கண்ணீர் சிந்தூம் ஒவ்வொரு
தருணமும்...
உன் கண்ணீரைத் துடைத்து
தோள் சாய்க்கையில்...
அவன் தாயுமானவன்...
மயூ தன் சிந்தனையில் மூழ்கியிருந்தாள்... கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் சுரந்தது...
மனம் தொலைந்து போன பலவற்றை எண்ணி வாடியது... எந்த சோகங்களுமின்றி ஓடி ஆடி திரிந்த சிறுவயது நினைவுகள் நெஞ்சை இரணமாக்கியது...
சிலர் நம் அருகில் இருக்கும் பொழுது தெரியாத உணராத பாசம் அவர்களின் பிரிவில் இரணமாய் கொல்கிறது...
மயூவும் அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருந்தாள்...
ஆகாஷ் மயூவைத் தேடி அவளது வீட்டிற்கு வந்தான்... இன்று ஏனோ அவளை நேரில் பார்க்காமல் அவனது நாள் பூர்த்தியாகாது என்பது போல் தோன்றியது... பார்க்கும் சமயம் யாவிலும் அவள் இதழில் சிறு புன்னகை தவழ்ந்தாலும் அப்புன்னகை என்றுமே அவளது கண்களைச் சென்றடைந்ததில்லை...
நிலைக்கொள்ளாமல் அலையும் அவளது கண் பார்வைதான் ஆகாஷின் மனதைக் கட்டி இழுத்தது...
பிறரைப் பார்க்கையில் அவளுள் தோன்றி மறையும் அச்சம் அவளைத் தன்னவளாய் மாற்றிக் கொள்ள ஊந்தியது...
இவள் என்னவள்... எனக்கு மட்டுமே சொந்தமானவள்... எதிர்காலத்தில் எனக்கென பல சொந்தங்களை உருவாக்கி கொடுக்க போகிறவள் என்ற எண்ணம் அவன் மனதின் ஆழத்தில் பதிந்தது...
மயூ இதை உணரந்து கொள்வாளா???ஆகாஷின் காதலில் மூழ்கி முத்தெடுப்பாளா??
கதிரவன் தன் கதிர்களைப் பூமிக்கு வாரி வழங்கி இருட்டில் மூழ்கியிருந்த இடங்களையெல்லாம் வெளிச்சமாக்கி கொண்டிருந்தது... மயூவின் வீடு மட்டும் இருட்டை தத்தெடுத்து அனாதையாய் காட்சியளித்தது... அதைக் கண்ட ஆகாஷின் முகம் யோசனையில் சுருங்கியது...
என்னாயிற்று இவளிற்கு இன்று ஏன் இவள் ஏதோ ஒரு வகையில் சரியில்லையென என் மனம் சத்தமிட்டு ஆர்ப்பரிக்கிறது...
ஆகாஷிற்கு அவனது மாற்றங்களே புதிதாக... பெண்களை வெறுக்கும் தான் எப்படி இவளிடமிருந்து மீள முடியாதபடி சிக்கி கொண்டேன்...
எனக்கும் அவளுக்குமானது ஜென்ம பந்தமா??? விடை தெரியாத கேள்விக்கு விடை காண முயன்று மீண்டும் ஆரம்பத்திற்கே வந்து யாரிவள் என்ற கேள்வியில் தேங்கி நின்றான்...
"மயூ... மயூ.. இருக்கியா...", மெல்லிசையாய் வெளிவந்த அவனது வார்த்தைகளில் பூக்களும் கூட வெட்கம் கொண்டு தலை சாய்த்து சிரித்தது...
மயூவிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவே வீட்டின் கதவைத் தட்டினான்... கனவினில் மூழ்கியிருந்தவளின் கவனத்தைக் கலைத்தது கதவு தட்டும் ஓசை...
கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்ததாலோ என்னமோ அவ்வோசை மயூவை நடுங்க செய்தது... தலையணையில் முகம் புதைத்து காதுகளை இறுக்க மூடிக்கொண்டாள்...
யாரும் தன்னை நெருங்க வேண்டாம் என்பதை சொல்லாமல் சொன்னது அவளின் செயல்... மயூ தன் நினைவுகளை விட்டு வெளிவற மாட்டேனென பிடிவாதமாய் இருக்க ஆகாஷின் நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது...
ஏற்கனவே அவளைக் காணாமல் தவித்த தவிப்பு அதிகரித்தது... மயூவே வந்து கதவைத் திறக்கும் வரை அவனுக்குப் பொறுமையில்லை...
கதவை உடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்... வீடு முழுதும் கும்மிருட்டில் மூழ்கியிருந்தது... அவன் பார்வைக்குள் அடங்கிய எந்த இடத்திலும் மயூவைக் காணவில்லை...
மயூவின் சுவடு எங்கும் காணாமல் போக அவனது இதயம் தாரு மாறாய் துடித்தது... மயூவிற்கு எந்தவொரு ஆபத்தும் நேர்ந்திருக்க கூடாதென அவசர பிரார்த்தனையைக் கடவுளிடம் சமர்பித்தான்...
'ஏன்டி இப்டி என்ன கொல்ற... உன்னை பார்த்து தொலையுற வரைக்கும் நல்லா தான்டி இருந்தன்... பட் உன்ன பார்த்ததுக்கு பின்னாடி நீ இல்லாம ஒன்னுமே இல்லனு தோனுதுடி... இராட்சசி ... ' மனதிலே புலம்பியவனாக மயூவைத் தேடினான்.
ஆகாஷின் தேடலுக்கு பதிலாக மயூவை அவன் கண்ட நொடி அவள் மீது அவனுக்கு இருந்த காதல் இன்னும் ஊற்றெடுத்தது...
ஆதரவற்ற குழந்தையென அவளிருந்த நிலை கண்டு அவனுக்கு தோனியது ஒன்றே ஒன்றுதான்...
அவளுக்கு யாதுமாய் இருக்க வேண்டுமென்று முடிவு செய்தான்...
அவளது பிரச்சினை என்ன அவள் ஏன் இப்படி இருக்கிறாள்... அவள் வாழ்க்கை பயணம் எவ்வாறானது... இதில் எதற்கான பதிலும் அவனுக்குத் தேவையில்லை...
மயூவின் காவலன் அவன்...
மயூவின் காதலன் அவன்...
மயூவின் தந்தையும் அவன்...
மயூவின் தாயுமானவன் அவன்...
மனம் தெளிவான முடிவை எடுத்தப்பின் எந்தவொரு சலணமும்
இன்றி அவளை நெருங்கினான்...
ஆகாஷ் வந்ததைக் கூட உணர்ந்து கொள்ளாமல் எதிலிருந்தோ தன்னைக் காத்துக் கொள்வதைப் போல் உறைந்திருந்தாள் மயூ...
மெல்ல அவளை நெருங்கியவன்
"மயூ... மயூ... " என அழைத்தான்.
அவளிடமிருந்து எந்தவித அசைவையும் காணாது போகவே... வலுக்கட்டாயமாக மயூவின் தோளைப் பிடித்து அவளைத் தன்புறம் திருப்பினான்...
தன் தோளில் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்ட மயூ ஒரு நொடி அதிர்ந்தாள் அது ஆகாஷ் என உணர்ந்தவள் தெளிந்தாள்... தன் முகத்தைக் கண்டதும் அவளது பதட்டம் சிறிதளவு மட்டுப்பட்டதாய் தோன்றியது அவனிற்கு...
"என்னாச்சிடா...",ஆகாஷின் ஒற்றை வார்த்தை தேக்கி வைத்திருந்த அனைத்து சோகங்களையும் வெளிக்கொண்டுவர போதுமானதாக இருந்தது...
மயூ ஆகாஷை இறுக்கமாக அணைத்துக் கொண்டு கதறியழ தொடங்கினாள்...
தன் மனம் ஏன் அவனிடம் அடைக்கலம் தேடுகிறது...
இவன் தனக்கு யாரென இவனைக் கட்டிக் கொண்டு அழுகிறோம்...
இவனுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம்...
தன் பெண்மை ஏன் இவனிடம் சரணடைகிறது....
எதையும் யோசிக்கும் நிலையில் மயூ இல்லை...
பற்றுகோளாய் கிடைத்த ஆகாஷிடம் தன் துன்பங்களைக் கொட்டித் தீர்ப்பது போல அவன் மீதே சாய்ந்தழுதாள்...
ஒரு நிமிடம் தன் மனதினை அலசி ஆராய்ந்திருந்தாள் ஆகாஷைப் போல் அவளும் தெளிந்திருப்பாள்...
அவளையே அறியாமல் அவளுள் நுழைந்த காதலை உணர்ந்திருப்பாள்...
பேதையவளின் காதலை துன்பங்கள் சூழ்ந்து கொள்ள மயூவும் தன் மனதின் உணர்வுகளை அறிந்து கொள்ளாமளே போனாள்...
தன் துன்பங்கள் அனைத்தையும் கண்ணீராய் மாற்றி அழுது களைத்தவள் ஆகாஷின் மீதே மயங்கி சரிந்தாள்...
மயங்கியவளைத் தன் மீதே தாங்கி கொண்டவனின் ஞாபக அலைகள் சற்றே பின்நோக்கி செல்ல முதல்நாள் அவளைச் சந்தித்தது அவன் கண்முன்னே மின்னிச் சென்றது...
அன்று அவனே எதிர்பார்க்காத ஒன்று அவள் மீதே காதல் கொண்டு பித்தனாகி போவானென...
(அதான் விழுத்திட்டியே... இன்னும் என்ன பீலிங் உனக்கு மயங்கி விழுந்தவள பாருடா பக்கி)
மயங்கி சரிந்தவளைப் படுக்கையில் கிடத்தியவன் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்...
இதுமாதிரியான சூழலை அவன் எதிர்கொள்வது இதுவே முதல் முறை...
முயன்றுதான் பார்ப்போமென அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்துப் பார்த்தான்...
அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே ஆகாஷிற்கு பயம் பிடித்துக் கொண்டது...
மயூ மயங்கியதை தான் விளையாட்டாய் எடுத்துக் கொள்ள அவளது நிலையோ சற்று ஆபத்தாக இருப்பதாக அவனுக்கு தோன்றிற்று...
அப்பொழுது அபத்பாந்தவளாக மித்ராவே அவன் கைப்பேசிக்கு அழைக்க ஆகாஷ் தெளிந்தான்...
அழைப்பை ஏற்றவன்,
"அக்கா நான் சொல்றத மெதல்ல கேளு... எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்... பிரச்சனைலாம் ஒன்னும் இல்லக்கா... நீ சீக்கிரம் சாரு ப்ரெண்ட் மயூ வீட்டுக்கு வா... ஐய்யோ அக்கா ப்லீஸ்... நான் இப்ப அங்கதான் இருக்கன் ப்லீஸ் சிக்கிரம் வாயேன்... மயூ மயங்கி விழுந்துட்டா கா...", என்றான் படபடப்பாக...
மித்ரா உடனே வருவதாய் கூற கைப்பேசியை அணைத்தவன் மயூவை நெருங்கினான்...
ஆதரவற்ற சிறு குழந்தையாய் மயங்கி கிடப்பவளின் தோற்றம் அவன் மனதை பிளிந்தது...
'என்னாச்சிடி உனக்கு... யான் இப்டி இருக்க.. முழிச்சி என்ன பாருடி... எனக்கு நீ வேணும்டி... ஐ லவ் யூ சோ மச் டா.. ப்லீஸ் எழுந்துக்கோ...', மௌனமாய் மயூவிடம் பேசியவனின் கண்களில் வழிந்த கண்ணீர் மயூவின் கன்னத்தில் பட்டுத் தெரித்தது...
அவனது வேகமும் விவேகமும் செயலிழந்து போனது...
காதலின் முன் அவனது தன்னையே இழந்தான்...
மயூவிற்காக மீண்டும் பிறந்தான் மயூவின் காதலனாக...
மித்ராவிற்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை...
'எப்படி ஆகாஷ் மயூவின் வீட்டிற்கு சென்றான்... மயூவிற்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் இவன் ஏன் துடிக்கிறான்... அப்படியெனில் ஆகாஷிற்கு மயூ மீது....'
மயூவின் வீட்டை சென்றடைந்ததும் மித்ராவின் யோசனை தடைப்பட்டது...
மயூவிற்கு என்ன ஆனதோ என்ற சிந்தனை மட்டும் அவளை ஆக்கிரமித்தது...
மின்னல் வேகத்தில் மயூவின் வீட்டில் நுழைந்தவளின் நடை அங்கு கண்ட காட்சியில் தடைப்பட்டது...
சுயநினைவின்றி மயூ மயங்கி கிடக்க... அவளை அரவணைத்தார் போல் அமர்ந்திருந்த ஆகாஷ் அழுது கொண்டிருந்தான்...
அவன் முதுகு குழுங்குவதிலிருந்தே அவன் அழுகிறானென சுலபமாய் கணித்தவள், ஆகாஷை நெருங்கி அவன் தோளில் கை வைத்தாள்...
புதிய ஸ்பரிசத்தில் ஒரு வினாடி திகைத்தாளும்... மறு நொடியே மித்ராவின் இடையைக் கட்டிக் கொண்டு அழுதான்.
தாயைக் கண்ட சேயென மித்ராவை பற்றிக் கொண்டு கதறிவிட்டான்...
ஆணின் கண்ணீர் துளி கோழைத்தனமென யார் சொன்னது...
தன்னவர்களுக்காக துடிக்கும் ஒவ்வொரு இதயமும், சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் ஆண்மையின் பிம்பமே...
ஆகாஷின் செயலில் மித்ரா ஸ்தம்பித்துதான் போனாள்...
இவன் ஆகாஷ் தானே...
அன்பை துறந்து தன்னுள்ளே இறுகிய என் தம்பிதானா...
அன்று ஒரு பெண்ணிற்காக சிந்திய கண்ணீர் அவன் மனதை இரும்பாய் மாற்றியதெனில் இன்று இவன் மயூவிற்காக சிந்தும் கண்ணீர் அவனை இதயமுள்ள மனிதனாய் மாற்றியது...
ஒரு சில நாட்களாகவே ஆகாஷின் மாற்றத்தை அவளும் கவனித்துதான் வந்தாள்... ஆனால் அதன்பின் இப்படியொரு காரணமிருக்குமென மித்ரா கனவிலும் நினைக்கவில்லை...
காதலில் சிக்குண்ட ஆகாஷை எண்ணி அவள் மனம் கனிந்தது...
எங்கே அவன் வாழ்க்கைக்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுக்காமல் தனியாய் வாழ்ந்து விடுவானோ என்று இத்தனை நாட்களாய் அவள் மனதை அழுத்திய பயம் இன்று விடைப்பெற்றுச் சென்றது...
ஆகாஷிற்கு மயூவும் மயூவிற்கு ஆகாஷூமாய் அவர்களின் வாழ்க்கை வண்ணமயமானதாக இருக்கும்...
தான் அன்பு செலுத்தும் இருவர் வாழ்வில் இணைய போவது அவளுக்கு அளவில்லா மகிழ்ச்சியை வாரிதந்தது...
அதன் பலனாக மித்ராவின் கண்களும் பனித்தது... ஆனந்த கண்ணீரால்...
"ஆகாஷ் ரிலக்ஸ். மயூக்கு ஒன்னும். சீ வில் பி ஆல்ரைட்...", தம்பிக்கு ஆறுதல் சொன்னாலும் அவளுக்கு ஒரு புறம் பயம் இருக்கவே செய்தது...
ஆயிரம்தான் மித்ரா திறமை வாய்ந்த மருத்துவராய் இருப்பினும் அவளும் ஒரு சராசரி பெண்தானே...
ஆகாஷைத் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக விலக்கியவள் மயூவைப் பரிசோதிக்க தொடங்கினாள்...
மயூவைப் பரிசோதிக்கும் மித்ராவின் முகத்தில் பல உணர்ச்சிகள் வந்து போயின...
ஆகாஷ் நிலைக்கொள்ளாமல் தவிக்க தொடங்கினான்...
மயூவைப் பரிசோதித்து முடித்தவளின் முகம் ஆயிரம் கேள்விகளை உள்ளடக்கியதாய்...
ஆகாஷ் கடுப்பாகி போனான்...
'என்ன இந்த அக்கா அந்நியன் விக்ரம் மாதிரி மாத்தி மாத்தி ரியக்ஸன் தராங்க...' மனதினுள்ளே புலம்பியவனான் பரிதாபமாய் நின்று கொண்டிருந்தான்...
மித்ரா அடுத்து என்ன செய்வதென யோசிக்கலானாள்...
பின் ஆகாஷை நோக்கி,
"மயூவ நம்ம ஹோஸ்பிட்டல்க்கு கூட்டிட்டு போனும்டா. சிக்கிரம் வா...",என்றாள் பொறுமையற்ற குரலில்..
வாகனம் மித்ராவின் அன்பு இல்லத்திற்கு சீரிப்பாய்ந்தது...
மித்ராவின் மனமோ நிலையில்லாமல் தவித்தது...
இது எப்படி சாத்தியப்படும் என்ற கேள்வி வண்டாய் குடைந்தது...
ஒரு சில மணித்துளிகளுக்குப் பின்,
"ஆகாஷ் மயூ தாயாக போறா...", மித்ராவின் வாய்மொழியில் உதிர்த்த வார்த்தையைக் கேட்டு ஆகாஷ் ஸ்தம்பித்து போனான்...
தன்னைச் சுற்றி என்னதான் நடக்கிறதொன புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான்...
தாய்மை மிளிரும்...❤

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 07
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.