வசந்தம் -17

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

அன்று அலுவலகத்திற்கு வந்த நிலாவிற்கு பாலாவை நினைத்து குழப்பமாகவே இருந்தது... நேற்று நான் அவ்ளோ பேசிட்டு வந்துருக்கேன்... இவன் என்னடானா ஒண்ணுமே இல்லாத மாதிரி நார்மலா என்கிட்ட பேசறான்.. சிரிக்கிறான்.
வம்பிழுக்கறான்... ஒருவேள நான் கனவு கிது கண்டேனா ... இல்லையே நேற்றய நாளின் தாக்கம் இன்னும் என் மனசை போட்டு பிசஞ்சிட்டு இருக்கே...

என்று நிலா குழம்பிக்கொண்டிருக்கும் போது பாலா கூட கிட்டத்தட்ட அந்த எண்ணங்களில் தான் இருந்தான்.. நேற்று நிலா சென்ற பிறகு சிறிது நேரம் மூளை யோசிக்கும் திறனையே இழந்து விட்டிருந்தது..

சிறிது நேரத்திற்கு பிறகு தன் நிலைக்கு வந்தான்... நிலாவின் பேச்சை அலசி ஆராய்ந்து எந்த முடிவிற்கும் வர முடியவில்லை...

நிலா என்ன எவ்வளவு விரும்புகிறாள் என்று அவளின் செயல்கள் காட்டிவிட்டன.. என்னை விட்டு விலகி இருப்பது அவளால் எளிதில் முடியாத ஒன்று.. அதையும் மீறி செய்கிறாள் என்றால் நிச்சயம் அவள் குடும்பத்தோடு சம்பந்த பட்ட எதோ ஒன்று தான்... அவளுடைய குடும்பத்திற்காக அவள் எதுவும் செய்வாள் என்று தெரியும்.. அவளுடைய இந்த பாசம் கூட பாலாவின் மனதில் அவள் மீதான காதலை அதிகரித்தது...

இனி மேலும் என் காதலை அவளுக்கு உணர்த்தி கொண்டு இருந்தால் நிலா மிகவும் தவித்து விடுவாள் ....

அவள் கஷ்டப்படுமாறு நான் நடந்து கொள்ள கூடாது .... அவள் விருப்பப்படியே என்னோட காதலும் எனக்குள்ளவே இருக்கட்டும்... இனி நல்ல நண்பனாகவாவது இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான்...

அப்போதெல்லாம் உறுதியாக இருந்த மனது இன்று காலை நிலாவை கண்டதும் துள்ளி குதித்து ஆட்டம் போட்டது...

ஆனால் இவனை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் நிலாவினை பார்த்தவன் மீண்டும் தான் கட்டுப்பாட்டிற்குள் வந்தான் ....

பின் அவளிடம் எப்பொழுதும் போல பேசி வம்பிழுத்து கொண்டு வந்ததில் நிலாவின் தடுமாற்றம் நின்றாலும் பதிலுக்கு அவனிடம் பேசவில்லை.. ஏன் அவன் முகத்தை கூட பார்க்கவில்லை...

சரி பொறுமையாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டான்...

ஆனால் நாளாக நாளாக நிலாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் உடலளவில் மெலிந்து போனாள்... இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தான் ... நிலாவிடம் பேச முடிவு செய்தான்....

ஒரு நாள் மாலை நிலாவின் பிளாட்டிற்கு சென்றான்.....

மது தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்... நிலாவும் கூட உட்கார்ந்து கடனே என்று டீவியை வெறித்து கொண்டிருந்தாள்...

அப்பொழுது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு மது எழுந்து சென்றாள்...

"ஹேய்.. பாலா வாங்க வாங்க... என்ன அதிசயமா எங்க பிளாட் பக்கம் வந்துருக்கீங்க.. "

வந்திருப்பது பாலா என்று தெரிந்த உடனே நிலா வேகமாக தன் அறைக்கு சென்று விட்டாள்...

நிலாவின் இந்த செயலை பார்த்ததும் பாலாவிற்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது...

பாலாவின் முகமாற்றத்தை கவனித்த மது " அவ எதையாச்சும் உள்ள எடுக்க போயிருப்பா நீங்க வாங்க பாலா... " என்று சமாளிக்கும் விதமாக கூறினாலும் நிலாவின் இந்த செயல் மதுவிற்கு கொஞ்சமும் பிடிக்க வில்லை..

"உட்காருங்க பாலா... இருங்க.... நான் போய் டீ கொண்டு வரேன் "

"அதெல்லாம் வேண்டாம் மது "

"ப்ச்.. சும்மா இருங்க பாலா " என்று கூறி விட்டு உள்ளே சென்று இருவருக்கும் டீ கொண்டு வந்தாள்... "

பாலா நிலாவின் அறையை திரும்பி பார்ப்பதை உணர்ந்த மது, நீங்க போய் நிலா கிட்ட பேசிட்டு இருங்க பாலா... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... "

"தேங்க்ஸ் மது "

"எதுக்கு பாலா டீக்கா... என்னோட சுமாரான டீயை குடிச்சதுக்கு நான் தான் தேங்ஸ் சொல்லணும் "என்று சொல்ல

பாலா சிரித்துக்கொண்டே "நீ இருக்கியே "

"ஆனாலும் பாலா உங்க ஆளு ரொம்ப மோசம்... ஒழுங்கா சாப்பிடறது இல்ல... தூங்கறது இல்ல.. கொஞ்சம் பேசி சரி பண்ணிட்டு போங்க நான் வரேன்... "

மது சென்றதும் நிலாவின் அறைக்கு சென்றான் பாலா.

"உன் மனசுல நீ என்னதான் நினைச்சிட்டு இருக்க... நான் உள்ள வந்த உடனே நீ பாட்டுக்கு உன் ரூமிற்கு வந்துட்ட... அந்த அளவுக்கு வேண்டாதவனா போய்ட்டேனா..? "

தனது அறையின் பால்கனியில் அமர்ந்திருந்த நிலா பாலாவின் குரலை கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்... தான் உள்ளே வந்ததும் பாலா மதுவிடம் மட்டும் பேசி விட்டு சென்றுவிடுவான் என்று தான் நினைத்தாள்..

ஆனால் இப்படி வந்து பேசுவான் என்று எதிர்பார்க்க வில்லை...

"என்ன யோசிக்கற.... நான் உள்ள வரமாட்டேன்னு நினைச்சியா... அப்படி வருவேன்னு தெரிஞ்சிருந்தா கதவை லாக் பண்ணி வச்சிருப்ப... அப்படித்தானே... "

எதும் பேசாமல் கீழே குனிந்தவாறு அமைதியாக நின்றிருந்த நிலாவை பார்த்து இன்னும் கோவம் வந்தது...

நிலாவின் அருகே சென்று அவள் முகத்தை கைகளால் நிமிர்த்தியவாறு
"என்னை பாத்து பேசு நிலா... நீ தான் சொன்ன நாம லவ் பண்ண வேண்டாம் ஸ்டாப் பண்ணிரலாம்னு.. நானும் ஒத்துக்கறேன்.. அதுக்காக முகத்தை திருப்பிகிட்டு போகணுமா... இப்படி போன எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு யோசிக்க மாட்டியா " என்று கோபத்தில் தொடங்கி வேதனையில் முடித்தான்..

நிலா மடிந்து உட்காந்து அழ தொடங்கினாள்.... பாலாவும் நிலாவின் அருகில் உட்கார்ந்து,

ப்ளீஸ் அழாத நிலா.... அழுதா எல்லா பிரச்சனையும் சரி ஆகிடுமா... ஒரு முடிவு எடுத்தா அதுல திடமா இருக்கனும்... இப்படி சரியா சாப்பிடாம தூங்காம இருந்தா எப்படி.. நீ இப்படி இருந்தா எனக்கும் கஷ்டமா இருக்கும் டா.. என்று கூறி நிலாவின் கண்களை துடைத்து விட்டு தலையை கோதி விட்டான்..

அவனின் இந்த செயலால் நெகிழ்ந்த நிலா பாலாவின் மடியில் படுத்து கொண்டாள்..

"சாரி பாலா... எல்லாம் புரியது... ஆனால் மனசு கேட்க மாட்டிங்குது... அதிலும் நீ எங்கிட்ட நார்மலா எப்பவும் போல பழகறது ஒரு வித குற்ற உணர்ச்சியா இருக்கு "

பாலா நிலாவின் தலையை கோதி கொண்டே, "உன்னோட குற்ற உணர்ச்சி தேவை இல்லாததுமா... நீ ஒன்னும் என்னை பழகிட்டு ஏமாத்தல.. என்னால உன்னை புரிஞ்சுக்க முடியும்டா...நானும் உன்னை எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்..... ஆனால் இப்படி மடில படுத்துகிட்டு பேசுனா கொஞ்சம் கஷ்டம் தான்.."

நிலா டக்கென எழுந்து "சாரி சாரி பாலா.. எதோ தெரியாம " என்று பதறியவளை இடை மறித்து

" ஹேய் சும்மாடா.... நீ படுத்துக்கோ "பாலா உன் வாய் இருக்கே....

"இல்லை வேண்டாம் "

"இது என் மடி இல்ல.. உங்க அம்மா மடினு நினச்சிக்கோ... "

"போ பாலா.. அது எதார்த்தமா படுத்துட்டேன்... இப்ப முடியாது...

" நீ படுக்கலனா நான் படுத்துருவேன் பரவாலயா.... "

"அச்சோ வேண்டாம் வேண்டாம்... " என்று படுத்து கொண்டாள்....

நிலாவின் செய்கையில் வாய்விட்டு சிரித்தவன் "இது நல்ல பிள்ளைக்கு அழகு"

"நிலா நான் அன்னைக்கு ஒரு கனவு கண்டேன் " என்று அன்னைக்கு கண்ட கனவினை பற்றி சொல்ல, நிலா டக்கென அவன் மாடியிலிருந்து எழுந்து

"அடப்பாவி.... என்னைய பாத்தா லவ்வ சொன்னா கொல்ல வர்ற ராட்சசி மாதிரியா இருக்கு.... உன்னை" என்று அடிக்க துரத்தினாள்...

பாலாவும் எழுந்து ஓட சிறிது நேரம் ஓடியவர்கள் களைப்பாக அமர்ந்தனர்...

"ரொம்ப தேங்ஸ் பாலா.. இப்பதான் ரொம்ப ரிலீப்பா இருக்கு...

"லூசு இதுக்கு எதுக்கு தேங்ஸ்.. எனக்கும் கூட ரிலீபா இருக்கு... பிரீயா விடு.. சரியா.. ஒழுங்கா சாப்பிட்டு நல்லா தூங்கு... சரியா" என்று கிட்ட வந்து நிலாவின் தலையை கோதி உச்சியில் முத்தமிட்டான்...

பிறகு பாலா தன் பிளாட்டிற்கு சென்று விட்டான்... எதிர்ப்பட்ட மதுவிடம் நிலாவை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றான்....

மதுவும் சிரித்துக்கொண்டே சரி என்றுவிட்டு நிலாவிடம் வந்தாள்...

நிலாவிடம் பாலாவை பற்றி எதுவும் பேசாமல் பொதுவாக பேசிவிட்டு சாப்பிட சென்றனர்...

ஏதோ சில நாள்களுக்கு அப்புறம் நன்றாக உறங்கினாள் நிலா......

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN