காதல் பாடம்
நடத்த தயாராக நான்
அதை கற்று
பின்பற்ற
நீ தயாரா
நங்கையே???
ரம்யா வீட்டிற்கு சென்றுவிட்டு இல்லம் திரும்பினாள் ஶ்ரீ .... அவள் வீட்டிற்கு வரும் போது ஹாலில் அமர்ந்திருந்தார் ராஜேஷ்குமார்...
ஶ்ரீயை கண்டதும்
“ஶ்ரீமா ஏன்மா லேட்டு...??” என்று கேட்க அவர் அருகில் வந்தமர்ந்த ஶ்ரீ
“ரம்யா அம்மாவ பார்க்க அவ வீட்டுக்கு போயிருந்தேன் பா.. உங்களுக்கு கால் பண்ணி சொன்னேன் தானேபா..”
“ஆமா மா...ஆனா...” என்றுவிட்டு கண்ஜாடையால் கிச்சனை காட்டி உதட்டை பிதுக்கினார் ராஜேஷ்குமார்.
“ஓ... அதுவா மேட்டர்... என்னவாம் அவங்களுக்கு... சொல்லிட்டு தானே போனேன்... ரம்யா அம்மாவை பார்க்கத்தானே போனேன்.. அதுவும் ஹேமா கூட தானே போனேன்...”என்று ஶ்ரீ கிச்சனை நோக்கி வேண்டுமென்றே சத்தமிட கிச்சனில் இருந்து தோசைக்கரண்டியுடன் வெளியே வந்த ராதா
“போனவ சீக்கிரம் வரணும்னு ஒரு எண்ணம் இருக்கா?? மணி என்னாச்சுனு பாரு.. கொஞ்சமாவது பயம்ங்குறது மனசுல இருக்கா?? இந்த ராத்திரியில ஆடி அசைந்து வர்றா... நீ வந்து சேர வரைக்கும் எனக்கு பக்கு பக்குனு இருக்கு... கல்யாணம் நிச்சயமாகியிருக்க நேரத்துல ஒன்னு கிடக்க ஒன்னு நடந்துருச்சினா என்ன பண்ணுறது... நீ வேலை பார்த்து கிழிச்சதெல்லாம் போதும்.... வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டுல இரு...”
“என்னப்பா மம்மி இப்படி சொல்லுறாங்க... நீங்க என்ன சொல்லுறீங்க???” என்று ஶ்ரீ தன் தந்தையிடம் விளக்கம் கேட்க அவருக்கு பதிலாய் பதிலளித்தார் ராதா..
“அவரு என்ன சொல்லுறது??? ஆபிஸ் முடிஞ்சதும் டாங்னு ஆறு மணிக்கு வீட்டுக்கு வரமுடியும்னா வேலைக்கு போ...இல்லைனா வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டுல இரு.. இது ரெண்டு ஆப்ஷன் தான் உனக்கு....” என்று முதலும் இறுதியுமாய் ராதா முடித்துவிட ஶ்ரீ தன் தந்தையை பார்த்தாள்...
அவரோ
“அம்மா சொல்லுறதும் சரிதானேமா.. காலம் ரொம்ப கெட்டுக்கிடக்கு... உனக்கு மேரேஜ் பிக்கச் ஆகிருக்கு... இந்த டைமில் ஏதும் தப்பா நடந்துட்டா எல்லார் மனசுக்கும் கஷ்டம்.. வீட்டுக்கு டைமிற்கு வந்துருமா... லேட்டாகும்னா கால் பண்ணு அப்பா வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்று அவரும் கெஞ்ச மறுக்க தோன்றவில்லை ஶ்ரீயிற்கு..
என்னதான் பெண்பிள்ளைகளை வேலைக்கு செல்ல பெற்றோர் அனுமதித்தாலும் அவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை அவர்களுக்கு நிலை கொள்ளாது... இது பெண்குழந்தைகளை பெற்றெடுத்த அனைத்து பெற்றோர்களுக்கும் பொருந்தும்...
ராதா அனைவரையும் சாப்பிட அழைக்க ஶ்ரீயோ தான் ரம்யா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாத கூறிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்...
சிறிது நேரம் கழித்து ஶ்ரீயின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த ராஜேஷ்குமார்
“என்னமா ரம்யா அம்மா எப்படி இருக்காங்க?? டாக்டர் என்ன சொன்னாங்களாம்??”
“அவங்களுக்கு வைரஸ் ப்ளூ தானாம்... அவங்க ரொம்ப வீக்க இருந்ததால லோ ப்ரஸர் ஆகி மயங்கி விழுந்துட்டாங்களாம்... வேற எதுவும் இல்லாம் பா...இப்போ ஆண்டி நல்லா இருக்காங்க...”
“சரிமா.... அப்பா உன்கிட்ட ஒன்னு கேட்கனும்மா..”
“சொல்லுங்க பா...”
“உனக்கு ரிஷியை புடிச்சிருக்கு தானேமா.. இந்த கல்யாணத்துல உனக்கு இஷ்டம் தானேமா...??” என்ற ராஜேஷ்குமாரின் கேள்விக்கு பதில் சொல்ல வெட்கி தலையை குனிந்து கொண்ட ஶ்ரீயை தலையை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்..
அவளது நடவடிக்கையிலேயே அவளுக்கு முழு சம்மதம் என்று புரிந்து கொண்ட ராஜோஷ்குமார் ஶ்ரீயை வம்பிழுக்கும் முகமாக
“என்னமா தலையை மட்டும் ஆட்டுற?? இதுக்கு என்ன அர்த்தம் புடிச்சிருக்குனா?? இல்லை புடிக்கலைனா?? உனக்கு பிடிக்காட்டி நான் மூர்த்திகிட்ட சொல்லிருர்றேன்...”
ஶ்ரீயோ மனதில்
“ஐயோ இந்த அப்பா வேற நேரம் பார்த்து என்னை இப்படி வச்சி செய்றாரே... வேணும்னே என்னை ஓட்டுறாரு... இந்த நேரம் பார்த்து என்ன பேசுறதுனு கூட புரியமாட்டேன்குது...... இதுக்கு பெயர் தான் வெட்கமோ... ?? ஐயோ ஶ்ரீ உனக்கு வெட்கம்லா வருதா...??” என்று மனதினுள் பேசியபடி இருந்தவளை கலைத்தது ராஜேஷின் குரல்
“என்னமா எதுவும் பேச மாட்டேன்குற??? ஹா...”
“எனக்கு ரிஷி அத்தானை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் பா..”
“ஹாஹா இதை சொல்ல என் செல்ல மகளுக்கு இவ்வளவு நேரம்??? மாப்பிள்ளை வெளிநாடு போறார்னு மூர்த்தி சொன்னானே... மாப்பிள்ளை கிளம்பிட்டாராமா..??”
“ஆமா அப்பா.. இன்னைக்கு ஏர்லி மார்னிங் கிளம்பிட்டாரு... ரீச் ஆகிட்டேனு ஈவ்னிங் மெசேஜ் பண்ணியிருந்தாருபா..”
“சரிமா... நீ தூங்கி நல்லா ரெஸ்ட் எடு.... கல்யாணப்பொண்ணு எப்பவும் சந்தோஷமா இருக்கனும்... எதுனாலும் அப்பாகிட்ட சொல்லு சரியா?? அப்புறம் அம்மா திட்டுனத பெரிசா எடுத்துக்காத... அவ ஏதோ நீ லேட்டா வந்துட்டங்கிற கடுப்புல அப்படி பேசிட்டா சரியா??”
“அவங்க கோபமும் நியாயமானது தானேபா..”
“பார்டா என் பொண்ணு அவங்க அம்மாவுக்கு சப்போர்ட்டா பேசுறத??”
“அப்பா..” என்று சிணுங்கியவளின் தலையை வருடிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றார் ராஜேஷ்குமார்...
அவர் சென்ற மறுநொடி ஶ்ரீயின் மொபைல் ஒலித்தது....
மொபைல் ஸ்க்ரீனில் அய்த்தான் வீடியோ கோல் என்று விழுந்தது...
அதை அட்டன்ட் செய்வதற்கு முன் கண்ணாடியின் முன்சென்று தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டவள் விரைந்து வந்து கோலை அட்டென்ட் செய்தாள்.
“ஹலோ என்ன அம்லு தூங்கிட்டியா???”
“இல்லை அய்த்தான் அதெல்லாம் இல்லை... நீங்க பகலே கால் பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேன்...” என்று சற்று சோகமான குரலில் ஶ்ரீ கூற ரிஷியோ
“நான் உனக்கு மெசேஜ் பண்ணியிருந்தேனே பார்க்கலையா நீ...?? ப்ளூ டிக் விழுந்துச்சே... நீ கூட ஓகேனு ரிப்ளை பண்ணியிருந்த???”
“நான் என்ன சொன்னேன்??? கால் பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேனு தான் சொன்னேன்....”
“ஹாஹா... அம்லுக்கு கால் பண்ணலனு கோபமா?? ரொம்ப டயர்டா இருந்துச்சுமா.. அதான் மெசேஜை மட்டும் ரொம்ப கஷ்டப்பட்டு டைப் பண்ணிட்டு தூங்கிட்டேன்... இப்போ எழுந்தோன உனக்கு தான் முதல்ல கால் பண்ணுறேன்??”
“அப்போ அத்தைக்கு ரீச் ஆகிட்டேனு சொல்லலையா???”
“அப்பாவுக்கு உனக்கு டெக்ஸ்ட் பண்ணும் போதே ஒரு டெக்டை போட்டுட்டேன்... அவரு அம்மாவுக்கு சொல்லிருவாரு.... சரி எதுக்கு இப்போ இந்த ஆராய்ச்சி...???”
“சும்மா தான்... நாளைக்கு பின்ன உங்களால எனக்கும் அத்தைக்கும் பிரச்சினை வந்திடக்கூடாதுல்ல அதான்... அதான் ஒரு கிளாரிபிகேஷன்...”
“நல்ல கிளாரிபிகேஷன் தான் போ.. சரி சாப்டாச்சா??”
“ஆச்சு அத்தான்.... இன்னைக்கு என் ப்ரெண்டு ரம்யா அம்மாவை பார்க்க அவங்க வீட்டுக்கு போயிருந்தேன்... அங்க வயித்தை நிரப்பிட்டு வந்துட்டேன்.... அதுக்கு மம்மி காச்சு மூச்சுனு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.... அந்த ரேடியாவை ட்யூன் பண்ணிட்டு இப்போ தான் ரூமிற்கு வந்தேன்...”
“ஹாஹா பாவம் எங்க அத்தை இன்னைக்கு மிச்சமீதி நிறைய இருந்திருக்கும் போல... நீ சாப்பிட்டு வந்துட்டேனு சொன்னதும் காண்டாகியிருப்பாங்க... அதான் சத்தம் போட்டிருப்பாங்க..”
“என்ன நக்கலா??”
“இல்லை அம்லு... உன்னை போய் நான் கிண்டல் பண்ணுவேனா??”
“அப்போ வேற என்ன பண்ணுவீங்க??”
“அதெல்லாம் சொன்னா கிக்கா இருக்காது அம்லு... ஆக்ஷன்ல காட்டும் போது தான் நல்லா இருக்கும்....”
“சீ... என்ன டபுள் மீனிங்கில் பேசுறீங்க???”
“ஹேய் நான் என்ன டபுள் மீனிங்கில் பேசுனேன்... ஓ... புரிஞ்சிருச்சி.... மேடம் டபுள் மீனிங்கில் புரிஞ்சிக்கிட்டீங்களா???? அப்போ..”
“நான் ஒன்னும் புரிஞ்சிக்கலை.... நீங்க தான் ஏதோ உளர்றீங்க....”
“நான் என்ன உளர்றேன்.... நான் சரியா தான் பேசுறேன்... நீ வேற மீனிங்கில் புரிஞ்சிக்கிட்டா நான் என்ன பண்ணுறதாம்??”
“சரி அந்த பேச்சை விடுங்க... இப்போ என்ன செய்றீங்க???”
“டெஸ்ட் எடுத்துகிட்டே என்னோட வுட்பீ கூட கடலை போட்டுக்கிட்டு இருக்கேன்...”
“பார்டா... சரி போரடிக்குது அத்தான்.... ஏதாவது கதை சொல்லுங்களேன்....”
“ஹேய் நீ என்ன சின்ன பாப்பாவா??? கதை சொல்ல சொல்லிட்டு இருக்க???”
“ஏன் சின்ன பாப்பா தான் கதை கேட்கனுமா?? நாங்கெல்லாம் கேட்க கூடாதா???”
“நம்ம கேளு மா... உன் கிட்ட ரொமோன்சை எதிர்பார்த்தேன் பாரு என் புத்தியை செருப்பால அடிக்கனும்...”
“வாசல்ல கழட்டி வச்சிருப்பீங்க அத்தான் எடுத்து அடிச்சிக்கோங்க...” என்று கூறி சிரித்தாள் ஶ்ரீ..
பிறகு அவளே “ஏன் அத்தான் ஏதோ ரொமேன்சுனு சொன்னீங்களே அப்படினா என்ன??? அது எந்த கடையில விற்கிறாங்க??”
“ஹா அதை போய் உன் ப்ரெண்டு ஹேமாகிட்ட கேளு... கிலோ கணக்குல வாங்கி குடுப்பா...எனக்குனு வந்து வாச்சிருக்கு பாரு....”
“ஐயோ அத்தான்... அவரு ஊருக்கு போயிட்டாளே...நீங்களே சொல்லுங்க...ரொமேன்சுனா என்ன???”
“நான் சொன்னா புரிஞ்சிப்பியா அம்லு??” ஹஸ்கி வாய்சில் ரிஷி கேட்க
“புரியிற மாதிரி சொன்னா புரிஞ்சுப்பேன் அத்தான்...” என்று கூற ஶ்ரீ மெதுவாக சிரித்தாள்...
“ரொமேன்ஸ்னா நம்ம லவ்வை எக்ஸ்போஸ் பண்ணுற விதம்”
“ஆனா கூகுள்ல ரொமேன்ஸ்னா பீலிங் ஓப் எக்ஸ்ஸைட்மண்ட்னு தானே போட்டுருக்கு..”
“அப்போ எதுக்கிட்டயே போய் ரொமேன்ஸ்னா என்னது அதை எப்படி பண்ணுறதுனு கத்துக்கிட்டு வா...” என்று கடுப்பாய் ரிஷி
“சரிசரி கோபப்படாதிங்க அத்தான்... உங்க அளவுக்கு கூகுள் புத்திசாலியில்லை... இப்போ நீங்க உங்க கிளாசை கண்டினியூ பண்ணுங்க...”
“அது.... ரொமேன்சை ஒவ்வொரு விதமா எக்ஸ்போஸ் பண்ணலாம்.... வாய் வார்த்தைகளால எக்ஸ்போஸ் பண்ணலாம்..... ஆக்ஷனால எக்ஸ்போஸ் பண்ணலாம்....பார்வையால எக்ஸ்போஸ் பண்ணலாம்.... சிறுதொடுகையால எக்ஸ்போஸ் பண்ணலாம்...ஏன் பிரிவு கூட ரொமேன்ஸ் தான்”
“என்னது பிரிவு கூட ரொமேன்ஸா.... இது என்ன புதுசா இருக்கு???”
“ஆமா.... ரொமேன்ஸ்னா என்னானு உனக்கு சொன்னேன்???”
“லவ்வை எக்ஸ்போஸ் பண்ணுற விதம்னு சொன்னீங்க...”
“ரைட்... இப்போ இதுக்கு பதில் சொல்லு... உனக்கு தாஜ்மஹாலோட வரைபடம் உருவான கதை தெரியுமா????”
“இல்லையே அய்த்தான்....”
“சரி சொல்றேன்.. . மும்தாஜ் இறந்த சோகத்துல இருந்த சாஜஹான் அவங்க நியாபகார்த்தமா ஏதாவது நிறுவனும்னு ஆசைப்பட்டாரு... அப்போ அரசவையில இருந்த ஒரு ஓவியனை கூப்பிட்டு மும்தாஜோட இறப்பை சிம்பலைஸ் பண்ணுற மாதிரி ஒரு படத்தை வரைந்து தரச்சொன்னாராம் .... அந்த ஓவியனும் சரினு அடுத்தநாள் வரைஞ்சு கொண்டு வந்து காட்டியிருக்கான்.... அரசனுக்கு அது பிடிக்கலையாம்.... வேற ட்ரை பண்ண சொல்லியிருக்காரு.... இவனும் நிறைய வரைந்து காட்டியிருக்கான்.... ஆனா அரசருக்கு அவன் வரைஞ்சிட்டு வந்த எதுவும் பிடிக்கலையாம்.... இவனும் வரைஞ்சு வரைஞ்சு டயர்டாகிட்டானாம்... அரசரும் அடுத்த படம் ஒழுங்கா வரலை உன்னை தூக்குல போட்டுருவேனு சொல்லிட்டாராம்... இவன் என்ன பண்ணுறதுனு புரியாம ஆத்தங்கரையில உட்காந்து இருக்கும் போது அவனை பார்க்க அவனோட காதலி வந்தாளாம்.... அவகிட்ட பிரச்சனையை சொன்னதும் அவ சரி விடுங்க பாத்துக்கலாம்னு சொன்னாளாம்.... அடுத்த நாள் அவ ஆத்துல விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டானு செய்தி வர இந்த ஓவியன் ரொம்ப துடிச்சி போயிட்டானாம்... கொஞ்ச நாள் கழிச்சி மறுபடியும் அந்த ஓவியன் இன்னொரு படத்தை வரைஞ்சி கொண்டு போய் அரசன்கிட்ட காட்டியிருக்கான்.... அப்போ அது அரசனுக்கு ரொம்ப புடிச்சி போயிருச்சாம்... அப்போ அரசர் எப்படி இப்போ மட்டும் என் மனசுக்கு புடிச்சமாதிரி வரைஞ்சனு கேட்க அதுக்கு அந்த ஓவியன் இவ்வளவு நாள் என் காதலி என்கூட இருந்தா.... அதனால நான் சந்தோஷமா இருந்தேன்... அது என்னோட பெயின்டிங்கிங் எக்ஸ்பிரஸ் ஆகிச்சு.. ஆனா நீங்க சோகமா இருந்தீங்க... அதுனால உங்களுக்கு அது புடிக்கலை.... ஆனா இப்போ என்னோட காதலி நான் உயிர் வாழனும்னு ஆசைப்பட்டு அவ உயிரை விட்டுட்டா... அவளோட பிரிவு சோகம் தான் என்னுடைய ஓவியத்தோட பிரதிபலிப்பு ... நீங்களும் மனைவி இறந்துபோன சோகத்தில் இருக்கிறதால உங்களுக்கு அந்த ஓவியம் பிடிச்சிருக்கு.... அதனால நான் தூக்கு கயிறில இருந்து தப்பிச்சி என்னோட காதலியின் பிரிவை எண்ணி தினம் தினம் சாகப்போறேன்... அப்படினு சொன்னானாம் ...... தன்னோட காதலை அந்த ஓவியனோட காதலி மரணத்தின் மூலமா எக்ஸ்ப்ரஸ் பண்ணியிருக்கா.... தன்னோட மரணம் அரசர் எதிர்பார்க்கிற ஓவியத்தை ஓவியனை வரைய தூண்டும்னு அவளுக்கு தெரிஞ்சு தன்னோட காதலனை தண்டனையில் இருந்து காப்பாத்துறதுக்காக தன்னோட உயிரை மாய்ச்சி தன்னோட காதலை எக்ஸ்ப்ரஸ் பண்ணிட்டா...”
“ம்.... சரி தான் அய்த்தான்... ஆனா அவ நிம்மதியா போய் சேர்ந்துட்டா.. அவள நேசிச்ச அவனோட நிலை....”
“அவனும் சூசைட் பண்ணிக்கிட்டான்...”
“ம்... பார்த்தீங்களா அத்தான்.. அப்போ எப்படி பிரிவு காதலை எக்ஸ்போஸ் பண்ணும்னு சொல்றீங்க???”
“இப்போ அந்த ஓவியன் அந்த படத்தை சரியாக வரைஞ்சு குடுத்திருக்காட்டி அந்த ஓவியனை அரசர் தூக்குல போட்டிருப்பாரு... அந்த காதலியியும் காதலன் போன சோகத்துல சூசைட் பண்ணியிருப்பா... அந்த இரண்டு உயிரிழப்புக்கும் மதிப்பில்லாமல் போயிருக்கும்.... ஆனா அந்த காதலி தன்னோட காதலனுக்காக தான் தற்கொலை பண்ணிக்கிட்டா...அதுல அவளுக்கு எந்த வித வருத்தமும் இருந்திருக்காது... தன்னோட காதலனுக்கா சூசைட் பண்ணிக்கிறோம்குற சந்தோஷம் தான் இருந்திருக்கும்.. அந்த ஓவியனும் காதலி இல்லாத சோகத்துல தான் சூசைட் பண்ணான்.. இதே அரசன் தூக்குல போட்டிருந்தா அவனை சார்ந்த எல்லோருக்கும் அது மனக்கஷ்டம்....... இதை தான் வெள்ளைக்காரன் ரொமேண்ஸ்னு சொல்றான்... நம்ம ஊருல உண்மை காதல்னு சொல்லுறாங்க...”
“ஆனாலும் அத்தான் சாவு எதுக்கும் முடிவில்லையே....”
“நீ சொல்றது சரிதான் அம்லு... ஆனா அவரவர் விதிப்படி தானே எல்லாம் நடக்கும்..... நம்ம கையில எதுவும் இல்லையே???”
“அதுவும் சரி தான்.. அத்தான் எனக்கு ஒரு டவுட்டு???”
“சொல்லு அம்லு...”
“இவ்வளவு விஷயம் தெரிஞ்சிவச்சிருக்கீங்களே... லவ்வில் முன் அனுபவம் நிறைய இருக்கோ???” என்று சிரித்தபடி ஶ்ரீ கேட்க
“ஆமா பத்து பொண்டாட்டி, பதினைந்து வப்பாட்டி, தெரிஞ்சி இருபது கேள் பெரெண்ட், தெரியாம ஐம்பது கேள் ப்ரெண்டுனு பழக்கம்... அதான் இவ்வளவு விஷயம் தெரியும்...”என்று கோபக்குரலில் ரிஷி சொல்ல
“அவ்வளவு தானா அத்தான்?? இல்லை இன்னும் ஒரு லிஸ்ட்டு இருக்கா..?? ஏன் கேட்குறேனா லிஸ்டு நீண்டுட்டே போனா நாடு தாங்காதுல்ல அதான் கேட்டேன்..” என்று சிரிக்க
“உனக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சு அம்லு... உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்......”
“வாங்க வாங்க ஐயம் வெயிட்டிங்..” என்று ஶ்ரீ கூற ரிஷி சிரித்தான்..
இவ்வாறு இவர்களது உரையாடல் மூன்று மணிநேரம் தொடர்ந்தது...
தினமும் இதுவே வாடிக்கையானது.....
நான்கு நாட்களுக்கு பிறகு ஆபிஸில் அமர்ந்திருந்த ஶ்ரீயை நோக்கி ஓடிவந்தான் ரவி....
“ஹேய் ஶ்ரீ இதை கொஞ்சம் பாரேன்...” என்று தன் மொபைலில் இருந்த போட்டோவை காட்டினான் ரவி...
“என்னடா???” என்றவாறு மொபைலை வாங்கிப்பார்த்தவள் விழி பிதுங்கி நின்றாள்..
மறுபடியும் அந்த போட்டோவை சூம் பண்ணி பார்த்தவள் தான் கண்டது உண்மைதானா என்று உறுதிபடுத்தும் முகமாக ரவியிடம்
“என்னடா இது?? இது உண்மை தானா?? இந்த போட்டோ உனக்கு எப்படி கிடைச்சது??”
“இதை எப்.பி ல இருந்து எடுத்தேன் ஶ்ரீ. பேக்கா இருக்க சான்ஸ் இல்லை... ஆனா இது ஹேமாவானு தெரியலை...”
“ஆனா ஹேமா மாதிரி தானே இருக்கு... நானும் ரெண்டு நாளு ட்ரை பண்ணுறேன்... போன் ஸ்விட்ச் ஆப்னு வருது... ஊர்ல சிக்னல் கிடைக்கலையோனு நினைச்சேன்...
ஆனா இங்க வேற ஏதோ நடந்திருக்கும் போல இருக்கு..... “
“அதுமட்டும் இல்லை ஶ்ரீ... அவ வேலையை ரிசைன் பண்ணிட்டதா டீம் லீட் சொன்னாரு..” என்றபடி அவர்கள் அருகில் வந்தாள் சஞ்சனா...
“என்ன சஞ்சு சொல்லுற?? நீ சொல்லுறது உண்மையா??”
“ஆமா ஶ்ரீ.... இப்போ தான் டீம் லீடர் சொன்னாரு.... இப்போ புதுசா யாராயாவது அவளோட ப்ளேஸிற்கு ரீப்ளேஸ் பண்ண சஜஸ்ட் பண்ண சொன்னாரு.. நான் மத்தவங்க கூட பேசிட்டு சொல்றதா சொல்லியிருக்கேன்...”
“ஐயோ அங்க அவளுக்கு என்ன பிரச்சனைனு தெரியலையே... இப்படி ஒரு முடிவை அவ எப்படி எடுத்தா??? இத பத்தி ரித்வி அத்தானுக்கு தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவாருனு தெரியலையே.... இப்போ எப்படி என்ன நடந்துச்சுனு தெரிஞ்சிக்கிறது?? ரவி லெகேஷன் ஏதும் ஸ்யெயார் பண்ணி இருக்காங்களா???”
“இல்லை ஶ்ரீ... ஶ்ரீ பேசாம நாம ஹேமாவோட அம்மா அப்பாவை பார்த்து என்ன நடந்துச்சுனு தெரிஞ்சிக்கிட்டா என்ன???”
“நல்லா ஐடியா தான்டா... ஆனா அவங்க இன்னும் ஊர்ல தான் இருக்காங்களா இல்லை வந்துட்டாங்களானு தெரியலையே...”
“ஹேமாவோட லேண்ட் லைனிற்கு கால் பண்ணி பார்த்தா தெரிஞ்சிட போகுது..” என்று சஞ்சு கூற உடனடியாக ஹேமா வீட்டு லேண்ட் லைனிற்கு அழைத்தாள் ஶ்ரீ...
அது எடுக்கப்படவில்லை...
“யாரும் வீட்டுல இல்லை போல... எடுக்க மாட்டேன்குறாங்க... இப்போ என்ன பண்ணுறது??? ரவி உன்னால எந்த ஊருனு கண்டுபிடிக்க முடியாதா???”
“ட்ரை பண்ணி பார்க்கிறேன் ஶ்ரீ... ஆனா இதை தெரிஞ்சிக்கிட்டு நம்ம என்ன பண்ணுறது??”
“நாம போய் ஹேமாவ பார்த்து பேசுவோம்.... அவ என்ன நெருக்கடியில இருக்கானு சரியாக தெரியாமல் நம்மளா ஒரு முடிவுக்கு வர முடியாது.... இவ பண்ண காரியத்தால ரொம்ப கஷ்டப்போறது ரித்வி அத்தான் தான்... அவரை தேத்துறதுக்காகவாவது நாம நடந்தது என்னானு தெரிஞ்சிக்கனும்....”
“சரி ஶ்ரீ...நான் ஊருனு கண்டுபிடிக்க ட்ரை பண்ணுறேன்... நீயும் சஞ்சுவும் அவ போனுக்கு ட்ரை பண்ணுங்க....” என்றுவிட்டு தன் மொபைலை எடுத்துக்கொண்டு ரவி சென்றுவிட்டான்... ஶ்ரீயோ தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்....