என் எண்ணம்
புரிந்தும்
என்னை சிணுங்கவிடும்
உன் அதரங்கள்
என்
சிந்தையை
கலையச் செய்வது
ஏனோ.....???
புட்கோட்டினுள் நுழைந்த ஶ்ரீயும் ரிஷியும் காலியாக இருந்த மேசையில் சென்று அமர்ந்து கொண்டனர்.. அவர்கள் அருகில் வந்த பேரரிடம் தமக்கு தேவையானவற்றை ஆடர் செய்துவிட்டு உணவிற்காக காத்திருந்தனர்...
“ஏன் அம்லு...இப்போ சரி சொல்லேன்.. நீ எப்போ என்னை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ண???”
“அதான் சொன்னேனே அய்த்தான்...நேற்று தான்...”
“அம்லு நான் சீரியஸாக கேட்கின்றேன்... சொல்லு அம்லு...”
“அய்த்தான் நானும் சீரியஸாக தான் சொல்லுறேன்...”
“அம்லு நீ ரொம்ப பண்ணுற..”
“அப்படியா அய்த்தான்...??” என்று சிரித்தவளை செல்லமாக முறைத்தான் ரிஷி....
“சொல்லு அம்லு...ப்ளீஸ்..”
“அய்த்தான் அதான் சொல்லிட்டேனே...” என்று கள்ளப்புன்னகை சிந்தியவளின் அழகில் மயங்கி நின்றான் ரிஷி....
அந்த கள்ளப்புன்னகையின் போது அவளது செவ்விதழ்கள் வளையும் விதமும் கன்னக்குழி புதைகுழிபோல் பார்ப்பவரை கட்டியிழுத்து தன்னுள் ஆக்கிரமிக்கும் விந்தையும் நயனங்கள் மனதிற்கு புரிந்த மொழியினை மட்டும் பேசும் மாயமும் அந்த பாட்டில்லா கச்சேரிக்கு நிருத்தியம் சேர்க்கும் வகையில் முன் நெற்றியை மறைத்து நிற்கும் அந்த ஒற்றைக்கூந்தலின் கதகளியாட்டமும் என்று ஒற்றை புன்னகை இத்தனை உபதலைப்புக்களை கொண்ட படையெடுப்பில் ரிஷி மதிமயங்காமல் இருக்க முடியுமா?? அவனது கனவுலக பயணத்தில் இருந்து அவனை மீட்டு வந்தாள் ஶ்ரீ..
“அய்தான்.. என்ன அப்படி பார்க்கிறீங்க...?? நாம சாப்பிட வந்திருக்கோம்... அந்த வேலையை கவனிக்காமல் என்ன இது???” என்று போலியாய் அலுத்துக்கொண்டவளிடம்
“ஓய் அம்லு...நான் வந்த வேலையை தான் பார்த்துட்டு இருக்கேன் ... உன்னை அணுவணுவா ருசித்து சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கேன்... நீ தான் என் வேலையை செய்யவிடாமல் தடுத்துட்டு இருக்க..” என்றவனின் பேச்சில் அந்திவானமாய் சிவந்தாள் பெண்ணவள்...
“அய்தான் நீ ரொம்ப மோசம்.... நான் கூட நீ ரொம்ப நல்லவர்னு நினைச்சிட்டேன்... ஆனா நீங்க பேசுவதை யாராவது கேட்ட உங்களை வேறு மாதிரி சொல்லுவாங்க...”
“அம்லு ஊருக்கு நல்லவனா இருக்கவன் வீட்டுக்கும் நல்லவனா இருந்தா வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது... அதுவும் லவ்வர் கிட்டயும் பொண்டாட்டி கிட்டயும் நல்லவனாக இருக்கவே கூடாது....”
“இது என்ன அய்தான்... புதுசு புதுசா பிலோசொபி எல்லாம் சொல்லுறீங்க???”
“இது புது பிலோசோபி எல்லாம் இல்லை அம்லு.... இது ஆண்டாண்டு காலமாக எல்லோரும் பாலோ பண்ணுறது தான்..இன்னும் போக போக இதோட எக்ஸ்ட்ரீம் லெவலை தெரிந்து கொள்வாய்...” என்றவன் கண்ணடித்து மீண்டும் ஶ்ரீயை சிவக்க வைத்தான்..
சில நிமிடங்களில் உணவும் வந்துவிடவே இருவரும் உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்... அங்கிருந்து நேரே ஶ்ரீயை அவள் தன்னை முதல்முதலாய் சந்தித்த மாலிற்கு அழைத்து சென்றான்...
அங்கு சுற்றி விட்டு ஶ்ரீயிற்கு ஒரு தொகை பரிசுகளை ரிஷியும் ரிஷியிற்கு ஶ்ரீயும் என்று பல பொதிகளை இருவரும் சுமந்தவாரு அங்கிருந்து கிளம்பியது அந்த காதல் ஜோடி....
மதிய உணவிற்கு ஶ்ரீயை தான் முதன்முதலில் பார்த்த ரெஸ்டோரன்டிற்கு அழைத்து சென்றான் ரிஷி... அங்கும் காதல் பரிமாறிக்கொண்டும் கலாட்ட பண்ணிக்கொண்டும் தம் உணவை முடித்தவர்கள் அங்கிருந்து கிளம்பினர்... கிளம்பியவர்களுக்கு வேறு எங்கு செல்வதென்று தெரியவில்லை... ரிஷி அடுத்து எங்கு நேரம் செலவிடுவது என்று யோசித்து கொண்டிருக்க ஶ்ரீயோ ஏதொவொரு சிந்தனையில் இருந்தாள்.... காரை ஓரமாக நிறுத்தியவன் ஶ்ரீயை அழைக்க அவளிடம் பதிலில்லை...
அவளது கையை பற்றி மறுபடியும் அவளை அழைக்க இப்போது சிந்தை கலைந்தவள் அவனை என்னவென்று பார்க்க
“என்ன அம்லு யோசனை ரொம்ப பலமாக இருக்கும் போல...??”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை அய்த்தான் ஈவினிங் சப்பரிற்கு எங்கு போகலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்...”
“அடிப்பாவி...நம்ம பியான்சியோட வந்திருக்கோமே... ஸ்பென்ட் பண்ணுற டைமை எப்படி எக்ஸ்டென்ட் பண்ணலாம்னு நான் யோசிச்சிட்டு இருந்த மேடம் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிட்டியா??”
“என்ன அய்த்தான் பண்ணுறது..?? உங்களுக்கு உங்க கஷ்டம்.. எனக்கு என்னோட கஷ்டம்...”
“ஏன் அம்லு இப்போ தான் லன்சிற்கு ஒரு கட்டு கட்டுன... அதுக்குள்ள எப்படி ஈவினிங் சப்பரை பற்றி யோசிக்கிற?? இது என்ன வயிறா வேறு ஏதுமா???”
“அய்த்தான் சும்மா நான் சாப்பிடுவதில் கண்ணு வைக்காதிங்க.. பிறகு என் தாய்குலம் ரொம்ப பீல் பண்ணும்...”
“ஆமாஆமா... நீ சாப்பிடுவதை நிறுத்திட்டா வீட்டில் உள்ள மிச்சமீதியை யாரு சாப்பிடுவா....அதான் அத்தை பீல் பண்ணுவாங்களா இருக்கும்...” என்றவனை முறைத்தாள் ஶ்ரீ..
“சரி அடுத்து எங்கே போகலாம்??? இன்னும் டூ வீக்ஸிற்கு உன்னை பார்க்க முடியாது.... இன்று உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண கிடைத்த சான்ஸை நான் கிவ்வப் பண்ண விரும்பவில்லை..சோ சொல்லு அம்லு அடுத்து எங்கே போகலாம்....??”
“ஆமால... அய்த்தான் பாரின் போறீங்கல...அப்போ எனக்கும் அனுவிற்கும் சொக்கி வாங்கிட்டு வாங்க...” என்றவளை பார்த்து தலையில் அடித்துக்கொண்டான் ரிஷி...
“உனக்கு அமுல்பேபி என்று நான் வைத்த பெயர் சரியாதான் இருக்கு...”
“ஹாஹா... வெல் செட்..” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டவளை கண்டு நகைத்தான் ரிஷி...
“எந்த கண்ட்ரீக்கு போற அய்த்தான்...”
“ரஷ்யாக்கு அம்லு... ஒரு புது காண்ட்ரக்ட் சைன் பண்ணபோறேன்...”
“சூப்பர் அய்த்தான்... ஆல் த பெஸ்ட்... சக்ஸஸ்புல்லா காண்ரக்ட்டை சைன் பண்ணிட்டு வந்து எனக்கு ட்ரீட் வை... மறந்துவிடாதே அய்த்தான்....”
“உன் விஷயத்தில் ரொம்ப தெளிவா தான் இருக்க...”
“ரொம்ப பாராட்டாதே... எனக்கு கூச்சமாக இருக்கு... இப்போ எங்க கூட்டிட்டு போகப்போற???”
“அதைதான் யோசிக்கிறேன்...இப்போ பீச்சில் ரொம்ப க்ரௌடாக இருக்கும்.... எனக்கு உன்கூட தனியாக ஸ்பென்ட் பண்ணனும்... இன்னும் டூ வீக்சுக்கு உன்னை பார்க்க முடியாது...”
“அய்த்தான் எனக்கு ஒரு டவுட்டு... அது என்ன வார்த்தைக்கு வார்த்தை இன்னும் டூவீக்சுக்கு பார்க்கமுடியாது என்று சொல்லிட்டு இருக்க.... ஏதோ இவ்வளவு நாள் என்னை பார்த்துட்டு இருந்த மாதிரியும் இப்போ பார்க்க முடியாத படியும் சொல்லிட்டு இருக்க.... நாம கடைசியாக உன் வீட்டுல தான் மீட் பண்ணோம்... அதற்கு பிறகு நாம மீட் பண்ணவே இல்லையே...” என்று தன் நெடுநேர சந்தேகத்தை கேட்டாள் ஶ்ரீ...
அவளது கேள்வியில் சிரித்த ரிஷி
“அமுலு.... நான் ஒவ்வொரு நாளும் உன்னை பார்த்துட்டு தான் ஆபிஸ் போவேன்...” என்றவனின் பதிலில் திகைத்தவள்
“சும்மா சொல்லாத அய்த்தான்...”
“ஹே அம்லு நான் சும்மா சொல்லவில்லை.... உண்மையாதான் சொல்லுறேன்... ஒவ்வொரு நாளும் கரெக்டா நீ ஆபிஸ் போற ரூட்டில் வெயிட் பண்ணி உன் தரிசனத்தை பார்த்த பிறகு தான் ஐயா ஆபிஸிற்கே கிளம்புவேன்...”
“நிஜமாகவா அத்தான்..?? உங்களை எப்படி நான் நோட் பண்ணாமல் விட்டேன்...”
“அதுதான் ஐயாவோட டாலன்ட்...”
“ஐயோடா... நான் கொஞ்சம் கெயார்லஸ்ஸா இருந்ததால் நீங்க என் பார்வை வட்டத்தில் இருந்து தப்பிச்சிட்டீங்க...”
“ஹாஹா.. ஒத்துக்க மாட்டியே... சரி இப்போ சொல்லு நாம அடுத்து எங்கே போகலாம்??” என்று மறுபடியும் ரிஷி ஶ்ரீயிடம் கேட்க சற்று யோசித்தவள்
“அய்த்தான் ஒரு சூப்பர் ஐடியா... நாம ஒரு லாங் ட்ரைவ் போகலாமா?? ஆனா பைக்கில் போன தான் சூப்பராக இருக்கும்.. ஆனா நாம காரில் தானே வந்திருக்கோம்.. பரவாயில்லை... நாம காரிலேயே லாங் ட்ரைவ் போகலாம்....”
“சூப்பர் அம்லு.... உன்னை இன்னொரு நாள் பைக்கில் நைட் ரைட் கூட்டிட்டு போறேன்... இப்போ நாம ஹைவே ரோட்டில் லாங் ட்ரைவ் போகலாம்... வேறு இடத்திற்கு போனா எனக்கு நைட் பிளைட்டுக்கு லேட்டாகிவிடும்...சோ அத்தான் உன்னை இன்னொரு நாள் சூப்பர் ரைடிற்கு கூட்டிட்டு போறேன்... ஓகேவா...”
“சரி அய்த்தான்.... இப்போ நாம கிளம்பலாம்... பிறகு நீங்க பேச்சு சுவாரஸ்யத்தில் கமிட்டான வேலையை மறந்துடுவீங்க...”
“அப்படி என்ன வேலையில் அம்லு நான் கமிட்டாகியிருக்கேன்....??”
“என்ன அய்த்தான் இப்படி கேட்டுட்டீங்க?? நீங்க எனக்கு ட்ரைவர் வேலை பார்ப்பதாக கமிட்டாகி இருக்கீங்க அய்த்தான்... மறந்துட்டீங்களா??” என்றவளை முறைப்பது இப்போது ரிஷியின் முறையானது...
“என்ன அய்த்தான் முறைக்கிறீங்க??? நீங்க ட்ரைவர் சீட்டில்தானே உட்கார்ந்து இருக்கீங்க.... அப்போ நீங்க ட்ரைவர் தானே... அதாவது நீங்க எனக்கு ட்ரைவர் வேலை பார்ப்பதாகதானே அர்த்தம்...??”
“ஓ மேடமிற்கு அப்படி ஒரு நினைப்பு இருக்கோ.... டேய் ரிஷி உனக்கு இதும் தேவை இதுக்கு மேலேயும் தேவை....”
“வேற என்ன அய்த்தான் தேவை...??” என்று அப்பாவியாய் கேட்வளை முறைத்தான் ரிஷி..
“ஏன் அம்லு உன்னோட வாயிற்கு ஓய்வுனு ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?? எப்போ பார்த்தாலும் பேசிட்டே இருக்கே... கொஞ்சம் ரெஸ்ட் குடுத்தா என்னவாம்???”
“அய்த்தான் வாய்விட்டு பேசுவது எவ்வளவு ஹெல்தியான விஷயம் தெரியுமா??? ஒரு பெண் ஒரு நாளைக்கு குறைந்தது இருபதினாயிரம் வார்த்தைகளுக்கு அதிகமான வார்த்தைகளை பேசவேண்டுமாம்.... அப்படி பேசமால் விட்டால் அது ஒரு கட்டத்தில் டிப்ரெஷனில் கொண்டு போய் விட்டுருமாம்... அதே மாதிரி ஆண்களும் ஒருநாளைக்கு குறைந்தது ஐயாயிரம் வார்த்தைகள் பேச வேண்டும்...”
“ஏன் அம்லு இதுல கூட லேடிஸ் தான் பஸ்டா??? அதிகமாக பேசுகின்ற உரிமை கூடவா ஆண்களுக்கு இல்லை??? இதுதான் போல நாட்டுல உள்ளவன் எல்லாம் பொண்டாட்டியை பேசவிட்டுட்டு அதுக்கு உம் மட்டும் போடுறாங்க போல....”
“ஆமா... அவங்க எல்லோரும் பிழைக்கத்தெரிந்தவர்கள்... உங்களை மாதிரி இல்லை....”
“இப்போ நான் என்ன பண்ணிட்டேனு இப்போ இப்படி சொல்லுற அம்லு...”
“அதை சொல்லுற மூடில் நான் இல்லை...இப்போ நீங்க வண்டியை கிளப்புங்க... பிறகு லேட்டானால் என்னை எதுவும் சொல்ல கூடாது...”
“சரி மேடம்..” என்று வண்டியை கிளப்பினான்...
மூன்று மணிநேர பயணத்தில் வாழ்வின் மொத்த சுகத்தையும் அனுபவித்தனர் இருவரும்.... தம் அனுபவங்கள் தமக்கு பிடித்தவை பிடிக்காதவை என்று அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர் இருவரும்... இடையிடையே தம் காதலை பரிமாறிக்கொள்ளவும் தவறவில்லை...
பயணமுடிவில் இருவருக்கும் அந்த பயணம் நீளாதா என்ற எண்ணமே மேலோங்கி நின்றது... காமம் என்பது ஹார்மோன் கோளாறுகளின் வெளிப்பாடு.... ஆனால் காதல் என்பது இரு மனங்களின் வெளிபாடு... சிலர் கண்களாலேயே தம் காதலை வெளிப்படுத்துவர்... சிலர் கவிதைகளால் தம் காதலை வெளிப்படுத்துவர்... சிலர் காதலை வார்த்தைகளால் அல்லாது ஆத்மார்த்தமாக தம் காதலை பரிமாறுவர்.... இன்னும் சிலர் தம் துணையினை சரியாக புரிந்து கொள்வதன் மூலம் தம் காதலை வெளிப்படுத்துவர்....
ஶ்ரீயும் ரிஷியும் கடைசி முறையையே தேர்ந்தெடுத்தனர்... காதல் என்ற பெயரில் தம் துணையை மனரீதியாக துன்புறுத்த விரும்பவில்லை இருவரும்.... தன் துணையின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொண்டு புரிந்துணர்வோடு தம் வாழ்வினை தொடங்க வேண்டுமென்றே இருவரும் விரும்பினர்....
அதனாலேயே இருவரும் தத்தமது விருப்பு வெறுப்புக்களை பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் தம் துணையின் உரையாடலையும் விரும்பி கேட்டுக்கொண்டனர்..
மூன்று மணிநேர பயணத்தின் பின் காபி ஷாப் சென்று தேநீர் அருந்திவிட்டு ஶ்ரீயை அவளது வீட்டில் இறக்கிவிட்டான் ரிஷி...
ஶ்ரீ அவனிடம் விடைபெற்று காரைவிட்டு இறங்க முற்படுகையில் அவளை தடுத்த ரிஷி
“அம்லு அத்தான் பாரின் போகபோறேன்...உன்னை இன்னும் இரண்டு வாரங்களுக்கு பார்க்கமுடியாது.... உன் ஞாபகமாக ஏதாவது ஒன்றை கொடுத்துட்டு போனா நல்லா இருக்கும்....” என்றவனின் கண்கள் எதையோ யாசித்தது...
அது என்ன என்று புரிந்தபோதும் அவனுடன் விளையாடிப்பார்க்க எண்ணிய ஶ்ரீ
“என்ன அய்த்தான்... வேணும்னா கன்னம் பளுக்கும் அளவிற்கு நாலு அடி தரவா...??? சூப்பரா நியாபகத்தில் இருக்கும்..” என்றவளை முறைத்தான் ரிஷி..
“அடிப்பாவி... ஏன் அம்லு உனக்கு இந்த கொலைவெறி.. இந்த அத்தானை அடிப்பதில் உனக்கு அவ்வளவு சந்தோஷமா???”
“அப்படிலாம் இல்லை... நீங்க தானே ஏதோ நியாபகப்படுத்துகின்ற மாதிரி ஏதோ கேட்டீங்க.. அதான்...”
“ஏன் அம்லு அடி மட்டுமா உன்னை நியாபகப்படுத்துவதாக இருக்கும்...??”
“வேற என்ன அய்த்தான் இருக்கு??”
“உனக்கு தெரியாதா??”
“இல்லையே அய்த்தான்.... எனக்கு தெரியாதே...” என்றவள் தனக்குள் சிரித்தாள்....
அதை கண்ட ரிஷி
“சிரிக்கிறியா அம்லு... சரி வேணாம்... கிளம்பு... அத்தையும் மாமாவும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..” என்று கூறியவன் மறுபுறம் திரும்பிக்கொண்டான்...
அவனது பாவனையில் சிரிப்பு வந்தபோதிலும் அவனை மேலும் ஏங்கவிட விரும்பாதவள்
“ஓய் அய்த்தான்... என்ன கோவிச்சிக்கிட்டியா??..”
“அதெல்லாம் இல்லை.. நீ கிளம்பு...” என்று அவளை பார்க்காமலேயே கூற
“இப்படி கோவிச்சிக்கிட்டு திரும்பி உட்கார்ந்திருந்தால் நாங்க எப்படி போறதாம்??”
“ஆஆ வேற எப்படி... கதவை திறந்துக்கொண்டு தான்...”
“அய்த்தான்... நீ ரொம்ப பண்ணுற....”
“ஆமா இவங்க பண்ணதைவிட தான் நாங்க ரொம்ப பண்ணிட்டோம்...” என்று சத்தமாக முணுமுணுத்தான் ரிஷி...
“சரிவிடு உனக்கு ஸ்வீட்டா ஒன்று கொடுக்கலாம்னு பார்த்தேன்.... உனக்கு வேணாம்னா எனக்கு என்ன... நான் கிளம்புகின்றேன்... பாய்..” என்றவளை தடுத்திருந்தது ரிஷியின் கரம்...
“அம்லு எங்க போற??? ஏதோ கொடுக்கப்போறனு சொல்லிட்டு கொடுக்காமல் போற??
“நான் எதுக்கு கொடுக்கனும்?? நீ தான் வேண்டாம்னு முறுக்கிக்கிட்டு அந்தப்பக்கம் திரும்பி உட்கார்ந்துட்டீயே...”
“தப்பு தான் மன்னிச்சுக்கோ... இப்போ கொடுத்துட்டு போ அம்லு.. ப்ளீஸ் அம்லு... உன் அத்தான் பாவம்ல...”
“சரி கண்ணை மூடிக்கோ...” என்ற ஶ்ரீயின் ஆணைக்கிணங்க தாமதிக்காது கண்களை மூடியவன் தன் உலர்ந்த உதட்டினை ஈரப்படுத்திக்கொண்டு தயாராக அந்தோ பரிதாபம் அவனது முன்னேற்பாடுகள் அனைத்தும் அவளது கன்ன முத்தத்தால் வீணானது..
கண்ணை திறந்து பார்த்தவன்
“என்னாதிது???”
“நீ கேட்ட கிப்ட் அய்த்தான்...”
“இது தான் நீ சொன்ன ஸ்வீட்டான ஒன்றா???”
“ஆமா... நீங்க என்ன எதிர்பார்த்தீங்க??”
“நான் என்ன எதிர்பார்தேனு உனக்கு தெரியாதா??”
“இல்லையே அத்தான்..” என்று குழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டு கூறியவளை பார்த்து முறைத்தான் ரிஷி...
“உன்கிட்ட டீல் பேசுன எனக்கு இந்த பல்ப்பு தேவைதான்...”
“ஹலோ உங்களுக்கு இதுவே ஓவர் தான்.. பாவம் பையன் ரொம்ப கெஞ்சுறானேனு கன்னத்தில் கிஸ் பண்ணா ரொம்ப தான் பண்ணுறீங்க??”
“அப்போ நான் என்ன எக்பெக்ட் பண்றேனு தெரிந்தும் தான் இப்படி பண்ணியா???”
“ஆமா... நாம எக்ஸ்பெக்ட் பண்ணுறது அன்எக்ஸ்பெக்டட் டைமில் கிடைத்தா தான் செம்ம பீலா இருக்கும்.. சோ அந்த அன்எக்ஸ்பெக்டட் மூமன்டை எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருங்க.. நான் கிளம்புறேன்..” என்று இறங்கியவள் பின்புற சீட்டில் இருந்த தன் பொதிகளை எடுத்துக்கொண்டவள் அதில் இருந்த ஒரு சிறிய பரிசிபொட்டலத்தை எடுத்து ரிஷியிடம் கொடுத்தவள்
“அய்த்தான்... இதை நீங்க தனியாக இருக்கும் போது பிரித்துப்பாருங்க.. இப்போ நான் கிளம்புறேன்.. பாய் டேக் கேயார்.. ஹாவ் அ சேப் ஜேர்னி... நைட் கிளம்பும் போது கால் பண்ணுங்க... உங்க கோலிற்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்...” என்றுவிட்டு கதவடைக்க முயன்றவளை தடுத்தான் ரிஷி...
“அம்லு ஒரு நிமிஷம்” என்று காரிலிருந்து இறங்கியவன் கார் டிக்கியை திறந்து அதில் இருந்து இரண்டு பொதிகளை எடுத்து ஒன்றை நீட்டியவன்
“அம்லு இது அனுவிற்காக நான் வாங்கியது.. பிடிச்சிருக்கானு கேட்டு சொல்லு... அவளுக்கு அந்த டிசைன் பிடிக்காவிடின் பில் உள்ளே தான் இருக்கு ... அவளை போய் சேன்ஞ் பண்ணிக்க சொல்லு...அப்புறம் இந்த பார்சல் உனக்கு தான் அம்லு... சின்ன சப்ரைஸ் கிப்ட்... உனக்கு பிடித்திருக்கானு பார்த்து சொல்லு. உனக்கு பிடிக்காவிடின் இதிலேயும் பில் இருக்கு.. எக்ஸ்சேன்ஞ் பண்ணிக்கோ..” என்று அவள் கையில் இரு பொதிகளையும் திணித்தவன் இரவு வாழ்த்தினை கூறி அவளை இறுக அணைத்தவன் அவளது முன்னுச்சியில் இதழ் பதித்து விட்டு தான் அவள் செல்ல அனுமதித்தான்...
அவனது இதழொற்றலில் மந்திரித்து விட்ட கோழியை போல் வீட்டினுள் வந்தவளுக்கு ராதா அழைத்ததும் ராஜேஷூம் அனுவும் கேலிசெய்ததும் கருத்தில் பதியவில்லை...
ஶ்ரீயின் பின்னே வந்த அனு கதவினை தாழ்ப்பாளிட அப்போதும் ஏதோ கனவில் நடப்பவள் போல் இருந்தவளை உலுக்கி சிந்தை கலைய வைத்தாள் அனு..
“அக்கா என்ன ஒரு மாதிரி இருக்க??? என்னாச்சு?? மாமா ஏதும் ஸ்வீட்டா ஷாக் ட்ரீட்மன்ட் கொடுத்தாரா?? இப்படி ஜர்க் ஆகி நிற்கிற??”
“அதெல்லாம் ஒன்னும் இல்லையே...”
“சும்மா மழுப்பாத அக்கா... உன் முகத்திலேயே தெரியிது ஏதோ ரொமாண்டிக்கா நடந்திருக்குனு... சொல்லு மாமா லிப் லாக் பண்ணிட்டாறா??”
“ஏய் என்னடி பேசுற??? ஒரு அக்காகிட்ட பேசுற???”
“உன்கிட்ட இப்படி பேசாமல் மாமாகிட்டவா இப்படி பேச முடியும்???”
“அனு.. உனக்கு வாய் கூடிப்போச்சு”
“இப்போ எதுக்கு நீ இவ்வளவு டென்சனாகுற??? உன் முகமே என்ன நடந்ததென்பதை எங்க எல்லோருக்கும் காட்டி கொடுத்துவிட்டது... பிறகு என்ன??”
“என்னது எல்லோருக்குமா???”
“ஆமா அம்மாவும் அப்பாவும் கூப்பிட கூப்பிட மேடம் என்னவோ காதே கேட்காதவ மாதிரி நடந்து வந்தீங்க.. உன் நடவடிக்கையில் பயந்த அம்மா போய் பார்த்துட்டு வருகிறேனு கிளம்பினவங்களை அப்பா தான் சமாதானப்படுத்தி என்னை அனுப்பி வைத்தார்...”
“ஐயோ... மானமே போச்சு... இந்த அத்தான் பண்ண வேலையில் என் பிழைப்பு சிரிப்பாக போய்விட்டது..”
“அப்போ ஏதோ ஸ்வீட் சம்பவம் ஒன்று நடந்திருக்கு...”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை... இந்தா அத்தான் உனக்கு இந்த கிப்டை கொடுக்க சொன்னாரு.. உனக்கு கிப்ட் பிடிச்சிருக்கானு பார்த்து அத்தான் கிட்ட சொல்லிரு..” என்று அனுவின் பரிசுப்பொதியை அவளிடம் திணிக்க அதை வாங்கிக்கொண்டவள் கட்டிலில் அமர்ந்து பிரித்துப்பார்க்கத்தொடங்கினாள்...
அந்த பொதியில் அழகான சில்வர் நிற ரோஸ்பீல்ட் கைக்கடிகாரமொன்று இருந்தது... அதை எடுத்து அணிந்து பார்த்த அனு
“அக்கா மாமா கொடுத்த வாட்ச் சூப்பராக இருக்கு... மாமாக்கு நன்றி சொன்னேன்னு என் சார்பாக நீ சொல்லிரு..” என்றுவிட்டு வாட்சை எடுத்துக்கொண்டு தன் அன்னை தந்தையிடம் காட்டுவதற்கு அறையிலிருந்து வெளியேறினாள் அனு..... அனு சென்றதும் தனது பரிசுப்பொதியை பிரித்தாள் ஶ்ரீ....