Epi 23
மாலைபொழுது அழகாய் துவங்க அதன் அறிகுறியாய் மெல்ல இருள் சூழ்ந்தபடி ஒரு மோனநிலையில் வானம் இருக்க பைக்கை வீட்டிற்கு முன் வந்து நிறுத்தினான் சித்தார்த்
அழகிய இரண்டு அடுக்கு மாடிவீடு. கொஞ்சம் கேரளா டைப் வாசம் வீசும். முன்புறம் போர்டிகோ அதன் பக்கத்திலேயே அழகிய தோட்டம் எல்லாவிதமான மலர்களும் மலர்ந்து அழகை நிறைத்திருந்தது. வசதி படைத்தவரான நவநீதன் நடுத்தர வகுப்பை சேர்ந்த ராதாவை
காதல் திருமணம் முடித்து வந்த புதிதில் வாடகை வீட்டில் குடிவைக்க மனதில் கஷ்டம் இருந்தாலும் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை தன் வசதியை படிப்படியாக பெறுக்கி கொண்டவர் அதன் பிறகு சொந்த ஊரில் குடிபெயர போகிறோம் என்றதும் அவருக்காக பார்த்து பார்த்து காட்டியது தான் இந்த ராதா பவனம்.
நவனீதன் தான் மகன் வந்ததை மனைவியிடம் தெரிவிக்க அவன் உள்ளே வந்து அமரும் முன்னரே கையில் காபியோடு வந்து நின்றார் ராதா சிறு புன்னகையுடனே காபியை வாங்கியவன் 'நானே போட்டுக்க போறேன் நீ ஏன்மா செய்ற" என்று கேட்க
"நீ என்னதான் பெரியசெஃப்பா இருந்தாலும் வீட்டுல என் புள்ளதானேடா... நான் செய்யனும் இல்ல உனக்கு பொண்டாட்டின்னு வந்தா அவ செய்யனும்" என்றார். தாயின் பதிலில் ஏதோ செய்தி தனக்காய் மறைந்து இருப்பதை புரிந்து கொண்டவன் காபியை ஒரு மிடறு விழுங்கி தாயும் தந்தையும் பார்க்க கையில் ஒரு கவரை வைத்தபடி கணவரிடம் சைகையில் நீங்க சொல்லுங்க என்று சமிக்ஞை காட்ட
'உன் பிரச்சனைக்கு நான் வரல நீயே அவன் கிட்ட பேசு' என்றபடி கையேடுத்து கும்பிட்டு டிவியில் ஆழ்ந்து விடுவது போல இருந்தார் நவநீதன்.
இதை தெரிந்தும் தெரியாமலும் பார்த்து கொண்டு இருந்தவன் "ஏதாவது என் கிட்ட பேசனுமாமா" என்றான் சித்தார்த்.
ராதா இதுதான் சந்தர்ப்பம் என்று வாகாய் சேரில் அமர்ந்தவர் கவரை அவனிடம் திணித்து "இதுல 4 பொண்ணுங்க போட்டோ இருக்கு. எல்லாம் உன் ஜாதகத்தோட பொருந்தி போகுது உனக்கு எந்த பொண்ணு பிடிக்குதோ சொல்லு அதையே பேசி முடிச்சிடலாம்". என்று மூச்சி விடாமல் கூறி முடிக்க.
இப்போது திகைப்பது அவன் முறையானது. "என்னம்மா பொண்ணு பாக்க போறேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல... அதுவும் கால்யாணம் பண்ணிக்கிரியா வேண்டாமன்னு ஒரு வார்த்தைக்கு கூட கேக்கல... திடீர்ன்னு வந்து பொண்ணு புடிச்சி இருக்கான்னு கேக்கரிங்க... என்னமா இது எல்லாம்." என்றான் அதிர்ச்சியை குரலில் வெளிகாட்டியபடி.
"உனக்கு கல்யாண வயசுதானேடா இது எல்லாம் கேட்டா பண்ணுவாங்களா!!! அது அது அப்பப்போ நடக்க வேண்டியது டா" என்று மகனின் தலையை கோதி சிரித்தவர். "முதல்ல பொண்ணு பாருடா அழகு அந்தஸ்து எல்லாம் உனக்கு ஏத்தமாதிரி இருக்கு. எனக்கும் பிடிச்சி இருக்கு. காலம் கடத்தத டா" என்றவர் "இந்தா இதுல இருந்து நீயே செலக்ட் பண்ணு இது புடிக்கலனாலும் பரவாயில்லை வேற இடம் பாக்க சொல்லலாம்..." என்றவர் ஆனா பாக்கமா புடிக்கலன்னு சொல்ல கூடாது என்று அழுத்தமாக" கூறியவர் கணவரை கண்களால் அழைக்க அவரும் ராதாவுடன் சென்றுவிட்டார்.
கையில் கவருடன் அறைக்கு வந்தவன் அதை திறக்கலாமா வேண்டமா என்ற யோசனையுடன் கண்ணடியில் தெரிந்த அவன் பிம்பத்தை பார்க்க தியா அன்று கூறிய பொண்ணை பார்த்த கண்ணை நோண்டிடுவேன் என்று வார்த்தைகள் தேவையில்லாமல் நியாபகத்துக்கு வந்து போனது.
கையில் இருந்த கவரை தன்னிச்சையாய் கீழே போட்டவன் அவள் எதிரே நிற்பது போல தோன்றியது
அடிங்க என்ன கூட ஆள் இல்லன்ன உடனே வேற பொண்ணை பார்க்க கிளம்பிட்டியா..... நீ மட்டும் பொண்ண போய் பாரு மாமா... அப்புறம் உனக்கு ஆகுற சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்ல மாமா... பாத்து புருஞ்சி பதிவிசா நடந்துக்க நான் சொன்னதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன் என்று மிரட்ட
ஒரு நிமிடம் அரண்டு போய் பார்த்தவன் "என்னடா பாத்தியா??" என்று ராதா வர திருதிரு என்று விழித்தபடி இருக்க என்னடா "பொண்ணு போட்டோவா பாத்தியான்னு கேட்ட பேய பாத்தமாதிரி முழிக்கிற என்னடா ஆச்சி உனக்கு" என்று கேட்க
"ம்மா... ம்கீம்.. என்று கனைத்தவன் மா இப்போ கல்யாணம் வேண்டாம் மா... கொஞ்ச நாள் போகட்டும் நானே சொல்றேன் பீளிஸ் மா கொஞ்சம் மூட் ஆப்ல இருக்கேன் பீசினஸ் கொஞ்சம் டெவலப் பண்ணலாம்ன்ற ஐடியா வேற இருக்கு நானே சொல்றேன் அப்போ பாரு" என்று தாயை தாஜா செய்ய
மகன் கல்யாணத்தை மறுக்கவில்லையே இப்போது தள்ளிதானே போடுகிறான் என்ற எண்ணத்தில் "சரி சித்து இன்னும் 6 மாசம் பொறுத்து பாக்காலாம் இந்த டைம் உனக்கு ஓகேவா உன் வேலை எல்லாம் அப்போ முடியுமா?" என்று கேட்க
கொஞ்சம் யோசித்தவன் "இன்னும் ஒரு வருஷத்துக்கு என்கிட்ட கல்யாண பேச்சை கொண்டு வராதிங்க நானே சொல்றேன் மா" என்றிட
அவன் பேச்சில் சந்தேகமாக "சித்து.... ல்வ கிவ்ன்னு ஏதாவது" என்றிட
"ம் அது ஒன்னும் தான் குறைச்சல் நீங்க பண்ணிதானே நாமா எல்லார் இருந்தும் யாருமே இல்லாத இருக்கோம்... இன்னும் அதை நான் வேற பண்ணுவேன்னு நினைக்கிறிங்களா" என்றான் நக்கலாக
"என்னடா இப்படி சொல்லிட்ட காதலிக்கறது தப்பான விஷயம் இல்லடா... உங்க அப்பா இதுவரையும் என்னை எதுக்கும் கலங்க வைச்சது இல்ல உனக்கு அது எல்லாம் தெரியாது போட" என்றவர் கோபித்து கொள்ள
"அம்மா..... அம்மா.... நான் உங்கள குறை சொல்லால மா... நாம் எல்லாரும் இருந்தும் யாருமே இல்லாமா தனி தீவில இருக்கா மாதிரி இருக்கோம். இதே ஊர்ல தான் உங்க சொந்தமும் இருக்கு அப்பா சொந்தமும் இருக்கு... ஆனா பாருங்க நாம்மள நாள் கிழமைன்னு யாராவது கூப்பிட்டு இருப்பாங்களா... சரி அதை விடுங்க ஒரு விசேஷன்னு கூப்பிட்டு இருப்பாங்களா!!! அதுதாம்மா கொஞ்சம் வருத்தம்" என்றதும்
தானாய் ராதாவின் கண்கள் கலங்கியது அவன் அம்மா கலங்குவதை பார்த்தவன் "சாரிமா கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்... என்னால இதை ஏத்துக்கவே முடியலம்மா அதான்" என்றவன் அம்மா "நீ எந்த பொண்ணு கழுத்துல தாலியை கட்டசொல்றியோ கண்ணமூடி அவ கழுத்துல கட்டுவேன் புரியுதா இப்போ இந்த கல்யாண பேச்சு வேண்டாம்" என்று அதற்கு முற்று புள்ளி வைத்தான்.
அங்கே தியாவோ படுக்கை நொந்ததடி பாலும் கசந்ததடி என்றெல்லாம் இருக்கவில்லை எப்போதும் போல் ஆட்டம் பாட்டம் கொண்டமாக வேத்தான் இருந்தாள் இன்னும் சொல்லபோனால் அவளுக்கு முன்னம் இருந்ததை விட ஒரு படி மேலே தான் எல்லாம் இருந்தது.
சித்தார்த் எவ்வளவு முறை எடுத்து கூறியும் சற்றும் மனதில் ஒரு சின்ன கடுகளவு கூட அவன் மேல் உள்ள காதலை இழக்காமல் அதனை அதிகபடுத்திக்கொண்டாள் அவனை நம்பவில்லை அவளுடைய காதலை நம்பினாள். இதுவரையும் நம்பிகொண்டிருக்கிறாள் அவன் ஊருக்கு செல்லும் முதல் நாள் அவனுடம் மொட்டை மாடியில் கூட அப்படிதான் பேசினாள்
அன்று
'ரொம்ப டேங்க்ஸ் மாமா" என்றாள் அவன் முகம் பார்த்து
ஏன் என்று புரியாமல் அவளை பார்த்தான்.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவள் போல் "உங்கள பாக்கனும் சொன்னவுடனே எங்க வரமாட்டிங்களோன்னு நினைச்சேன் வந்ததுக்குதான் டேங்க்ஸ் சொன்னேன்" என்று விளக்க
அங்கே ஒரு கனத்த அமைதி சொல்ல வந்ததை சொல்லிட்டு போ என்பது போல் எதுவும் பேசவில்லை அமைதியாய் நிலவை பார்த்திருந்தான்.
"மாமா" என்றாள் அவன் உடல் விறைத்து கொண்டது கைபிடி சுவற்றை இருக்கபற்றி கொண்டான் இதுவே அவனின் கோபத்தை உறைக்க
மௌனமனாள் "நான் கூப்பிடறது உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன். ஆனா என் மனசுல உங்கள அப்படிதான் கூப்பிடுறேன் அதை நீங்க மறுக்க முடியாது இல்ல..." என்று கூறிவிட்டு ஒரு அலட்சிய மென்னகையை தவழவிட்டாள் அவளின் உதட்டில். அதுவே சொல்லமால் சொல்லியது அவளின் வலியை
இன்னும் அவள் புறம் திரும்பவில்லை "நீங்க என்னை பாதிச்ச அளவு கூட நான் உங்களை பாதிக்கலன்னு நினைக்கும் போதே நான் எங்கயோ தப்பு பண்ணி இருக்கேன்னு தெரியுது..." என்றாள் உதடு கடித்து வரவிருக்கும் அழுகைய உள் இழுத்து அடக்கியபடி சற்று மௌனமானாள் அவளாள் பேசமுடியும் என்று தோன்றியவுடன் மீண்டும் மேச ஆரம்பித்தாள்.
"இனி நான் உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன மாமா நீங்க மனநிறைவா இங்க இருந்து கிளம்பலாம்... நான் உங்களை நம்பல" என்றதும் அவன் சட்டென்று திரும்பி அவளை பார்த்தான்...
"என்ன பாக்குறிங்க மாமா..." உதடுகடித்து கண்ணீரை மறைத்தவள் "சாரி சாரி சித்தார்த். நிஜமா நான் உங்கள நம்பல என் காதலை நம்புறேன்... அதுக்கு சக்தி இருக்கு அதை உண்மையா நான் நம்புறேன்... உங்களை நிச்சயம் மாத்தும். நம்ம கல்யாணம் நடக்கும். அதுவரையும் உங்களை எந்த விதத்துலையும் நான் அனுகவே மாட்டேன்... நீங்களாவே என்னை தேடி வருவீங்க... இதுவனையும் என் உளரலை கேட்டு இருந்ததுக்கு ரொம்ப நன்றி" என்றவள் "கடைசிய" என்று அருகில் வந்து அவன் என்ன என்று யூகிப்பதற்க்குள் அவன் கன்னத்தில் அவள் இதழை ஒற்றி எடுத்தவள் "இதுக்கும் சேர்த்து சாரி மாமா சாரி" என்று அழுதபடி அவள் படிகளில் இறங்கி ஓடிவிட்டாள்.
______________________________________
காலையில் எழுந்தது முதலே ஒருவகையான பதட்டத்துடனே சுற்றிக்கொண்டு இருந்தாள் பார்கவி. என்னதான் தன் வேலையில் கவனமாய் இருந்தாலும் அவளின் ஒவ்வொரு சின்ன அவைசைவும் அவன் கருத்தை விட்டு அகலாது. எது எப்படியோ அவள் என் மனைவி என்ற
எண்ணமே அவன் மனதை ஆக்கிரமித்து இருந்தது.
யோசனையுடனே அவளின் செய்கைகளை கவனிந்து இருந்தவன் எதுவாயினும் அவள் வாயலையே வரட்டும் என்று அமைதியாகவே அவன் அலுவலக பேகை ஆராய்ந்து கொண்டு இருக்க
தயங்கியபடியே வந்தவள் அவளின் இருப்பை உணர்த்த தொண்டையை செறுமியபடி அருகில் நின்றாள்.
அவளின் அண்மையை உணர்ந்தவன் தலை உயரத்தி அவளை பார்க்க முதுகு முழுவதும் மறைத்தபடி அழகாய் விரித்து விட்டபட்ட அவள் கூந்தலில் இருபக்க காது ஒரத்தில் இருந்து முடியை எடுத்து சென்டர் கிளிப் இட்டு அடக்கி இருக்க அது அவளின் கழுத்தையும் தாண்டி முன்பக்க தோள்வலைவில் வழிந்து நின்றது. அதிக ஒப்பனை இல்லாத முகம் அதிகம் என்பதை விட ஒப்பனை இல்லாத முகம் என்றே கூற வேண்டும் சிறிய கல் பொட்டு புருவத்தின் மத்தியில் அதுதான் அவள் அதிகம் செய்த ஒப்பனை என்று கூட கூறலாம் வசீகரிக்கும் அழகு அவளுக்கு. இளநீல நிறத்தில் டப்பும் கருநீல நீறத்தில் ஜீன்சும் அணிந்திருந்தாள். கழுத்தில் புதியாய் கட்டிய மஞ்சள் கயிறு தான் புதிதாய் திருமணம் ஆனவள் என்று சொல்லாமல் சொல்லியது அதனை ஒட்டி எப்போதும் அணியும் சிறிய சங்ககலி. அவள் வீட்டில் இருந்தவரை திருமணத்திறக்கும் அதற்கு அடுத்த நாள் அணிந்தது புடைவைதான் அதன் பிறகு சுடிதாரிலேயே இருந்தவள் இன்றுதான் இதுபோல டாப்பும் ஜீன்சும் அணிகின்றாள். அவன் பார்வை அவளை பலமுறை தொட்டு மீண்டது. மறுமுறை பார்க்க தூண்டியது (குறிப்பாக சொல்லனுமுன்னா நல்லா சைட் அடிச்சிட்டு இருந்தான்) அவளை அளப்பது போல் பார்வையை ஓட்டினான் அவளறியாமல்.
அவள் அப்படியே தன்னையே பார்த்து நின்று கொண்டிருப்பது விளங்க என்ன என்பது போல் அவளை பார்த்தான்.
"இன்னைக்கு காலேஜ் போகனும்". என்றாள்
"ம்.. தெரியும் அம்மா சொன்னாங்க.." என்றவன் நீ கூறவில்லை என்பதையும் அவளுக்கு உணர்த்திவிட்டு "எப்படி போக போற" என்றான் அடுத்த கேள்வியாய்.
'அதை சொல்லதானே நேத்து வந்தேன் காபி கொட்டுச்சின்னு என்னை ஏதேதோ சொல்லி மறக்க வைச்சிட்டு சொல்லலன்னு இப்போ குத்தி வேற காட்டுறியா' என்று அவளுள் குமுறியவள் "அது... அது... நீங்க" என்றதும்
"எது நான் என்ன" என்று திருப்பியதும் மறுமுறையும் அவள் குளற என்ன என்பது போல் புருவம் உயர்த்தி கேட்டான்.
தயங்கி தயங்கி "எனக்கு அப்பாவ பாக்கனும் போல இருக்கு. இப்போ போக முடியாது சாய்ந்திரம் போய் பாக்கலாமா" என்றவள் அவன் பதிலுக்காக ஆவளாய் காத்திருக்க
'அதானே என்னடா அவ்வளவு தன்மையா அமைதியா பக்கத்துல நின்னு பேசுறாளேன்னு பாத்த அப்பா வீட்டுக்கு போகத்தான் இந்த பம்மு பம்முறாளா' என்று நினைத்தவன் முதன்முறையாக கேட்கிறாள் என்ற எண்ணம் தோன்ற தனக்கும் அவரை சந்திக்க வேணடிய காரணம் தனக்கும் இருப்பதனால் அவனின் கேசத்தை சீவியபடியே 'இவினிங் காலேஜ் முடிச்சிட்டு வைட் பண்ணு நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். மாமா வீட்டுக்கு போகலாம்" என்றான்.
"நான் தியா கூட பஸ்ல" எனும் போதே அவற் முகம் பார்க்க அவன் பார்வையின் மாற்றததை உணர்ந்தவள் "நான் வைட் பண்றேன்" என்றபடி வாயை கோணி அவனை பழப்பு காட்டியபடி 'சும்மாவே முறைஞ்சிக்கிட்டு நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த காட்டு காட்டுற" என்ற முனுமுனுப்புடன் போக
இதழோரம் புன்னகையை படரவிட்டவன் 'சரியான சரவெடி டீ நீ கொஞ்ச நேரம் மனுசனை சும்மா இருக்க விடுறியா' என்று நினைக்கத்தான் தோன்றியது. அதே மனநிலையில் "ஏய் நில்லுடி" என்றான் மிரட்டல் தோனியில்.
என்ன டீ யா என்று அவள் பார்க்க
அவளின் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவனோ "ஆமா நீ மட்டும் தான் டா சொல்லலாம் நான் டீ சொல்ல கூடாதா?" என்று கேள்வியோடு அவன் இதழ்க்கு பார்வையை செலுத்தியவன் "என்ன வாய் ஒரு பக்கம் கோணையா போகுது" என்றான் கல்மிஷமான குரலில்.
மறுபடியும் வேண்டுமன்றே வாயை கோணி பழப்பு காட்டியவள் "என்னோட வாய் எப்படி வேணாலும் போகும்... கோணையா இருந்தாலும் என்னோடதாக்கும்" என்று அலட்சிய பாவனையில் கூற
அவளருகில் வந்தவன் அவள் காதருகே குனிந்து "எனக்கு சொந்தமான் இடத்தை இப்படியா போட்டு படுத்துவ" என்று கூறியதும் அவளறியாமல் அவள் கன்னத்தில் செம்மை குடிகொண்டு ஆங் என்று முழித்து கொண்டு நின்றாள்.
"ரொம்ப படுத்தர டீ" என்று அவள் உதட்டினை காட்டி "அதுவும் பாவம் நானும் பாவம் விட்டுடுடீ" என்றுஅவன் பேகை எடுத்துக் கொண்டு கீழே சென்று விட்டான்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை இதுவரை எலியும் பூனையுமாய் ஏட்டிக்கு போட்டியாய் பேசி பழகிய வாய் இன்று அவன் நடந்து கொண்ட விதத்தில் பசை போட்டாற் போல் ஒட்டிக்கொண்டு திறக்க மறுத்தது.
கல்லுரிக்கு கிளம்பி கிழே வந்தவள் கவனமாய் அவனை பார்ப்பதை தவிர்த்தாள். என்ன மறைத்தும் அவனால் ஏற்பட்ட செம்மை நித்தை மறைக்க முடியவில்லை கன்னத்தை விட்டு நீங்காமல் ஒட்டிக்கொண்டு இருந்தது.
அவள் வருவதை கண்டதும் "கவிமா உனக்கும் டைம் ஆச்சி இல்ல... சீக்கிரம் வா சாப்பிடு" என்று அவளுக்கும் தட்டை வைத்து பறிமாற ஆரம்பித்தார் ஆதி
"இல்லை அத்தை நான் அப்புறம்" என்று அவனுக்காக தயங்க
"மூச் பேசமா வந்து உட்காரு" என்றவர் அவனுக்கு பக்கத்தில் அமரவைத்தார். அவளின் படபடப்பை உணர்ந்தவன் அவளை சமநிலைக்கு கொண்டு வரும் பொருட்டு தாயிடம் பேசலானான்.
"அம்மா"
"சொல்லு பா" என்று அவன் தட்டில் இட்டிலியை வைக்க போக வேண்டாம் என்று தடுத்தபடியே "இன்னைக்கு இவினிங் நாங்க மாமா வீட்டுக்கு போயிட்டு வறோம் மா" என்றான்.
"சரிபாபா பார்த்து போயிட்டு வாங்க... என்றவர் சரி கவிமா எப்படி டா காலேஜ் போவ" என்றதும் அதை மறந்தவள் கணவனை பார்க்க.
அவனும் அப்போது அவளைதான் பார்த்து கொண்டு இருந்தான் "அப்பாவோட கார் இருக்குமா டிரைவர் இருக்கார்... சொல்லிடுறேன் கூட்டிட்டு போவார்' என்றான்.
"கல்யாணம் ஆகி முதல்முதலா நம்ம வீட்டுல இருந்து போற...டிரைவர் கூட அனுப்புவியா.... நீயே போற வழிதானே விட்டுட்டு போகலாம் இல்லையா" என்று கேட்க
ஆதி கூறியதும் இவளுக்கு புரையேறியதுதான் மிச்சம் காலையிலையே ஒருமாதிரி பேசினான்... இவன் கூட போனாள் என்னன்ன பேசுவானோ என்று நினைத்திருக்க கண்கள் அவறை தொட்டு மீண்டது.
புரையேறியதின் உண்மை காரணத்தை நினைத்து சிர்த்தவன் "மா எனக்கு" என்று அதை தவிர்க்க நினைக்க
அவன் மறுக்கத்தான் போகிறான் என்று அறிந்த ஆதி "இல்ல கண்ணா நீ என்ன சொன்னாலும் அது சரியா வராது... நீதான் கொஞ்சம் கஷ்டம் பாக்கம கொண்டு போய் விட்டனும் பா"
என்றதும் அதை மீற முடியாமல் உணவினை முடித்துக்கொண்டு எழுந்தவன் "சீக்கிரம் கிளம்பி வா"
என்று அவளிடம் கூறிவிட்டு சென்றான்.
காரை கல்லூரி நோக்கி இயக்கி கொண்டிருந்தான். காலை வேலை இதத்தை இளையராஜ ஆக்கிரமித்தபடியே இசையில் நனையவைத்திருக்க அவன் புறம் கூட திரும்ப கூடாது என்று தனக்கு தானே உறுபோட்டபடி தார் சாலையில் கண் வைத்ததிருந்தாள் பார்கவி.
அவளின் உள்மனதை படித்தானோ என்னவோ அவளை வம்பு செய்ய தோன்றாமல் அவளின் அருகாமையின் இதத்தையும் அவளின் பிரத்யேக நறுமணத்தையும் அனுபவித்தபடி ஸ்டேயரங்கில் தாளம் இட்டபடி வந்தான்.
கல்லுரியும் வந்துவிட காரில் இருந்து இறங்கியவள் "எ... எனக்கு 4.25காலேஜ் முடியுது" என்றாள் பொதுவாய்
என்ன என்பது போல் பார்க்க 'பிக்கப் பண்ண வறேன்னு சொன்னிங்க" என்றாள் தலை தாழ்த்தி இது என்ன புதுவிதமாய் பதில் தருகிறாள் என்று தோன்றினாலும் அவள் தன்னை பார்பதை தவிர்க்கிறாள் என்று அனுமானித்தவன் "ம் சரி வந்துறேன் தியாவும் நீயும் இருங்கயே இருங்க நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" என்று அவளிடம் கூறியவன் ஒரு தலையாட்டலுடன் விடைபெற்றவனின் கைகள் தானாய் ஸ்டேரிங்கில் தாளம் போட காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 22
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.