வசந்தம் -13

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டு என்ன ஆயிற்றோ என பதறி துடித்த மனதை அடக்கியது மூளை...

வேண்டாம் இப்போது சென்றால் கண்டிப்பாக நம் கட்டுப்பாடு உடைந்து விடும்.... இந்த கோவம் கூட பாலாவை என்னிடம் இருந்து விலகி இருக்க வைக்கும்...

நிலையில்லாமல் விழப்பார்க்கும் கால்களை சற்று நிலை படுத்தி நடந்து சென்று தன் படுக்கையின் மேல் அமர்ந்தாள்...

கண்களில் இருந்து கண்ணீர் கன்னங்களின் மீது வழிந்தோட கைகளோ தன்னையும் அறியாமல் பாலா முத்தமிட்ட நெற்றியை வெட்கமின்றி தொட்டுப்பார்த்தது.....

நிலாவின் நிலை இப்படி இருக்க அவள் எண்ணத்தின் நாயகனோ கோவத்தின் உச்சியில் இருந்தான்....

என்னை பற்றி அவ்வளவு கீழ்தரமாகவா நினைச்சிட்டு இருந்துருக்க நிலா... ரொம்ப வலிக்குதுடி... நீ என்னை வேண்டாம்னு சொல்லிருந்தா கூட நான் இவ்வளவு வேதனை பட்டிருக்க மாட்டேன்... என்று அவன் மனம் ஊமையாக அழுதது....

யார் சொன்னார்கள் கண்ணீர் பெண்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று இதோ இன்று பாலாவின் கண்களில் இருந்தும் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கின்றனவே....

கண்களை சிமிட்டி கண்ணீரை தடுத்தவன் திரும்பியும் பாராமல் தன் வீட்டிற்கு சென்று விட்டான்..

மாலை அலுவலகம் முடிந்து மது வீட்டிற்கு வந்தபோது நிலா கீழே சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தாள்.... அவளது அழுது களைத்த விழிகளும் நொறுங்கி இருந்த கண்ணாடி பொருளுமே உண்மையை ஓரளவு விளக்கி விட்டிருந்தன.....

நிலாவின் அருகில் சென்ற மது நிலாவை சோபாவில் அமர வைத்து விட்டு அவளிடம் இருந்த பொருட்களை வாங்கி இடத்தை சுத்தம் செய்தாள். பின் காபி கலந்து நிலாவிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தானும் எடுத்துக்கொண்டு நிலாவின் அருகில் அமர்ந்தாள்...

"இப்ப சொல்லு என்ன நடந்துச்சு "

" அது வந்து... பாலா இங்க வந்தான் மது.... ப்ரொபோஸ் பண்ணான்.. "

"இது எதிர் பார்த்ததுதான்... நீ என்ன கோவமா திட்டிட்டாயா.... "

நிலா என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

"சரி நீ எதுவும் சொல்லவேண்டாம்... நீ எப்டியோ பாலாவோட மனச ஹர்ட் பண்ணிருக்கன்னு நினைக்கறேன்... என்ன கேட்டா நீ தப்பு பண்றியோன்னு தோணுது நிலா... "

" என்னோட சூழ்நிலை மது... புரிஞ்சுக்க "

"நீ சொன்னதான புரியும் நிலா...நீயே ஏன் உன்னையும் கஷ்டப்படுத்தி பாலாவையும் கஷ்டப்படுத்தற... "

"சரி நான் சொல்றேன்... ஆனால் அந்த விஷத்தை எந்த காரணம் கொண்டும் யார்கிட்டயும் முக்கியமா பாலா கிட்ட சொல்லக்கூடாது.. ப்ரோமிஸ் பண்ணு. "

மதுவும் சத்தியம் செய்த பின் நிலா பாலாவை மறுப்பதற்கான காரணத்தை சொன்னாள்...

அதை கேட்ட மதுவும் " சாரி நிலா உன் நிலைமையில் நான் இருந்திருந்தா எதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பேனு தெரில.. ஆனால் உன்னை பொறுத்த வரைக்கும் உன்னோட முடிவை பாலாவினால் கூட மாற்ற முடியாது... நீ ரொம்ப நல்ல பொண்ணு நிலா... கவலை படாத.. பாலா புரிஞ்சுக்குவாங்க... என்று சமாதானப் படுத்தினாள்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN