உன்னாலே உனதானேன் 1

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

“ ரேஷ்மி இன்னும் எவ்வளவு நேரம் ரெடியாக போற?? நீ கிளம்பி வர்றதுக்குள்ள அங்க தாலி கட்டி முடிச்சிருவாங்க போல....” என்று தன் மனையாளை கிளப்பிக்கொண்டிருந்தான் கவினயன்.

“இந்தா வந்துட்டேன் வினய்... தலைக்கு பூ வச்சிட்டு வர்றதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு??? ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணமாட்டீங்களா??” என்று தன் கணவனை சாடியவாறு ரூமை விட்டு வெளியே வந்தாள் ரேஷ்மிகா..

“உனக்காக வாழ்க்கை முழுசுக்கும் வெயிட் பண்ண நான் ரெடி.. ஆனா அங்க கல்யாண வீட்டுல சரியா முகூர்த்தத்தில ஐயர் கெட்டிமேளம் சொல்லிருவாறு.. அப்புறம் கல்யாணத்தை பார்க்காம நேரா பந்திக்கு தான் போகனும்.. அப்புறம் உன் மாமியார் பாடுற சஷ்டி கவசத்தை நீ தான் கேட்கனும் சொல்லிட்டேன்...” என்று தன் அன்னை வீரலட்சுமியை சமயத்தில் நியாபகப்படுத்தினான் வினய்..

“ஐயோ.. இப்போ ஏன் நீங்க அத்தையை சும்மா ஞாபகப்படுத்துறீங்க... அப்புறம் என்ன சொன்னீங்க ஆயுசு முழுவதும் வெயிட் பண்ணுவீங்களா??? ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண முடியல..... இவரு ஆயுசு முழுதும் வெயிட் பண்ண போறாராம்... வேறு கதையை பேசுங்க.. மிஸ்டர் கவினயன்..” என்று தன் கணவனை ரேஷ்மி சீண்ட

“யாருகிட்ட எதைப்பற்றி பேசுற?? உனக்காக மூணு வருஷம் வெயிட் பண்ணி வீட்டுல உள்ளவங்களை கரெக்ட் பண்ணி நம்ம கல்யாணத்தை நடத்தியிருக்கேன்... அது மட்டுமா இப்பவரைக்கும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்று இருபொருள்பட கூறினான் வினய். அவனது பேச்சின் இருபொருளையும் அறிந்து கொண்ட ரேஷ்மி வழமைபோல் அமைதியாகிவிட அவளது மனநிலையை மாற்றும் பொருட்டு வினய்

“ஐயோ என்னோட வாயாடி பொண்டாட்டி சைலண்டாகிட்டா... இதை பார்க்க என் அத்தை மாமாவுக்கு கொடுத்து வைக்கலையே... இதை நான் என் வாயால சொன்னாலும் நம்ப மாட்டாங்களே.....என்ன செய்றதுனு தெரியலையே... ஆ.. வழி இருக்கு” என்றுவிட்டு தன் சட்டை பாக்கெட்டினுள் இருந்த ஐ 8 இனை வெளியில் எடுத்து வீடியோ ரெகோடரை ஆன் செய்தான்.....

அவனது செயலில் கடுப்பான ரேஷ்மி
“ டேய் புருஷா... என்னை வாயாடினா சொல்லுற...” என்றவாறு தன் கையில் வைத்திருந்த வாலட்டினால் அவள் அவனை அடிக்க..

“ஓய் பொண்டாட்டி... நான் உன் புருஷன்டி... என்னையா வாடா போடானு சொல்லுற?..”

“ ஆமாண்டா புருஷா... உன்னை இதுமட்டும் இல்லை.. இதுக்கு மேலேயும் சொல்லுவேன்...வேணும்னா சொல்லுங்க டெமோ காட்டுறேன்...”

“அப்படியா மேடம்... அதையும் பார்த்திருவோம்.... எங்க இப்போ காட்டு பார்ப்போம்..” என்றவாறு அவள் கண்களை ஊடுருவியவாறே அவளை நோக்கி நகர, இதுவரை நேரம் வாயாடிக்கொண்டிருந்தவள் அவனது கண்களில் தோன்றிய திடீர் மாற்றத்தை கண்டவளுக்கு அவனது மாறுதல் தென்பட அவன் முன்வைத்த ஒவ்வொரு அடிக்கும் இவள் பின்வாங்கத்தொடங்கினாள்.

இவ்வாறு சுவர் அவர்கள் இருவரது நடையை தடை செய்ய தன் இருகைகளாலும் வேலியமைத்து அவளை சிறைப்படுத்தியவன் அவளது கண்களை தன் விழிகளால் சிறையெடுக்க முயற்சித்தான்... முயற்சியோடு நிறுத்தாது அடுத்த கட்டமாக அவள் அசையமுடியாது வேலியாய் நின்ற தன் இரு கைகளில் ஒன்றை எடுத்தவன் அதனை அவள் முகத்தருகே அவளது முன்னிச்சியில் ஆரம்பித்து அவளது இடது விழியின் முன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்த அந்த சிறு கூந்தல் கற்றைய ஒதுக்க சென்றவனை பார்த்து கட்டுப்பாட்டில் இல்லாது அவளது உணர்வுகள் கரைகடந்து ஓட அதில் பயந்தவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் ரேஷ்மி...

அதுவரை ஒரு மோகவலையில் சிக்கிய மீனாய் இருந்தவனுக்கு யதார்த்தம் உணர அவன் சிக்கியிருந்த வலையில் இருந்து தன்னை கணநேரத்தில் மீட்டவன் அவளை விட்டு விலகி அவளுக்கு பின்னால் சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கீ ஹோல்டரில் இருந்து சாவியை எடுத்துக கொண்டு வாசலிக்கு சென்றுவிட்டான்....

அதுவரை நேரம் அவளை மிரட்சியூட்டிய அவன் மூச்சுக்காற்று தன் உஷ்ணத்தை குறைத்துக்கொண்டு விலகுவது போல் உணர்ந்தவள் தன் கண்களை மெல்லத்திறக்க அங்கு வினய் இல்லை... அவனை வீட்டினுள் தேடியவளை தன் கார் ஹார்னினால் தான் வாசலில் காத்திருப்பதை தெரியப்படுத்தினான் வினய்...

அவனது விலகல் அவளுக்கு ஒருபுறம் நிம்மதியை கொடுத்த போதிலும் மனதின் ஓரத்தில் ஒருவலியை உண்டுபண்ணத்தான் செய்தது.... ஆனால் அதை ஆராய நேரம் ஒத்துழைக்காமையால் விரைந்து வீட்டுக்கதவை அடைத்துவிட்டு வாசலிற்கு வந்தாள் ரேஷ்மி...

அவள் வந்ததும் காரினுள் இருந்தவாறு கார்கதவை திறந்துவிட்டவன் அவள் ஏறி அமர்ந்து சீட் பெல்டை அணிந்துகொண்டதும் கார் வேகமெடுத்தது...
பயணம் ஆரம்பித்ததிலிருந்து சிடி பிளேயரில் ஓடிக்கொண்டிருந்த மெல்லிய பாடலை தவிர வேறு எந்த சத்தமோ சம்பாஷணையோ அந்த காரினுள் இடம்பெறவில்லை....
ரேஷ்மியின் அமைதி ஏதோ இருவருக்கும் இடையில் ஒரு இடைவெளியை உண்டுபண்ணுவதாக எண்ணிய வினய் அதை உடைத்தெறியும் பொருட்டு

“என்ன ஷிமி நல்லா தூங்குனியா?? என் பெஞ்சாதி இப்பல்லாம் அடிக்கடி தூங்குறாளே.... என்ன சமாச்சாரமா இருக்கும்??”

“நாம் எப்போ தூங்குனேன்??”

“என்ன ஷிமி இப்படி ஒரு கேள்வி கேட்டுட்ட??? இதுக்கு எப்படி நான் பதில் சொல்லுவேன்...??”

“உங்க வாயாலேயே சொல்லுங்க... நான் கேட்டுக்குறேன்...”

“என்ன ஒரு புத்திசாலித்தனம்... என் பொண்டாட்டி அறிவு வேற யாருக்கு இருக்கு??”

“அந்த அறிவு இருக்கப்போய்தான் உங்களுக்கு மனைவி இருக்க முடியுமா??”

“இதென்னா புதுசா இருக்கு???? நான் என்னமோ ஐக்யூ டெஸ்ட் வச்சு உன்னை பொண்டாட்டியா செலெக்ட் பண்ண மாதிரி சொல்லுற??”

“இல்லையா பின்ன... பொண்ணு பார்க்க வர்றது ஐக்யூ டெஸ்டை விட ரொம்ப சென்சிபலான டெஸ்ட்... அதுல பாஸ் பண்ணதால தானே உங்க மனைவியா இருக்கேன்... இல்லைனா இன்னேரம் அப்ரோட்ல மாஸ்டர்ஸ் செய்திட்டு இருப்பேன்...”என்று ஒரு வித சோகம் இழையோடிய குரலில் ரேஷ்மி கூற அது வினயிற்கு ஒரு புது செய்தியை கூறியது...

“ஹேய் ஷிமி நீ அப்ரோட் போக இருந்தியா??”

“ஆமா..யூ.எஸ் ல மாஸ்டர்க்கு அப்ளை பண்ணியிருந்தேன்...ஸ்கொலஷிப்பும் கிடைத்தது... ஆனா போக முடியலை....”

“ஏன் ஷிமி இப்படி ஒரு ஆப்பர்சினிட்டியை மிஸ் பண்ண??”

“எனக்கு வேறு ஆப்ஷன் இருக்கவில்லை... அந்த டைமில் தான் உங்களோட பிரபோசல் வந்தது... அம்மா அப்பா இரண்டு பேருக்கும் அவங்களுக்கு ஏதும் நடப்பதற்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணணும்னு ஆசைப்பட்டாங்க... ஆனால் அவங்க போஸ் பண்ணல...எனக்காவே வாழ்ந்த அவங்களோட ஆசையை என்னால் புறக்கணிக்க முடியலை... அதுனால தான் ஓகே சொன்னேன்...”

“ஓஹோ... சரி அப்போ உனக்கு கல்யாணம் ஆகியிருக்காட்டி என்ன பண்ணியிருப்ப???”

“அதான் சொன்னனே... மாஸ்டர்ஸ் செய்திட்டு இருப்பேன்னு....”

“அப்போ படிச்சிட்டு மட்டும் தான் இருப்பியா?? வேறு ஏதும் செய்திருக்க மாட்டியா?? வேறு ஏதும் பிளான் இருக்கலையா உன்கிட்ட??”

“இருந்தது..... கவுன்சிலிங் செய்யனுங்கிறது தான் என்னோட ட்ரீம்...”

“நீ சைக்கோலஜி ஸ்டூடன்ட்னு தெரியும்... பட் ஏன் அதை செலெக்ட் பண்ணனு தெரிஞ்சிக்கலாமா??”

“உடல் ரீதியாக உருவாகின்ற நோயை குணமாக்க டாக்டர்கள் இருக்காங்க... மனரீதியான நோயை குணப்படுத்த உளவியல் மருத்துவர்கள் இருக்காங்க.. ஆனா நோய் வந்த பிறகு தான் அதற்கான சிகிச்சை வழங்கப்படுது...பட் கவுன்சிலிங் என்பது இதற்கெல்லாம் முன்னைய நிலை.. இது மன ரீதியான சிக்கல்கள் மற்றும் பலவீனங்களை சரிப்படுத்த ஒரு வழி.... ஒருத்தவர் டிப்ரெஷன், கன்பியூஷனில் இருக்கும் போது அவங்களுக்கு ஒரு அன்நோன் கைடன்ஸ் கொடுப்போம்... என்னோட விஷ்ஷன் என்னனா இந்த ஸ்கில்சை கொண்டு க்ரைம் ரேட்டை குறைக்கனும்...”

“சரி ஷிமி.. பட் இதுக்கும் க்ரைமிற்கும் என்ற லின்க்??”

“இப்போ உள்ள கிருமினல்சை பார்த்தீங்கனா மோஸ்ட்லி ஏதோ ஒரு வகையில் மனதளவில் பாதிக்கப்பட்டவங்களா தான் இருக்காங்க... அதுக்காக அவங்க மனநிலை சரியில்லாதவங்கனு அர்த்தம் இல்லை... ஏதோ ஒரு விஷயம் அவங்க மனசை பாதிச்சிருக்கு ... அதன் விளைவாக அவங்களை க்ரைமில் இன்வால்வாக இன்சிஸ்ட் பண்ணியிருக்கு... அது சடுனா நடக்க சான்சஸ் கம்மி... அது ஒரு லோங் டைம் பிராசஸ்.. சோ நிச்சயம் அவங்களோட சிறுவயதில் தான் அதோட தாக்கம் இருந்திருக்கும்.... அதனால எனக்கு என்ன தோணிச்சினா ஸ்கூல்சில் கவுன்சிலிங் ஸ்டார்ட் பண்ணணனும்னு தோன்றியது... அதை டீசர்ஸ்கிட்ட இருந்து ஸ்டார்ட் பண்ணனும்...அவங்க தான் மோஸ்ட்லி ஸ்டூடன்சோட இருக்காங்க... ப்ரொப்பர் ட்ரெயினில் மூலம் அவங்களை அனலைசேஷனுக்கு ப்ரிப்பெயார் பண்ணனும்... அவங்களை ஒவ்வொரு ஸ்டூடன்டையும் கவனித்து பீட் பேக் எழுதித்தர சொல்லனும்....இந்த பிராசஸ் ஸ்டார்டப்பிற்கு மட்டும் தான்... அவங்களுக்கு இந்த ப்ராசஸ் சரியாக புரிந்தவுடன் அவங்களே ப்ராப்ளம் உள்ள ஸ்டூடன்சை செக்கங்னைஸ் பண்ணி எக்ஷ எங்களுக்கு இன்பார்ம் பண்ண சொல்லுவோம்.... அந்த ஸ்டூடன்சிற்கு நாங்க சரியான முறையில் கவுன்சிலிங் கொடுப்போம்...”

“வாவ் ஷிமி... சூப்பர் மா.... உன்னோட ட்ரீம் ரொம்ப டிபரன்ட்டா இருக்கு.. ஆனா இது எவ்வளவு தூரம் சக்சஸ் ஆகும்னு நினைக்கிற??? ஏன் கேட்கிறேனா இது வன் மேன் எக்ஷன் இல்லை... எல்லாரும் அவங்களோட புல் எப்பட்டையும் கொடுத்தா தான் நம்மால் சக்சீட் பண்ண முடியும்... சோ எல்லோரையும் இன்வால் பண்ணுறது அவ்வளவு ஈசியான விஷயம் இல்லை...அதான் கேட்குறேன்....”

“உண்மைதாங்க... இப்போ நான் சொன்னது இந்த பிளானுக்கான ஸ்கெட்சை... பட் இதை ஸ்பெஷலிஸ்ட்ஸ் ஹெல்போடு இன்னும் ரெனோவேட் பண்ணனும்...”

“ஓல் த பெஸ்ட் ஷிமி.. அன்ட் மை பெஸ்ட் விஷ்ஷஸ்மா..”

“ஹாஹா எதுக்குங்க இது... அதான் ட்ரீம்னு சொன்னேனே வினய்.... அப்புறம் எதுக்கு விஷ் பண்ணிக்கிட்டு...” என்று தன் துக்கத்தை மறைத்து மெல்லிய குரலில் கூற ரேஷ்மி கூற அவளது வருத்தம் அவனையும் பாதித்தது...

“ஏன் ஷிமி கட்டாயம் அப்ரோட போய் தான் மாஸ்டர்ஸ் செய்யனுமா?? இங்கேயே செய்ய முடியாதா???”

“செய்யலாம் பட் அப்ரோட் போனா நிறைய கண்டாக்ஸ் கிடைக்கும்... ஜஸ்ட் எடியூகேஷன்னா நான் இங்கேயே செய்திருப்பேன்... பட் இது இதையும் தாண்டியது.... இப்போ இந்த மாதிரி சர்வீசிற்கு யூ.எஸ்சில் சில ப்பெடரேஷன்ஸ் ஸ்பொன்சர் பண்றாங்க... அதோட அவங்களே வாலண்டியசை கம்பைல் பண்ணி இந்த மாதிரியான பிராசை எக்சிகியூட் பண்ண ஹெல்ப் பண்ணுறாங்க... அதான் யூ.எஸ் போகனும்னு யோசிச்சேன்....”

“ஓ ... சரி பட் நீ இந்த ஐடியாவை கிவ்வப் பண்ணாதா... சரியான ஆப்பர்சுனிட்டு கிடைக்கும் போது நீ இதை எக்சிகியூட் பண்ணலாம்....”

“கிடைத்தால் பார்ப்போம்...” என்றுவிட்டு அவள் கண்ணாடிக்கு வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள்....

இவ்வாறு சில நிமிடங்களின் பின் கல்யாண மண்டபத்தை அடைந்தனர் ரேஷ்மியும் வினய்யும்....

கல்யாண மண்டபத்திற்கு வந்திறங்கிய வினயையும் ரேஷ்மியையையும் வாசலில் நின்றிருந்த வினயின் சித்தி ரமாதேவி அவர்கள் இருவரையும் மண்டபத்தினுள் அழைத்து செல்ல அவர்கள் வருவதை பார்த்த வீரலட்சுமி வினய் அருகில் வந்து

“ஏன் கவின் இவ்வளவு நேரம்?? எப்போ புறப்பட்டதா சொன்ன??? புதுசா கல்யாணம் ஆனவங்க கட்டாயம் ஜோடியா கல்யாணத்தை பார்க்கனும்னு தான் முகூர்த்தம் ஆரம்பிக்கும் நேரத்துக்கே வர சொன்னேன்... நீங்க ரெண்டு பேரும் என்ன இப்படி ஆடி அசைந்து வர்றீங்க??”

“அம்மா ஒரு பத்து நிமிஷம் தானேமா லேட்டு...அதுக்கு ஏன்மா இப்படி...??”

“ஆரம்பத்துல இருந்து சடங்கை பார்க்கனும்னு சொன்னேன் தானேடா... இப்போ லேட்டா வந்துட்டு என்கிட்ட வாதாடிட்டு இருக்க???”

“வாதாடல மா... நாங்க டைமுக்கு வந்திருப்போம்...ஆனா டிராபிக்னு ஒரு சமாச்சாரம் நம்ம நாட்டுல இருக்கே.. அது எங்களை நகரவிட மாட்டேனு சொல்லிருச்சி... அதுகிட்ட உங்க பேரை சொன்னதும் தான் எங்களை நகர விட்டுச்சினா பார்த்துக்கோங்களே...” என்ற வினயின் விளக்கத்தில் கடுப்பான வீரலட்சுமி அவனை முறைக்க வினய்யோ

“அம்மா அங்க பாருங்க பெரியம்மா கூப்பிடுறாங்க..”என்று தன் தாயை திசை திருப்பிவிட்டு தன் மனைவியை அழைத்துச் சென்று அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து நடப்பவற்றை கவனிக்க தொடங்கினான் வினய். கவனித்ததோடு நில்லாது மணமேடையில் நடப்பவற்றை பற்றி தன் மனையாளுடன் விமர்சித்தப்படி இருந்தான்...

“ஷிமி நம்ம கல்யாணத்தப்போ என்னை என்னென்ன கலாட்டா பண்ணாங்க தெரியுமா?? உன்னை மணமேடைக்கு அழைச்சிட்டு வரும் போது உன்னை நான் சைட் அடிச்சிட்டு இருந்தேன்... அப்போ திடீர்னு கண்ணுல தூசு பட்டுருச்சி... அதுனால கண்ணு கலங்க அங்கே மேடையில நின்ற உதி அங்க பாரு அண்ணி வர்றத பார்த்து அண்ணாவுக்கு ஆனந்த கண்ணீரே வந்திருச்சு அப்படினு சொல்ல இந்த சுகன் அப்படியில்ல ஐயோ அண்ணியை நினைத்து அண்ணா மனசுல உருவான பயம் அண்ணா கண்ணுல தண்ணியா வெளிப்பட்டுருச்சினு சொல்லி கிண்டல் பண்ணான்... ஆனாலும் நான் அசருவேனா?? நானும் சேர்ந்து அதுங்களோட சிரிக்க உங்க அத்தை அதை பார்த்து முறைக்க ஒரே குதுகலம் தான் போ... அதெல்லாம் ஸ்வீட் மெமரிஸ் ஷிமி..”

“எது ஸ்வீட் மெமரிஸ்??? பப்ளிக்கா என்னை பார்த்து அநியாயத்திற்கு வழிந்து என்னை அவங்க கலாட்டா பண்ண களம் அமைத்து கொடுத்ததா??”

“என்னமோ உன்னை மட்டும் கலாட்டா பண்ண மாதிரி சொல்லுற??? உன்னை கூட பரவாயில்லை... என்னை அநியாயத்திற்கு கலாய்த்தாய்ங்க... ஆனாலும் நான் ஸ்டெடியா நிற்கலையா??”

“ஆ... நின்னீங்க... நின்னீங்க... உங்க ஸ்டெடினஸ்ஸை நாங்களும் தான் பார்த்தோமே..” என்று அன்றைய நாளின் நியாபகத்தில் ரேஷ்மி பேச

“ஷிமி நம்ம கல்யாணம் நடக்கும் போது உன்னோட மைன்ட் எப்படி இருந்தது?? நீ என்ன பீல் பண்ண??”

“ரொம்ப எரிச்சலா இருந்தது... ஏன்டா இப்படி படுத்துறாங்கனு இருந்தது..”

“ஏன் ஷிமி இப்படி சொல்லுற... உனக்கு கல்யாணத்துல விருப்பம் இருக்கலையா?? பிடிக்காம தான் வந்து மேடையில உட்கார்ந்தியா??”

“ஏங்க எப்பவும் நெகட்டிவ் சைடா தான் யோசிப்பீங்களா?? நான் என்ன சொல்ல வர்றேனு புரிஞ்சிக்காம நீங்க நான் சொன்னதை வேறு எதனோடோ லிங்க் பண்ணுறீங்க.. ஏங்க தெரியாம தான் கேட்குறேன்...கல்யாணத்துல இஷ்டம் இல்லாட்டி தான் எரிச்சலாக இருக்கனுமா?? வேற காரணங்கள் எரிச்சலூட்ட முடியாதா??” என்று கேட்க அவளது பதிலில் தன் கேள்வியின் விபரீதத்தை உணர்ந்தவன்

“சாரி ஷிமி.... நான் அந்த ஏங்கலில் இருந்து யோசிக்கலை.. உன் புருஷன் தத்தினு உனக்கு தெரியும்ல.. நீ தான் மண்டையில தட்டி டேய் கிறுக்கா இது தான் சரி அது தப்புனு சொல்லனும்... அதைவிட்டுட்டு இப்படி பொசுக்குனு கோவிச்சுக்கிட்டா எப்படி??

“நல்லா சமாளிக்கிறீங்க வினய்... எங்க இருந்து இதெல்லாம் கத்துகிட்டீங்க???”

“அதெல்லாம் சம்சாரியா பிரமோஷன் வாங்குனதும் தானா வருது... சரி இப்போ சொல்லு உனக்கு எதுக்கு எரிச்சலானது??”

“அதுவா காலையிலேயே பட்டினி போட்டுட்டாங்க... அதுக்கு பிறகு பட்டு சாரி, மேக்கப், ஜுவல்ஸ் அப்படினு ஒரு வெயிட்டை காவிக்கிட்டு அலைய வைத்தார்கள்... இது போதாதுனு ஐயர் வராத புகையை ஊப்பூ ஊப்பூனு ஊதி டாச்சர் பண்ணாரு.... இதை விட கொடுமை வர்றவங்க காலில் எல்லாம் விழவைத்தது... நீங்க தடார் தடார்னு விழுந்து கும்பிட்டடீங்க.. எனக்கு தான் வாழ்க்கையே வெறுத்து போயிருச்சி ..”

“ஹாஹா... இவ்வளவு கஷ்டப்பட்டியா?? இதை நான் கவனிக்கலையே...”

“எப்படி கவனிப்பீங்க?? உங்களுக்கு அந்த ஐயரோட வம்பளந்துட்டு இருக்கவே நேரம் சரியா இருந்தது... அதுல எப்படி என்னை கவனிப்பீங்க...”

“சாரி ஷிமி... எங்க அதுங்க மறுபடியும் கலாட்டா பண்ணுங்களோனு பயத்துல தான் உன்னை திரும்பி பார்க்கல... ஆனா நம்ம சேர்ந்து செய்த ஒவ்வொரு சடங்கையும் ரசிச்சிட்டு தான் இருந்தேன்... அதை ரசித்ததுல உன்னை ரசிக்க மறந்துட்டேன்... அது சரி உனக்கு எரிச்சலா இருந்துச்சினு சொன்னியே... அப்போ எப்படி நம்ம கல்யாணம் நடந்திருந்த உனக்கு ஹாப்பியா இருந்திருக்கும்...”

“ஐயோ நான் அதை மீன் பண்ணல வினய்... கொஞ்சம் அன் கம்பட்டபலா பீல் பண்ணேன்...அதோட நான் யூஸ்வலி அப்படி ஹெவி ஜூவல்ஸ் போட மாட்டேன்.... சேலை கூட அம்மா கூட சண்டை போட்டு காட்டன் தான் உடுத்துவேன்.. இப்படி பட்ட என்னை போய் ஒரு நாள் புல்லா அப்படி இருனு சொல்லவும் தான் கடுப்பாகிருச்சி.. ஆனா நாம செய்த சடங்கு எல்லாம் நான் பிரே பண்ணி முழுமனதோடு தான் செய்தேன்...கல்யாணங்கிறது வாழ்க்கையில் ஒருமுறை செய்றது... அதுவும் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும் அப்படீங்கிறதுக்காக நம்ம பேரண்ட்ஸ் இவ்வளவு சடங்கு செய்றாங்க... அதனால தான் நான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அமைதியாக எல்லா சடங்கையும் முழுமனதோடு செய்தேன்...”

“ஹாஹா... ஏன் ஷிமி இவ்வளவு டென்சன் ஆகுற??? உன்னோட எண்ணம் எனக்கு புரியிது... ஆனா நான் என்ன கேட்குறேனா நம்ம கல்யாணம் இப்படி நடந்திருந்தா நல்லா இருக்குமே அப்படி உனக்கு ஏதாவது தோன்றிருக்குமே...அதை பற்றி சொல்லு...அதான் என்னோட கேள்வி??”

“அதுக்கு முதல்ல நீங்க சொல்லுங்க வினய்...உங்களுக்கு அப்படி ஏதாவது பிளான் இருந்ததா??”

“எனக்கு ரிஜிஸ்டர் மேரஜ் பண்ணிக்க சொல்லியிருந்தா கூட நான் சந்தோஷமாக பண்ணியிருப்பேன்... எனக்கு நீ வேணும் அவ்வளவு தான்.. வேற எதுக்கும் நான் ஆசைப்படல... உன்னோட காதலை பெற்ற பிறகு தான் கல்யாணம் பண்ணும்னு இருந்தேன்...ஆனா அது தான் நடக்காம போயிருச்சு.... அதுனால என்ன இனிமே கதற கதற லவ் பண்ணிற வேண்டியது தான்...” என்ற வினயின் ஏக்கத்தில் ரேஷ்மியின் மனம் குற்றவுணர்ச்சியை தாங்கி நின்றது... திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிய பின்னும் தன்னிடம் காதல் யாசகம் வேண்டி நிற்கும் வினயிற்கு தான் என்ன செய்துவிட்டோம் என்று தோன்றியது...

முதலிரவன்று தான் கேட்ட கால அவகாசத்திற்காக இன்னும் வரை அமைதியாய் இருப்பதோடன்றி அவனது உணர்வுகள் எல்லை கடக்கும் போதெல்லாம் தன்னை அவன் தவிர்த்த விதமும் அவள் உணர்ந்து தான் இருந்தாள்... மாதவிடாய் காலத்தில் தான் அவதிப்பட்டதை பார்த்தவன் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டான்..... அவனது அந்த ஆறுதலான வார்த்தைகளும் தூங்க முடியாமல் தடுமாறும் வேளைகளில் அவன் வருடிக்கொடுத்து தூங்க உதவிய விதமும் அவளுக்கு தன் அன்னையின் அரவணைப்பை உணர்த்தியது..... என்ன தான் வார்த்தைக்கு வார்த்தை வம்படித்தாளும் அவன் தன் காதலை வெளிப்படுத்தும் வேளைகளில் அவளால் அமைதியைத் தவிர வேறேதையும் பதிலாக தர முடியவில்லை....

அவளது அமைதியை கூற பொறுக்க முடியாதது போல் அவன் தன் பேச்சை திசைத்திருப்பும் விதம் அவளது உணர்வுகளை அவன் மதிக்கின்றான் என்ற உணர்வையே அவளுள் ஏற்படுத்தியது.... கணவனாய் அல்லாது ஒரு அன்னையாய் தந்தையாய் நண்பனாய் அவனது அன்பு, உரிமை , கண்டிப்பு, கேலி என்பன வெளிப்படும் சந்தர்ப்பத்தில் அவள் ஏதோ ஒரு பாதுகாப்பான தன் சுதந்திரம் பறிக்கப்படாத கூட்டில் இருப்பது போல் உணர்ந்தாள்.... இதில் அவளை ஆச்சரியப்படுத்திய விடயம் இரண்டு மாத கால இடைவெளியில் அவன் என்னவன் என்ற எண்ணத்தை அவள் மனம் தத்தெடுத்ததே......

தன் பெற்றோர் தவிர்த்து வேறு யாருடனும் அவ்வளவு நெருக்கிப்பழகாதவளை அவன் புறம் இழுத்ததோடு நில்லாமல் அவனுக்காக ஏங்கவும் செய்துவிட்டான்.... ஆனாலும் ஏதோ ஒன்று அவனிடம் அவளை நெருங்க விடாமல் தடுத்தது.... அது என்னவென்று அவளுக்கே புரியவில்லை.... ஆனால் அவனை அவள் காதலிக்கத்தொடங்கியது உண்மை. இவ்வாறு அவளது எண்ணப்போக்கு சென்ற வண்ணம் இருக்க அதனை கலைத்தது வினயின் குரல்...

“ஷிமி ஆர் யூ தேர்?? என்னமா இப்படி பப்ளிக்கா சைட் அடிக்கிற?? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க???”

“நான் யாரை சைட் அடித்தேன்???”

“என்ன ஷிமி இப்படி கேட்டுட்ட...”

“வேற எப்படி வினய் கேட்கனும்??”

“அப்போ நீ இவ்வளவு நேரம் என்னை சைட் அடிக்கலையா??”

“அப்படினு யாரு சொன்ன??”

“ என்ன ஷிமி குழப்புற??”

“நான் என்ற குழப்பினேன்??”

“சரி விடு.. இப்போ சொல்லு... உனக்கு உன்னோட வெடிங் எப்படி நடக்கனும்னு ஆசைப்பட்ட???”

“எனக்கு இந்த வெளிநாட்டுக்காரங்க பண்ணுற மாதிரி பீச் சைடில் மணமேடை அமைத்து பஞ்ச பூதங்கள் சாட்சியாக கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்...”

“ஏன் ஷிமி நம்ம கல்யாணம் கூட பஞ்ச பூதங்கள் சாட்சியாக தானேமா நடந்தது..”

“ஆமா வினய்... ஆனா நாம தேடிப்போய் தான் சாட்சியாக்குனோம்... ஆனால் பீச் வியூவில் செய்யும் போது அந்த கடல், ஆகாயம், கடல் தரை, அக்னிகுண்டமும் ஆகாயச்சூரியனும், கடல்காற்று இப்படி எல்லாம் நமக்கு சாட்சியாக இருக்க அதோடு வானில் தேவர்கள் சாட்சியாக கல்யாணம் பண்ணுறது வித்தியாசமான அனுபவமாக இருந்ததுஇருக்கும்னு எனக்கு தோன்றியது... அதுனால அப்படி கல்யாணம் நடக்கனும்னு ஆசைப்பட்டேன்...”

“அப்போ அதை நீ என்கிட்ட சொல்லிருக்கலாமே...”

“வினய் திருமணம் இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விடயம்... இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட விடயமில்லை... நமக்காக எல்லாவற்றையும் பார்த்து செய்து நம்ம விருப்பங்களை நிறைவேற்றிய நம்மை பெற்றவர்களுக்கு நாம கொடுக்கக்கூடிய ஒரு சந்தோஷம் இது மட்டும் தான்... அதுதான் அவங்க விருப்பத்திற்கு விட்டுட்டேன்... இதுல எனக்கு எந்த வருத்தமோ ஏமாற்றமோ இல்லை.... இப்ப கூட நீங்க கேட்டதால தான் சொன்னேன்...சோ நோ வொரிஸ்..”

“நீ ஏன் ஷிமி எப்பவும் வித்தியாசமாகவே யோசிக்கிற???”

“அது தான் நான்.... உங்க ஷிமி...” என்று கூறி சிரிக்க வினயும் அவளது சிரிப்பில் இணைந்து கொண்டாள்....

ஹாய் நட்பூஸ்..

இதோ உன்னாலே உனதானேன் முதல் பதிவோடு வந்துட்டேன்...

படிச்சிட்டு மறக்காமல் கீழே கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

உன்னாலே உனதானேன் 2

Last edited:

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

congrats maa

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

yuvanika said:

View attachment 1

congrats maa

Click to expand...

Thanks ka

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

Jiju .... vanthuden

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

Sri Ram said:

Jiju .... vanthuden

Click to expand...

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN