என் மடியினில்
உன்னை
ஏந்திடும்
நாளுக்காய்
காத்திருக்கிறேன்
உன்னை
நெஞ்சில் தாங்கியவள்....
அழதபடி இருந்த ஶ்ரீயின் தோளில் சாய்ந்தபடியிருந்த ஹேமாவின் நிலை ஶ்ரீக்கு புரிந்தது... என்னதான் ஆறுதல் கூறினாலும் அவளது துன்பம் ஆற்றமுடியாத வடுவே... ஆனால் அந்த வடுவை மாற்றினாலொழிய அவளது வாழ்வை அடுத்த கட்டத்தை எடுத்து செல்லமுடியாது.. அதற்கான முதல் முயற்சியாக அந்த துன்பத்தை மறக்கடிக்கும் முயற்சியில் இறங்கினாள் ஶ்ரீ...
“பப்ளி.. இங்க பாரு.. உனக்கு நடந்தது அநியாயம் தான்..இல்லைனு சொல்லலை.... அவனுக்கு அதுக்கு உரிய விதத்துல தண்டனை வாங்கிக்கொடுப்போம்.... ஆனா அதுக்காக குட்டிப்பையனை வேணாம்னு சொல்லுறது தப்பு... குட்டிப்பையன் உன்னோட ரத்தத்துல வளர்றான்... யாரோ பண்ண தப்புக்கு அவனை தண்டிக்கிறதுல நியாயமே இல்லை.... நீ செய்ய நினைக்கிறது அந்த அயோக்கியன் உனக்கு செஞ்ச அதே பாவத்தை தான்....”
“இல்லை ஶ்ரீ... நீ என்ன சொன்னாலும் இது... அவனோட”
“இவ்வளவு சொல்லுறேன்... மறுபடியும் நீ சொல்லுறது தான் சரினு பிடிவாதம் பிடிக்கிற.. சரி நீ கடைசியா ஒரு முடிவு எடுக்கிறதுக்கு முதல்ல இந்த வீடியோவை பாரு... அதுக்கு பிறகு உன்னோட எந்த முடிவையும் நான் ஆக்சப்ட் பண்ணுறேன்....” என்றுவிட்டு ஶ்ரீ யூடியூப்பில் ஒரு கருக்கலைப்பு காணொளியை எடுத்து காட்டினாள்...
அதில் வைத்தியர் ஆயுதம் கொண்டு கருவை சிதைத்து குழந்தையின் தலை, கால், கை, மற்றும் உடல் என்று ரத்தக்கரையுடன் ஒரு தட்டில் வைப்பதுபோல் ஒரு காணொளியும் மற்றொன்று கருக்கலைப்பு மாத்திரை உட்கொள்வதால் குழந்தையின் தொப்புள்கொடி அறுக்கப்பட்டு குழந்தை இரத்தத்துடன் வெளியேறும் விதமும் காணொளியில் விளக்கப்பட்டிருந்தது..
பாதி காணொளியிலேயே கண்களை மூடிக்கொண்ட ஹேமா ஶ்ரீயின் தோளில் சாய்ந்து அழுத்தொடங்கிவிட்டாள்... அவள் வருந்தினாலும் பரவாயில்லை என்று முழுக்காணொளியும் பார்க்க வற்புறுத்தினாள் ஶ்ரீ...
ஹேமாவோ
“ வேணாம்டி.. இதுக்கு மேல என்னால பார்க்கமுடியல... வேணாம்டி.. ப்ளீஸ்..” என்றழுதவளை
“இதைதானே மேடம் செய்யனும்னு ஆர்ப்பாட்டம் பண்ணீங்க.. இப்போ பார்க்க மட்டும் கஷ்டமா இருக்கா..?? இதை தானே நீ குட்டிபையனுக்கு கொடுக்கனும்னு ஆசைப்பட்ட??” என்று ஶ்ரீ கேட்க ஹேமாவோ தன் வயிற்றை கட்டிக்கொண்டு
“தப்பு தான்டி.. தப்பு தான்... என்னோட குழந்தைக்கு அந்த பாவத்தை செய்ய துணிஞ்சது தப்பு தான்.. அந்த பாவி எனக்கு செஞ்ச பாவத்தை விட மோசமான ஒரு பாவத்தை என் குழந்தைக்கு செய்ய துணிஞ்சிட்டேன்... “ என்று அழுதவளை அணைத்துகொண்ட ஶ்ரீ
“இப்பயாவது புரிஞ்சிதே... அது போதும்... குட்டிப்பையன் உன்னோட பையன்.... அவனுக்கு நீ தான் எல்லாமே... நீ சிரிச்சா அவன் சந்தோஷமா இருப்பான்.. நீ அழுதா அவனும் சோகமா இருப்பான்.... இனிமே உன் சோகத்தை தூக்கி போட்டுட்டு குட்டிப்பையனை நினைச்சி சந்தோஷமா இரு... இனி குட்டிப்பையனை பற்றி மட்டும் யோசிச்சா போதும்...மத்தது எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்... புரிஞ்சிதா??” என்று ஶ்ரீ கேட்க கண்களில் நீருடன் தலையாட்டினாள் ஹேமா..
“சரி நீ அழுது வடிஞ்சது போதும்.. இப்போ குட்டிப்பையனுக்கு ஹாய் சொல்லி வெல்கம் பண்ணு... அப்புறம் என்னையும் குட்டிப்பையனுக்கு இன்ரடியூஸ் பண்ணு..” என்று ஶ்ரீ கூற சிரித்தாள் ஹேமா..
“ஏய் லூசாடி.. வயித்துக்குள்ள இருக்க குழந்தைக்கு என்னடி தெரியும்.. பை மன்த்ஸ் முடிஞ்சா தான் குழந்தைக்கு நாம சொல்லுறது கேட்கும்னு சொல்லுவாங்க.. நீ என்ன இப்பவே இன்ட்ரடியூஸ் பண்ணுனு சொல்லுற??”
“ஐயோ பப்ளி அதெல்லாம் அந்த காலம்..இப்போ உள்ள வாண்டுகளெல்லாம் ரொம்ப ஸ்மார்ட்.. அதுக்கு நாம பேசுறது எல்லாம் புரியும்... இப்போ இருந்தே ட்ரெயின் பண்ண் ஆரம்பிச்சா தான் என்னோட குட்டிப்பையன் என்னைவிட ஸ்மார்ட்டா ஸ்வீட்டா வருவான்... சோ அவன்கூட தினமும் வன் ஹவர் நான் பேசுவேன்.. நான் ஆபிஸ் போனதும் நீயும் பேசு..”
“உன்னை வச்சி மேய்க்கவே எங்களால முடியல... இதுல உன்னைவிட ஸ்மார்ட்டாவா...?? நினைச்சாலே கண்ணை கட்டுதே..”
“பயப்படாத பப்ளி.. நீ வேணும்னா பாரு.. என்னோட சப்ஸ்டிடியூட் தான் நம்ம குட்டிப்பையன்...” என்று ஶ்ரீ கூற சிரித்தாள் ஹேமா..
பின் ஹேமாவின் வயிற்றினருகே குனிந்து ஶ்ரீ “ ஹாய் குட்டி... நீங்க பையனா பொண்ணானு தெரியலை... எப்படினாலும் ஆண்டி உங்களை குட்டிப்பையன்னு தான் கூப்பிடுவேன்... பாருங்களே.. ஆண்டி யாருனு சொல்ல மறந்துட்டேன்... நான் தான் ஶ்ரீ... உங்க அம்மாவோட பெஸ்ட்டு பெரெண்டு..... உங்க அம்மாவுக்கு மட்டும் இல்லை.. உங்களுக்கும் நான் தான் பெஸ்ட்டு ப்ரெண்டு சரியா.. குட்டிப்பையன் அம்மா டாமிக்குள்ள இருக்கதால நீங்க பேசுறது ஶ்ரீக்கு கேட்காது.. அதனால நீங்க வெளிய வரவரைக்கும் ஶ்ரீ சொல்லுறத கேட்பீங்களாலாம்.... வெளிய வந்ததும் குட்டிப்பையன் சொல்லுறத ஶ்ரீ கேட்பாளாம் சரியா...இது தான் நமக்கிடையில உள்ள டீல்... ஓகே.. என்னோட குட்டிப்பையன் அம்மா டாமிக்குள்ள அம்மாவை கஷ்டப்படுத்தாம சமத்தா இருப்பீங்களாம்... ஶ்ரீ அதுக்கு ஒரு ஹப்பா(கிஸ்) ஒன்னு தருவேனாம் ஓகேயா..” என்றுவிட்டு ஹேமாவின் வயிற்றில் ஶ்ரீ முத்தமொன்றைவைக்க ஹேமாவோ அவளை விலக்கி
“ஏய் லூசாடி உனக்கு.. சின்னபிள்ளை மாதிரி நடந்துக்கிற?? இதுல கிஸ் குடுப்பாலாம்... பிச்சுபுடுவேன் பிச்சு..”
“இங்க பாரு பப்ளி.. இது எனக்கும் குட்டிப்பையனுக்குமான டீலிங்...இதுல நீ தலையிடாத... உன்னால குனிஞ்சி குட்டிப்பையனுக்கு கிஸ் குடுக்க முடியாது..சோ உன் சார்பா நா குடுக்கிறேன்...அவ்வளோ தான்.” என்று ஶ்ரீ விளக்கம் கூற
“ஐயோ உன் தொல்லை தாங்கல... ஏன்டி இப்படி பண்ணுற?? பாவம்டி என்னோட செல்லகுட்டி...”
“நா அப்படி தான்... என்னோட குட்டிபையனை கிஸ் பண்ணுவேன்.... நீ எதுவும் பண்ணமுடியாது.. பாரு குட்டிப்பையா உன் அம்மாவை... ரொம்பதான் அழுத்துக்கிறா...” என்று ஒருவாறு ஹேமாவின் முடிவை மாற்றிவிட்டாள் ஶ்ரீ... நடந்த கொடுமைகளை மறக்கமுடியாத போதிலும் அந்த உருவம் தெரியாத சிசுவை அழிக்கும் எண்ணம் இல்லாதொழிந்தது... கயவனின் தயவால் உருவான கருவென்றாலும் அது கொடூரமாய் வதைக்கப்பட்டு கொல்லப்படுவதை விரும்பவில்லை அன்னை மனம்...
கருக்கலைப்பு என்பது தவிர்க்கமுடியாத சில காரணங்களுக்காக மருத்துவத்துறையில் அனுமதிக்கப்பட்ட ஒரு விடயம்.... அது கொலையே எனும் போதும் சில மருத்துவ சிக்கல்களை குணப்படுத்தவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது...பலோப்பியன் குழாயில் குழந்தை உண்டாகி கருப்பைக்கு கொண்டு செல்லப்படாது அந்த குழாயிலேயே குழந்தை வளரும் போது அது தாயிற்கும் சேயிற்கு தீமை பயப்பதால் கருகலைப்பு மேற்கொள்ளப்படுகிறது... இன்னபிற காரணங்களான கருவின் ஊனத்தன்மை மற்றும் வளர்ச்சிகுறைவு ஆகிய காரணங்களுக்காவும் கருக்கலைப்பு மேற்கொள்ளப்படுகிறது... சில வைத்தியர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருவை சுமக்க நேரிடும் போது மனிதநேயத்தையும் குழந்தையின் நலத்தையும் கருத்தில் கொண்டு கருக்கலைப்பு செய்ய சம்மதிக்கின்றனர்..இவ்வாறான காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கருக்கலைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்ற போதிலும் தாய் சேய் நலனை கருத்தில் கொண்டு ஆதரிக்கப்பட்டது.. ஆனால் தற்போது அது ஒரு பேஷனாகிவிட்டது... வரைமுறையில்லாத வாழ்க்கைமுறையும் நவீனத்துவத்தில் உள்ள அதீத ஈடுபாட்டாலும் இன்று கருக்கலைப்பு என்பது சர்வசாதாரணமாகிவிட்டது... இந்த சமூக சீர்கேடுகளுக்கு சில நல்ல உள்ளங்கள் கண்டனம் தெரிவிக்கும் போதிலும் சிலர் பணத்திற்காக துணைபோகின்றனர்.. ஒருவனது பிறப்பையும் இறப்பையும் தீர்மானிக்கும் உரிமை நம்மை படைத்தவனுக்கு உரியது.. அதை மாற்றியமைக்கும் உரிமையை எடுப்பவன் ஜென்மங்கள் ஈடேறிலும் அந்த பாவத்தை சுமக்கவேண்டிய நிலை ஏற்படும்... இவ்வாறு ஒரு கூட்டம் இருக்க மறுபுறமோ குழந்தை வரம் வேண்டி கோயில் குளமென்றும், வைத்தியர்களையும் நாடிச்செல்கின்றர்..
இப்படி கருக்கலைப்பு பாதகமும் சாதகமுமாய் இருக்கிறது..
மதியம் பன்னிரெண்டு மணியளவில் சஞ்சு, ரவி, சுந்தர் அனைவரும் ஶ்ரீயின் வீட்டிற்கு வந்தனர்..
ஹேமாவை கண்டதும் அவளை கட்டிக்கொண்ட சஞ்சு அவளை நலம் விசாரித்துவிட்டு அவளுடன் சண்டையிடத்தொடங்கினாள்..
அவர்களது சண்டையை பார்த்துக்கொண்டிருந்த சுந்தர் சண்டையிற்கு பஞ்சாயத்து பண்ண முயல சஞ்சுவோ
“இப்போ யாரு உன்னை பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டா...?? இது எங்க பிரச்சனை... நாங்க கூப்பிட்டா கூட நீ பஞ்சாயத்து பண்ண வரக்கூடாது.. புரிஞ்சிதா... இப்போ பாய் கம்முனு ரவி கூட இரு..” என்று சஞ்சு சுந்தரை துரத்த அவன் ரவி அருகே சென்றான்..
“ஏன்டா இப்போ நான் என்ன சொல்லிட்டேனு இப்போ அவ என்னை கம்முனு இருக்க சொல்லுறா??” என்று சுந்தர் அங்கலாய்க்க ரவியோ கூலாக
“நான் வாயை மூடிட்டு ஓரமா இருக்கும் போதே உனக்கு தெரியவேணாம்..இதுங்களை பத்தி தெரிஞ்சு தான் நான் பேசாம இருக்கேனு.. ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை...???”
“எப்படிடா??”
“அது அப்படி தான்டா.. இதுங்க கூட இத்தனை வருஷம் குப்பை கொட்டுனதுல இது கூட தெரியலனா எப்படி??”
“நல்லா தெரிஞ்சிக்கிட்டடா டேய்...” என்று சுந்தர் சிரிக்க அவனுடன் சேர்ந்து சிரித்தான் ரவி..
அங்கே பெண்கள் பட்டாளமோ தங்கள் கதைகளை அளாவிக்கொண்டிருந்தது..
“ஹேமா... உனக்கு குட்டிபையன் வேணுமா.. குட்டிப்பொண்ணு வேணுமா??” என்று சஞ்சு கேட்க ஶ்ரீ முந்திக்கொண்டு
“எனக்கு குட்டிப்பையன் தான் வேணும்... அதுவும் என் பப்ளி மாதிரி கலர்ல.. என்ன மாதிரி கெத்தா..”
“ஹலோ மேடம்... அது அவ குழந்தை.... அவ தான் எப்படி வேணும்னு சொல்லனும்.... என்னமோ உன் இஷ்டத்துக்கு சூப்பர் மார்க்கெட்ல சாமான் வாங்குற மாதிரி சொல்லுற..??”
“ஓய் என்ன நக்கலா?? அது என்னோட குட்டிப்பையன்... நான் சொல்லுற மாதிரி தான் இருப்பான்...”
“அப்படினா நீ ஒன்னை பெத்துக்கோ... அது உன்னை மாதிரி இரட்டை வாலோட இருக்கும்...” என்று சஞ்சு கூற
“நான் என்ன மாட்டேன்னா சொன்னேன்?? இந்த அத்தான் ஓகேனா எனக்கும் ஓகே...” என்று ஶ்ரீ கூற ஹேமாவும் சஞ்சுவும் ஒரேடியா
“அடிப்பாவி....”
“ஹேமா பார்த்தியா இவளை... இவ போற ஸ்பீட்டுல ஒரு வருஷத்துல நாலு புள்ள பெத்து போட்டுருவா போலயிருக்கு... அம்மாடி கொஞ்சம் ஸ்லோவா போமா...”
“பயப்படாத சஞ்சு... எனக்கு மூனு போதும்... நாலுனா வச்சி மேய்க்கமுடியாது....”
“என்னது மூனா....?? அவன் ஒன்னை வச்சி மேய்க்கவே தடுமாறுறான் .. உனக்கு மூனு கேட்குதா??”
“இல்லை நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட.. என்னோட குட்டீஸ் ரெண்டும் அப்புறம் குட்டிப்பையனும்....சோ மொத்தம் மூனு..”
“வெவரமா தான்டி கணக்கு போடுற... “
“அது தான் சஞ்சு ஶ்ரீ...”
“சரி...ஹேமாவை டாக்டர்ட கூட்டிட்டு போனியா??”
“நாளைக்கு தான் கூட்டிட்டு போகனும்... அனுவை அப்பாயிண்ட்மென்ட் பிக்ஸ் பண்ண சொல்லியிருக்கேன்...”
“சரி ஶ்ரீ... ஹேமா.. இங்க பாரு... நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு மனசை சந்தோஷமா வச்சிக்கோ.. இப்போ இந்த குட்டிபாப்பாவுக்கு நீ மட்டும் இருக்க... உனக்கும் அது தான் துணை... ஏதாவது மனசுக்கு கஷ்டமா இருந்தா எங்ககிட்ட பேசு.. எப்பவும் உனக்கு சப்போர்ட்டா நாங்க இருப்போம்...மனசை சந்தோஷமா வச்சிக்கோ.... நல்லா சாப்பிடு... நல்லா ரெஸ்ட் எடு... நல்ல மியூசிக் கேளு... நல்ல புக்ஸ் படி... ஈவ்வினிங் கொஞ்சம் வாங்கிக் போ...ஆண்டி உனக்கு எப்படி கவனமா இருக்கனும்னு சொல்லுவாங்க.. அவங்க சொல்லுறபடி கவனமா இரு.... புரிஞ்சிதா??” என்று சஞ்சு கேட்க அதுக்கும் ஶ்ரீயே பதிலளித்தாள்
“அதெல்லாம் அவ கரெக்டா பாலோ பண்ணுவா.... அப்படியில்லாட்டியிம் மை மம்மி டார்ச்சருக்கு பயந்தாவது செய்வா... அதுக்கே கியாரண்டி...” என்று ஶ்ரீ கூற தலையில் அடித்துக்கொண்ட ஹேமா
“ஏன்டி உனக்கு ஆண்டியை ஏதாவது சொல்லாட்டி தூக்கம் வராதா??”
“என்ன பண்ண பப்ளி பழகிபோச்சி...” என்றவளை ஒருசேர முறைத்தனர் ஹேமாவும் சஞ்சும்..
இவ்வாறு கலகலப்பாய் மதிய உணவை முடித்தவர்கள் மாலை வரை வம்பழந்துவிட்டு இருட்டத்தொடங்கியதும் மூவரும் வீடு திரும்பினர்.