மாயம் 13

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன்
வருகைக்காக
என் விழிகள்
பூத்துக்கிடக்க
நீயோ
நாட்கள் கடத்தி
என் காதலை
சோதிப்பதேன்????

மறுநாள் காலை ரிஷி அவனது தந்தை மற்றும் தமையனுடன் உணவருந்திக்கொண்டிருந்தான்... அவர்களுக்கு வேலைக்காரர்கள் உணவு மேசையின் மீது அடுக்கிவிட்டு சென்றிருந்த உணவினை பரிமாறிக்கொண்டிருந்தார் ரிஷியின் அன்னை சுபா...

வழமை போல் உரையாடிக்கொண்டே அன்னையின் கைப்பக்குவத்தை ருசித்துக்கொண்டிருந்தனர் அவரது சீமந்த புத்திரர்கள்...
அப்போது சுபா
“ரிஷி வரும் ஞாயிற்றுக்கிழமை நீ ப்ரீயா..??”

“என்னமா திடீர்னு கேட்குறீங்க?? எங்காவது போக வேண்டுமா??”

“இல்லை ரிஷி.... நம்ம ஹரியையும் அவன் மனைவியையும் லன்சிற்கு இன்வைட் பண்ணலாம்னு யோசிச்சிருந்தேன்... மற்றைய நாட்கள் என்றால் நீங்க மூன்று பேரும் இருக்க மாட்டீங்க... அதான் சண்டே இன்வைட் பண்ணலாம்னு யோசிச்சேன்....”

“அது சரிமா... ஆனா ஹரி ப்ரீயா இருக்கனுமே....??”

“நான் ஹரி அம்மாகிட்ட பேசிட்டேன் பா.... அவங்களுக்கு ஓகேனு தான் சொன்னாங்க... ஹரியையும் அவன் மனைவியையும் அனுப்பி வைக்கிறதா சொன்னாங்க... அதான் உன்கிட்ட கேட்டேன்...”

“எல்லாம் சரி தான் மா... ஆனா வேறு ஒருத்தவங்களோட லன்சில் ஜாயின் பண்ணுறதா பிராமஸ் பண்ணியிருக்கேன் மா...ஏன் நம்ம ரித்வியும் தான் என் கூட வாரான்...” என்று ரித்வியை பார்க்க அவனோ ரிஷி கூறுவது புரியாது முழித்தான்...

அவனது பார்வையிலேயே அவனுக்கு இன்னும் செய்தி பகிரப்படவில்லை என்பதை உணர்ந்த ரிஷி
“ரித்வி ஶ்ரீ பேசுனாளா??”

“இல்லை அண்ணா...”

“ஓஹோ... இன்னைக்கு பேசுவானு நினைக்கின்றேன்...”

“ரித்வி யாரு ஶ்ரீ....?? இந்த பெயரை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே..??” என்று சுபா வினவ

“அம்மா ஆதேஷ் கல்யாணத்தப்போ என்னோட காலேஜ் ஜூனியர்னு ஒரு பொண்ணு உங்க கூட வந்து பேசினா??? அந்த பெண்ணுதான்....” என்று பதிலளித்தான் ரித்வி...

“யாரு ஶ்ரீதான்யாவையா சொல்லுற?? அவளை எப்படி உனக்கு தெரியும் ரிஷி?? நீ தான் ஆதேஷ் கல்யாணத்திற்கு வரவில்லையே” என்று கேட்க

“ரித்வி தான் மா இன்டர்டியூஸ் பண்ணான்... அப்புறம் ஹரியோட கல்யாணத்தில ப்ரண்ஸாகிட்டோம்... ஹரியோட வைப் சிஸ்டர் மா ஶ்ரீ...”

“ஓ.... அப்போ ஶ்ரீயையும் அன்னைக்கு நம்ம வீட்டுக்கு லன்சிற்கு இன்வைட் பண்ணு... ஹோட்டலில் சாப்பிடுவதற்கு பதிலாக இங்கே சாப்பிடுங்க...”

“ஆனா அம்மா... ஶ்ரீயோட பிரண்ட்சும் வராங்க அம்மா... அதனால் இங்க சரிப்படாது மா... உங்களுக்கு கஷ்டம்..” என்று ரிஷி மறுக்க சுபாவோ

“அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை.. நீ அவங்க எல்லோரையும் லன்சுக்கு நம்ம வீட்டுக்கு இன்வைட் பண்ணு... நான் ஹரியையும் அவன் மனைவியையும் இன்வைட் பண்ணுறேன்... நீ ஶ்ரீக்கு இப்படி ஹரியை இன்வைட் பண்ணுவதை சொல்லதே.... நாம ஒரு சின்ன சப்ரைஸ் கொடுக்கலாம்...”

“ஶ்ரீக்கே சப்ரைஸா... சூப்பர் மா.. நான் சொல்லவில்லை உங்க கடைக்குட்டி சிங்கத்திடம் உளறிட வேண்டாம்னு சொல்லுங்க... அவன் தான் தங்கச்சி தங்கச்சினு சுத்திட்டு திரியிறான்...” என்று ரித்வியை வம்படிக்க

“ஏன் அண்ணா... நான் பாட்டுக்கு சிவனேனு தானே இருக்கேன்... என்னை எதுக்கு அம்மாகிட்ட கோர்த்து விடுறீங்க...??? என்னவோ நீங்க பிளான் பண்ணுன எல்லா சப்ரைசையும் நான் கொடுத்துவிட்ட மாதிரி கோர்த்து விடுறீங்க.... அம்மா இந்த அண்ணா சும்மா என்னை கோர்த்து விடுறாரு அம்மா... அவரு சொல்லுற மாதிரி எல்லாம் ஒன்றும் இல்லை.. நான் உங்க பிள்ளை மா அப்படி எல்லாம் செய்வேனா??” என்று தன் தாயிடம் வசனம் பேச அவனை சந்தேகமாக பார்த்த சுபா

“ரிஷி சொல்வதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான் ரித்வி . உன்னை நம்பமுடியவில்லை... உன்னை பற்றி எனக்கு தெரியாதா ராஜா...???”

“அம்மா நீங்களுமா??? ஓ மை காட்... ரித்வி உனக்கு வந்த சோதனையை பார்த்தியா?? உன் அம்மாவே உன்னை சந்தேகப்படுறாங்க.. உன்னை நம்ப யாருமே இல்லையா..?? அப்பா நீங்களுமா??” என்று அதுவரை நேரமும் அமைதியாய் இருந்தவரை துணைக்கழைக்க

“ரித்வி உங்க அம்மா எப்போதும் உண்மையை தான் சொல்லுவாங்க பா...அதனால...” என்று முடிக்க முயன்றவரை

“போதும் பா.... இதுக்கு மேல என்னால் அசிங்கப்பட முடியாது... சப்போர்ட் பண்ணுவீங்கனு பார்த்தா அம்மாவுக்கு ஜால்ரா தட்டுறீங்களா??”

“ என்னோட சேப்டியை நான் உறுதிப்படுத்திக்கனும் ரித்வி...... உனக்காக பார்க்கப்போய் நானே வம்பில் சிக்கிக்கொள்ள முடியுமா??” என்று ரித்வியை மூர்த்தி வார

“என்னப்பா உங்க பொண்டாட்டிக்கு இப்படி பயப்படுறீங்க.... எனக்கு ஒரு சந்தேகம்.... கல்யாணம் ஆன எல்லோரும் இப்படிதானா இல்லை நீங்க மட்டும் இப்படியா??” என்று தன் நெடுநாள் சந்தேகத்தை ரித்வி கேட்க அதற்கு ரிஷியோ

“ரித்வி பொண்டாட்டிக்கு கூஜா தூக்காதவன் ராஜாவா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைடா.... என்னப்பா??”

“அதாவது நீங்களும் என்னோட வருங்கால அண்ணியாருக்காக இப்படி தான் அந்தர் பல்டி, ஆகாச பல்டி எல்லாம் அடிக்கப்போறீங்க???”

“யேஸ் ஓப் கோஸ்... அதில் என்ன டவுட்டு உனக்கு?? என்ற ரிஷியின் பதிலில் சுபா மற்றும் மூர்த்தி ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக்கொண்டனர்..

“நல்லா வருவீங்க எல்லாரும்...” என்று அந்த காலை நேர உணவு வேளை அழகாக கழிந்தது...
அங்கு ஶ்ரீயின் ஆபிசில் ஶ்ரீயை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள் ஹேமா.. நேற்று போல் இன்றும் சோர்வாக வருவாளோ என்று ஹேமா அவளது சீட்டில் அமர்ந்தவாறு காத்திருக்க வழமையான துள்ளலுடன் வந்து சேர்ந்தாள் ஶ்ரீ.. அவளை முகத்தை ஆராய்ந்த ஹேமாவிற்கு ஶ்ரீயின் முகத்தில் தெரிந்த தெளிவு அவளிற்கு வேண்டிய பதிலை தந்துவிட அதில் நிம்மதியுற்றவள் ஶ்ரீயை சீண்ட தயாரானாள்...

“வாங்க மேடம்... எங்க உங்க வயலினை காணவில்லை??”

“ஏய் ஹேமா நல்லா தானே இருந்த.... திடீர்னு என்னானது உனக்கு?? மண்டையில ஏதும் அடிப்பட்டிருச்சா?? வா டாக்டரை பார்த்துட்டு வரலாம்.... ட்ரீட்மண்ட் எடுத்தா எல்லாம் சரியா போய்விடும்...”

“மன்னிச்சுக்கோ தாயே...உன்னை கலாய்க்கனும்னு நினைத்தது தப்பு தான்.... இனிமே இப்படி பண்ணா என்னை செருப்பாலேயே அடி...”

“ஓகே .... பட் செருப்பு வாங்க காசு நீ தான் தரணும்.. பிகோஸ் யூ நோ வை நீ ஒருநாளைக்கு குறைந்தது பத்து தடவையாவது என்னை கலாய்க்கனும்னு முயற்சி பண்ணுவ.... ஒவ்வொரு தடவையும் உன்னை அடிக்க எனக்கு புது செருப்பு வாங்க முடியாது... அதுனால நீ பைசா குடுப்பியாம்... நான் புது செருப்பு வாங்கி உன்னை அடிப்பேனாம்...” என்ற ஶ்ரீயின் பதிலில் என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்ற குழப்பத்தில் ஹேமா நிற்க

“என்னமா.... இப்பவே கண்ணை கட்டுதா???”

“ஏன் ஶ்ரீ இப்படி?? நீ இப்ப தான் இப்படியா இல்லை பிறந்ததிலிருந்தே இப்படியா??” என்ற ஹேமாவின் கேள்விக்கு பதிலளிக்க முயன்ற ஶ்ரீயை தடுத்தது அலைபேசி அழைப்பு... யாரென்று எடுத்து பார்த்த ஶ்ரீ திரையில் விழுந்த ரிஷி சார் என்ற பெயரை கண்டவள் விரைந்து அந்த அழைப்பை எடுத்தாள்...

“ஹலோ சார்... குட்மானிங்... என்ன திடீர்னு?? ஏதாவது பிராப்ளமா???”

“ஹாய் ஶ்ரீ குட்மானிங்.... ஏன்மா நான் கால் பண்ணா பிராப்ளம்னு அர்த்தமா???”

“ஹாஹா அதெல்லாம் இல்லை சார்.... உங்களை போய் நான் பிராப்ளம்னு சொல்லுவேனா???”

“உன்னை நம்ப முடியாது ஶ்ரீ... நீ அப்படி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...”

“அப்படியா சொல்லுறீங்க....சரி உங்க ஆசையை ஏன் கெடுப்பான்.. அப்போ இனிமே நீங்க தான் மிஸ்டர். பிராப்ளம்... ஓகேவா சார்...”

“ஏன் ஶ்ரீ ஒரு பேச்சுக்கு சொன்னா அதை ஏன்மா இவ்வளவு பில்ட்அப் பண்ணுற??? சரி விஷயத்துக்கு வர்றேன்.. லன்ச் எங்கனு பிளான் பண்ணிட்டீங்களா???”

“இன்னும் இல்லை சார்... நான் இன்னைக்கு ஈவினிங் கன்போர்ம் பண்ணுறேன் சார்...”

“ஶ்ரீ அதில் ஒரு சின்ன சேன்ஜ்...”

“என்ன சார்??”

“நான் எங்க வீட்டிற்கு உங்கள லன்சிற்கு இன்வைட் பண்ணலாம்னு நினைக்கிறேன்...”

“உங்க வீட்டிலயா சார்???”

“ஏன்மா...வீட்டுலனு தானே சொன்னேன்... என்னமோ காட்டுலனு சொன்ன மாதிரி இப்படி ஒரு ரியாக்ஷன் குடுக்குற???”

“இல்லை சார்.. திடீர்னு வீட்டுலனு சொன்னீங்களே அதான்.... எனக்கு நோ பிராப்ளம்..”

“நீ மட்டும் இல்லை ஶ்ரீ... உன்னோட ப்ரண்சையும் கூட்டிட்டு வரனும்... முக்கியமா ஹேமாவை.....

“சார் உங்களுக்கு எப்படி..?”

“ஹாஹா எனக்கு ஆல்ரெடி தெரியும் ஶ்ரீ... எனக்கு தெரியும்னு ரித்விக்கு தெரியாது.... நாளைக்கும் அவங்க இரண்டு பேரோடும் விளையாடலாம்னு இருக்கேன்... நீயும் அதுக்கு கொஞ்சம் கோப்பரேட் பண்ணனும்...”

“அதுக்கு என்ன சார்..?? தரமா செஞ்சிரலாம்...”

“அப்புறம் ஶ்ரீ இது அம்மாவோட ட்ரீட்... உனக்கென்று ஸ்பெஷலா ஒரு சப்ரைசும் ரெடி பண்ணியிருக்காங்க... அதனால நீயும் உன் ப்ரண்ஸ்சும் கட்டாயம் கம்மிங் சன்டே
எங்க வீட்டுக்கு வரணும்... நான் அட்ரஸை உனக்கு டெக்ஸ்ட் பண்ணுறேன்....”

“ஓகே சார் .... நாங்க கட்டாயம் வருகின்றோம்..... இதுங்களை இழுத்துக்கொண்டு வருவது என்னுடைய பொறுப்பு....”

“தாங்கியூ ஶ்ரீ... ஓகே.. வச்சிடுறேன்...பாய்... டேக் கேயார்...”

“பாய் சார்...” என்று விட்டு அழைப்பை துண்டித்தவள் தன்னையே பார்த்திருந்த ஹேமாவிடம் ரிஷி லன்சிற்கு அவனது வீட்டிற்கு அழைத்ததை கூறினாள்...

“நாங்களும் கட்டாயம் வர வேண்டுமா ஶ்ரீ....??”

“ஏன் வருவதில் உனக்கு என்ன பிரச்சனை???”

“இல்லை ஶ்ரீ... அது வந்து ...” என்று ஹேமா இழுக்க

“ஒன்னும் வரவும் இல்லை போகவும் இல்லை... நீ கட்டாயம் வருகிறாய்... இல்லைனா ராஜூ அண்ணாகிட்ட போட்டு குடுத்திடுவேன் பார்த்துக்கோ....”

“சரி வருகிறேன்... ஆனாலும்..”

“அண்ணியாரே.. கல்யாணத்துக்கு முன்னுக்கு உங்க மாமியாரை கரெக்ட் பண்ண சான்ஸ் கிடைத்திருக்கு... அதை பயன்படுத்திக்க ஏதாவது உருப்படியாக யோசிக்காமல் வந்துட்டு போயிட்டுனு இழுத்துட்டு இருக்க.... போ போய் எப்படி மாமியார் மாமனாரை கரெக்ட் பண்ணலாம்னு யோசி...”

“ அதெல்லாம் நான் ஏன் யோசிக்கனும்?? அதுதான் நாத்தனார் நீ இருக்கியே..?? நீ எனக்கு கரெக்ட் பண்ணி தரமாட்ட??”

“ஓ அண்ணியாருக்கு அந்த எண்ணம் வேறு இருக்கோ... நடையை கட்டுங்க அண்ணியாரே... நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை..”

“பார்டா .. சரி இப்போ நடையை கட்டுறேன்.... இன்னொரு நாள் பார்த்துக்கிறேன்...” என்றுவிட்டு தன் வேலையை கவனிக்க தொடங்கினாள் ஹேமா...
அவளை பார்த்து சிரித்துவிட்டு ஶ்ரீயும் தன் வேலையை கவனிக்க சென்றாள்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN