மனுக்கு ஆண் வாரிசு இல்லை. மகள் இந்திர ராணி மட்டுமே. அவளுக்கு வரபோகும் கணவன் அவளுக்கு மட்டும் அல்ல நாட்டிற்கே பொருத்தமான அரசனாக இருக்க வேண்டும் அல்லவா. அதற்காக தான் இந்த போட்டியே இதில் யார் வேண்டும் ஆனாலும் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர் அரசனும் ஆகலாம். இதில் ஒரு மனிதனின் வீரம் மட்டும் அல்ல அவனது புத்தி கூர்மை மற்றும் குணம் என அனைத்தும் சோதித்து அறியப்படும். இதில் வெல்வதற்கு மனோபலமும் மிகவும் அவசியம்.அதற்கு ஏற்றார் போல இந்த போட்டின் ஒவ்வொரு சுற்றுகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதில் முதல் சுற்றினை கடந்தவர்களே வெகு சிலரே. முக்கியமான கட்டளை தோற்பவர்கள் காலம் முழுவதும் முத்தூர் நாட்டின் சிறையில் இருக்க வேண்டும். ஆகவே போட்டிக்கு வந்து பங்கேற்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இறுதியில் இல்லாமல் போனது. இப்பொழுது கபாடபுரத்தில் இருந்து அருள்வர்மன் வந்துள்ளான்.

மறுநாள் காலை சூரியன் தோன்றி சில நாழிகைகள் கடந்து இருந்து. சூரிய ஒளி நிறைந்து இருக்க ஊர் முழுவதும் புத்துணர்ச்சி பெற்றிருந்தது. ஊரின் நடுவே அரண்மனைக்கு அருகே ஒரு மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. அதனை சுற்றி அங்கே நடைபெறும் வீர விளையாட்டை காண்பதற்காக மக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் ஒரு ஓரத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதிலே அரச குடும்பத்தினரும் பெரும் குடி மக்களும் அமர்ந்திருந்தனர். அனைத்திற்கும் நடுவே திரைச்சீலை பின்னே அமர்ந்திருந்தாள் இந்திர ராணி. அவளுக்காக நடைபெறும் போட்டி தானே இது அவள் இல்லாமல் எப்படி?. முதல் போட்டி அரசருக்கு வாள் வித்தை மிக அவசியம். ஆகவே போட்டிக்கு வருபவர் முத்தூரின் மிகப் பெரிய வாள் வீரன் மருதனை வெல்ல வேண்டும். அவன் பார்ப்பதற்கு முரட்டு ஆளாக இருப்பான். பெரிய மீசையும் அகன்ற மார்பும் கொண்டு இருப்பான். வாளின் முனையில் பெரும் ஜாலங்களை நிகழ்த்துவான்.அவன் மைதானத்தின் நடுவே வந்ததும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. அவனை எதிர்க்க தன் சிங்கத்தின் தலை கைபிடியாக கொண்ட வாளுடன் தன் வெள்ளை குதிரையில் வந்தான் அருள்வர்மன். அவனை கண்டு சபை பரிதாபம் கொண்டது அவன் ஆகிருதியையும் மருதனின் ஆகிருதியையும் ஒப்பிட்டு பார்த்து சண்டை தொடங்கிய சில நிமிடங்களில் அவன் தோற்றுவிடுவான் என எண்ணினார்கள். ஆனால் அருள்வர்மன் எதனை கண்டும் கலங்கவில்லை. தன் மேலங்கியை கழட்டி தன் புரவியின் மேல் வைத்து விட்டு சண்டை நடக்கும் இடத்திற்குள் நுழைந்தான். அவன் வாளிப்பான உடலையும் அதில் காணப்பட்ட சில வாள் தழும்புகளையும் கண்டு மக்களின் சிலர் ஆச்சரியப்பட்டனர். சிலர் அவன் மேல் நம்பிக்கையும் கொண்டனர். மருதன் அந்த வாலிபனைக் கண்டு இகழ்ச்சி நகை புரிந்தான். அவனின் மெல்லிய கரங்களையும் வாளிப்பான உடல் வாகையும் கண்டு அவன் ஏளனம் கொண்டான். மருதன் வாளுடன் அவன் மேல் பாய்ந்தான். அதிலிருந்து தப்பிக்க அந்த வாலிபன் விரைவாக ஒரு பக்கம் ஒதுங்க மருதன் தரையில் பல அடி தூரம் ஓட வேண்டியதாகி விட்டது. பின் அருள்வர்மன் " நிதானமாக வா ஒன்றும் அவசரமில்லை " என்றான். அவன் சொற்களை கேட்டு கோபம் கொண்டவன் பெரு வேகத்துடன் அவனை தாக்கினான். இம்முறை அவன் விலகவில்லை மிக லாவகமாக அவன் வாளை தடுத்தான். அவர்கள் வாள் சண்டை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மருதன் பாய்ந்து பாய்ந்து தாங்கினான். ஒவ்வொரு கோணத்திலும் சுற்றி சுற்றி வந்து தாக்கினான். ஆனால் அருள்வர்மன் இருந்த இடத்தை விட்டு அதிகம் நகரவில்லை இரண்டடிகள் மட்டுமே நகர்ந்து அவனை தடுத்தான். நாழிகைகள் ஒன்று ஓடியும் யுத்தத்தின் முடிவு தெரியவில்லை. மக்கள் கூட்டம் அதிசயமாக யுத்தத்தை வேடிக்கை பார்த்தது. ஒரு நாழிகை கடந்தும் ஒருவர் கூட சளைக்காததை கண்டு யுத்தம் முடியுமா இல்லையா என்ற சந்தேகமும் உண்டானது. நேரம் செல்ல செல்ல மருதனுக்கு ஒரு உண்மை புரிந்தது. தன் வாள் செல்லும் இடங்களில் எல்லாம் எதிரியின் வாள் முன்னமே இருந்ததை உணர்ந்தான். அவன் தன்னுடன் உண்மையிலே போர் புரியவில்லை மாறாக விளையாடுகிறான் என புரிந்தது. தன் வாழ் நாளிள் சந்திக்காத மாபெரும் வீரனை சந்தித்ததை அவன் உணர்ந்தான். ஆகவே எச்சரிக்கையுடன் போரினை தொடர்ந்தான். தான் மட்டும் வெல்லவில்லை எனில் தற்காப்பு போரிலே எதிரி தன்னை சளைக்க செய்து விடுவான் என உணர்ந்தான். " போரினை முடித்துவிடலாமா? " என புன்னகையுடனே கேட்டான் அருள்வர்மன். உடனே மருதனின் வாள் விண்ணில் பறந்தது. அவனது முழங்கையில் இருந்து குருதி மெதுவாக வெளிப்பட்டது. அதனை கண்டு சபை ஆச்சரியத்தில் முழ்கியது. தங்கள் நாட்டின் தலைசிறந்த வாள் வீரனை இத்துணை அலட்சியமாக இவனால் எப்படி வெல்ல முடிந்தது. அருள்வர்மன் வெற்றி பெற்தாக அறிவிக்கப்பட்டது. மருதனை கொல்லாமல் விட்டது அவனது குணத்தினை காட்டியது. அதனை கண்டு அரசனும் அசந்து போனான் அந்த வீரனின் திறமையை கண்டு.அடுத்த போட்டிக்கு அவன் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அருள்வர்மனின் முகத்தில் புன்னகை மாறவில்லை. சிரித்துக் கொண்டே மைதானத்தை விட்டு விலகினான். தன் புரவி வீரனின் கழுத்தில் கையை போட்டுக்கொண்டு. அந்த கடற்கரை சந்தையை நோக்கி, அவனது வீரம் அவனை பிரபலமாக்கியது. பல இளைஞர்கள் அவனை தொடர்ந்தனர். ஆனால் அவன் தனிமையை நோக்கி சென்றான்.

மாலை மங்கும் வேளை கதிரவன் தன் கதிர்களை கடல் நீரில் பரப்பி கடல்நீரை பொன்னாக மாற்றிக் கொண்டிருந்தான். அதன் அருகே கடல் மண்ணும் பொன்னாக மாறியது போல் பிரமையை அளித்துக் கொண்டிருந்தான். அதில் கடல் அலைகளால் எழுப்பப்பட்டிருந்த தற்காலிக குளங்கள் சிலவை அங்கே காணப்பட்டிருந்தது. அதில் ஒரு குளத்தில் உருண்டு குளித்துக் கொண்டிருந்தது ஒரு வெள்ளை புரவி. அதன் அருகே மூன்று கற்களை கொண்டு அடுப்பு உருவாக்கி அதில் கொள்ளை வேக வைத்துக் கொண்டிருந்தான். " வீரா குளிச்சது போதும் வா வெளியே " என்று அதட்ட அந்த புரவி கனைத்தது. இவன் எழுந்து சென்று குதிரையை சொரிந்து குளிப்பாட்ட தொடங்கினான். பின்னால் இருந்து சிரிப்பு சத்தம் கேட்க திரும்பினான் " வீரரே என்ன செய்கிறீர்கள் " என்றாள். " வாருங்கள் மதியழகி" என வரவேற்றான். மேலும் " என் குதிரையை குளிப்பாட்டுகிறேன் " என்றான். " ஏன் இதனை பிற வீரர்கள் செய்ய மாட்டார்களா " என்றாள். " இப்பொழுது வீரர்கள் இல்லை இருந்தாலும் பயன் இல்லை " என்றான் இவள் ஆச்சரியத்துடன் " ஏன் சொல்கிறீர்கள் " என்றாள். " தேவி வீரன் என்பவன் தன் குதிரை, வாள், மற்றும் மனைவியை தானே தான் பராமரிக்க வேண்டும்" என்றான். " சரி தான் வீரரே ஆமாம் என்னை ஏன் தேவி என்று அழைக்கிறீர்கள் "என்றாள். " தங்களுடன் பழகும் பெண்களிடம் ஆண்கள் பார்வையிலும் சொற்களிலும் கண்ணியம் காக்க வேண்டும் தேவி " என்றான். " நிச்சயமாக வீரரே " என அவள் கூற " நீங்கள் ஏன் என்னை வீரரே என அழைகிறீர்கள் தேவி " என அவன் கேட்க அவள் " உங்கள் வீரத்ததை தான் இந்த நாடே இன்று பார்த்ததே வீரரே " என்றாள். அவன் முகக்த்தை சுருக்கி கொண்டு புரவியை குளிப்பாட்டி விட்டு உணவினை படைத்தான். அதனை கொஞ்சி கொண்டே. அவளும் உடனிருந்தாள் குதிரையை தடவ அருகே வந்தாள் அவனோ தடுத்தான். அவன் சொன்னான் " தேவி சற்று தள்ளி நில்லுங்கள் இவன் பொல்லாதவன் அந்நியரை நெருங்க விடமாட்டான் " என்றான். " என்ன " என அவள் கேட்க " இவன் இருவரை மட்டுமே சுமப்பான் அந்த இருவருக்கு மட்டுமே அடங்குவான் வேறு யார் வந்தாலும் ஆபத்து தான் " என கூற " குதிரைக்கு இவ்வளவு அறிவா? " என ஆச்சரியத்துடன் கேட்டாள். " ஆமாம் தேவி இவன் உயர்ரக புரவி எல்லாரையும் நெருங்க விட மாட்டான் தனக்கு உடையவர்கள் என இவனுக்கு புரிந்தால் மட்டுமே இவனை அடக்குவது சாத்தியம் " என்றான். அவளும் தள்ளி நின்றாள் அவள். மேலும் " இந்த குதிரையை அடக்கும் இருவரில் ஒருவர் தாங்கள் மற்றவர் " என அவள் கேட்க. அவன் " நான் இந்த போட்டியில் பங்கேற்கும் காரணம் கேட்டிர் அல்லவா? சற்று பொறுங்கள் " என கூறி குதிரையை தயார் செய்து விட்டு அவள் அருகே வந்தான். தன் கதையை கூற தொடங்கினான் அதற்கு பூர்வீகமாக " சிறையில் என் உயிர் " என கூறினான்.



அசம்பவம்

மதியழகியிடம் தன் கதையை சொல்ல தொடங்கினான் அருள் வர்மன். " தேவி எனது சொந்த நாடு கபாடபுரம் ஆகும் " என ஆரம்பித்த அவனை இடைமறித்த அவள் " அந்த நாடு எங்களுக்கு எதிரி நாடாயிற்றே " என்றாள். ஆனால் அவன் " ஆம் தேவி குமரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமிக்க நாடு ஆகும். ஏறத்தாழ இருபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதனை ஆண்ட அரசனுக்கும் அரண்மனை மருத்துவரின் மகனுக்கும் ஒரே நாளில் சில நிமிட இடைவெளியில் ஆண் குழந்தைகள் பிறந்தன. அவற்றின் ஜாதகத்தை கணித்த அறிஞர்கள் இரண்டு ஜாதகமும் எதிரெதிர் திசைகளை கொண்டவை இரண்டும் ஒரு காலத்தில் அழியும் இல்லையெனில் ஒன்றை அழித்துக் கொண்டு மற்றொன்று தங்கும் என கூறினர் அதனை கேட்டு அனைவரும் கலங்கினர் ஏனென்றால் அரசனும் மருத்துவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார் தங்கள் வாரிசுகள் நண்பர்களாக இருப்பர் என விரும்பிய இருவரும் திகைத்தனர் அதிர்ச்சியடைந்தனர் இருவரும் ஆலோசித்து இறுதியில் ஒரு முடிவு எடுத்தனர் இருவரையும் ஒன்றாகவே வளர்க்க முடிவு செய்தனர் அளிக்கும் உணவு கற்றுக் கொடுக்கும் கலைகள் உடுத்தும் உடைகள் என அனைத்தையும் இருவருக்கும் ஒன்றாக அளித்து வந்தனர் இருவரும் உயிர் தோழர்களாகவே வளர்ந்தனர் கல்வி கூடம் முதல் போர்க்களம் வரை இருவரும் ஒன்றாகவே பயணித்தனர் அவர்களில் ஒருவர் பெயர் அருள்வர்மன் மற்றவர் பெயர்" என தொடங்கிய அவனை இடைமறித்த அவள் " கஜவர்மன் தானே " என்றாள். " ஆம் தேவி " என்றான் அவன். " உங்கள் இருவர் நட்பும் வீரமும் நாடு முழுவதும் பிரசித்தி உங்களை இரட்டையர் என்று கூட கூறுவார்கள் நீங்கள் பங்கேற்ற போர்களை பற்றி கதைகளாக பேசுவர் " என்றாள். " ஆம் தேவி அந்த பெருமை எனக்கு உண்டு உங்கள் இளவரசியை பற்றி கேள்வி பட்டு அவளை மணக்க இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பினான் நான் தடுத்தேன் நான் மற்றொரு போரில் இருந்த போது அவன் வந்து இந்த போட்டியில் கலந்து தோற்று விட்டான் இது தெரிந்த எங்கள் நாடு உங்கள் நாட்டின் மேல் படை எடுக்க முடிவு செய்தனர் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க நான் வந்துள்ளேன் " என கூறிய அவனை " போர் என்றால் பயமா " என அவள் கேட்க அவன் " நான் போரை விட விரும்புவது வேறு ஏதும் இல்லை ஆனால் வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் போர் தொடுக்க வேண்டும் இப்பொழுது இந்த போட்டியில் நான் வென்று இளவரசியை மணம் முடித்து கொடுத்து விட்டால் அனைத்தும் நலமாக முடியும் " என்றான் அவள் உடனே " ஒரு வேளை நீங்கள் தோற்றால் " என அவள் கேட்க " தேவி நான் தோற்றால் அடுத்த இரு நாட்களில் எங்கள் படைகள் உங்கள் நாட்டை அழிக்கும் " என்றான் " ஒரு வேளை வென்றால் " என கூற " இளவரசியை என் நண்பனுக்கு கொடுப்பேன் " என்றான் " இந்த போட்டியினால் உங்களுக்கு எதுவும் நன்மை இல்லையா?" என கேட்க " என் நட்பினை காப்பேன் " என்றான் அவளும் புன்னகையுடன் " அதுவும் சரிதான் " என்று அவனை பார்த்தாள் அவன் அவள் கண்களை நோக்கி கொண்டு " தேவி இந்த குதிரையில் ஏறும் மற்றொரு வீரன் அவன் மட்டும் தான் ஆகவே தாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் " என்றான் " தாங்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வீரரே தங்கள் எதிரி நாடு என்று தெரிந்தும் இங்கே வந்துள்ளீர் நீங்கள் வீரர் தான் " என்றாள் அவனும் " போதும் தேவி விடுங்கள் இங்கு வந்ததும் பல நன்மைகள் எனக்கு கிடைத்துள்ளது அனைத்திற்கும் சிகரமாக உங்களின் உறவு" என கூறிக் கொண்டே அவளை உற்று பார்த்தான் " உறவா..." என கன்னங்கள் சிவக்க அவனையே பார்த்தாள் அவள். " இதுவும் போட்டியால் வந்தது தான் என உங்கள் நண்பர் கேட்டால் " " நிறுத்துங்கள் தேவி அவனும் கேட்க மாட்டான் நானும் விட்டு தரமாட்டேன் " என்றான் உறுதியுடன். அவள் முகத்தில் சிறிது கலவரம் தெரிந்து மறைந்தது. " நாளைய போட்டியை பற்றி தெரியுமா " என அவள் கேட்க " சொல்லுங்கள் தேவி " என்றான். " நாளைய போட்டி கடினம் " என கூற " விளக்கமாக கூறுங்கள் " என அவன் கூற அவள் " நீங்கள் மைதானத்தின் நடுவில் இருப்பிர்கள் அரண்மனை உப்பரிகையில் இருந்து ஒரு சில புறாக்கள் குழுவாக பறக்கவிடப்படும் அப்பொழுது மேடையில் இருக்கும் அரச குல மக்கள் ஏதேனும் ஒரு நிறத்தை கூறுவார் நீங்கள் அந்த புறாவை வீழ்த்த வேண்டும் மீண்டும் மீண்டும் இதே போல் நடக்கும் அவர்கள் கூறும் புறாக்கள் எல்லாவற்றையும் வீழ்த்தி விட்டால் நீங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் " என்றாள் உடனே அவன் " எளிமையாக தான் உள்ளது ஒருவேளை அவர்கள் கேட்கும் வண்ண புறா அந்த கூட்டத்தில் இல்லை என்றால் வேறு வண்ண புறாவை கேட்பார்களா " என்றான் அவள் " அவர்கள் கேட்கும் புறா இல்லையென்றாலும் தாங்கள் தோற்றவர் தான் " என்றாள் " தேவி இது என்ன ஏமாற்று வேலை " என கேட்க " நீங்கள் இலக்கை தவற விட்டுவிட்டு புறா இல்லை என சொல்லலாம் அல்லவா ஆகவே தான் இந்த முடிவு " என்றாள் அவனும் சில கணம் சிந்தித்து விட்டு " சரி தேவி நாளை அநேகமாக நாம் சிறைச்சாலையில் தான் சந்திக்க வேண்டும் " என்றான் புன்னகையுடன். அவளும் புன்னகையுடன் " பார்ப்போம் " என கூறி சென்றாள்.

மறு நாள் சூரியன் உதயமாகி சில நாழிகைகள் கழித்து போட்டி தொடங்கியது. அருள்வர்மன் அரங்க நடுவில் உண்டி வில்லுடனும் பல கூலாங்கற்களுடனும் நின்றிருந்தான். அரச குல மக்கள் மேடையிலும் சாதாரண பிரஜைகள் மைதானத்தை சுற்றிலும் நின்றிருந்தன. அவன் கையில் இருந்த உண்டி வில்லினை கண்டு பரிகாசம் செய்தனர் சிலர் அதிருப்தியும் கொண்டனர். ஆனால் அவன் எதற்கும் கலங்கவில்லை ஆனால் அவர்கள் சொல்லும் புறா கூட்டத்தில் இல்லை என்றால் என்ன செய்வது என்ற குழப்பம் தான் மனதில் இருந்தது. போட்டி தொடங்கியது கூட்டமாக புறாக்கள் அரண்மனை மாடியில் இருந்து பறக்கவிடப்பட்டன முதலாவதாக அரசர் " வெள்ளை " என்றார் இவன் உண்டி வில்லில் கூழாங்கல்லை வைத்து இழுத்து விட்டான் வெள்ளை நிற புறா வீழ்ந்தது. பின்னர் மந்திரி " நீல நிறம் " என்றார் அதுவும் வீழ்ந்தது. இவன் உண்டி வில்லில் கல்லை பொருத்துவதையோ தொடுப்பதையோ எவரும் பார்க்கவில்லை அவ்வளவு வேகமாக செயல்பட்டான். சேனாதிபதி " சாம்பல் நிறம் " என்றார் அதுவும் உடனே வீழ்த்தப்பட்டது. இவ்வாறு ஒவ்வொருவராக கேட்க புறாக்கள் வீழ்த்தப்பட்டது. அடுத்த புறாக்கூட்டம் வந்தது. இம்முறை திரைச்சீலைக்கு பின்பு அமர்ந்திருந்த பெண்கள் கேட்க தொடங்கினர் இளவரசி " காவி நிறம் " என கூற உடனே அதுவும் வீழ்த்தப்பட்டது. இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்த புறாக் கூட்டங்கள் அனைத்தும் வீழ்த்தப்பட்டது. அவன் வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்பட்டான். அவன் புன்னகையுடன் பேச தொடங்கினான் " இறுதியாக எனக்கு பிடித்த புறா " என கூறிக் கொண்டே கல்லை தொடுக்க " ஒரு வெள்ளை நிற புறா வீழ்ந்தது அதனை கையில் பிடித்து வலது புற இறக்கை உடலுடன் இணையும் இடத்தை சுண்டி விட அது கண்களை திறந்தது அதனை தடவிக் கொண்டே பேச தொடங்கினான் " அரசே இந்த புறாக்கள் யாவும் இறக்கவில்லை சற்றே மயக்கத்தில் உள்ளன இன்னும் இரண்டொரு நாழிகையில் பறந்து விடும்" என்றான் அரசர் ஆச்சரியத்துடன் " என்ன சொல்கிறாய் வீரனே " என கேட்க " ஆமாம் அரசே போட்டியில் புறாக்களை கொல்வதில் என்ன பெருமை ஆகவே அவற்றை கற்களை கொண்டு தாக்கினேன் அதுவும் இறக்கையை மட்டும் ஆகவே அவை பறக்க முடியாமல் கீழே விழுந்தன. சிறிது நேரத்தில் வலி குறைந்தது மீண்டும் பறந்துவிடும் " என விலக்கினான். அரசன் உடனே " மாவீரனே உன் வீரத்துடன் பரந்த உள்ளத்தையும் வெளிப்படுத்தி எங்கள் உள்ளத்தை வென்றுவிட்டாய் ஆகவே இந்த தொடரில் உள்ள பிற போட்டிகளை தவிர்த்து இறுதி போட்டியில் மட்டும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன். இன்னும் ஓரே ஒரு போட்டி வென்றால் போது திருமணம் தான் அந்த போட்டி நாளை மறுநாள் நடைபெறும் " என்றார் அதனை கேட்டு அவன் " நன்றி அரசே " என்று கூறிச் சென்றான் மைதானம் விட்டு

கடற்கரை ஓரமுள்ள அதே சோலையில் ஒரு மரத்தடியில் சாய்ந்து தன் கையில் இருந்த புறாவை தடவிக் கொடுத்துக் கொண்டே தூங்கியிருந்தான் அவன். அப்பொழுது அங்கே வந்த மதியழகி அவனை பார்த்து புன்னகையுடன் அருகே இருந்த குதிரையை நோக்கி சென்றாள். அதன் மேல் ஏறி அமர்ந்தாள் " உன்னை அடக்குவோர் இருவர் மட்டும் தானே " என இகழ்ச்சியாக கூறிக் கொண்டாள் அப்பொழுது நடந்தது அசம்பவம் பயங்கரமாக கனைத்துக் கொண்டே தன் முன்னங்கால்களை தூக்கி அவளை வீசிறியடித்தது அந்த குதிரை...
 

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதை விருவிருப்பாக போகுது சகோ😍😍 keep it up👏👏🤝🤝
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN