உன்னாலே உனதானேன் 5

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

விழிகளும் மனமும் உலகை மறந்து காதல் வசனம் பேசியபடி இருக்க ஓய்வில்லாது உழைக்கும் வயிறோ தன் உயிர்ப்போட்டத்திற்காக வினயின் வயிற்றில் மணியடிக்க அதில் உணர்வு பெற்றவன் ரேஷ்மியிடன் தேநீர் கேட்டான்..

அப்போது தான் தன்னிலையை உணர்ந்து அங்கிருந்து சென்றாள் ரேஷ்மி....

அவள் சென்றதும் குளியலறைக்குள் புகுந்தவன் தன் காலைக்கடமைகளை முடித்துவிட்டு வெளியே வர அவனுக்காக காபி கப்புடன் அமர்ந்திருந்தாள் ரேஷ்மி...

அவன் வந்ததும் வழமை போல் காபி கப்பை நீட்டிவிட்டு எழுந்து கொள்ள முயல வினயோ அவள் கரம் பிடித்து தடுத்தான்.. அவளை கட்டிலில் அமரச்செய்தவன் அருகிலிருந்த டிரசிங் டேபளின் முன் இருந்த கதிரையை அவளுக்கு எதிரே போட்டுவிட்டு தன் கையிலிருந்த காபி கப்புடன் அவளெதிரே அமர்ந்து கொண்டான்...

அவனது இந்த செயல் ரேஷ்மிக்கு புதிதாய் இருந்த போதும் அவன் இன்னும் என்ன செய்யப்போகிறான் என்ற எதிர்பார்ப்பே அவளிடம் அதிகமாக இருந்தது..
கையிலிருந்த காபி கப்பை அவளிடம் நீட்டிவன்

“ஷிமி இந்தா காபி.... இதை நீ குடி...” என்று அவளிடம் நீட்ட அவளோ அவனை என்னவென்று பார்த்தாள்.. ஆனால் வினயோ எதுவும் கூறியாது காபி கப்பை நீட்டியபடியே இருக்க அதை வாங்கியவள் ஒரு மிடறு குடித்து முடிந்ததும் மீண்டும் காபி கப்பை தன்புறம் இழுத்து வாங்கியவன் தன் இருக்கையை சற்று நகர்த்திவிட்டு அதில் காலிற்கு மேல் காலிட்டு அமர்ந்து அந்த காபியை ருசிக்கத்தொடங்கினாள்... அதை ருசித்து முடித்தவன் ரேஷ்மியிடம்

“ஷிமி காபி செம்ம டேஸ்டா இருந்தது.... நானும் உள்நாடு வெளிநாடுனு எல்லா ஏரியா காபியும் குடித்திருக்கேன்....ஆனா இது மாதிரி ஒரு ருசி எங்கயும் இருந்ததில்லை... பா.... சான்சே இல்லை... ஸ்ராபரி கிடைக்குது...டேஸ்டான காபி கிடைக்குது..... டேய் கவின் உன்னை மாதிரி ஒரு அதிஷ்டசாலி யாரும் இல்லைடா.....” என்று கூற அவனது பேச்சின் உள்ளர்த்தம் உணர்ந்த ரேஷ்மி வெட்கத்தில் கன்னம் சிவக்க தலை குனிந்து கொண்டாள்... அதை ஓரக்கண்ணால் ரசித்தவன்

ரகசியமாய்

ரகசியமாய்

புன்னகைத்தால் பொருள் என்னவோ...

என்று பாடலால் அவன் கேள்வி கேட்க அவளது மனமோ

நான் மாட்டிக்கொண்டேனே

உன்னில் மாட்டிக்கொண்டேனே

உடலுக்குள் உயிரை போல

உன்னில் மாட்டிக்கொண்டேனே...

என்று பாடியது....
ஆனால் அதை வினய் கேட்காத போதும் உணர்ந்து கொண்டான்...
தொடர்ந்து அவளுடன் விளையாட ஆவல் உண்டான போதும் அவனிடம் அதற்கான நேரம் இல்லாமையால் ஆபிஸ் செல்ல ரெடியாகச்சென்றான்...

அவன் தொடர்ந்து ஏதாவது செய்வான் என்று ரேஷ்மி எதிர்பார்த்திருக்க அவன் தயாராகச்சென்றது அவளுள் ஒருவித ஏமாற்றத்தை உண்டு பண்ணியது... ஆயினும் அதை வெளிப்படுத்த முடியாமல் அவளது மனமோ தடையாக இருந்தது...

அவன் சென்றதும் அவனுக்கு உணவு தயாரிக்க சென்றுவிட்டாள் ரேஷ்மி...
வினயோ அவளது முகமாற்றம் அனைத்தும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.... அவனுக்கு இனி ரேஷ்மியை குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது..... அவள் தன் காதலை உணரத்தொடங்கிவிட்டாள் என்பது அவனுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது... இனிமேல் தான் செய்ய வேண்டியதை மனதிற்குள் குறித்துக்கொண்டவன் தன் வேலையை பார்க்கத் தொடங்கினான்....

தயாராகி கீழே வந்தவன் உணவருந்த டைனில் டேபிளில் அமர அங்கு இன்னும் ஒருவர் அவனுடன் வந்து டைனில் டேபிளில் அமர்ந்தார்.

தன் அன்னை என்று நினைத்து திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது....
அவனது அதிர்ச்சிக்கு காரணம் அவனது அண்ணன் குடும்பத்தாரின் வருகை.... பிரான்சில் செட்டில் ஆகியிருந்த வினயின் அண்ணன் அபிநயனின் குடும்பம் வெகேஷனிற்காக இங்கு வந்திருந்தது....

அவர்கள் நாளை வருவதாக தெரிவித்திருக்க இன்றே வந்திறங்கியிருந்தனர்...

“டேய் அண்ணா எப்படி இருக்க??எப்ப வந்த?? நாளைக்கு வருவதாக தானே சொல்லியிருந்த???”

“நான் நல்லா இருக்கேன்டா புதுமாப்பிள்ளை.... சாரி டா என்னை மன்னிச்சுக்கோ உன்னோட கல்யாணத்துக்கு என்னால வரமுடியலை.... நானும் எவ்வளவோ ட்ரை பண்ணேன்டா... ஆனா விசா கிடைக்கலை கவின்...”

“இதுக்கு ஏன் அண்ணா சாரி எல்லாம்.....எனக்கு உன்னோட நிலைமை புரிகிறது.... சரி அண்ணி பாப்பா எல்லாம் எங்க...??” என்ற வினய் கேட்ட அடுத்த நொடி சித்தப்பா என்று குரல் கொடுத்தவாறு ஓடி வந்தாள் அனுக்ரா...

அவளை கட்டியணைத்த வினய்

“அனு பேபி எப்படி இருக்கீங்க...இந்த சித்தப்பாவை பார்க்கனும்னு உங்களுக்கு இப்போ தான் தோணுச்சா..??”

“நோ சித்து... ஐ ஆஸ்ட் அப்பா... பட் ஹூ செட் நோ.... ஐ மிஸ்ட் யூ சோ மச் சித்து...” என்று அந்த இரண்டே வயதான மழலை தன் மழலை மொழியில் தன் சித்தாவுடன் கொஞ்சிக்கொண்டிருந்தது..

அனுவின் தூக்கி அவளது கன்னத்தில் முத்தமிட்டவன் அவளை தன் முன்னால் இருந்த மேசையில் அமரவைத்துவிட்டு அவளுடன் கொஞ்சியவாறே விளையாடிக்கொண்டிருந்தான் வினய்...

“அண்ணி எங்கடா... வந்ததிலிருந்து அவங்களை காணவே இல்லை....”

“ரியாவும் ரேஷ்மியும் கிச்சனில் ரொம்ப பிசியாக இருக்காங்க...இதோ அவங்க இரண்டு பேருமே வந்துட்டாங்க...”

“என்ன எங்க பெயர் அடிபடுது அபி?? என்ன விஷயம்??” என்று ரியா கேட்க

“அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணி.. நீங்க எப்படி இருக்கீங்க.... பயணம் எல்லாம் எப்படி இருந்தது....??”

“நான் நல்லா இருக்கேன் கவின்... பயணம் எல்லாம் நல்லா இருந்தது... நீ எப்படி இருக்க கவின்....??”

“நான் நல்லா இருக்கேன் அண்ணி.... அப்புறம் என்ன விசேஷம்...??”

“டேய் கவின் இந்த கேள்வியை நாங்க உன்கிட்ட கேட்கனும்.... நீ என்னடானா எங்ககிட்ட கேட்குற??”

“ஆமால்ல... சரி நானே சொல்லுறேன்... எனக்கு கல்யாணமாகிவிட்டது..... என்னுடைய மனைவி ரேஷ்மிகா... ரொம்ப தங்கமான பொண்ணு அப்படினு எல்லாரும் சொல்லிக்கிறாங்க.... ஆனா எனக்கு அதுல ஒரு சின்ன டவுட்டு....” என்று வினயின் பதிலில் ரியாவும் அபிநயனும் சிரிக்க ரேஷ்மி அவனை முறைத்தான்...

அதனை கண்ட குழந்தை

“சித்து சித்தி என்ங்கிரி வித் யூ...” என்று ரேஷ்மியை காட்ட அவனோ அதை கண்டு கொள்ளாது

“சித்திக்கு ரொம்ப கோபம் வரும் அனுமா... அவங்க சித்து கூட கா...”

“நோ சித்து... யூ ஆர் லையிங்...சித்தி ஸ் சோ குட்..ஷூ கேவ் மீ எ ஹக் என்ட எ கிஸ்... சீ ஸ் சோ லவ்லி..” என்று அந்த மழலை தன் சித்தி புராணம் பாட அதில் ரேஷ்மியும் ரியாவும் ஒரு சேர சிரித்தனர்..

“ஏன்டா கவின் உனக்கு இது தேவையா.... இப்படி சின்ன பிள்ளைகிட்ட மொக்க வாங்குற... அனு ரொம்ப ஷ்மார்ட் டா ... அவளுக்கு இப்போ எல்லாம் புரியிது.... என்ன இந்த தமிழ் தான் ஒழுங்கா வரமாட்டேன்குது.... பாதி நேரம் டே கேயாரிலேயே இருப்பதால தமிழ் மட்டும் பேச மாட்டேன்குறா.... மற்றபடி எல்லாம் புரியிது...” என்று தன் அருமை புத்திரி பற்றி உரைக்க அவளை அணைத்து இரு கன்னத்திலும் முத்தவிட்டான் வினய்...

பின் குழந்தை ரேஷ்மியிடம் தாவ குழந்தையை தூக்கிக் கொண்டவள் அவளுடன் கொஞ்சியவாறே வினயிற்கு உணவு எடுத்து வைத்தாள்...

அபி மற்றும் ரியாவை அவள் சாப்பிட அழைக்க அவர்களோ பிறகு சாப்பிடுவதாக கூறி அறைக்குள் சென்றனர்... அறைக்கு செல்லும் முன் ரியா குழந்தையை அழைக்க அது வர மறுத்துவிட்டது... ரேஷ்மி தான் வைத்துக்கொள்வதாக கூறி ரியாவை சிறிது ஓய்வெடுக்குமாறு அனுப்பி வைத்தாள்...

குழந்தையை ஏந்தியவாறு வினயிற்கு உணவு பரிமாறியவள் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு அதற்கு புரியும் வகையில் பதிலளிக்கவும் தவறவில்லை...

வினய் உண்டு முடிந்ததும் உணவு மேசையினை ஒதுக்கியவள் வினயின் உணவுப் பொதியினை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க அவனோ

“ஷிமி அம்மா எங்க?? ரொம்ப நேரமாக அவங்களை காணவில்லை... அண்ணா அண்ணி வந்தது அவங்களுக்கு தெரியுமா??”

“தெரியும் வினய்.. நான் உங்களுக்கு காபி கலக்க வந்த போது தான் மாமாவும் அக்காவும் வந்தாங்க...அத்தை தான் அவங்களை ரிசீவ் பண்ணாங்க...நீங்க ரெடியாகி வருவதற்கு கொஞ்ச நேரம் முன்பாக தான் கோயிலுக்கு போக கிளம்புனாங்க...”

“ஓ.. அப்படியா... சரி... நீ அவங்க வரவரைக்கும் அனுவை கொஞ்சம் பார்த்துக்கோ... டைம் ஆகிருச்சி பாய்... அனு பேபி பாய்..” என்று வெளியே நடக்கத்தொடங்கியவனை அழைத்தாள் அனு..

“சித்து கிவ் மீ எ கிஸ் அன்ட் அ ஹக்..” என்று பணிக்க அவள் கேட்டதை செய்தவன் கிளம்பத்தயாராக மீண்டும் அவனை அழைத்து

“சித்து யூ போகொட்டு டு கிவ் எ கிஸ் என்ட் அ ஹக் டு சித்தி..” என்று அனு சொல்ல வினயும் ரேஷ்மியும் செய்வதறியாது நின்றனர்..

அபிநயன் ஆபிஸ் செல்லும் முன் அனுவையும் ரியாவையும் அணைத்து முத்தமொன்று கொடுத்துவிட்டு செல்வது வழக்கம்... அதை மனதில் கொண்டு குழந்தை தன் சித்தாப்பாவும் அதை செய்ய மறந்ததாக எண்ணி அவனுக்கு அதை நியாபகமூட்ட முயல்வதாக எண்ணி அவனை முத்தமிடச் சொல்லி பணிக்க அவனோ இந்த புதிய கட்டளையை பற்றி அறிந்திராததால் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பினான்.. ஆனால் அந்த குழப்பம் சிறிது நேரத்திற்கே... அதற்குள் தெளிவு பெற்றவன் சட்டென்று ரேஷ்மியை அணைத்தவன் அவளது முன்னுச்சியில் முத்தமிட்டுவிட்டு விரைந்து அங்கிருந்து சென்றுவிட்டான்... இவை அனைத்தும் கணப்பொழுதில் நடந்துவிட உறைந்து நின்றாள் ரேஷ்மி...

குழந்தைக்காக அணைப்பான் என்று எதிர்பார்த்தவள் அவன் முத்தமிடுவான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது முத்தம் தந்த சிலிப்பு அவளுக்கு நேற்றைய அவனது ஸ்ராபரி முத்தத்தை நினைவு படுத்த அவளுள் எழுந்த உணர்வுகளை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை...அவ்வாறே நின்றவளை கலைத்தது குழந்தையின் குரல்... குழந்தை பசிப்பதாக கூற குழந்தைக்கு உணவூட்ட உள்ளே அழைத்து சென்றாள்....

அன்று முழுவதும் அனுவுடனேயே தன்னுடைய நேரத்தை செலவழித்தாள் ரேஷ்மி...
காலை உணவூட்டுவதில் தொடங்கி விளையாடுவது வரை அனைத்திலும் ரேஷ்மியை நாடினாள் அனு...
உணவு சமைக்க தயாரானவளை சமையலறைக்குள் விடமாட்டேன் என்று அடம்பிடித்தாள் அனு....

ரியா எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் அனு ரேஷ்மியை விடவில்லை..
அனுவின் பிடிவாதம் பற்றி தெரிந்த ரியா மதிய உணவை அவள் தயாரிப்பதாக கிளம்ப வீரலட்சுமியோ அவளை தடுத்து தான் இன்று சமைப்பதாக கூறி நெடுநாட்களுக்கு பின் தாயகம் வந்திருந்த தன் மகன் குடும்பத்திற்கு தடல்புடலாக விருந்து தயார் செய்தார்... ரியாவும் அதற்கு சிறு சிறு உதவிகள் செய்தாள்...

அபினயன் வந்ததும் அவனிடம் குழந்தை தாவ தன் அத்தைக்கு உதவும் முகமாக சமையலறைக்குள் புகுந்தவளை தேடி வந்து தூக்குமாறு கூறியது குழந்தை...
குழந்தையை தூக்கியபடி இருந்த ரேஷ்மியை

“ரேஷ்மி நீ குழந்தையை உன்னோட ரூமிற்கு கூட்டிட்டு போ... நாங்க சமையலை பார்த்துக்குறோம்... அந்த கப்பில் குழந்தைக்கு ஜூஸ் போட்டு வைத்திருக்கேன்... அதை குழந்தைக்கு கொடு.” என்று வீரலட்சுமி பணிக்க அதன்படி அனுவை ஏந்தியவாறு ஜூஸ் கோப்பையை எடுத்துக்கொண்டு தன்னறைக்கு சென்றாள் ரேஷ்மி...

இது இரவு தூங்கும் வரை தொடர்ந்தது... இரவு உறங்குவதற்கு மட்டும் தன்னை விட்டு ரேஷ்மி செல்ல அனுமதித்தாள் அனு... காரணம் இரவு எப்போதும் தன் அன்னை தந்தை இருவரையும் அணைத்துக்கொண்டு தான் உறங்குவாள் அனு... இன்றும் அதையே நாட ரேஷ்மி விடுவிக்கப்பட்டாள்...

வந்ததிலிருந்து ரேஷ்மியை சீண்டுவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த வினயிற்கு எந்தவித சந்தர்ப்பமும் கிடைக்க விடாது செய்த குழந்தை அனுவின் மீது செம்ம கடுப்பில் இருந்தான் வினய்... அவன் முயன்று சந்தர்ப்பத்தை உருவாக்கிய போதும் தன் கேள்விகளால் திணறடித்த குழந்தைக்கு பதில் சொல்லியே மாய்ந்து போனான்..

ஆனால் அவனது மனம் குழந்தையின் செயல்களால் மகிழ்ந்தது... காரணம் குழந்தையோடு குழந்தையாகிய ரேஷ்மியை காணும் போது அவனுக்கு திருப்தியாய் இருந்தது.. என்னதான் தான் சீண்டி விளையாடும் வேளைகளில் தன் செயல்களால் ரேஷ்மி பதிலளித்தாலும் அவளுள் ஒரு இறுக்கம் இருந்ததை வினய் கண்டு கொண்டான்... அதனாலேயே அடுத்த வாரம் வருவதாய் இருந்த தன் தமையன் குடும்பத்தை இன்றே வரவழைத்திருந்தான்... அனுவின் துணை நிச்சயம் ரேஷ்மியின் இறுக்கத்தை தளர்த்தும் என்ற அவன் எண்ணப்படி வந்த முதல் நாளே ரேஷ்மியிடம் நல்லதொரு மாற்றம் இருந்தது... அது அவனுக்கு ஆறுதலாய் இருந்தது... ஆனாலும் காதல் கொண்ட மனமோ தன்னை ரேஷ்மியிடம் நெருங்க விடாத குழந்தை மீது கோபம் கொண்டதென்வோ உண்மை...

குழந்தையை ரியாவிடம் கொடுத்துவிட்டு தனக்கும் வினயிற்கும் பால் எடுத்து வந்தாள் ரேஷ்மி...
அறைக்குள் வந்தவள் லாப்டோப்பினை நோண்டிக்கொண்டிருந்த வினயிடம் பால் கப்பினை நீட்ட அதை வாங்கியவன் அருகிலிருந்த மேஜையின் மீது வைத்துவிட்டு தன் வேலையை தொடர அவனை பார்த்தவாறே நின்றாள் ரேஷ்மி...
அவள் நிற்பது தெரிந்தும் கூட தெரியாதது போல் தன் வேலையில் மூழ்கியிருப்பது போல் பாவ்லா செய்தான் வினய்...

பொறுத்து பார்த்த ரேஷ்மி அவனிடம் எந்தவித பிரதிபலிப்பும் இல்லாமல் போக தன் குரலை சரிபடுத்திக்கொண்டு மெதுவாக வினயை அழைத்தான்...
தன் நடிப்பை உயிர்பானதாய் காட்ட எண்ணிய வினய் அவள் அழைப்பது கேட்காதது போல் தன் வேலையை தொடர்ந்த வண்ணம் இருந்தான்...அதில் கடுப்பானவள் வினய் என்று கூவினாள்..
தன் தலையை உயர்த்தி பார்த்தவன்

“ஏன் ஷிமி இப்படி என் பெயரை ஏலம் போடுற?? நான் உன் பக்கத்துல தானே இருக்கேன்...” என்று அவளை சீண்டினான்..
கோபத்தில் இருந்த ரேஷ்மி தன் கூட்டை விட்டு வெளியே வந்து பழைய ரேஷ்மி போல் அவனுடன் வாயாட தொடங்கினாள்...

“உங்களுக்கு தான் இரண்டு சைடும் டமாரமாகிருச்சி... அதான் சத்தமா கூப்பிட்டேன்.. அது சரி ஏன் வினய் எதிலும் நியாயம் வேண்டாம்??” என்று அவனுடன் வம்பிற்கு நிற்க அதில் மகிழ்ந்தவன்

“இப்போ நான் என்ன அநியாயம் பண்ணிட்டேனு இப்படி கேட்குற ஷிமி??”

“பின்னே ஏலம் போடும் அளவுக்கு உங்க பெயர் என்ன அவ்வளவு வர்த்தா?? என்னமோ வைட் ஹவுஸ் பிரின்சின் பெயரை ஏலம் போட்ட மாதிரி ஓவரா பண்ணுறீங்க??”

“ஆமா நான் வயிட் ஹவுஸ் பிரின்ஸ் தான்... நீ தான் என்னோட பிரின்சஸ்...” என்று கூறி கண்ணடித்தான் வினய்..

அவனது செயல் அவளுள் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்திய போதும் அதை மறைத்தவள்

“நீங்க எப்போ வினய் வயிட் ஹவுசிற்கு பிரின்ஸ் ஆகுனீங்க?? அதுவும் எனக்கு தெரியாம??” என்று கேட்க

“நான் பிறந்ததில் இருந்து வயிட் ஹவுஸ் பிரின்ஸ் தான்மா...” என்று வினய் புதிர் போட

“இது என்ன வினய் புதுசா இருக்கு??”

“இது புதுசு இல்லை ஷிமி.. ரொம்ப பழசு.. நீ நம்ம வீட்டு பெயின்டை சரியாக கவனித்து இருந்தனா உனக்கு தெரிந்திருக்கும்..” என்று தான் போட்ட புதிரை விளக்கினான் வினய்.
அப்போது தான் வைட்- வெள்ளை, ஹவுஸ்-வீடு என்று யோசித்தவளுக்கு அவன் கூறிய அர்த்தம் புரிந்தது...

உடனை கையில் வைத்திருந்த பால் கப்பை அருகிலிருந்த மேஜையில் வைத்தவள் தலையணையை எடுத்து மொத்த தொடங்கினாள்..

அவள் தாக்க தொடங்கியதும் லாப்டொப்பை மூடி ஓரமாக வைத்தவன் அவளை தடுத்தவாறு எழும்பி நின்றான்..

“ஷிமி.. இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேனு என்னை இப்படி அடிக்கிற?? நான் சரியா தானே சொன்னேன்...” என்று அவன் கேட்க அடிப்பதை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் எதையோ தேடினாள்..

“என்ன ஷிமி தேடுற??” என்று வினய் கேட்க

“ஏதாவது வெயிட்டான பொருள் இருக்கானு தேடுறேன்.. இப்படி அதிபுத்திசாலியா யோசிக்கிற அந்த மூளையை காலி பண்ணபோறேன்...”

“அடிப்பாவி... கொஞ்சமாவது நம்ம புருஷன் பாவமேங்கிற எண்ணம் இருக்கா?? இப்படி மண்டையை பிளக்கின்ற நிலைமைக்கு வந்துட்டியே... டேய் வினய் உன் பொண்டாட்டி உன் மண்டையை பிளக்காமல் விடமாட்டா போல... மண்டை பத்திரம் டா...” என்றவனின் பாவனையில் சிரித்துவிட்டாள் ரேஷ்மி...

“ஏன் வினய் நீங்க எப்பவும் இப்படியா...இல்லை இப்ப தான் இப்படியா???”

“எப்பவும் இப்படி இல்லை ஷிமி... என் பொண்டாட்டி பக்கத்தில் இருந்தா மட்டும் தான் இப்படி... அதுவும் நைட்டுல வேற லெவல்...” என்றவனது பார்வை ஆசையுடன் ரேஷ்மியை வருடிச்சென்றது... அது அவளுள் ஒரு மோனநிலையை தோற்றுவித்து அவளது உணர்வுகளுடன் விளையாடியது...

அவளின் முகத்தில் தோன்றிய முகச்சிவப்பும் அவளது கண்களில் தோன்றி அலைப்புறுதலும் அவனின் உணர்வுகளை தட்டி எழுப்பியது...

அவளோ தன் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டி அவனிடம் இருந்து விலகி சென்றாள்...
விலகிச்சென்றவளின் கையினை பிடித்து இழுத்தவன் அவளை பின்னாலிருந்து அணைத்தான்...
அதுவரை நேரம் அணை கொண்டு மறைக்கப்பட்ட நீராய் தடுக்கப்பட்டிருந்த அவளது உணர்வுகள் அவளது அனுமதியின்றி வெளியேறித்தொடங்கியது...

அணைத்தவன் அணைத்ததோடு நிற்காமல் மேலும் முன்னேறத்தொடங்க அதில் முணங்கினாள் ரேஷ்மி...

“வேணாம் வினய்... ப்ளீஸ்...” என்று முணுமுணுக்க அதை காதில் வாங்காதவன் மேலும் முன்னேற தொடங்க

“வினய் ப்ளீஸ்...” என்று அவனை விலக்க முயன்றாள் ரேஷ்மி..
அவளது கழுத்து வளைவில் புதைந்திருந்தவன் தன் தலையை உயர்த்தி அவளது காதில் முணுமுணுத்தான்

“ப்ளீஸ் ஷிமி... எனக்கு அனு மாதிரி நமக்குனு ஒரு பாப்பா வேணும்... ப்ளீஸ் ஷிமி...” என்று கூறினான் வினய்...
அனுவை கண்டதிலிருந்து ரேஷ்மியிற்கும் அந்த ஆசை ஏற்பட்டிருந்தது... ஆனால் ஏனோ ஆசை பட்ட மனமே அதற்கு மறுப்பு கூறியது...எதனால் என்று அவளுக்கு புரியவில்லை...
அதை இப்போது வினயும் கேட்கவும் அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... ஆனால் அவளது ஒரு மனமோ சரி என்று சொல்லச்சொல்ல மற்றைய மனமோ வேண்டாம் என்று மறுக்கச்சொன்னது...

இவ்வாறு இருமனமாக தவித்தவளை அணைத்திருந்த வினயின் பிடி இறுகிக்கொண்டே சென்றது...
குழம்பி தவித்தவளுக்கு இயற்கை அழைப்பு துணையாய் வர

“வினய் வொஸ் ரூம் போகனும்.. ப்ளீஸ்..” என்று கேட்டவளின் குரலில் உணர்வுகள் அறுபட அவளை விடுவித்தவன் கட்டிலில் அமர்ந்து தன் லாப்டொப்பை திறந்தான்..
அவனது பிடி தளர்ந்ததும் விரைந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் ரேஷ்மி...

உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் வினயிடம் டவலை எடுத்து தருமாறு கேட்க அவனோ காதில் விழாதது போல் இருந்தான்... மீண்டும் அவனை அழைக்க என்னவென்று கேட்க துவாயை எடுத்துத்தருமாறு கேட்டாள் ரேஷ்மி... அவன் துவாயை எடுத்து கொடுத்துவிட்டு மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்து லாப்டொப்பை குடையத்தொடங்கினான்..

அவனது தேவை நிறைவேறாத கோபம் அவன் அந்த லாப்டொப்பின் விசைப்பலகையை தட்டிய விதத்திலேயே தெரிந்தது..
குளியலறையில் இருந்து வந்தவள் தலையில் ஈரம் சொட்ட நிற்க அதை பார்த்தவனது கோபம் கரை கடந்தது...

“இப்போ என்ன நடந்ததுனு இந்த நேரத்துல குளிச்சிட்டு வந்து நிற்கிற??? என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியிது...?? நான் உன்னோட புருஷன் தானே... நான் தொட்டேனு இப்படி நேரம் காலம் பார்க்காமல் குளித்துவிட்டு வந்து நிற்குற?? நான் பண்ணது தப்பு தான் மன்னித்துக்கொள்.... உன்னோட அனுமதியை கேட்காமல் நான் அப்படி நடந்துக்கிட்டது தப்பு தான் மன்னித்துக்கொள்... இன்னும் எவ்வளவு நேரம் ஈரத்தோடு நிற்கப்போற... தலையை துவட்டு..” என்றுவிட்டு இன்னொரு துவாயை வாட்ரோப்பில் இருந்து எடுத்துவந்து அவளது தலையை துவட்டப்போக திடீரென துவாயை அவள் கையில் கொடுத்துவிட்டு தான் இருந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்....

அவனது திடீர் கோபத்தில் திகைத்து நின்ற ஷிமி அவனது செயலில் நடப்பது புரியாமல் கற்சிலையென நின்றாள்...
அவளுக்கு தெரிந்தவரையில் வினயிற்கு கோபமே வராது.... அதுவும் தன்னிடம் எப்போதும் காதல் பொங்கி வழியும் கண்களுடன் பேசுபவனுக்கு கோபத்திற்கு அர்த்தம் தெரியாது... அப்படியிருப்பவன் திடீரென்று கோபத்துடன் நடந்துக்கொள்ளவும் அதிர்ந்துவிட்டாள் ரேஷ்மி...
அதிர்ச்சியில் அவள் நின்ற இடத்திலிருந்து அசையாமல் இருக்க

“இன்னும் எவ்வளவு நேரம் ஈரத்தோடே நிற்கப்போற... தலையை துவட்டு...” என்று அவன் சத்தம் போட அதில் உணர்வு பெற்றவள் தலையை துவட்ட தொடங்கினாள்..
துவட்டியதும் உடையை மாற்றிவிட்டு தரையில் படுக்கை விரித்தவளை பார்த்த வினயின் கோபம் இன்னும் அதிகரித்தது...

“நீ என்ன தான் மனசில நினைத்திட்டு இருக்க... எதுக்கு என்னோட கோபத்தை அதிகப்படுத்துற மாதிரி நடந்துக்குற?? உனக்கு பிடிக்கலைனா நாலு வார்த்தை திட்டிரு. இப்படி எல்லாம் பண்ணாதா... எதுக்கு என்றும் இல்லாத வழக்கமாக இன்றைக்கு கீழே படுக்குற?? என்னை அவ்வளவு மட்டமா நினைத்துவிட்டாயா??? ஏன் ஷிமி இப்படி என்னை காயப்படுத்துற??”

“இல்லைங்க... அப்படிலாம் இல்லை... வீட்டுக்கு தூரமாகிட்டேன்... அதான் கீழ படுத்துக்க படுக்கையை விரித்தேன்..” என்ற ரேஷ்மியின் பதிலில் தன் தவறை உணர்ந்தான் வினய்...
அவள் மாதவிலக்கு வந்ததால் கீழே தான் படுப்பாள் என்று ஏற்கனவே வினயிற்கு தெரியும்... அப்படியிருக்கையில் அவளிடம் கோபப்பட்டது அவனுக்கு வருத்தத்தை அளித்தது... இது போன்ற சமயங்களில் அவள் மிகவும் பலவீனமாய் இருப்பாள் என்று அனுபவத்தால் அறிந்தவன்

“சாரி ஷிமி... நான் ஏதோ ஒரு டென்ஷனில் உன்கிட்ட சத்தம் போட்டுட்டேன்... தலையை நன்றாக துவட்டிட்டியா??உனக்கு ஏதாவது வேண்டுமா...???? நீ இன்னும் கொண்டு வந்த பாலை குடிக்கலையே... இந்தா இதை குடி” என்று வினய் அக்கறையுடன் மேஜையில் இருந்த பாலை எடுத்து அவளது கைகளில் திணிக்க அதில் கண் கலங்கினாள் ஷிமி... இவ்வளவு நேரம் காய்ச்சி எடுத்தவன் தன் நிலை உணர்ந்ததும் மன்னிப்பு கேட்டது மட்டுமலாமல் தனக்கு ஏதும் தேவையா என்று அவன் கேட்டுவிட்டு தேவையை அறிந்து கொண்டு அவன் நடந்து கொண்ட விதம் அவளுள் ஒருவித நிம்மதியை ஏற்படுத்தியது..

“ஏன் ஷிமி..கண் கலங்குது... உனக்கு ரொம்ப வலிக்குதா??? நான் பெயின் கில்லர் எடுத்து தரவா??”

“இல்லை வினய் அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை... ஐயம் ஆல் ரைட்.. நீங்க படுங்க..” என்றுவிட்டு மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள் ரேஷ்மி...
அவளை பார்த்தவாறே அமர்ந்திருந்த வினய் அவள் உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டு அவள் அருகில் சென்றவன் அவள் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு

“சாரி ரேஷ்மி .. ஏதோ கோபத்துல உன்கிட்ட அப்படி நடந்துகிட்டேன்... நீ திடீர்னு குளிச்சிட்டு வந்து நின்றதும் நான் உன்னை தொட்டது பிடிக்காமல் தான் அப்படி செய்தியோனு தப்பா நினைத்து தான் உன்கிட்ட சண்டை போட்டேன்.. உன்னோட நிலைமை புரியாமல் உன்னை திட்டுனது தப்பு தான்.. உன் வினயை மன்னிச்சிரு ஷிமி... இனிமே இப்படி நடந்துக்கவே மாட்டேன்...” என்றவன் எழும்பி விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டான்..
அவன் சென்றதும் கண்களை திறந்தவள் ஒரு சிரிப்பினை உதிர்த்து விட்டு மீண்டும் தன் விழிகளை மூடிக்கொண்டாள்..

உன்னாலே உனதானேன் 4

உன்னாலே உனதானேன் 6

Last edited:

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 5
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN