வசந்தம் -7

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

"ஒருவேள நான் அப்படி பண்ணா நீ என்ன பண்ணுவ நிலா "உள்ளே ஒரு எதிர்பார்ப்போடு.... வெளியே சிரித்துக்கொண்டே கேட்டான்.
உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் வெளியே பொய்யாக யோசிப்பது போல் நடித்து "ஒருவேளை நீ அந்த மாதிரி கேட்டா நான் உடனே எங்க அப்பா கிட்ட கூட்டிட்டு போய் அப்பா இவன் உங்க கிட்ட ஏதோ சொல்லணுமாம்..... அப்டினு சொல்லிட்டு நீயாச்சு எங்க அப்பவாச்சுனு நான் கம்முனு இருந்துருவேன்.... என்ன போலாமா எங்க அப்பாகிட்ட????
ஒரு நிமிடம் வீர ராகவன் அதாங்க நிலாவோட அப்பா.அவர் அய்யனார் மீசை முகத்தோடு கையில் வீச்சரிவாளோடு பாலாவின் மனக்கண்ணில் தோன்றி மறைய,
"அம்மா நிலாதேவி உனக்கேன் என்மேல் இத்தன காண்டு...என்னய எதுக்கு உங்க அப்பகூட கோர்த்து விடற..... "
"அது அந்த பயம் இருக்கட்டும்..."என்றாள் சிரித்துக்கொண்டே.
"சரி அந்த பொண்ணு பேர் சொல்லு பாலா..நான் வேணுனா அந்த பொண்ணுகிட்ட போய் பாலா நல்லவன் வல்லவன்னு பிட்டு போட்டு வைக்கறேன்."
"காதலுக்கு யார் சிபாரிசும் இருக்க கூடாது...."என்று வசனம் பேசினான்.
"ஆமா நீ இப்டியே டயலாக் பேசிட்டு இருக்க வேண்டியதுதான்...அப்புறம் அந்த பொண்ணு யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு உனக்கு டாடா சொல்லிட்டு போயிரும் "
சட்டென்று சீரியஸ் ஆனான் பாலா. "அப்படி ஏதாச்சும் ஆனாலும் நான் அந்த பொண்ண எந்த விதத்துலயும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன் நிலா. அதே சமயம் வேற எந்த பொண்ணுக்கும் என் லைப்ல இடம் இல்லை.."
"உனக்கு நோ சொல்ல எந்த பொண்ணும் விரும்பமாட்டா. நீயும் லேட் பண்ணாம ப்ரொபோஸ் பண்ணிடு பாலா." என்று ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
பாலாவின் பிளாட்டை விட்டு வெளியே வந்த நிலாவிற்கு பாலாவை மறுக்க மற்ற பெண்களால் மட்டுமல்ல தன்னாலும் முடியாது என்றே தோன்றியது. இந்த எண்ணம் தனக்கு ஏன் தோன்றியது என்பதை நிலா ஆராயவே இல்லை......
' நிலா அவளுடைய ஊருக்கு சென்றிருக்கிறாள். பாலா நிலாவிடம் பேசி சம்மதம் வாங்க முடியாது என்று நிலாவின் தந்தையை பார்க்க போகிறான். அவர் வீட்டு போர்டிகோவில் உள்ள நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்கிறார்....
பாலா அவரின் அருகில் சென்று வணக்கும் சொல்லிவிட்டு தன்னை அறிமுகம் செய்துகொள்கிறான். பிறகு அவரிடம் "அங்கிள் நான் உங்க பொண்ண விரும்பறேன். உங்க பொண்ண கல்யாணம் செஞ்சுக்க ஆசை படறேன் "என்று சொல்கிறான்.
"அம்மாடி நிலாக்குட்டி இங்க வாடா " அப்டினு நிலாவை கூப்பிடறார்.நிலாவும் வந்து பாலாவை பார்த்து என்ன பாலா திடீர்னு இங்க வந்துருக்க அப்டினு கேக்கறா..
அதுக்கு அவங்க அப்பா " சார் உன்ன காதலிக்கறாராம். உன்ன கல்யாணம் செஞ்சுக்க ஆசை படறார்" என்று சொல்ல
நிலாவின் கையில் திடீர் என்று வீச்சரிவாள் தோன்றி ஆவேசமாக பாலாவை பார்த்து "என்னோட நட்புக்கு துரோகம் செஞ்சுட்டாயே என்று வெட்ட வருகிறாள்........
சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான் பாலா...அடிப்பாவி ராட்சசி கனவுல கூட லவ்வ சொன்னா கொலை பண்ண வர்றாளே.... ஆனாலும் என் தேனு செல்லம் கோவத்துலயும் அழகுதான்... சரி அடுத்த கனவுலயாச்சும் கொஞ்சம் ரொமான்ஸ் செய்யலாம்.... என்று தலையணையை கட்டிப்பிடித்து தூங்க ஆரம்பித்தான்................

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN