வசந்தமென வந்தாய் 1

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட......

கந்த சஷ்டி கவசத்தை மனமுருக பாடிக்கொண்டிருந்த தேன்நிலாவின் அழகிலும் குரலிலும் மெய் மறந்து நின்றாள் மது.
நீல வண்ண சுடிதார். மெல்லிய அணிகலன்கள். இடையை தொட்ட கார்குழல். யாரையும் திரும்பி பார்க்க செய்யும் புன்னகை நிரம்பிய முகம். சிலநேரம் பையனாக பிறந்திருக்கலாம் என்று பெருமூச்சு கூட விட்டிருக்கிறாள்.
இன்றய அவசரத்தை உணர்ந்து செந்தில் குமரனுக்கு பாதிkயிலேயே டாடா காட்டிவிட்டு திரும்பிய நிலாவிற்கு மதுவின் நிலைத்த தோற்றம் சிரிப்பை மூட்டியது.
"ஏய் என்ன டி இப்படி பே'ன்னு பார்த்துட்டு இருக்க. ஆபீஸ்கு லேட் ஆகிடுச்சு. என்னை இன்டெர்வியூகு ட்ராப் பண்ணிட்டு நீ உன் ஆபீஸ் போகணும்"
"உன் அழகுல கொஞ்சம் மயங்கிடேன்டி.
"போதுமே, காலைலேயே ஆரம்பிச்சுட்டாயா. ஆள விடு தாயே. இந்த இன்டெர்வியூல மட்டும் செலக்ட் ஆகலான அப்பா ஊருக்கு கூட்டிட்டு போய்டுவாங்க.
சீக்கிரமா ரெடி ஆகிட்டு வா".
" சரி சரி பொலம்பாத. ஒரு பைவ் மினிட்ஸ்ல வரேன்".
காலை நேரத்தில் சென்னையில் ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்கு செல்வது கடல் அலையில் நீந்துவது போல தான். எப்டியோ நிலாவை சரியான நேரத்தில் இன்டெர்வியூ நடக்கும் இடத்தில் இறக்கி விட்டுவிட்டு தன் ஆபீஸ் சென்றாள் மது.
அலுவலகத்தின் உள்ளே நுழைந்த நிலாவிற்கு அதன் பிரம்மான்டத்தை பார்த்து இங்கு வேலை கிடைக்குமா என்ற பயம் வந்தது.உள்ளே சென்றாள்.அங்கு நிறைய பேர் வந்திருந்தனர்.அங்கு காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.தொண்டை லேசாக வறண்டு இருப்பது போல் இருந்ததால் தண்ணீர் குடிக்க நினைத்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.தண்ணீர் எங்கும் இல்லை.சரி என்று ரிசப்ஷன் பெண்ணிடம் கேட்கலாம் என்று நினைத்து அந்த பெண்ணிடம் சென்று,
"மேடம் கொஞ்சம் தண்ணி வேணும். இங்க தண்ணி எங்க இருக்கு"என்று கேட்டாள்.
"ஓ, ரியலி சாரி மேடம். இங்க ஆரோ வாட்டர் சிஸ்டம் கொஞ்சம் ரிப்பேர் ஆகிட்டு. வாட்டர் கேன் கொண்டு வரவங்க இன்னும் வரல மேடம்"
"இட்ஸ் ஓகே மேடம்"
என்னதான் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு வந்து விட்டாலும் இப்போதான் தான் அதிகம் தாகமாக இருப்பது போல் இருந்தது.அப்போது தன் முன்னே ஒரு தண்ணீர் பாட்டில் நீட்ட பட்டது.
நிலா நிமிர்ந்து பார்த்தாள். ஒரு இளைஞன் தான் அதை கொடுத்து.
"இந்தாங்க மேடம் இதை குடிங்க"
நிலா அவனை பார்த்து நான் உன்னை கேட்டேனா என்பது போல் பார்த்து வைக்க,
அவன் சிரித்துக் கொண்டே,
"நீங்க என்னை கேக்கறது புரியுது மேடம். நீங்க ரிசப்ஷன்ல பேசுனத நானும் கேட்டேன்.அதனால் தான் கொண்டு வந்தேன்"
"இல்ல சார் வேண்டாம்"என்று மறுத்து தலையசைக்க,
"என்ன மேடம் தண்ணி குடிக்க கூட இவ்ளோ யோசிக்கறீங்க. நானும் இங்க தான் ஒர்க் பண்றேன்.இதோ இதுதான் என்னோட ஐடி கார்டு" என்று தன் அடையாள அட்டையை காட்டினான்.
"அச்சோ அப்டிலாம் இல்லை சார்.கொடுங்க"என்று அவனிடம் வாங்கி தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் அவனிடம் பாட்டிலை கொடுத்தாள்.
"ரொம்ப தேங்க்ஸ் சார்"
"இட்ஸ் ஓகே மேடம்.இன்டெர்வியூ நல்லா பண்ணுங்க.ஆல் த பெஸ்ட்" என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டான்..
நிலாவை உள்ளே அழைத்தார்கள். அங்கே சென்று நிலாவும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நன்றாக பதில் அளித்தாள். அவர்களும் நிலாவின் பதிலில் திருப்தி அடைந்து செலக்ட் செய்தனர். பின்னர் உள்ளே ஒருவரை அழைத்து,
"நிலா மீட் மிஸ்டர் வசந்தபாலன். இவர்தான் உன்னோட டீம் லீடர். நீங்க இனி இவர் கிட்ட எந்த சந்தேகம்னாலும் கேட்டுக்குங்க".என்று கூறி தண்ணீர் குடுத்த இளைஞனை அறிமுகம் செய்தார்கள்".
பின் அவனிடம்"பாலா இது மிஸ் தேன்நிலா. நம்ம நியூ ஜாய்னர்"என்று அறிமுகம் செய்தார்.பின் இருவரும் நன்றி சொல்லிவிட்டு வெளியில் வந்தனர்.
"ஹேய் அப்ப உங்க பேர் ஹனிமூனா.சூப்பர் நேம்"என்று சிரித்து கொண்டே கூற பின்னர் நிலா முறைப்பதை பார்த்து,
"நான் சும்மா இங்கிலிஷ்ல சொல்லி பார்த்தேன். ஹிஹி..."என்று அசடு வழிய சிரிப்பதை பார்த்து தானும் சிரித்து விட்டாள்.
"ஓகே லெட் மீ ய பிரண்ட்ஸ். நீங்க என்னை பாலா னு கூப்பிடலாம்.இல்லை பால்கோவானு கூட கூப்பிடுலாம்"
நிலாவும் சிரித்து கொண்டே"எனக்கு பால்கோவா பிடிக்காது.அதனால பாலாண்ணே கூப்பிடறேன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN