ஹாய் நட்பூஸ்...
இதோ உன்னாலே உனதானேன் கதையை ஆரம்பிக்கப்போறேன்...
இக்கதையிற்கு தங்களது ஆதரவு கிடைக்குமென்று நம்புகின்றேன்
இன்னைக்கு ஒரு குட்டி டீசர் மட்டும் போடுறேன்... நாளையில் இருந்து தினமும் உங்களை பார்க்க நம்ம ஹீரோ கவினயனும் ஹீரோயின் ரேஷ்மிகாவும் வருவாங்க
படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க மக்களே...
டீசர்...
“ ரேஷ்மி இன்னும் எவ்வளவு நேரம் ரெடியாக போற?? நீ கிளம்பி வர்றதுக்குள்ள அங்க தாலி கட்டி முடிச்சிருவாங்க போல....” என்று தன் மனையாளை கிளப்பிக்கொண்டிருந்தான் கவினயன்.
“இந்தா வந்துட்டேன் வினய்... தலைக்கு பூ வச்சிட்டு வர்றதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு??? ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணமாட்டீங்களா??” என்று தன் கணவனை சாடியவாறு ரூமை விட்டு வெளியே வந்தாள் ரேஷ்மிகா..
“உனக்காக வாழ்க்கை முழுசுக்கும் வெயிட் பண்ண நான் ரெடி.. ஆனா அங்க கல்யாண வீட்டுல சரியா முகூர்த்தத்தில ஐயர் கெட்டிமேளம் சொல்லிருவாறு.. அப்புறம் கல்யாணத்தை பார்க்காம நேரா பந்திக்கு தான் போகனும்.. அப்புறம் உன் மாமியார் பாடுற சஷ்டி கவசத்தை நீ தான் கேட்கனும் சொல்லிட்டேன்...” என்று தன் அன்னை வீரலட்சுமியை சமயத்தில் நியாபகப்படுத்தினான் வினய்..
“ஐயோ.. இப்போ ஏன் நீங்க அத்தையை சும்மா ஞாபகப்படுத்துறீங்க... அப்புறம் என்ன சொன்னீங்க ஆயுசு முழுவதும் வெயிட் பண்ணுவீங்களா??? ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண முடியல..... இவரு ஆயுசு முழுதும் வெயிட் பண்ண போறாராம்... வேறு கதையை பேசுங்க.. மிஸ்டர் கவினயன்..” என்று தன் கணவனை ரேஷ்மி சீண்ட
“யாருகிட்ட எதைப்பற்றி பேசுற?? உனக்காக மூணு வருஷம் வெயிட் பண்ணி வீட்டுல உள்ளவங்களை கரெக்ட் பண்ணி நம்ம கல்யாணத்தை நடத்தியிருக்கேன்... அது மட்டுமா இப்பவரைக்கும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்று இருபொருள்பட கூறினான் வினய். அவனது பேச்சின் இருபொருளையும் அறிந்து கொண்ட ரேஷ்மி வழமைபோல் அமைதியாகிவிட அவளது மனநிலையை மாற்றும் பொருட்டு வினய்
“ஐயோ என்னோட வாயாடி பொண்டாட்டி சைலண்டாகிட்டா... இதை பார்க்க என் அத்தை மாமாவுக்கு கொடுத்து வைக்கலையே... இதை நான் என் வாயால சொன்னாலும் நம்ப மாட்டாங்களே.....என்ன செய்றதுனு தெரியலையே... ஆ.. வழி இருக்கு” என்றுவிட்டு தன் சட்டை பாக்கெட்டினுள் இருந்த ஐ 8 இனை வெளியில் எடுத்து வீடியோ ரெகோடரை ஆன் செய்தான்.....
**************************************************************************
குளியலறையில் இருந்து வந்தவள் தலையில் ஈரம் சொட்ட நிற்க அதை பார்த்தவனது கோபம் கரை கடந்தது...
“இப்போ என்ன நடந்ததுனு இந்த நேரத்துல குளிச்சிட்டு வந்து நிற்கிற??? என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியிது...?? நான் உன்னோட புருஷன் தானே... நான் தொட்டேனு இப்படி நேரம் காலம் பார்க்காமல் குளித்துவிட்டு வந்து நிற்குற?? நான் பண்ணது தப்பு தான் மன்னித்துக்கொள்.... உன்னோட அனுமதியை கேட்காமல் நான் அப்படி நடந்துக்கிட்டது தப்பு தான் மன்னித்துக்கொள்... இன்னும் எவ்வளவு நேரம் ஈரத்தோடு நிற்கப்போற... தலையை துவட்டு..” என்றுவிட்டு இன்னொரு துவாயை வாட்ரோப்பில் இருந்து எடுத்துவந்து அவளது தலையை துவட்டப்போக திடீரென துவாயை அவள் கையில் கொடுத்துவிட்டு தான் இருந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்....
அவனது திடீர் கோபத்தில் திகைத்து நின்ற ஷிமி அவனது செயலில் நடப்பது புரியாமல் கற்சிலையென நின்றாள்...
அவளுக்கு தெரிந்தவரையில் வினயிற்கு கோபமே வராது.... அதுவும் தன்னிடம் எப்போதும் காதல் பொங்கி வழியும் கண்களுடன் பேசுபவனுக்கு கோபத்திற்கு அர்த்தம் தெரியாது... அப்படியிருப்பவன் திடீரென்று கோபத்துடன் நடந்துக்கொள்ளவும் அதிர்ந்துவிட்டாள் ரேஷ்மி...
அதிர்ச்சியில் அவள் நின்ற இடத்திலிருந்து அசையாமல் இருக்க
“இன்னும் எவ்வளவு நேரம் ஈரத்தோடே நிற்கப்போற... தலையை துவட்டு...” என்று அவன் சத்தம் போட அதில் உணர்வு பெற்றவள் தலையை துவட்ட தொடங்கினாள்..
துவட்டியதும் உடையை மாற்றிவிட்டு தரையில் படுக்கை விரித்தவளை பார்த்த வினயின் கோபம் இன்னும் அதிகரித்தது...
“நீ என்ன தான் மனசில நினைத்திட்டு இருக்க... எதுக்கு என்னோட கோபத்தை அதிகப்படுத்துற மாதிரி நடந்துக்குற?? உனக்கு பிடிக்கலைனா நாலு வார்த்தை திட்டிரு. இப்படி எல்லாம் பண்ணாதா... எதுக்கு என்றும் இல்லாத வழக்கமாக இன்றைக்கு கீழே படுக்குற?? என்னை அவ்வளவு மட்டமா நினைத்துவிட்டாயா??? ஏன் ஷிமி இப்படி என்னை காயப்படுத்துற??”
“இல்லைங்க... அப்படிலாம் இல்லை... வீட்டுக்கு தூரமாகிட்டேன்... அதான் கீழ படுத்துக்க படுக்கையை விரித்தேன்..” என்ற ரேஷ்மியின் பதிலில் தன் தவறை உணர்ந்தான் வினய்...
அவள் மாதவிலக்கு வந்ததால் கீழே தான் படுப்பாள் என்று ஏற்கனவே வினயிற்கு தெரியும்... அப்படியிருக்கையில் அவளிடம் கோபப்பட்டது அவனுக்கு வருத்தத்தை அளித்தது... இது போன்ற சமயங்களில் அவள் மிகவும் பலவீனமாய் இருப்பாள் என்று அனுபவத்தால் அறிந்தவன்
“சாரி ஷிமி... நான் ஏதோ ஒரு டென்ஷனில் உன்கிட்ட சத்தம் போட்டுட்டேன்... தலையை நன்றாக துவட்டிட்டியா??உனக்கு ஏதாவது வேண்டுமா...???? நீ இன்னும் கொண்டு வந்த பாலை குடிக்கலையே... இந்தா இதை குடி” என்று வினய் அக்கறையுடன் மேஜையில் இருந்த பாலை எடுத்து அவளது கைகளில் திணிக்க அதில் கண் கலங்கினாள் ஷிமி...
இவ்வளவு நேரம் காய்ச்சி எடுத்தவன் தன் நிலை உணர்ந்ததும் மன்னிப்பு கேட்டது மட்டுமலாமல் தனக்கு ஏதும் தேவையா என்று அவன் கேட்டுவிட்டு தேவையை அறிந்து கொண்டு அவன் நடந்து கொண்ட விதம் அவளுள் ஒருவித நிம்மதியை ஏற்படுத்தியது..
“ஏன் ஷிமி..கண் கலங்குது... உனக்கு ரொம்ப வலிக்குதா??? நான் பெயின் கில்லர் எடுத்து தரவா??”
“இல்லை வினய் அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை... ஐயம் ஆல் ரைட்.. நீங்க படுங்க..” என்றுவிட்டு மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள் ரேஷ்மி...
அவளை பார்த்தவாறே அமர்ந்திருந்த வினய் அவள் உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டு அவள் அருகில் சென்றவன் அவள் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு
“சாரி ரேஷ்மி .. ஏதோ கோபத்துல உன்கிட்ட அப்படி நடந்துகிட்டேன்... நீ திடீர்னு குளிச்சிட்டு வந்து நின்றதும் நான் உன்னை தொட்டது பிடிக்காமல் தான் அப்படி செய்தியோனு தப்பா நினைத்து தான் உன்கிட்ட சண்டை போட்டேன்.. உன்னோட நிலைமை புரியாமல் உன்னை திட்டுனது தப்பு தான்.. உன் வினயை மன்னிச்சிரு ஷிமி... இனிமே இப்படி நடந்துக்கவே மாட்டேன்...” என்றவன் எழும்பி விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டான்..
*****************************************************************************
இவ்வாறு அந்த மோனநிலையை அனுபவித்தவாறு இருவரும் தம் நடையை தொடர என்றும் போல் அன்றும் அதனை தடை செய்தது வினயின் மொபைல்....
ரேஷ்மியை விட்டு விலகியவன் தன் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து
அதன் தலையீடு தந்த எரிச்சலில் யாரென்று பாராமல் போனை அட்டென்ட் செய்தவன்
“டேய் எங்க இருந்துடா எனக்குனே கிளம்பி வர்றீங்க....??? வீட்டுல இருந்தாலும் நிம்மதியா இருக்கவிட மாட்டேன்றீங்க.... வெளியில வந்தாலும் பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்கவிட மாட்டேன்றீங்க... ஏன்டா நான் சந்தோஷமா இருந்தா உங்களுக்கு மூக்கு வேர்த்திருமா??? எப்படிதா சரியாக அந்த டைமிற்கு கால் பண்ணிரீங்கோ...” என்று புலம்பியவனை பார்த்து சிரித்த ரேஷ்மியை முறைத்தான் வினய்...
அந்தப்புறம் பேசியதும்
“ஐயோ சாரி சார்... நான் என்னோட ப்ரண்டுனு நினைத்து தான் அப்படி ஹார்ஸ்ஸா பேசிட்டேன்.... ஐயம் ரியலி சாரி சார்....”
“.....”
“ஆமா சார்.... ஓகே சார்... ஐல் லெட்யூ நே சார்.... என்ட் வன்ஸ் எகெய்ன் ஐயம் ரியாலி சாரி சார்....”
“...”
“ஓகோ சார்.... பாய் டேக் கேயார்..” என்றுவிட்டு போனை அணைத்தவன் அருகில் நின்று வாயை மூடி சிரித்துகொண்டிருந்த ரேஷ்மியை முறைத்தான்.
அவளோ “யாரு வினய் அந்த ப்ரெண்டு....??? பாவம் நீங்க கத்துன கத்துல அவருக்கு ஸ்பீக்கர் அவுட்டாகிருக்கும்..” என்றுவிட்டு அவள் மீண்டும் சிரிக்க
“என்னை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்குல்ல???”
“வேற என்ன பண்ணுறது வினய்??? யாருனு தெரியாம காச்சு மூச்சுனு கத்திட்டு அப்புறம் ஐயோ சார் சாரி சார் தெரியாம பண்ணிட்டே சார்னு காலில் விழமுடியாத குறைக்கு போனில் கெஞ்சினா பார்க்கிற எனக்கு சிரிப்பு வராமல் வேற என்ன வருமாம்??” என்றுவிட்டு ரேஷ்மி மறுபடியும் சிரிக்க
“என்னம்மா பண்ணுறது??? நீயும் நானும் ஜாலியாக இருப்பது அந்த கடவுளுக்கு பொறுக்காது போல.... ஏதாவது ஒரு பிரச்சினையை அனுப்பிட்டே இருக்காரு...ஒன்னு போன்ல வருது... இல்லைனா குழந்தை ரூபத்தில் வருது.... நான் என்னம்மா பண்ணுறது??? என் கஷ்டம் எனக்கு தான் தெரியும்...” என்றவனை
“என்ன வினய் குழந்தையை பிரச்சனைனு சொல்லுறீங்க???அனு தனியாகவே இருந்து பழகிவிட்டதால நம்ம கூட ரொம்ப அட்டாச்டா இருக்கா.... குழந்தை அங்க போனதும் நமக்காக ஏங்கி போயிருவானு நான் கவலை பட்டுட்டு இருக்கேன்... நீங்க என்னவென்றால் இப்படி பேசுறீங்க வினய்??”
“அதென்னவோ உண்மை தான் ஷிமி.. எனக்கு கூட அனு போன பிறகு எப்படி இருக்கப்போறேனு தெரியலை...அனு நம்ம கூட கொஞ்ச நாள் தான் இருக்கா.. ஆனா எனக்கு காலையிலேயே அனுவை கொஞ்சிட்டு போனா தான் அன்றைய நாளே நல்லா இருக்க மாதிரி இருக்கும்....அதோடு......” என்று வினய் இழுக்க
“அதோடு...” என்று ரேஷ்மி எடுத்து கொடுக்க
“அனு தயவால் தான் அவளை கொஞ்சுகின்ற சாக்கில் உன்னையும் கொஞ்சுகின்ற சான்ஸ் கிடைக்குது...” என்றவன் ஷிமியை பார்த்து கண்ணடிக்க அதில் வெட்கம் அவளை கொள்வனவு செய்த போதிலும் அதனை சிரமப்பட்டு மறைத்தவள் அவனை முறைக்க முயன்று தோற்றாள்...
“ஏன் ஷிமி கஷ்டப்படுற அதான் வரலையே விட்டுரு....” என்றவனது காதை வலிக்காமல் திருகியவள்
“டேய் புருஷா உனக்கு கொழுப்பு ரொம்ப கூடிபோச்சு.... கவனிக்கிற விதத்தில் கவனித்தால் தான் எல்லாம் கன்ரோலுக்கு வரும் போல...”
“ஐயோ ஷிமி வலிக்குது மா... தெரியாமல் சொல்லிட்டேன்... நான் என்னமா பண்ணுறது?? இந்த வாய் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்குது... அதான் இப்படி..”
“முதல்ல அந்த வாய்க்கு ஒன்று கொடுக்கிறேன்..” என்றவளிடம் சீரியசாக
“என்ன கொடுப்ப ரேஷ்மி நச்சுனு ஒரு இச்சா???” வினய் கேட்க சுற்றும் முற்றும் ஏதோ தேடினாள் ரேஷ்மி...
அவளது எண்ணம் அறிந்தவன் விடு ஜூட் என்று ஓடத்தொடங்க அவனை துரத்தத்தொடங்கினாள் ரேஷ்மி...
உன்னாலே உனதானேன் 1

Last edited:
Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன்
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.