கன்னி மனது
கலங்கமடைய
கண்ணனவன்
குழலோசை
வழி செய்யுமா??
ரெஸ்டோரண்டில் தன் நண்பர் பட்டாளத்துடன் கொட்டம் அடித்துக்கொண்டிருந்தாள் ஶ்ரீ...
“ஏன் ஶ்ரீ நீ எதுக்கும் பயப்பட மாட்டியா??” என்ற கேள்வி கேட்ட சஞ்சுவிற்கு
“பயமா?? ஹா.. அதெல்லாம் என்னோட டிக்ஸனரியிலேயே இல்ல....” என்று கெத்தாக சொல்லிய ஶ்ரீயிடம் ரவி
“ஏன் ஶ்ரீ நான் லிப்கோ டிக்ஸனரி, ஒக்ஸ்பர்ட் டிக்ஸனரி இப்படிலாம் கேள்வி பட்டுருக்கேன்... இதென்னா புதுசா ஶ்ரீ டிக்ஸனரி??? இது எங்க விக்கிறாங்க??” என்று வம்படிக்க
“கரெக்டா கேட்டடா ரவி... இவ ஆ ஊனா என்னோட டிக்ஸனரினு சொல்லுறா...அப்படி எந்த கடையில இருக்கு இவ சொல்லுற டிக்ஸனரி...??” என்று ரவியின் கேலியில் ஹேமா பங்கெடுக்க
“கூட்டு சேர்ந்துட்டாய்ங்கயா கூட்டு சேர்ந்துட்டாய்ங்க” என்று வடிவேல் ஸ்டைலில் ஶ்ரீ கூற அந்த பட்டாளமே சிரிக்கத்தொடங்கியது...
“ஶ்ரீ பீ சீரியஸ்... எதுக்கு யாருனு தெரியாதவங்க கூட எல்லாம் இன்டரக்ட் பண்ணுற?? அவரு நல்லவரா இருக்க போய் ஒன்றும் சொல்லாம அவரோட வெடிங்க்கு உன்னை இன்வைட் பண்ணியிருக்காரு..... இதுவே வேற யாரா இருந்து அவங்க ஏதும் மிஸ் பிஹேவ் பண்ணியிருந்த என்ன பண்ணியிருப்ப?? இனிமே இப்படி அதிகப்பிரசங்கி வேலை பார்க்காமா இருக்க ட்ரை பண்ணு...” என்று சுந்தர் அறிவுரை கூற ஶ்ரீயோ
“டேய் இதுவரைக்கும் யாருனு தெரியாதவங்க கூட நாம இன்டரக்ட் பண்ணதில்லையாடா?? என்னமோ ஸ்கூல் போற பசங்களுக்கு சொல்ற மாதிரி அட்வைஸ் பண்ணிட்டு இருக்க??? யாரு எப்படினு கூட கெஸ் பண்ண முடியாத கூமூட்டையா டா நான்??” என்று எதிர் கேள்வி கேட்டாள்....
“நான் சொல்ல வருவதை நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட.... அன்நோன் பர்சனோட இன்டரக்ட் பண்ணுறதுனு தப்புனு நான் சொல்லலை... பட் நம்ம சேப்டியை என்சுவர் பண்ணிட்டு இன்டரக்ட் பண்ணுனு சொல்லுறேன்... இப்போ அவரு தப்பானவருனு வச்சிக்கோ... நீ இப்போ இன்டரக்ட் பண்ணதை அட்வான்டேஜா யூஸ் பண்ணி பியூச்சரில் ஏதும் பிராப்ளம் கிரியேட் பண்ண என்ன பண்ணுவ??? இதுங்க உசிப்பேத்தி விடுதுங்கனு நீ எப்பவும் இப்படி ஏதாவது இடக்குமுடக்காக செய்ற.. அது ஜாலிக்கு தான்னாலும் அது பிறகு ஏதும் பிரச்சனையை கிளப்பிடக்கூடாது..... அதனால கொஞ்சம் கவனமா நடந்துக்கோ....”
“ டேய் ரொம்ப பண்ணுறடா சுந்தர்... சும்மா இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லாத சொல்லிட்டேன்... எப்படி தான் இவனுக்கு மட்டும் இப்படி யோசிக்கத் தோனுதோ தெரியல... ஓய் பப்ளி இவனை எப்படி சமாளிக்கிற?? இப்படி பிளேடு போட்டே சாவடிக்கிறானே” என்ற ஶ்ரீயை கண்டித்தான் ரவி..
“அவன் சொன்னதுல என்ன தப்பு ஶ்ரீ?? அவரு மிஸ்டர் ஆதேஷ்னு தெரிஞ்சதால தான் நீ செய்வதை பார்த்துட்டு நான் சும்மா இருந்தேன்... இல்லைனா உன்னை இங்க இருந்து நகர விட்டுருக்க மாட்டேன்.... அவன் உன்னோட சேப்டிக்கு தான் சொல்லுறான்... கொஞ்சம் அவன் சொல்லுறத காது குடுத்து கேளு..”
“நீ ஏன்டா அவன் கூட கூட்டு சேர்ந்த??? அவன் தான் ஒன்னும் இல்லாத மேட்டரை தூக்கிபிடிச்சிட்டு பேசுறானா நீயும் அதையே ரீ பிளே பண்ணுற???”
“ஶ்ரீ உனக்கு நாங்க சொல்லுற விஷயம் ஒன்னும் இல்லாத மேட்டரா தெரியிதா?? எந்த பிரச்சனையும் வந்திரக்கூடாதுனு நாங்க உனக்கு சொல்லுறது உனக்கு பிளேடு போடுற மாதிரி இருக்கா?? என்று சுந்தர் எகிற அதுநேரம் வரை அவர்கள் உணர்த்த முற்பட்டதை உணர்ந்தும் உணராதது போல் வாதாடிக்கொண்டிருந்த ஶ்ரீ
“என்னடா விட்டா அடிக்க வருவீங்க போல... ஒரு சின்ன பொண்ண இப்படி மிரட்டுறீங்கல?? இருங்க அப்பாகிட்ட சொல்லித்தரேன்..”என்றவாறு அவள் குழந்தை போல் கண்களை கசக்க அவ்வளவு நேரம் எகிறிக்கொண்டிருந்த ரவியும் சுந்தரும் அவளது பாவனையில் சிரிக்கத்தொடங்கினர்... அப்போது ரவி
“ஒரு போல் தான்டா போடுவா... ஆடியன்ஸ் அவ்வளவு பேரும் கிளீன் போல்ட் ஆகிருவாங்க. எப்படி ஶ்ரீ நீ மட்டும் இப்படி அந்நியன் பட விக்ரம் மாதிரி பல ரோலில் இப்படி பர்போமன்ஸ் பண்ணுற??? இவ்வளவு சீரியசாக நானும் சுந்தரும் உனக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கோம் நீ என்னடானா இப்படி காமடி பண்ணிட்டு இருக்க???”
“ இப்படி ஏதாவது பண்ணா தானே உங்க ரெண்டு பேரையும் மலையிறக்க முடியும் அதான் இப்படி...” என்று ஶ்ரீ கூற சுந்தர் சஞ்சனாவின் புறம் திரும்பி
“ என்ன நீ அவளுக்கு ஒன்னும் சொல்ல மாட்டியா?? ஏன் ஹேமா நீயும் பேசாம இருக்க??” என்று வினவ
“ எங்களை எதுக்குடா கேள்வி கேட்குற??? நீங்க ரெண்டு பேரும் தானே அவளை தலையில தூக்கி வச்சிட்டு ஆடுறீங்க.... எங்க பேச்சு இங்க என்னைக்காவது எடுபட்டுருக்கா?? நாங்க ஏதும் சொல்லும்போதெல்லாம் அவளுக்கு ஜால்ரா தட்டிட்டு இப்போ எதுக்குடா எங்ககிட்ட வந்து நியாயம் கேட்குறீங்க????” என்று ஹேமா எகிற
அதற்கு ஶ்ரீயோ
“ ஏன்டா என் ஹேமா டார்லிங்கை கடுப்பாக்குறீங்க??? பாரு அவளுக்கு கோபத்துல மூக்கு விடைச்சிட்டு வருது...காம் டவுன் டார்லிங்.... அவன்ங பேச்சை எல்லாம் கண்டுக்காத...இதுங்க ரெண்டுக்கும் இதே வேலை தான்...” என்ற ஶ்ரீயை ஏகத்துக்கு முறைத்தாள் ஹேமா... அவளின் சார்பாக சஞ்சனா தன் வசை கச்சேரியை ஆரம்பித்தாள்..
“எல்லாத்தையும் நீ பண்ணுவ... அதுக்கு நாங்க திட்டு வாங்கனுமா??? எப்பவும் என்கிட்ட திட்டு வாங்குற சுந்தர் உன் விஷயத்துல என்னை திட்டுறான்... நாங்க சொல்லுறத கேட்காம நீ ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணுவ... அவன் உன்னை கொஞ்சிட்டு என்னை திட்டுவான்... இனிமேலும் இதே மாதிரி பண்ணிட்டு இருந்தனா நீயும் வேணாம்...உன் சங்காத்தமும் வேணாம்னு ஊரை விட்டு ஓடிருவேன்... பார்த்துக்கோ....” என்ற சஞ்சனாவிடம்
“பப்ளி ஊரைவிட்டு ஓடுறேனு சொன்னியே??? தனியாவா இல்ல சுந்தர் கூடவா??” என்று தன் அதி முக்கிய சந்தேகத்தை ஶ்ரீ முன்வைக்க அங்கிருந்த அனைவரும் அவளை தம் கண்களால் பஸ்மமாக்க முயன்றனர்...
இவ்வாறு தம் மதிய உணவை முடித்துக்கொண்டு மீண்டும் தம் பணியிடத்திற்கு திரும்பினர்...
மாலை வழமை போல் வீடு திரும்பிய ஶ்ரீயிடம் அவள் அன்னை ராதா
“ என்ன தான்யா வர லேட்டாகும்னு சொன்ன...இப்போ சீக்கிரம் வந்துட்ட...”
“தங்களை காணாது என் இரு விழிகள் இரண்டும் பூர்த்துக்கிடந்தது... ஆகையால் என் தாய்குலத்தை காண தங்களது அருமை புத்திரியான யான் ஓடோடி வந்துள்ளோம்”என்று ஶ்ரீ அரச நாடக மொழி பேச
“யாரு...???நீ ....??? சரி போதும் உன் நடிப்பு... இப்போ காரணத்தை சொல்லு....”
“யான் செப்புவது மெய் தாய்குலமே... உம் புத்திரியின் பிதற்றலை கண்ணுற்று என்நட்பு வட்டாரமே கண்கலங்கிய விந்தையை நீவிர் அறிய மாட்டீர்...”
“வாழைக்காய் பஜ்ஜி போட்டு ஹாட்பேக்கில் வச்சிருக்கேன்..... அனுவுக்கு கொஞ்சம் வச்சிட்டு மீதியை சாப்பிடு... தொட்டுக்க சாஸ் பிரிஜ்ஜில் இருக்கு.... நான் போய் மாடியில போட்டிருக்க உடுப்பெல்லாம் எடுத்துட்டு வந்துர்றேன்”என்று அவ்விடம் அகன்ற ராதாவிடம் ஶ்ரீ
“என்ன குடும்பம்டா இது... நான் எவ்வளவு பீல் பண்ணி பேசிட்டு இருக்கேன்... என் தாய்குலம் பஜ்ஜி வச்சிருக்கேன் சாப்பிடுனுட்டு போகுது.... தான்யா வரவர இந்த வீட்டுல உனக்கு மரியாதையை குறைந்திட்டே போகுது...” என்று தன் பாட்டில் பேசிக்கொண்டிருந்தவளை கலைத்தது அனுவின் குரல்...
“என்ன அக்கா தனியா பேசிட்டு இருக்கீங்க... என்னமோ பஜ்ஜினு காதுல விழுந்துச்சி....என்ன ஸ்பெஷல் வீட்டுல?”
“ அதுவா... என்னை பொண்ணு பார்க்க வருகிறார்களாம்.... அதான் அம்மா பஜ்ஜி சுடுறேனு சொன்னாங்க...”
“அக்கா சும்மா காமடி பண்ணாத....அம்மா பஜ்ஜி சுட்டுருக்காங்க... அதை நீ தனியா அபேஸ் பண்ண பிளான் பண்ணிட்ட...அதான் இப்படி உடார் விடுற.... தனியா சாப்பிடனும்னு மட்டும் நினைக்காது.... எந்த நிலையிலும் அனுவுக்கு கிடைக்காத பஜ்ஜி வேறு யாருக்கும் இல்லை....” என்றுவிட்டு அனு கிச்சன் பக்கம் ஓட அவளை துரத்தி சென்றாள் ஶ்ரீ...
உடைகளை எடுத்துவிட்டு மாடியிலிருந்து கீழிறங்கிய ராதா ஶ்ரீயை தேட அவளும் அனுவும் கிட்சனில் இருந்த ஹாட்பக்குடன் மல்லுகட்டிக்கொண்டிருந்தனர்... ராதாவை கண்டதும் சமரசமாகிய இருவரும் அவளை பார்த்து இளிக்க அவரோ இருவரையும் சாப்பிடும் வேலையை முடித்துவிட்டு ஹாலிற்கு வரச்சொன்னார்...
அனுவும் தான்யாவும் தம் நளபாகத்தை முடித்துவிட்டு வந்த போது ராஜேஷ்குமாரும் ஹாலில் அமர்ந்திருந்தார்... அவரருகில் சென்றமர்ந்த இருவரும் அவரது காதை கடிக்க அவர்களது எதிரே அமர்ந்திருந்த ராதா அவர்கள் மூவரையும் முறைத்தார்...
“என்ன ராதா எங்களை பார்த்து இப்படி முறைக்கிற?? நாங்க என்ன தப்பு பண்ணோம்??? ஓ எங்களை இப்படி முறைச்சிப்பார்க்க தான் ஹாலில் உட்கார வச்சியா??”
“ஆமா.. எனக்கு வேற வேலை இல்ல பாருங்க.... இப்படி நடு ஹாலில் உங்க எல்லாரையும் உட்காரவைச்சி முறைச்சிட்டு இருக்கதுக்கு..நான் சொல்ல வந்த விஷயம் வேற.. இப்ப அத கேட்கப்போறீங்களா இல்லையா??”
“சொன்னாதானே ராதா கேட்க முடியும்??”
“என்னை சொல்லவிட்டா தானே நான் சொல்லுறதுக்கு?? என்ற ராதா மற்றும் ராஜேஷிடம்
“இப்போ இங்க என நடக்குதுனு நாங்க தெரிஞ்சிக்கலாமா?? என்னமோ பட்டிமன்றப் பேச்சாளர்கள் மாதிரி எதிர் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.. மிசஸ்.ஆர் சொல்லவந்த விஷயத்தை சொல்லிட்டு டின்னருக்கு ஆகுறதுக்கு ஏதாவது பண்ணுங்க.... அதை விட்டுட்டு மிஸ்டர். ஆர் கூட வம்பளந்துகிட்டு..” என்ற ஶ்ரீயை ராதா முறைத்தவாறு தான் கூற வந்த விடயத்தை தெரிவித்தார்...
“ரமா அக்கா பொண்ணு ப்ரீதாக்கு கல்யாணம் பிக்சாகிருச்சாம்... இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம்... நாம அங்க ஒரு கிழமை தங்குற மாதிரி போகனும்...நீங்க மூன்று பேரும் லீவு சொல்லிருங்க.... ஶ்ரீ இந்த சண்டே சாப்பிங் போகனும் நீ எதும் வேலையை வச்சிக்காத...நாம அடுத்த வெள்ளிக்கிழமை ஊருக்கு போகனும்...அதுக்கு தகுந்த மாதிரி உடை எடுத்து வைங்க... நான் அயர்ன் பண்ணி பக் பண்ணிர்றேன்...”
“ஹேய் சூப்பர் மா..நான் ப்ரீக்கு விஸ் பண்ண போறேன்” என்றவாறு சென்ற ஶ்ரீயுடன் சென்றாள் அனு...
**********************************************
அன்று ஆதேஷின் திருமணத்திற்கு தன் தோழி ஹேமா மற்றும் சஞ்சனாவுடன் வந்திருந்தாள் ஶ்ரீ.... வாட்சப் குரூப்பின் மூலம் வினயாவிற்கு நட்பாகிய சஞ்சனா மற்றும் ஹேமா, ஆதேஷிற்கு உடன் பிறவா சகோதரிகளாகினர்...ஒரு வார உரையாடலில் அவர்களுக்கிடையில் ஒரு வித சகோதரத்துவமும் நட்பும் இழையோடியிருந்தது....
இவர்களுடன் சுந்தர் மற்றும் ரவியும் இணைந்து கொண்டிருந்தனர்... இரண்டு நாட்களுக்கு முதல் நடைபெற்ற மெஹெந்தி பங்ஷனில் கலந்துகொள்ள வந்த ஶ்ரீ, ஹேமா மற்றும் சஞ்சனாவை தன் குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தினாள் வினயா.... அனைவருடனும் நட்புறவு பாராட்டும் அவர்கள் மூவரும் வினயாவின் குடும்பத்தினருடன் பாந்தமாய் பொருந்திக்கொள்ள சற்று நேரத்திற்குள் அக்குடும்பத்தின் உறுப்பினரானார்கள் அவர்கள் மூவரும்...
ஆடல், பாடல் மெஹெந்தி இடல் என்று அந்த நிகழ்வை இவர்களது பங்கெடுப்பால் ஜமாய்த்துக்கொண்டிருந்தார்கள்... இடையிடையே எதிரெதிரே அமர்ந்திருந்த மணமக்களை வம்பிளுத்தனர்...
“அண்ணா நீங்க கண்ணாடியில உங்க உருவத்தை பார்த்திருக்கீங்களா???” என்று ஶ்ரீ தன் கலாட்டாவை ஆரம்பிக்க
“ஏன் ஶ்ரீ எல்லாரும் உன்ன மாதிரியா கண்ணாடியே கதினு இருப்பாங்க???” என்று ஶ்ரீயை சஞ்சனா ஓட்ட
“ஓய் பப்ளி... இதுல நீ மூக்கை நுழைக்காத... இது ஆதேஷ் அண்ணாவுக்கும் எனக்கும் இடையிலான டீலிங்...நாங்க தான் பேசி முடிவெடுக்கனும்.. அண்ணா நான் கேட்ட கேள்விக்கு நீங்க இப்போ பதில் சொல்லுங்க அண்ணா??”என்று தன் கேள்விக்கணையை மீண்டும் ஶ்ரீ ஆதேஷ் புறம் திருப்ப அவனோ
“ஏன் ஶ்ரீ உனக்கு இப்படி ஒரு டவுட்டு??? என்னை பார்த்தா கண்ணாடி பார்க்காம முகத்துக்கு பவுடர் அடிக்கிறவன் மாதிரியா இருக்கு??” என்று எதிர் கேள்வி கேட்க
“என்ன அண்ணா இப்படி பப்ளிக்கில் கேட்குறீங்க?? இதுக்கான பதிலை நான் எப்படி நிறைந்த சபையில் சொல்லுவேன்??” என்று அவனை ஓட்ட
“அதான் சிறப்பா செஞ்சிட்டியேமா.... இன்னும் என்ன சொல்ல வேண்டி இருக்கு???” என்று அவன் அங்கலாய்க்க அந்த கூட்டமே சிரித்தது....
“சரி ஶ்ரீ எதுக்கு என்கிட்ட அப்படி ஒரு கேள்வி கேட்ட?? அதுக்கு பதிலை சொல்லு...”
“அதுவா அண்ணா.... நீங்க செம்மையா இருக்கீங்கனு நான் சொல்லும் போதெல்லாம் தாங்கியூனு சொல்லி என்னோட கம்பளீமண்டை அக்சப்ட் பண்ணுவீங்க தானே???”
“ஆமா ஶ்ரீ... ஒருத்தவங்க உண்மையை சொல்லும் போது அதை அக்சப்ட் பண்ணுறதுல தப்பில்லையே???”
“இதுல இருந்தே தெரியல... நீங்க கண்ணாடி பார்த்து பல வருஷம் ஆச்சுன்னு..” என்ற ஆதஷை ஶ்ரீ கலாய்க்க
“அம்மாடி ஶ்ரீ... நீ வேற லெவல் மா... அப்போ இவ்வளவு நாளா என்னை கலாய்ச்சிட்டு தான் இருந்தியா??? அது தெரியாம நீ என்னை பாராட்டுறதால நினைச்சிருந்தேன்... ஏன் வினயா இதெல்லாம் என்னவென்று விசாரிக்க மாட்டியா?? உன் வுட்பீயை இப்படி கலாய்க்கிறா.... நீ என்னடானா சும்மா கையை கட்டிக்கிட்டு பார்த்துட்டு இருக்க...” என்று எதிரில் போடப்பட்டிருந்த மேடையில் அமர்ந்திருந்த வினயாவிடம் பஞ்சாயத்தை கொண்டு செல்ல அவளோ
“என்னை பார்த்தா கையை கட்டிக்கிட்டு சும்மா உட்கார்த்து இருக்க மாதிரியா இருக்கு??” என்று இருபக்கமும் கைகளில் மருதாணி இடுவதை காட்ட தன் கண்களால் காட்ட
“இப்போ இல்ல மா.... அப்போ “ என்று ஆதேஷ் கூற ஶ்ரீயோ
“அண்ணா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டா இந்த சீனுக்கு கதை திரைக்கதை வசனம் எல்லாமே அக்கா தான்... நாங்க எல்லாம் ஜஸ்ட் ஆக்டர்ஸ்...” என்று அவள் ஹேமாவிற்கு ஹைபை அடிக்க ரவியோ
“பிரதர் இதுங்களை நம்பிராதீங்க.... இதுங்க ரெண்டுக்கும் இதே வேலை தான்... ஆஹா ஓஹோனு கம்ப்ளிமண்ட் குடுக்குற மாதிரி செம்மைக்கு கலாய்ப்பாங்க... கடைசில நம்ம இமேஜை டேமேஜ் பண்ணிட்டு நம்மளை எக்சிபிஷனுக்கு வச்சிட்டு போயிருங்க... அப்புறம் வர்றவன் போறவன் எல்லாம் கலாய்ப்பாங்க...” என்று ரவி அவர்கள் இருவரது குட்டையும் வெளிப்படுத்த
“என்ன ரவி அனுபவம் பேசுதா??” என்று ஆதேஷ் கேட்க
“அனுபவம் தான் ஆனா சொந்த அனுபவம் இல்லை... பார்த்த அனுபவம்..”
“அப்படி யாரு ரவி இவங்ககிட்ட வந்து சிக்குனது??”
“வேற யாரு நம்ம ஶ்ரீயோட பாய்பிரண்ட் பரத் தான்...”
“ஹேய் ஶ்ரீ இதை நீ எங்கிட்ட சொல்லவே இல்லையே... சொல்லியிருந்த அவரையும் இன்வைட் பண்ணி இருப்போமே...” என்று ஆதேஷ் கேட்க ஶ்ரீ ரவியை முறைத்தவாறே
“டேய் ரவி அந்த மாங்கா மடையன் எனக்கு பாய்பிரண்டாடா?? நான் அப்படி உங்ககிட்ட சொன்னேனா??”
“நீ சொல்லை... ஆனா அவன் உன்னை தன்னோட கேள் பிரண்டுனு தானே சொல்லிட்டு திரியிறான்....”
“அதுதான் அவன் மாங்கா மடையன்னு சொல்லிட்டேனே... அப்புறம் எதுக்கு அவன் பேசுறதை எல்லாம் கண்டுக்குற???”
“யாரு ரவி அந்த பரத்... ஶ்ரீ இப்படி அவனை காய்ச்சி எடுக்குறா??” என்று ரவியிடம் கேட்ட கேள்விக்கு ஹேமா முந்திக்கொண்டு
“அதை நான் சொல்லுறேன் அண்ணா... எங்க கம்பனியில புதிசா வர்றவங்களை ராகிங் பண்ணுவோம்... அதை ராகிங்னு சொல்லுறத விட வர்ற நியூ ஸ்டாப் எப்படினு தெரிஞ்சிக்கிறதுக்கான டெஸ்ட்... அது நம்ம ஶ்ரீதலைமையில் தான் நடக்கும்... இந்த பரத் வந்த பெஸ்ட் டே அவன் காண்டினில் உட்கார்ந்திருந்தான்.... இந்த ஶ்ரீ போய் அவன்கிட்ட ரொம்ப வழியிற மாதிரி நடிச்சா... அவனும் இவளுக்கு உண்மையாவே அவன்மேல இன்டரஸ்ட் இருக்கோனு இவளுக்கு மேல அவன் வழிஞ்சிருக்கான்... அவன் ஸ்டார்ட் பண்ணதும் இவள் அவன்கிட்ட இருந்து எஸ்ஸாகிட்டா....அந்த தருதலையும் இதுங்க பிளான் பண்ணி கலாய்ச்சது தெரியாம ஶ்ரீ பின்னுக்கு சுத்திட்ட இருக்கான்... இந்த ஶ்ரீயுடம் போரடிச்சா அவனை கூப்பிட்டு வச்சி கம்ப்ளிமன்ட் குடுக்குற மாதிரி கலாய்ப்பா அவனும் ஈனு இளிச்சிக்கிட்டு இவகிட்ட மொக்க வாங்குவான்...” என்று கூற ஆதேஷோ
“ஆக மொத்தம் கம்பனியல ஒரு பயபுள்ளைகளை மிச்சம் வைக்கலை... நல்லா வருவீங்க மா... ஏன் ரவி இதுங்க லூட்டியை யாரும் எதிர்க்கலையா??”
“ஏன் எதிர்க்கலை... அப்படி ஒருநாள் வராதானு நாங்க எங்கிட்டு இருந்தப்போ தான் சஞ்சுவும் சுந்தரும் கம்பனியில ஜாயின் பண்ணாங்க... பஸ்ட் டைம் சஞ்சுவை கலாய்ச்சதுக்கு சுந்தர் இதுங்களை காய்ச்சி எடுத்தான்... ஆனா இந்த சஞ்சு இருக்காளே.... வாலண்டியரா போல் இதுங்க குரூப்பில் மெம்பர்ஷிப் வாங்கிட்டா...”
“அதுக்கு பிறகு??” என்று ஆதேஷ் வினவ
“ அதுக்கு பிறகு என்ன பிரோ சுந்தர் பல்ப் வாங்கிட்டு நின்னான்..” என்று கூற மீண்டும் அக்குட்டம் சிரிப்பில் குலுங்கியது....
இவ்வாறு மெஹெந்தி பங்ஷனை களைகட்ட செய்த அக்கூட்டம் திருமணத்தையும் ஜமாய்க்க வந்திறங்கியிருந்தது...திருமணத்திற்கு ரிஷி தவிர அவனது குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர்...
அவர்களது குடும்பத்தை கண்டதும் ஶ்ரீ
“ஹேய் ஹேமா... அங்கே பாரு ராஜு அண்ணா...” என்று ரித்விராஜை காட்ட சட்டென முகம் மலர்ந்தாள் ஹேமா.... ஏதும் யோசிக்காது அவளையும் ரவியையும் இழுத்துக்கொண்டு ரித்வியின் அருகே சென்று அழைத்தாள் ஶ்ரீ..
திடீரென தன்னை யாரோ அழைக்கவும் அவன் மட்டுமன்றி அவன் பெற்றோரும் யாரென்று பார்க்க ஶ்ரீயோ
“ஹலோ அண்ணா.. எப்படி இருக்கீங்க??? நீங்க எப்படி இங்க??? ஆதேஷ் அண்ணா உங்களோட ரிலேடிவ்வா??” என்று அவள் பாட்டில் கேள்விகளை அள்ளி வீச
“ஹேய் ஶ்ரீ ரிலேக்ஸ்... இப்படியே பேசிட்டே போனனா மூச்சுத்திணறல் வந்திடும்..”
“ஆஹா... அப்படியா?? பரவாயில்லை... ஆனால் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே...” என்று அவள் சி.ஐ.டி வேலையை தொடங்க அதில் கடுப்பான ரவியோ
“ஏய் அதிகப்பிரசங்கி கொஞ்சம் வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா??? நீயே கேள்வி கேட்டுட்டு இருந்தா அண்ணா எப்படி பதில் சொல்லுவாரு??” என்று ரவி ஶ்ரீயை வைய ரித்வியோ
“டேய் விடுடா... அவ இதை இன்னைக்கு நேற்றா செய்றா??? பார்க்குற எல்லார்கிட்டயும் இவளோட சி.ஐ.டி வேலை பிரசீட் பண்ணிட்டு தானே இருக்கா...”
“ஐயோ அண்ணா என்னை ரொம்ப புகழாதீங்க..அப்படி என்ன பெருசா செய்திட்டேன்... ஏதோ நம்மலால ஆனது...” என்று தனக்கு வந்த யோகர் பாலை சிக்சராக மாற்ற
“நீ எல்லாம் திருந்தவே மாட்டியா??” என்று ரவி கேட்க
“அதை பற்றி தான் யோசிச்சிட்டு இருந்தேன்.. ஆனா திருந்தாமலே நீ எல்லாம் நல்லா இருக்கும் போது நான் ஏன் திருந்தனும்னு தோணிச்சி... அதோட திருந்தவே கூடாதுனு முடிவு பண்ணிட்ட...”
“நல்ல முடிவு ஶ்ரீ.. அது சரி நீ எப்படி இங்க??”
“நானும் இதே கேள்வியை தான் உங்ககிட்ட கேட்டேன்... ஆனா நீங்க பதில் சொல்லவே இல்லையே...”
“சரி சொல்லுறேன்... ஆதேஷோட அப்பாவும் என்னோட அப்பாவும் பிரண்ட்ஸ்... சோ அதான் பேமிலியா வெடிங் அட்டென்ட் பண்ண வந்திருக்கோம்...”
“ஆனா உங்க அண்ணன் மிஸ்சிங்கே...??”
“உனக்கு எப்படி ரிஷி அண்ணாவ தெரியும்??”
“என் அண்ணாவோட அண்ணாவை எனக்கு தெரியாம இருக்குமா??”
“ஆஹா அப்படியா.... அண்ணாவுக்கு உன்னை தெரியுமா??”
“எனக்கே அவரை தெரியாதப்போ அவருக்கு எப்படி என்னை தெரியும்??”
“என்ன ஶ்ரீ குழப்புற??”
“உங்களுக்கு அண்ணா இருக்குனு இந்த லூசுக்கு தெரியும். ஆனா அது யாருனு தெரியாதாம்... அதைதான் இப்படி சொல்லி உங்களை குழப்புறா அண்ணா..” என்று ரித்வி சந்தேகத்தை ரவி நிவர்த்தி செய்ய
“எப்படிடா இவளை வச்சி சமாளிக்கிறீங்க??”
“என்ன செய்றது அண்ணா...இதையெல்லாம் கட்டி மேய்க்கனும்னு எங்க தலையில எழுதியிருக்கு” என்று ரவி அங்கலாய்க்க
“சரி நீங்க எப்படிடா இங்க?”
“அதுவும் இவ உபயம் தான்...” என்று ரவி சொல்லி ஆதேஷுடம் நட்பு பாராட்டிய கதையை கூறினான்.
“ஏன் ஶ்ரீ அவனை கூட விட்டுவைக்கலையா?”என்று ஆதேஷ் கேட்க
“அண்ணா நீங்க உங்க அம்மா அப்பாவுக்கு என்னை இன்ரடியூஸ் பண்ணலையே??” என்று ரித்வியிடம் வினவிவிட்டு அவளே அவர்களிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்...
“ஹாய் ஆண்டி...ஹாய் அங்கிள்... ஐயம் ஶ்ரீதான்யா.. ரித்வி அண்ணாவோட சிஸ்டர்..” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள மூர்த்தியும் சுபாவும் ரித்வியை பார்க்க
அவனோ
“என்னோட காலேஜ் ஜூனியர்... ஐடி கம்பனியில் வர்க் பண்ணுறா....” என்று ரவி மற்றும் ஹேமாவை அறிமுகப்படுத்தினான்.
ஶ்ரீயின் பேச்சு வழமை போல் சுபா மற்றும் மூர்த்தியையும் கட்டுப்போட அவர்களுக்கும் அவள் செல்லப்பிள்ளை ஆகிப்போனாள்... அவர்களுடன் பேசிய பின் ரித்வியையும் தம் கூட்டம் இருக்கும் புறம் தள்ளிச்சென்றாள் ஶ்ரீ...
அதுவரை நேரம் ஶ்ரீயுடன் உரையாடியபடி இருந்த ரித்வியின் கண்கள் ஹேமாவுடன் உரையாடியபடியே இருந்தது... இதை ஶ்ரீ கவனித்த பின்பு தான் ரித்வியை அவர்களுடன் அழைத்து சென்றாள்... அழைத்து சென்றவள் அவர்கள் உரையாட களம் அமைத்து கொடுக்கும் பொருட்டு ஹேமாவிடம் தான் மாடியில் மணமகள் அறையில் தன் கைப்பையை மறந்து வைத்துவிட்டு வந்ததாகவும் அதை அவளை எடுத்துத்தர கேட்க அவளோ இவளை திட்டியபடி செல்ல அவள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த ரித்வியிடம்
“அண்ணா ரூம் மூடி என்கிட்ட தான் கீ இருக்கு... இப்போ தான் நியாபகம் வந்துச்சி... நீங்க ஹேமாவை கூட்டிட்டு வர்றீங்களா??” என்று அவள் கேட்ட அடுத்த நொடி ரித்வி அங்கு இல்லை...
அவன் சென்றதும் சஞ்சனா
“எப்படி ஶ்ரீ நீ மட்டும் இப்படி இருக்க??? ஒரு நேரத்துல பயங்கரமா கலாய்க்கிற... ஒரு நேரம் ரொம்ப கேயார் பண்ணுற.. ஒரு நேரம் ரொம்ப சப்போர்ட்டா இருக்க... ஒரு நேரம் யாருடா இவ... இவளை எங்கயிருந்துடா கொண்டுவந்தீங்க அப்டிங்கிற ரேஞ்சுல அட்டகாசம் பண்ணுற... எப்படி நீ மட்டும் இப்படி??”
“அதெல்லாம் அப்படி தான்.. எல்லாம் தானா வரும்... ஏன் வருது எப்படி வருதுனு தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல சரியா வரும்..” என்று ரஜினி ஸ்டைலில் அவள் கூற
“ஏன் வராது உனக்கு சிக்குன அடிமைகளா நாங்க இருக்கும் போது உனக்கு இதும் வரும் இதுக்கு மேலேயும் வரும்” என்று தம் நிலையினை நினைத்து ரவி நொந்து கொள்ள அங்கு மீண்டும் சிரிப்லை தொடங்கியது..
இவ்வாறு ஆர்பாட்டங்களுடன் ஆதேஷ் வினயா திருமணத்தை முடித்துவிட்டு ஐவரும் தம் இல்லம் திரும்பினர்..