தாயுமானவன் 05

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சின்ன சின்ன கனவுகளை நெஞ்சில் சுமந்து...
வண்ண வண்ண கற்பனைக் கொண்டு உன்னைக் காதல் செய்கையில்...

அவன் தாயுமானவன்...



ஆகாயம் தூரிகையைக் கொண்டு தன் மேனி முழுதும் கருப்பு நிறத்தைப் பூசிக்கொண்டது... பறவைகளும் சின்னஞ்சிறு விலங்குகளும் சத்தமின்றி தங்கள் இருப்பிடத்தில் பதுங்கி விட்டன... ஓநாய்களும் நரிகளும் இருட்டில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கின...

காடிகார முள் மணி இரவு பத்தாகிவிட்டதை நினைவு படுத்தியது... அதுவரை கடிகார வீட்டில் அமைதியாய் உறங்கி கொண்டிருந்த குயிலென்று அழகாய் பத்து முறை கூவிச் சென்றது...

கருப்பு நிற Hilux ரக ஜீப் கார் அந்த இரண்டடுக்கு மாளிகையின் முன் வழுக்கிக்கொண்டு வந்து நின்றது...
அதிலிருந்த இறுகிய முகத்தோடு கம்பீரமாக இறங்கினான் ஆகாஷ்...

வெளிநாட்டு நிறுவனத்தோடு புதிய டீலிங்கை முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தான் ஆகாஷ்...

யாருக்காகவும் நிற்காமல் சுழன்று கொண்டிருக்கும் வியாபார உலகில் அவனுக்கு அமைதியை தருவது என்னமோ அவன் அக்கா இருக்கும் இந்த இடம்தான்...

ஆகாஷ் ஹோட்டல் துறையில் கொடி கட்டி பறக்கும் இளம் வயது நாயகன்... தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்தால் பெண்களை நெருங்கவே யோசிப்பவன்...

அவன் உருவாக்கிய உலகில் தன் அக்காவைத் தவிர வேறொரு பெண் இதுநாள் வரை நுழைந்து இல்லை.. இவன் நுழையவிட்டதுமில்லை... பார்வைக்குக் கரடு முரடாய் தெரிபவனுள் அன்பு, பாசம், காதல் என உணர்வுகளின் கலவை எல்லாம் ஒளிந்திருந்தாலும் அதை வெளிக்கொணரதான் சிற்பமாய் செதுக்கிட தான் யாருமில்லை.

ஆகாஷின் வீடு கும்மிருட்டில் மூழ்கியருந்தது... விளக்கின் விசையை அழுத்தியவனுக்கு சிரித்த முகத்தோடு தரிசனம் தந்தது மித்ராவின் ஆளுயர புகைப்படம்...

"வந்துட்டிங்களா தம்பி... சின்னம்மா இன்னும் வீட்டுக்கு வரல... ஏதோ முக்கியமான வேலை இருக்காம் நீங்க வந்தா உங்களுக்கு சாப்பாடு பறிமாற சொன்னாங்க...", 20 வருடங்களுக்கு மேலாக ஆகாஷின் வீட்டில் சமையல்காரராக இருக்கும் வேலு பவ்யமாக அவன் முன்னே நின்றார்... கூடவே அவரது மனைவி மருதாயியும் வந்து சேர்ந்தார்...

அந்த வீட்டின் சமையலும் வீட்டைப் பராமரிப்பதும் தான் இவர்களின் வேலை... இத்தம்பதியினரின் ஒரே மகள் சாருமதி... மருதாயியின் பெற்றோரோடு வசிக்கிறாள்...

"எனக்கு பசியில்லை வேலுண்ணா... நீங்க போய் தூங்குங்க... நான் அக்கா கூட சாப்பிட்டுக்குறன்... அக்காவ கூட்டிட்டு வர லேட் நைட் ஆகலாம்... நீங்க வெய்ட் பண்ண வேணாம்...", என்றவன் அவரின் பதிலை எதிர்பாராது தன் ஜீப்பை நோக்கி நடந்தான்...

ஆகாஷின் இந்த ஒட்டுதல் இல்லாத பேச்சு வேலுவின் மனதைக் கவலை கொள்ள செய்தது... 'எப்படி சந்தோஷமா கலகலனு எல்லோரோடும் பழகுன பையன் இன்னிக்கு எப்படி இருக்கான்', மனதில் நினைத்ததை வெளியில் தான் சொல்ல முடியவில்லை அவரால்...

ஆகாஷ் மித்ராவின் ஒரே தம்பி....

(இந்த உம்மனா மூஞ்சிக்கு அழகு தேவதை மித்ரா அக்காவானு நீங்க நினைக்குறது தெரியுது.... பட் வாட் டு டூ... அதுதான் உண்மை...)

மித்ரா இன்னும் வீடு திரும்பவில்லை என அறிந்து கொண்டவன் நேரே சென்ற இடம் 'அன்பு இல்லம்'...

மித்ராவின் குழந்தை நல மருத்துவமனையும் அன்பு இல்லமும் ஒறுங்கே செயல்பட்டு வந்தது...

'ஏன்தான் இந்த அக்கா வேல வேலனு உடம்ப கெடுத்துக்குறாங்கனு தெரியலை... நான் சொன்னாலும் கேட்கவே மாட்டேன்றாங்க ' என்று தனக்குள்ளே தன் அக்காவைக் கடிந்து கொண்டவன் சத்தமின்றி மித்ராவின் அறையினுள் நுழைந்தான்...

அங்கே தன் வேலையில் மூழ்கியிருந்தாள் மித்ரா... ஆகாஷ் அவள் அறைக்குள் நுழைந்து பத்து நிமிடம் கடந்திருந்தது... அவனது வரவை அவள் உணர்ந்து கொள்ளவே இல்லை...

"மிஸ் மித்ரா... இங்க ஒருத்தன் நிக்குறது உங்களுக்குத் தெரியுதா இல்லையா???", ஆகாஷின் குரலால் தன் வேலை தடைப்பட அவனை நேர்பார்வை பார்த்தாள் மித்ரா...

"என்னக்கா இது நான் எத்தன தடவ சொல்லிருக்கன்.. லேட் நைட்ல வேர்க் பண்ணாதன்னு எனக்கு அட்வைஸ் கொடுக்குற ஆளு... இப்ப நீங்க என்ன பண்றிங்க மேடம்", என்றான் ஆகாஷ் முகத்தில் புன்னகை மாறாமல்.

"கொஞ்சம் வேலை மிச்சம் இருக்கு... வெய்ட் பண்ணு ஆகாஷ் இதோ வரேன்", என்றவள் மீண்டும் தன் கோப்புகளில் கவனத்தைச் செலுத்தினாள்...

"சரி சரி சீக்கிரம் முடிச்சிட்டு வாங்க...", அங்கிருந்த புத்தகங்களைப் புரட்டியபடியே அமர்ந்திருந்தான் ஆகாஷ்...

தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்தவளின் பார்வையை நிறைத்தான் ஆகாஷ்... அவனின் முகத்தையையே சிறிது நேரம் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்த மித்ராவின் ஞாபக அலைகள் 15 வருடங்கள் பின் சென்றது.

அன்று அழகிய பூந்தோட்டமாய் விளங்கியது மித்ராவின் குடும்பம்...

பண்பான அப்பா, அன்பான அம்மா, சின்ன சின்ன சேட்டைகள் செய்து அம்மாவிடம் அடிகளை இலவசமாக பெற்றுக் கொள்ளும் செல்ல தம்பி ஆகாஷ் என மித்ராவின் வாழ்வு வண்ணமயமாய் நகர்ந்தது...

என்ன நடந்தது எப்படி நடந்தது என்று உணரும் முன்னே அனைத்தும் நடந்தேறி விட்டது.

அம்மாவே உலகமென வாழ்ந்து கொண்டிருந்த இரு பிள்ளைகள் அன்று அனுபவித்த வலிகளைச் சொல்லினால் அடக்கிவிட முடியாது.

"எனக்கு இனி உங்களோடு வாழ விருப்பமில்லை. என் மனம் கவர்ந்த ஒருவரோடு என் வாழ்க்கையைத் தொடர போகிறேன். என்னை எக்காரணத்தைக் கொண்டும் தேட வேண்டாம்" என்ற அம்மாவின் கடிதத்தினால் அந்த இனிய குடும்பத்தின் வாழ்க்கையே சரிந்து விழுந்தது.

அம்மாவின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஆகாஷின் முகத்தில் நெருங்குபவரைச் சுட்டெரிக்கும் கோபத்தையும் அளவில்லா வெறுப்பையும் அன்றுதான் முதன் முதலாக மித்ரா கண்டு கொண்டாள்.

பத்து வயதே நிறம்பிய சிறுவன் தாயின் பிரிவை தாங்காது அவரின் துரோகத்தை தாங்க இயலாது அவரின் மீது கொண்ட அன்பை வெறுப்பாய் கக்கினான்.

எப்பொழுதும் புன்னகைத்து கண்ட தன் தந்தை முதன் முதலாய் கண்ணீர் சிந்த கண்ட நாளும் அதுதான்... அதன் தாக்கம் மித்ராவை விடவும் ஆகாஷைத்தான் அதிகளவில் பாதித்தது...

அம்மா என்றொருவர் தன் வாழ்வில் இருந்தார் என்பதை மறந்தது மட்டுமல்லாது பெண்களை அடியோடு வெறுக்கவும் தொடங்கினான்...

(ஒரு பெண் செஞ்ச தப்புக்கு எல்லா பொண்ணையும் குற்றம் சொன்னா எப்டி மிஸ்டர். ஆகாஷ் பாவம் மயூ... இவன்கிட்ட மாட்டிட்டு என்ன அவஸ்தபட போறாளோ...)

அம்மாவின் பிரிவுக்குப் பின் மித்ராவையும் ஆகாஷையும் அவர்களது தந்தை மிகுந்த அன்போடு கவனித்துக் கொண்டார்... அவர்களின் அம்மா சந்தர்ப சூழ்நிலைகளால் செய்த தவறை மன்னிக்குமாறு பல முறை வேண்டியும் இருக்கிறார்...

எது எப்படி இருப்பினும் தங்களையும் தங்கள் தந்தையையும் தனிமரமாய் விட்டு சென்ற அம்மாவின் மீது அந்த பத்து வயது சிறுவன் பகைமை உணர்வினை வளர்த்து கொண்டிருக்கிறான் என்பதினை அன்று எவறும் அறிந்திருக்கவில்லை...

அப்பாவின் மறைவிற்கு பின் அவர் விட்டு சென்ற அனைத்திற்கும் தானே பொறுப்பேர்த்தான் ஆகாஷ்... மித்ராவின் பாதுகாவலனாய் தன்னை உறுமாற்றி கொண்டான்....
சிறு வயதில் அனுபவித்த வலிகளும் வேதனைகளும் அவன் மனதை இறும்பாய் மாற்றியது...

ஊர் உலகத்திற்கு மிடுக்காய் திரியும் தன் தம்பின் மனதிலும் அம்மாவின் அன்பிற்காக ஏங்கி நிற்கும் சிறுவன் ஒருவன் மறைந்திருக்கிறான் என்பதை மித்ரா மட்டுமே அறிவாள்...

(பாவம் மை அமுல் பேபி ).

"அக்கா... அக்கா... என்னதிது? வேல இருக்குனு சொல்லிட்டு என்னையே முழுங்குற மாதிரி பார்த்துட்டு இருக்க. உன்னோட தம்பி ஆணழகன்னு தெரியுது... புரியுது... அதுக்குனு இப்டியா... வேணாக்கா வேணா வேற யாராச்சும் பார்த்தா நீ என்னை சைட் அடிக்குறனு நெனச்சிக்க போறாங்க...", என்றவன் மித்ராவையே குறும்பு புன்னகையோடு நோக்கினான்...

(ஆகாஷக்கு பேய் புடிச்சிடுச்சி.. இந்த ஹிட்லருக்கு சிரிக்க கூட தெரியுமா).

"உனக்கு ரொம்பதான் கொழுப்புடா. ஆனா நீ ஒன்ன மறந்துட்ட... என்னோட அழகுக்கும் அறிவுக்கும் நீ என்ன... உன்னோட கெத்தா இருக்கறவங்க கூட கியூல நிப்பாங்க என்னை லவ் பண்ண... நீயெல்லாம் வெறும் பச்சா .. உனக்கு இதலாம் புரியாது செல்லம். போ போ வேற வேல இருந்தா போய் பாரு போ...", மித்ரா சிரிக்காமல் ஆகாஷை வாரினாள்.

"என்னக்கா நீ... இப்டி கால வாரி விடுற... சரி வா வீட்டுக்குப் போலாம்", என்றவன் சற்றும் தாமதியாது அவளை இழுத்துக் சென்றான்...

மறுநாள் காலை பொழுது...
பல இரகசியங்களைச் சொல்லாமல் சொல்லுவேன் என மேகங்களோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது...

வெகு நாட்களுக்குப் பிறகு நிம்மதியாய் துயில் கொண்ட திருப்தியில், குழப்பங்களற்ற மனதோடு எழுந்தாள் மயூ...

தன் காலை கடன்களை முடித்து கொண்டு கையில் புகைப்பட கருவியோடு இயற்கையை இரசிக்க ஆயத்தமானாள்...

மயூ வீட்டை விட்டு வெளியே வரவும் சாரு மயூவைத் காண வருவதற்கும் நேரம் சரியாய் இருந்தது...

"குட் மோர்னிங் மயூக்கா. இவ்வளோ சீக்கிரம் எழுந்திட்டிங்களா??? இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துருக்கலாமே???" சாரு

"நான் ரொம்ப நல்லாவே தூங்கி எழுந்தாச்சி சாரு. இப்ப எனக்கு ஒழுங்கா ஊர சுத்திக் காட்டு..
நேத்து சொன்னது ஞாபகமிருக்கில்ல",
என்றாள் மயூ தன் கண்களை உருட்டியபடி...

"ஐயோ மயூக்கா... பிசாசு மாதிரி கண்ண உருட்டாத.. ரொம்பவே பயமாயிருக்கு... நீ கேட்டு நான் இல்லனு சொல்வனா... வா மயூக்கா ஊர் சுத்த போலாம், காலைல வெளிய சுத்தறதே ஒரு சுகம் தான்பா..." சாரு

"ஓகேடா.. வா போலாம்", என்றவள் சாருமதியைத் துள்ளல் நடையோடு பின் தொடர்ந்தாள்...

அங்கு ஆகாஷோ எப்பொழுதும் போல் தன் காலை நேர ஓட்டத்தைத் தொடங்கினான்...

( ரெண்டு பேரும் திரும்ப முட்டிக்க போறாங்களோ...)

அவனைப் பார்க்கவே கூடாதென எண்ணியிருந்த மயூ வந்த இரண்டாவது நாளே ஆகாஷை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமென கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டாள்...

சாருவோடு பேசிக் கொண்டே சுற்றுபுற அழகினை தன் புகைப்பட கருவியில் உள்ளடக்கினாள் மயூ... அப்பொழுது அந்த பக்கமாய் வந்த ஆகாஷின் உருவமும் மயூ அறியாமலே அந்த புகைப்பட கருவியில் ஐயிக்கியமாகியது...

முன்தினம் தன்னிடமே வம்பிழுத்த பெண்ணைத் திரும்ப பார்த்த பொழுது சற்றே திகைத்தாலும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவளைப் பார்த்து ஒரு கேலி புன்னகையை வீசிவிட்டுச் சென்றான்...

'என்னடா இவன் நேத்து முறைச்சான் இன்னிக்கு இளிச்சிட்டு போறான்... ஒவ்வொரு தடவ பார்க்கறப்ப ஒவ்வொரு மாதிரி இருக்கான்...' என்று தன்னுள்ளே முணுமுணுத்துக் கொண்டாள்...

(ஆமான்டி செல்லம்... இதுக்கு முன்னாடி அவன ஒரு நூறு தடவ பார்த்துருக்க... ரெண்டாவது மோதல்லே இந்த கமெண்ட் தாங்காதுபா...)

"சாரு நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே" மயூ

"என்னக்கா புதிர் போட்டுற... எதுவேணாலும் கேளுக்கா... தெரிஞ்சா சொல்றன்..." சாரு

"பெருசா ஒன்னும் இல்லடா... இப்ப நம்மல தாண்டி போனது யாருனு தெரியுமா???" மயூ

"அக்கா இதுக்கு நீங்க என்னை மலையில இருந்து குதிக்க சொல்லிருக்கலாம் கா... ஐம் பாவம்... யார பத்தி கேட்டுருந்தாலும் சந்தோஷமா சொல்லிருப்பன்... ஆனா அந்த அண்ணாவ பத்தி கேட்குறிங்களே... யான்கா இப்டி என்ன மாட்டி விடுறிங்க. நான் அவங்கள பத்தி சொன்னது அந்த அண்ணனுக்கு தெரிஞ்சா என்னை உறிச்சி உப்பு கண்டம் போட்டுறுவாங்க கா...", என்றாள் சாருமதி பாவ முகத்தோடு.

அவளின் பாவனையைக் கண்டு மயூவின் முகத்தில் புன்னகை அறும்பியது...

"என்னடா உங்க அண்ணனுக்கு தலையில கொம்பு இருக்கா???" என்றாள்.

"அக்கா ஆகாஷ் அண்ணன இப்டிலாம் கலாய்க்காதிங்க... அண்ணா ரொம்ப நல்லவரு கா..."

( ஆகாஷ் செல்லம் உன்ன நல்லவன்னு சொல்ல கூட ஒரு ஜீவன் இருக்குபா).

"வாவ் ஆகாஷ்... ஸ்வீட் நேம்.."என்றவளை இடைமறித்தது சாருவின் குரல்...

"அக்கா அந்த அண்ணன் பேரு ஸ்வீட்டாதான் இருக்கும் பட் அவரு ரொம்ப கோபக்காரவங்க மயூக்கா... ஆகாஷ் அண்ணா நேத்து நீங்க பார்த்திங்களே மித்ரா அக்கா அவங்களோட ஒரே தம்பி... அவங்க சிரிச்சி பேசி நான் பார்த்ததே இல்லக்கா... எப்பயும் காண்டா முறைச்சிட்டே இருப்பாரு... அப்புறம் முக்கியமா பொண்ணுங்கனா அவருக்கு புடிக்காது கா... பட் ரொம்ப நல்லவரு...",என்று ஆகாஷைப் பற்றி அடுக்கி கொண்டே போனாள் சாரு...

"ம்ம்ம்.. மித்ரா எவ்வளோ நல்லா பேசுறாங்க. இவன் யான் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கான்... பட் இட்ஸ் ஓகே ஆகாஷ் தலையில ரெண்டு கொம்பு வெச்சிற வேண்டிதான்", என்றவள் சாருவைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்...

ஆகாஷைப் பற்றி தெரிந்து கொண்ட மயூவின் இதழில் புன்னகை மின்னி மறைந்தது. அவனோட நட்பு பாராட்ட இவளுல் ஆவலும் பெருகிற்று...

வேண்டாம் என்று விலகி செல்பவரை நெருங்கிட தோன்றுவதும்... முறைத்து பார்ப்பவரை சிரிக்க வைக்க தோன்றுவது இயல்புதானே...

ஆகாஷின் இந்த அடாவடியான குணம் மயூவின் மனதில் அவனும் ஒரு அங்கமாய் இணையா துணையாய் இருந்தது...





இரு வேறு துருவங்களாக பயணிக்கும் மயூவும் ஆகாஷும் வாழ்வில் எவ்வாறு இணைய போகின்றனர்...

இருவர் வாழ்விலும் மறக்க முடியாத சம்பவங்கள் பல நிகழ்ந்து அவர்களை நிலையிழக்க செய்துள்ளது...

இவர்கள் வாழ்விலும் காதல் மலருமா???




தாய்மை மிளிரும்...💜💜💜
 
Last edited:

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 05
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN