தாயுமானவன் 08

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிழலென வந்தவன்...
துணையென நின்றவன்...
மங்கையவளின் கைப் பற்றி
உலகை வலம் வந்தவன்...
அவன் தாயுமானவன்...




மயூ ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தாள்...

மீண்டுமொரு முறை பிறந்தது போல் அவளுக்குள் ஏதோ ஓர் உணர்வு பரவசத்தைத் தந்தது...

அவள் தேகத்தைக் குளிர் காற்று தீண்டிச் சென்றது...

மெல்ல ஒரு குட்டி கரம் மயூவின் தலையைக் கோதியது...

அவள் உறக்கம் கலையா வண்ணம் மிக மென்மையான ஸ்பரிசம் அது...

மயூ அந்த கரத்தை உணர்ந்து கொண்டாள்...

அந்த ஸ்பரிசம் அதிலிருந்த அன்பு கலந்த உரிமை அவள் கண்களைப் பனிக்க செய்தது...

தனக்குச் சொந்தமான ஏதோவொன்று இன்று தன்னிடம் வந்தடைந்ததைப் போல் தோன்றிற்று...

மிகுந்த சிரமத்தோடு மெல்ல கண் விழித்துப் பார்த்தாள்... அன்றலர்ந்த சிறு மொட்டென பெண் குழந்தை ஒருவள் மயூவின் அருகே அமர்ந்திருந்தாள்...

மயூ கண் விழித்ததைக் கண்டதும் அவளுள் வார்த்தையில் வர்ணிக்க முடியா பல உணர்வுகள் வந்து சென்றன...

"அம்மா...", என்ற பெருங்கூவலுடன் மயூவின் கழுத்தைக் கட்டிக் கொண்டது அக்குழந்தை...

மயூக்கு என்னதான் நடக்கிறதென தெரியாவிட்டாலும் அக்குழந்தையை அரவணைத்துக் கொண்டாள்.

சில கணங்களுக்கு பின், அந்த குழந்தை தேவதை மயூவின் முகத்தைத் தன் சின்னஞ்சிறு கைகளால் வருடிற்று...

அவள் முகத்தில் மயூ கண்டது என்ன அன்பா, பாசமா, உரிமையா இல்லை என்னைத் தனியே விட்டுச் சென்றுவிடாதே எனும் படபடப்பா???

என்னென்று சொல்ல முடியா, விளக்க முடியா தருணம் அது... மயூக்கு அந்த குழந்தையின் அன்பில் மூழ்கி தன்னைத் தொலைக்க தோன்றியது...

"யாரு பாப்பா நீங்க? இங்க எப்டி வந்திங்க...",

"நான் யாருனு தெரியலையாமா... நான் உனக்கு சொந்தமானவ... என்னை வேணானு தூக்கி போட்ற மாட்டதான... எனக்கு உன்கூட வாழனும்னு ஆசையா இருக்குமா...",
அந்த பிஞ்சு உள்ளம் அழுகையை மறைக்க முடியாது மயூவைக் கட்டிக் கொண்டு அழுதாள்...

அந்த சமயம் பலத்த காற்று வீசியது... அந்த காற்றின் சீற்றம் மெல்ல அவளை மயூவிடமிருந்து பிரித்தது... குழந்தை காற்றில் கலந்து மெல்ல மறைய தொடங்கினாள்...

"பாப்பா...", பலத்த கூவலுடன் மயூ மயக்கத்திலிருந்து எழுதாள்.

மயூவைச் சுற்றிலும் மெல்லிய இருள் சூழ்ந்திருந்தது... அவ்வறையின் சூழலும் மருந்தின் வாடையும் தான் இருப்பது மருத்துவமனை என தெரிந்து கொண்டாள்...

மயூவை அறியாமலே அவளது கரம் மென்மையாய் அவள் வயிற்றில் பதிந்தது... அக்கணம் ஏனோ அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றி மறைந்தது... அது மயூவின் உயிர்வரைச் சென்று தாக்கியது...

மயூ குழப்பமான மன நிலையில் இருந்தாள்... தான் கண்ட கனவையே மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தாள்...
அக்குழந்தையின் முகத்தைக் கண்டதும் அவளுக்குள் ஆயிரம் மாற்றங்கள்... அம்மா என்ற அழைப்போ அவளை நிலைக்குழைய செய்தது...

தனக்கும் இப்படியொரு குழந்தை பிறக்குமா என மனதில் ஒரு ஆசை பிறந்தாலும் கடந்த கால நினைவுகளால் அவ்வெண்ணத்தை வேரோடு அழித்தாள்...

தான் கருவுற்றிருப்பதை தெரிந்து கொண்டதும் அவள் நிலை என்னவாக இருக்கும்... சந்தோஷத்தில் துள்ளி குதிப்பாளா இல்லை அதிர்ச்சியில் உறைந்து விடுவாளா..

( குட்டி பாப்பா பாவம் செல்லம். அவள நல்லா பாத்துக்கோ தெரியுமா?? இல்லனா உன்ன பிச்சிடுவன்..)

மித்ராவின் அறை...

"அக்கா என்ன சொல்லனுமோ அத ஒழுங்கா சொல்லு...

வந்து போயினு இழுத்திட்டு இருக்காத... எனக்கு உண்மை என்னானு தெரிஞ்சாகனும்... மயூக்கு என்னாச்சி...

அவ கர்பமா இருக்கானா அவ குழந்தைக்கு அப்பா யாரு... உன்கிட்ட எதாவது சொல்லிருக்காளா???

எனக்கு ஒன்னுமே புரியால... மயூ எனக்குதான் சொந்தம்னு நெனச்சன் கா... அவள ராணி மாதிரி பாத்துக்கனும்னு ஆசப்பட்டன்...

இப்ப அதலாம் முடியுமா தெரில... பட் அவ எங்க யாருக்கூட இருந்தாலும் சந்தோஷமா இருக்கனும் கா...

எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்கா... "
, அணையை உடைத்துக் கொண்டு வெளி வரும் வெள்ளம் போல ஆகாஷின் மனக் குமுறல் தங்கு தடையின்றி மித்ராவிடம் வெளிப்பட்டது...

ஆகாஷ் மிகவும் துவண்டு காணப்பட்டான்...

வெகு நாட்களுக்கு பின் தன் ஒற்றைச் சிரிப்பால் அவன் மனதைக் கட்டி இழுத்தவள் மயூ...

இரும்பாய் இருந்த தன்னை மனிதனாய் மாற்றியவள் மயூ...

இன்று தன் கண்ணீருக்கு காரணமானவளும் மயூ...

எங்கும் மயூ எதிலும் மயூ...

ஆகாஷ் மனதை ஆளப் பிறந்தவள் மயூ...

இந்த இரண்டு மாதங்களில் தன் மனதைப் புரட்டி போட்ட பெண்ணவள் இனி தன் வாழ்க்கையில் இல்லை என்ற நினைப்பே ஆகாஷிற்கு வேப்பங்காயாய் கசந்தது...

மயூவின் வாழ்வில் என்னதான் நடக்கிறது... மயூவின் இன்றைய நிலைக்கும் அவளது கடந்த காலத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா...

என்ன செய்வது யாரிடம் கேட்பது... ஆகாஷ் வாழ்வில் முதல் முறையாக அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான்...

மயூவை அவன் காதலிக்கிறான்... அது மட்டும்தான் அவன் நினைவில் நின்றது...

தன் வாழ்வில் நிலையான சந்தோஷத்தை இறைவன் கொடுக்கவில்லை போலும் என மனதைத் தேற்றியவனாய் மித்ராவை நோக்கினான்...

என் கேள்விகளுக்கு இப்போதே நீ பதில் சொல்ல வேண்டுமென்று சொல்லாம் சொல்லிற்று அப்பார்வை...

மித்ராவும் நொடிக்கு நொடி மாறும் இவனது முக பாவணையை ஆராய்ந்து கொண்டுதான் இருந்தாள்...

மித்ராவின் மனது ஆகாஷைப் போல் நிலையில்லாமல் தவிக்கவில்லை... உண்மையை தெரிந்து கொண்டிருந்த அவள் மனம் ஆகாஷை நினைத்து வெம்மைக் கொண்டது...

இனி எது நடப்பினும் அது நன்றாகவே நடக்க வேண்டுமென்று அவள் மனம் இறைவனைப் பிராத்தித்தது...

நடந்தது என்ன... உண்மையைத் தெரிந்து கொள்ள காலத்தைச் சற்றே பின்னோக்கி செல்வோம்...

இரண்டு மாதங்களுக்கு முன்...

திருமணமாகி பல நாள் குழந்தை பாக்கியம் கிட்டாத கணவன் மனைவி இருவர் அன்று மித்ராவைக் காண வந்திருந்தனர்....

இருவர் முகத்திலும் சோகம் இழையோடியது...

"இங்க பாருங்க மிஸஸ் மயூரி. நான் உங்களுக்கு எல்லா போர்மலிட்டிஸ் சொல்லிட்டன்... உங்க உடல் நிலை ரொம்பவே நல்லா இருக்கு... நீங்க அடுத்த கட்டத்துக்குப் போகலாம்... இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க திரும்பி வரனும்... அன்னிக்கு எல்லாம் நல்லபடியா நடந்துருச்சினா உங்களுக்கு இன்னும் பத்து மாசத்துல ஒரு குட்டி பாப்பா இருக்கும்...", என்றாள் மித்ரா சிறு புன்னகையோடு.

மித்ராவின் கூற்றைக் கேட்டு அவர்களின் முகம் மெல்ல சிரிப்புக்கு மாறியது...

மித்ராவிற்கு நன்றி கூறிவிட்டு விடைப்பெற்றனர்...

அத்தம்பதியினர் வெளியே சென்ற பின்னரும் மித்ரா தன் சிந்தனையில் மூழ்கியிருந்தாள்... நடப்பது அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டுமென எண்ணினாள்...

நாட்கள் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது... இரண்டு வாரங்கள் சட்டென்று ஓடி மறைந்தது... இன்று மித்ராவிற்கு மிகப்பெரிய கடமை ஒன்று காத்திருந்தது... ஆனால் அவளால் அதை செய்ய முடியாதபடி மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது... டாக்டர் ஜானகியிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்தவளாக வெளியே செல்ல ஆயத்தமானாள்...

வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டும் அவள் தனிமையை மிகவும் விரும்புவாள்... ஆகாஷ் பலமுறை ஏன் என்று கேட்டும் அவனுக்குப் பதிலாக கிடைத்தது மித்ராவின் மௌனம் மட்டுமே...

இந்த இடத்தில் விதி மித்ரா மயூ ஆகாஷை வைத்து விளையாட அழகாய் திட்டமிட்டது...

மருத்துவ பரிசோதனைக்காக வந்த மயூ மித்ராவைக் காண வந்தாள்...

"ஹாய் மித்து அக்கா... என்ன சிந்தனைலாம் பலமாயிருக்கு... உங்க கனவு நாயகன பத்தின கனவா...", அவளின் முகத்தில் குறும்பு கூத்தாடியது...

"ஏய் வாலு என் கிட்டையே உன்னோட சேட்டைய ஆரம்பிச்சிட்டியா... சாரு சொன்னப்ப கூட நான் நம்பல நீ இவளோ வாயாடியா இருப்பனு... வந்தன்னிக்கு பூனை மாதிரி பம்புன... இப்ப நீ அடிக்கிற லூட்டிய பாரு...", மித்ரா செல்லமாக மயூவிற்கு இரண்டு அடிகளைப் பரிசாக கொடுத்தாள்...

"அக்கா இதலாம் டூ மச்... புதுசா யாரையாவது பாக்குற எல்லாமே அப்டிதான் இருப்பாங்க... அதுக்காக என்னைப் பத்தி தப்பு கணக்கு போட்டுடா நான் என்னகா பண்றது...", என்றாள் பாவமாக...

"ஆஹான் அது சரி... மேடம் இன்னிக்கு இங்க யான் தரிசனம் தந்துருக்கிங்க... எனி ப்ரபலம்"

"நத்திங்கா... ரெகுலர் செக் அப்க்காக வந்தன்... சரி மெதல்ல உங்கள பாத்து ஒரு அட்டன்டஸ் போட்டுடு போலாமேன்னு வந்தன்..."

"ஓ.. ஓகே டா. நான் இன்னிக்கு இங்க இருக்க மாட்டன்... எந்த ப்ரபலம்னாலும் ஜானகிய போய் பாருடா... அவங்க இங்க புதுசா வந்திருக்குற டாக்டர்... "


சரி என்று தலையசைத்தவள் அறையை விட்டு வெளியேறவும் அந்த தம்பதியினர் மித்ராவின் அறையில் நுழையவும் சரியாய் இருந்தது... இருவரின் கவனமும் ஒரு நிமிடம் சிதற பொத்தென்று மோதிக்கொண்டனர்...
அவர்கள் கையிலிருந்த கோப்புகள் கீழே விழுந்தது...

"சாரி..." என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்தவாறு மயூ தன் கோப்புகளைச் சேகரித்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு அகன்றாள்...

ஒரு நிமிடம் நிருத்தி நிதானித்திருந்தாள் தன் வாழ்வில் ஏற்பட போகும் பெரிய மாற்றத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்...

இரு பெண்களும் கொண்டு வந்த மருத்துவ பரிசோதனைக் கோப்புகள் சத்தமின்றி இடம்மாறியது...

மயூவின் வாழ்க்கை பயணமும் மாறியது...

மித்ராவும் எதையும் கவனிக்கும் மன நிலையிலில்லை... அவளைக் காண வந்த தம்பதிகளை டாக்டர் ஜானகியைச் சந்திக்குமாறு கூறினாள்...

டாக்டர் ஜானகியிடம் மயூரி என்ற பெண் அவளைச் சந்திக்க வருவதாகவும் அனைத்தையும் நல்லபடியாக உடனிருந்து செய்து தரும்படி ஆணைகளைப் பிறபித்தவள் நிமிடமும் தாமதிக்காது மருத்துவமனையைவிட்டு வெளியேறினாள்...

மயூ டாக்டர் ஜானகியைச் சந்தித்து தன்னை மயூரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்...

டாக்டர் மித்ரா சொல்லிவிட்டுச் சென்ற மயூரி இவள்தான் என எண்ணினாள் ஜானகி... மயூ கொண்டு வந்திருந்த மருத்துவ கோப்புகளும் அதற்கு ஒத்துப் போக ஜானகி ஒரு மருத்துவராக தன் கடமையைத் தொடங்கினாள்...

மயூ மருந்தின் தாக்கத்தாள் ஆழ்ந்த மயக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டாள்...

அவள் கனவு உலகில் சஞ்சரிக்க தொடங்க, அவளறியாமலே அவளினுள் ஓர் உயிர் அணுவாக விதைக்கப்பட்டது....

அந்த அணு உருவாகி கருவாகி இன்று மயூவினுள் ஒரு குழந்தையாய் ஜனித்தது...




ஜனனமும் மரணமும் இறைவனின் சித்தம்...

மயூவிற்கு கொடுக்கப்பட்டது வரமா சாபமா...

இப்படியொரு சம்பவம் நடைபெற யார் காரணமாய் இருந்தது...

குழந்தையின் வரம் தேடி மருத்துவரின் உதவியை நாடிய அத்தம்பதியினரின் குற்றமா???

தன் கடமையிலிருந்து ஒரு நாள் பின் வாங்கிய மித்ராவின் குற்றமா???

கவனக்குறைவாக நடந்து கொண்ட மயூ குற்றமா???

இரண்டு மயூரியை ஒரே நேரத்தில் ஒரே நேர் கோட்டில் சந்திக்க வைத்த விதியின் குற்றமா???


இந்த மயூரிக்குக் கேட்காமலே குழந்தை வரம் கிடைத்ததெனில் குழந்தை வரம் வேண்டி வந்த அந்த மயூரியின் நிலை என்ன ????.....






தாய்மை மிளிரும்...💜💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 08
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN