Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
உன்னாலே உனதானேன்
உன்னாலே உனதானேன் 4
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

ரேஷ்மியை வீட்டிற்கு அழைத்து வந்த வினய் அவளை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்....

ரேஷ்மியும் தங்கள் அறைக்குள் சென்று அடைந்தவள் தன் கைப்பையில் இருந்த தன் அன்னை தந்தை சேர்ந்திருந்த படத்தை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்...

அமர்ந்தவள் அதை தடவிக்கொடுத்துக்கொண்டே அப்படத்தை வெறித்தவாறு இருந்தாள்...

அவளுள் பலவித எண்ணங்கள் ஊற்றெடுக்க அவை விடையாத கேள்விகளாய் மாற அதில் திக்பிரம்மையுற்றிருந்தாள்....

இருபத்தியிரண்டு வருடங்களாக கண்ணை இமை காப்பது போல் தன்னை பேணிக்காத்து அடைகாக்கும் கோழியினை போல் தன் மனம் முதிர்ச்சியடையும் வரை பாதுகாத்து வழிகாட்டி அதன் பின் சுயத்தன்மை எனும் கேடயத்தை அறிமுகப்படுத்தி சுயமாய் செயற்பட துணைபுரிந்து இந்நாள் வரை தன் விருப்புக்களை மறுக்காது நிறைவேற்றி அதில் இன்பம் கண்டவர்கள் கணவன் வீடு சென்ற பெண் பற்றிய கவலையை துறந்து இவ்வுலக வாழ்விலிருந்து ஏன் விடுதலை பெற்றார்கள்??? தன் பெண்ணிற்கு துணை கிடைத்துவிட்டது என்று நிம்மதியில் இவ்வாறு நிகழ்ந்துவிட்டதா???? இல்லை இவ்வளவு காலம் பெண்ணிற்காக வாழ்ந்தோம் இனிமேல் பெண் சந்தோஷமாக வாழ்வதை அவளுக்கு தெரியாமல் இருந்து கண்டுகளிக்க முடிவெடுத்துவிட்டனரோ?? ஏன் இந்த நிரந்தர பிரிவு??அவர்களது பெண்ணான நான் என்ன தவறிழைத்தேன்???? எதனால் என்னை தனியே தவிக்கவிட்டு சென்றனர்.......?? நான் வேண்டாம் என்று எண்ணி விட்டார்களோ என்னை பெற்றவர்கள்??? அவர்களுக்கு சுமக்க முடியாத சுமையாகிப்போனேனோ???? ஏன் என்னை கைகழுவி விட்டு சென்றனர்..??

என்று கேள்விகள் அவளது மனநிலையை மேலும் குழப்ப அதனை கலைத்தது கதவை தட்டும் சத்தமும் வீரலட்சுமியின் குரலும்....

“ரேஷ்மி என்ன பண்ணுற?? எதுக்கு கதவை திறக்காமல் இருக்க???? எவ்வளவு நேரம் கதவை தட்டுவது???? கதவை திற ரேஷ்மி...” என்ற குரலில் கலைந்தவள் விரைந்து அந்த புகைப்படத்தை தன் கைப்பையில் வைத்துவிட்டு சென்று கதவை திறந்தாள்...

“எவ்வளவு நேரம் ரேஷ்மி கதவை தட்டுறது??? கவின் இல்லாத சமயத்தில் கதவை தாப்பா போடாதனு சொன்ன கேட்க மாட்டியா??? எதுக்கு கதவை தாள்பாழ் போட்ட?? என்ன பண்ணிட்டு இருந்த இவ்வளவு நேரம்...??” என்று அவர் பாட்டிற்கு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக ரேஷ்மி பதில் கூறாது அவள் முகத்தையே வெறித்தவாறு நின்றாள்.....

அவளது பார்வையை பார்த்தவருக்கு பாவமாய் தோன்றிய போதிலும் வினய் கூறியது அவரின் நியாபகம் வந்தது....

“அம்மா டாக்கடர் சொன்னபடி அவளுக்கு நாம் துணையாய் இருக்கின்றோம் என்று உணர்த்த வேண்டும்... நீங்க மாமியாரா மட்டும் இல்லாமல் அவளுக்கு சமயத்தில் அம்மாவாக மாறி உங்களோட கண்டிப்பையும் காட்டனும்.... அவளோட நிலைமையை பார்த்து எந்தவொரு நேரத்திலும் பரிதாபப்பட்டு அவளை ஒன்றும் சொல்லாமல் விட்டு விடாதீர்கள்.... எப்பவும் போல அவளை அதட்டி உருட்டி மிரட்டிட்டே இருங்க... சில சமயங்களில் அமைதியை விட அடாவடி தான் சரிப்படும்..... நாம பாவம் பார்த்தோம்னா அவ அந்த இழப்பில் இருந்து மீள மாட்டாள்...அவளுக்கு உங்க மேல ஒரு பயம் இருக்கு...அதை நல்லா மெயின்டேன் பண்ணுங்க.... அது தான் உங்க தரப்பிலிருந்தே அவளுக்கு கொடுக்கக்கூடிய ட்ரீட்மென்ட்.... அதாவது மாமியார் வைத்தியம்....” என்று வினய் கூறியது அவரது சிந்தனையில் ஓடியது...

உடனே தன் முக பாவனையை மாற்றியவர்

“என்ன ரேஷ்மி நான் கேட்டுட்டே இருக்கேன்.... நீ ஏதும் பதில் சொல்லாமல் என்னமோ திருவிழாவில் தொலைந்து போன பிள்ளை மாதிரி நிற்கின்றாய்??? நான் கேட்டது உன் காதில் விழுந்ததா இல்லையா???” என்று வீரலட்சுமி ஒரு அதட்டலுடன் கேட்க அதில் பயந்தவள்

“இல்லை அத்தை....டிரஸ் மாற்றுவதற்காக கதவை மூடினேன்...”

“சரி மாற்றிவிட்டாயா???”

“இன்னும் இல்லை அத்தை...”

“அப்போ ஒரு மணித்தியாலமாக இந்த ரூமில் அடைந்து கொண்டு என்ன செய்தாய்??? தூங்கினாயா??”

“இல்லை அத்தை.... அது வந்து..”

“என்ன வந்து பறந்துனு இழுத்துட்டு இருக்க?? சரி ஒரு பத்து நிமிடம் டைம் தாரேன்.... அதுக்குள்ள ஒரு நல்ல சேலையாக மாத்திட்டு ஹாலுக்கு வா.... மறுபடியும் தூங்கி விடாதே..” என்றுவிட்டு அவர் நகர ரேஷ்மி விரைந்து சென்று தன் கப்போர்ட்டினை குடைந்தவள் ஒரு சேலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்...

சொன்னாற் போல் பத்து நிமிடத்தில் தன் அறையிலிருந்து வெளிப்பட்டவள் அவளது அத்தையை தேட அவரோ ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து அன்று காலையில் பறித்து சேமித்திருந்த மல்லிகைப்பூ மொட்டுக்களை ஒன்றுடனொன்று தொடுத்துக்கொண்டிருந்தார்....

ரேஷ்மியின் வரவை உணர்ந்தவர் தன் தலையை உயர்த்தி

“ரேஷ்மி கிச்சனிற்கு போய் மூன்று பேருக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா...” என்று ஒரு வேலையை பணிக்க மறு பேச்சு பேசாமல் சமையலறைக்கு சென்றவள் ஜூஸ் தயாரித்து விட்டு அதனை ஒரு தட்டில் அடுக்கி வெளியே வர அங்கு வீரலட்சுமியுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தான் வினய்...

இருவருக்கும் தன் கையில் இருந்த தட்டில் வைத்திருந்த ஜூசை பரிமாறியவள் மீதமிருந்த ஜூஸை மேஜை மீது வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள்..

அவள் அமர்ந்ததும் வீரலட்சுமி தன் எதிரே இருந்து மேஜையில் இருந்த ஜூஸ் கோப்பையை காட்டி

“என்னது இது ரேஷ்மி??”

“அத்தை நீங்க தான் ஜூஸ் போட சொன்னீங்க...அதான்..”

“சரி... இங்க நாம எத்தனை பேர் இருக்கோம்??”

“மூன்று பேர்...”

“அப்போ எதுக்கு அந்த ஜூஸ் மட்டும் மேஜையில் வைத்திருக்க??? எடுத்து குடிக்க வேண்டியது தானே??? அதையும் நான் சொன்னா தான் செய்வியா?? எல்லா விஷயத்தையும் நான் உனக்கு சொல்லிட்டே இருக்கனுமா??? நீயா ஏதும் யோசித்து செய்ய மாட்டியா??” என்று அவளை கேள்விகளாலே திணறடிக்க அதில் பயந்தவள் எதிரே இருந்த கோப்பையினை எடுத்து அதிலிருந்த பழச்சாற்றை கடகடவென குடித்து முடித்தாள்....

அவளது செய்கையை பார்த்து வினயிற்கு சிரிப்பு வந்த போதும் அவன் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை... அவளது பாவனை பிரம்படிக்கு பயந்த மாணவனின் செயலை ஒத்திருந்தது..

அவள் குடித்து முடிந்ததும் அவளை தன்னருகே வந்து அமருமாறு அழைத்தார் வீரலட்சுமி...

அவரருகே அமர்ந்தவளின் தலையை திஇருப்பி பின்னப்பட்டு முடிச்சிடப்பட்டிருந்த அவளது ஜடையில் அந்த மல்லிகை மொட்டு சரத்தை சூடினார்...

பின் வினயிடம்

“கவின் இந்தா உன் பொண்டாட்டி ரெடியாகிட்டா... இப்போ நீ அவளை அழைச்சிட்டு போகலாம்...”

“சரிமா... நாங்க கிளம்புறோம்... வா ரேஷ்மி..” என்று அழைக்க கீ கொடுத்த பொம்மை போல் அவன் பின்னேயே சென்றாள்...

காரில் ஏறியதும் காரின் முன் கதவை அவளுக்காக திறந்து விட்டவன் அவள் ஏறி கதவை சாற்றியதும் காரை இயக்கினார்..

செல்லும் வழியில் அவள் எதுவும் பேசாது வரவே தன் சீடி பிளேயரை இயக்கினான்...

அது

வள்ளுவரின் குரளாய் ரெண்டு வரி

இருக்கும்

உதட்டை புடிச்சிருக்கு

காதல் மடம் அழகா உதடுகள் நடத்தும்

நாடகம் புடிச்சிருக்கு

உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு

அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு

தினம் நீ கனவில் வருவதனால்

ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு...

என்று சீடி பிளேயர் பாட அதனுடன் வினயும் சேர்ந்து பாடினான்... ஆனால் அவன் எதிர்பார்த்த பிரதிபலிப்பு தான் எதிர்பார்த்த நபரிடம் இருந்து கிடைக்கவில்லை... இருந்தும் தன் முயற்சியை கைவிடாது அவளை திசை திருப்பும் முயற்சியில் இறங்கினான்... அதற்காக அடுத்த பாடலினை மாற்றினான்... அது தாறுமாறாக பாடத்தொடங்கியது...

தஸ்சு புஸ்சுன்னு பேசுவாளே

என்ன செய்வ டா

உனக்கு எஸ்சு நோ வ தவிர

வேற என்ன தெரியும்டா

கட்டிக்கொண்டு பேச

ஒட்டி நின்னு ஒரச

கட்டுப்பாடு இல்லையாம்

உனக்கு தெரியுமா???

என்ற வரியை பிடித்துக்கொண்டு அதை மீண்டும் மீண்டும் வினய் பாடிக்காட்ட அதில் சிந்தனை கலைந்தவள் அந்த வரிகளின் அர்த்தத்தை உணர்ந்து அவனை பார்க்க அவனோ அடுத்த வரியை மீண்டும் சீடி பிளேயரில் பாடச்செய்தான்..

கண்ணாலையே டார்லிங்

உன்ன செஞ்சிடுவா ஸ்கேன்னிங்

மீறி கிட்ட போன

பண்ணுவ வார்னிங்...

என்ற வரிகளுக்கு அவளை பார்த்து கண்ணடிக்க அதில் பதறியவள் தன் பார்வையை திருப்பிக்கொண்டாள்...

சகலகலா வள்ளி….ஈ….

எதையும் செய்வா சொல்லி

சகலகலா வள்ளி…வள்ளி..ஈ

சீக்கிரம் தாம்மா அள்ளி

என்று அப்பாடல் முடிவடைய வினய் ரேஷ்மியிடம்

“நல்லா பாட்டுல??? எழுதுனவன் அனுபவித்து எழுதியிருக்கான்.... ஏதோ எனக்குனே எழுதுன பாட்டு மாதிரி இருக்கு... நிஜத்தில் தான் நமக்கு அந்த கொடுப்பனை இல்லை பாட்டுலயாவது இருக்கட்டுமே” என்று எனக்குத்தானே பேசியவனை விசித்தரமாக பார்த்தாள் ரேஷ்மி...

அவளது பார்வை உணர்ந்து அவளை மேலும் சீண்டும் முகமாக

“என்ன அப்படி பார்க்கிற ரேஷ்மி??? எனக்கும் இப்படி எல்லாம் பாட்டு பாடி டூயட் ஆட ஆசை தான்... ஆனா எங்க??? அதுக்கெல்லாம் அதிஷ்டம் வேணும்... காதலிக்கும் போதும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை... கல்யாணம் பண்ண பிறகும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை.... இப்படியே வாழ்க்கை போயிரும் போல... நாம விரும்புகின்ற காதலும் வாழ்க்கையும் நமக்கு கிடைப்பது வரம்.... ஆனா அதை வரமாக மட்டும் வைத்துக்கொண்டு அதை அனுபவிக்காமல் இருப்பது கொடுமை...” என்று பேசியவன் காரை ஓரிடத்தில் நிறுத்தினான்...

காரை நிறுத்தியதும் அவனை என்னவென்று பார்க்க சீட் பெல்ட்டை கழற்றியவன் அவள் புறம் திரும்பி அமர்ந்து கொண்டு

“ரேஷ்மி.... இப்போ உன்கிட்ட நான் ஒன்று கேட்கப்போறேன்.... அதுக்கு நீ சரியாக பதில் சொல்லனும்....சொல்லுவியா?? ப்ளீஸ்..” என்று கேட்க அவள் தலையாட்டினாள்...

“நான் உன்னை காதலித்தது உனக்கு தெரியும்... அதை நான் நம் முதலிரவன்றி வெளிப்படுத்தியதும் உனக்கு நியாபகத்தில் இருக்கும் என்று நம்புகின்றேன்.... ஆனால் அதற்கான பதிலை நீ ஏன் இன்னும் சொல்லவில்லை....??? இதை எப்படி சொல்வது என்ற தயக்கத்தில் பதில் கூறாமல் இருக்கிறாயா??? இல்லை கூறுவதற்கு உன்னிடம் பதில்கள் இல்லையா??? காத்திருப்பதில் எனக்கு எந்தவித கஷ்டமும் இல்லை... ஆனால் இலவு காத்த கிளி போல் வீணாக காத்திருக்க நான் விரும்பவில்லை... நான் விரும்பவில்லை என்பதை விட என்னால் உனக்குள் எவ்வித குற்றவுணர்ச்சியும் உருவாகுவதை நான் விரும்பவில்லை...அதனால் இன்றே உன் பதிலை சொல்... உன் பதில் நம் வாழ்க்கைக்கான ஒரு வழியைச் சொல்லும்... சோ ப்ளீஸ் டெல் மீ யோர் ஆன்சர் போர் மை க்வெஷ்ஷன்....” என்ற வினயின் கேள்வியில் என்ன பதில் சொல்வதென்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள்....

வேறொரு நேரமாக இருந்திருந்தால் ஒரு வெட்கத்தோடு தன் சம்மதத்தை வெளியிட்டிருப்பாள்....... ஆனால் தன் பெற்றோர் இழப்பால் சமநிலை இழந்து எப்போதும் குழம்பியபடி இருக்கும் அவளது மனமோ அவன் என்ன கேட்கிறான்??? என்ன பதில் சொல்வது??? என்று தெரியாமல் நிற்க அவளது மூளை அவளை சரியென்று கூறுமாறு கட்டளையிட்டது..... அதன்படி அவள் தன் தலையை அசைக்க வினயோ

“இதற்கு என்ன அர்த்தம்??? உனக்கு என்னுடன் வாழ்வதில் இஷ்டம் என்று அர்த்தமா??? இல்லை என்று அர்த்தமா???”

“இஷ்டம் என்று அர்த்தம்...” என்று அவளது வாய் முணுமுணுக்க அவளது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் அடக்கிய வினய் அதில் தன் இதழ் பதித்துவிட்டு

“தாங்கியூ சோ மச் ஷிமி.... இந்த ஒற்றை வார்த்தைக்கு தான் நான் இவ்வளவு நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன்... எங்கே உன் காதல் எனக்கு கிடைக்காமலேயே போய்விடுமோ என்ற பயத்தில் தான் அப்படி எல்லாம் பேசிவிட்டேன்...இதற்கு பிறகும் என்னால் என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும் அப்படீங்கிற நம்பிக்கை என்கிட்ட இல்லை... எங்க நான் உன்கிட்ட என்னை மீறி உன்னை காயப்படுத்துகின்ற விதத்தில் ஏதும் தப்பா நடந்திடுவேனோ அப்படிங்கிற பயம் எனக்குள்ளே வந்துவிட்டது.... அதனாலே நான் இப்படி எல்லாம் பேசிட்டேன்... நான் ஏதும் தப்பா பேசியிருந்தா என்னை மன்னித்துவிடு...” என்று வினய் மன்னிப்பு வேண்ட அதற்கு தன் மௌனத்தையே ரேஷ்மி பதிலாக கொடுக்க வினயோ அவள் எதிர் பாராத நேரத்தில் அவளை இழுத்து அணைத்து அவளது செவ்விதழ்களை சிறையெடுத்தான்...

அவன் செயலில் முதல் பதறிய ரேஷ்மி தான் நேசிக்கும் ஆடவனான தன் கணாளனின் முதல் இதழொற்றலில் மதிமயங்கி நின்றாள்... சிறையெடுப்பு படையெடுப்பாக மாற இரு புறமும் வேகம் கூடியது.... அது அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முயல எங்கேயோ ஒலித்த ஹார்ன் சத்தம் அவர்களது மோனநிலையை கலைத்தது...... முதலில் வினய் அந்த மோனநிலையில் கலைந்து ரேஷ்மியை விடுவிக்க முயல அவளோ அவனது முத்தம் தந்த சுகத்தில் முடியாது என்று முரண்டு பண்ண வினயோ அவளது வலப்புற காதில்

“ஓய் ஷிமி பேபி மீதியை வீட்டுக்கு போயிட்டு கண்டினியூ பண்ணலாம்.... இப்போ என்னை காரை எடுக்க வழி செய்மா... இல்லை பின்னால் இருக்கும் லாரி டிரைவர் இறங்கி வந்து நம்மை திட்டுவான்..... உன் டார்லிங் பாவமில்லையா???” என்று கிசுகிசுக்க அதில் சுயவுணர்வு பெற்றவள் அவனிடம் இருந்து பிரிந்து தன் இருக்கையில் சரியாக அமர்ந்து கொண்டவள் தன் ஆடைகளை சரி செய்து கொண்டு பின் வெளிப்புறம் வேடிக்கை பார்க்கத்தொடங்கினாள்....

அவளது செய்கையில் சிரித்தவன் காரை இயக்கினான்....

அதன் பின் பீச் பார்க் என்று சுற்றியவர்கள் இரவு உணவை முடித்து விட்டு இருவரும் வீடு திரும்பினர்...

இருவரும் தங்கள் அறைக்கு செல்ல முதலில் தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் ரேஷ்மி.... அதற்குள் சமையலறை சென்று இருவருக்கும் சேர்த்து பால் தயாரித்து வந்தவன் ரேஷ்மி வெளியே வந்ததும் அவளிடம் பால் கோப்பையினை கொடுத்துவிட்டு குளியலறையினுள் சென்றான்..

வெளியே வந்தவன் ரேஷ்மியை தேட அவளோ கட்டிலில் படுத்திருந்தாள்.... அருகிலிருந்த மேஜையில் இருந்த கப்பில் பால் அருந்தப்படாமல் இருக்க அதை தன் கைகளில் எடுத்தவன் ரேஷ்மியின் அருகில் செல்ல இவ்வளவு நேரம் தூங்குவது போல் பாசாங்கு செய்தவள் அவனது வரவு உணர்ந்து தன் விழிகளை பிரிக்க அவளிடம் தன் கையில் ஏந்தியிருந்த பால் கப்பினை நீட்ட அதை வாங்கியவள் கடகடவென்று அருந்திவிட்டு திரும்ப அந்த பால் கப்பினை அவனிடம் நீட்ட அதனை வாங்கியவன் தனது பாலினையும் குடித்துவிட்டு இரண்டு கோப்பைகளையும் கிச்சனிற்கு எடுத்து சென்று கழுவிவிட்டு அதனிடத்தில் வைத்தவன் அறையிற்கு வந்தவன் விளக்கை அணைத்துவிட்டு ரேஷ்மியின் அருகில் படுத்து கொண்டான்...

வழமையாய் அவன் கொடுக்கும் அந்த முத்தத்திற்காக அவள் காத்திருக்க அவனோ அதை கொடுக்காது உறங்கிவிட எதிர்பார்த்திருந்தவள் ஏமாற்றமடைந்தாள்...

திடீரென்று அவன் கொடுக்காவிட்டால் என்ன நாம் அவனுக்கு கொடுப்போம் என்று எண்ணியவள் எழுந்து அவன் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்....

அதுவரை நேரம் கண்மூடியிருந்தாலும் அவளது அசைவுகளை உணர்ந்தவன் அவளது இதழொற்றல் ஒரு சிலிர்ப்பை அவனுள்உண்டுபண்ணியது....

விளக்குகள் அணைந்திருந்தபடியால் அவனது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவளுக்கு தென்படவில்லை... ஆகையால் அந்த இதழொற்றலை அனுபவித்து மகிழ்ந்தான்...

அவள் மறுபுறம் திரும்பி படுத்ததும் அவனது இதழ்களில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டிருந்தது.... அதில் இவ்வளவு நாட்கள் அவனது மனதை அரித்த கவலை பறந்தோட நித்திரா தேவி அவனை ஆரத் தழுவிக்கொண்டாள்...

மறுநாள் காலையில் துயில் கலைந்த வினய் கட்டிலில் கைதடவி தன் மனையாளை தேட அவளோ அங்கு இருக்கவில்லை... அருகிலிருந்த மேஜையில் இருந்த தன் மொபைலை எடுத்தவன் அதில் நேரத்தை பார்க்க அது காலை ஆறு மணி என்று காட்டியது.... கட்டிலிலிருந்து எழுச்சென்றவன் ஏதோ தோன்ற மீண்டும் படுத்துக்கொண்டு உரத்த குரலில் ரேஷ்மியை அழைத்தான்...

அப்போது தான் குளித்துவிட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தாள் ரேஷ்மி....

ஏதோ நினைவில் உடைகளுக்கு பதில் அவளது இளஞ்சிவப்பு நிற ஆப்டர் ஷவர் ரோப் இனை மட்டும் எடுத்து சென்றிருந்தாள்....

குளித்து முடிந்ததும் தன் உடையை தேடியவளுக்கு அப்போது தான் மாற்றுடை எடுத்து வராதது நியாபகம் வந்தது....

வினய் தூங்கிக்கொண்டிருந்ததால் அவன் எழுவதுற்கு முன் சென்று உடையை மாற்றிக்கொள்ளளலாம் என்று வெளியே வர அந்தோ பரிதாபம் அவன் அவளது பெயரை ஏலம் போட்டுக்கொண்டிருந்தான்...

வெளியே வந்தவளுக்கு மாற்றுவழியேதும் இல்லாது போனது. அவர்களது வாட்ரோப்பும் கட்டிலிற்கு எதிர்ப்புறமாக இருக்க கட்டிலை தாண்டி செல்ல வேண்டிய இக்கட்டுக்கு ஆளானாள்...

கணவனை சமாளித்துக்கொள்ளளலாம் என்று ரேஷ்மி கீழே குனிந்தவாறு கட்டிலருகே செல்ல அவ்வளவு நேரம் அவளது பெயரை ஏலம் போட்ட வினயின் குரல் சட்டென்று நின்றுவிட்டது... ஏதோ தோன்ற நிமிர்ந்து பார்த்த ரேஷ்மி அவனது பார்வையில் வெட்கிச் சிவந்தாள்...

அவனது பார்வை சென்ற இடத்தை பார்த்தவளை வெட்கம் பிடிங்கித் தின்ன மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்...

அதுவரை நேரம் ரேஷ்மியை அணுவணுவாக ரசித்துக்கொண்டிருந்தான் வினய்..

அந்த பாத் ரோப் அவளது உடலோடு ஒட்டியிருக்க அது முழங்காலுக்கு சற்று மேல் வரை நீண்டிருந்தது... அதன் உயரம் ஒருவித வனப்பை சேர்க்க அவளது தலைமுடியினை சுற்றி மேல்புறமாக முடிச்சிடப்பட்டிருந்த அந்த வெள்ளை நிற டவல் வேறொரு விதத்தில் அவளை அழகாக்க இடையிடையே தொங்கிய அந்த கருங்கூந்தல் கற்றைகளில் ஈரம் சொட்ட அதிலிருந்து வெளியேறியிருந்த நீர்த்துளிகள் அப்போது தான் உலர்த்தப்பட்டிருந்த அங்க லட்சணங்கள் அனைத்தும் பொருந்திய அந்த வதனத்தை ஈரப்படுத்தியிருக்க அதனை மேலும் அழகாக்கும் விதமாக அவளது இடப்புற நாசியில் வீற்றிருந்த மூக்குத்து இடையிடையே மின்னி தன் இருப்பை உணர்த்தியது...

அந்த நீர்த்துளிகள் எமக்கு எல்லைகள் இல்லை என்று காட்டும் முகமாக அவளது நெற்றியிருந்து இறங்கி என்னை ருசிக்க உனக்கு வாய்ப்பு வேண்டுமா என்று பார்ப்பவரை கிறங்கடிக்கும் அந்த ஒட்டி உலர்ந்த செவ்விதழ்களில் நிருத்தியம் ஆட அதற்கு இடையூறு செய்யும் விதமாக துடிக்கும் இதயம் போல் அடிக்கடி மடிந்து விரியும் அந்த செவ்விதழ்கள் தன் நெளிவு சுளிவுகளால் தன் இருப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியது..

இந்த அழகை அணுவணுவாய் ரசித்து கவி வடிக்க முயன்றவனில் கவனத்தை கலைக்கும் விதமாக அவளது உடையை இறுக்கியிருந்த அந்த பாத் ரோப்பிலிருந்த நாடா தன் இறுக்கத்தை படிப்படியாக தளர்த்த திரையின் பின் இருக்கும் சித்திரம் போல் திரையை விலக்கி அதன் கலைநயத்தை அவனிடம் காட்டி பரிசு பெற தொடங்கிய வேளையில் மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள் ரேஷ்மி....

புள்ளியிட்டு வரையத்தொடங்கிய கோலம் பாதியில் அழிக்கப்படுவது போல் அவனது உணர்வுகள் சிக்கித்தவித்து அதற்கான விடையை அறியும் நிலைக்கு வந்ததும் இல்லை என்ற ஏமாற்றத்தை பெற அதில் உணர்வுகள் அறுபட தன்னிலை அடைந்தவன் அப்போது தான் தன்னிலையை உணர்ந்தான்...

உணர்ந்தவன் சட்டென்று எழும்பி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்....

கதவடைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் அங்கு வினய் இல்லாததை அறிந்து கொண்டு சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்....

அத்தனை நேரம் உணர்ந்த அந்த புதுவித உணர்வு அவளுள் ஒரு படபடப்பை ஏற்படுத்தியிருக்க அது அவளது இதயத்துடிப்பை அதிகப்படுத்தியிருந்தது..... அது அவளுள் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்த வினயின் பார்வை மீண்டும் அவள் கண்முன் நிழலாடியது....

அந்த பார்வை... எதிரே நிற்பவரை கிறங்கடித்து வந்து விடு என்று கட்டளையிடுவதாய் பாயும் அந்த பார்வை அவளை முற்றிலுமாய் கயிறில்லாமல் கட்டிப்போட்டிருந்தது... அதில் சித்தம் தடுமாற நின்றவளை அவனது ஊரும் பார்வை தொடாமலேயே கிச்சி மூட்டியது....

அதில் நெளிந்தவளை மேலும் வதைக்கும் விதமாக அவளது ஆடை சதி செய்ய அதில் தேனுண்ட வண்டாய் அவனது பார்வை மாற்றமடைய அதில் விழித்துக்கொண்ட பெண் மனம் தன்னை மறைக்க வேண்டி அவளை திரும்பி நிற்கச் செய்தது...

இதை நினைத்தவளின் இதழ்களில் கள்ளப் புன்னகை தவழ ஒரு வித மோனநிலை அவளை ஆட்கொண்டது...

நேரமாவதை உணர்ந்த கடிகாரமோ ஓசையை எழுப்ப அதில் கலைந்தவள் விரைந்து தன் உடைகளை மாற்றிவிட்டு தலையை துவட்டத் தொடங்கினாள்....

அவ்வேளையில் குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் டிரசிங் டேபிளில் இருந்த ஆளுயர கண்ணாடியின் முன் அமர்ந்து அந்த வெண்ணிற துவாயினால் தன் கூந்தலை துடைத்தபடி இருந்தவளை கண்டான்....

அவனது வருகையை அந்த கண்ணாடி எடுத்துரைத்த போதும் அதை பார்த்தும் பாராது போல் தன் வேலையை தொடர்ந்தவளை வம்பிழுக்கும் முகமாக

“ஷிமி உனக்கு ஸ்ராபெரி பிடிக்குமா??”

“ஆமா..”

“ஆனா எனக்கு பிடிக்காது.. பட் நேற்று ஈவினிங்கிற்கு பிறகு எனக்கு ஸ்ரோபரியை ரொம்ப பிடித்து போனது....” என்ற வினய் கூற அவனை கேள்வியாய் பார்த்த ரேஷ்மியிடம்

“எப்படினு கேட்குறியா??? நேற்று காரில் இருக்கும் போது அதை ருசிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.... ஆஹா என்ன ஒரு சுவை.... என்னவொரு தித்திப்பு... கடவுள் எனக்கென்றே அந்த ஸ்ராபரியை படைத்திருக்காரு போல... ஆனா இதோட ஸ்பெஷாலிட்டி என்னனு தெரியுமா??? அட்சய பாத்திரம் மாதிரி வேணும் போது எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம்... ஆனா என்ன அதுக்கு கொஞ்சம் கஷ்டப்படனும்.... ஆனா அது எனக்கு மட்டுமே சொந்தமானது...” என்று ரேஷ்மியை பார்த்து வினய் கண்ணடிக்க அதில் தலை குனிந்தாள்ஹ.. அவளை சீண்டும் விதமாக கவி பாடினான் வினய்...

ஸ்ரோபரி

பெயருக்கேற்றாற் போல்

தித்திப்பை அள்ளியிறைக்க

அதனை ருசி கண்ட கள்வனாய்

கடித்து மென்று

ருசிக்கும் வரம்

மீண்டும்

என்று கிட்டும்..

இந்த கிறுக்கனுக்கு....??

என்று கவிபாடுயவனுக்கு பரிசாய் கிடைத்தது அந்தவானமாய் சிவந்து கள்ளச்சிரிப்பை தாங்கி நின்ற ரேஷ்மியின் வெட்கம்....

அந்த கணத்தை சுகமாய் அனுபவித்தவன் அதை மேலும் நீடிக்க எண்ணி

“ரேஷ்மி எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா??” என்று கேட்க அப்போது தான் அவன் இன்னும் காபி குடிக்கவில்லை என்று உணர்ந்தவள் எழுந்து அங்கிருந்து செல்ல முயன்ற ரேஷ்மியை கை பிடித்து தடுத்தான் வினய்..

அவள் என்ன வென்று பார்க்க அவளை அழைத்து சென்று மீண்டும் டிரசிங் டேபிளின் முன் அமர்த்தியவன் அங்கிருந்த குங்குமச்சிமிழை திறந்து குங்குமத்தை இருவிரல்களில் எடுத்தவன் என்றும் திலகத்தால் நிறைந்திருக்கும் ஆனால் இன்று வெற்றிடமாய் விரிந்திருந்த அந்த வகிட்டில் தன் கையில் வைத்திருந்த அந்த குங்குமத்தை பதித்தவன் எதிரே இருந்த கண்ணாடியில் பார்க்க அவளோ அவனை வைத்து கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்....

அது ஒரு மோனநிலையை அவர்களுள் ஏற்படுத்த ஒருவரை ஒருவர் ரசித்த வண்ணமிருந்தனர்.

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே

என் நரம்போடு வீணை மீட்டியதே

மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ

உன் நரம்போடு வீணை மீட்டியதோ

உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு

இரண்டோடும் பேதம் உள்ளது

விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்

அதுதானே நீ சொல்வது

நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே

என்னில் இன்பதுன்பம் செய்குவதோ

ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே

ஏசுனாதர் காற்று வந்து வீசியதோ

உறவின் உயிரே உயிறே என்னைப் பெண்ணாய்ச் செய்க

அழகே அழகே உன் ஆசை வெல்க

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல

உடலோடு ஒட்டிக்கொள்ளவோ

உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல

உன்னோடு கட்டிக்கொள்ளவோ

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்

உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்

பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது

பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்

பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன

பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன

உன்னாலே உனதானேன் 3

உன்னாலே உனதானேன் 5

[QUOTE="Anu Chandran, post: 106, member: 6"] ரேஷ்மியை வீட்டிற்கு அழைத்து வந்த வினய் அவளை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.... ரேஷ்மியும் தங்கள் அறைக்குள் சென்று அடைந்தவள் தன் கைப்பையில் இருந்த தன் அன்னை தந்தை சேர்ந்திருந்த படத்தை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்... அமர்ந்தவள் அதை தடவிக்கொடுத்துக்கொண்டே அப்படத்தை வெறித்தவாறு இருந்தாள்... அவளுள் பலவித எண்ணங்கள் ஊற்றெடுக்க அவை விடையாத கேள்விகளாய் மாற அதில் திக்பிரம்மையுற்றிருந்தாள்.... இருபத்தியிரண்டு வருடங்களாக கண்ணை இமை காப்பது போல் தன்னை பேணிக்காத்து அடைகாக்கும் கோழியினை போல் தன் மனம் முதிர்ச்சியடையும் வரை பாதுகாத்து வழிகாட்டி அதன் பின் சுயத்தன்மை எனும் கேடயத்தை அறிமுகப்படுத்தி சுயமாய் செயற்பட துணைபுரிந்து இந்நாள் வரை தன் விருப்புக்களை மறுக்காது நிறைவேற்றி அதில் இன்பம் கண்டவர்கள் கணவன் வீடு சென்ற பெண் பற்றிய கவலையை துறந்து இவ்வுலக வாழ்விலிருந்து ஏன் விடுதலை பெற்றார்கள்??? தன் பெண்ணிற்கு துணை கிடைத்துவிட்டது என்று நிம்மதியில் இவ்வாறு நிகழ்ந்துவிட்டதா???? இல்லை இவ்வளவு காலம் பெண்ணிற்காக வாழ்ந்தோம் இனிமேல் பெண் சந்தோஷமாக வாழ்வதை அவளுக்கு தெரியாமல் இருந்து கண்டுகளிக்க முடிவெடுத்துவிட்டனரோ?? ஏன் இந்த நிரந்தர பிரிவு??அவர்களது பெண்ணான நான் என்ன தவறிழைத்தேன்???? எதனால் என்னை தனியே தவிக்கவிட்டு சென்றனர்.......?? நான் வேண்டாம் என்று எண்ணி விட்டார்களோ என்னை பெற்றவர்கள்??? அவர்களுக்கு சுமக்க முடியாத சுமையாகிப்போனேனோ???? ஏன் என்னை கைகழுவி விட்டு சென்றனர்..?? என்று கேள்விகள் அவளது மனநிலையை மேலும் குழப்ப அதனை கலைத்தது கதவை தட்டும் சத்தமும் வீரலட்சுமியின் குரலும்.... “ரேஷ்மி என்ன பண்ணுற?? எதுக்கு கதவை திறக்காமல் இருக்க???? எவ்வளவு நேரம் கதவை தட்டுவது???? கதவை திற ரேஷ்மி...” என்ற குரலில் கலைந்தவள் விரைந்து அந்த புகைப்படத்தை தன் கைப்பையில் வைத்துவிட்டு சென்று கதவை திறந்தாள்... “எவ்வளவு நேரம் ரேஷ்மி கதவை தட்டுறது??? கவின் இல்லாத சமயத்தில் கதவை தாப்பா போடாதனு சொன்ன கேட்க மாட்டியா??? எதுக்கு கதவை தாள்பாழ் போட்ட?? என்ன பண்ணிட்டு இருந்த இவ்வளவு நேரம்...??” என்று அவர் பாட்டிற்கு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக ரேஷ்மி பதில் கூறாது அவள் முகத்தையே வெறித்தவாறு நின்றாள்..... அவளது பார்வையை பார்த்தவருக்கு பாவமாய் தோன்றிய போதிலும் வினய் கூறியது அவரின் நியாபகம் வந்தது.... “அம்மா டாக்கடர் சொன்னபடி அவளுக்கு நாம் துணையாய் இருக்கின்றோம் என்று உணர்த்த வேண்டும்... நீங்க மாமியாரா மட்டும் இல்லாமல் அவளுக்கு சமயத்தில் அம்மாவாக மாறி உங்களோட கண்டிப்பையும் காட்டனும்.... அவளோட நிலைமையை பார்த்து எந்தவொரு நேரத்திலும் பரிதாபப்பட்டு அவளை ஒன்றும் சொல்லாமல் விட்டு விடாதீர்கள்.... எப்பவும் போல அவளை அதட்டி உருட்டி மிரட்டிட்டே இருங்க... சில சமயங்களில் அமைதியை விட அடாவடி தான் சரிப்படும்..... நாம பாவம் பார்த்தோம்னா அவ அந்த இழப்பில் இருந்து மீள மாட்டாள்...அவளுக்கு உங்க மேல ஒரு பயம் இருக்கு...அதை நல்லா மெயின்டேன் பண்ணுங்க.... அது தான் உங்க தரப்பிலிருந்தே அவளுக்கு கொடுக்கக்கூடிய ட்ரீட்மென்ட்.... அதாவது மாமியார் வைத்தியம்....” என்று வினய் கூறியது அவரது சிந்தனையில் ஓடியது... உடனே தன் முக பாவனையை மாற்றியவர் “என்ன ரேஷ்மி நான் கேட்டுட்டே இருக்கேன்.... நீ ஏதும் பதில் சொல்லாமல் என்னமோ திருவிழாவில் தொலைந்து போன பிள்ளை மாதிரி நிற்கின்றாய்??? நான் கேட்டது உன் காதில் விழுந்ததா இல்லையா???” என்று வீரலட்சுமி ஒரு அதட்டலுடன் கேட்க அதில் பயந்தவள் “இல்லை அத்தை....டிரஸ் மாற்றுவதற்காக கதவை மூடினேன்...” “சரி மாற்றிவிட்டாயா???” “இன்னும் இல்லை அத்தை...” “அப்போ ஒரு மணித்தியாலமாக இந்த ரூமில் அடைந்து கொண்டு என்ன செய்தாய்??? தூங்கினாயா??” “இல்லை அத்தை.... அது வந்து..” “என்ன வந்து பறந்துனு இழுத்துட்டு இருக்க?? சரி ஒரு பத்து நிமிடம் டைம் தாரேன்.... அதுக்குள்ள ஒரு நல்ல சேலையாக மாத்திட்டு ஹாலுக்கு வா.... மறுபடியும் தூங்கி விடாதே..” என்றுவிட்டு அவர் நகர ரேஷ்மி விரைந்து சென்று தன் கப்போர்ட்டினை குடைந்தவள் ஒரு சேலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்... சொன்னாற் போல் பத்து நிமிடத்தில் தன் அறையிலிருந்து வெளிப்பட்டவள் அவளது அத்தையை தேட அவரோ ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து அன்று காலையில் பறித்து சேமித்திருந்த மல்லிகைப்பூ மொட்டுக்களை ஒன்றுடனொன்று தொடுத்துக்கொண்டிருந்தார்.... ரேஷ்மியின் வரவை உணர்ந்தவர் தன் தலையை உயர்த்தி “ரேஷ்மி கிச்சனிற்கு போய் மூன்று பேருக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா...” என்று ஒரு வேலையை பணிக்க மறு பேச்சு பேசாமல் சமையலறைக்கு சென்றவள் ஜூஸ் தயாரித்து விட்டு அதனை ஒரு தட்டில் அடுக்கி வெளியே வர அங்கு வீரலட்சுமியுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தான் வினய்... இருவருக்கும் தன் கையில் இருந்த தட்டில் வைத்திருந்த ஜூசை பரிமாறியவள் மீதமிருந்த ஜூஸை மேஜை மீது வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள்.. அவள் அமர்ந்ததும் வீரலட்சுமி தன் எதிரே இருந்து மேஜையில் இருந்த ஜூஸ் கோப்பையை காட்டி “என்னது இது ரேஷ்மி??” “அத்தை நீங்க தான் ஜூஸ் போட சொன்னீங்க...அதான்..” “சரி... இங்க நாம எத்தனை பேர் இருக்கோம்??” “மூன்று பேர்...” “அப்போ எதுக்கு அந்த ஜூஸ் மட்டும் மேஜையில் வைத்திருக்க??? எடுத்து குடிக்க வேண்டியது தானே??? அதையும் நான் சொன்னா தான் செய்வியா?? எல்லா விஷயத்தையும் நான் உனக்கு சொல்லிட்டே இருக்கனுமா??? நீயா ஏதும் யோசித்து செய்ய மாட்டியா??” என்று அவளை கேள்விகளாலே திணறடிக்க அதில் பயந்தவள் எதிரே இருந்த கோப்பையினை எடுத்து அதிலிருந்த பழச்சாற்றை கடகடவென குடித்து முடித்தாள்.... அவளது செய்கையை பார்த்து வினயிற்கு சிரிப்பு வந்த போதும் அவன் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை... அவளது பாவனை பிரம்படிக்கு பயந்த மாணவனின் செயலை ஒத்திருந்தது.. அவள் குடித்து முடிந்ததும் அவளை தன்னருகே வந்து அமருமாறு அழைத்தார் வீரலட்சுமி... அவரருகே அமர்ந்தவளின் தலையை திஇருப்பி பின்னப்பட்டு முடிச்சிடப்பட்டிருந்த அவளது ஜடையில் அந்த மல்லிகை மொட்டு சரத்தை சூடினார்... பின் வினயிடம் “கவின் இந்தா உன் பொண்டாட்டி ரெடியாகிட்டா... இப்போ நீ அவளை அழைச்சிட்டு போகலாம்...” “சரிமா... நாங்க கிளம்புறோம்... வா ரேஷ்மி..” என்று அழைக்க கீ கொடுத்த பொம்மை போல் அவன் பின்னேயே சென்றாள்... காரில் ஏறியதும் காரின் முன் கதவை அவளுக்காக திறந்து விட்டவன் அவள் ஏறி கதவை சாற்றியதும் காரை இயக்கினார்.. செல்லும் வழியில் அவள் எதுவும் பேசாது வரவே தன் சீடி பிளேயரை இயக்கினான்... அது வள்ளுவரின் குரளாய் ரெண்டு வரி இருக்கும் உதட்டை புடிச்சிருக்கு காதல் மடம் அழகா உதடுகள் நடத்தும் நாடகம் புடிச்சிருக்கு உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு தினம் நீ கனவில் வருவதனால் ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு... என்று சீடி பிளேயர் பாட அதனுடன் வினயும் சேர்ந்து பாடினான்... ஆனால் அவன் எதிர்பார்த்த பிரதிபலிப்பு தான் எதிர்பார்த்த நபரிடம் இருந்து கிடைக்கவில்லை... இருந்தும் தன் முயற்சியை கைவிடாது அவளை திசை திருப்பும் முயற்சியில் இறங்கினான்... அதற்காக அடுத்த பாடலினை மாற்றினான்... அது தாறுமாறாக பாடத்தொடங்கியது... தஸ்சு புஸ்சுன்னு பேசுவாளே என்ன செய்வ டா உனக்கு எஸ்சு நோ வ தவிர வேற என்ன தெரியும்டா கட்டிக்கொண்டு பேச ஒட்டி நின்னு ஒரச கட்டுப்பாடு இல்லையாம் உனக்கு தெரியுமா??? என்ற வரியை பிடித்துக்கொண்டு அதை மீண்டும் மீண்டும் வினய் பாடிக்காட்ட அதில் சிந்தனை கலைந்தவள் அந்த வரிகளின் அர்த்தத்தை உணர்ந்து அவனை பார்க்க அவனோ அடுத்த வரியை மீண்டும் சீடி பிளேயரில் பாடச்செய்தான்.. கண்ணாலையே டார்லிங் உன்ன செஞ்சிடுவா ஸ்கேன்னிங் மீறி கிட்ட போன பண்ணுவ வார்னிங்... என்ற வரிகளுக்கு அவளை பார்த்து கண்ணடிக்க அதில் பதறியவள் தன் பார்வையை திருப்பிக்கொண்டாள்... சகலகலா வள்ளி….ஈ…. எதையும் செய்வா சொல்லி சகலகலா வள்ளி…வள்ளி..ஈ சீக்கிரம் தாம்மா அள்ளி என்று அப்பாடல் முடிவடைய வினய் ரேஷ்மியிடம் “நல்லா பாட்டுல??? எழுதுனவன் அனுபவித்து எழுதியிருக்கான்.... ஏதோ எனக்குனே எழுதுன பாட்டு மாதிரி இருக்கு... நிஜத்தில் தான் நமக்கு அந்த கொடுப்பனை இல்லை பாட்டுலயாவது இருக்கட்டுமே” என்று எனக்குத்தானே பேசியவனை விசித்தரமாக பார்த்தாள் ரேஷ்மி... அவளது பார்வை உணர்ந்து அவளை மேலும் சீண்டும் முகமாக “என்ன அப்படி பார்க்கிற ரேஷ்மி??? எனக்கும் இப்படி எல்லாம் பாட்டு பாடி டூயட் ஆட ஆசை தான்... ஆனா எங்க??? அதுக்கெல்லாம் அதிஷ்டம் வேணும்... காதலிக்கும் போதும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை... கல்யாணம் பண்ண பிறகும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை.... இப்படியே வாழ்க்கை போயிரும் போல... நாம விரும்புகின்ற காதலும் வாழ்க்கையும் நமக்கு கிடைப்பது வரம்.... ஆனா அதை வரமாக மட்டும் வைத்துக்கொண்டு அதை அனுபவிக்காமல் இருப்பது கொடுமை...” என்று பேசியவன் காரை ஓரிடத்தில் நிறுத்தினான்... காரை நிறுத்தியதும் அவனை என்னவென்று பார்க்க சீட் பெல்ட்டை கழற்றியவன் அவள் புறம் திரும்பி அமர்ந்து கொண்டு “ரேஷ்மி.... இப்போ உன்கிட்ட நான் ஒன்று கேட்கப்போறேன்.... அதுக்கு நீ சரியாக பதில் சொல்லனும்....சொல்லுவியா?? ப்ளீஸ்..” என்று கேட்க அவள் தலையாட்டினாள்... “நான் உன்னை காதலித்தது உனக்கு தெரியும்... அதை நான் நம் முதலிரவன்றி வெளிப்படுத்தியதும் உனக்கு நியாபகத்தில் இருக்கும் என்று நம்புகின்றேன்.... ஆனால் அதற்கான பதிலை நீ ஏன் இன்னும் சொல்லவில்லை....??? இதை எப்படி சொல்வது என்ற தயக்கத்தில் பதில் கூறாமல் இருக்கிறாயா??? இல்லை கூறுவதற்கு உன்னிடம் பதில்கள் இல்லையா??? காத்திருப்பதில் எனக்கு எந்தவித கஷ்டமும் இல்லை... ஆனால் இலவு காத்த கிளி போல் வீணாக காத்திருக்க நான் விரும்பவில்லை... நான் விரும்பவில்லை என்பதை விட என்னால் உனக்குள் எவ்வித குற்றவுணர்ச்சியும் உருவாகுவதை நான் விரும்பவில்லை...அதனால் இன்றே உன் பதிலை சொல்... உன் பதில் நம் வாழ்க்கைக்கான ஒரு வழியைச் சொல்லும்... சோ ப்ளீஸ் டெல் மீ யோர் ஆன்சர் போர் மை க்வெஷ்ஷன்....” என்ற வினயின் கேள்வியில் என்ன பதில் சொல்வதென்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள்.... வேறொரு நேரமாக இருந்திருந்தால் ஒரு வெட்கத்தோடு தன் சம்மதத்தை வெளியிட்டிருப்பாள்....... ஆனால் தன் பெற்றோர் இழப்பால் சமநிலை இழந்து எப்போதும் குழம்பியபடி இருக்கும் அவளது மனமோ அவன் என்ன கேட்கிறான்??? என்ன பதில் சொல்வது??? என்று தெரியாமல் நிற்க அவளது மூளை அவளை சரியென்று கூறுமாறு கட்டளையிட்டது..... அதன்படி அவள் தன் தலையை அசைக்க வினயோ “இதற்கு என்ன அர்த்தம்??? உனக்கு என்னுடன் வாழ்வதில் இஷ்டம் என்று அர்த்தமா??? இல்லை என்று அர்த்தமா???” “இஷ்டம் என்று அர்த்தம்...” என்று அவளது வாய் முணுமுணுக்க அவளது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் அடக்கிய வினய் அதில் தன் இதழ் பதித்துவிட்டு “தாங்கியூ சோ மச் ஷிமி.... இந்த ஒற்றை வார்த்தைக்கு தான் நான் இவ்வளவு நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன்... எங்கே உன் காதல் எனக்கு கிடைக்காமலேயே போய்விடுமோ என்ற பயத்தில் தான் அப்படி எல்லாம் பேசிவிட்டேன்...இதற்கு பிறகும் என்னால் என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும் அப்படீங்கிற நம்பிக்கை என்கிட்ட இல்லை... எங்க நான் உன்கிட்ட என்னை மீறி உன்னை காயப்படுத்துகின்ற விதத்தில் ஏதும் தப்பா நடந்திடுவேனோ அப்படிங்கிற பயம் எனக்குள்ளே வந்துவிட்டது.... அதனாலே நான் இப்படி எல்லாம் பேசிட்டேன்... நான் ஏதும் தப்பா பேசியிருந்தா என்னை மன்னித்துவிடு...” என்று வினய் மன்னிப்பு வேண்ட அதற்கு தன் மௌனத்தையே ரேஷ்மி பதிலாக கொடுக்க வினயோ அவள் எதிர் பாராத நேரத்தில் அவளை இழுத்து அணைத்து அவளது செவ்விதழ்களை சிறையெடுத்தான்... அவன் செயலில் முதல் பதறிய ரேஷ்மி தான் நேசிக்கும் ஆடவனான தன் கணாளனின் முதல் இதழொற்றலில் மதிமயங்கி நின்றாள்... சிறையெடுப்பு படையெடுப்பாக மாற இரு புறமும் வேகம் கூடியது.... அது அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முயல எங்கேயோ ஒலித்த ஹார்ன் சத்தம் அவர்களது மோனநிலையை கலைத்தது...... முதலில் வினய் அந்த மோனநிலையில் கலைந்து ரேஷ்மியை விடுவிக்க முயல அவளோ அவனது முத்தம் தந்த சுகத்தில் முடியாது என்று முரண்டு பண்ண வினயோ அவளது வலப்புற காதில் “ஓய் ஷிமி பேபி மீதியை வீட்டுக்கு போயிட்டு கண்டினியூ பண்ணலாம்.... இப்போ என்னை காரை எடுக்க வழி செய்மா... இல்லை பின்னால் இருக்கும் லாரி டிரைவர் இறங்கி வந்து நம்மை திட்டுவான்..... உன் டார்லிங் பாவமில்லையா???” என்று கிசுகிசுக்க அதில் சுயவுணர்வு பெற்றவள் அவனிடம் இருந்து பிரிந்து தன் இருக்கையில் சரியாக அமர்ந்து கொண்டவள் தன் ஆடைகளை சரி செய்து கொண்டு பின் வெளிப்புறம் வேடிக்கை பார்க்கத்தொடங்கினாள்.... அவளது செய்கையில் சிரித்தவன் காரை இயக்கினான்.... அதன் பின் பீச் பார்க் என்று சுற்றியவர்கள் இரவு உணவை முடித்து விட்டு இருவரும் வீடு திரும்பினர்... இருவரும் தங்கள் அறைக்கு செல்ல முதலில் தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் ரேஷ்மி.... அதற்குள் சமையலறை சென்று இருவருக்கும் சேர்த்து பால் தயாரித்து வந்தவன் ரேஷ்மி வெளியே வந்ததும் அவளிடம் பால் கோப்பையினை கொடுத்துவிட்டு குளியலறையினுள் சென்றான்.. வெளியே வந்தவன் ரேஷ்மியை தேட அவளோ கட்டிலில் படுத்திருந்தாள்.... அருகிலிருந்த மேஜையில் இருந்த கப்பில் பால் அருந்தப்படாமல் இருக்க அதை தன் கைகளில் எடுத்தவன் ரேஷ்மியின் அருகில் செல்ல இவ்வளவு நேரம் தூங்குவது போல் பாசாங்கு செய்தவள் அவனது வரவு உணர்ந்து தன் விழிகளை பிரிக்க அவளிடம் தன் கையில் ஏந்தியிருந்த பால் கப்பினை நீட்ட அதை வாங்கியவள் கடகடவென்று அருந்திவிட்டு திரும்ப அந்த பால் கப்பினை அவனிடம் நீட்ட அதனை வாங்கியவன் தனது பாலினையும் குடித்துவிட்டு இரண்டு கோப்பைகளையும் கிச்சனிற்கு எடுத்து சென்று கழுவிவிட்டு அதனிடத்தில் வைத்தவன் அறையிற்கு வந்தவன் விளக்கை அணைத்துவிட்டு ரேஷ்மியின் அருகில் படுத்து கொண்டான்... வழமையாய் அவன் கொடுக்கும் அந்த முத்தத்திற்காக அவள் காத்திருக்க அவனோ அதை கொடுக்காது உறங்கிவிட எதிர்பார்த்திருந்தவள் ஏமாற்றமடைந்தாள்... திடீரென்று அவன் கொடுக்காவிட்டால் என்ன நாம் அவனுக்கு கொடுப்போம் என்று எண்ணியவள் எழுந்து அவன் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்.... அதுவரை நேரம் கண்மூடியிருந்தாலும் அவளது அசைவுகளை உணர்ந்தவன் அவளது இதழொற்றல் ஒரு சிலிர்ப்பை [U]அவனுள்[/U]உண்டுபண்ணியது.... விளக்குகள் அணைந்திருந்தபடியால் அவனது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவளுக்கு தென்படவில்லை... ஆகையால் அந்த இதழொற்றலை அனுபவித்து மகிழ்ந்தான்... அவள் மறுபுறம் திரும்பி படுத்ததும் அவனது இதழ்களில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டிருந்தது.... அதில் இவ்வளவு நாட்கள் அவனது மனதை அரித்த கவலை பறந்தோட நித்திரா தேவி அவனை ஆரத் தழுவிக்கொண்டாள்... மறுநாள் காலையில் துயில் கலைந்த வினய் கட்டிலில் கைதடவி தன் மனையாளை தேட அவளோ அங்கு இருக்கவில்லை... அருகிலிருந்த மேஜையில் இருந்த தன் மொபைலை எடுத்தவன் அதில் நேரத்தை பார்க்க அது காலை ஆறு மணி என்று காட்டியது.... கட்டிலிலிருந்து எழுச்சென்றவன் ஏதோ தோன்ற மீண்டும் படுத்துக்கொண்டு உரத்த குரலில் ரேஷ்மியை அழைத்தான்... அப்போது தான் குளித்துவிட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தாள் ரேஷ்மி.... ஏதோ நினைவில் உடைகளுக்கு பதில் அவளது இளஞ்சிவப்பு நிற ஆப்டர் ஷவர் ரோப் இனை மட்டும் எடுத்து சென்றிருந்தாள்.... குளித்து முடிந்ததும் தன் உடையை தேடியவளுக்கு அப்போது தான் மாற்றுடை எடுத்து வராதது நியாபகம் வந்தது.... வினய் தூங்கிக்கொண்டிருந்ததால் அவன் எழுவதுற்கு முன் சென்று உடையை மாற்றிக்கொள்ளளலாம் என்று வெளியே வர அந்தோ பரிதாபம் அவன் அவளது பெயரை ஏலம் போட்டுக்கொண்டிருந்தான்... வெளியே வந்தவளுக்கு மாற்றுவழியேதும் இல்லாது போனது. அவர்களது வாட்ரோப்பும் கட்டிலிற்கு எதிர்ப்புறமாக இருக்க கட்டிலை தாண்டி செல்ல வேண்டிய இக்கட்டுக்கு ஆளானாள்... கணவனை சமாளித்துக்கொள்ளளலாம் என்று ரேஷ்மி கீழே குனிந்தவாறு கட்டிலருகே செல்ல அவ்வளவு நேரம் அவளது பெயரை ஏலம் போட்ட வினயின் குரல் சட்டென்று நின்றுவிட்டது... ஏதோ தோன்ற நிமிர்ந்து பார்த்த ரேஷ்மி அவனது பார்வையில் வெட்கிச் சிவந்தாள்... அவனது பார்வை சென்ற இடத்தை பார்த்தவளை வெட்கம் பிடிங்கித் தின்ன மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்... அதுவரை நேரம் ரேஷ்மியை அணுவணுவாக ரசித்துக்கொண்டிருந்தான் வினய்.. அந்த பாத் ரோப் அவளது உடலோடு ஒட்டியிருக்க அது முழங்காலுக்கு சற்று மேல் வரை நீண்டிருந்தது... அதன் உயரம் ஒருவித வனப்பை சேர்க்க அவளது தலைமுடியினை சுற்றி மேல்புறமாக முடிச்சிடப்பட்டிருந்த அந்த வெள்ளை நிற டவல் வேறொரு விதத்தில் அவளை அழகாக்க இடையிடையே தொங்கிய அந்த கருங்கூந்தல் கற்றைகளில் ஈரம் சொட்ட அதிலிருந்து வெளியேறியிருந்த நீர்த்துளிகள் அப்போது தான் உலர்த்தப்பட்டிருந்த அங்க லட்சணங்கள் அனைத்தும் பொருந்திய அந்த வதனத்தை ஈரப்படுத்தியிருக்க அதனை மேலும் அழகாக்கும் விதமாக அவளது இடப்புற நாசியில் வீற்றிருந்த மூக்குத்து இடையிடையே மின்னி தன் இருப்பை உணர்த்தியது... அந்த நீர்த்துளிகள் எமக்கு எல்லைகள் இல்லை என்று காட்டும் முகமாக அவளது நெற்றியிருந்து இறங்கி என்னை ருசிக்க உனக்கு வாய்ப்பு வேண்டுமா என்று பார்ப்பவரை கிறங்கடிக்கும் அந்த ஒட்டி உலர்ந்த செவ்விதழ்களில் நிருத்தியம் ஆட அதற்கு இடையூறு செய்யும் விதமாக துடிக்கும் இதயம் போல் அடிக்கடி மடிந்து விரியும் அந்த செவ்விதழ்கள் தன் நெளிவு சுளிவுகளால் தன் இருப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.. இந்த அழகை அணுவணுவாய் ரசித்து கவி வடிக்க முயன்றவனில் கவனத்தை கலைக்கும் விதமாக அவளது உடையை இறுக்கியிருந்த அந்த பாத் ரோப்பிலிருந்த நாடா தன் இறுக்கத்தை படிப்படியாக தளர்த்த திரையின் பின் இருக்கும் சித்திரம் போல் திரையை விலக்கி அதன் கலைநயத்தை அவனிடம் காட்டி பரிசு பெற தொடங்கிய வேளையில் மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள் ரேஷ்மி.... புள்ளியிட்டு வரையத்தொடங்கிய கோலம் பாதியில் அழிக்கப்படுவது போல் அவனது உணர்வுகள் சிக்கித்தவித்து அதற்கான விடையை அறியும் நிலைக்கு வந்ததும் இல்லை என்ற ஏமாற்றத்தை பெற அதில் உணர்வுகள் அறுபட தன்னிலை அடைந்தவன் அப்போது தான் தன்னிலையை உணர்ந்தான்... உணர்ந்தவன் சட்டென்று எழும்பி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.... கதவடைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் அங்கு வினய் இல்லாததை அறிந்து கொண்டு சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.... அத்தனை நேரம் உணர்ந்த அந்த புதுவித உணர்வு அவளுள் ஒரு படபடப்பை ஏற்படுத்தியிருக்க அது அவளது இதயத்துடிப்பை அதிகப்படுத்தியிருந்தது..... அது அவளுள் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்த வினயின் பார்வை மீண்டும் அவள் கண்முன் நிழலாடியது.... அந்த பார்வை... எதிரே நிற்பவரை கிறங்கடித்து வந்து விடு என்று கட்டளையிடுவதாய் பாயும் அந்த பார்வை அவளை முற்றிலுமாய் கயிறில்லாமல் கட்டிப்போட்டிருந்தது... அதில் சித்தம் தடுமாற நின்றவளை அவனது ஊரும் பார்வை தொடாமலேயே கிச்சி மூட்டியது.... அதில் நெளிந்தவளை மேலும் வதைக்கும் விதமாக அவளது ஆடை சதி செய்ய அதில் தேனுண்ட வண்டாய் அவனது பார்வை மாற்றமடைய அதில் விழித்துக்கொண்ட பெண் மனம் தன்னை மறைக்க வேண்டி அவளை திரும்பி நிற்கச் செய்தது... இதை நினைத்தவளின் இதழ்களில் கள்ளப் புன்னகை தவழ ஒரு வித மோனநிலை அவளை ஆட்கொண்டது... நேரமாவதை உணர்ந்த கடிகாரமோ ஓசையை எழுப்ப அதில் கலைந்தவள் விரைந்து தன் உடைகளை மாற்றிவிட்டு தலையை துவட்டத் தொடங்கினாள்.... அவ்வேளையில் குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் டிரசிங் டேபிளில் இருந்த ஆளுயர கண்ணாடியின் முன் அமர்ந்து அந்த வெண்ணிற துவாயினால் தன் கூந்தலை துடைத்தபடி இருந்தவளை கண்டான்.... அவனது வருகையை அந்த கண்ணாடி எடுத்துரைத்த போதும் அதை பார்த்தும் பாராது போல் தன் வேலையை தொடர்ந்தவளை வம்பிழுக்கும் முகமாக “ஷிமி உனக்கு ஸ்ராபெரி பிடிக்குமா??” “ஆமா..” “ஆனா எனக்கு பிடிக்காது.. பட் நேற்று ஈவினிங்கிற்கு பிறகு எனக்கு ஸ்ரோபரியை ரொம்ப பிடித்து போனது....” என்ற வினய் கூற அவனை கேள்வியாய் பார்த்த ரேஷ்மியிடம் “எப்படினு கேட்குறியா??? நேற்று காரில் இருக்கும் போது அதை ருசிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.... ஆஹா என்ன ஒரு சுவை.... என்னவொரு தித்திப்பு... கடவுள் எனக்கென்றே அந்த ஸ்ராபரியை படைத்திருக்காரு போல... ஆனா இதோட ஸ்பெஷாலிட்டி என்னனு தெரியுமா??? அட்சய பாத்திரம் மாதிரி வேணும் போது எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம்... ஆனா என்ன அதுக்கு கொஞ்சம் கஷ்டப்படனும்.... ஆனா அது எனக்கு மட்டுமே சொந்தமானது...” என்று ரேஷ்மியை பார்த்து வினய் கண்ணடிக்க அதில் தலை குனிந்தாள்ஹ.. அவளை சீண்டும் விதமாக கவி பாடினான் வினய்... ஸ்ரோபரி பெயருக்கேற்றாற் போல் தித்திப்பை அள்ளியிறைக்க அதனை ருசி கண்ட கள்வனாய் கடித்து மென்று ருசிக்கும் வரம் மீண்டும் என்று கிட்டும்.. இந்த கிறுக்கனுக்கு....?? என்று கவிபாடுயவனுக்கு பரிசாய் கிடைத்தது அந்தவானமாய் சிவந்து கள்ளச்சிரிப்பை தாங்கி நின்ற ரேஷ்மியின் வெட்கம்.... அந்த கணத்தை சுகமாய் அனுபவித்தவன் அதை மேலும் நீடிக்க எண்ணி “ரேஷ்மி எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா??” என்று கேட்க அப்போது தான் அவன் இன்னும் காபி குடிக்கவில்லை என்று உணர்ந்தவள் எழுந்து அங்கிருந்து செல்ல முயன்ற ரேஷ்மியை கை பிடித்து தடுத்தான் வினய்.. அவள் என்ன வென்று பார்க்க அவளை அழைத்து சென்று மீண்டும் டிரசிங் டேபிளின் முன் அமர்த்தியவன் அங்கிருந்த குங்குமச்சிமிழை திறந்து குங்குமத்தை இருவிரல்களில் எடுத்தவன் என்றும் திலகத்தால் நிறைந்திருக்கும் ஆனால் இன்று வெற்றிடமாய் விரிந்திருந்த அந்த வகிட்டில் தன் கையில் வைத்திருந்த அந்த குங்குமத்தை பதித்தவன் எதிரே இருந்த கண்ணாடியில் பார்க்க அவளோ அவனை வைத்து கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.... அது ஒரு மோனநிலையை அவர்களுள் ஏற்படுத்த ஒருவரை ஒருவர் ரசித்த வண்ணமிருந்தனர். தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே என் நரம்போடு வீணை மீட்டியதே மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ உன் நரம்போடு வீணை மீட்டியதோ உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு இரண்டோடும் பேதம் உள்ளது விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும் அதுதானே நீ சொல்வது நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே என்னில் இன்பதுன்பம் செய்குவதோ ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே ஏசுனாதர் காற்று வந்து வீசியதோ உறவின் உயிரே உயிறே என்னைப் பெண்ணாய்ச் செய்க அழகே அழகே உன் ஆசை வெல்க கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல உடலோடு ஒட்டிக்கொள்ளவோ உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல உன்னோடு கட்டிக்கொள்ளவோ உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய் உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம் பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம் பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன [URL='https://nigarilaavanavil.com/forum/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-3.70/']உன்னாலே உனதானேன் 3[/URL] [URL='https://nigarilaavanavil.com/forum/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-5.73/']உன்னாலே உனதானேன் 5[/URL] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
உன்னாலே உனதானேன்
உன்னாலே உனதானேன் 4
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN