அத்தியாயம் - 10.

என் இசை நீயே உன் கவிதை நானே முடிவில்லா முதற் காதல் செய்வோம் வா நீயே❤

வாட் எ சர்ப்ரைஸ் என்று கத்தியவள். ஆதி சார் நீங்க எங்க இங்க என்று கத்தினாள். சரி பஸ்ட் உள்ள வாங்க என்று அவனை அழைத்தாள். உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்தாள்.

உள்ளே வந்து அமர்ந்து வெளியே நின்ற வாகினியைப் பார்த்து சிரித்தான், பாவம் வாகினி அதுவரை வாயிலில் தான் நின்றிருந்தாள்.

எங்க இவ என்று வாயிலைப் பார்த்தவள் உள்ள வாடி நீ என்ன இந்த வீட்டுக்கு புதுசா வந்த கெஸ்டா. உள்ள வாடி எரும என்றவள். சரி உக்காரு இங்க என்றவள். ஆதியை தான் கவனித்தாள். எதன சாப்பிடரீங்களா சார் என்றாள்.

அமுதன் அப்போது தான் எழுந்து வந்தான். டேய் நீ இங்க என்னடா பண்ணிட்டு இருக்க என்றவன். சும்மா இளாக்கு உடம்பு சரியில்லைனு சொன்னல அதான் பாக்க வந்தேன் என்றான்.

இளாவிற்கு இப்போது தான் விளங்கியது. ஆதியிடம் அப்ப சார் உங்களுக்கு எல்லாம் தெரியுமா??? என்றாள்.

அமுதன் ஆதியிடம் போச்சு போ எரும மாடு எல்லாம் உன்னால கெட்டுச்சுடா என்றான். இதுல என்ன, எப்படியிருந்தாலும் ஒரு நாள் தெரியதான போகுது என்றவன். இளாவிடம் இளவேனில் நானும் உன் கணவனும் திட்ட திட்ட எட்டு வருட நண்பர்கள் போதுமா என்றான். உங்க எல்லா விசியமும் எனக்கு தெரியும் என்றான்.

வாகினிக்கும் இளாவிற்கும் தான் ஆஆ என்றானது. சரி ஷாக்க குறைங்க இரண்டு பேரும் என்றான் அமுதன். சரண்யா அம்மா ,பனி, ஏன் உங்க அம்மா அப்பாக்கு கூட இவனத் தெரியும். நீ பாத்திருக்க மாட்ட. உங்க வீட்டுக்கு கூட வந்திருக்கான். நீ ஹாஸ்டல்ல இருந்த அப்ப என்றவன், மேரேஜ் டைம்ல சார் பாரின்ல ஒரு கான்பரஸ் ல இருந்தான் அதான் வர முடியல என்றான் அமுதன்.

சரி வந்தவங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வா , வாகினியும் அவள் பின்னே ஓடுவதை பார்த்து சிரித்தான் ஆதி....

இளா என்னடி ஷாக்கு மேல ஷாக்கா கொடுக்கறாங்க இரண்டு பேரும். ஓ காட் அப்ப நம்ம ஆட்ராசிட்டி எல்லாம் அந்த பிளேடு மண்ட போட்டு கொடுத்து இருக்குமோ அமுதன் சார்ட. இருக்கும்டி என்றாள். ஆமா நீ எதுக்கு வந்த, காலையில ஹாச்.ஓ.டியிடம் அந்த பிளேடு மண்ட வந்து அமுதன் சார் லீவு. அவங்க மனைவிக்கு உடம்பு சரியில்லை மேம் சோ ஹாஸ்பிட்டல் போயிட்டார்னு சொன்னார்.

ஐய்யோ எல்லார் முன்னாடியுமா சொன்னார் என்றாள். இல்ல இல்ல ஸ்டாப் ரூமில் தான். நான் டவ்ட் கேக்க போயிருந்தேன் ஹாச்.ஓ.டியிடம் அப்ப சொன்னார்.

அப்பாடா என்றானது இளாவிற்கு. சரி, இப்ப உடம்பு பரவாலையா என்று நலம் விசாரித்தாள். இளா ஹாஸ்பிட்டல நடந்த அனைத்தும் கூறினாள். வாகினி மனதிற்குள் சிரித்துக்கொண்டாள். ஐய்யோ அமுதன் சார் டோடல் பிளாட்டா என்று எண்ணியவள். சரி போய் காபி கொடு இரண்டுப்பேருக்கும்.நான் இங்கயே இருக்கேன் என்று சமையலறையிலே நின்றுக்கொண்டாள் வாகினி.

காபியை கொடுத்தவள். என்ன இளவேனில் இப்ப உடம்பு பரவாலையா என்றான். பரவாலை சார் என்றவள். எங்க உன் தோழி பயந்து ஒழிஞ்சிக்கிட்டாலா என்றான். யாரும் யாருக்கும் பயந்து ஒழியல சார் என்று வந்தாள் வாகினி. அப்ப இருக்கறத காலி பண்ணிட்டிருந்தியா என்று கேட்டான். ஆமா சார் காலிப்பண்ணிட்டு இருந்தேன் என்னமோ உங்க வீட்டு சாப்பாட்ட காலி பண்ணமாறி சலிச்சிக்கிறீங்க என்றாள் பயமில்லாமல்.

இது எப்ப இருந்து என்றானது அமுதனுக்கு. டேய் கொஞ்ச நேரம் வாய முடுடா ஆதி.வாகினி, நீ டென்ஷன் ஆகாத அவன் அப்படி தான் என்று கூறியவன். சரி உனக்கு உடம்பு பரவாலையா இப்ப என்று அவளை நலம் விசாரித்தான் அமுதன். ஓகே சார் இப்ப என்றாள்.

சிறிது நேரம் பேசிவிட்டு வாகினி கிளம்பிவிட்டாள். அமுதன் தான் ஏன்டா அவகிட்ட வம்பு இழுத்துட்டு இருக்க சும்மா.

அது ஒரு பெரிய கத மச்சி. அவ இங்க வந்து ஜாயினீ பண்ணுவதற்கு முன்னாடியே அவள தெரியும். தட் மீன்ஸ் கிளாஷ் ஆகிடுச்சி. ஒரு நாள் ஹோட்டலுக்குஅப்புவோட நானும் அம்மாவும் போயிருந்தோமா.என்ன பண்ணாத் தெரியுமா??? வாஷ் ரூம் போயிட்டு வரேன். என்ன பேரர்னு நினச்சிட்டு எல்லாம் ஆடர் பண்ணிட்டு நான் அவள பாத்து மெறச்சதும் கண்டமேனிக்கு திட்டிட்டா... அப்புறம் மேனேஜர் வந்து சமாதானம் படுத்தி பெரிய கூத்தாகிப் போச்சு. அப்புறம் ஒரு சாரி கூட கேக்கல மேடம். அப்புறம் வந்து பாத்த நம்ம ஸ்டுடன்ட் அதுவும் பிசிக்கல் கெமிஸ்டரில கொஞ்சம் வீக் அத இது தான் சாக்குனு வச்சி செய்றேன்.

அவ மட்டும் என்னவாம் ஒரு வாத்தியார என்று மரியாதை என்னைக்கும் எனக்கு தர மாட்டிக்கிறா. பட்ட பெயர் வச்சி கூப்பிடுறாடா அவ என்னைய என்றான். அமுதன் என்னடா பேரு சொல்லுடா என்றவனிடம். முடியாது முடியாது நீ கிண்டல் பண்ணுவ என்றான்.இளா சிரித்துக்கொண்டே நான் சொல்லட்டுமா என்றவள், அமுதன் ஆர்வமாய் கேக்கவும் சொல்லு பிளிஸ் என்றான். பிளேடு மண்ட என்றாள். சாரி சார் என்றாள் ஆதியைப் பார்த்து.

அமுதன் விழுந்து விழுந்து சிரித்தான். ரொம்ப சிரிக்காத தம்பி உனக்கும் பட்ட பெயர் இருக்கு என்றவன். என்னடா என்றான் ஆர்வமாய். நான் சொல்லமாட்டேன்பா உன் பொண்டாட்டியே கேட்டுக்கோ என்றவன். இளாவைப் பார்த்து என்னவா போட்டுக்கொடுக்கற மாட்டுனியா என்றான். இளா அவனைப்பார்த்து முறைத்தவள் நான் சொல்லமாட்டேன்பா என்றாள்.

அமுதன் சிரியஸாக சொல்லுரிய இல்லயா என்றான். தலையை ஆட்டியவள். என்ன நினைத்தானோ சொல்லுடி என்றான்.

சொல்லிடு இளா பையன் பிழைத்துப் போகட்டும் என்றான்.

முறுக்குமீசை மாயாண்டி என்று சொல்லி கலகலவென சிரித்தனர் இருவரும்.

அமுதனுக்கு கோபம் வந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை. ஆதி இருப்பதை மறந்து இளாவின் கையைப்பிடித்து நசுக்கியவன், இதே உன் பால்ய கால காதலனாக இருந்தா இப்படி சிரிப்பியா , நான் உனக்கு அவ்வளவு இளக்காறமா போய்டேன்ல என்றான்.

இளாவிற்கு கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வந்தது.

ஆதி, அமுதா என்று கத்தினான்....

டேய் என்னடா பண்ற அந்தப் பொண்ண, பாவம்டா அவ , டேய் விடுடா அவள உடம்புக்கு முடியாதவ டா அவ , அவள விடுடா என்று கத்திக்கொண்டிருந்தான் ஆதி.

வெறிப்பிடித்த மிருகம் போல இளாவைப் பிடித்து நசுக்கியவன், ஆதி சட்டென அமுதனை அடித்தே விட்டான். நீ ரூம் போமா. டேய் வாடா மேல என்றவன் அமுதனை இழுத்துச்சென்று விட்டான்.

டேய் என்னடா உன் பிரச்சனை ஏன்டா இப்படி நடந்துக்குற அந்த பொண்ணுக்கிட்ட அவ உன்ன என்னடா பண்ணா என்றவன்.சீ அமுதா பனிமலர் அப்படி பண்ணா என்பதற்காக நீ அவ தங்கச்சிய இப்படி டிரிட் பண்றது தப்புடா என்றான்.

இல்ல ஆதி நான் ஒரு நாளும் வேனிய அப்படி பழிவாங்கனும்னு நினைச்சது இல்லை.இன்பேக்ட் சிறுவயதில் எனக்கு பனியைவிட இளாவைத் தான் ரொம்ப பிடிக்கும் அப்புறம் நிறைய பிரச்சினை, இரண்டு பேருக்குள்ளும் நிறைய மாறுதல்கள். சரி அதவிடு இப்ப அது பிரச்சனையில்ல என்று யோசித்தான் அமுதன்.

அப்ப என்ன பிரச்சனை என நீயே சொல்லு, நீ சொல்லுறத பாத்தா உனக்கு இதுக்கான பதில் உன்கிட்டயே இருக்கு தானா என்றான்.

ம்ம்ம்ம்... என்றவன். தெரியல ஆதி. ரொம்ப கோபம் வருது அவ யார்கூடயாவது சிரிச்சு பேசுனா. என்ன உதாசினம் படுத்தறப்ப ரொம்ப கோபம் வருது. உனக்கே தெரியும்ல நான் இப்ப எவ்வளவு மாறியிருக்கிறேன் என்று என்றான்.

அவனும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறான் தன் நண்பனின் மாற்றத்தையும்....ம்ம்ம்ம்... I agree...

அவ கூட ஒவ்வொரு நிமிஷமும் எதன ஒரு சூழல்ல நெருங்கும் போது, அலாரம் அடிச்சமாறி அவளோட வயது, முன்னால் காதல், பனிமலர் என எல்லாம் வந்துவிடுறாங்க. நானும் உடனே அவள காயம் பண்ணிடறேன் ஆதி.... அவளுக்கும் அதுக்கான பதில் தெரியல . எனக்கு தெரிஞ்சும் சொல்ல முடியல என்றவன்.

உனக்கு தெரியுமல அவ ஒன்பதாவது படிக்கும் போது அவ பேக்கில் இருக்கற லவ் லேட்டர் யாருக்கோ அவ எழுதியிருக்கிறத பாத்து பனி என்கிட்ட சொல்லி, மாமா அத்தை அம்மா எல்லாத்துக்கும் தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆகி அதுல இருந்து அவ வேண்டா பிள்ளை தான், அவ ஆசைப்பட்டது எதுவும் அவளுக்கு கிடைக்காது. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். ஆனா அழுத்தகாரி இதுநாள் வர யாருனு அவ சொன்னது இல்லடா.

அதுக்கு அப்புறம் நிறைய மாற்றங்கள். ரொம்ப அமைதியாய் யாரடமும் அதிகமாய் அவள் பேசக்கூடமாட்டாள் ஆதி எனக்கு புரியுது எல்லா பிரச்சனையும். பட் இதுக்காக நான் என்னப் பண்ணனும் தெரியல என்று கண் கலங்கி விட்டான் அமுதன்.

டேய் என்றவன் நான் ஒண்ணு சொல்லட்டா.நீ இவ்வளவு சொல்லுறல அந்த பொண்ணு ஒரு நாளாவது உன்ன பனிமலர் வச்சு எதனா பேசியிருக்கா.

இல்ல டா. அப்புறம் நீ மட்டும் ஏன்டா. இது தான்டா பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் உள்ள வித்தியாசம். They want to be our future and present. But we people only always hurt them by talking about their past. சிம்பிள் நம்மள பொருத்தவர நாம எப்படிவேன இருக்கலாம் ஆன நம்ம மனைவி frankly they should be virgin by both physically and mentally.Please change your mindset amudha.

அமுதன் அப்படி இல்ல ஆதி. பட் தெரியவில்லை டா. இப்ப எல்லாம் நான் என்ன நினைக்கிறேனு எனக்கே தெரியல.ரொம்ப தனிமையான பீல் இருக்கு. எங்க இளாவும் போயிடுவாளோனு பயமா இருக்கு....

அப்படி வா வழிக்கு இத சொல்ல சார்க்கு இவ்வளவு நேரம். சுத்து சுத்துனு சுத்தற ஏன் டா . உன்னால ஒன்னா ஓத்துக்க முடியல. ஒன்னு சொல்லட்டா...

ம்ம்ம்ம் என்றான் அமுதன்.

நீ அவள விரும்ப ஆரம்பித்துவிட்டாய். இது தான் உன் மனசுல இருக்கற எல்லா வினாக்களுக்கும் விடை.....

என்னடா பட்டுனு சொல்லிட்ட என்றான் அமுதன். பின்ன நான் உனக்கு இதுல மூத்தவன் டா. இல்லனா அப்பு எப்படி வந்திருப்பான் என்றான் ஆதி.

நீ நல்லா யோசி பதில் தானா வரும் என்றவன். சரி போய் அவட்ட சாரி கேளு பாவம்டா அந்த பொண்ணு. முதல அவ மனசுல நீ இருக்கியானு பாரு மத்தது எல்லாம் தன்னால நடக்கும் என்றான். பாத்துக்கோ நான் கிளம்புறேன். அம்மா இனியா வீட்டுக்கு போயிருக்காங்க. அப்பு ஸ்குலில் இருந்து வந்திருப்பான். சாந்தி அக்கா தான் இருப்பாங்க. நான் போன தான் அவங்க வீட்டுக்கு போக முடியும்.

சரி பாய் டா என்று நண்பனை கட்டியணைத்தவன். அவன் செல்வதையே பார்த்திருந்தான். எவ்வளவு கஷ்ட பட்டு விட்டான். வாழ்க்கையில் பெரிய அடி அனைத்தும் அவளால். ஆனால் சிறுதும் சலனமில்லாமல் அவ அப்படி பண்ணிடனு நான் எல்லாத்தையும் தப்பு சொல்லமாட்டேன்டா அமுதா. நல்ல பொண்ணுங்களும் இந்த உலகத்துல இருக்கத்தான் செய்யுறாங்க. ஏன் அவளும் நல்லவ தான் நான் தான் அவ உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று தன் மீது பலி போட்டு கொள்வான்.

ஆதி நிச்சியமா உனக்கு ஏத்த பொண்ணு கண்டிப்ப இந்த உலகத்துல இருப்பாட. உண்மையில் அவ தான் இந்த உலகத்தின் ஆக சிறந்த இரசியானவள்டா என்று கூறிக்கொண்டான் மனதில்.

அமுதனுக்கு சற்று நிம்மதியாய் இருந்தது. எவ்வளவு நேரம் இருந்திருப்பானோ இரவு நிலா உச்சிக்கு சென்றதும் தான் வீட்டுக்கு போனான். ஆம் எனக்கு இளாவை பிடித்து இருக்கிறது என்று ஒத்துக்கொண்டவன். எப்படி இந்த மூணு மாசத்துல மனசு மாறும் என்று வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் எறியது.

வந்துப் பார்த்தவன் இளாவிற்கு , அழுது அழுது காய்ச்சல் இன்னும் அதிகமாய் தான் இருந்தது நடுங்கிக்கொண்டிருந்தாள். என்ன செய்வது என்றே அமுதனுக்குத் தெரியவில்லை.

பேனை ஆப் செய்து இருக்கிற போர்வையெல்லாம் போத்தியவன் அவள் அருகிலே அமர்ந்துக்கொண்டான்.

நடுக்கத்தில் எப்படிடா என்ன அப்படி சொல்லுவ என்று கூறியது அவனுக்கு கேட்டது. சாரி வேனி இனி இப்படி சின்னப்பிள்ள மாறி நடந்துக்க மாட்டேன் என்றான்.

அவளின் நடுக்கம் மட்டும் குறைந்தப் பாடில்லை. ஆபத்திற்கு பாவமில்லை என்று எண்ணியவன். அவளின் அருகே சென்று அவளை இறுக்க அணைத்துக்கொண்டான்.

அவளின் சோகங்கள் அனைத்தும் தனதாக்கிக் கொண்டான் இந்த கள்வன்.

தொடரும்......

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.