Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Ongoing Novels
Priyamudan Vijay - Novels
காத்திருந்த காதல்
காத்திருந்த காதல் பகுதி-3
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

3. இனியதோர் செய்தி

ஜீவாவிற்கு மீனா தவிற ரம்யா மற்றும் ஆர்த்தி என்று இரண்டு தோழிகள் இருந்தனர். அவர்களிடம் மீனாவை அறிமுகம் செய்து வைத்து நண்பர்களாக்கி வைத்தான். என்ன தான் ஆர்த்தியும் ரம்யாவும் தோழிகளாக இருந்தாலும், மீனாவிற்கு ஜீவா தான் உற்ற தோழனாக இருந்தான். ஜீவாவிற்கு சம்சுதீன், கணேஷ், ரகு, ஜார்ஜ் மற்றும் கேசவ் என்று ஐந்து நண்பர்கள் இருந்தனர்.

படிப்பதில் மீனா கெட்டிகார பெண்ணாக இருந்தாள். 100க்கு 95 மதிப்பெண்ணிற்கு மேல் தான் வாங்குவாள். ஆனால் ஜீவாவின் மதிப்பெண்களோ 60-களில் இருக்கும்.

கல்லூரியில் முதலாம் வகுப்புத் தேர்வில், அக்கவுண்ட்ஸ் பாடத்தில் மீனா 50 க்கு 50 மதிப்பெண் எடுத்திருந்தாள். நம் ஜீவாவோ, 50க்கு 35 மதிப்பெண் தான் வாங்கியிருந்தான். இதனைக் கண்ட மீனா, வருந்த... அவளின் முகமாற்றத்தை கவனித்த ஜீவா,

"ஏன் உன் முகம் வாடிப் போயிருச்சு மீனா ?" என்று கேட்டு வைக்க.. அவனை நிமிர்ந்து பார்த்த மீனா,

"ஏன் ஜீவா மார்க் இவ்வளவு கம்மியா வாங்கிருக்க?" என்று வருத்தப்பட்டாள்.

"இந்த மார்க்-க்கு என்ன மீனா? செம்ம மார்க்கு.. 50-க்கு 35(!) எடுத்திருக்கேன். எனக்கு இது ரொம்ப பெரிய விசயம் மீனா..." என்று கீழே குனிந்தபடி ஜீவா சிரிக்க..

"ச்சீ ப்பே.. மூஞ்சியப் பாரு.. படிக்கலைனா எங்கிட்ட கேட்டுருக்கலாம்ல? Internal எக்ஸாம் அப்போ, நான் உதவிருப்பேன்ல?" என்ற மீனா தன் கேள்வியாக ஜீவாவைப் பார்த்தாள்.

"உதவியா?? உதவின்னு நீ பதில் பறிமாற்றத்தையா சொல்ற? உனக்கு அதெல்லாம் வருமா? நீ தான் நல்லா படிக்குற பொண்ணாச்சே..!! " தன் வாய்யை பொழந்தான் ஜீவா.

"ஹாஹாஹா... இது என்னப்பா கொடுமையா இருக்கு??!!! நல்லா படிக்குறவங்க பதில் பறிமாற்றத்துக்கு உதவ கூடாதா??" என்று குழுங்கி குழிங்கி மீனா சிரிக்க..ஜீவா, மீனாவையே கண்ணெடுக்காமல் பார்த்தான். பின்பு தன்னிலைக்கு வந்த ஜீவா,

"இல்ல... அது.. அதுவந்து.. பொதுவா நல்லா படிக்குறவங்க எக்ஸாம்ல பதில் சொல்ல மாட்டாங்க. டீச்சர்ஸ் கிட்ட போட்டு தான் கொடுப்பாங்க. நீயும் அப்படி தான் இருப்பனு நினச்சேன்." என்று திக்கி திக்கி ஜீவா ஒருவழியாக கூறி முடித்தான்.

"ஹய்யோ.. நான் அப்படி இல்ல பா. உனக்கு பதில் தேவைப்பட்டா கேளு. கண்டிப்பா சொல்லுவேன். புரியுதா? " என்று மீனா கேட்க.. ஜீவா சரி என்பது போல் தன் தலையை ஆட்டினான்

அடுத்தடுத்து வந்த தேர்வுகளில், மீனாவுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்து, மீனா, என்ன பதில் எழுதுகிறாளோ, அதில் சிறு மாற்றங்கள் அமைத்து..தன் தேர்வினை சிறப்பாக எழுதிமுடித்தான். இவ்வாறாக இவர்களது நாட்கள் சந்தோஷமாகவும் அழகாகவும் நகர்கிறது.

ஒரு நாள், நம் ஜீவா-மீனாவின் துறைத்தலைவர் ஒரு அறிவிப்பு விட தன் துறை மாணவர்களை அணிவகுத்து அமரவைத்தார்.. பின்பு தன் தொண்டையை செறுமிக்கொண்டு மைக்-கினை பிடித்த துறைத்தலைவர்,

"என் அன்பான மாணவ-மாணவிகளே..!! வணக்கம்.. இன்னைக்கு உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்லப்போறேன். 'என்னவாக இருக்கும்'-னு யாராவது யோசனை வச்சுருக்கீங்களா? " என்று தன் முகத்தில் புன்னகை பொங்க கேட்க, அதற்கு ஜீவாவின் வகுப்புத் தோழன் கணேஷ் ,

"நல்ல செய்தியா???!! அப்படினா, நம்ம கீதா மேம் கல்யாணம் வேண்டானு சொல்லிட்டாங்களா? ஹப்ப்ப்பா....! கவலை வேண்டா சார்... நான் இருக்கேன்னு சொல்லுங்க.." என்று அவன் கிண்டலாக கூற.. மாணவ-மாணவிகள் அனைவரும் சிரிக்க... துறைத்தலைவரோ கணேஷை நோக்கி,

"கணேஷ்ஷ்ஷ்...!!!! இந்த மீட்டிங் முடிஞ்சதும் என்னைய வந்து பாரு..." என்று கணேஷை முறைத்தவாறு கூறிவிட்டு மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார். "நான் கணேஷ் சொல்லுற விசயத்த பத்தி பேசவரல... வேற என்ன நற்செய்தி னு சொல்லுங்க பார்ப்போம்.." என்று கூறியவர், பின்பு மீண்டும் ஏதாவது வில்லங்கமான பதில் வந்துவிடும் என்னும் பயத்தில் அவரே அந்த நற்செய்தியைப் பற்றி கூற முன் வந்தார்.

"சரி சரி.... நானே சொல்லிடுறேன். வரும் வெள்ளிக்கிழமை நம்ம டிபார்ட்மெண்ட், சிம்லாக்கு டூர் போறோம். டூர்க்கு கட்டணம் கம்மி தான். வரும் புதன்கிழமைகுள்ள கட்டிருங்க ஸ்டூடண்ட்ஸ்.. காஸ்மீர் வரைக்கும் ரயில்-ல போறோம். அங்கே இருந்து சிம்லாக்கு பஸ்-ல போறோம்." என்று அவர் கூறிமுடித்தவுடன் பலத்த கைதட்டல்கள் அந்த இடத்தை அதிர செய்வது போல் இருந்தது.. மீட்டிங் முடிந்தவுடன், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று, அறிவிப்பு பலகையில் சிம்லா டூர் சம்பந்தமாக மாட்டியிருந்த அறிவிப்பைப் படித்தனர். அதில் டூருக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை ஜீவா, படித்துவிட்டு அதிர்ந்தான். அந்த கட்டணத்தொகை, ஜீவாவால் எளிதாக கட்ட இயலும் தான்.. ஆனால், ஒரு டூருக்காக இந்த பணத்தை செலவு செய்ய, அவன் பெற்றோர்கள் யோசிப்பர்... அதனால், டூருக்கு செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தான் ஜீவா. வகுப்பறைக்கு வந்த ஜீவாவிடம், துள்ளிக்குதித்து வந்த மீனா,

"ஹேய் ஜீவா...!! எத்தனை நாள் டூர்? " என்று அவள் சந்தோஷம் பொங்க கேட்க, ஜீவாவோ சோகளான முகத்துடன்,

"பத்து நாள் டூர் மீனா" என்று கூறிவிட்டு பெருமூச்சு விட்டப்படி அவ்விடத்தை விட்டு நகர..

"ஜீவா... ஜீவா..! "

"சொல்லு மீனா..." என்று கூறியவனின் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாததைக் கண்ட மீனா,

"ஏன் ஜீவா சோகமா இருக்க?" என்று மீனா கேட்கவும்..

' ஆஹா.. இவ நம்ம முகத்த வச்சு சோகமா இருக்கோம்னு கண்டு பிடிச்சுட்டாளே...சரி சமாளிப்போம்' என்றெண்ணிய ஜீவா,

"ஹான்...அது.. அது ஒன்னுமில்ல மீனா.. ஈஈஈஈஈஈஈ" என்று போலியாக சிரிக்க, மீனா தன் புருவத்தை உயர்த்தி..

"டேய்.. என்ன விசயம்னு எங்கிட்ட சொல்ல மாட்டியா?" என்று மீனா, ஜீவாவின் கண்களுக்குள் பார்த்தபடி கேட்க.. ஜீவா தன் சோகத்திற்கான காரணத்தைக் கூறினான்.

"அது...டூர் கட்டணத்துக்கு வீட்டுல பணம் கொடுக்க மாட்டாங்க பா..இந்த பணத்த ஈஸியா கட்டிடலாம். ஆனால், வீட்டுல பணம் தர மாட்டாங்க.. 'ஒரு டூருக்கு பணம் செலவு பண்ணணுமா?'-னு யோசிப்பாங்க. அதான், டூருக்கு வரவேண்டாம்-னு முடிவு பண்ணிட்டேன்." என்று ஜீவா மீண்டும் சோகமாக..

"ஓ!!! இதுக்கு தான் நீ இவ்வளவு சோகமாக இருக்கியா? டேய் லூசு..!! நாளைக்கு உனக்கும் சேர்த்து பணம் கட்டிறேன்." என்று மீனா கூறவும் அதிர்ந்த ஜீவா,

"ஹேய் ஹேய்... அதெல்லாம் வேண்டா பா."

"என்ன ஜீவா இப்படி சொல்லிட்ட? என்னைய உன் ப்ரண்ட்-ஆ நினச்சுருந்தா, இப்படி சொல்லிருப்பியா?" என்று மீனாவும் சோகமானாள்.

"நட்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல மீனா.." என்று அதிர்ச்சியான முகப்பாவத்துடன் கூறிய ஜீவாவிடம்,

"அப்ப நாளைக்கே உனக்கும் சேர்த்து டூர் க்கு பணம் கட்டிறேன்." என்று மீனா மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தாள்.

"என்ன பா? அதெல்லாம் வேணா மீனா. நான் வரல." என்று தன் முகத்தைத் திருப்பிக்கொண்ட ஜீவாவை முறைத்தாள் மீனா.

"ஹேய் என்ன? நாளைக்கு நான் உனக்கும் சேர்த்து பணம் கட்டுறேன். இதுக்கு மேல நீ ஏதாவது பேசுனா, நான் உனக்கு வேணானு அர்த்தம்." என்று தன் இடப்பக்க புருவத்தை மட்டும் உயர்த்தி, ஜீவாவை முறைத்த வண்ணம் மீனா கூற..

"ஏய்.. என்ன மீனா...? டக்குனு இப்படி சொல்லிட்ட? சரி..உன் இஷ்டம்." என்று ஜீவா கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர முயன்றான்.

"ஓய் ஜீவா... நீ கண்டிப்பா டூருக்கு வரணும்.. வர்ற..." என்று கண்டிப்பான குரலில் கூறிவிட்டு தன் இருக்கையில் போய் உட்கார்ந்தாள். அவளருகில் இருந்த தன் இருக்கையில் அமர்ந்த ஜீவா, மீனாவின் முகத்தை வருத்தத்துடன் நோக்கினான்.

"மீனா.. சரி.. நான் டூருக்கு வர்றேன்." என்று அவன் கூறவும், மீனாவின் முகம் மலர்வதைக் கண்டுக்கொண்டான் ஜீவா.

"ம்ம்ம்... ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்" என்று முகத்தில் பெருமை பொங்க கூறிய மீனாவைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தான்.

"என்னது?? பயமா?? யாருக்கு பா??" என்ற ஜீவா சிரித்துக்கொண்டே இருக்க..

"உனக்கு தான் பயம்..." என்ற மீனா, தன் பெருமை பொங்க இருந்த முகத்தை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க.. ஜீவாவிற்கு தன் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ஓஹோ.... யாரு மேல பயம்??" என்று சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு ஜீவா கேட்கவும்..

"உனக்கு என்மேல உள்ள பயத்த சொன்னேன்.. புரியுதா?" என்றீ மீனா கூற... தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான் ஜீவா..

"இப்போ எதுக்கு இந்த சிரிப்புனு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்ற மீனாவை சிரித்தப்படி நோக்கிய ஜீவா,

"இந்த வருஷத்தோட பெஸ்ட் காமெடி இப்போ நீ சொன்ன பயம் மேட்டர் தான் மீனா. செம்ம காமெடி போ..." என்றபடி சிரித்தவனைக் கண்ட மீனா யோசனையாகப் பார்த்தபடி,

"அப்போ பயத்துனால வர்றேன்னு சொல்லலையா?" என்க.. மீனாவின் யோசனையான முகம் ஜீவாவை ஈர்த்தது. சற்று நேரம் தன்னை மறந்தவனாக மீனாவின் முகத்தையே வெகுநேரம் பார்த்த ஜீவா, மீனாவின் கண்களை நோக்கி..

"பயத்துனாலலாம் இல்ல.. உனக்காக தான் வர்றேன்னு சொன்னேன்." என்று தன் கண்கள் மின்ன கூறிய ஜீவாவை மேலும் யோசனையாகப் பார்த்த மீனா,

"எனக்காக-னா?" என்று அவள் கேள்வியாக கேட்கவும் தன்னிலைக்கு வந்த ஜீவா, சூழ்நிலையை சமாளிக்கும் எண்ணத்தில்..

"உனக்காகனா, உனக்காகத் தான்.. சரி அதெல்லாம் இருக்கட்டும். நான் டூர் வர்றதுல மேடம்க்கு ஏன் அவ்வளவு ஆர்வம்?" என்ற ஜீவா, மீனாவின் பதிலுக்காக ஆர்வத்துடன் அவளைப் பார்க்க..மீனாவோ, இவன் பார்வையின் அர்த்தத்தை புரியாதவளாய்..

"நான் இந்த காலேஜ்க்கு வந்த புதுசுல யாருமே எங்கூட இல்ல.. யாருமே இல்லாத தனிமையில இருந்த எனக்கு துணையா நீ தான் கிடச்ச. இப்போ உனக்கு ஒரு தேவைங்கிறபோது நான் உனக்கு துணையா இல்லைனா எப்படி ஜீவா? சொல்லப்போனா, எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும் ஜீவா." என்று உணர்ச்சிப்பொங்க கூறினாள் மீனா. அவளின் இந்த வார்த்தைகளில் மேலும் ஈர்க்கப்பட்டவனாக.

"ஹேய்...மீனா.....!!! " என்று கண்கள் மின்ன கேட்ட ஜீவாவை குழப்பத்துடன் பார்த்த மீனா,

"என்ன...?" என்று கேட்டு வைக்க..

"ஒன்னுமில்ல..." என்று மின்னிய கண்களை மாற்றாமல் கூறிய ஜீவாவிடம்..

"அப்போ சரி. போய் சாப்பிடு பா. லஞ்ச் டைம் ஆகிடுச்சு பாரு. நானும் சாப்பிட்டு வர்றேன். சாப்பாடு சாப்பிட்டு சீக்கிரம் வந்திடு. சரியா?" என்று கூறியப்படி தனது சாப்பாடு டப்பாவை எடுத்துக்கொண்டிருந்தாள் மீனா. தன் வாயிலிருந்து வார்த்தைகள் வராத ஜீவா, வெறும் "ம்ம்ம்" என்று மட்டும் கூறியவனின் கண்களில், மின்னல் மட்டும் குறையவே இல்லை.

தன் சாப்பாடு டப்பாவை எடுத்துக்கொண்டு, கான்டீன் டேபிளில் வைத்து சாப்பிட ஆரம்பித்த ஜீவாவிற்கு மீனா கூறிய வார்த்தைகள் தான் அவன் காதில் விழுந்தப்படியே இருந்தது.

' எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும் ஜீவா... ஈஈஈஈஈஈ.... என்னைய ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டாளே! இத நினைக்கும் போதெல்லாம் சும்மா ஜிவ்வுனு இருக்கே... மீனா எந்த அர்த்தத்துல இத சொல்லிருப்பா..?? ' என்று எண்ணியவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் எழுந்தது.

'அவ என்னைய நண்பன் ங்கற அர்த்தத்துல கூட சொல்லிருப்பா. ஆனா, நம்ம மனசு வேற ஒரு அர்த்தத்த எதிர்ப்பார்க்குதே! ஏன் இப்படி? எனக்கு ஏன் அவள நினைக்கும் போதெல்லாம் ரொம்ப சந்தோஷமா...ஜிவ்வுனு இருக்குது? ' என்று யோசித்தவனின் மூளைக்கு அதற்கான பதில் புரியவே.. அவன் உதட்டோரம் சிறு புன்னகை ஒன்றை உதிர்த்தவன், தன் மனதிற்குள்ளே,

'மீனா... ஐ லவ் யூ.... ஐ..லவ்..யூ..மீனா!' என்று காதல் பொங்க தனக்குள்ளேயே கூறிக்கொண்டான் ஜீவா. மீண்டும் மீனா கூறிய வார்த்தைகளை அசைப்பபோட்டவனுக்கு ஒரு பாடல் நினைவு வரவே.. அப்பாடலை முனுமுனுத்தான்..

"மின்னல் ஒருகோடி எந்தன் உயிர்த் தேடி வந்ததே!!! ஓஓஓஓ...

லட்சப் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே..!!

உன் வார்த்தை தேன் வார்த்ததே...!!

ஏழைத் தேடிய ராணி நீ என், காதல் தேவதையே...!!! "

அன்று முழுவதும் இப்பாடலை முனுமுனுத்தப்படியே இருந்தான் ஜீவா...

மீனா மீது வெறும் ஈர்ப்பு மட்டும் கொண்டிருந்த ஜீவா, இப்பொழுது அவள் காட்டிய பிரியத்தில், மீனா மீது காதலாகிவிட்டான். இனி நடக்கவிருப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

[QUOTE="Priyamudan Vijay, post: 1649, member: 33"] 3. இனியதோர் செய்தி 😁 ஜீவாவிற்கு மீனா தவிற ரம்யா மற்றும் ஆர்த்தி என்று இரண்டு தோழிகள் இருந்தனர். அவர்களிடம் மீனாவை அறிமுகம் செய்து வைத்து நண்பர்களாக்கி வைத்தான். என்ன தான் ஆர்த்தியும் ரம்யாவும் தோழிகளாக இருந்தாலும், மீனாவிற்கு ஜீவா தான் உற்ற தோழனாக இருந்தான். ஜீவாவிற்கு சம்சுதீன், கணேஷ், ரகு, ஜார்ஜ் மற்றும் கேசவ் என்று ஐந்து நண்பர்கள் இருந்தனர். படிப்பதில் மீனா கெட்டிகார பெண்ணாக இருந்தாள். 100க்கு 95 மதிப்பெண்ணிற்கு மேல் தான் வாங்குவாள். ஆனால் ஜீவாவின் மதிப்பெண்களோ 60-களில் இருக்கும். கல்லூரியில் முதலாம் வகுப்புத் தேர்வில், அக்கவுண்ட்ஸ் பாடத்தில் மீனா 50 க்கு 50 மதிப்பெண் எடுத்திருந்தாள். நம் ஜீவாவோ, 50க்கு 35 மதிப்பெண் தான் வாங்கியிருந்தான். இதனைக் கண்ட மீனா, வருந்த... அவளின் முகமாற்றத்தை கவனித்த ஜீவா, "ஏன் உன் முகம் வாடிப் போயிருச்சு மீனா ?" என்று கேட்டு வைக்க.. அவனை நிமிர்ந்து பார்த்த மீனா, "ஏன் ஜீவா மார்க் இவ்வளவு கம்மியா வாங்கிருக்க?" என்று வருத்தப்பட்டாள். "இந்த மார்க்-க்கு என்ன மீனா? செம்ம மார்க்கு.. 50-க்கு 35(!) எடுத்திருக்கேன். எனக்கு இது ரொம்ப பெரிய விசயம் மீனா..." என்று கீழே குனிந்தபடி ஜீவா சிரிக்க.. "ச்சீ ப்பே.. மூஞ்சியப் பாரு.. படிக்கலைனா எங்கிட்ட கேட்டுருக்கலாம்ல? Internal எக்ஸாம் அப்போ, நான் உதவிருப்பேன்ல?" என்ற மீனா தன் கேள்வியாக ஜீவாவைப் பார்த்தாள். "உதவியா?? உதவின்னு நீ பதில் பறிமாற்றத்தையா சொல்ற? உனக்கு அதெல்லாம் வருமா? நீ தான் நல்லா படிக்குற பொண்ணாச்சே..!! " தன் வாய்யை பொழந்தான் ஜீவா. "ஹாஹாஹா... இது என்னப்பா கொடுமையா இருக்கு??!!! நல்லா படிக்குறவங்க பதில் பறிமாற்றத்துக்கு உதவ கூடாதா??" என்று குழுங்கி குழிங்கி மீனா சிரிக்க..ஜீவா, மீனாவையே கண்ணெடுக்காமல் பார்த்தான். பின்பு தன்னிலைக்கு வந்த ஜீவா, "இல்ல... அது.. அதுவந்து.. பொதுவா நல்லா படிக்குறவங்க எக்ஸாம்ல பதில் சொல்ல மாட்டாங்க. டீச்சர்ஸ் கிட்ட போட்டு தான் கொடுப்பாங்க. நீயும் அப்படி தான் இருப்பனு நினச்சேன்." என்று திக்கி திக்கி ஜீவா ஒருவழியாக கூறி முடித்தான். "ஹய்யோ.. நான் அப்படி இல்ல பா. உனக்கு பதில் தேவைப்பட்டா கேளு. கண்டிப்பா சொல்லுவேன். புரியுதா? " என்று மீனா கேட்க.. ஜீவா சரி என்பது போல் தன் தலையை ஆட்டினான் அடுத்தடுத்து வந்த தேர்வுகளில், மீனாவுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்து, மீனா, என்ன பதில் எழுதுகிறாளோ, அதில் சிறு மாற்றங்கள் அமைத்து..தன் தேர்வினை சிறப்பாக எழுதிமுடித்தான். இவ்வாறாக இவர்களது நாட்கள் சந்தோஷமாகவும் அழகாகவும் நகர்கிறது. ஒரு நாள், நம் ஜீவா-மீனாவின் துறைத்தலைவர் ஒரு அறிவிப்பு விட தன் துறை மாணவர்களை அணிவகுத்து அமரவைத்தார்.. பின்பு தன் தொண்டையை செறுமிக்கொண்டு மைக்-கினை பிடித்த துறைத்தலைவர், "என் அன்பான மாணவ-மாணவிகளே..!! வணக்கம்.. இன்னைக்கு உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்லப்போறேன். 'என்னவாக இருக்கும்'-னு யாராவது யோசனை வச்சுருக்கீங்களா? " என்று தன் முகத்தில் புன்னகை பொங்க கேட்க, அதற்கு ஜீவாவின் வகுப்புத் தோழன் கணேஷ் , "நல்ல செய்தியா???!! அப்படினா, நம்ம கீதா மேம் கல்யாணம் வேண்டானு சொல்லிட்டாங்களா? ஹப்ப்ப்பா....! கவலை வேண்டா சார்... நான் இருக்கேன்னு சொல்லுங்க.." என்று அவன் கிண்டலாக கூற.. மாணவ-மாணவிகள் அனைவரும் சிரிக்க... துறைத்தலைவரோ கணேஷை நோக்கி, "கணேஷ்ஷ்ஷ்...!!!! இந்த மீட்டிங் முடிஞ்சதும் என்னைய வந்து பாரு..." என்று கணேஷை முறைத்தவாறு கூறிவிட்டு மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார். "நான் கணேஷ் சொல்லுற விசயத்த பத்தி பேசவரல... வேற என்ன நற்செய்தி னு சொல்லுங்க பார்ப்போம்.." என்று கூறியவர், பின்பு மீண்டும் ஏதாவது வில்லங்கமான பதில் வந்துவிடும் என்னும் பயத்தில் அவரே அந்த நற்செய்தியைப் பற்றி கூற முன் வந்தார். "சரி சரி.... நானே சொல்லிடுறேன். வரும் வெள்ளிக்கிழமை நம்ம டிபார்ட்மெண்ட், சிம்லாக்கு டூர் போறோம். டூர்க்கு கட்டணம் கம்மி தான். வரும் புதன்கிழமைகுள்ள கட்டிருங்க ஸ்டூடண்ட்ஸ்.. காஸ்மீர் வரைக்கும் ரயில்-ல போறோம். அங்கே இருந்து சிம்லாக்கு பஸ்-ல போறோம்." என்று அவர் கூறிமுடித்தவுடன் பலத்த கைதட்டல்கள் அந்த இடத்தை அதிர செய்வது போல் இருந்தது.. மீட்டிங் முடிந்தவுடன், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று, அறிவிப்பு பலகையில் சிம்லா டூர் சம்பந்தமாக மாட்டியிருந்த அறிவிப்பைப் படித்தனர். அதில் டூருக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை ஜீவா, படித்துவிட்டு அதிர்ந்தான். அந்த கட்டணத்தொகை, ஜீவாவால் எளிதாக கட்ட இயலும் தான்.. ஆனால், ஒரு டூருக்காக இந்த பணத்தை செலவு செய்ய, அவன் பெற்றோர்கள் யோசிப்பர்... அதனால், டூருக்கு செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தான் ஜீவா. வகுப்பறைக்கு வந்த ஜீவாவிடம், துள்ளிக்குதித்து வந்த மீனா, "ஹேய் ஜீவா...!! எத்தனை நாள் டூர்? " என்று அவள் சந்தோஷம் பொங்க கேட்க, ஜீவாவோ சோகளான முகத்துடன், "பத்து நாள் டூர் மீனா" என்று கூறிவிட்டு பெருமூச்சு விட்டப்படி அவ்விடத்தை விட்டு நகர.. "ஜீவா... ஜீவா..! " "சொல்லு மீனா..." என்று கூறியவனின் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாததைக் கண்ட மீனா, "ஏன் ஜீவா சோகமா இருக்க?" என்று மீனா கேட்கவும்.. ' ஆஹா.. இவ நம்ம முகத்த வச்சு சோகமா இருக்கோம்னு கண்டு பிடிச்சுட்டாளே...சரி சமாளிப்போம்' என்றெண்ணிய ஜீவா, "ஹான்...அது.. அது ஒன்னுமில்ல மீனா.. ஈஈஈஈஈஈஈ" என்று போலியாக சிரிக்க, மீனா தன் புருவத்தை உயர்த்தி.. "டேய்.. என்ன விசயம்னு எங்கிட்ட சொல்ல மாட்டியா?" என்று மீனா, ஜீவாவின் கண்களுக்குள் பார்த்தபடி கேட்க.. ஜீவா தன் சோகத்திற்கான காரணத்தைக் கூறினான். "அது...டூர் கட்டணத்துக்கு வீட்டுல பணம் கொடுக்க மாட்டாங்க பா..இந்த பணத்த ஈஸியா கட்டிடலாம். ஆனால், வீட்டுல பணம் தர மாட்டாங்க.. 'ஒரு டூருக்கு பணம் செலவு பண்ணணுமா?'-னு யோசிப்பாங்க. அதான், டூருக்கு வரவேண்டாம்-னு முடிவு பண்ணிட்டேன்." என்று ஜீவா மீண்டும் சோகமாக.. "ஓ!!! இதுக்கு தான் நீ இவ்வளவு சோகமாக இருக்கியா? டேய் லூசு..!! நாளைக்கு உனக்கும் சேர்த்து பணம் கட்டிறேன்." என்று மீனா கூறவும் அதிர்ந்த ஜீவா, "ஹேய் ஹேய்... அதெல்லாம் வேண்டா பா." "என்ன ஜீவா இப்படி சொல்லிட்ட? என்னைய உன் ப்ரண்ட்-ஆ நினச்சுருந்தா, இப்படி சொல்லிருப்பியா?" என்று மீனாவும் சோகமானாள். "நட்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல மீனா.." என்று அதிர்ச்சியான முகப்பாவத்துடன் கூறிய ஜீவாவிடம், "அப்ப நாளைக்கே உனக்கும் சேர்த்து டூர் க்கு பணம் கட்டிறேன்." என்று மீனா மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தாள். "என்ன பா? அதெல்லாம் வேணா மீனா. நான் வரல." என்று தன் முகத்தைத் திருப்பிக்கொண்ட ஜீவாவை முறைத்தாள் மீனா. "ஹேய் என்ன? நாளைக்கு நான் உனக்கும் சேர்த்து பணம் கட்டுறேன். இதுக்கு மேல நீ ஏதாவது பேசுனா, நான் உனக்கு வேணானு அர்த்தம்." என்று தன் இடப்பக்க புருவத்தை மட்டும் உயர்த்தி, ஜீவாவை முறைத்த வண்ணம் மீனா கூற.. "ஏய்.. என்ன மீனா...? டக்குனு இப்படி சொல்லிட்ட? சரி..உன் இஷ்டம்." என்று ஜீவா கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர முயன்றான். "ஓய் ஜீவா... நீ கண்டிப்பா டூருக்கு வரணும்.. வர்ற..." என்று கண்டிப்பான குரலில் கூறிவிட்டு தன் இருக்கையில் போய் உட்கார்ந்தாள். அவளருகில் இருந்த தன் இருக்கையில் அமர்ந்த ஜீவா, மீனாவின் முகத்தை வருத்தத்துடன் நோக்கினான். "மீனா.. சரி.. நான் டூருக்கு வர்றேன்." என்று அவன் கூறவும், மீனாவின் முகம் மலர்வதைக் கண்டுக்கொண்டான் ஜீவா. "ம்ம்ம்... ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்" என்று முகத்தில் பெருமை பொங்க கூறிய மீனாவைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தான். "என்னது?? பயமா?? யாருக்கு பா??" என்ற ஜீவா சிரித்துக்கொண்டே இருக்க.. "உனக்கு தான் பயம்..." என்ற மீனா, தன் பெருமை பொங்க இருந்த முகத்தை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க.. ஜீவாவிற்கு தன் சிரிப்பை அடக்க முடியவில்லை. "ஓஹோ.... யாரு மேல பயம்??" என்று சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு ஜீவா கேட்கவும்.. "உனக்கு என்மேல உள்ள பயத்த சொன்னேன்.. புரியுதா?" என்றீ மீனா கூற... தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான் ஜீவா.. "இப்போ எதுக்கு இந்த சிரிப்புனு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்ற மீனாவை சிரித்தப்படி நோக்கிய ஜீவா, "இந்த வருஷத்தோட பெஸ்ட் காமெடி இப்போ நீ சொன்ன பயம் மேட்டர் தான் மீனா. செம்ம காமெடி போ..." என்றபடி சிரித்தவனைக் கண்ட மீனா யோசனையாகப் பார்த்தபடி, "அப்போ பயத்துனால வர்றேன்னு சொல்லலையா?" என்க.. மீனாவின் யோசனையான முகம் ஜீவாவை ஈர்த்தது. சற்று நேரம் தன்னை மறந்தவனாக மீனாவின் முகத்தையே வெகுநேரம் பார்த்த ஜீவா, மீனாவின் கண்களை நோக்கி.. "பயத்துனாலலாம் இல்ல.. உனக்காக தான் வர்றேன்னு சொன்னேன்." என்று தன் கண்கள் மின்ன கூறிய ஜீவாவை மேலும் யோசனையாகப் பார்த்த மீனா, "எனக்காக-னா?" என்று அவள் கேள்வியாக கேட்கவும் தன்னிலைக்கு வந்த ஜீவா, சூழ்நிலையை சமாளிக்கும் எண்ணத்தில்.. "உனக்காகனா, உனக்காகத் தான்.. சரி அதெல்லாம் இருக்கட்டும். நான் டூர் வர்றதுல மேடம்க்கு ஏன் அவ்வளவு ஆர்வம்?" என்ற ஜீவா, மீனாவின் பதிலுக்காக ஆர்வத்துடன் அவளைப் பார்க்க..மீனாவோ, இவன் பார்வையின் அர்த்தத்தை புரியாதவளாய்.. "நான் இந்த காலேஜ்க்கு வந்த புதுசுல யாருமே எங்கூட இல்ல.. யாருமே இல்லாத தனிமையில இருந்த எனக்கு துணையா நீ தான் கிடச்ச. இப்போ உனக்கு ஒரு தேவைங்கிறபோது நான் உனக்கு துணையா இல்லைனா எப்படி ஜீவா? சொல்லப்போனா, எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும் ஜீவா." என்று உணர்ச்சிப்பொங்க கூறினாள் மீனா. அவளின் இந்த வார்த்தைகளில் மேலும் ஈர்க்கப்பட்டவனாக. "ஹேய்...மீனா.....!!! " என்று கண்கள் மின்ன கேட்ட ஜீவாவை குழப்பத்துடன் பார்த்த மீனா, "என்ன...?" என்று கேட்டு வைக்க.. "ஒன்னுமில்ல..." என்று மின்னிய கண்களை மாற்றாமல் கூறிய ஜீவாவிடம்.. "அப்போ சரி. போய் சாப்பிடு பா. லஞ்ச் டைம் ஆகிடுச்சு பாரு. நானும் சாப்பிட்டு வர்றேன். சாப்பாடு சாப்பிட்டு சீக்கிரம் வந்திடு. சரியா?" என்று கூறியப்படி தனது சாப்பாடு டப்பாவை எடுத்துக்கொண்டிருந்தாள் மீனா. தன் வாயிலிருந்து வார்த்தைகள் வராத ஜீவா, வெறும் "ம்ம்ம்" என்று மட்டும் கூறியவனின் கண்களில், மின்னல் மட்டும் குறையவே இல்லை.  தன் சாப்பாடு டப்பாவை எடுத்துக்கொண்டு, கான்டீன் டேபிளில் வைத்து சாப்பிட ஆரம்பித்த ஜீவாவிற்கு மீனா கூறிய வார்த்தைகள் தான் அவன் காதில் விழுந்தப்படியே இருந்தது. ' எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும் ஜீவா... ஈஈஈஈஈஈ.... என்னைய ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டாளே! இத நினைக்கும் போதெல்லாம் சும்மா ஜிவ்வுனு இருக்கே... மீனா எந்த அர்த்தத்துல இத சொல்லிருப்பா..?? ' என்று எண்ணியவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் எழுந்தது. 'அவ என்னைய நண்பன் ங்கற அர்த்தத்துல கூட சொல்லிருப்பா. ஆனா, நம்ம மனசு வேற ஒரு அர்த்தத்த எதிர்ப்பார்க்குதே! ஏன் இப்படி? எனக்கு ஏன் அவள நினைக்கும் போதெல்லாம் ரொம்ப சந்தோஷமா...ஜிவ்வுனு இருக்குது? ' என்று யோசித்தவனின் மூளைக்கு அதற்கான பதில் புரியவே.. அவன் உதட்டோரம் சிறு புன்னகை ஒன்றை உதிர்த்தவன், தன் மனதிற்குள்ளே, 'மீனா... ஐ லவ் யூ.... ஐ..லவ்..யூ..மீனா!' என்று காதல் பொங்க தனக்குள்ளேயே கூறிக்கொண்டான் ஜீவா. மீண்டும் மீனா கூறிய வார்த்தைகளை அசைப்பபோட்டவனுக்கு ஒரு பாடல் நினைவு வரவே.. அப்பாடலை முனுமுனுத்தான்.. "மின்னல் ஒருகோடி எந்தன் உயிர்த் தேடி வந்ததே!!! ஓஓஓஓ... லட்சப் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே..!! உன் வார்த்தை தேன் வார்த்ததே...!! ஏழைத் தேடிய ராணி நீ என், காதல் தேவதையே...!!! " அன்று முழுவதும் இப்பாடலை முனுமுனுத்தப்படியே இருந்தான் ஜீவா... _____________________________________ மீனா மீது வெறும் ஈர்ப்பு மட்டும் கொண்டிருந்த ஜீவா, இப்பொழுது அவள் காட்டிய பிரியத்தில், மீனா மீது காதலாகிவிட்டான். இனி நடக்கவிருப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்... _____________________________________ [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Ongoing Novels
Priyamudan Vijay - Novels
காத்திருந்த காதல்
காத்திருந்த காதல் பகுதி-3
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN