Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
உன்னாலே உனதானேன்
உன்னாலே உனதானேன் 6
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்று ஆறுதலாகவே கண்விழித்தான் வினய்..

எப்போதும் போல் அருகில் மனைவியை தேட அப்போது தான் இரவு நடந்த சம்பவம் நியாபகம் வந்தது...

கட்டிலின் மறுகோடிக்கு வந்தவன் மனைவியை பார்க்க அவள் அசந்து தூங்குவது தெரிந்தது...

கையை தலைக்கு கொடுத்து கொண்டு தன் மனையாளை ரசித்துக்கொண்டிருந்தான்....

அப்போது அவனுக்கு கல்லூரி நாட்கள் நியாபகம் வந்தது...

கல்லூரியின் இறுதியாண்டில் இருந்த வினய் தன் நண்பர்களுடன் அங்கிருந்த கார்டனில் கூடியிருந்தான்....

“மச்சி காலேஜ் லைப் முடியப்போகுது.... ஆனா பாரு எந்த கவலையும் இல்லாம நாம என்ன பண்ணிட்டு இருக்கோம்னு...” என்று வினயின் தோழன் தினேஷ் ஆரம்பிக்க

“டேய் இதை இப்ப மட்டுமாடா பண்ணுறோம்..?? காலேஜ் வந்த காலத்திலிருந்து இதை மட்டும் தானேடா பண்ணிட்டு இருக்கோம்...” என்று அஜய்யும் வழிமொழிய

“டேய் என்ன பண்ணிட்டோம்னு இப்போ நீங்க இரண்டு பேரும் கவலைபடுறீங்க??? எனக்கு தெரிந்து நாம ஒன்றுமே பண்ணலையே....” என்று வினய் புரியாமல் கேட்க

“அதை தான் மச்சி நாங்களும் சொல்லுறோம்... நாம தான் ஒன்றுமே பண்ணலையே...” என்று அஜய் கூற

“டேய் நீ பேசாத.... உனக்கு ஒன்றா இரண்டா நம்ம கிளாஸ் பொண்ணுங்க உன்னை சுற்றியே தான் இருப்பாங்க... இது பத்தாதுனு நம்ம ஜூனியர் பொண்ணுங்களும் அஜய் எங்கனு உன்னை தான் தேடுறாங்க.... நீ என்னடானா இப்படி சொல்லுற??” என்ற தினேஷை முறைத்தான் அஜய்.

“ஏன்டா காலேஜ் பஸ்ட் டே சிவனேனு லாஸ்ட் பென்சில் போய் உட்கார்ந்திருந்த என்னை டிஸ்ரிக் ரேங்கர்னு கோர்த்து விட்டதும் இல்லாமல் இப்போ வரைக்கும் பஸ்ட் பென்ச்சில் இருந்து எழும்ப முடியாமல் சதி பண்ணிட்டு கதையா சொல்லுற??? என்ன சொன்ன பொண்ணுங்க என்னை சுத்துறாங்களா?? டேய் வாய்ல நல்லா வந்திரும் பார்த்துக்கோ...

அதுங்க எல்லாம் நீங்க எங்களுக்கு பிரதர் மாதிரினு சொல்லி சொல்லியே படுத்துறாளுங்க.... இது பத்தாதுனு வர்ற ஜூனியர் பொண்ணுங்களும் பிரதர்னு கூப்பிட்டே என்னை அசிங்கப்படுத்துதுங்க.. இப்படி எல்லாவற்றிலும் எனக்கு நீ சதி பண்ணிட்டு கதையா சொல்லுற??” என்று தன் கையில் இருந்த புத்தகத்தால் தினேஷை அடித்தான் அஜய்...

“டேய் அஜய் அவனை விடுடா... கிளாஸ் டாப்பருக்கு கூட இப்படி ஒரு சோகம் இருக்கும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும்டா... நாங்க என்னமோ நீ பொண்ணுங்க கூட ஜகஜகா ஜிகஜிகா பண்ணிட்டு இருக்கனு நினைத்தால் நீ என்னடானா இப்படி சொல்லுற?? நாங்க இதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கலை டா..” என்ற வினயிடம்

“வாடா நல்லவனே... அவனாவது காலேஜ் பஸ்டே தான் அப்படி செய்தான்... ஆனா நீ காலேஜ் பிராபஸர் அவ்வளோ பேர் கூடவும் என்னை கோர்த்துவிட்ட...

லாஸ்ட் பென்சில் வந்து உட்கார்ந்த என் பெயரை ஏலம் போட்டு என்னவோ உலக மகா நல்லவன் மாதிரி அஜய் நீ கிளாஸ் டாப்பர்டா... பஸ்ட் பென்ச்சில் தான் உட்காரனும்னு அந்த பிராபசர் பழனிமுருகன் இருக்கும் போது கோர்த்துவிட்டு அந்தாளு என்னை வச்சி செய்ததை பார்த்து கைத்தட்டியவன் தானேடா நீ.... உனக்கு அவன் பரவாயில்லை டா...” என்று வினயை தன் கையிலிருந்த புத்தகத்தால் விளாசத்தொடங்கினான் அஜய்.

“டேய் கோபப்படாத அஜய்... நாங்க உன்னோட நல்லதுக்கு தானே அப்படி பண்ணோம்...அதுக்கு ஏன் நீ இவ்வளவு கோபப்படுற??? “ என்று தினேஷ் கேட்க

“எதுடா நல்லது...?? என்னை இதுங்க கிட்ட மாட்டிவிட்டுட்டு நீங்க இரண்டு பேரும் தனியா லூட்டி அடிக்கிறதா?? செய்றது எல்லாத்தையும் செய்துட்டு இப்போ பேசுறீங்களாடா..??”

“சரிசரி விடு மச்சி... இவ்வளவு நாள் செய்யாததை இப்போ செய்வோம்... நீயும் எங்க கூட வர்ற சரியா??” என்று வினய் சமாதானப்படுத்த முயல

“என்ன செய்தாலும் என்னை நம்ம டிப்பார்ட்மென்டில் அவ்வளவு பேருக்கும் தெரியும்... எதுனாலும் என்னை தான் அந்த பழனியப்பன் படுத்துவான்..” என்று அஜய் நொந்து கொள்ள

“டேய் நம்ம டிப்பார்ட்மென்டில் செய்தா தானே உன் பெயர் அடிபடும்... நாம வேற டிப்பார்ட்மென்டில் புகுந்து விளையாடுவோம்...” என்று தினேஷ் சொல்ல அவனை சந்தேகத்துடன் பார்த்த அஜய்

“நீ எதை மீன் பண்ணுற?? எனக்கு புரியலை..”

“அதானே.. உனக்கு அந்த நோட்டுல உள்ள எழுத்து மட்டும் தானே புரியும்... நாங்க சொல்வது எல்லாம் புரியாதே... உனக்கு அந்த பழனியாண்டவன் தான் சரிப்படுவான்... நீ நடையை கட்டு...” என்று தினேஷ் அஜயை விரட்ட அவனை தடுத்த வினய்

“டேய் தினு அவன் தான் குழந்தைனு தெரியும்ல.... அவனுக்கு புரியிற மாதிரி சொல்லுடா...அஜய் அவன் என்ன சொல்லுறானா வேற டிப்பார்ட்மண்டில் ராகிங் பண்ணுவோம் அப்புறம் லவ் பண்ணுவோம்னு சொல்லுறான்....” என்று விளக்கினான்..

“லவ் சரிடா... ஆனா இந்த ராகிங்...காலேஜில் ராகிங் அலவ்ட் இல்லை தானே...” என்று அஜய் கேட்க அதில் கடுப்பான தினேஷ்

“டேய் கவின் இவன் சரிப்பட மாட்டான்டா... வா நாம போகலாம்.. இந்த ரூல்ஸ் ராமசாமிக்கு அந்த பழனியாண்டவர் தான் சரி.. வா நாம கிளம்பலாம்..” என்று தினேஷ் எழும்ப

“டேய் ஏன்டா கோவிச்சுக்கிற... நான் கேட்டது தப்பு தான்... இனிமே நான் எந்த கேள்வியும் கேட்க மாட்டேன்.. நீ என்ன சொல்லுறியோ அதையே செய்றேன்...”

“டேய் தினு பய நம்ம வழிக்கு வந்துட்டான்...இனிமே தெளிந்துவிடுவான்..” என்று வினய் தினேஷை சமாதானப்படுத்த மூவரும் அங்கிருந்து சென்றனர்...

ஆனால் அஜயை அங்கிருந்த அனைத்து டிப்பார்ட்மென்ட் மாணவர்களுக்கும் தெரிந்திருந்தது. அவனை கண்டதும் அனைவரும் வந்து அவனுடன் வந்து பேச அவனுக்கு முழி பிதுங்கியது... அவனது பாவனையை பார்த்த வினயிற்கும் தினேஷிற்கும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை...

ஆனால் பாவம் அஜயோ அங்கு வந்து அவனிடம் கேள்வி அனைவருக்கும் பதில் சொல்லியே மாய்ந்து போனான்...

அஜயை இப்போதைக்கு விட மாட்டார்கள் என்றுணர்ந்த வினயும் தினேஷும் அங்கிருந்து என்ரன்சிற்கு வந்து வருவோர் போவோரை வேடிக்கை பார்த்தபடி உரையாடிக்கொண்டிருந்தனர்...

அப்போது அவர்களது உரையாடலை கலைத்தது ஒரு பெண்குரல்..

“எக்ஸ்கியூஸ் மீ... இங்கே அட்மின் ஆபிஸ் எங்க இருக்கு??” என்ற குரலில் திரும்பினர் வினயும் தினேஷும்..

அங்கு அவன் முன் நின்றிருந்தாள் ரேஷ்மி..

இளஞ்சிவப்பு நிற சல்வாரில் தேவதையாய் நின்றிருந்தவளை கண்ணிமைக்க மறந்து பார்த்து நின்றிருந்தான் வினய்...

இளஞ்சிவப்பு நிற ஷல்வார் டாப்பும் அதற்கேற்றாற் போல் பட்டர்ப்ளை பேண்டும் அணிந்திருந்தவள் மறவாது மார்பை மறைத்து துப்பட்டா அணிந்திருந்தாள்...

திரண்ட வெண்ணெயின் நிறத்தில் ஜொலித்த அவளது வதனத்தை பிறர் கவனம் ஈர்க்கா வண்ணம் தடை செய்யும் முகமாக அவளது நெற்றியில் வீற்றிருந்தது வெண்ணிற பொட்டு... அந்த கூரான நாசியில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த அந்த சிறிய வெள்ளைக்கல் பொருத்திய மூக்குத்தி அவளது தேஜஸை இன்னும் அதிகப்படுத்தியது...

அவள் பேசும் போது தாளத்திற்கேற்ப நடனம் ஆடுவது போல் அவளது சீராக்கப்பட்டிருந்து புருவம் இரண்டும் கதை பேசியது....

கதைபேசும் பொறுப்பை புருவத்திடம் ஒப்படைத்திருந்ததால் கண்டறியும் பொறுப்பை அந்த மையிட்ட விழிகள் பொறுப்பெடுத்திருந்தது.. எதிரே நிற்பவரை ஸ்கேனிங் இயந்திரத்தை போல் ஆராய்ந்தது... அந்த இருவிழிகளும் எதிரே இருப்பவரை எச்சரிக்கும் பாவனையுடனே இருந்தது... ஆனால் வினயிற்கோ அது தன்னை வசமிழக்கச்செய்யும் பார்வையாய் தெரிந்தது..

அடிக்கடி ஒட்டி பிரியும் அந்த செவ்விதழ்கள் வார்த்தைகளை மிக நிதானமாக உரைக்க அதில் ஒரு அழுத்தம் தொக்கி நின்றது...

இவ்வாறு அவனது பார்வை ஆராய்ச்சி தொடர ரேஷ்மியோ அங்கிருந்து சென்றுவிட்டாள்..

திடீரென்று அவள் செல்லவும் கலைந்த கனவை நிஜத்தில் தொடர்பவன் போல் அவள் பின் செல்ல முயன்றவனை தடுத்தான் அஜய்..

“டேய் எங்கடா போற??” என்று கேட்க

“டேய் இப்போ ஒரு பொண்ணு போனாளே அவ எங்க போறா??”

“அவ எங்க போனா உனக்கு என்ன?? அதை எதுக்கு நீ கேட்குற??”

“டேய் அலட்டாம கேட்டதுக்கு பதில் சொல்லு”

“அவ அட்மின் ஆபிஸ் எங்க இருக்குனு கேட்டா... நீ என்னமோ பேய்படம் பார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷன் குடுத்துட்டு நின்னுட்டு இருந்த...அதான் நானே வழி சொல்லி அனுப்பிட்டேன்...” என்று அஜய் பதிலளித்த அடுத்த நொடி வினய் அங்கு இல்லை...

ரேஷ்மியை தொடர்ந்து சென்றவன் அவளுடன் அட்மின் ஆபிசினுள் நுழைந்து அவள் யார் என்ற விபரத்தை அறிந்து கொண்டான்..

ரேஷ்மி இன்டர் காலேஜ் கல்ச்சரல்ஸ் தொடர்பாக கல்லூரி அதிபரை பார்க்க வந்திருப்பதை தெரிந்து கொண்டவன் அவளது பெயரையும் காலேஜ் பெயரையும் தெரிந்து கொண்டான்... அதற்கு மேல் அங்கு நின்றால் தன் மேல் சந்தேகம் வரும் என்று உணர்ந்தவன் அங்கிருந்து வந்துவிட்டான்.....

வந்தவனை பிடித்து கொண்டான் தினேஷ்..

“என்னடா நடக்குது...” என்று கேட்க

“மச்சி... நீ இன்டர் காலேஜ் கல்ச்சர்ஸ்ஸில் டான்ஸ் ஆடப்போறியாமே...” என்று வினய் சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வியை கேட்க

“டேய் லூசாடா நீ... நான் என்ன கேட்டேன்.. நீ என்ன சொல்லுற??”

“அட ஆமா மச்சி... நீ ஆடுற...அதை பார்க்க நான் இன்டர் காலேஜ் பங்ஷனுக்கு வர்றேன்...” என்று சம்பந்தம் இல்லாமல் பேசி தினேஷை குழப்பிவிட்டு சென்றுவிட்டான் வினய்..

“இப்போ நான் என்ன கேட்டேன்... இவன் என்ன சொல்லிட்டு போறான்..... இதில் இந்த இன்டர் காலேஜ் கல்ச்சரல்ஸ் எங்கிருந்து வந்தது... இவன் எதுக்கு ஏதோ மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி போறான்.... ஒன்னுமே புரிய மாட்டேன்குது... இவன் என்னை கஜினி சூர்யா மாதிரி ஆக்காம விடமாட்டான் போல இருக்கு..” என்று தன்னுள் புலம்பியவாறு வினயை தேடிச்சென்றான் தினேஷ்..

இன்டர் காலேஜ் கல்ச்சரல்ஸ்ஸிற்காக தயாராகிக்கொண்டிருந்தது அந்த ஆடிட்டோரியம்...

ஆடிட்டோரியத்திற்கு பின்புறமாக இருந்த அறைகளில் தயாராகிக்கொண்டிருந்தனர் அன்றைய போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள்.

அங்கு தன் நண்பனுடன் அரட்டை அடுத்துக்கொண்டிருந்தான் வினய்...

“மச்சி கல்ச்சரல்ஸிற்கு எல்லா காலேஜ் பொண்ணுங்களும் வந்திருப்பாங்களா???” என்று வினய் கேட்க

“அவங்களை சைட் அடிக்க தானே என்னை இதுல கோர்த்துவிட்டுட்டு நீ குளிர் காயிற..?? என்று தினேஷ் பதிலளிக்க

“என்ன தினு இப்படி சொல்லுற?? உன் டேலன்டை சரியான இடத்திற்கு தெரியப்படுத்தனும் அப்படீங்கிற நல்ல எண்ணத்தில் நம்ம அஜயை வைத்து நீ இதில் பார்ட்டிசீபேட் பண்ண சான்ஸ் வாங்கிகொடுத்தா நீ இப்படி சொல்லுற??” என்று வினய் போலியாக வருந்த

“என்னமோ படத்தில் ஹூரோவா நடிக்க சான்ஸ் வாங்கிக்கொடுத்த மாதிரி சீனைப் போடுற??? இந்த அக்கறை போன வருஷம் எங்க போனதாம்???போன வருஷம் காம்படீஷனில் கலந்துக்கிறேன் என்று உன் காலைப்பிடித்து கெஞ்சாத குறையாக நான் கெஞ்சினப்போ நீ என்ன சொன்ன.... கொஞ்சம் யோசிச்சிப்பாரு...” என்று தினேஷ் எதிர்கேள்வி கேட்க வினயோ

“மச்சி அது போன வருஷம்... இது இந்த வருஷம்..” என்று அசால்ட்டாக பதிலளித்தவனை பார்த்து தன்னால் முடிந்தமட்டும் முறைத்தான் தினேஷ்..

“டேய் இதெல்லாம் உலக மகா அக்கிரமம் டா.. உனக்கு வந்த இரத்தம்.. அதே எனக்கு வந்தா தக்காளி சட்னியா??”

“இல்லை மச்சி.. உனக்கு வந்தாலும் இரத்தம் தான்டா...”

“நல்லா பேச கத்துக்கிட்ட டா...”

“உன்னோட இருந்து இதுகூட இல்லைனா எப்படி மச்சி...??”

“சிறப்பு... சரி நீ எதுக்கு எந்த காம்படீஷனிலும் கலந்துக்கவில்லை.. உனக்கு தான் டான்ஸ், பாட்டு, டிராமானு எல்லாமே வருமே... எதுக்கு தனியா என்னை இதுல கோர்த்துவிட்ட..???" என்ற தினேஷின் கேள்விக்கு

“அதுக்கு போன அப்புறம் நான் வந்த வேலையை யாரு பார்ப்பா??” என்று மைண்ட் வாயிசில் பதிலளித்தான் வினய்.

“என்னடா என்ன ரீல் சுத்தலாம்னு யோசிக்கிறியா???” என்ற தினேஷ் கேட்க

“நான் ஏன்டா பொய் சொல்ல போறேன்...”

“டேய் நடிக்காதடா டேய்... உன் ஸ்டரி, ஜாக்கிரபி, பயோலஜி எல்லாம் எனக்கு தெரியும்.. சொல்லு அந்த பொண்ணை பார்க்க தானே இப்படி ஒரு பிளானை போட்ட..... நீ லவ் பண்ண என்னை இதுல காயவிடுறல???”

“டேய் தினு அதெல்லாம் ஒன்றும் இல்லைடா...” என்று மறுத்த வினயை

“நடிக்காதடா டேய்.... நான் கூட பரவாயில்லை...அந்த பச்ச மண்ணு... அந்த புள்ளை பூச்சு அஜயை என்ன பாடு படுத்துன?? நீ அடிச்ச கூத்துல பயபுள்ள திட்டு வாங்காத ஆளில்லை... போறவார பயலுங்க எல்லாரும் அவனை கலாய்ச்சி அசிங்கப்படுத்திட்டாய்ங்க...

அவன் ஏதோ நம்ம பிரண்டுக்காகனு கஷ்டப்பட்டு எல்லாம் ரெடி பண்ணா.. சார் உங்க லவ்சை டிவலப் பண்ண தான் இத்தனை அட்டகாசம்னு எனக்கு அப்போ புரியாம போயிருச்சி...”

“இல்லை மச்சி.... உனக்காக தான் நான் இதெல்லாம் செய்தேன்....” என்று கற்பூரம் ஏந்தி சத்தியம் பண்ணாத குறையாக வினய் சொல்ல

“அப்படியா மச்சி..?? அப்போ எதுக்கு அந்த பொண்ணு இங்க வந்தப்போ வைத்த கண்ணு வாங்காமா ஏதோ யூடூப்பில போற அட்வடீஸ்மண்ட் முடியவரைக்கும் பார்க்குற மாதிரி பார்த்துட்டு இருந்த...”

“டேய் யூ டூப்பில் போற அட்வடீஸ்மண்டை அவாய்ட் பண்ண முடியாம பார்க்குறோம். இதுவும் அதுவும் எப்படிடா ஒன்றாகும்..”

“அப்போ அந்த பொண்ணை நீ ஆசைப்பட்டு தான் பார்க்கிறாய் என்பதை ஒத்துக்கொள்கின்றாய்...??”

“டேய் தினு நான் எப்படா அப்படி சொன்னேன்..??”

“அப்போ நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்..??”

“அது வந்து... அது...” என்று தடுமாறிய வினயை பார்த்து சிரித்தான் தினேஷ்..

“அதான் வரலையில்ல.. விட்டுரு... இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..” என்ற தினேஷின் கேள்விக்கு சற்று வெட்கத்துடன் ஆம் என்று பதில் சொன்னான் வினய்..

பெண்ணின் வெட்கம் அவளது பெண்மையை வெளிச்சப்படுத்தும்... அதே ஆணின் வெட்கம் ஆண்மை எனும் போர்வைக்குள் பதுங்கியிருக்கும் அந்த குழந்தை மனதை பிரதிபலிக்கும்.... கடுமையே பிறவிக்குணமென்ற ஆண்கூட வெட்கப்படுகையில் குழந்தையாய் மாறிவிடுவான்... எப்போதும் வம்படித்துக்கொண்டு தான் இருக்கும் இடத்தை கலகலப்பாய் மாற்றும் வினயின் வெட்கத்தின் வனப்பை வார்த்தைகளால் கூறவும் வேண்டுமா..??

தன் நண்பனின் வெட்கத்தை மனதினுள் ரசித்து சிரித்துக்கொண்ட தினேஷ் வெளியே

“டேய் என்ன ரியாக்ஷன் டா இது... இப்படி வேறு யார் முன்னுக்கும் செய்திடாத டா.. அப்புறம் அவங்களுக்கு வேப்பிலை தான் அடிக்கனும்... யப்பா சாமி ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திரிச்சி...” என்று கிண்டல் செய்த தினேஷை முறைத்தான் வினய்....

இவ்வாறு நண்பர்கள் இருவரும் அரட்டை அடித்துகொண்டிருந்தனர்..

போட்டிகள் ஆரம்பிக்கப்போவதாக வந்த அறிவுறுத்தலையொட்டி வினய் அரங்கத்திற்கு வந்து அவனது பிற கல்லூரி தோழர்களுடன் இணைந்து கொண்டான்.

அந்த இடைவெளியில் ரேஷ்மியை தன் கண்களால் தேடவும் தவறவில்லை... ஆனால் அவனது தேடுதலுக்கு விடையானவளோ மேடையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தயாராகிக்கொண்டிருந்தாள்..

நிகழ்ச்சி ஆரம்பமாக அரங்கமே களைகட்டியது...

குறிப்பாக வினயிற்கோ தேன் குடிக்க வந்து அமிர்தமே கிடைத்த நிலை... அவளை ஒருமுறையேனும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கியிருந்தவனுக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் அட்டன்டன்ஸ் கொடுத்து அவனை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்திருந்தாள் ரேஷ்மி...

ஒவ்வொரு நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் ஆரவாரமாக தன் சக தொகுப்பாளருடன் ஆரம்பிக்கும் அவளது சிறு உரையாடலுக்கு எழும் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது... அதிலும் அவள் இடையிடையே அவையினரை பார்த்து புன்னகைப்பது தன்னை பார்த்து புன்னகைப்பதாக வினய் எண்ணிக்கொண்டான்...

அவனது மூளையோ

“டேய் கிறுக்கா.... அவ உன்னை மட்டும் பார்த்து சிரிக்கலைடா.. இந்த ஆடிட்டோரியத்தில் உள்ள எல்லோரையும் பார்த்து தான் சிரிச்சா... அவ உன்னை மட்டும் பார்த்து சிரிக்க நீ என்ன அவ புருஷனா???” என்று காய்ச்சியெடுக்க அவனது மனமோ

“இப்போ புருஷன் இல்லை... அவ தான் எனக்கு பொண்டாட்டி... அவ என்னை பார்த்து தான் சிரிச்சா....அதுவும் என் கண்ணை பார்த்து அவ சிரிச்சா பாரு... சான்சே இல்லை.... என்னா பொண்ணுடா... அப்படியே அள்ளிக்கலாம் போல இருக்கு..... அவ கண்ணு கூட்டத்துல இருக்க என்னை தேடி கண்டுபிடிச்சி சிரிக்கும் போது.... பா... சொல்ல வார்த்தையே இல்லை.. இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது...” என்று அவன் மனமோ கண்டபடி உளற அதில் கடுப்பான மூளையோ எக்கேடோ கெட்டுப்போ என்று விட்டுவிட்டது.....

இவ்வாறு இறுதிவரை அவளை சைட் அடிப்பதையே வேலையாக செய்தவன் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் அவளைத் தேடி சென்றான்...

அவள் மேடையில் இருந்து இறங்கி வாஷ்ரூம் செல்லும் வழியில் அவளை வழிமறித்தான் வினய்...

திடீரென்று தெரியாத ஆடவன் ஒருவன் வழிமறிக்க முதலில் பதறியவள் பின் சுதாகரித்துக்கொண்டு அவனை என்னவென்ற ரீதியில் பார்த்து நின்றாள்..

அவளது கூர் பார்வையில் முதலில் பதறியவன் பின் அதில் தலைகுப்புற விழுந்து சரணடைந்தான்...

அவனது மனமோ “இவளை பெத்தாங்களா செய்தாங்களா?? அணுவனுவா ஆளை கொல்லுறாடா... ஏன்டி இப்படி பார்த்து பார்த்தே ஆளை இம்சை பண்ணுற???ஐயோ இவ கிட்ட இருந்து யாராவது என்னை காப்பாத்துங்களே...” என்று உளறிக்கொண்டிருக்க அவனை கலைத்தது ரேஷ்மியின் குரல்..

“எக்ஸ்கியூஸ்மி...” அவளது குரலில் தன்னிலை கலைந்தவன்

“சாரி.... உங்களை இன்டரப்ட் பண்ணதுக்கு.... உங்களை விஷ் பண்ண தான் வந்தேன்... சூப்பரா பிரோகிராமை ஹாஸ்ட் பண்ணீங்க மிஸ் ரேஷ்மிகா... கன்கிராஜ்...” என்று வினய் வாழ்த்துசொல்ல அதனை ஏற்றுக்கொண்டாள் ரேஷ்மி...

அவள் அங்கிருந்து செல்ல அவளை தடுக்க முயன்றவனை தடுத்தது தினேஷின் குரல்..

“டேய் கவின் இங்க என்னடா பண்ணிட்டு இருக்க?? ஜென்ஸ் டாய்லெட் அந்த பக்கம் இருக்குடா...” என்ற தினேஷின் கூற்றில் ரேஷ்மியின் பார்வைக்கான அர்த்தம் விளங்கியது..

தன் தலையில் அடித்துக்கொண்டவன் அவளிடம் மன்னிப்பு கோரிவிட்டு அங்கிருந்து விரைந்து நண்பன் இருந்த இடம் நோக்கி வந்தான்...

அவனது நினைவுகளை கலைத்தது ரேஷ்மியின் குரல்....

“என்ன வினய் தூக்கத்தில் விட்ட கனவை கண்முழித்த பிறகு தொடருகின்றீர்களா...??” என்ற அவளது கேள்வியில் சிரித்தவன்

“இது தூக்கத்தில் மட்டும் வரும் கனவில்லை ஷிமி... நினைவிலும் என்னுடன் உறவாடும் கனவு.. அதாவது என்னுடைய வாழ்நாள் முழுதும் தொடரும் கனவு... இவ்வளவு நேரம் அந்த கனவு என்னை ஆட்டிப்படைத்த மெமரீசை ரீகெய்ன் பண்ணிட்டு இருந்தேன்... ஆனா இப்போ அந்த கனவே என் கண் முன்னால் காபி கப்போடு நின்றுக்கொண்டு என் கண்களோடு உறவாடுவிட்டு இருக்கு...” என்றவனின் பேச்சில் மயங்கி நின்றாள் ரேஷ்மி...

அவளை ஆக்கிரமித்திருந்த வெட்கத்தால் முகம் சிவக்க தலை குனிந்தவளின் அழகில் மதி மயங்கி நின்றான் வினய்... அவளை மேலும் சிவக்க வைத்து ரசிக்க எண்ணியவன் அந்த பாடலை பாடினான்..

கனவே கலையாதே – காதல்

கனவே கலையாதே

கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்

கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்

மரகத வார்த்தை சொல்வாயா

மௌனத்தினாலே கொல்வாயா

சின்ன திருவாய் மலர்வாயா

கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்

கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்

நீ மௌனம் காக்கும்போதும்

உன் சார்பில் எந்தன் பேரை

உன் தோட்டப் பூக்கள் சொல்லும் இல்லையா

ஒரு தென்றல் தட்டும்போதும்

கடும் புயலே முட்டும்போதும்

அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையே

உன் இதழை கேட்டால்

அது பொய்கள் சொல்லும்

உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும்

ம்… இதயத்தை கேட்க நேரமில்லை

இது வரை இதயத்தில் யாருமில்லை

சந்து கிடைத்தால் நுழைவாயா

உண்மை காதல் உண்டு

அதை உள்ளே வைத்துக்கொண்டு

ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே

மெல்லிய மழையின் துளிகள்

ஒரு மேகத்துக்குள் உண்டு

அது தானே பொழியும் பிழியப் பார்க்காதே

நீ மழை தரும் முகிலா

இல்லை இடி தரும் முகிலா

என் வேர் நனைப்பாயா இல்லை விலகிடுவாயா

ஆவணி மாதம் கழியட்டுமே

கார்த்திகை வந்தால் மழை வருமே

இன்னும் சில நாள் பொறு மனமே

உன்னாலே உனதானேன் 5

உன்னாலே உனதானேன் 7

[QUOTE="Anu Chandran, post: 109, member: 6"] மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்று ஆறுதலாகவே கண்விழித்தான் வினய்.. எப்போதும் போல் அருகில் மனைவியை தேட அப்போது தான் இரவு நடந்த சம்பவம் நியாபகம் வந்தது... கட்டிலின் மறுகோடிக்கு வந்தவன் மனைவியை பார்க்க அவள் அசந்து தூங்குவது தெரிந்தது... கையை தலைக்கு கொடுத்து கொண்டு தன் மனையாளை ரசித்துக்கொண்டிருந்தான்.... அப்போது அவனுக்கு கல்லூரி நாட்கள் நியாபகம் வந்தது... கல்லூரியின் இறுதியாண்டில் இருந்த வினய் தன் நண்பர்களுடன் அங்கிருந்த கார்டனில் கூடியிருந்தான்.... “மச்சி காலேஜ் லைப் முடியப்போகுது.... ஆனா பாரு எந்த கவலையும் இல்லாம நாம என்ன பண்ணிட்டு இருக்கோம்னு...” என்று வினயின் தோழன் தினேஷ் ஆரம்பிக்க “டேய் இதை இப்ப மட்டுமாடா பண்ணுறோம்..?? காலேஜ் வந்த காலத்திலிருந்து இதை மட்டும் தானேடா பண்ணிட்டு இருக்கோம்...” என்று அஜய்யும் வழிமொழிய “டேய் என்ன பண்ணிட்டோம்னு இப்போ நீங்க இரண்டு பேரும் கவலைபடுறீங்க??? எனக்கு தெரிந்து நாம ஒன்றுமே பண்ணலையே....” என்று வினய் புரியாமல் கேட்க “அதை தான் மச்சி நாங்களும் சொல்லுறோம்... நாம தான் ஒன்றுமே பண்ணலையே...” என்று அஜய் கூற “டேய் நீ பேசாத.... உனக்கு ஒன்றா இரண்டா நம்ம கிளாஸ் பொண்ணுங்க உன்னை சுற்றியே தான் இருப்பாங்க... இது பத்தாதுனு நம்ம ஜூனியர் பொண்ணுங்களும் அஜய் எங்கனு உன்னை தான் தேடுறாங்க.... நீ என்னடானா இப்படி சொல்லுற??” என்ற தினேஷை முறைத்தான் அஜய். “ஏன்டா காலேஜ் பஸ்ட் டே சிவனேனு லாஸ்ட் பென்சில் போய் உட்கார்ந்திருந்த என்னை டிஸ்ரிக் ரேங்கர்னு கோர்த்து விட்டதும் இல்லாமல் இப்போ வரைக்கும் பஸ்ட் பென்ச்சில் இருந்து எழும்ப முடியாமல் சதி பண்ணிட்டு கதையா சொல்லுற??? என்ன சொன்ன பொண்ணுங்க என்னை சுத்துறாங்களா?? டேய் வாய்ல நல்லா வந்திரும் பார்த்துக்கோ... அதுங்க எல்லாம் நீங்க எங்களுக்கு பிரதர் மாதிரினு சொல்லி சொல்லியே படுத்துறாளுங்க.... இது பத்தாதுனு வர்ற ஜூனியர் பொண்ணுங்களும் பிரதர்னு கூப்பிட்டே என்னை அசிங்கப்படுத்துதுங்க.. இப்படி எல்லாவற்றிலும் எனக்கு நீ சதி பண்ணிட்டு கதையா சொல்லுற??” என்று தன் கையில் இருந்த புத்தகத்தால் தினேஷை அடித்தான் அஜய்... “டேய் அஜய் அவனை விடுடா... கிளாஸ் டாப்பருக்கு கூட இப்படி ஒரு சோகம் இருக்கும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும்டா... நாங்க என்னமோ நீ பொண்ணுங்க கூட ஜகஜகா ஜிகஜிகா பண்ணிட்டு இருக்கனு நினைத்தால் நீ என்னடானா இப்படி சொல்லுற?? நாங்க இதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கலை டா..” என்ற வினயிடம் “வாடா நல்லவனே... அவனாவது காலேஜ் பஸ்டே தான் அப்படி செய்தான்... ஆனா நீ காலேஜ் பிராபஸர் அவ்வளோ பேர் கூடவும் என்னை கோர்த்துவிட்ட... லாஸ்ட் பென்சில் வந்து உட்கார்ந்த என் பெயரை ஏலம் போட்டு என்னவோ உலக மகா நல்லவன் மாதிரி அஜய் நீ கிளாஸ் டாப்பர்டா... பஸ்ட் பென்ச்சில் தான் உட்காரனும்னு அந்த பிராபசர் பழனிமுருகன் இருக்கும் போது கோர்த்துவிட்டு அந்தாளு என்னை வச்சி செய்ததை பார்த்து கைத்தட்டியவன் தானேடா நீ.... உனக்கு அவன் பரவாயில்லை டா...” என்று வினயை தன் கையிலிருந்த புத்தகத்தால் விளாசத்தொடங்கினான் அஜய். “டேய் கோபப்படாத அஜய்... நாங்க உன்னோட நல்லதுக்கு தானே அப்படி பண்ணோம்...அதுக்கு ஏன் நீ இவ்வளவு கோபப்படுற??? “ என்று தினேஷ் கேட்க “எதுடா நல்லது...?? என்னை இதுங்க கிட்ட மாட்டிவிட்டுட்டு நீங்க இரண்டு பேரும் தனியா லூட்டி அடிக்கிறதா?? செய்றது எல்லாத்தையும் செய்துட்டு இப்போ பேசுறீங்களாடா..??” “சரிசரி விடு மச்சி... இவ்வளவு நாள் செய்யாததை இப்போ செய்வோம்... நீயும் எங்க கூட வர்ற சரியா??” என்று வினய் சமாதானப்படுத்த முயல “என்ன செய்தாலும் என்னை நம்ம டிப்பார்ட்மென்டில் அவ்வளவு பேருக்கும் தெரியும்... எதுனாலும் என்னை தான் அந்த பழனியப்பன் படுத்துவான்..” என்று அஜய் நொந்து கொள்ள “டேய் நம்ம டிப்பார்ட்மென்டில் செய்தா தானே உன் பெயர் அடிபடும்... நாம வேற டிப்பார்ட்மென்டில் புகுந்து விளையாடுவோம்...” என்று தினேஷ் சொல்ல அவனை சந்தேகத்துடன் பார்த்த அஜய் “நீ எதை மீன் பண்ணுற?? எனக்கு புரியலை..” “அதானே.. உனக்கு அந்த நோட்டுல உள்ள எழுத்து மட்டும் தானே புரியும்... நாங்க சொல்வது எல்லாம் புரியாதே... உனக்கு அந்த பழனியாண்டவன் தான் சரிப்படுவான்... நீ நடையை கட்டு...” என்று தினேஷ் அஜயை விரட்ட அவனை தடுத்த வினய் “டேய் தினு அவன் தான் குழந்தைனு தெரியும்ல.... அவனுக்கு புரியிற மாதிரி சொல்லுடா...அஜய் அவன் என்ன சொல்லுறானா வேற டிப்பார்ட்மண்டில் ராகிங் பண்ணுவோம் அப்புறம் லவ் பண்ணுவோம்னு சொல்லுறான்....” என்று விளக்கினான்.. “லவ் சரிடா... ஆனா இந்த ராகிங்...காலேஜில் ராகிங் அலவ்ட் இல்லை தானே...” என்று அஜய் கேட்க அதில் கடுப்பான தினேஷ் “டேய் கவின் இவன் சரிப்பட மாட்டான்டா... வா நாம போகலாம்.. இந்த ரூல்ஸ் ராமசாமிக்கு அந்த பழனியாண்டவர் தான் சரி.. வா நாம கிளம்பலாம்..” என்று தினேஷ் எழும்ப “டேய் ஏன்டா கோவிச்சுக்கிற... நான் கேட்டது தப்பு தான்... இனிமே நான் எந்த கேள்வியும் கேட்க மாட்டேன்.. நீ என்ன சொல்லுறியோ அதையே செய்றேன்...” “டேய் தினு பய நம்ம வழிக்கு வந்துட்டான்...இனிமே தெளிந்துவிடுவான்..” என்று வினய் தினேஷை சமாதானப்படுத்த மூவரும் அங்கிருந்து சென்றனர்... ஆனால் அஜயை அங்கிருந்த அனைத்து டிப்பார்ட்மென்ட் மாணவர்களுக்கும் தெரிந்திருந்தது. அவனை கண்டதும் அனைவரும் வந்து அவனுடன் வந்து பேச அவனுக்கு முழி பிதுங்கியது... அவனது பாவனையை பார்த்த வினயிற்கும் தினேஷிற்கும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை... ஆனால் பாவம் அஜயோ அங்கு வந்து அவனிடம் கேள்வி அனைவருக்கும் பதில் சொல்லியே மாய்ந்து போனான்... அஜயை இப்போதைக்கு விட மாட்டார்கள் என்றுணர்ந்த வினயும் தினேஷும் அங்கிருந்து என்ரன்சிற்கு வந்து வருவோர் போவோரை வேடிக்கை பார்த்தபடி உரையாடிக்கொண்டிருந்தனர்... அப்போது அவர்களது உரையாடலை கலைத்தது ஒரு பெண்குரல்.. “எக்ஸ்கியூஸ் மீ... இங்கே அட்மின் ஆபிஸ் எங்க இருக்கு??” என்ற குரலில் திரும்பினர் வினயும் தினேஷும்.. அங்கு அவன் முன் நின்றிருந்தாள் ரேஷ்மி.. இளஞ்சிவப்பு நிற சல்வாரில் தேவதையாய் நின்றிருந்தவளை கண்ணிமைக்க மறந்து பார்த்து நின்றிருந்தான் வினய்... இளஞ்சிவப்பு நிற ஷல்வார் டாப்பும் அதற்கேற்றாற் போல் பட்டர்ப்ளை பேண்டும் அணிந்திருந்தவள் மறவாது மார்பை மறைத்து துப்பட்டா அணிந்திருந்தாள்... திரண்ட வெண்ணெயின் நிறத்தில் ஜொலித்த அவளது வதனத்தை பிறர் கவனம் ஈர்க்கா வண்ணம் தடை செய்யும் முகமாக அவளது நெற்றியில் வீற்றிருந்தது வெண்ணிற பொட்டு... அந்த கூரான நாசியில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த அந்த சிறிய வெள்ளைக்கல் பொருத்திய மூக்குத்தி அவளது தேஜஸை இன்னும் அதிகப்படுத்தியது... அவள் பேசும் போது தாளத்திற்கேற்ப நடனம் ஆடுவது போல் அவளது சீராக்கப்பட்டிருந்து புருவம் இரண்டும் கதை பேசியது.... கதைபேசும் பொறுப்பை புருவத்திடம் ஒப்படைத்திருந்ததால் கண்டறியும் பொறுப்பை அந்த மையிட்ட விழிகள் பொறுப்பெடுத்திருந்தது.. எதிரே நிற்பவரை ஸ்கேனிங் இயந்திரத்தை போல் ஆராய்ந்தது... அந்த இருவிழிகளும் எதிரே இருப்பவரை எச்சரிக்கும் பாவனையுடனே இருந்தது... ஆனால் வினயிற்கோ அது தன்னை வசமிழக்கச்செய்யும் பார்வையாய் தெரிந்தது.. அடிக்கடி ஒட்டி பிரியும் அந்த செவ்விதழ்கள் வார்த்தைகளை மிக நிதானமாக உரைக்க அதில் ஒரு அழுத்தம் தொக்கி நின்றது... இவ்வாறு அவனது பார்வை ஆராய்ச்சி தொடர ரேஷ்மியோ அங்கிருந்து சென்றுவிட்டாள்.. திடீரென்று அவள் செல்லவும் கலைந்த கனவை நிஜத்தில் தொடர்பவன் போல் அவள் பின் செல்ல முயன்றவனை தடுத்தான் அஜய்.. “டேய் எங்கடா போற??” என்று கேட்க “டேய் இப்போ ஒரு பொண்ணு போனாளே அவ எங்க போறா??” “அவ எங்க போனா உனக்கு என்ன?? அதை எதுக்கு நீ கேட்குற??” “டேய் அலட்டாம கேட்டதுக்கு பதில் சொல்லு” “அவ அட்மின் ஆபிஸ் எங்க இருக்குனு கேட்டா... நீ என்னமோ பேய்படம் பார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷன் குடுத்துட்டு நின்னுட்டு இருந்த...அதான் நானே வழி சொல்லி அனுப்பிட்டேன்...” என்று அஜய் பதிலளித்த அடுத்த நொடி வினய் அங்கு இல்லை... ரேஷ்மியை தொடர்ந்து சென்றவன் அவளுடன் அட்மின் ஆபிசினுள் நுழைந்து அவள் யார் என்ற விபரத்தை அறிந்து கொண்டான்.. ரேஷ்மி இன்டர் காலேஜ் கல்ச்சரல்ஸ் தொடர்பாக கல்லூரி அதிபரை பார்க்க வந்திருப்பதை தெரிந்து கொண்டவன் அவளது பெயரையும் காலேஜ் பெயரையும் தெரிந்து கொண்டான்... அதற்கு மேல் அங்கு நின்றால் தன் மேல் சந்தேகம் வரும் என்று உணர்ந்தவன் அங்கிருந்து வந்துவிட்டான்..... வந்தவனை பிடித்து கொண்டான் தினேஷ்.. “என்னடா நடக்குது...” என்று கேட்க “மச்சி... நீ இன்டர் காலேஜ் கல்ச்சர்ஸ்ஸில் டான்ஸ் ஆடப்போறியாமே...” என்று வினய் சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வியை கேட்க “டேய் லூசாடா நீ... நான் என்ன கேட்டேன்.. நீ என்ன சொல்லுற??” “அட ஆமா மச்சி... நீ ஆடுற...அதை பார்க்க நான் இன்டர் காலேஜ் பங்ஷனுக்கு வர்றேன்...” என்று சம்பந்தம் இல்லாமல் பேசி தினேஷை குழப்பிவிட்டு சென்றுவிட்டான் வினய்.. “இப்போ நான் என்ன கேட்டேன்... இவன் என்ன சொல்லிட்டு போறான்..... இதில் இந்த இன்டர் காலேஜ் கல்ச்சரல்ஸ் எங்கிருந்து வந்தது... இவன் எதுக்கு ஏதோ மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி போறான்.... ஒன்னுமே புரிய மாட்டேன்குது... இவன் என்னை கஜினி சூர்யா மாதிரி ஆக்காம விடமாட்டான் போல இருக்கு..” என்று தன்னுள் புலம்பியவாறு வினயை தேடிச்சென்றான் தினேஷ்.. ============================================================== இன்டர் காலேஜ் கல்ச்சரல்ஸ்ஸிற்காக தயாராகிக்கொண்டிருந்தது அந்த ஆடிட்டோரியம்... ஆடிட்டோரியத்திற்கு பின்புறமாக இருந்த அறைகளில் தயாராகிக்கொண்டிருந்தனர் அன்றைய போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள். அங்கு தன் நண்பனுடன் அரட்டை அடுத்துக்கொண்டிருந்தான் வினய்... “மச்சி கல்ச்சரல்ஸிற்கு எல்லா காலேஜ் பொண்ணுங்களும் வந்திருப்பாங்களா???” என்று வினய் கேட்க “அவங்களை சைட் அடிக்க தானே என்னை இதுல கோர்த்துவிட்டுட்டு நீ குளிர் காயிற..?? என்று தினேஷ் பதிலளிக்க “என்ன தினு இப்படி சொல்லுற?? உன் டேலன்டை சரியான இடத்திற்கு தெரியப்படுத்தனும் அப்படீங்கிற நல்ல எண்ணத்தில் நம்ம அஜயை வைத்து நீ இதில் பார்ட்டிசீபேட் பண்ண சான்ஸ் வாங்கிகொடுத்தா நீ இப்படி சொல்லுற??” என்று வினய் போலியாக வருந்த “என்னமோ படத்தில் ஹூரோவா நடிக்க சான்ஸ் வாங்கிக்கொடுத்த மாதிரி சீனைப் போடுற??? இந்த அக்கறை போன வருஷம் எங்க போனதாம்???போன வருஷம் காம்படீஷனில் கலந்துக்கிறேன் என்று உன் காலைப்பிடித்து கெஞ்சாத குறையாக நான் கெஞ்சினப்போ நீ என்ன சொன்ன.... கொஞ்சம் யோசிச்சிப்பாரு...” என்று தினேஷ் எதிர்கேள்வி கேட்க வினயோ “மச்சி அது போன வருஷம்... இது இந்த வருஷம்..” என்று அசால்ட்டாக பதிலளித்தவனை பார்த்து தன்னால் முடிந்தமட்டும் முறைத்தான் தினேஷ்.. “டேய் இதெல்லாம் உலக மகா அக்கிரமம் டா.. உனக்கு வந்த இரத்தம்.. அதே எனக்கு வந்தா தக்காளி சட்னியா??” “இல்லை மச்சி.. உனக்கு வந்தாலும் இரத்தம் தான்டா...” “நல்லா பேச கத்துக்கிட்ட டா...” “உன்னோட இருந்து இதுகூட இல்லைனா எப்படி மச்சி...??” “சிறப்பு... சரி நீ எதுக்கு எந்த காம்படீஷனிலும் கலந்துக்கவில்லை.. உனக்கு தான் டான்ஸ், பாட்டு, டிராமானு எல்லாமே வருமே... எதுக்கு தனியா என்னை இதுல கோர்த்துவிட்ட..???" என்ற தினேஷின் கேள்விக்கு “அதுக்கு போன அப்புறம் நான் வந்த வேலையை யாரு பார்ப்பா??” என்று மைண்ட் வாயிசில் பதிலளித்தான் வினய். “என்னடா என்ன ரீல் சுத்தலாம்னு யோசிக்கிறியா???” என்ற தினேஷ் கேட்க “நான் ஏன்டா பொய் சொல்ல போறேன்...” “டேய் நடிக்காதடா டேய்... உன் ஸ்டரி, ஜாக்கிரபி, பயோலஜி எல்லாம் எனக்கு தெரியும்.. சொல்லு அந்த பொண்ணை பார்க்க தானே இப்படி ஒரு பிளானை போட்ட..... நீ லவ் பண்ண என்னை இதுல காயவிடுறல???” “டேய் தினு அதெல்லாம் ஒன்றும் இல்லைடா...” என்று மறுத்த வினயை “நடிக்காதடா டேய்.... நான் கூட பரவாயில்லை...அந்த பச்ச மண்ணு... அந்த புள்ளை பூச்சு அஜயை என்ன பாடு படுத்துன?? நீ அடிச்ச கூத்துல பயபுள்ள திட்டு வாங்காத ஆளில்லை... போறவார பயலுங்க எல்லாரும் அவனை கலாய்ச்சி அசிங்கப்படுத்திட்டாய்ங்க... அவன் ஏதோ நம்ம பிரண்டுக்காகனு கஷ்டப்பட்டு எல்லாம் ரெடி பண்ணா.. சார் உங்க லவ்சை டிவலப் பண்ண தான் இத்தனை அட்டகாசம்னு எனக்கு அப்போ புரியாம போயிருச்சி...” “இல்லை மச்சி.... உனக்காக தான் நான் இதெல்லாம் செய்தேன்....” என்று கற்பூரம் ஏந்தி சத்தியம் பண்ணாத குறையாக வினய் சொல்ல “அப்படியா மச்சி..?? அப்போ எதுக்கு அந்த பொண்ணு இங்க வந்தப்போ வைத்த கண்ணு வாங்காமா ஏதோ யூடூப்பில போற அட்வடீஸ்மண்ட் முடியவரைக்கும் பார்க்குற மாதிரி பார்த்துட்டு இருந்த...” “டேய் யூ டூப்பில் போற அட்வடீஸ்மண்டை அவாய்ட் பண்ண முடியாம பார்க்குறோம். இதுவும் அதுவும் எப்படிடா ஒன்றாகும்..” “அப்போ அந்த பொண்ணை நீ ஆசைப்பட்டு தான் பார்க்கிறாய் என்பதை ஒத்துக்கொள்கின்றாய்...??” “டேய் தினு நான் எப்படா அப்படி சொன்னேன்..??” “அப்போ நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்..??” “அது வந்து... அது...” என்று தடுமாறிய வினயை பார்த்து சிரித்தான் தினேஷ்.. “அதான் வரலையில்ல.. விட்டுரு... இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..” என்ற தினேஷின் கேள்விக்கு சற்று வெட்கத்துடன் ஆம் என்று பதில் சொன்னான் வினய்.. பெண்ணின் வெட்கம் அவளது பெண்மையை வெளிச்சப்படுத்தும்... அதே ஆணின் வெட்கம் ஆண்மை எனும் போர்வைக்குள் பதுங்கியிருக்கும் அந்த குழந்தை மனதை பிரதிபலிக்கும்.... கடுமையே பிறவிக்குணமென்ற ஆண்கூட வெட்கப்படுகையில் குழந்தையாய் மாறிவிடுவான்... எப்போதும் வம்படித்துக்கொண்டு தான் இருக்கும் இடத்தை கலகலப்பாய் மாற்றும் வினயின் வெட்கத்தின் வனப்பை வார்த்தைகளால் கூறவும் வேண்டுமா..?? தன் நண்பனின் வெட்கத்தை மனதினுள் ரசித்து சிரித்துக்கொண்ட தினேஷ் வெளியே “டேய் என்ன ரியாக்ஷன் டா இது... இப்படி வேறு யார் முன்னுக்கும் செய்திடாத டா.. அப்புறம் அவங்களுக்கு வேப்பிலை தான் அடிக்கனும்... யப்பா சாமி ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திரிச்சி...” என்று கிண்டல் செய்த தினேஷை முறைத்தான் வினய்.... இவ்வாறு நண்பர்கள் இருவரும் அரட்டை அடித்துகொண்டிருந்தனர்.. போட்டிகள் ஆரம்பிக்கப்போவதாக வந்த அறிவுறுத்தலையொட்டி வினய் அரங்கத்திற்கு வந்து அவனது பிற கல்லூரி தோழர்களுடன் இணைந்து கொண்டான். அந்த இடைவெளியில் ரேஷ்மியை தன் கண்களால் தேடவும் தவறவில்லை... ஆனால் அவனது தேடுதலுக்கு விடையானவளோ மேடையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தயாராகிக்கொண்டிருந்தாள்.. நிகழ்ச்சி ஆரம்பமாக அரங்கமே களைகட்டியது... குறிப்பாக வினயிற்கோ தேன் குடிக்க வந்து அமிர்தமே கிடைத்த நிலை... அவளை ஒருமுறையேனும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கியிருந்தவனுக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் அட்டன்டன்ஸ் கொடுத்து அவனை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்திருந்தாள் ரேஷ்மி... ஒவ்வொரு நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் ஆரவாரமாக தன் சக தொகுப்பாளருடன் ஆரம்பிக்கும் அவளது சிறு உரையாடலுக்கு எழும் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது... அதிலும் அவள் இடையிடையே அவையினரை பார்த்து புன்னகைப்பது தன்னை பார்த்து புன்னகைப்பதாக வினய் எண்ணிக்கொண்டான்... அவனது மூளையோ “டேய் கிறுக்கா.... அவ உன்னை மட்டும் பார்த்து சிரிக்கலைடா.. இந்த ஆடிட்டோரியத்தில் உள்ள எல்லோரையும் பார்த்து தான் சிரிச்சா... அவ உன்னை மட்டும் பார்த்து சிரிக்க நீ என்ன அவ புருஷனா???” என்று காய்ச்சியெடுக்க அவனது மனமோ “இப்போ புருஷன் இல்லை... அவ தான் எனக்கு பொண்டாட்டி... அவ என்னை பார்த்து தான் சிரிச்சா....அதுவும் என் கண்ணை பார்த்து அவ சிரிச்சா பாரு... சான்சே இல்லை.... என்னா பொண்ணுடா... அப்படியே அள்ளிக்கலாம் போல இருக்கு..... அவ கண்ணு கூட்டத்துல இருக்க என்னை தேடி கண்டுபிடிச்சி சிரிக்கும் போது.... பா... சொல்ல வார்த்தையே இல்லை.. இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது...” என்று அவன் மனமோ கண்டபடி உளற அதில் கடுப்பான மூளையோ எக்கேடோ கெட்டுப்போ என்று விட்டுவிட்டது..... இவ்வாறு இறுதிவரை அவளை சைட் அடிப்பதையே வேலையாக செய்தவன் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் அவளைத் தேடி சென்றான்... அவள் மேடையில் இருந்து இறங்கி வாஷ்ரூம் செல்லும் வழியில் அவளை வழிமறித்தான் வினய்... திடீரென்று தெரியாத ஆடவன் ஒருவன் வழிமறிக்க முதலில் பதறியவள் பின் சுதாகரித்துக்கொண்டு அவனை என்னவென்ற ரீதியில் பார்த்து நின்றாள்.. அவளது கூர் பார்வையில் முதலில் பதறியவன் பின் அதில் தலைகுப்புற விழுந்து சரணடைந்தான்... அவனது மனமோ “இவளை பெத்தாங்களா செய்தாங்களா?? அணுவனுவா ஆளை கொல்லுறாடா... ஏன்டி இப்படி பார்த்து பார்த்தே ஆளை இம்சை பண்ணுற???ஐயோ இவ கிட்ட இருந்து யாராவது என்னை காப்பாத்துங்களே...” என்று உளறிக்கொண்டிருக்க அவனை கலைத்தது ரேஷ்மியின் குரல்.. “எக்ஸ்கியூஸ்மி...” அவளது குரலில் தன்னிலை கலைந்தவன் “சாரி.... உங்களை இன்டரப்ட் பண்ணதுக்கு.... உங்களை விஷ் பண்ண தான் வந்தேன்... சூப்பரா பிரோகிராமை ஹாஸ்ட் பண்ணீங்க மிஸ் ரேஷ்மிகா... கன்கிராஜ்...” என்று வினய் வாழ்த்துசொல்ல அதனை ஏற்றுக்கொண்டாள் ரேஷ்மி... அவள் அங்கிருந்து செல்ல அவளை தடுக்க முயன்றவனை தடுத்தது தினேஷின் குரல்.. “டேய் கவின் இங்க என்னடா பண்ணிட்டு இருக்க?? ஜென்ஸ் டாய்லெட் அந்த பக்கம் இருக்குடா...” என்ற தினேஷின் கூற்றில் ரேஷ்மியின் பார்வைக்கான அர்த்தம் விளங்கியது.. தன் தலையில் அடித்துக்கொண்டவன் அவளிடம் மன்னிப்பு கோரிவிட்டு அங்கிருந்து விரைந்து நண்பன் இருந்த இடம் நோக்கி வந்தான்... அவனது நினைவுகளை கலைத்தது ரேஷ்மியின் குரல்.... “என்ன வினய் தூக்கத்தில் விட்ட கனவை கண்முழித்த பிறகு தொடருகின்றீர்களா...??” என்ற அவளது கேள்வியில் சிரித்தவன் “இது தூக்கத்தில் மட்டும் வரும் கனவில்லை ஷிமி... நினைவிலும் என்னுடன் உறவாடும் கனவு.. அதாவது என்னுடைய வாழ்நாள் முழுதும் தொடரும் கனவு... இவ்வளவு நேரம் அந்த கனவு என்னை ஆட்டிப்படைத்த மெமரீசை ரீகெய்ன் பண்ணிட்டு இருந்தேன்... ஆனா இப்போ அந்த கனவே என் கண் முன்னால் காபி கப்போடு நின்றுக்கொண்டு என் கண்களோடு உறவாடுவிட்டு இருக்கு...” என்றவனின் பேச்சில் மயங்கி நின்றாள் ரேஷ்மி... அவளை ஆக்கிரமித்திருந்த வெட்கத்தால் முகம் சிவக்க தலை குனிந்தவளின் அழகில் மதி மயங்கி நின்றான் வினய்... அவளை மேலும் சிவக்க வைத்து ரசிக்க எண்ணியவன் அந்த பாடலை பாடினான்.. கனவே கலையாதே – காதல் கனவே கலையாதே கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் மரகத வார்த்தை சொல்வாயா மௌனத்தினாலே கொல்வாயா சின்ன திருவாய் மலர்வாயா கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் நீ மௌனம் காக்கும்போதும் உன் சார்பில் எந்தன் பேரை உன் தோட்டப் பூக்கள் சொல்லும் இல்லையா ஒரு தென்றல் தட்டும்போதும் கடும் புயலே முட்டும்போதும் அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையே உன் இதழை கேட்டால் அது பொய்கள் சொல்லும் உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும் ம்… இதயத்தை கேட்க நேரமில்லை இது வரை இதயத்தில் யாருமில்லை சந்து கிடைத்தால் நுழைவாயா உண்மை காதல் உண்டு அதை உள்ளே வைத்துக்கொண்டு ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே மெல்லிய மழையின் துளிகள் ஒரு மேகத்துக்குள் உண்டு அது தானே பொழியும் பிழியப் பார்க்காதே நீ மழை தரும் முகிலா இல்லை இடி தரும் முகிலா என் வேர் நனைப்பாயா இல்லை விலகிடுவாயா ஆவணி மாதம் கழியட்டுமே கார்த்திகை வந்தால் மழை வருமே இன்னும் சில நாள் பொறு மனமே [URL='https://nigarilaavanavil.com/forum/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-5.73/']உன்னாலே உனதானேன் 5[/URL] [URL='https://nigarilaavanavil.com/forum/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-7.75/']உன்னாலே உனதானேன் 7[/URL] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
உன்னாலே உனதானேன்
உன்னாலே உனதானேன் 6
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN