காலங்கள் மாறினாலும் நான் உன் மீது கொண்ட காதல் மாறாது...
பயணத்தின் தூரங்கள் நீண்டாலும் உன் மீது நான் கொண்ட அன்பின் ஆழம் மாறாது...
சின்ன சின்ன சண்டைகள் வந்து போனாலும் நம்மிடையே உள்ள உரிமை தேடல் மாறாது..
உன் தாயுமானவன்...
தவறு செய்துவிட்டு தாயிடம் மன்னிப்பை யாசிக்கும் சிறு குழந்தையென தன் முன்னே அமர்ந்திருந்த மித்ராவைக் காண ஆகாஷின் புன்னகை விரிந்தது...
அதைவிட அவள் கூறிய ஒற்றை வார்த்தையில் அவன் மீண்டும் உயிர் பெற்றான் என்றே சொல்லலாம்...
மயூ அவனின் சரிபாதி... இன்று அவனது குழந்தையைச் சுமக்கிறாள்...
பல ஆண்டுகள் தவமிருந்தாலும் ஒரு சிலருக்குக் கிடைக்காத பிள்ளை வரம் தங்கள் இருவருக்கும் கேட்காமலே கிடைத்திருக்கிறது...
மலை உச்சியில் நின்று இவ்வுலகிற்கே தான் தந்தையானதைத் தெரிவிக்க அவன் மனம் ஆர்ப்பரித்தது...
ஆனால் இவை யாவும் ஒரு சில நொடிகள் மட்டுமே...
குழந்தைத்தனமான மயூவின் முகம் அவன் மனக்கண்ணில் மின்னி மறைய ஆகாஷின் மகிழ்ச்சியாவும் காணாமல் போனது...
"அக்கா இந்த விஷயத்த மயூகிட்ட சொல்லிட்டிங்களா??? அவ என்ன சொன்னா???", அந்த ஆறடி ஆண்மகன் தன்னவள் தங்கள் வாரிசை சுமந்து நல்லபடியாக ஈன்றெடுக்க சம்மதம் கூற வேண்டுமே என பயம் கொண்டது...
மித்ராவிற்கு ஆகாஷை எப்படி தேற்றுவதென்று தெரியவில்லை... மயூவும் ஆகாஷூம் வாழ்வில் இணைவார்களா என்றும் புரியவில்லை...
"இன்னும் மயூகிட்ட சொல்லல ஆகாஷ்... அவளுக்கு மயக்கம் இன்னும் தெளியல... ரொம்பவே வீக்கா இருக்கா டா... இத எப்படி எடுத்துப்பானு தெரியல...", என மித்ரா கூறிக் கொண்டிருக்கும் பொழுது...
"டாக்டர்... டாக்டர் நீங்க அட்மீட் பண்ண பொண்ணுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சி... அவங்க ரொம்ப பயந்த மாதிரி இருக்காங்க... வந்து பாருங்க", என்று கூறிச் சென்றாள் செவிலியர் ஒருவள்...
"இத பத்தி நைட் வீட்ல பேசலாம் ஆகாஷ்... இப்ப மயூவ பாக்க போலாம்... வா...",என்றவள் அவனின் பதிலை எதிர்பாராமல் மயூவின் அறைக்குச் சென்றாள்...
அங்கு மயூ கால்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு ஆதரவற்ற சிறுமி போல் அமர்ந்திருந்தாள்...
அவளை அந்த நிலையில் கண்ட மித்ராவிற்கு கண்கள் பனித்ததெனில் ஆகாஷிற்கு தன் இதயத்தை யாரோ ஈட்டியால் துளைத்ததைப் போல் வலித்தது...
மயூவை அள்ளி அணைத்துக் கொள்ள அவன் மனம் பரபரத்தது...
காதல் கொண்ட மனம் அவளைத் தனக்கு மட்டுமே சொந்தமாய் தன்னருகே இறுத்திக் கொள்ள துடித்தது...
ஆகாஷின் இதயத் துடிப்பு மயூவைச் சென்றடையுமா???
அவனின் காதலைப் புரிந்து கொள்வாளா???
மென்னடையோடு மயூவை நெருங்கினாள் மித்ரா...
மித்ராவைக் கண்டதும் அவளைத் தாவி அணைத்துக் கொண்டாள் மயூ.
"அக்கா எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு... என்னை விட்டுடு எங்கேயும் போக மாட்டிங்க தானா... ப்லீஸ் கா என் கூடவே இருங்களோன்...", மயூ தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டு கதறினாள்...
"மயூமா இங்க பாரு... ரிலக்ஸ் டா... உனக்கு ஒன்னும் இல்ல ஓகேவா.. உன்ன யாரும் ஒன்னும் செய்ய முடியாது... அதான் நாங்களாம் இருக்கோம்ல..."
"இல்லகா அவன்.... அவன் என்னைத் தேடி வந்துருவான்கா... எனக்கு அவன பார்க்கவே பயமா இருக்குகா...", மயூ எதிலிருந்தோ தன்னை காப்பது போல் மித்ராவின் தோளில் அழுத்தமாக தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
(அச்சசோ என்னாச்சி செல்லக்குட்டி அழாத பொம்மாயி அழாத உனக்கு நான் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரன்)
மயூ யாரை அவனென்று குறிப்பிடுகிறாள் என தெரியாவிடிலும் அவனின் மீது ஆகாஷிற்கு கொலைவெறி உண்டானது...
அந்த முகம் தெரியா ஒருவனால் மயூ பல இன்னல்களை அனுபவித்திருக்க கூடும் என அனுமானித்தான்...
தப்பித்தவறிக்கூட அவன் தன் முன்னே வந்துவிட கூடாது என எண்ணினான்... ஏனெனில் ஆகாஷைச் சந்தித்து விட்டால் அவன் உயிர் அவனிடம் இருக்காது...
( சூப்பர் ஜீ சூப்பர் ஆகாஷ் அவனுக்கு சங்கூத போறான்)
'இனி உன் பக்கத்துல கூட யாரையும் வரவிட மாட்டன் மயூ... எனக்குச் சொந்தமானவளா இனி நீ என்னோடதான் இருப்ப... உனக்கு எல்லாமுமாம் நானிருப்பன்... பட் இதுக்கு நீ ஓகே சொல்லுவியா...', ஆகாஷ் தன்னுள்ளே முணுமுணுத்துக் கொண்டான்...
காதல் கனவில் மூழ்கியிருந்தவனை அவனுக்கு மிகவும் பிடித்த பாடலின் வரிகள் தீண்டிச் சென்றது...
சொட்டு சொட்டா காதல் விஷம் கண்ணில் சொட்ட...

மனச கொண்டு நீ போகுற மானே கேட்டாக்காத்தருவேன் உசுரையுந்தான் என்னோட காதல நூலால் அளந்தா பூமிய ரெண்டு முறை சுத்தி சுத்தி வரலாம்....
மனச கொண்டு நீ போகுற மானே கேட்டாக்காத்தருன் உசுரையுந்தான் (சொட்டு)
தண்ணீரில் மூழ்கி முத்தெடுக்கப்போனேன்
கண்ணத்து குழியில முத்தமெடுத்த
ஆழ கடலின் அதிசயம் தெரிந்தும் அலையின் மடியில் தவம் கெடந்தேன்
எனக்குதானே பிறவி எடுத்த பிறகு ஏன்டி பிரிஞ்சிப்புட்ட அடி மீனே...
அடி மீனே நீப்போகும் பாதை எனக்கு தானே பிறவி எடுத்த பிறகு ஏன்டி பிரிஞ்சிப்புட்ட மனச கொண்டு நீ போகுற மானே கேட்டாக்காத்தருவேன் உசுரையுந்தான் (சொட்டு)
காதலைத் தன் காதலியிடம் சொல்ல முடியாத காதலனின் தவிப்பை அழகே உணர்த்தும் பாடல் வரிகள்..
ஆகாஷின் இன்றைய நிலையும் இதுவே... தன்னருகே மயூ இருந்தாலும் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த முடியாது என்ற நினைப்பே அவனை இரணமாய் கொன்றது...
இருப்பினும் ஆகாஷின் இந்த முடிவால் மயூ அவனின் வாழ்நாள் முழுவதும் அவன் கைக்கோர்த்து வருவாள் என நம்பினான்...
காதல் இரும்பிலே உருவாகிய இவன் மனதை மாற்றியதைப் போல் கண்ணாடி இதயம் கொண்டு சுக்கு நூறாய் சிதறிக் கிடக்கும் மயூவின் மனதை மாற்றுமா...???
ஆகாஷை அவ்வறையை விட்டு வெளியேற சொல்லிய மித்ரா...
மெல்ல மயூ ஒரு குழந்தைக்கு தாயாகி இருப்பதை அவளிடம் கூறினாள்...
மயூ சத்தமிடுவாள், கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாள் என எதிர்ப்பார்த்த மித்ராவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது...
மயூவின் முகம் நிர்மலாக இருந்தது... அவள் தெளிவாய் ஒரு முடிவு எடுத்துவிட்டாளென மித்ராவால் உணர்ந்து கொள்ள முடிந்தது...
"மயூ இந்த பேபி வேணாம்னு நீ நினைச்சன அபோர்ட் பண்ணிடலாம்டா..
(மித்து அக்கா உன்ன கொல்லப் போறன் பாரு எவ்ளோ தைரியம் இருந்தா பேபி செல்லத்த அபோர்ட் பண்ண சொல்லுவ நீ)
எல்லாம் என்னோட தப்புதான்... என்னாலதான் இன்னிக்கு நீ இப்டி இருக்கமா... ஐ'ம் ஸோ சாரிடா... எனக்கு தெரியும் மன்னிப்பு கேக்கறதுனால தீர்வு கிடைக்குற பிரச்சனையில்ல இது...
பட் நடந்து முடிஞ்சத மாத்த முடியாதுமா... இனி நடக்க போறது நல்லதுக்கேனு நினைச்சிக்க வேண்டிதான்... பிலிஸ்டா மௌனமா இருக்காத... எதாவது சொல்லுமா..", மித்ரா என்னதான் தன்னிலையை விளக்கி கூற முயன்றாலும் மயூவிடம் எந்தவொரு பதிலும் இல்லாமல் போக மித்ராவைப் பயம் தொற்றிக் கொண்டது... மயூ என்ன செய்வாள் என்ற பயத்தைவிட மயூவிற்கு இதனால் எதாவது தீங்கு ஏற்பட்டுவிட்டால் ஆகாஷ் என்ன செய்வான் என்ற கேள்வியே அவளை அச்சம் கொள்ள செய்தது...
(அமூல் பேபி மித்து அக்காவ நாடு கடத்திடலாம்இந்த அக்காக்கு டாக்டராவும் இருக்க தெரில பேசவும் தெரில என்ன காண்டாக்குறாங்க)
மித்ரா நடந்த சம்பவத்தை விளக்கி கூற மயூவின் மனம் நிலையின்றி அலைய தொடங்கியது...
உண்மையில் தனக்கென ஒரு சொந்தம் உருவாகிவிட்டதா???
இனி தான் யாருமற்ற அனாதையில்லையா???
என்னையும் அம்மாவென அழைக்க ஒரு குட்டி தேவதை வறப்போகிறாளா???
கனவில் கண்ட தேவதையே நிஜத்திலும் என் கருவறையில் கருவாய் உருவாய் குழந்தையாகி என் கைகளில் தவழ்வாளா???
என்னைத் தன் அன்பால் ஆட்சி செய்ய என்னவளாக அவள் வருவாளா???
மயூவின் கண்கள் அளவில்லா ஆனந்தத்தில் பனித்தது...
எங்கே சந்தேஷம் தாங்காமல் தன் இருதயம் தனது துடிப்பை நிறுத்திவிடுமோ என சந்தேகிக்கும் அளவு மயூ மகிழ்ச்சி கடலில் தத்தளித்தாள்...
மயூவின் கண்களில் கண்ணீரின் சாயலைக் கண்டதும் மித்ரா பதறிவிட்டாள்... நடந்த தவறினை ஜீரணிக்க முடியாமல்தான் மயூ அழுகிறாள் என எண்ணினாள்...
ஆகாஷிடம் விளக்கி கூறும் போது கூட பெரிதாய் தெரியாத இந்த விஷயம்... இப்பொழுது மலையளவு பெரிதாய் தெரிந்தது...
ஆகாஷிற்கு அக்காவாய் தன் தம்பியின் நல்வாழ்விற்கு நடந்த இச்சம்பவம் நல்லது என தோன்றியது...
ஆனால் மயூவின் முன் தன் தவறை அவளால் சிறிதென நினைக்க முடியவில்லை...
பட்டாம்பூச்சியாய் சுற்றித் திறிந்த பெண்ணவளைத் தனது இச்செயல் ஒரு மூலையில் முடக்கிவிடுமோ என அஞ்சினாள்...
(பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப உனக்கு பீலிங் கேக்குது)
மயூ மித்ராவைப் பார்க்க மித்ரா மயூவைப் பார்க்க அங்கு சில கணங்கள் அமைதி நிலவியது...
( கண்ணும் கண்ணும் நோக்கியா👁வைட் டிரஸ் ஏஞ்சல்ஸ் டான்ஸ் ஆடுவாங்களே)
மித்ராவையே பார்த்துக் கொண்டிருந்த மயூ சட்டென்று அவள் கன்னத்தில் அழுத்து முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள்....
(லூசாப்பா நீ ஆகாஷ்க்கு குடுக்க வேண்டியதெல்லாம் மித்ராக்கு கொடுக்குறஅப்புறம் உன்னோட அத்தான் கோச்சிக்க போறாறு)
"தேங்க்ஸ் கா... ரொம்ப தேங்க்ஸ்... ஐ ரியலி லவ் யூ கா... ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கன்... ஐ'ம் தி ஹேப்பியஸ் பெர்ஸன் இன் தி வேல்ட்...", மயூவின் முகம் அழகிய மலராய் பூத்தது...
மித்ரா அவளையே மிரட்சியாய் நோக்கினாள்... நடந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மயூவிற்கு சித்தம் கலங்கிவிட்டதா என எண்ணத் தோன்றியது...
"மயூ ஆர் யூ ஆல்ரைட்"
"என்னக்கா லூசாயிட்டன்னு நெனச்சியா?? அதுதான் இல்ல... பட் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கன் கா... எனக்குனு யாருமே இல்லனு நினைச்சன்கா... இப்ப எனக்கே எனக்குனு ஒரு குழந்தை... என்னை அம்மானு கூப்ட ஒரு குட்டி தேவத வருவா மித்துக்கா...
இந்த குழந்தைக்கு யாரு அப்பானு எனக்கு தெரியாது... தெரியவும் வேணா... அந்த முகம் தெரியாத ஒருத்தருக்கு நான் கடம பட்டுருக்கன்... பட் இது என்னோட குழந்தை... எனக்கு மட்டும்தான் சொந்தம்... இந்த பேபிக்கு நான் மட்டுமே அப்பாவா அம்மாவா இருப்பன் கா... இந்த பேபிய ஸோ ஸ்விட்டா வளர்ப்பன்...", மயூ கண்களில் கனவு மின்ன பேசிக் கொண்டே போனாள்...
மயூ நடந்தது அனைத்தையும் நல்லபடியாக எடுத்துக் கொண்டதால் மகிழ்ச்சி கொள்வதா இல்லை இவள் குழந்தையை தனியே ஆளாக்குவேன் என சொல்வதற்கு துக்கம் கொள்வதா என குழம்பினாள் மித்ரா...
அந்த அறையின் வெளியே நின்று மித்ரா மயூவின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஆகாஷின் முகத்தில் புன்னகை விரிந்தது...
'இப்பதான்டி நீ என்னோட மயூ... கொல்றியேடி... ஐ லவ் யூ டா செல்லம்... உன்னோட வாழ்க்கைய எப்டி நம்ம வாழ்க்கையா மாத்துறதுனு எனக்குத் தெரியும் பேபி... குட்டி தேவதை தான் வேணுமா மயூ உனக்கு... உன்ன மாதிரியே அழகான குட்டி ஏஞ்சல பெத்துக் குடு பேபி...',
என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்...
இனி ஆகாஷ் மயூவிற்கு இடையே பனிப்போர் தொடங்குமா???
இல்லை காதலின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்குமா???
தாய்மை மிளிரும்...❤

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 10
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.