நாம் -9

sagimoli

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் -9.
மாறிடும் யாவும் என்று சொல்லும் வார்த்தையில் நெசமுமில்லை ; உண்மை காதலை பொருத்தமட்டில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.....
~ யுகபாரதி❤

இளா குளித்து முடித்து உடைமாற்றி வந்தாள் மணி ஏற்கனவே பதினென்று என காட்ட , என்ன சமையல் செய்யட்டும் என்றாள் அமுதனிடம். பேப்பர் படித்துக்கொண்டிருந்தவன் பேப்பரை கீழே கூட வைக்காமல் எதன லைட் ஆ செய் மதியம் நான் போய் நான்வெஜ் எதனா வாங்கிட்டு வரேன் என்றான் அவள் முகம் காணாமல்.
இளா, சரி என்றவள் இட்லியும் தேங்காய் சட்னியும் சில நிமிடத்தில் செய்து முடித்தாள். அன்று விடுமுறை நாள் என்பதால் சற்று நிதானமாகவே இருந்தனர்.
சாப்பிட வாங்க என்றாள். வந்தவன் இளாவின் முகத்தைக்கூட பார்க்கவில்லை விறுவிறுவென சாப்பிட்டவன் கைகழுவி விட்டு சென்று விட்டான்.
அவளும் போதும் என கைக்களூவியவளுக்கு அழுகையாய் வந்தது இப்ப தான் கொஞ்சம் இயல்பாய் இருந்தான் போச்சா என்றிருந்தது இளாவிற்கு.
இளா கண்களைத் துடைத்துக்கொண்டு சரண்யாவை எழுப்பச் சென்றுவிட்டாள். சரண் எழுந்திரிடி உங்க அண்ணன் வந்த காத்துவான்.
ம்ம்ம்ம் இருடி என எழுந்தவளை போய் பிரஷ் பண்ணிட்டு வா டி காபி எடுத்து வைக்கிறேன் என்றாள்.
காபி அருந்தியவள்.....
இளா எப்ப இருந்து இவ்வளவு நல்ல சமைக்க கத்துக்கிட்டா என்றாள்.இளா அவளைப் பார்த்து ஒரு முறை முறைத்தவள் எரும நான் சின்ன வயசிலிருந்தே நல்ல தான்டி சமைப்பேன். இப்ப டெயிலி பண்ணறதால எனக்கு கொஞ்சம் பர்பக்சன் வருதுனு வச்சிக்கோவே.
அண்ணா எங்க என்றாள். நான்வெஜ் வாங்க வெளியே போயிருக்கார் என்றாள். அப்பா தேங் காட் இந்த ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போயிருச்சி என்றாள். எனக்கு நான்வெஜ் ஒரு அளவு தான் வரும் சரியா. அட்ஜஸ் பண்ணிக்கோ. ஓகே என் செல்ல அண்ணியாரே என்றாள். அதற்குள் அமுதன் ம்ம்ம்ம்க்க்கு என்று இரும்பல் விட சரண்யா வேண்டுமென்றே அண்ணா அண்ணி நல்லா சமைக்கிறங்களா என்றாள்.
அமுதன் என்ன சொல்லுவான் என்று திரும்பி நின்றவாறே கேட்டவள். ம்ம்ம்ம் உன் அண்ணி தானே எதோ சுமாரா சமைக்கிறா சரண்மா வாயில கூட வைக்கமுடியல தான் என்னப்பண்ண, அண்ணானப் பாத்திய எப்படி இளச்சிட்டேன் என்றான்.
இளாவிற்கு சுர் என்றானது தன் கையில் கிடைத்த மத்துக்கடையை
கடமாக எண்ணி, அவனை அடித்தே விட்டாள். ஏன்டா? மாடு காலையில எழுந்து உனக்கு சமைத்துப் போட்டால் என் சாப்பாட்ட உன்னால் வாயில வைக்கமுடியிலயா என்று இரண்டு அடி சேர்த்துப் போட்டாள்.
இளாவிற்கு எங்கிருந்து தான் அவ்வளவு தையிரியம் வந்ததோ, சிறிது நேரம் கழித்து உதட்டைக் கடித்தவள், ஐய்யோ சரண்யா இருக்கறதையே மறத்திட்டியே இளா என்று நினைத்து அவனைப் பார்த்தவள், அவன் அவளையே தான் பார்த்துக்கொண்டிருந்தான். என்ன நினைத்தானோ சட்டென அவளின் உதட்டை ,கையால் அவள் பல்லில் இருந்து விடுவித்தவன் அவளை அருகில் இழுத்துக்கொண்டான்.
அவன் இழுத்ததில் அவன் மேலே சென்று மோதியவள், ஸ்அஅஅ வலிக்குதுடா எரும மாடு என்றாள். அமுதனும் அவள் காதருகில் எனக்கும் தான் வேனில் ரொம்ப வலிக்குது என்றான் கண்ணில் அத்தனை வேதனையைத் தேக்கி. என்னாச்சு இவனுக்கு என்று முதன் முதலில் அவன் கண்ணைப் பார்த்தவள் அழுதிருக்கிறான் என்று புரிந்தது.
இளாவிற்கு எதற்கு என்ற கேள்விக்கு தான் விடை கிடைக்கவில்லை.
இவர்கள் இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்ட சரண்யாவின் நிலைமைத்தான் ஒருமாறி ஆகிவிட்டது.
ஐய்யோ கடவுளே ஒரு சின்ன பெண் என்றும் பாராமல் ,இவங்களை சட்டென அண்ணா என கத்தியவள்.
இயல்புக்கு வந்த இருவரும், இங்க பாருடி உன் அண்ணன் தான் இப்ப சமைக்கப் போறான். என்னால எல்லாம் முடியாது பாத்துக்கோ, பெரிய இவனாட்டம் என் சமையல பலிச்சான்ல. எப்படித்தெரியுமா சரண் சாப்பிடுவான் சப்பாத்தி பன்னீர்பட்டர் மசாலா என்றால் எண்ணிக்கையே இல்லாமல் சப்பாத்தியை முழுங்குவான். அப்புறம் இரசம் , அண்டா முழுக்க குடிப்பான். சரியான அண்ட புழுகன் உன் அண்ணன் என்றாள் அவன் முகத்தைப் பார்த்து....
சரண் வாடா அவ கடக்கற நான் உனக்கு சமைத்துத்தருகிறேன். இங்க வந்து ஒரு மாசம் நான் தான் சமைத்தேன் என்று இருவரும் சமைக்கச் சென்றனர்.
சரண்யாவிற்கு தலையே சுற்றுவது போலிருந்தது, தன் அண்ணன் சமைக்கிறான் மனைவி அடியை தாங்குகிறான். சுத்தமாக கோபம் வரவில்லை. வீட்டுவேளை செய்கிறான். தங்கள் வீட்டில் கொஞ்சம் செய்வான் அதுவும் அபூர்வம் அம்மாவின் உடல்நிலைப்பொறுத்து ......
மனதில் அரித்துக்கொண்டு இருந்தததை கேட்டே விட்டாள். எப்ப இருந்து அண்ணா இவ்வளவு மாற்றம் என்றவளிடம் சாரி சரண் என்றான். எதுக்கு அண்ணா. சும்மா தான் என்றான்.
சரி , நான் கேட்டதிற்கு இன்னும் பதில் வரல என்றாள். அதுவ கல்யாணம் ஆன மறுநாள் என்றான். மறுநாள்ல என்ன என்றாள். ம்ம் வேனிக்கு ஓவர் பிளிடிங் போய் பெட்ல பிணம் போல மாறியிருந்த பாரு, சத்தியமா அந்த நாள என் வாழ்க்கையில மறக்க மாட்டேன். உன்னோட வலியும் அம்மா வலியும் தெரியும் ஆன அவ்வளவா கண்டுக்கொண்டத்தில்லையா... ஆன அப்ப தான் தெரியும் அவளுக்கு ரொம்ப போகும்னு தென் its not easy to be a womenனு அப்ப தான் புரிஞ்சது. On that time i just felt sorry about you and Mom. என்னால உங்க வலிய புரிஞ்சிக்க முடியலனு. Then அதுல இருந்து அவள அவ்வளவா எதுவும் செய்ய விட மாட்டேன் என்றான்.
சரண் தன் அண்ணனை அப்படியே அணைத்துக்கொண்டாள். அண்ணா, இப்ப தெரியுதா இளா ரொம்ப பிரிஸியஸ் அண்ணா. என் அண்ணாவையே மாற்றிவிட்டாள்.
அமுதன் சிரித்துக்கொண்டான். அவனுக்கு எங்கே தெரிய போகிறது அந்த பிரிஸியஸ் தான் வருங்காலத்தில் தன்னை வட்டியும் முதலுமாய் வாட்டி எடுக்கப்போகிறாள் என்று.
சரி வா செய்யலாம் இல்லனா பசிக்குதுனு உன்ன கூட விட்டு வைக்கமாட்டாள் அந்த ராட்சஷி.
ஆசைகள் தீர மட்டும் கொள்ளும் அன்பினில் அழகுயில்லை. வெந்துப்போக்கின்ற வேளையிலும் அன்புத் தீ என்றும் அணைவத்தில்லை.......
~யுகபாரதி❤
அங்கே அமுதனும் சரண்யாவும் சமைத்துக்கொண்டிருக்க இளா தான் இங்கு யோசித்துக்கொண்டிருந்தாள். ஆமா எதுக்கு அந்த மாடு அழுதிருக்கிறான். ஒருவேளை அக்காவ மறக்க முடியவில்லையோ .... இருக்கும் என்று நினைக்கும் போதே இதயத்தில் சுர் என்றிருந்தது இவளுக்கு.
இளா, இங்க வாடி சாப்பாடு ரெடி என்று சரண் கத்த, சமன் நிலைக்கு வந்தவள். இருடி என்றவள் முகம் கழுவிக்கொண்டுவந்தாள்.
வெளியே வரும் வரை தான் மற்ற நினைவு, வரும் போதே சாப்பிட்டின் வாசனையை நுகர்ந்தவள் ம்ம்ம்ம் இந்த மாடு மூணு மாசமா நமக்கு நான்வெஜ்யை செய்துப் போடவில்லை. இளா இயல்பிலே நல்ல சாப்பாட்டு இராமி அதுவும் அசைவம் என்றாள் தன் உயிரைக்கூடத் தருவாள்.
அப்பா இப்பவாது செய்தானே என்று எண்ணியவள், இளா வந்து உக்காரு. அண்ணாவே நமக்கு பரிமாறுவாரு என்றவள். அமுதன் இளாவின் பசிக்கு தடைப்போடுபவன் போல, சரண் பை மினிட்ஸ் வந்துடறேன். நீங்கவென சாப்பிட்டு கொண்டு இருங்க என்றான்.
சரண், சரி அண்ணா என்றவள். இளா இருடி அவனும் வந்தடட்டும் என்றாள். பாருடா பாசத்த என்றாள் சரண். பாசம் எல்லாம் இல்ல அவனுக்கு எப்பவும் தனிய சாப்பிட பிடிக்காது கூட யாராவது இருக்கனும் என்றவள், சரண்யாவை பார்த்துப் புன்னகைத்தாள். பரவாலை அண்ணாவ நல்லாவே புரிஞ்சு வச்சியிருக்கா என்று நினைத்தக்கொண்டவள் கடவுளே சீக்கிரம் இரண்டு பேத்தையும் சேர்த்துவிடுப்பா என்று வேண்டிக்கொண்டாள்.
அதற்கு அமுதன் வந்துவிட்டான். வந்துடேன் சாரி என்றான். உன் சாரி எல்லாம் குப்பையில போடு இப்ப சாப்பாட போடுடா பசிக்குது என்றாள் இளா. அவனும் சாப்பாட்டு இராமியே பொறுங்கள் என்றவன், மூவருக்கும் சாதமும் மீன் குழம்பும் சிக்கன் கிரேவியும் வைத்தான்.
இளாவிற்கு இத்தனை நாட்களாக இருந்த மனவேதனையெல்லாம் காற்றில் பறப்பதாய் இருந்தது.ம்ம்ம்ம் டிவைன் என்று கண்ணை மூடிக்கொண்டு விரலை சப்பிக்கொண்டிருந்தாள்.
சரண்யாவிற்கே ஆச்சிரியம் தன் அண்ணன் இவ்வளவு அழகாய் ருசியாய் சமைப்பான் என்று.
இளாவை பார்த்துக்கொண்டிருந்தவன். சரண்யா, அண்ணா அண்ணா என்று கத்திக் கொண்டிருந்தாள். இளா சிறிதாக கண் திறந்து சுற்றும் முற்றும் நோக்கியவள் ஐய்ஐய்யோ என்றானது. இவன் எதுக்கு இந்த பார்வை பாக்குறான். டேய் அவ கத்திட்டு இருக்காபாரு என்றாள்.
நினைவு வந்தவனாக உன் பொண்டாட்டிய நல்லா சைட் அடிச்சீட்டியா என்றாள். இல்ல இல்ல சரண் வேற யோசனையில் இருந்தேன் என்று பொய் கூறினான்.
அண்ணா , எத்தனை நாளாய் இந்த திறமையை ஒழித்துக்கொண்டிருந்தாய், ரியலி செம்ம டேஸ்ட் அண்ணா என்று புகழ்ந்து தள்ளினாள் தன் தமையனை.
அமுதன் எதுவும் பேசவில்லை சிரித்து வைத்தான்.
பிறகு ஏழு மணிப்போல அமுதன் சென்று சரண்யாவை அவளின் கல்லூரியில் விட்டு விட்டு வந்தான்.
இரவு இருவருக்குள்ளும் பெரிய போராட்டம். அமுதனுக்கு தன் உணர்வுகளில் இந்த ஒரு நாளில் இவ்வளவு மாற்றங்கள் ஏன்??? என்ற குழப்பம்.
இளாவிற்கோ எதற்கு தன்னை அந்த பார்வை பார்த்தான் பின்பு எதுக்கு அப்படி சொன்னான் என்ற குழப்பம். இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தவர்கள் தூங்கவே வெகு நேரமானது..
காலையில் குளித்து முடித்து ரெடியாகி வந்தவன், வேனி எழுந்திரிடி காலேஜ் போலாம்னு ஐடியா இருக்கா இல்லையா என்று அவளின் அருகில் கத்திக்கொண்டிருந்தான்.
இளாவிடமிருந்து ஒரு அசைவுமில்லை. ஏய் என்று அவளின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தவனுக்கு ஓ காட் என்ன இப்படி சூடா இருக்கு உடம்பு என்று எண்ணியவன்.
கனநேரத்தில் அவளை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
அங்கே அவளை பரிசோதித்தவர்கள், ஒன்னுமில்ல சார் பிவர் மட்டும் தான் டிரிப்ஸ் மட்டும் இப்ப ஏத்திகலாம்.
மயக்க நிலையில் இருந்து கொஞ்சம் சமன் நிலைக்கு வந்தவள். தான் இருப்பது மருத்துவமனை என்றதும் அமுதனைப் பார்த்தாள்.
ஒன்னுமில்ல காலையில அன்கான்ஸியஸ் அ இருந்த , பயப்படுகிறமாறி ஒன்னுமில்ல பீவர் மட்டும் தான். கொஞ்ச நேரம் அமைதியா இரு இந்த டிரிப்ஸ் ஏறி முடிக்கற வர என்றவன். லீவ் மட்டும் சொல்லிட்டு வரேன் என்றான்.
வெளியே சென்றவன் ஆதிக்கு கால் பண்ணி, டேய் சொல்லுடா என்ன இன்னும் ஆளயே காணோம் என்றவனிடம்,
டேய் மேம்க்கு போன் பண்ணேன் கால் போகல இளாக்கு உடம்பு சரியில்ல டா ஹாஸ்பிட்டல இருக்கோம். லீவ் சொல்லிடு என்றான். சரி நான் பாத்துக்கிறேன் அந்த பொண்ண பத்திரமா பாத்துக்கோடா கண்டத நினைக்காம சரியா என்றான் ஆதி.
ம்ம்ம்ம் என்ற பதில் மட்டுமே வந்தது..
பேசி முடித்து உள்ளே வந்தவன். டாக்டர் உங்க இரண்டு பேரையும் உள்ளே வர சொன்னாங்க என்றார். உள்ள சென்றவர்கள். வாங்க மிஸ்டர் அன் மிஸ்ஸஸ் அமுதவனான்.
அம்மா உனக்கு ஒன்னுமில்ல ஜஸ்ட் பீவர் தான். ஆமா நீ லாஸ்டா பிரிடியட்ஸ் எப்ப ஆன என்றார். ஆமா இத ஏன் இப்ப கேக்குறார் என்று எண்ணி பதில் சொல்ல வரும் முன்னரே ஏப்ரல் 18 டாக்டர் என்ற பதில் வந்தது அமுதனிடம். பின்பு எப்படி இருக்கும் என்றவர் பதிலாக over bleeding போகும் டாக்டர் இந்த முறையும் அமுதனிடமிருந்து தான்.
டாக்டருக்குகே ஆச்சிரியமாய் இருந்தது, பின்பு சிரித்துக்கொண்டே மிஸ்டர் அமுதன் அவங்கிட்ட சொல்லறத விட உங்கிட்ட சொல்லறது தான் கரேக்ட். அவங்களுக்கு ரத்த சோகையிருக்கிறது. அதான் ரொம்ப சோர்வாய் இருக்காங்க. கொஞ்சம் சத்தான பழங்களா வாங்கித் தாங்க. நல்ல பாத்துக்கோங்க என்றார்
பின்பு அமுதனிடம் இந்த மெடிசன்ஸ் எல்லாம் வாங்கிட்டு வாங்க நான் கொஞ்சம் இவங்க கிட்ட பேசனும் என்றவர். அவன் சென்றவுடன் இளவேனில் உங்களுக்கு அருமையான கணவர் கிடைத்து இருக்கார் அவரை பத்திரமா பாத்துக்கோங்க. உனக்கு எவ்வளவு நாளா ஓவர் பிளிடிங் போகுது என்றார். திட்ட திட்ட ஒரு ஐந்து ஆண்டுகளா டாக்டர். இது அவ்வளவு நல்லதுக்கில்லமா உடம்ப பாத்துக்கோ என்றார் அதற்குள் அமுதன் வந்துவிட நல்ல பாத்துக்கோங்க அமுதன் உங்க மனைவிய ரொம்ப வீக்கா இருக்காங்க என்றார்.
பின்பு வீட்டுக்கு வந்தவர்கள், அமுதன் அவளுக்கு இரச சாதம் கொடுத்தவன் அவள் மாத்திரை முழுங்கிய பின் தூங்கி விட்டாள். இவனும் தன் லேப்டாட்பை எடுத்துக்கொண்டு அவள் அருகே அமர்ந்துக்கொண்டான்.
பின்பு இளா கண் முழித்துப்பார்த்த போது அமுதன் பெட்டில் ஒருகலித்து படுத்திருந்தான். அவன் அருகே சென்றவள் அவன் தூங்கிவிட்டானா என்று பார்த்தவள் , நன்கு உறங்கிக் கொண்டிருந்தான். அவன் விழிக்காதவாறு அவனின் இதழில் தன் இதழால் தொட்டுவிட்டு ஓடிவிட்டாள்.
ஓ காட் இளா செத்த அவன் மட்டும் முழிச்சிருந்தா எவ்வளவு தையிரியம் உனக்கு என்று எண்ணியவள். வெளியில் கதவு தட்டும் ஒலிக்கேட்டு அங்கு சென்று பார்த்தாள், அங்கே வாகினியும் ஆதியும் எலியும் பூனையும் போல சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
தொடரும்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN