தனது அறைக்கு வந்த நிலாவிற்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை...
அந்த வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வந்த மதுவிற்கு நிலாவின் அழுது வீங்கிய முகம் கவலை அளித்தது... நிலாவின் அருகில் சென்று அவளுடைய தலையை இதமாக கோதியவாறு பேச ஆரம்பித்தாள்....
"நிலா அழுதது போதும்... எதுக்கு இப்படி அழுகிற... உனக்கும் பாலாவை பிடிக்கும்னு எனக்கு தெரியும்..... "
விலுக்கென நிமிர்ந்தவள் "அப்போ பாலா என்னை விரும்பறதும் உனக்கு முன்னாடியே தெரியுமா? "
மது ஆம் என்பது போல் தலையசைக்க,
"நீ ஏன் மது முன்னாடியே சொல்லல "
"பாலா தான் சொல்லல வேண்டாம்னு சொல்லிட்டாரு நிலா.. இது உங்க பர்சனல்.. அதுல நான் தலையிட கூடாது..... உனக்கே ஒரு நாள் தெரிய வரும்போது நீயே பேஸ் பண்ணிக்குவன்னு விட்டுட்டேன்.. "
" அது மட்டும் இல்லை... அப்ப நான் சொல்லிருந்தால் வேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு பேக் பண்ணிட்டு ஊருக்கு போயிருப்ப... "
"இப்ப மட்டும் போக மாட்டேன்னு என்ன நிச்சயம் "
"அதான்டி எப்பிடி சமாளிக்கறதுனு யோசிச்சிட்டு இருக்கேன்.... "என்று பாவம் போல சொல்ல நிலாவிற்கே சிரிப்பு வந்தது...
"கவலை படாத மது நான் அப்டிலாம் போக மாட்டேன்.. "
"அப்ப பாலா "
"ப்ச் அதை பத்தி பேச வேண்டாம் மது... இந்த காதல் கண்டிப்பா பாலாவுக்கு ரொம்ப கஷ்டம் தரும்.. எனக்கும்தான்.... ஆனால் காலம் மாற்றிடும்.... பாலாவையும் தான்..." என்று சொல்லும் போதே கண்களில் நீர் வழிந்தது...
"பாலா ரொம்ப நல்லவங்க நிலா... உங்க வீட்ல கண்டிப்பா புரிஞ்சுக்குவாங்க... நீ உங்க அப்பாவை நினச்சு பயப்படாத.... எல்லாத்தையும் பாலா பார்த்துக்குவாங்க..."
" ப்ச் இல்லை மது உனக்கு புரியாது வேண்டாம் விடு.... எனக்கு இனி என் ஜாப் மட்டும் தான்... வேற எதுலயும் என் கவனம் இருக்க போறது இல்லை... அப்புறம் நீயும் எந்த ஒரு விஷயத்தையும் பாலா கிட்ட சொல்ல கூடாது.. பாலாவை பத்தி என்கிட்ட எதுவும் பேசவும் கூடாது.... ப்ரோமிஸ் பண்ணு.... "
மதுவும் நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்திய வாறே " நான் எதையும் சொல்ல மாட்டேன்....உன் கிட்டயும் அதை பத்தி பேசமாட்டேன்.. "என்று சத்தியம் செய்தாள்.....