வசந்தம் -24

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖💖💖

பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தாள் நிலா... அது சென்னையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது....

நிலா பாலா வீட்டிலிருந்து வந்த மறுநாள் அலுவலகம் சென்று ராஜினாமா கடிதத்தை தந்தாள்.... அவர்கள் காரணம் கேட்டதற்கு சொந்த கரணங்கள் என்று கூறிவிட்டாள்..

அவர்கள் ஒரு மாத சம்பளத்தை முன் பணமாக கட்ட வேண்டும் என்று கூற..... அதையும் காட்டிவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் பேருந்திற்கு முன் பதிவு செய்து விட்டு வீட்டிற்கு வந்தாள்...

தான் கொண்டு செல்ல வேண்டியவற்றை எல்லாம் எடுத்து வைத்தாள்.... தன் தந்தைக்கு ஊருக்கு வருவதாக போன் செய்தாள்....

முதல் முறை சென்னை வந்த பொழுது இருந்த மகிழ்ச்சி இப்பொழுது சுத்தமாக இல்லை...

சரியாக சாப்பிடாததால் மயக்கம் வருவது போலிருக்க அருகில் இருந்த சோபாவில் அயர்வாய் அமர்ந்தாள்....

அப்படியே சிறிது நேரம் தூங்கி விட்டாள்...
பிறகு யாரோ தன்னை உலுக்குவது போல் தோன்ற கஷ்டப்பட்டு கண் திறந்தவள் முன் நின்றிருந்தது மதுவும் நிகிலும்.....

"இந்தா முதலில் இதை குடி... உன் கூட பேச வேண்டியது நிறைய இருக்கு... அதுக்காகவாச்சும் கொஞ்சம் தெம்பு வேணுமில்ல... "என்று மது அவள் முன் பழச்சாறை நீட்டினாள்..

நிலவிற்கு அது தேவையாய் இருந்ததால் அதை வாங்கி மடமடவென்று குடித்தால்..
அவள் குடித்த வேகத்தை பார்த்த மது,

"ஏண்டி இவ்ளோ பசி இருக்கறவ எதுக்காக கொல பட்டினி கிடைக்கற... சரி அதை விடு நிகில் சொன்னான்.. நீ வேலைய விட்டுட்டியாமே... ஏன் அப்டி செஞ்ச "

"நான் எங்க ஊருக்கே போறேன் மது.. எனக்கு இந்த சென்னை வேண்டாம்... இங்க இருந்து மேலும் மேலும் என்னால பாலாவை கஷ்டப்படுத்த முடியாது... "

"பைத்தியக்காரி மாறி பேசாத... நீ போன பாலா சந்தோசமா இருப்பாங்களா.. "

"சந்தோசம் இல்லாட்டியும் எனக்காக அவர கஷ்ட படுத்திக்க மாட்டாரு... "

"நிலா அப்ப பாலா அப்படி பேசுனது........ "

"எனக்கு தெரியும் மது.. நிகில் உன்கிட்ட ட்ரெயின் ல சொன்னதை கேட்டேன் "

நிகில் "நிலா நீ அப்படி போற மாதிரி இருந்தா பாலா வந்ததுக்கு அப்புறம் போ.. "

"இல்லை நிகில்... இதுக்கு மேலும் இந்த விஷயத்தை நான் சிக்கல் ஆக்கிக்க விரும்பல... நான் இன்னைக்கு ஏழு மணிக்கு பஸ் ஏறறேன்.... அப்பாகிட்ட கூட சொல்லிட்டேன்.... "

"ப்ளீஸ் நிலா... நான் பாலா கிட்ட சொல்லிட்டேன்.... அவன் காலைல வந்துருவேன் "

"என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை " என்று உறுதியாக சொல்லி விட்டாள்..

அப்பொழுது தன் அறையில் இருந்த போன் அடிக்க நிலா போய் எடுத்தாள்..

"ஹலோ "

"ஹலோ யார் பேசறது "

"தேனும்மா..... "

"ப்...... பாலா... "

"என்னால் தான நீ வேலைய விட்டு போற.. ப்ளீஸ் சாரிடா... நான் கண்டிப்பா இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்... அப்பறம் நான் அன்னைக்கு அப்டி பேசுனதுக்கு என்னை மன்னிச்சுடு... "

"நீங்க எனக்காக தான அப்படி பேசுனீங்க... அதை தாங்க முடியாம தான கைய வெட்டிக்கற அளவுக்கு போனீங்க... "

"தேனு அது உனக்கு எப்படி........ "


"நிகில் மதுகிட்ட சொல்லிட்டு இருக்கறப்ப நான் கேட்டேன் பாலா.... என்னால உங்களுக்கு எந்த கஷ்டமும் வர கூடாது..... இனிமேல் உங்க கிட்ட நான் எப்பவும் வரமாட்டேன்.... உங்க கிட்ட இருந்து நிரந்தரமா விலகி போறேன்... "

"ப்ளீஸ் ப்ளீஸ்டா.. எந்த தப்பான முடிவுக்கும்...... "


"கவலை படாதீங்க பாலா எனக்கு சொந்தமில்லாத உயிரை நான் எப்பவும் எடுத்துக்க மாட்டேன்... "

"பாலா நீங்களா என்னை தேடி எப்பவும் வரக்கூடாது.... இது என்மேல சத்தியம்.. "

"............."


"நான் வைக்கறேன் பாலா... "

"........."




அவ்வளவுதான் ....... நிலாவை மதுவும் நிகிலும் எவ்வளவு தடுக்க பார்த்தும் முடியாமல் கடைசியில் பேருந்து நிலையம் சென்று கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.....


காலை எட்டு மணி.... தேனி பேரூந்துநிலையம்..... நிலா பேருந்திலிருந்து இறங்கினாள்...


" நிலாக்குட்டி இங்க பாரு "

"அப்பா "

"என்னடா முகம் ரொம்ப டல்லா இருக்கு... நைட் பஸ்ல சரியா தூங்கலையா... "

"அ... ஆமாப்பா.... நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சா "

"இல்லடா இப்ப தான் வந்தேன்... சரி வாடா போலாம்.... "

"ம்... சரிப்பா.... "

வீட்டிற்கு செல்லும் வழியில் ராகவன் ஏதேதோ பேசிக்கொண்டு வர நிலா வெறும் ம் கொட்டிக் கொண்டிருந்தாள்.... அவள் நினைவெல்லாம் பாலாவை சுற்றியே இருந்தது....

நிலா சென்னையிலிருந்து வரும் போதே வேறு சிம் கொண்டு வந்திருந்தாள். பேருந்திலேயே மாற்றி விட்டாள்... தன் அப்பாவிடமும் சிம் வேலை செய்ய வில்லை அதனால் புதியது வாங்கி விட்டதாக சொல்லியிருந்தாள்...

அதனால் இனிமேல் பாலாவுடன் மட்டுமல்ல மற்ற யாருடனும் நிலா தொடர்பில் இருப்பதில்லை என தீர்மானித்தாள்....

"அக்கா.... அக்காஆ ஆஆஆஆ... "

"ஹேய் கவிசெல்லம்...... " என்று கூவியவள் காரை விட்டு இறங்கி தன் தங்கையை கட்டிக்கொண்டாள்....

நிலாவை தள்ளிவிட்டவள் "போக்கா நீ என் கூட பேசாத... நீ என்கிட்ட சரியா பேசி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா... இப்ப கூட நீ இன்னைக்கு வரேன்னு தெரிஞ்சதில் இருந்து நான் நைட் பூராவும் சரியா கூட தூங்காம காலையில் இருந்து நீ எப்ப வருவேன்னு வாசல்லயே உட்காந்துருந்தேன்... கார் வந்ததும் ஓடி வந்து உன்னை கூப்பிட்டா நீ அதைக்கூட கவனிக்காம இருக்க " என்று கோவித்து கொண்டு உள்ளே செல்ல

"ஏய் ப்ளீஸ் சாரி கவி..... "என்று கவி நிலாவின் பின்னே சென்றாள்..

"ஐயோ அம்மா விடுங்க.... இப்படி பிடிச்சு பிடிச்சே என் காது பெருசு ஆகிருச்சு " என்று தன் காதை தேய்த்து கொண்டாள்...

"பின்னென்னடி... நைட் பூரா குறட்டை விட்டு தூங்கிட்டு இப்ப என்னமா புளுகரா.. அவ கிடக்கரா... நீ வாடா நிலா... என்னடா ரொம்ப டயர்டா தெரியற...... போய் தூங்குமா... "என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்....

மேலே தன் அறைக்கு சென்று தன் படுக்கையில் விழுந்தாள்... பாலாவின் எண்ணங்கள் மனதை சில நிமிடம் அலைக்கழிக்க.... அதையும் மீறி நித்ராதேவி அவளை தழுவிக் கொண்டாள்..

நிலா தூங்கி எழும் பொழுது மாலை ஆகி விட்டிருந்தது.. பிறகு குளித்து தயாராகி சென்னையில் இருந்து கொண்டு வந்த பொருட்களை ஒழுங்கு படுத்தினாள்... துணிகளை எடுத்து அடுக்கும் போது அன்று திருவிழாவிற்கு கட்டிக்கொண்ட புடவை இருந்தது...

அதை கையில் எடுத்தவள் கண்கள் அன்றய நாளின் நினைவில் கலங்க " வேண்டாம் நிலா.... இப்பொது அழுது விட்டு கீழே சென்றால் அம்மா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.. இனி சோகத்தை மனதோடு உறவாட விட்டுட்டு வெளியில் சந்தோஷமான முகத்தை மட்டுமே காட்ட வேண்டும்.. "

என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவளை "எத்தனை நாள் இந்த வெளிவேஷம்..... என்றாவது வெளிப்படுமே அன்று என்ன செய்வாய் " என்று அவள் மனசாட்சி கேள்வி கேக்க... "அதை அப்போது பார்த்து கொள்ளலாம் " என்று அடக்கி வைத்தாள்....

தன் வேலைகளை முடித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்...

அன்னை கோதாவரியும் கவிநிலாவும் சமையல் அறையினுள் இருக்க அவர்களிடம் சென்றாள்....



கோதாவரி போண்டா போட்டு கொண்டிருக்க..... கவி அடுப்பு மேடை மீது அமர்ந்து போண்டாவை சாப்பிட்டு கொண்டிருந்தாள்....

"கொடுங்கம்மா நான் செய்யறேன்... நீங்க கொஞ்ச நேரம் உட்காருங்க.... "

"வாடா நிலா..... மதியம் சாப்பிட கூப்பிடலாம்னு வந்தேன்... நீ நல்லா தூங்கிட்டு இருந்தியா... அதான் எழுப்பல... இன்னும் கொஞ்சம் தான் இருக்கு... நானே போடறேன்.. உனக்கு பிடிக்கும்னு கீரை கடையல்....வேண்டங்காய் புளிக்குழம்பு.. மிளகு ரசம் எல்லாம் வச்சிருக்கேன்... இந்தா போண்டா இதையும் கொண்டு போ... போய் சாப்பிடு... "

"சூப்பர் மா "என்று அம்மாவின் கன்னத்தை லேசாக கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு சாப்பிட சென்றாள்... "

"இன்னும் சின்ன புள்ள மாதிரியே இருக்கறது.... ஏண்டி கவி அவளை பாரு பாவம் அம்மா கஷ்ட படறாங்களேன்னு உதவி செய்ய வர்றா.... நீயும் தான் இருக்கியே சுட சுட மொக்கி கிட்டு... "


"அது வந்து கோது......"

"அடிங்க.... பேர் சொல்லியா கூப்பிடற "
என்று ஜல்லி கரண்டியிலேயே அடிக்க வர... அவள் ஓடியே விட்டாள்..

"கழுத கழுத.... ஊறப்பட்ட வாய் பேசுது " என்று செல்லமாக கூறி சிரித்து கொண்டார்.. கோதாவரி என்னதான் பெண்களிடம் கண்டிப்போடு நடந்து கொண்டாலும் அவர்களின் மேல் மிகுந்த பாசம் உடையவர்.....

தன் அன்னையிடம் இருந்து தப்பித்து நிலாவிடம் வந்தாள்...

"அக்கா அக்கா.... எனக்கு ஒரு வாய்.... "

என்னதான் அன்னையின் கைப்பக்குவத்தை நீண்ட நாள் கழித்து சுவைத்தாலும் பாலாவின் நினைவு நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் குத்திற்று... அதனால் சாப்பாட்டை அளந்து கொண்டிருந்தவள் இதுதான் சாக்கென்று கவிக்கு ஊட்ட ஆரம்பித்தாள்...

"அக்கா நானும் ஊட்டறேன் "என்று கவி ஊட்ட நிலா வாங்கிகொண்டாள்... பிறகு கவிக்கு ஊட்டினாள்... அங்கு வந்த கோதாவரி கவியின் காதை பிடித்து,

"ஏண்டி நீ இப்ப தான சாப்பிட்ட... இப்ப அவளை சாப்பிட விடாம பண்ற " என்று கூறிவிட்டு நிலாவிற்கு ஊட்ட ஆரம்பித்தார்...

கவி தன் காதை தேய்த்து கொண்டே புஷ் புஷ் என்று மூச்சு விட்டுக்கொண்டு.. "ஏன் கோத்ஸ் எனக்கு எப்பவாச்சும் இப்படி ஊட்டி விட்ருக்கியா... இரு...இரு.... அக்கா இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ அப்புறம் சென்னை கிளம்பி போய்ருவா... அப்புறம் என்கிட்ட வந்து கவிக்குட்டி கடைக்கு போய்ட்டு வா... இந்த வீட்டை கொஞ்சம் பெருக்கு கழின்னு எங்கிட்ட வந்து நில்லு.... அப்ப வச்சுகிறேன் உன்னை... "

" மரியாதையா ஓடி போயிருடி... தொடப்ப கட்டைய எடுத்தேனு வையி.... அடி வாங்காம ஓய மாட்ட......"

அதற்கு மேல் பேச கவிக்கு பைத்தியமா என்ன.... பேசாமல் நல்ல பிள்ளையாய் போய் நிலாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்....

"அம்மா நான் இனிமேல் சென்னைக்கு போக மாட்டேன்... இங்கயே ஏதாச்சு வேலை பாக்குறேன் "

"என்னாச்சு நிலாகுட்டி.....அங்க ஏதாச்சு பிரச்னையா... " என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தார் ராகவன்...

"அதெல்லாம் இல்லப்பா... எனக்கு உங்க எல்லாரையும் விட்டுட்டு இருக்க கஷ்டமா இருக்கு... அதான் வேலைய விட்டுட்டு வந்துட்டேன்.... "

"ஏன்மா நல்ல வேலைய...... "என்று ஆரம்பித்தவரை பாதியில் நிறுத்திய கோதாவரி "ஏங்க அவளே நம்மள விட்டு இருக்க முடியாம இங்க வந்துட்டா... இங்கயே நல்லா கம்பெனி நிறைய இருக்கு.. அதுல எதுக்காச்சு வேலைக்கு போவட்டும்.... இல்லனா வீட்டிலேயே இருக்கட்டும்... "

"ஐ அப்ப அக்கா இனிமேல் இங்க தான் இருப்பியா.... ஜாலி ஜாலி...... "என்று நிலாவை கட்டி கொண்டாள்....

ராகவன் மட்டும் யோசனையில் ஆழ்ந்தார்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN