🌹மையலுடைத்தாய் மழை மேகமே.-பாகம் 11🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

அந்த வாரயிறுதியில் மயூரா, மதனிகா, ருத்ரன், அந்தரன், ரோஜா, பூரணி மற்றும்அவர்கள் நண்பர்கள் சிலர் குன்னூர் மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கிற்கு ஜங்கிள்(hidden valley ) ட்ரெக்கிங் செல்லத் திட்டமிட்டனர்.இயற்கை எழில் கொஞ்சும் உதகை மண்டலத்தில் காணும் இடமெல்லாம் இயற்கையின் மாயாஜாலங்களே நிறைந்திருக்கும்.

பலரும் அறியாத இந்த பள்ளதாக்கு இயற்கையின் சொர்கம் எனவே கூறலாம்.காலை மணி 9.00 முதல் இரவு 9.00வரை இங்கே சுற்றலாம்.பாதுகாப்பு காரணமாக இரவு இங்கே சுற்றுவதற்கு அனுமதி இல்லை.காலையில் அனைவரும் தயாராகிவிட்டனர். இது மாதிரி பயணங்கள் மயூராவிற்கு ரொம்பவே பிடிக்கும்.காடுகள் அவளுக்கு அலுப்பதே இல்லை.தகுந்த ட்ரெக்கிங் உடையில் சரியான நேரத்தில் அவ்விடத்தை அடைந்தனர்.
பசி தாங்காத மயூரா வரும் பொழுதே backpack ல் sandwhich, டீ அனைத்தையும் எடுத்து வந்திருந்தாள். வரும் வழியில் பசித்தால் என்ன செய்வது.பூரணி அவள் bag கை பார்த்தே அலுத்துக் கொண்டாள்.

"என்னடி பூவே பார்க்குற. இந்த நெட்டக்கொக்கை பத்தி உனக்கு தெரியாது. ட்ரெக்கிங் டைம் சாப்பாடு கொடுக்கவே மாட்டான். எனக்கு முன்னாள் அனுபவங்கள் அப்படி.
அதான் இந்த வாட்டி எப்படி பக்காவா ரெடி ஆயிருக்கேன் பாரு'' மயூரா பெருமையாக கூற, பூரணி முறைத்தாள்.

"உன் பெருமையில் எருமை மேய, நீ திங்கறத யோசி, அங்கப்பாரு ரோசா எப்படி முன் சீட்டில் உன் மாமன் கூட உக்காந்து இருக்கானு.நம்ம கூட எல்லாம் பின்னால சீட்டில் இந்த சீமாட்டி உக்கார மாட்டாள் போலும்.''பூரணி பொரிந்து தள்ளினாள்.

"விடு பூவே, அவள் வேற நம்ம கூட உக்காந்து உசுர வாங்கறதுக்கா?. பேசாமல் வா ''
காலை சூரிய கிரணங்கள் பட்டு அந்த கன்னி நிலம் அவ்வளவு அழகாய் இருந்தது. சுற்றிலும் காட்டு செடிகளின் கலவை மணம் நாசியை கிள்ளிச் சென்றது.மயூரா ஒரு கணம் அந்த தூய்மையான காற்றை ஆழ சுவாசித்து அனுபவித்தாள்.பூர்வ குடியினர் வசிக்கும் இடமென்பதால் அவ்விடம் அவர்கள் நடந்து நடந்து அமைந்த வழித்தடத்தையே இவர்களும் பின்பற்றி நடந்தனர்.

சுற்றிலும் அடர்ந்த வனம், நடப்பது சிரமம் என்றாலும் நண்பர்களுடன் செல்வது இன்பமாகவே இருந்தது. அடிக்கடி மயூராவிற்கு பசிக்க, இவர்களிடம் இருந்து சற்றே பின் தள்ளி பூரணியோடு சான்விச் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டு வந்தாள்.முன்னே செல்லும் ருத்ரனும் இதை கவனிக்க வில்லை. அவனோடு ஒட்டிக் கொண்ட ரோஜாவும் இதை பார்க்கவில்லை.

முதல் நாள் மழையின் காரணமாக மண் பாதை சற்று வழுக்குவது போல் இருந்தது.பின் அந்தரன் மதனிகாவோடு மயூராவும் பூரணியும் இணைந்து கொண்டனர்.
ஒரு வழியாக மலையின் உச்சியைஅடைந்தனர்.அங்கிருந்து அந்த பகுதியை பார்க்கும் பொழுது அவ்வளவு அழகை வார்த்தையால் மயூராவால் விவரிக்க இயலவில்லை.
அனைவருக்கும் கொண்டு வந்த சான்விச் டீ உண்ணக் கொடுத்தாள்.பசியறிந்து உணவு கொடுப்பதில் அவளுக்கு நிகர் அவள்தான்.ருத்ரன் கூட ட்ரெக்கிங் முடித்த பின்னே எங்கயாவது உணவருந்திக் கொள்ளலாம் என்றே எண்ணியிருந்தான்.மயூராவின் சமயோசிதத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவனால்.

"பரவாயில்லை மயிலே, உன் மாமன் உன்ன பாராட்ட கூட செய்யறானே. என்ன அத கேட்டு ரோசாக்கு தான் மூஞ்சில சுரத்தே இல்ல ''பூரணி மயூரா காதில் கிசுகிசுத்தாள்.

"விடு விடு இதல்லாம் அரசியலில் சகஜம் பூவே ''மயூரா கண்ணடித்தாள்.
இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரோஜாவிற்கு தன்னைப் பற்றி தான் கிசுகிசுக்கிறார்கள் என்பது புரிந்தது.

ஏற்கனவே அன்று மது வேற அவள் மூக்கை அறுத்துவிட்டாள். இன்று மயூராவை தன் முன்னே ருத்ரன் பாராட்டியது வேற அவளை காந்தியது.மயூராவை ஏதாவது செய்ய வேண்டும் போல் அவளுக்கு தோன்றியது. அனைவரும் ஒரு பள்ளத்தில் கீழே இறங்கும் வேளை மயூராவின் காலை இடறி விட்டாள்.பிடிப்பதற்கு எதுவும் இல்லா நிலையில், மழையால் இளகியிருந்த மண் வழுக்கி மயூரா விழுந்துவிட்டாள்.

காலில் பலமாக அடி வேறு பட்டிருந்தது.மயூராவால் காலை அசைக்கக் கூட முடியவில்லை.வலியால் கண்களில் நீர் சுரந்தது.அவளை விட அந்த வலிக்கு பதறியது ருத்ரனே.

"என்னடி பண்ணி வெச்சிருக்க ஆருஷி? பள்ளத்தில் பார்த்து இறங்கக் கூடாதா? இன்னும் உனக்கு விளையாட்டுத்தனம் போகவே இல்லைதானே? பாரு கால் எப்படி வீங்கிடுச்சுனு''அவன் கோவத்திலும் பதறியது அந்தரனுக்கும் பூரணிக்கும் புரிந்தது.
ரோஜாவிற்கு இன்பமாய் இருந்தது.என்னையா கேலி செய்கிறாய்.உனக்கு எப்படி பாடம் கற்பித்தேன் பாரு என்பது போல் இருந்தது அவள் பார்வை.ருத்ரன் திட்டியதும் மயூராவிற்கு கோவம் வந்து விட்டது.

வலியை பொறுத்துக் கொண்டு எழுந்து நின்றாள்."என்னால் நடக்க முடியும்.நான் மெதுவா நடந்து வர்றேன்.யாரும் எனக்காக சிரமப்பட வேண்டாம்'' சொல்லிக் கொண்டே மெல்ல மெல்ல விந்தி நடக்க ஆரம்பித்தாள்.அவளை பின் தொடர்ந்த அந்தரனை தடுத்து விட்டு அவள் பின்னால் சென்ற ருத்ரன் தடுமாறி மறுபடியும் விழயிருந்தவளை அல்லேக்காக தூக்கினான்.

மயூரா வாயை திறக்க முயல, "பேசாமல் இரு, வலியோடு நடந்து இன்னும் காலை வீங்க வெச்சுக்காதேடி''ருத்ரன் அவளைத் தூக்கிக் கொண்டே முன்னேறினான்.
இப்ப ரோஜா பாடுதான் திண்டாட்டம் ஆகியது.பலி வாங்கும் படலம் இப்படி ஆகிவிட்டதே.
நல்ல வேளை , ஜீப்க்கு வரும் வழியில்தான் மயூரா விழுந்ததால் ருத்ரன் விரைவில் ஜீப்பை அடைந்து விட்டான்.

"ரோஜா நீ பின்னாடி போய் உக்காரு.மயூரா என் கூடவே இருக்கட்டும். அவளுக்கு கால் வலி.என்னால மட்டும்தான் அவளை சமாளிக்க முடியும்.''முன் சீட்டில் அமர முற்பட்ட ரோஜாவை பூரணியோடு அமர சொல்லி விட்டு மயூராவை தன்னோடு அமர வைத்துக் கொண்டான்.

வலியால் முனங்கியவளை வசதியாக அமர செய்து விட்டு ஜீப்பை செலுத்தினான்.ஒரு கட்டத்தில் சோர்வினால் மயூரா ருத்ரன் தோள் மீது சாய்ந்தே உறங்கிவிட்டாள்.
காலையில் இன்பமாய் ஆரம்பித்த பயணம் மாலையில் மயூராவிற்கு மட்டும் துன்பமாய் அமைந்துவிட்டது.

நல்ல வேளை சிறுபிசகோடு அவள் கால் தப்பித்துக்கொண்டது. வீடு செல்லும் வழியிலே கிளினிக் சென்று காயத்திற்கு கட்டு போட்டுக் கொண்டு ருத்ரன் மயூராவை அழைத்து சென்றான்.களைத்திருந்த மயூராவை தூக்கி சென்று அவள் கட்டிலில் படுக்க வைத்து விட்டு மதுவை அவளை கவனித்து கொள்ள சொன்னான். வலி நிவாரண மருந்தின் உதவியால் மயூரா சீக்கிரம் உறங்கி விட்டாள்.நள்ளிரவில் அவள் அருகே ருத்ரன் அவள் கால்களை தடவிக் கொண்டு அமர்ந்தது எதுவுமே அவளுக்கு தெரியாது.

அவள் அவன் உயிரில் பூத்த உறவு. கரடு முரடாய் அவளிடம் அவன் இருப்பதே அந்த காதலுக்காகத்தான்.எங்கே எங்கனம் அவள் வசம் தன்னை இழந்தான் என்பதே அவனுக்குமே தெரியாதது தான்.தன்னை கண்டாலே சண்டைக் கோழியாகும் மயூராவிடம் தன் மனதை சொல்ல ருத்ரனுக்கு தைரியம் இல்லைதான். வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என்ற பயம் வேஅவனுக்குள்.

எல்லாவற்றையும் விளையாட்டுத்தனமாய் பார்ப்பவள், தன் காதலை பகடையாய் உருட்டிவிடுவாளோ என்றே அவளிடம் இளகும் தன் மனதிற்கு கடின கடிவாளம் போட்டுக் கொண்டான். இந்த கதையும் அரங்கேறும் நாள் ஒன்று வந்தது.

Last edited:

Author: KaNi
Article Title: 🌹மையலுடைத்தாய் மழை மேகமே.-பாகம் 11🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN