கடைக்கண் பார்வையால் என் கவனத்தைக் கட்டி இழுத்து...
சின்ன சின்ன சில்மிஷம் செய்யும்...
அவன் தாயுமானவன்...
ஒரு புறம் மயூ ஆகாஷிடம் நட்பு பாராட்டும் எண்ணம் கொண்டிருந்தாள்...
மறுபுறம் மயூவைப் போலவே ஆகாஷிற்கும் அவளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள மனம் சிறகடித்த பறவையாய் வானில் பறக்க தொடங்கியது....
யாரிவள் யாரிவள் என்ற கேள்வி அவனை இம்சிக்க தொடங்கியது..
(உங்களுக்கும் லவ் வந்துடுச்சி ஹிட்லர் ஜீ)
'டேய் ஆகாஷ் உனக்கு என்னதான் ஆச்சி... மனச உன்னோட கட்டுபாட்டுல வைடா... எவளோ ஒருத்திக்காக யான் இப்டி உன்ன நீயே குழப்பிட்டு இருக்க...அவ மோகினி பிசாசுடா... இனிமே அவள நீ நினைக்க கூடாது', கஷ்டப்பட்டு தன் மனதுக்கு கடிவாளமிட முயன்றான்.
ஆகாஷ் அவளை வேண்டாம் என்று எண்ணத் தொடங்கியதுமே மயூ அவன் மனதில் அழுத்தமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டாள். இதை ஆகாஷ் அறிந்து கொள்வானா.. மயூவை தனது சதியாய் ஏற்றுக் கொள்வானா???
(ஏத்துக்க முடியாதுனுதான் சொல்லிப்பாறன்.. அப்ப தெரியும் உனக்கு)
இவனின் நிலை இவ்வாறிருக்க மயூவோ தன்னை மறந்து இயற்கையில் மூழ்கிப்போனாள்... அவள் தனிமையில் வாழ்ந்த நாட்கள் மறைந்து இயற்கைக்குத் தோழியாய் மாறினாள்... கடந்த கால துன்பத்தை நினைத்து நினைத்து வருந்துவதற்கு இது எவ்வளவோ மேல் என்று தோன்றியது அவளுக்கு...
கவலையில் சுழன்று கொண்டிருந்த மயூவிற்கு இயற்கை வளமும் அன்பு மனமும் நிறம்பி வழியும் இக்கிராமம் நல்ல மருந்தாய் அமைந்தது... தாய் பறவையோடு ஒன்றிக் கொள்ளும் கோழிகுஞ்சைப் போல் அவளும் இந்த கிராமத்திலையே தன் வாழ்நாளைக் கழிக்க எண்ணினாள்....
மயூவின் மனம் ஒரு கணக்குப் போட விதியோ அவளுக்கு வேறொரு பாடம் புகட்ட எண்ணியது... வெகு விரைவிலையே இந்த கிராமத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் அவளைச் சிக்குவிக்க எண்ணியது..
மயூ தன் கடந்த கால நினைவுகளிலிருந்து தன்னை மீட்டெடுத்து முழுதாய் மூன்று மாதம் கழிந்து விட்டது...
உறவுகளற்று இந்த இடத்திற்கு வந்தவளுக்குதான் இன்று எத்தனை பேர் ஆதரவாய் இருக்கின்றனர்...
அன்பு இல்லத்தில் அடைக்கலமிருந்த அனைவருக்கும் மயூ செல்லப்பிள்ளையாய் மாறிப் போனாள்... நாள் தவறாமால் அவர்களைச் சந்திப்பதைத் தனது வழக்கமாக்கி கொண்டாள்...
அங்கு அவளுக்கு கிடைக்கப்பெற்ற அன்பு மயூவின் அனைத்து கவலைகளையும் சுட்டெறித்தது...
மித்ரா மயூவிற்கு நல்ல தோழியாய் விளங்கியது மட்டுமல்லாது அன்பு சகோதரியாகவும் மாறிப்போனாள்...
சாரு மயூவின் உயிர் தோழியாய் விளங்கினாள்... மயூ தனது சோகங்களை மண்ணில் புதைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ தொடங்கினாள்...
(இப்டி எல்லாம் மயூ மேல தாரு மாறா பாசத்த பொழிஞ்சா நம்ம ஹீரோ சார் என்னாவாரு... அவருக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க பா)
ஆகாஷ் மயூவின் மீது தனக்கிருப்பது வெறும் ஈர்ப்பு அல்ல காதலென்பதை நன்கு உணர்ந்து கொண்டான்...
'எப்படி இவள் என் மனதுக்குள் நுழைந்தாள்... இரும்பு சங்கிலியால் பூட்டிட்ட தன் மனக்கதவினை எப்படி தட்டி திறந்தாள்...' ஆகாஷின் கேள்விக்கு அவனிடமே பதிலில்லை...
மயூவின் அழகும் அவளின் நற்குணமும் ஆகாஷின் மனதை அவள்பால் கட்டி இழுக்க தொடங்கியது... தன்னுள் நிகழும் மாற்றங்களை எண்ணி அவனே வியந்துதான் போனான்...
இரும்பு மனிதனாய் சுற்றி திரிந்த தன்னுள் எப்படி இவளால் மட்டும் காதலை விதைக்க முடிந்தது... பூட்டியிருந்த தன் இதயக்கூட்டினுள் மெல்ல நுழைந்து அவனை இம்சிக்கும் மயூவின் மீது அவனுக்குக் கோபமும் தாபமும் ஒருங்கே தோன்றியது...
பணத்திற்காக இவனை நெருங்கும் மற்ற பெண்களைப் போலில்லை மயூவென ஆகாஷின் மனமே அவனுக்கு எதிராய் போர் கொடி தூக்கியது...
மயூ இதுநாள் வரை ஆகாஷை நெருங்க முயற்சித்ததே இல்லை... இவனைக் கவரவுமில்லை... ஆனால் ஆகாஷ் அவளால் கவரப்பட்டான்... அவளின் கள்ளங்கபடமற்ற சிரிப்பினில் தன்னைத் தொலைத்தான்... அவள் காதலில் தன்னைத் தொலைக்க எண்ணினான்... யாருமற்ற தீவில் மயூவைச் சிறை வைத்து அவளது அன்பு மழையில் திகட்ட திகட்ட நனைய வேண்டுமென்ற கற்பனைவேறு ஆகாஷை வாட்டியது...
(நீ வெறும் பைத்தியம்னுதான் நெனச்சன்... இப்பதான தெரியுது.. நீ காதல் பைத்தியம்னு)
அவளின் சின்ன சின்ன செயல்களைத் தன்னுள் பொக்கிஷமாய் சேகரிக்க தொடங்கினான்... காதல் வந்ததும் கள்ளத்தனமும் ஆகாஷின்னுள் அழையா விருந்தாளியாய் வந்துவிட்டது...
மித்ராவைப் பார்க்க வருவதாய் உருவகப்படுத்திக் கொண்டு மயூவை பார்வையால் தீண்டிச் சென்றான்...
மயூ ஆகாஷை முதலிரண்டு நாட்களில் பார்த்ததோடு சரி அதன் பின் அவனைப் பற்றிய சிந்தனையே அவளிடமில்லை... மற்றவர்களின் அன்பில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தவள் ஆகாஷின் மாற்றத்தையும் காதல் ததும்பும் பார்வையையும் கவனிக்க தவறினாள்...
அப்படி அவள் உணர்ந்திருந்தாள் பின்னாளில் நடக்கவிருக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்த்திருக்கலாம்...
என்ன செய்வது விதி இன்னும் கொஞ்ச நாள் அவளை வைத்துச் சொக்கட்டாண் ஆட முடிவு செய்துவிட்டது...
மயூ இதிலிருந்து தப்பிப்பாளா???
(கொஞ்சம் கஷ்டம்தான் போல இருக்கே)
அந்த நாள் இரவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது...
ஆகாஷ் மயூவின் நினைவில் மூழ்கிருந்தான்...
யாரிவள் யாரிவளென்று என்
மனம் தடுமாறுதே...
உன்னில் சரணடைய
தினம் ஏங்குதே....
ஏய் பெண்ணே எப்படி
நுழைந்தாய் என்னுள்...
பித்தாகி போனேன்
தன்னாள்...
இரும்பாகி போன எனக்குள்
காதல் விதையை
விதைத்தாய்...
தினம் தினம் என்
நினைவில் சுழன்று என் வாலிபத்தைச் சிதைத்தாய்...
காதலெனும் மாயையால்
நான் தவிக்க ...
என்னை மறந்து நீ மிதக்க..
என்று எனைச் சேர்வாய் அன்பே...
மயூவோடு தன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற கற்பனை கனவோடு நிம்மதியாக உறங்கிப்போனான் ஆகாஷ்.
பாவம் அவனது தூக்கம் இன்றோடு பறி போக போகிறது என ஆகாஷ் அறிந்திருக்கவில்லை.....
************************************
அன்றைய காலைப் பொழுது பல திருப்புமுனைகளை வெளிச்சம் போட்டு காட்டவே விடிந்தது..
பறவைகள் தன் கூட்டைவிட்டு சிறகடித்து பறந்தன...
தேனிகள் மலர்ந்திருந்த பூக்களைச் சுற்றி தேனெடுக்க ரீங்காரமிட்டன...
மயூ துயில் களைந்து எழுந்தாள்... இந்தநாள் அவள் வாழ்வில் நன்னாளாய் அமைய வேண்டுமென்று எப்பொழுதும் போல் இறைவனிடம் பிராத்தித்தவளின் இதழில் புன்னகை தன்னிச்சையாக மலர்ந்தது.
அதே புன்னகையோடு படுக்கையை விட்டு எழ போனவளுக்கு ஏனோ உலகமே தட்டமாலை சுற்றியது...
அவளைச் சுற்றியுள்ள பொருட்கள் யாவும் காற்றில் மிதப்பதைப் போல் ஒரு பிரம்பை ஏற்பட்டது...
மிகுந்த சிரமத்தோடு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு எழ முயன்றாள்... மீண்டும் அதேப்போல் உலக உருண்டையாய் அவளின் தலை சுழல ஆரம்பித்தது.
'என்ன ஆச்சி' என தனக்குள்ளே கேட்டு கொண்டவளுக்கு ஏனென்று தெரியாமல் பயம் அழையா விருந்தாளியாய் மனதை ஆக்கிரமித்துக் கொண்டது... தனக்கு ஏதோவொரு தீங்கு நிகழ்ந்து விடுமோ என மனதில் அச்சம் சூழ்ந்து கொண்டது...
வாழ்வோ சாவோ இனி தனியாய்தான் அதை எதிர்த்துப் போராட வேண்டுமென்ற நிதர்சனம் மயூவின் மனதை ரணமாய் கொன்றது...
தன்னைச் சுற்றியிருக்கும் தனிமை முகத்தில் அறைந்தது... வெகு நாட்களுக்குப் பின் தன் பெற்றோரை எண்ணி விம்மி அழுதாள்...
'என்னையும் அன்னிக்கு உங்களோட கூட்டிட்டுப் போயிருந்தா இன்னிக்கு இந்த நிலமையில நான் இருந்திருக்க மாட்டன்... யான் என்னை மட்டும் தனியா விட்டுடிங்க அப்பா... அம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு... என்னையும் உங்க கூடயே கூட்டிட்டு போங்க...', துக்கம் தாளாமல் வாய்விட்டே கதறினாள்.
மயூ இயற்கையில் தைரியமான பெண்தான். அடி மேல் அடி வாங்கி நிலைகுழைந்து போன மனதினால் திடமாக இருக்க முடியால் கஷ்டப்பட்டாள்... தோள் சாய்க்க ஒரு துணைக் கிடைக்காதா என மனம் ஏங்கிற்று... என்னதான் சாருவும் மித்ரா இவளை அன்பாய் அறவணைத்தாலும் ஏனோ அவர்களிடம் தன் துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள அவள் மனம் இடம் தரவில்லை...
தனது அத்தனை சோகங்களுக்கும் வடிக்கல்லாய் இருந்தது அவளது டைரி மட்டுமே...
விட்டு சென்றவர்களை நினைத்து கண்ணீர் வடித்தாலும் அவர்கள் திரும்பி வர மாட்டார்கள்தான்... இருப்பினும் மறைந்தவர்களின் நினைவுகளை மனதிலிருந்து அழிக்க இயலாதல்லவா??
அன்று காலையில் எழுந்தது முதலே ஆகாஷ் அமைதியின்றி காணப்பட்டான்... ஏனென்றே தெரியாமல் பய மேகங்கள் அவனைச் சூழ்ந்து கொண்டது... தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதாய் அவன் மனம் குக்கூரலிட்டது... இப்படி ஒரு உணர்வை அவன் உணர்ந்து பல வருடங்களாகி விட்டது.
அன்று அவன் சந்தித்த துக்கத்தால் இரும்பாய் மாறியவன் இன்று நடக்க போகும் சம்பவத்தால் தாயுமானவனாய் மாற
போகிறான்...
தன்னை சார்ந்தவர் என்ற எண்ணம் தோன்றியதும் அவன் நினைவில் பளிச்சிட்டது மித்ராவின் மதி முகம் தான்... அவள் எங்கேயென வீடு முழுதும் தேட தொடங்கினான்...
மித்ராவிற்கு ஒன்றென்றால் இவனால் தாங்கி கொள்ள முடியாது... தாயாய் தந்தையாய் தோழியாய் இவனை உடனிருந்து பேணுவதோடு மட்டுமல்லாலு இவனின் நலம் கருதி இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் இருக்கிறாள்...
ஆகாஷ் தன் தொழில் சார்ந்த எதிரிகளால் தன்னவர்களுக்கு ஆபத்தை ஏற்படாமல் இருப்பதை ஒவ்வொரு நொடியும் உறுதி செய்து கொண்டுதான் இருக்கிறான்...
அதையும் தாண்டி இன்று ஏதோ ஒன்று நிச்சயம் நடக்கவிருப்பதை அவனின் உள்ளுணர்வு உணர்த்தியது...
சற்றும் தாமதியாது தன் வகனத்தை அன்பு இல்லத்தை நோக்கி விரட்டினான்... ஆகாஷின் பதட்டத்தினால் சாலையில் வாகனம் சீறிப்பாய்தது...
முப்பது நிமிடங்களில் சென்றடைய வேண்டிய இடத்திற்கு பதினைந்தே நிமிடங்களில் வந்து சேர்ந்தான்...
மின்னல் வேகத்தில் காரைவிட்டிறங்கியவன் நேரே மித்ராவைக் காண சென்றான்...
எங்கு தேடியும் மித்ராவைக் காணாததால் அவனின் பதட்டம் இன்னும் கூடியது... இதயத்துடிப்பின் ஓசை தெளிவாய் கேட்டது...
'ச்சே.. இந்த அக்கா எங்க போனாங்க... சொல்லிட்டுப் போக சொன்னா கேட்கிறதே இல்ல. இவங்கள', ஆகாஷ் மித்ராவை வசைப்படிக் கொண்டிருக்க அவளே அவனை நோக்கி வந்தாள்.
"இங்க என்ன பண்ற ஆகாஷ். என்னாச்சிடா....யான் ஒரு மாதிரி இருக்க. எதாவது பிரச்சனையா", திடிரென்று அங்கு வந்திருந்த ஆகிஷைப் பார்க்கையில் மித்ராவையும் பதட்டம் தொற்றிக் கொண்டது... அவனது முகத்தில் பயத்தின் சுவடுகள் அப்பட்டமாக தெரிந்தது...
"ஹன்.... அதலாம் ஒன்னும் இல்லக்கா சும்மாதான் வந்தன்... எங்க கா ரெண்டு போடிகாட்ஸ் உன் பின்னாடியே சுத்திட்டு இருப்பாங்க... இன்னிக்கு என்ன லீவ்வா... ஆளையே காணும்"
(உலகமகா நடிப்புடா சாமி... மயூ எங்கணு கேட்டா ஸ்விட் மித்து அக்கா சொல்லிட்டு போறாங்க... இதுக்கு போய் இந்த பில்டப் குடுக்குறியே நீ...)
உடன் பிறந்தவள் பத்திரமாக இருக்கிறாள் என்று தெளிவாகி விட்டது இனி அவன் உறுதி செய்ய வேண்டியது உள்ளம் கவர்ந்தவளின் இருப்பை தானே...
"சாரு எதோ புக் வாங்கனும் சொல்லிட்டு போன..மயூவதான் காலைல இருந்து காணும் எங்க போனானே தெரில.... எப்பயும் ரைட் டைம்க்கு வந்துடுவா இன்னிக்கு மிஸ்ஸிங்... சரி ஓகே... நீ ஓபிஸ் போலயா??" மித்ரா சந்தேகமாக வினவினாள்...
"தோ போறன் கா", கேட்ட கேள்விக்கு வாய் தன்னாலே பதில் கூறினாலும் அவனது நினைவுகள் மயூவை வட்டமிட தொடங்கியது...
'என்னாச்சி அவளுக்கு... எங்க போயிருப்பா... என்ன செஞ்சிட்டு இருப்பா...', ஆகாஷை பல கேள்விகள் அலைக்கழித்தன...
மயூவை நேரில் கண்டால்தான் தன் உள்ளம் அமைதி கொள்ளுமென தெளிந்தான்... மனம் தெளிவடைந்த பின் அவனுக்கு அங்கு என்ன வேலை... மித்ராவிடம் விடைபெற்று மயூவைக் காண சென்றான்...
இனி அவளுக்காக மட்டுமே துடிக்க போகும் இதயத்தை அவளிடமே கொடுக்க சென்றான்...
தாய்மை மிளிரும்...❤

Last edited:
Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 06
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.