தலையில் கட்டுடன் அழைத்து வந்தான் ஆகாஷ். பங்கஜத்தை சந்திக்க வேண்டாம் என்று நினைத்தவனுக்கோ வேறு வழியில்லை ,ஆராதனாவை விட்டுட்டு போகத்தான் ஆகவேண்டும் எனவே அவளை அழைத்துக்கொண்டு வந்தான்.
வாசலில் நின்றிருந்த அன்பரசியோ பதபதைத்து "அக்கா என்ன ஆச்சு உனக்கு இப்படி காயம்" என்றாள்.
"ஒன்றுமில்லை டி ஜஸ்ட் சின்ன ஆக்ஸிடன்ட் தான் விடு கவலைபடாத" என்று கூறிக்கொண்டு உள்ளே நுழைந்தாள். அவனும் வாசலில் விட்டுவிட்டு பங்கஜத்தை சந்திக்க உள்ளே சென்றான்.
"என்னடா திடிருனு சென்னை வந்துருக்க என்ன விஷயம் உள்ள வா"
"ஒன்றுமில்லை சித்தி சும்மா தான் வந்தேன். தற்செயலாக நம்ப பரிமளம் ஆண்டி பொண்ணு அடிபட்டு கிடந்தா அதான் அவளை அழைச்சிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து நேரா வீட்டுக்கு வரேன் என்றதும்.
"ஏதோ நல்ல நேரம் அவளுக்கு அடிபட்டதை நீ பார்த்து தூக்கிட்டு போனியே அதுவரை பரவாயில்லை இல்லைனா அவள் நிலை" என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க அவனோ ஒருவழியாக சமாளித்து பிறகு அன்று ஒருநாள்.. தங்கிவிட்டு ஊருக்கு புரப்பட்டான். ஊருக்கு சென்றதும் அவன் நினைவுகள் எல்லாம் ஆராதனாவை சுற்றியே இருந்தது. வீட்டில் எப்படியாவது பேசிபுரியவைக்க வேண்டும், என நினைத்து தன் தாயிடம் மறுமுறை பேச வந்தான்.
தாயோ அடுப்பறையை சுத்தம் செய்துகொண்டு இருக்க அவர் அருகில் சென்றவன்.
"அம்மா..." என்றழைத்தான். அவனது அழைப்பில் நிமிர்ந்து பார்த்துவிட்டு
"என்னடா ஆகாஷ் காபி எதாவது வேணுமா" என்றார்.
"இல்லை மா. உங்கள் கிட்ட கொஞ்சம் பேசணும்"என்றான் தலை குனிந்தபடி.
"அதான் தெரியுதே நீ இப்படி முகத்தை வாட்டமா வச்சிக்கிட்டு கேக்கும்போதே . ஆராதனா விஷயமா தானே பேச வந்துருக்க..அதான் ஒத்துவராது சொல்லிட்டேன் அப்றம் ஏன் மறுபடியும் அதை பத்தியே பேசுறனு எனக்கு புரியலையே.."
"சரிமா..உங்களுக்கு அவள் கிட்ட பிடிக்காத விஷயம் என்ன? எந்த காரணத்துக்காக அவளை வேண்டாம்னு சொல்றீங்க"என்று விரைந்து கேள்வியை கேட்டான் தாயின் உண்மையான காரணத்தை அறிந்து கொள்ள..
"டேய் நோக்கு ஏன் புரியமாட்டேங்குது, அவா கேஸ்ட் வேற டா அதுமட்டுமின்றி மீன் வியாபாரம் பண்றா...ச்சு இதையெல்லாம் நம்ப ஆத்து மனுஷால் ஒத்துப்பாங்கனு நினைக்கிறியோ" என்றார் வெடுக்கென்று பதிலளித்து.
"அப்போ கேஸ்ட் தான் முக்கியம் அதானே"?
"ஆமாம் . உண்மையை சொல்லனும்னா அதுமட்டும் தான் காரணம்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர எத்தனிக்கும் போது.
"மா...ஒருநிமிஷம்" என்று குறுக்கிட அவன் என்ன சொல்ல போகிறான் என்பதை கூர்ந்து கவனித்தார் தாய்.
"ஒருவேளை நமக்கு மருத்துவம் பாக்குற டாக்டர் வேற கேஸ்ட் அப்படினா மருத்துவமே செய்துக்க மாட்டோமோ? இல்லை நம்ப வீட்டு வேலைக்கார அம்மா நம்ப வீட்டு எச்சில் தட்டு கழுவுறப்ப முகம் சுளித்தால் என்ன செய்வேல்.? எல்லா சங்கடத்தையும் தாண்டி தானே வாழ்க்கை? மனிஷாலுக்கு மனிஷால் உதவி தானேமா இதில எங்க ஜாதி எல்லாம் வருது" என்று உணர்வுபூர்வமான கருத்தை வெளிப்படுத்த அதை கேட்ட அவனுடைய தாயிற்கு மனது பாரமானது.
"சாரி ஆகாஷ். முட்டாள் தனமா காரணம் காட்டி உன் காதலுக்கு நானே முட்டுகட்ட போட்டுட்டேன். இதுக்கு தீர்வு நானே தரேன்" என்றவுடன்..
"அம்மா என்ன சொல்ல வரீங்க" என்றான் உணர்வுகளை வெளிக்காட்டியபடி.
"ஆமாம் டா அடுத்த மாசமே உனக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு இருக்கேன். இனி தாமதமே வேண்டாம். பங்கஜத்தை விட்டு எல்லாம் பேசசொல்லிடுறன்" என்று கூற அவனுக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வது என்றே புரியவில்லை. தன்நிலை மறந்தவனாக தனி உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
......
ஆர்யா தன்னிடம் கூறிய காதல் விவகாரத்தை ரோஜாவிடம் கூறிவிடலாம் என முடிவுக்கு வந்தாள் கலை.உடனே ரோஜாவிடம் நேரடியாக சொல்ல சங்கடமாக இருந்ததால் அழைப்பேசியில் இதனை தெரிவித்தாள். அதைக்கேட்டு அடுத்த நொடி ரோஜாவின் மனது என்னவோ போல் ஆயிற்று. கொஞ்சம் கூட அவள் இதை எதிர்பார்த்திருக்கவில்லை...
"கலை விளையாடாத டி உண்மையை தான் சொல்றியா" என்றாள் ரோஜா.
"ச்சு என்மேல நம்பிக்கையே இல்லையா டி. நான் இவ்வளவு நாள் என்னை தான் விரும்புறான், அதான் என்கிட்ட பேச நெருங்கினான் நினைச்சன் ஆனால் அப்றமால தெரியுது அவன் உன்னை லவ் பண்ணதான் என்கிட்ட பேசவந்துருக்கானு" என்றாள் மூணவியபடி
"ஏய் இப்ப,அவன் உன்னை லவ் பண்ணல அப்படிங்கிறது தான் பிரச்சனையா. நானே டென்ஷன்ல இருக்கேன். இது என்னடி புது தலைவலி. இங்கே பாரு உனக்கே தெரியும் என்நிலைமை நானே தம்பி தங்கச்சியை படிக்க வைக்கனும்னு நாய் மாதிரி உழைக்கிறேன். காதலுக்கு எல்லாம் நேரமோ இல்லை அதை பற்றி சிந்திக்க கூட வேண்டாமேனு நினைக்கிறன்...இவன் வேற"
"விடு ரோஜு பாத்துக்கலாம்" என்று சொல்லி அவளை சமாதானம் செய்து போனை வைத்துவிட்டு ,ஓவென்று கதறி அழுதாள். ஆசைப்பட்ட எனக்கு அவன் கிடைக்க மாட்டான் ஆனால் துளிகூட விருப்பம் இல்லாதவளுக்கு உருகி உருகி லவ் பண்றான். சை இது என்ன வாழ்க்கையோ , எனக்கு ரோஜா மேல எந்த வருத்தமும் இல்லை ஆனால் தோத்துபோயிட்டன் முதல்தடவையாக என்று தனக்கு தானே வெதும்பிக்கொண்டு அறையில் புகுந்துகொண்டாள்.
தொடரும்

Author: Bhagya sivakumar
Article Title: மாற்றம் -9
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.