பேதையின் மனம்-3

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

கல்லூரியில்,
மூச்சிரைக்க ஓடி வந்த இஷிதாவை தாரா அமரவைத்து தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
" இப்ப என்ன ஆச்சுனு இப்படி ஆஸ்துமா பேஷண்ட் மாதிரி மூச்சிழுக்க ஓடி வர்ற?? என்ன உன் மாமா பையன் யாராவது உன்னை தேடி வந்துட்டாங்களா??" என கேட்டாள் தாரா. இஷிதாவோ தலையில் தட்டிக்கொண்டே, "பேப்ஸ்.. நீ சொன்னதை கேட்டதும் அப்படியே சிரசில் அடிக்குது.. ஆமா கில்லி படத்துல வர்ற பிரகாஷ் ராஜ் மாதிரியே எனக்கு ஒரு மாமா பையன் இருக்கிறான்.. என் மேல ஆசையில ஊரிலேயே கல்யாணம் பண்ணி கேட்டான்.. நான் "ஷலல்லா..ஷலல்லா.."ன்னு பாடிட்டு.. உன்னையெல்லாம் ஏலியன் கூட கட்டிக்க மாட்டா.. நானும் கட்டிக்க மாட்டேன்னு ஊரை விட்டு ஓடி வந்துட்டேன்.." என கூறிவிட்டு மூச்சை வெளியிட்டாள் இஷிதா.
தாரா நாடியில் கைவைத்து யோசிப்பது போல பாவ்லா செய்துவிட்டு, "வாவ்... பேப்ஸ்.." என கத்திக்கொண்டே இஷிதாவின் புஜத்தை பிடித்தாள்.
"என்ன ஒரு அருமையான கதை.. இதை எடுத்துட்டு போயி இன்னொரு ஒரு நாவலே எழுதலாம் போலயே.. அதுக்கப்புறம் நானே கதையை சொல்றேன்.."என பேய் கதை கூறுவது போல கைகளை இஷிதாவின் முன் நீட்டி பயமுறுத்திக்கொண்டே "இங்கேயே உனக்கு லவ்வர் கிடைச்சிடும்.. உன்னை தேடி வந்த மாமா பையன் பிரகாஷ்ராஜ்.. உன் லவ்வரை போட்டுத்தள்ளிட்டு உன்ன கல்யாணம் பண்ணிட்டு போறான்.. இந்த மாதிரி கிளைமாக்ஸ வச்சுடலாம்.." என்றாள் தாரா. அவள் கூறியதை கேட்ட இஷிதாவிற்கு சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போல தோன்றியது.
"பேப்ஸ்.. நீ இன்னைக்கு வார்த்தையை அளந்தே பேசு.. ஏன்னா இன்னைக்கு உன்னோட பொறுமையை வச்சு தான் நாளே அமையும்..இல்லை இல்லை..வாழ்க்கையே அமையும்.."என கூறி கண்ணடித்தாள் இஷிதா.
"எனக்கு போட்டி வைக்கவே இங்க ஒருத்தனுக்கும் தைரியம் இல்லை.. இதுல என்னோட பொறுமைய சோதிக்கிற மாதிரியா??" என சிரித்தவள், "சான்ஸே இல்லை.."என மறுத்தாள்.
அப்போது இஷிதாவோ கள்ளத்தனமாய் புன்னகைத்துவிட்டு "எவனும் சோதிக்க போறது இல்ல.. இது சோதிக்கும் தானே.." என தனது கையில் இருந்த போனை எடுத்து ஆட்டினாள். அதை கண்டதும் உயிர் வந்தவளாய், "என்னோட உடல், உயிர், வாழ்க்கை, லவ்வர்.. பேபி உன்னை நான் எவ்வளவு நாள் மிஸ் பண்றேன் தெரியுமா.." என போனிடம் பேசிக்கொண்டே இஷிதாவின் கையில் இருந்த போனை வாங்க முற்பட்டாள். இஷிதாவோ டெஸ்கின் மீது ஏறி போனை தராமல் போக்கு காட்டினாள்.
"முதலில் என் போன்... அப்புறமா தான் உன் லவ்வர்.."என்னவளின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்றுவிடலாமா?? என தோன்றியது தாராவிற்கு.
"அதுக்கு அப்புறமா உன் போன்ல கைய வை.." என கண்ணை உருட்டி முழித்தவளை ஒற்றைப் புருவம் கொண்டு சுருக்கி முறைத்தாள் தாரா.
" சரி கேண்டீன் வா.." என அழைத்தாள் தாரா.
" இந்த விளையாட்டு எல்லாம் என்கிட்ட வேண்டாம்.. ஆல்ரெடி கேன்டின் மாஸ்டர் கிட்ட இருந்து போன் வாங்கிட்டன்னு தெரியும்.. போன மட்டும் வாங்காமல் இன்னொரு பஜ்ஜியும் வாங்கி அமுக்கிட்டு வந்தன்னும் தெரியும்.. கேண்டீன்ல இருந்துதான் வர்றேன்.. ஒழுங்கு மரியாதையா என் போன் எடுத்து வை.." என மேலிருந்தபடி ஒற்றை கையை நீட்டினாள். தாராவோ "கண்டுபிடிச்சிட்டியா.." என நொந்துக்கொண்டே இஷிதாவின் கையில் அவளது போனை வைத்தாள். அதன்பின் அவளது போனை கொடுக்க, அதை வாங்கியவள் "படுபாவி பய.. என் போன இத்தனை ஸ்கரேச் பண்ணி வச்சிருக்கான்.. அவனுக்கு ஒரு டெடிகேஷன் இல்லை.. வேஸ்ட் பெல்லோ.." என திட்டிக்கொண்டே போனை தன் ஷால் கொண்டு துடைத்தாள் தாரா.
"ஏன் பேச மாட்ட.. உனக்காக ரிஸ்க் எடுத்து அவன் வீட்டுக்கே போய்.. ஏன் அவனுக்கே தெரியாமல் போனை எடுத்துட்டு வந்திருக்கேன்.. எனக்கு ஒரு தேங்க்ஸ் கிடையாது.. ஆனா அவனுக்கு திட்டு மட்டும் வக்கனையா குடுக்குற.." என இடுப்பில் கைவைத்து முறைத்தாள் இஷிதா.
" அப்படி எல்லாம் சொல்லக்கூடாது பேப்ஸ்.. ஸ்டைலா மேல் நின்னது போதும்.. இந்த ஆங்கிள்ல உன்னை பார்க்க முடியல.. கோபம் செட்டே ஆகல.." என அவளை கீழிறக்கி டெஸ்கில் அமர்ந்தவள் கன்னம் பிடித்து கொஞ்சினாள்.
" இப்படியே பேசி என்னை ஐஸ் வச்சிடு.." என பாவம் பார்த்து மன்னித்து விட்டாள் இஷிதா.
இரண்டாவது பாட வேளையின் போது,
பேராசிரியர் ஸ்பிரிங் ரோல் மண்டையன்.. விறுவிறுப்பாக பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். எப்போதும்போல தாரா போனை நோண்டிக் கொண்டிருந்தாள். இஷிதாவும் புத்தகத்தின் மேலே படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள். திடீரென வகுப்பிற்குள் நுழைந்தனர் அந்த மூவர். வேறு யாருமல்ல திலீப் அண்ட் கோ தான் அவர்களை கண்டதும் பேராசிரியரின் ஒரு நிமிடம் தனது வகுப்பை நிறுத்தினார். அனைவரும் கோரசாக திரும்பி வாசலை நோக்க, அப்போதுதான் கண்ணை நிமிர்த்தி வெளியில் நடப்பதை கவனித்தாள் தாரா. அங்கே வாசலில் திலீப்பை பார்த்ததும் தாராவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
அருகே இருந்த இஷிதாவை உசுப்பினாள். "இப்ப என்னடி??"என கண்களைக் கசக்கிக்கொண்டே எழுந்தாள். தாராவின் பார்வை சென்ற இடத்தை நோக்க, தலையை குனிந்து எழுந்தவள் கண்களை கொட்ட கொட்ட முளித்தாள். அங்கே திலீப்பை கண்டவளின் தூக்கம் பஞ்சாய் பறந்து போக, எழுந்து ஸ்டெடியாக நின்றாள்.
அனைவரும் அவளை வித்தியாசமாகப் பார்த்தனர். தாராவோ தலையில் அடித்துக்கொண்டு "பேப்ஸ் எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க.. உட்காரு.." என அவளது கரத்தை பிடித்து உட்கார வைத்தாள். இதை அனைத்தையும் ஓரக்கண்ணில் கவனித்த திலீப்போ "ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய போறீங்களா??" என கேட்க அவரும் "ஓகே நீங்க கேரி பண்ணிக்கோங்க.." எனக் கூறி விட்டு வெளியே சென்றார்.
அனைவரும் நடப்பதை பயத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மேடை போலிருந்த சற்று மேடான பகுதியில் ஏறினான். தாராவையும் இஷிதாவையும் கைநீட்டி முன்னால் வருமாறு அழைத்தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முழித்துக் கொண்டே முன்னே வந்தனர். அப்போது அருகிலிருந்த வினித், "தக்காளி.. நேத்து உன்கிட்ட இருந்து வாங்கிட்டு போனை போனை எங்கே??" எனக் கேட்டான்.
" அது எங்க கிட்ட கேட்டா எப்படி இருக்கும்?? நீங்க தானே வாங்கிட்டு போனீங்க.." என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் இஷிதா.
" முட்டைக்கோசு உன்கிட்ட நான் கேட்டனா?? ரெண்டு பேருக்கும் அவங்ககிட்ட கேட்ட கொஸ்டின் ஆன்சர் பண்ற பழக்கமே இல்லையா??" என கேட்க, தாராவோ முந்திக்கொண்டு, "அதான் நீங்க தானே வாங்கிட்டு போனீங்க.. என்கிட்ட வந்து கேட்டா.. எனக்கு எப்படி தெரியும்??" என்றவள் சற்று குனிந்து சன்னக்குரலில் "ஒருவேளை போன் வாங்க காசு இல்லையா??" எனக் கேட்டவள் நிமிர்ந்து "பரவாயில்லை பரவாயில்லை.. என் போன் கொஞ்சமும் டேமேஜ் கண்டிஷன்லதானிருந்தது.. நீங்களே வச்சுக்கோங்க.. நான் வேற போன் பாத்துக்குறேன்.. " என்றால் தாரா.
" என்ன திமிரா?? உன்கிட்ட இருந்து வாங்கிட்டு போன போன் இப்ப காணோம்.." என்றால் சபிதா.
" ஐயோ அக்கா தொலைச்சிட்டீங்களா?? அது என்னோட ராசியான போன் தெரியுமா?? அது எங்க அப்பா என்னோட பர்த்டேக்கு கிப்ட்டா வாங்கி கொடுத்தாரு.. என்னோட ஃபேவரைட் போன்.. இப்படி பண்ணிட்டீங்களே.. இந்த கொடுமையை நான் யார் கிட்டே போய் சொல்லுவேன்.. என்னனு போய் சொல்லுவேன்.." என கிழவி போல பாட்டை பாடினாள்.
" வாய மூடு.. உன்கிட்ட இங்க ஒப்பாரி வைக்க சொல்லல.. போனை காணும்.."என அழுத்தமான பதிலைக்கூறினான்.

" இவ்வளோ அசால்ட்டா சொல்றீங்க.. என் போன்ல அவ்ளோ பீச்சர்ஸ் இருக்கும்.. நீங்க சொல்றதை பார்த்தா ஏதோ நான் தான் பிளான் போட்டு உங்க கிட்ட இருந்து எடுத்துட்டு வந்த மாதிரி விசாரிக்கிறீங்களே.."என கூறிக்கொண்டிருந்த தாராவின் கையைப் பிடித்து நெறிப்படுத்தினாள் இஷிதா.
" உங்க கிட்ட இருந்த போன் எப்படி எங்ககிட்ட எப்படிண்ணா வரும்?? நீங்க தொலைச்சதுக்கு நாங்க எப்படி வாரண்டி கியாரண்டி எல்லாம் கொடுக்க முடியும்??" என இஷிதா பேசிக்கொண்டிருக்க, போன்
" மாட்டிக்கிச்சே
" என்ற பாடலோடு சேர்ந்து ஒலித்தது. மொத்த வகுப்பறையும் அவர்களது இடத்தை நோக்கி பார்வையை செலுத்த, வேகமாக சென்ற திலீப் டெஸ்கின் அடியில் கையை நுழைத்தான். இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் ஒட்டிக்கொண்டு நின்றவாறு "இன்னைக்கு மாட்டுனோம்.." என கோரஸாக கூறினர்.

"பேப்ஸே.. கிளாஸ் டைம்ல சைலண்ட்ல போடனும்னு உனக்கு தெரியாதா?? இப்ப பாரு நம்மள வச்சு செய்ய போறான்.." என தாராவின் காதில் இஷிதா கிசுகிசுக்க, தாராவும் "நான் போனை சைலன்ட்ல தான் போட்டிருந்தேன்.. இப்ப அலறுறது என் போன் இல்ல.. உன் போன்.." என்றாள் தாரா. இஷிதாவின் சப்த நாடியும் அடங்கியது.
" நேத்து உன் போன் இன்னைக்கு என் போனா?? உன் போனாச்சும் பரவாயில்லை.. ஏதோ ஸ்கிராட்ச் மட்டும் ஆச்சு.. என் போன்ல அல்ரடி ஸ்கிராட்செஸ் இருக்குமே.. இதுல கோவத்துல போட்டு உடைச்சா என்ன பண்றது??" என இஷிதா புலம்ப,
" அந்த காட்டு பயலுக்கு அவ்ளோ தைரியம் இல்லை.." என தாரா கூறிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கே திலீப்பின் கைகளில் இஷிதாவின் போன் மாட்டி, தரையில் சிதறி இருந்தது.
" ஐயோ..." அலறிக்கொண்டே போனை நோக்கிப் பாய்ந்தாள். அந்த நிகழ்வை அங்கிருந்த அனைவரும் ஸ்லோமோஷனில் பார்த்துக்கொண்டிருந்தனர். சிதறிய போனோ பாய்ந்து சென்றால் மட்டும் தானாக ஒட்டிக் கொள்ளுமா?? என்ன?? சிதறியது சிதறியபடியே இருந்தது. அதனருகே அமர்ந்து அவள் போனை ஒவ்வொரு துண்டாக பொறுக்கிக் கொண்டிருந்தாள்.
"என்கிட்ட பொய் சொன்னால் என்ன நடக்கும்னு இப்போ தெரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்.. நாளைக்கு காலையில என்கிட்ட இருந்து எடுத்த போன் என்கிட்டே வந்து இருக்கணும்.." எனக்கூறிவிட்டு இஷிதாவை கடந்து சென்றான்.
அவளோ சிதறிய போன் பாகங்களை எடுத்து அடுக்கி வைத்து நெற்றியில் கை வைத்தவாறு ஏதோ பறிகொடுத்தது போல அமர்ந்திருந்தாள். சுற்றிலும் அனைவரும் துக்கம் விசாரித்து சென்றனர். அவள் செய்ததற்கு அவள் அனுபவிக்கிறாள் .சரி சரி உட்கார்ந்து பீல் பண்ணட்டும் நம் அதுக்கு முன்னாடி இந்த திலீப் யாருனு பார்த்துட்டு வந்துடலாம்..
அதாவது பிசிக்கல் அப்பியரன்ஸ் பத்தி அல்ரெடி பாத்துட்டோம்.. சிக்ஸ் பேக் பாடி.. சில்மிஷ கேடி.. அப்படி எல்லாம் வர்ணிச்சு ரொம்ப வருஷம் ஆச்சு.. இப்போ அவனோட கேரக்டர் பற்றி பார்க்கலாம்..
திலீப்.. திலீப் ராஜன்.. பெயருக்கு ஏற்றார் போல் ராஜாவாய் அமர காத்திருப்பவன்.. பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என கேள்விப்பட்டிருப்போம்.. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இவனே.. இவனது தந்தை நாகராஜன் பிசினஸ் உலகில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்.. அதன்பின்னர் கல்லூரி மருத்துவமனை என பல தொழில்துறைகளை தொடங்கியுள்ளார்.. அந்த பல தொழில்களில் இதுவும் ஒன்று.. அதாவது இந்தக் கல்லூரியும் இந்த கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் நாகராஜன்.. அவரது ஒரே செல்ல வாரிசு.. தவப்புதல்வன்.. அன்புச்செல்வன்.. எல்லாமே ஐயா தான்..
சிறுவயதிலிருந்தே வெற்றி பெற வேண்டும் என்ற தீராத வெறி உண்டு.. ஒரு விஷயத்தில் வெற்றி பெற வேண்டுமென்றோ அல்லது அவன் விருப்பமாய் இருந்தாலோ அது நடந்தேறிட வேண்டும்.. இல்லையேல் அவனது பிடிவாதம் பலமடங்கு பெருகும்.. தொடக்கத்தில் நாகராஜன் கண்டித்து பார்க்க, அது அவருக்கே பாதிப்பாக சென்று முடிய, தனக்கு இருக்கும் ஒரே மகன் தன்னோடு இருந்தால் மட்டும் போதும் என்பது போல அவனை கண்டிப்பதை விட்டு விட்டார்... அந்த பிடிவாதம் வளரவளர அவனுக்குள் வெறியாக அவன் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற உணர்வை அவனுக்குள் விதைத்திருந்தது.. அவனது நண்பர்கள் என்ற வட்டம் சிறியதே..
அதில் சபிதா மற்றும் வினித் இருவருமே பள்ளிப்பருவத்தில் இருந்தே அவனது குணமறிந்து அவனோடு இருப்பவர்கள்.. இந்த கல்லூரியிலும் ஒன்றாகவே சேர்ந்திருந்தனர்.. வினித் மற்றும் சபிதா படிப்பில் சராசரியான மதிப்பெண் பெற்றாலும் இவர்களுடன் சுற்றித்திரியும் திலீப் நிச்சயம் முதல் மதிப்பெண் பெறுவான்.. அவனுடைய தந்தையும் கல்லூரி என்பதெல்லாம் இல்லை.. இயல்பாகவே அனைத்தையும் விரைவாக புரிந்துகொள்ளும் சக்தியும் கூர்மையான அறிவும் உண்டு..
சபிதாவை தவிர வேறு எந்த பெண்ணிடமும் பேச்சு வார்த்தையோ இல்லை பார்வை பரிமாற்றமோ செய்து கொண்டதே இல்லை.. அதாவது நம்ம அர்ஜுன் ரெட்டி ஹீரோ மாதிரி.. பாசம் வச்சுட்டா பயபுள்ள பாய்ஷனை கொடுத்தாலும் பிரிந்து போக மாட்டான்.. இதே ஒருத்தரை பிடிக்கலைன்னா பல ஜென்மம் எடுத்து வந்தாலும் அவனுக்கு பிடிக்காதவங்க பிடிக்காதவங்க தான்
.அவனுக்காக என்ன செஞ்சாலும் அதை ஏத்துக்க போவதுமில்லை.. இவன் இப்படியிருக்க.. வகுப்பில் அவ்வபோது இரண்டாம் மதிப்பெண் பெறும் கிஷோரோடு மோதலும் நடைபெறும்.. கல்லூரி நிர்வாகமும் திலீப்பின் மீது எந்த ஒரு குற்றமும் சுமத்த முடியாத நிலையில் பேராசிரியர்களும் அவனது போக்கிலேயே விட்டு விட்டனர்..
வகுப்பில்,
இஷிதாவின் அருகே வந்த தாரா, "பேப்ஸ் பேசாம போனை கொண்டு போய்க் கொடுத்துடுவோமா??"என்றாள் தாரா.
" குடுத்துட்டா.. என் போன் திரும்ப வந்துருமா??" என கேட்டாள்.
" திரும்ப வராது தான்.. ஆனா நான் கேள்விப்பட்ட வர இந்த காலேஜுக்கு அவன் பெரிய டான்.. புரோபஸர் கூட என்னன்னு கேக்க மாட்டாங்களாம்.. இப்ப பார்த்த இல்ல.. நம்ம ஸ்ப்ரிங் மண்டையன் அவன் வந்ததும் கிளாஸ விட்டு வெளியே போயிட்டாரு.. எப்பவுமே பெரிய ஆள் கிட்ட மோதக்கூடாது.. ஏதோ நமக்கு தெரிஞ்ச சின்னச் சின்ன வம்புகள்ல மாட்டி சின்ன சின்னதா கட்டப்பஞ்சாயத்து நடத்துவோம்.. எதுக்கு பெரிய எடத்துல எல்லாம் போய் முட்டிக்கிட்டு.." என கேட்டாள் தாரா.
உடனே முகத்தை துடைத்துவிட்டு மூக்கை உறிஞ்சியவள் தாராவின் போனை கையில் வாங்கிவிட்டு விறுவிறுவென அவனது வகுப்பறையை நோக்கி நடையை போட்டாள். தாராவும் அவளது பின்னாலேயே ஓடினாள்.
அங்கே வகுப்பறையில்,
' டேய் மச்சான்..இன்னைக்கு உன் ஆளை பார்க்க போகணும் போல.." எனக் கேட்டான் விஜய்.
" இல்ல மச்சி.. காலையிலேயே கேண்டின் வந்து போன வாங்கிட்டு போயிட்டாலாம்.. கேன்டீன் அங்கிள் சொன்னாரு.." என்றான் கிஷோர்.
" என்ன மச்சி பீலிங்ஸா.. பார்க்க முடியல.." என கலாய்த்தான்.
" இல்லடா பீலிங் இல்ல.. ஆனால் ஒரு தடவை தேடி போன பொருள் கிடைக்கல.. அப்போ கண்டிப்பா கிடைக்காத பொருள் என்ன தேடி வரும்.." என்றான் கிஷோர்.
" அப்போ இது கன்ஃபார்ம் லவ்வா??" என கேட்டான் விஜய்.
" லவ்னு சொல்ல முடியல.. ஆனா எனக்கு அவள டெய்லி பாக்கணும்னு தோணுது அவ கிட்ட பேசிட்டு இருக்கணும்னு தோணுது.. இது எந்த மாதிரியான ஃபீலிங்ஸ்னு நான் இப்பவே ஒரு முடிவுக்கு வரமுடியாது.. நாள் போகட்டும்.. அப்புறம் முடிவு பண்ணிக்கிறேன்.." என கிஷோர் கூறிக்கொண்டிருக்க, "டேய் மச்சி.." என பரவசத்தில் கத்தினான் விஜய்.
" இப்ப எதுக்குடா வாய்க்குள்ள போண்டாவை அமுக்கின மாதிரி வாயை இந்த பொள பொளக்குற??" என கேட்டான் கிஷோர்.
" மச்சி நீ அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ.. அந்த ஆளுக்கு கேட்டுடுச்சு.. அங்க பாரு அவள உன்னை தேடி வர்றா.."என கூறியதும் பரவசமாய் திரும்பினான். அங்கே இருந்து அவர்களை நோக்கி நடந்து வந்தாள் இஷிதா. கிஷோருக்கு மனம் மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்ள மாட்டாமல் மனதிற்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
" டேய் விஜய் நான்.. கேஷூவலா இருக்கிறேன்.. அவளே வந்து என்ன கூப்பிடட்டும்.." என கண்கள் மின்ன விஜயிடம் கூற, விஜய் தலையாட்டினான். அவன் அறிவான் கிஷோருக்கு இஷிதாவின் மேல் காதல் தான் என்று.. கிஷோர் அதை உணர்ந்து கொள்ளாமல் இருக்கலாம்.. ஆனால் இதுவரைக்கும் எந்த பெண்ணிடமும் இத்தனை ஈர்ப்பு கொண்டதை விஜய் காணவில்லை..

கிஷோர் திரும்பியிருக்க, அவனைப் பார்த்து விஜய் அமர்ந்து இஷிதாவை பார்த்துக்கொண்டிருந்தான். அவளோ கிஷோர் வரை வந்துவிட்டு வேறொரு திசையில் நடந்தாள். "எங்கடா??" என கேட்டுவிட்டு திரும்பினான்.
"வரும் போது உன்னை பார்க்கத்தான் வந்த மாதிரி இருந்திச்சு.. இப்ப எங்க போறான்னு தெரியல.."என்றான் விஜய். அவள் சென்ற திசையை பார்த்து திடுக்கிட்டான்.
வகுப்பறையில் இருந்த மேஜையில் திலீப் அமர்ந்து இருக்க, அவனை சுற்றி ஒரு கூட்டம் நின்றிருந்தது. அந்த கூட்டத்தின் முன்னால் சென்று நின்று "எக்ஸ்க்யூஸ் மீ சீனியர்.." என சத்தமாய் அழைத்தாள். அப்போது கூட்டத்தை விலக்கி வெளியே பார்த்தவள், இவள் என்றதும் ஏளனப்புன்னகையை சிந்தினான்.

என்ன என்பது போல பார்வையாலே கேட்க, "இது என்னோட பிரண்டு போன்.. நான் தான் உங்ககிட்ட இருந்து எடுத்தேன்.. அது எனக்கு தப்பா தோனல.. நீங்க எங்கள ரேக் பண்ணிங்க.. அவ சும்மா உங்க டீஸ் பண்ணலாம்னு பண்ணா அதுக்காக நீங்க போன் அடிச்சு ஓடச்சது தப்பு.. ஒடச்ச போன கையோடு எடுத்துட்டு போனது இன்னொரு தப்பு.. அந்த போனை திருப்பி எடுத்துட்ட.. என்னோட போன் எடுத்து உடைச்சது மூணாவது தப்பு.. இப்போ இந்த போன நான் உங்ககிட்ட தருவேன்.. நானும் என் ப்ரெண்டும் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறோம்.. அவளோட போனில் உள்ள ஸ்கிராட்செஸ் சரியாகுமா?? இல்ல என் போன் தானாக வந்துடுமா??" கோபமாய் கத்திக்கொண்டே இருந்தாள்.
பின்னால் வந்த தாராவும் வினித்தின் மேல் இடித்துக் கொண்டு நிற்க, அவளை பார்த்து ஒழுங்காக நிற்குமாறு கடித்துகொண்டான் தாரா நடப்பதை தடுக்க முடியாமல் வேடிக்கை மட்டும் பார்த்தாள். திலீப்போ மேஜையில் இரண்டு கைகளை வைத்து லாவகமாக கீழே குதித்தான். அதில் இரண்டடி பின்னால் எடுத்து வைத்தாள். கையிலிருந்த தூசி தட்டி கொண்டே அவளது அருகில் வந்தவன் "போன் திரும்ப வருமான்னு சொல்ல முடியாது இரண்டுபேரும் என்கிட்ட சாரி கேளு.."என திமிராய் கூற, இப்போது ஆச்சரியத்தில் கண்களை விரித்ததது தாரா.

" எனக்கு என்னோட போன் திரும்ப வந்த மட்டும்தான் உங்க கிட்ட சாரி கேட்பேன்.." என விடாப்பிடியாக நிற்க, திலீப்பும் இஷிதாவும் ஒருவரையொருவர் முறைத்தவாறு நின்றிருந்தனர். சுற்றி நின்றவர்கள் அனைவருக்கும் இரண்டு சண்டைக் கோழிகள் சண்டைக்கு தயாராவது போல தெரிந்தது. அப்போது உள்ளே நுழைந்த கிஷோர், "திலீப்..அவள் சொல்லுறதும் கரெக்ட் தானே.. நீ தான் அவள் கிட்ட வம்பு பண்ணுன.."எனக்கூறியவன் திலீப்பின் விழியில் இருந்து உஷ்ணமான பார்வையை வாங்கினான்.

உடனே வார்த்தைகளை மாற்றிக்கொண்டு, "சரி இப்போ போன் உடைஞ்சதுக்கு உன்னால நஷ்ட ஈடு கொடுக்க முடியாது.. அவளும் மன்னிப்பு கேட்க முடியாது.. அப்போ ஒன்னு பண்ணலாம் நீ அவளோட போன மட்டும் ரிப்பேர் பண்ணி கொடு.. அவள் மட்டும் உன் கிட்ட சாரி கேட்பா.. நீ சொல்ற மாதிரி மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது.. ஜஸ்ட் சாரி மட்டும் தான்.."என்றான் கிஷோர்.
"கிஷோர்.. இது எங்களுக்கும் இந்த குட்டி சாத்தான்களுக்குமான சண்டை.. இதுஐ நீ தலையிடனும் அவசியம் இல்லை.." என வினித் கையை முறுக்கிக் கொண்டு வர,
"இது நம்ம கிளாஸ் ரெப்பிரசென்டேட்டிவ்வா சொல்லலை.. இந்த காலேஜோட சேர்மன்றதுனால தான்ன் சொல்றேன்.." என்றான் கிஷோர்.
இப்போது தனது சட்டை கையினை மேல் இழுத்துவிட்ஞு கையில் கிடந்த காப்பினை எடுத்து மேலே இறுக்கமாக வைத்துவிட்டு கையை முறுக்கிக் கொண்டே திலீப் கிஷோரை அடிப்பதற்காக தயாரானான். அப்போது சபிதா கிஷோரின் கையைப்பிடித்து அமைதிப்படுத்தியவள், "இதுக்காக தான் அன்னைக்கே சொன்னேன்.. சேர்மன் எலக்சன்ல நில்லுன்னு.. இப்ப பாரு இவன் சொல்றதெல்லாம் கேட்க வேண்டியதா போச்சு.." என்றாள் சபிதா.

உடனே தன் எண்ணம் ஈடேறாத கோபத்தில் சபிதாவின் கையை தள்ளி விட்டு இரண்டு கரங்களையும் உதறினான். கோபத்தில் ஷார்ட் காலரை பின்னங் கழுத்து வழியாக பின்னால் இழுத்து விட்டவன், "சரி அந்த குப்பையை கொண்டுவந்து போட சொல்லு.." என்றான். கிஷோரும் கோபத்தில் நெஞ்சம் புடைக்க முறைத்துக் கொண்டிருந்த இஷிதாவை பார்த்து போனை எடுத்து வருமாறு கூற, முகத்தை திருப்பிக்கொண்டு மார்பின் குறுக்கே கையை கட்டியவள் திலீப்பை பார்த்துக்கொண்டிருந்தாள்.
தாராவோ வேகமாக ஓடிச்சென்று எடுத்து வந்தாள். அவளுக்கோ பிரச்சினைகள் முடிந்தால் போதும் என்றிருந்தது.. அந்த டெஸ்கின் மீது விபத்தில் சிக்கி கைகால் தனியே சென்றது போல வயர்களாக சிதறியிருந்தது. திலீப் தாராவை பார்க்க, அவளோ ஒன்றும் புரியாமல் திருதிருவென முழிக்க, வினித் தான் "தக்காளி..உன்னோடதையும் கேட்கிறான்.." என்றான். தக்காளி என்றுரைத்ததை கூட கவனிக்காமல் அமைதியாய் எடுத்து வைத்தாள்.

திலீப் தனது பேக்கினை எடுத்து டெஸ்கில் வைத்துவிட்டு குட்டி குட்டி ஸ்க்ரூ ட்ரைவர் தொடங்கி பல உபகரணங்கள் கொண்ட பெட்டியை வெளியே எடுத்தான். அதிலே அமர்ந்து ரிப்பேர் செய்தான். தாராவின் போனிற்கு இரண்டொரு நிமிடங்களில் வேலைகளை முடித்திருந்தவன் அவளிடம் தந்தான். அடுத்ததாய் இஷிதாவின் போனை எடுக்க, அவளோ அவனை ஆச்சர்யத்தில் பார்த்துக்கொண்டிருந்தாள். அதையெல்லாம் சட்டை செய்யாது வேலைகளை முழுதாய் முடித்திருந்தான். டெம்பர் கிளாஸினை மட்டும் சரி செய்ய இயலாததால் பேக்கினுள் மற்றொரு பெட்டியினை எடுத்தான்.
அதில் பல வகையான கிளாஸ்கள் இருக்க, இஷியை பார்த்து "எந்த மாடல்??" என கேட்டான்.
"ஹானர் 9ஐ.."என்றாள். கோபத்தில் அவனது போனை எடுத்து அவளை முறைத்துக் கொண்டே சட்டென போனில் இருந்த டெம்பர் கிளாஸினை பிரித்து மாட்டினான். இச்செயலை கண்டு இஷிதாவின் விழிகள் விரிந்தது. அவளின் முகத்தின் நேரே நீட்டியவன், "இதோட முடிச்சிது.. இனி என் முகத்துல கூட முழிக்கிற மாதிரி என் கண்ணு முன்னாடி வந்துடாத.."என எச்சரிக்கையாக கூறிவிட்டு வகுப்பை விட்டு வெளியேறினான்.
கைகளில் போனோடு அவன் சென்ற வழியை பார்த்துக்கொண்டே நின்றாள். நாளையே அவனது எச்சரிக்கை தவிடுபொடியாக்குவாள் என அறியாது...

பேதை மனம் அறிவானா???

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN