மறுநாள் மயூராவைப் பார்க்க பூரணி வீட்டிற்கு வந்தாள். "என்னடி மயிலே இப்படி காலை உடைத்துக் கொண்டாய். என்கூட தானே நடந்து வந்தே'' பூரணி கேட்க,
"தெரியல பூவே, ஏதோ ஒன்னு காலை இடறியது போல இருந்துச்சு, பாலன்ஸ் பண்ண முடியாமல் விழுந்துட்டேன்''மயூரா சொல்ல,
"என்ன சொல்லு மயிலே உன் மாமனுக்கு உம்மேல பாசம் அதிகம்தான்.எப்படி துடிச்சு போயிட்டாரு.நானே அசந்து போயிட்டேன்.மனுஷன் பாகுபலி ஹீரோ கணக்கா உன்னை அல்லாக்கா தூக்கிட்டு வந்தாரு பாரு.ஹ்ம்ம்ம்.. எனக்கு என்னமோ உன் மாமனுக்கு உன் மேலே லவ் இருக்கனும்னே தோணுது.போற போக்கைப் பார்த்தால் நீ பெட்ல ஈசியா ஜெயிச்சிடுவ போல் இருக்கே ''
"அடி போடி இவளே, அந்த கல்லுக்குள் காதல்லாம் வராது. எனக்கும் அவன் மேல ஆசை வராது.பட் எப்படியாச்சும் இந்த பெட்ல நான் வின் பண்ணி காமிக்கிறேன் பாரு'' மயூரா கூற,
விதி தன் சதிக்கு ரோஜாவை நோட்டம் பார்க்க அனுப்பியதும் அப்பொழுதுதான்.அவளுக்குமே அந்த சந்தேகம் இருந்தது.யாரையும் சுண்டியிழுக்கும் அவள் அழகிற்கு மயங்காத ஒருவன் ருத்ரன் மட்டுமே. தோழன் என்பதை தாண்டி வேறுவகையில் அவளுடன் அவன் பழகியதே இல்லை.
மயூராவிற்காக துடிக்கும் ருத்ரனை நேற்று அவள் கண்ட பொழுதுதான் அவளுக்கு அவன் மேல் சந்தேகம் வந்ததே. மயூராவின் அறைக்கு வெளியே அவர்கள் பேசுவதை செவிமடுத்த ரோஜாவிற்கு பூரணியின் பேச்சு கேட்டு பற்றி எரிந்தது.ஆனால் மயூரா கூறியது கேட்டதும் உதட்டில் விஷமத்தனமான புன்னகை மின்னியது.
இந்த ஒரு பெட் விஷயம் போதுமே ருத்ரனின் காதலை உடைப்பதற்கு.சத்தமே இல்லாமல் ரோஜா அந்த இடத்தை விட்டு அகன்றாள்.பின் அந்தரனும் வந்த மயூராவை பார்த்து விட்டு சென்றான்."சும்மா சொல்லக்கூடாது தேவி, உன் மாமன் உன் மண்டையை கொட்டி கொட்டி உன் மூளையை டேமேஜ் பண்ற வில்லனா இருந்தாலும், உனக்கு ஒண்ணுனா எப்படி பதறி போகிறான் பாரு. டேய் , உண்மையை சொல்லு அவன் உன்னை லவ் பன்றான்தானே?''அந்தரன் கேட்டு வைக்க மயூரா முறைத்தாள்.
"டேய் வண்டு முருகா, நானே கால் வலியில் கஷ்டப்படறேன், இப்ப உனக்கு இந்த இன்க்குவரி முக்கியமா? அப்படியே ஓடி போயிடு. கைல மாட்டுனே மவனே கண்டம் பண்ணிடுவேன்'' மயூரா கண்னை உருட்ட அந்தரன் விழுந்து விழுந்து சிரித்தான்.
அப்பொழுது ருத்ரன் அறைக்குள் வர, இருவரும் அமைதியாயினர்.
மயூராவின் காலை தொட்டு பரிசோதித்தவன், அவளுக்கு வலி இல்லை என்று தெரிந்து நிம்மதியானான்.அவன் செயலை கண் ஜாடையாக அந்தரன் மயூராவிடன் காண்பிக்க அவளோ அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.
சற்றைக்கெல்லாம் ருத்ரன் வெளியேற, அந்தரன் "மயூரா அதென்ன நீயும் பூவும் அடிக்கடி குசுகுசுனு பேசிக்கிறங்க? எனக்குத் தெரியாமல் ஏதாவது கோல்மால் பண்ணலாம்ம்ன்னு இருக்கியா நீ? அப்படி ஏதாவது இருந்தா ஒழுங்கா இப்பவே சொல்லிடு.பின்னால பிரச்சனைனா நான் ஆஜர் ஆக வசதியா இருக்கும்'' அந்தரன் யதார்த்தமாய் கூற மயூரா திடுக்கிட்டுப் போனாள்.
"அது வந்து வந்து.. ''மயூரா மென்று முழுங்க..
"என்ன வந்து போயினு நீட்டி முழங்கற மயிலே?'' அந்தரன் சுவாரசியமாய் கேட்க, மயூராவின் பூரணியுடன் வைத்த பெட் டை முழுவதும் சொல்லி விட்டாள்.அதை கேட்ட அந்தரன் முகத்தில் சிந்தனை ரேகைப் படர்ந்தது.
ஓரளவு ருத்ரன் மனதை அவன் அறிந்து வைத்திருந்தான்.ஆனால் அதையும் விளையாட்டு பொருளாக மயூரா எடுத்துக் கொண்டு விடுவாளோ என்று இப்பொழுது அவனுக்கு பயம் வந்து விட்டது.
"என்ன காரியம் பண்ண துணிஞ்சே மயூரா? காதல் உனக்கு விளையாட்டா போச்சா? ஒரு வருஷ அசைன்மென்ட்க்கு ருத்ரனை பகடையாக்க நீ எப்படி நெனைக்கலாம்?''
"நிஜமாகவே உனக்கு அவன் மேல் லவ் வந்திருந்தால் கூட பரவாயில்லை, பட் இது சரியில்லை தேவி. அவனுக்கு தெரிஞ்சா அவன் மனசு என்ன வேதனைப்படும்னு நீ யோசிச்சுப்பார்த்தியா? உன்னை அதற்கு அப்புறம் அவன மன்னிக்கவேமாட்டான்.
முட்டாள்த்தனம் பண்ண பார்த்தியே.அந்த பூரணிக்கு இருக்கு''
"இதோடு இந்த விளையாட்டை நிறுத்திடு மயூரா.இது நமக்குள்ளே இருக்கட்டும். மதுவுக்கு கூட தெரிய வேண்டாம். நிஜமாகவே உனக்கு ருத்ரனை பிடிச்சுயிருந்தால் அப்ப போய் அவன்கிட்ட சொல்லு, சரியா? ஹார்ஸ்சா பேசியிருந்தா மன்னிச்சுடு''அந்தரன் மயூராவின் தலையைத் தடவினான்.
"நல்ல வேளை வண்டு, உன்கிட்ட சொன்னேன்.ஏதாவது மடத்தனம் பண்ணியிருந்தால் என்னை இந்த வீட்ல தொலைச்சியிருப்பாங்க.என் ஆத்தா போதும், அவங்க அருமை ருத்ரனை ஹர்ட் பண்ணிடேன்னு சோத்துல விஷம் வெச்சி என் கதையை முடிச்சி விட்டிரும்.நல்ல சமயத்தில் காப்பாற்றினாய்''
"பெட்டாவது மண்ணாவது.இருக்கற மூளையை வெச்சி நானே அசைன்ட்மென்ட் செஞ்சிடுவேன்.நாளைக்கே போய் பெட் டை கான்செல் பண்ணிடறேன்''மயூரா முகத்தில் நிம்மதி படர்ந்தது. ருத்ரனை இவ்விதம் காயப்படுத்த அவள் விரும்பல என்பதுதான் உண்மை.
மறுநாள் காலேஜில் பூரணியிடம் நடந்ததைக் கூறினாள்.பெட் ல் தோற்றுவிட்டதாய் மயூரா ஒத்துக்கொண்டாள்.பூரணிக்கும் அவள் தவறு புரிந்தது.ஆனால் ருத்ரன் மயூராவைத்தான் காதலிக்கிறான் என்பதும் விளங்கியது. மயூரவிற்கு மட்டும் அது புரியாமலே போனது விதி அவளுக்கு செய்த சதிகளில் ஒன்றுதான்.
மயூரா இங்கே நிம்மதியாக இருக்க, அங்கே ரோஜா தன் வேலையை ஆரம்பித்தாள்.
லஞ்ச் ப்ரேக்கிற்கு ருத்ரனை தனியாக பிடித்தவள் சாமார்த்திய கேள்விகளினால் ருத்ரன் மனம் மயூராவிற்குத்தான் என்பதை அறிந்துக் கொண்டாள்.
"அதெல்லாம் இருக்கட்டும் ஆர்யா, உனக்கு ஆருஷியை பிடிச்சுயிருக்கலாம், அவள் மனசில என்ன இருக்குனு தெரிஞ்சிக்கணும் இல்லைய? யார் கண்டார் அவளுக்கு அந்தரனை பிடிச்சுயிருக்கலாம். உன்னை விட அவள் அவன் கூடத்தானே அதிகம் சுத்துவா? அன்னிக்கு நானே என் காதலே கேட்டேன் உன் லவ் பண்ணி காமிக்கறதா பூரணிக்கிட்ட சவால் விட்டிருக்கா உன் மயூரா. பெட்ல ஜெயிச்சதும் சும்மா உன்கிட்ட விளையாடினேன்னு சொல்லிடுவா.'' ரோஜா அடுக்கிக் கொண்டே போக ருத்ரன் அவளை நம்பமாட்டாமல் முறைத்தான்.
"என்ன எதுக்கு முறைக்கற ஆர்யா? நான் சொன்னது உண்மையா இல்லையானு போய் பூரணியைக் கேளு''
"இது மட்டும் பொய்யாயிருக்கட்டும் உனக்கு அப்புறம் இருக்கு ரோஜா'' ருத்ரன் கோவத்தோடு உறுமிவிட்டு பூரணியைத் தேடி சென்றான்.அந்தோ பரிதாபம். அதே வேளைத்தான் பூரணியிடன் பெட்டில் தோத்துவிட்டேன் என்று மயூரா கூறியது அவன் காதில் விழுந்து தொலைத்தது.முழுவதையும் வழக்கம் போல் கேக்காமல் மயூரா விஷயத்தில் மறுபடியும் ருத்ரன் தவறு செய்தான்.

Last edited: