வசந்தம் -4

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலாவின் பிளாட்டிற்கு சென்றாள் நிலா. இன்னமும் பேப்பர் எடுக்கப் படாமலே இருந்தது. அதை கையில் எடுத்துக் கொண்டாள்.
நிலா அழைப்பு மணியை அழுத்த சிறிது நேரத்திற்கு பிறகு பாலா வந்து கதவை திறந்தான்.
பாலாவின் தோற்றம் நிலாவிற்கு திகைப்பை ஏற்படுத்தியது. "என்னாச்சு இவனுக்கு ரொம்ப டல்லா இருக்கான். இப்படி இருந்து நான் பார்த்ததில்லையே. காய்ச்சல் வேற இருக்கும் போல இருக்கு. கண்ணெல்லாம் செவந்து போய் கெடக்கு. இவனை இப்டியே விடக்கூடாது. சார் எதையோ மறைக்குறார்.இன்னைக்கு கண்டு பிடிச்சே ஆகணும்"என்று மனத்திற்குள் கூறிக்கொண்டாள்.
அதே சமயம் அந்த நேரத்தில் நிலாவை எதிர்பார்க்காததால் பாலாவிற்கு திகைப்பாக இருந்தது. "பாலா வசமா மாட்டிக்கிட்ட. இவள எப்படியாச்சும் இப்படியே கிளப்பியாகனும்." என்று நினைத்து தன் திகைப்பை சமாளித்தவாரே,
"ஹேய் நிலா என்ன திடீர்னு என் பிளாட் -கு சர்பிரைஸ் விசிட் குடுத்துருக்க"
பாலாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் கையிலிருந்த நியூஸ் பேப்பரை அவனிடம் நீட்ட
பாலா அதை வாங்கிக்கொண்டு "ஓ இதுக்கு தான் வந்தியா. இன்னைக்கு கொஞ்சம் தூங்கிட்டேன் அதான் பேப்பர் எடுக்கல.இதுக்கா இங்க வந்த. ஒரு போன் பண்ணிருக்கலாமே"
"முதலில் உங்க போனை பாத்துட்டு பேசுங்க சார்"
'என்ன சாரா!ரொம்ப கோவத்துல இருக்க போலயே. எப்படி சமாளிக்க போறேனோ தெரிலயே' என்று புலம்பியவாரே போனை எடுத்து வர சென்றான்.
நிலாவிற்கு வந்த கோவத்திற்கு அளவே இல்லை. 'இவன் என்னதான் நினைச்சுட்டு இருக்கான். யாரோ மூணாம் மனுசங்க கிட்ட பேசற மாதிரி வெளியவே நிக்கவெச்சு பேசுறான். ஒரு பேச்சுக்கு கூட உள்ள வா நிலானு ஒரு வார்த்தை கூப்பிடல. உன்னைய எப்படி கூப்பிட வைக்கணும்னு எனக்கு தெரியும்' என்று நிலா பொருமிக்கொண்டிருக்கும் போது பாலா போனை எடுத்துக்கொண்டு வந்தான்.
"சாரி நிலா.மொபைல் சைலன்ட்ல இருந்துருக்கு அதான் பாக்கல"
"சாரி உன் போனை கொடு" என்று வாங்கினாள். பின்னர் யாருக்கோ போன் செய்தாள். பின்னர் போனை ஸ்பீக்கரில்
போட்டாள்.
"ஆன்ட்டி நான் நிலா பேசறேன் "
"நிலா கண்ணு எப்படிம்மா இருக்க? "
அந்த குரலை கேட்டதும் தான் அவனுடைய அம்மாவிற்கு போன் செய்திருக்கிறாள் என்று தெரிந்தது. "அச்சோ அம்மாக்கு இப்ப எதுக்கு போன் பண்ணி பேசறானு தெரிலயே"என்று மனதிற்குள் புலம்பினான்.
"நான் நல்லாருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க. உங்க உடம்பு இப்ப பரவாலையா"
"எனக்கு என்ன தங்கம் நான் நல்லாருக்கேன்.நீ ஊருக்கு போனியா? அப்பா அம்மா தங்கச்சி எல்லாரும் எப்படி இருக்காங்க? "
"ரொம்ப நல்லார்க்காங்க ஆன்ட்டி. உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்"
"கேளுடா கண்ணா "
"ஏன் ஆன்ட்டி நம்ம வீடு யாராவது தெரிஞ்சவங்க வந்தா நாம்ம வெளிய நிக்க வெச்சு தான் பேசணுமா ஆன்ட்டி " என்ற நிலா கேட்டதும் தான் அவளை உள்ளே அழைக்காததிற்கு கோபமாக இருப்பது புரிந்தது.
"அதெப்படிமா.அப்படி பண்றது நல்ல பழக்கம் இல்லையேடாமா. நீ ஏன்மா திடீர்னு இப்படி கேக்கற "
"அது வந்து ஆன்ட்டி..."என்று துவங்கும் போதே பாலா போனை பறித்துக் கொண்டான்.பின்னர் தன் அம்மாவிடம்,
"அம்மா அவ சும்மா வம்பிழுத்துட்டு இருக்கம்மா. சரிம்மா நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.நான் அப்பறம் பண்றேன்"என்று கூறி போனை வைத்து விட்டான்.
"ஹேய் சாரி நிலா. உள்ள வா"
"நான் வரல"என்று அடம்பிடித்தாள்
"கொஞ்சம் உடம்பு சரியில்ல நிலா.அதான் நான் பாட்டுக்கு வெளிய நிக்க வச்சு பேசிட்டேன். நீ உள்ள வா " என்று நிலாவின் கைபிடித்து அழைத்து சென்றான்.
அப்பொழுது பாலாவினுடைய கை சூட்டில் நிலா பதறி விட்டாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN