இரு வரி குறளால்
உன்னுடனான
காதலை
உணர்த்து முயல
நீயோ
விதிவிலக்காகி
என்னை வித்தகனாக்கும்
முயற்சியில்
வெற்றிபெற
முயல்வது ஏனோ....????
ரித்வி சென்றதும் ஶ்ரீ ரிஷியிடம்
“என்ன அய்த்தான்... கிளம்புற ஐடியா இல்லையா??”
“எப்படி போறது?? என்னோட மேடம் தான் பைக்கில தான் வருவேனு ஸ்ரிக்டா சொல்லியிருக்காங்களே...”
“ஆமால.. பார்த்தீங்களா மறந்துட்டேன்... அது சரி..பைக்கு எங்க??”
“ஆன்தி வே..”
“ஆன்திவேயா??”
“அது வந்துடுச்சி.. வா போகலாம்..” என்றபடி பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு ஓட்டிவந்தவர் கீழிறங்கி நின்ற புல்லட்டின் அருகே அழைத்து சென்றான் ரிஷி.
தன்கையிலிருந்த சாவியை அந்த நபரிடம் கொடுத்தவன் “அண்ணா இந்தாங்க..என்னோட கார் கீ... அந்த எட்டாவது நம்பர் பார்க்கிங்கில் என்னோட கார் நிற்குது.. “ என்று கூறிவிட்டு புல்லட்டின் சாவியை வாங்கிக்கொண்டவன் மொபைலை எடுத்து தன் நண்பன் ராகவ்விற்கு அழைத்து ட்ரைவரிடம் கார் சாவியை கொடுத்துவிட்டதாக கூறியவன் இரவு வந்து எடுத்துக்கொள்வதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்...
அழைப்பை துண்டித்ததும் ஶ்ரீ
“ என்ன அய்த்தான் இவ்வளவு பெரிய பிசினஸ் புலி... நீங்க போய் பைக்கை வாடகைக்கு வாங்குறீங்களே... சோ புவர்...”
“ஆமா... நீ இதுவும் சொல்லுவ... இதுக்கு மேலயும் சொல்லுவ.... அய்யோ நம்ம அம்லு ஆசையா கேட்டாலேனு கொஞ்சம் பழைய மாடல் என்பீல்ட் புல்லட்டில் கூட்டிட்டு போக ஆரேன்ஜ் பண்ணதுக்கு எனக்கு இதுவும் தேவை.... இதுக்கு மேலேயும் தேவை...”
“ஓ அப்பா இதுதான் நீங்க சொன்ன என்பீல்ட் பைக்கா??”
“அடிப்பாவி.. இது தெரியாம தான் எடுத்துட்டு வானு சொன்னியா??”
“யாயா... ஆளாளுக்கு என்பீல்ட் எனபீல்ட்னு ஸ்டோரி போட்டு சாகடிக்கிறாய்ங்களே... அப்படி என்ன பீல்ட்டு தான் இருக்குனு பார்த்துருவோமுனு தான் கொண்டு வர சொன்னேன்...”
“அப்போ நான் உனக்கு வாட்சப்பில் அனுப்புன போட்டாவை பார்க்கலையா??”
“இல்லை அய்த்தான்.. ஸ்டோரேஜ் வேஸ்டாகிரும்னு டவுன்லோட் பண்ணாம அப்படியே விட்டுட்டேன்...
“என்பீல்ட்டுக்கு வந்த சோதனையை பார்த்தியா??அவனவன் இந்த பிராண்ட் மேல உள்ள கிரேஸ்ல இமேஜ் டவுன்லோட் பண்ணி ஸ்டோரேஜை புல்லாக்கி வைச்சிருப்பாங்க.. நீ என்னடானா ஸ்டோரேஜை காப்பாத்துறேனு சொல்லுற...”
“ஆனாலும் இவனுங்க பில்டப் பண்ண அளவுக்கு பெரிசா ஒன்னும் இல்லையே... எதுக்கு இந்த தள்ளுவண்டிக்கு இத்தனை பில்டப்பு..???”
“என்னது தள்ளுவண்டியா??”
“சேசே.. தள்ளு வண்டியை அசிங்கப்படுத்தக்கூடாது... அது கூட நம்மூரு ரோட்டுல எவ்வளவு ஸ்டெடியா போகும் தெரியுமா??”
“வேணா அம்லு..ப்ளீஸ்...வேணாம்...அந்த பைக்கை நீ இந்த அளவுக்கு வச்சி செய்யக்கூடாது.. அழுதுருவேன்....”
“போயும் போயும் ஒரு பைக்கிற்கா உங்க கண்ணீரை வேஸ்ட் பண்ண போறீங்க... சேட் ட்ரூத்...”
“எந்த ட்ரூத்தா இருந்தாலும் பரவாயில்லை...உன்கிட்ட இருந்து அந்த பைக்கை காப்பாத்த என்னவேணாலும் செய்வேன்... வேணும்னா சொல்லு ஐஸ்கிரீமா வாங்கி வந்து குவிக்கிறேன்...”
“இப்போ சொன்னீங்க பாத்தீங்களா??? இது பெரிய மனுஷனுக்கு அழகு... சரி கிளம்பலாம் லேட்டாகுது...” என்று ரிஷியை கிளப்பியவள் ரிஷி பைக்கில் அமர்ந்ததும் பின்னே அமர்ந்து கொண்டவள் அவனது இடையை கட்டிக்கொண்டாள்... இருவரும் அந்த பயணத்தை அனுபவித்தபடி கடற்கரையை வந்தடைந்தனர்.
பைக்கை பார்க் செய்துவிட்டு ரிஷி வருவதற்கு முன் கடல் நீரில் விளையாடத்தொடங்கியிருந்தாள் ஶ்ரீ..
அதை பார்த்து ரசித்தபடி கரையிலிருந்தபடி தான் அணிந்திருந்த ட்ரவுசர்சை கெண்டைக்காலுக்கு மேல் வரை மடித்துவிட்டவன் ஶ்ரீயருகே சென்றான்...
ஶ்ரீயிற்கு கடலலைகளில் கால் நனைத்து விளையாடுவதில் கொள்ளை பிரியம்.. அதுவும் மாலை மங்கும் நேரத்திலேயே விளையாடுவதில் அலாதி பிரியம்... இரவு நேரத்தில் அலைகளின் வேகம் அதிகமாய் இருப்பதால் அவை காலில் மோதும் போதும் தெளிக்கும் நீர்திவலைகள் முகத்தில் மோதுவதை விரும்பி ரசிக்கும் ரசிகையவள்....
எப்போதும் இரவில் கடலிற்கு செல்பவள் கரையில் இருந்தபடி வானில் அழகை ரசித்தபடி கடலலைகளின் வருகையை எதிர்பார்த்தபடி கைகட்டி காத்திருப்பாள்.. அதுவும் முழுநிலவு வானத்தில் வலம் வரும் நாட்களில் அலைகளின் ஆர்பாட்டம் அதிகமாய் இருக்குமென்று அறிந்தவள் தவறாது அந்நாளில் கடற்கரையில் ஆஜராகிவிடுவாள்....
இதையறிந்திருந்த ரிஷி அவளை அதிகமாக கடற்கரைக்கே அழைத்து வருவான்.. அவளது தேவதை கடற்கரை மண்ணில் தேவமங்கையாய் மிளிர்வதை கண்டுரசிப்பதில் அந்த ஆண்மகனுக்கு அலாதிபிரியம்... கடல்நீரில் அவள் மெய்மறந்து நிற்பதை இந்த ஆணழகன் மதிமயங்கி ரசித்திருப்பான்.. அந்த சில மணித்துளிகள் அவனது மனப்பெட்டகத்தில் சேமிக்கப்படும் சில அற்புத நினைவுகள்....
இதற்கான முக்கிய காரணம் அந்த நேரத்தில் மட்டுமே ஶ்ரீயின் வாய் ஆப் மோடில் இருக்கும் எப்போதும் வளவளத்துக்கொண்டிருக்கும் அந்த திருவாய் அந்த நேரத்தில் ஒரு இனம்புரியாத அமைதியை தத்தெடுத்திருக்கும்...
அது கூட அவளில் ஒரு தேஜஷை வெளிக்காட்டும்... இதையெல்லாம் அவளருகே கடலலைகளில் தன் கால்களை நனைத்தபடி நின்றுகொண்டு அனுபவிப்பது ரிஷியின் வழக்கம்.
பின் கடல்மண்ணில் அமர்ந்து அந்தநொடிகளை பற்றி உரையாடிவர் இருவரும். அன்றும் அதேபோல் கரை மண்ணில் அமர்ந்ததும் ஶ்ரீ
“அய்த்தான் வா லவ் பண்ணலாம்...”
“சரி சொல்லு.... என்ன செய்யனும்...??”
“எனக்கு ப்ரபோஸ் பண்ணு.... ஆனா என்னை இம்ப்ரஸ் பண்ணனும்..”
“அப்போ இவ்வளவு நாள் பண்ண ப்ரபோசல் எல்லாம் உன்னை இம்ப்ரஸ் பண்ணலையா???”
“பண்ணிச்சு தான்.. ஆனா எல்லாரும் செய்றது தானே... அதுனால இந்த முறை யாருமே பண்ணாதமாதிரி கொஞ்சம் டிபரண்டா யோசி அய்த்தான்...”
“டிபரெண்டா.... சரி என்னோட அம்லு ஆசையா கேட்டு முடியாதுனு சொல்ல முடியுமா? சரி உனக்கு வள்ளுவரோட திருக்குறளை சொல்லி ப்ரேபோஸ் பண்ண ட்ரை பண்ணுறேன்... அம்லு..”
“என்னது திருக்குறளா??? இங்க என்ன தமிழ் கிளாசா நடந்திட்டு இருக்கு??”
“ஹாஹா.. அம்லு.. வள்ளுவர் பெருமானோட டாலெண்ட் உனக்கு தெரியாது. 1330 குறளில் வாழ்நாள் முழுதும் ஒரு மனிதனுக்கு வேண்டியது வேண்டாதது எல்லாத்தையும் இரண்டே வரியில நச்சுனு சொல்லியிருப்பாரு... அதுவும் காதலை பற்றி அவரு சொன்ன விஷயங்கள் ரொம்ப அற்புதம்...”
“திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பால்வகை இருக்குனு தெரியும்... அதுல ஏதோ என்னோட தமிழ் டீச்சரோட உபயத்துல அறத்துப்பாலும், பொருட்பாலும் கொஞ்சம் தெரியும்...அதுவும் எக்ஸாமிற்கு பாஸ் பண்ணனுமேனு படிச்சது... நமக்கு தான் அட்வைஸ் பண்ணுறவங்களை புடிக்காதே.... அதுனால கடமையேனு படிச்சேன்... ஆனா பாருங்க விவரமாக நாங்க விவகாரம் பண்ணிருவோம்னு அந்த காமத்துப்பாலை மட்டும் கண்ணுலபடாம தூக்கிட்டாய்ங்க..”
“ஹாஹா... என்ன பண்ணுறது அம்லு...உன்னை மாதிரி எத்தனை டிசைன் இருந்திருக்குமோ...அதான் பயந்து கண்ணுல காட்டாம விட்டுட்டாங்க...”
“என்ன நக்கலா?? அது சரி நீங்க எப்படி இதை ஆர்வமா படிச்சீங்க???”
“நானும் உன்னை மாதிரி தான்.. மாஸ்டர்ஸ் செய்ய யூ.எஸ் போனப்போ எனக்கு சுகவர்மன்னு ஒரு ப்ரெண்டு அறிமுகமானான்..அவனும் நானும் அவுஸ்மேட்ஸ்... அவனுக்கு தமிழ் இலக்கியத்துல ரொம்ப ஈடுபாடு..அப்பப்போ திருக்குறள் கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள் இதைபத்தி நிறைய பேசுவான்... ஆரம்பத்துல சும்மா டைம்பிஸிற்காக கேட்க ஆரம்பித்து அப்புறம் போக போக ரொம்ப பிடிச்சுப்போச்சு... பிறகு நானே தேடி படிக்க ஆரம்பிச்சேன்... இப்படியே கல்கி, சாண்டில்யன் அவங்களோட நாவல்ஸ் வாசிக்க ஆரம்பித்து இப்போ நளவெண்பாவுல வந்து நிற்குது...”
“வாவ்... அய்த்தான்... உங்களுக்கு இதுக்கெல்லாம் டைம் இருக்கா?? உங்க டைட் செடியுல்ல இதெல்லாம் எப்படி செய்றீங்க???”
“அதெல்லாம் மனசு வச்சா செய்யலாம் அம்லு... பிசினஸ் பிசினஸ்னே டைம்மை ஸ்பெண்ட் பண்ணமுடியாது.. அப்படி பண்ணி சின்ன வயசிலேயே கண்ட கண்ட வியாதியால சிக்கி சீரழிய எனக்கு விருப்பம் இல்லை.. பிசிகல் ஹெல்த்தோட மென்டல் ஹெல்த்தையும் சரியா மெயின்டெயின் பண்ணா தான் இந்த உடம்பால ரொம்ப நாளைக்கு ஆக்டிவ்வா இருக்கமுடியும்.... சோ மென்டல் ஹெல்த்தை நல்லா வச்சிருக்க தான் இந்தமாதிரி விஷயங்களை படிக்கிறேன்... நான் ரொம்ப டிப்ரெஸ்டா இருக்கும் போது இதை படிச்சா என்னை அறியாம ஒரு ரிலேக்சேஷன் எனக்கு கிடைக்கும்..... ரொம்ப நேரம்லா இல்லை... டெய்லி படுக்கிறதுக்கு முதல்ல ஒரு வன் ஹவர்.... அவ்வளவு தான்...”
“ஆனா அத்தான் உங்களை மாதிரி பிசினஸ் மேக்னெட்லாம் பிசினஸ் ரிலேட்டட் புக்ஸை தானே விரும்பி படிப்பாங்க...”
“ஆமா அம்லு.... பட் நான் அதெல்லாம் வீடியோஸ் தான் அதிகமா பார்ப்பேன்... இப்போ தான் யூடியூப்பில் இல்லாத விஷயங்கள் இல்லையே.... அதோடு டெய்லி மார்க்கெட் அப்டேட்சை மார்னிங் படிச்சி நோட் பண்ணிருவேன்... சோ டைம் மேனேஜ்ட்.... பிசினஸ்னா பிசினஸ் பத்தி மட்டும் தெரிஞ்சிக்கிறதுல என்ன நாலேஜ் சொல்லு?? வேறு பீல்ட் பத்தி தெரிஞ்சிக்கிறது இன்னோவேஷனை அதிகப்படுத்தும்... பழமை என்று ஒதுக்கப்பட்ட சில விஷயங்களை புதுமைப்படுத்த இந்த ரீடிங் எனக்கு ரொம்ப ஹெல்பா இருக்கு...”
“சத்தியாம இந்த லிங்க் எனக்கு புரியவே இல்லை...”
“சரி உனக்கு புரியிற மாதிரி சொல்றேன்.... என்னோட பிசினஸின் மெயின் ப்ரோடெக்ட் என்ன???”
“ஆடைகள்”
“அது வாங்குபவர்களோட விருப்பங்களையும் மார்க்கட்டில் உள்ள ட்ரென்டையும் பொறுத்தே தயாரிக்கப்படுது... இப்போ என்னோட கம்பனி தயாரிப்பில் உருவாகின்ற பொருட்கள் நுகர்வோரோட தேவையை நிறைவு செய்றதா இருந்தா மட்டுமே அவங்களை பொருளை வாங்குவாங்க... அதுவும் ஆடைகள் என்கிற போது தயாரிக்கிற துணியிலிருந்து தையல் வரைக்கும் ஆழந்து கவனிப்பாங்க...இதெல்லாம் சரியாக இருந்தாலும் புதுசா ஏதும் அடிக்கடி சந்தையில அறிமுகப்படுத்தாட்டி எங்களோட பொருளுக்கான டிமாண்ட் குறைந்திபோயிடும்.. அதுக்காக அடிக்கடி புதுசா ஏதாவது அறிமுகப்படுத்திட்டே இருப்போம்... இப்போ உள்ள ட்ரெண்டு பிளாக் என்ட் வையிட்டு படங்களில் போட்ட உடைகள் ரீநியூ பண்ணி ரிலீஸ் பண்ணுறாங்க.. அதுக்கு நான் இந்த ரீடிங்கை யூஸ் பண்ணிக்கிறேன்.... அந்தக்கால இலக்கியங்களும் பாடல்களும் வர்ணிப்புக்கு எந்த குறையும் வைத்ததில்லை.. ஒரு பெண்ணையோ ஆணையோ பத்தி வர்ணிக்கும் போது அவங்களோட புல் ஸ்ரக்சரையும் வர்ணிப்பாங்க... அதுல அவங்க உடைகளும் அடக்கம்... அந்த உடைகளை மனசுக்குல ஸ்கெட் பண்ணிப்பேன்... பிறகு அதுல சில சேன்ஜஸ் பண்ணி அதை இப்பவுள்ள ட்ரெண்டுக்கு ஏத்தமாதிரி மாத்தி பிரடியோஸ் பண்ணி மார்க்கட்டில் ரிலீஸ் பண்ணும் போது அதுக்கு நல்ல கிறாக்கி.. இப்படி தான் பிசினஸ்ஸை எக்ஸ்பாண்ட் பண்ணேன்...இப்போ டிசைனிங் டீம் இருக்கு... அவங்களுக்கு இந்த ஸ்கெட்சை கொடுக்கும் போது அவங்க இன்னும் டிபரண்டா நிறைய டிசைன் பண்ணுவாங்க...அதுல எது பெஸ்டோ அதை அப்ருவ் பண்ணி ரிலீஸ் பண்ணுவோம்.....”
“அய்த்தான்.... எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிற?? ப்பா... உன்னை மாதிரி யாராலும் யோசிக்கமுடியாது.... வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு சொல்லி கேள்விபட்டிருக்கேன்... அதை இன்னைக்கு தான் நேருல பார்க்கிறேன்... ஒரு சின்ன விஷயத்தை நீ எவ்வளவு பெரிய பிசினஸ்ஸா மாத்தியிருக்க??? எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல.....”
“எல்லாம் நாம் எதை எப்படி எடுத்துக்கிறோம் என்பதல பொறுத்து தான் அம்லு... என்னை புகழ்ந்தது போது போதும்... இப்போ நாம திருக்குறளுக்கு வருவோமா??”
“சரி சொல்லு அய்த்தான்...”
“ம்.... வள்ளுவர் காதலை இன்பத்துப்பாலில் இரண்டு பிரிவா சொல்லியிருப்பாரு.... களவியல் மற்றும் கற்பியல்...
களவியல் என்பது திருமணத்திற்கு முன்புள்ள காதல்..
கற்பியலென்பது திருமணத்திற்கு பிறகுள்ள காதல்..
இப்போ நாம இருக்கது களவியல் ஸ்டெஜ்.... அதுல ஏழு அதிகாரங்கள்... ஏழும் காதலின் ஏழு நிலைகள்...
முதலாவது தகையணங்குறுத்தல்...லவ் அட் சைட்.. ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது அவங்களுக்குள்ள காதல் பூத்த முதல் தருணத்தை தான் இந்த அதிகாரத்துல பத்து குறள்களாக நம்ம வள்ளுவர் சொல்லியிருப்பாரு.... உன்னை பார்த்தப்போ... இல்லை உன் குரலை முதல் முதலாக கேட்டதுமே அய்யா டோட்டல் ப்ளாட்.. இந்த குரலுக்கு சொந்தக்காரி யாருனு பார்த்தப்போ எனக்கு தோன்றிய குறள்
“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து...”
இதோட அர்த்தம் என்னதுனா பெண்ணவளின் பார்வையானது எதிரே நிற்பவனை தாக்கவேண்டுமென்ற குறிக்கோளுடன் படைதிரட்டி வரும் பெரும்படையொன்றின் தாக்குதலை ஒத்திருந்தது..
உன்னை நான் பார்த்திட்டே வெளியே வரும்போது நீ சட்டுனு என்னை திரும்பி பார்த்த... ஹப்பா... எதிர்பாராத கணநேர பார்வை தான்.. புயல் சிக்கின மரமாட்டம் என்ன சுத்தியடிச்சிருச்சி... என்னவொரு பார்வை... அப்போ தெரிஞ்சிக்கிட்டேன்... வள்ளுவர் அனுபவிச்சதை தான் எழுதியிருக்காருனு... மனசுக்கு புடிச்சவங்களோட சாதாரண பார்வைகூட இவ்வளவு அழகாக வதைக்கும்னு அப்போ புரிஞ்சிக்கிட்டேன்.... ரெண்டே வரியில சொல்லியிருந்தாலும் சும்மா நச்சுனு சொல்லியிருந்தது.....
இரண்டாவது அதிகாரம் குறிப்பறிதல்.... அதாவது காதலிப்பதாய் செயல்களின் மூலம் குறிப்பு கொடுப்பது... அதை நான் எப்போ ரியலைஷ் பண்ணேன் தெரியுமா?? நாம மாந்தோப்பு போயிந்தப்போ...”
“அப்போவா??”
“ஆமா மேடம் மாங்காயை வாயில் போட்டுக்கிட்டே என்னை வச்ச கண்ணு வாங்காம சைட் அடிச்சீங்களே...”
“இல்....லை......யே..... நான் நீங்க சொன்னதை கேட்டுட்டு தான் இருந்தேன்.. சைட்லா ஏதும் அடிக்கல...”
“ஏன் அம்லு...சைட் அடிக்கிறவங்களுக்கும் கவனமாக கேட்கிறவங்களுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதா?? உன் கண்ணுல அவ்வளோ ரசனை இருந்ததை நான் பார்த்தேனே..” என்று ரிஷி கூறியதும் சமாளிக்கும் விதமாக பல்லைக் காட்டினாள் ஶ்ரீ.... அவனது பாவனையில் சிரித்தவன்
“அப்போ எனக்கு நியாபகத்துல வந்த குறள்
“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்
நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்”
இதோட பொருள் நான் பார்க்கும் போது பார்க்காதது போலும் நான் பார்க்காதபோது என்னை கண்டு ரசித்து மனமகிழ்வதும் காதல் கொண்டதன் குறிப்பு தானே...
உன்னோட பாவனையை பார்த்தப்போதும் எனக்கு அதுதான் தோனுச்சு.. நான் பார்க்கும் போது சீரியசாக இருக்கும் உன்னோட கண்களும் உன்னோட முகமும் நான் பார்க்காதபோது என்னை ரசித்து பார்த்ததையும் சைட் அடிச்சதையும் நான் கவனிச்சிட்டே தான் இருந்தேன்.. அந்த நொடி நான் முடிவு பண்ணிட்டேன்.. நீ தான் எனக்குனே பிறந்த என்னோட ஆளுனு.. உன்னோட கண்களில் தெரிந்த அந்த மயக்கத்தை நீ உணரல... ஆனா நான் தெரிஞ்சிக்கிட்டேன்...அந்த கண்ணு அழகா சொல்லிச்சு.. உனக்காக தான் இத்தனை வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்... ப்ளீஸ் வந்திடுனு கெஞ்சிச்சு.. “
“அத்தான்... போதும் எனக்கு இப்போவே மூச்சடைக்குது... காதல் வந்தா கவிதை வரும்னு தான் கேள்விபட்டுருக்கேன்.... ஆனா நீ திருக்குறளை கணெக்ட் பண்ணி என்னை இம்ப்ரஸ் பண்ணிட்ட... யப்பா... என்ன வார்த்தைகள்..... எட்டு வரி கவிதையில சொல்லமுடியாததை கூட இரண்டு வரியில வள்ளுவர் சொல்லியிருக்காரு... அதை நீ சொன்னபபாரு... சான்சே இல்லை போ.... ஐயோ திருக்குறளானு நான் ஓடுன காலம் இருக்கு.... வாழ்க்கையில முதல்முதலா இன்னும் கொஞ்சம் திருக்குறள் கேட்கலாமேனு என்னை கெஞ்சவிடபோற...”
“ஹாஹா... என்ன அம்லு இதுக்கு இப்படி சொல்லிட்ட??? இன்னும் ஐந்து அதிகாரத்தையும் கேட்ட என்ன சொல்லுவ???”
“என்ன செல்லுவேன்.. இப்பவே கல்யாணம் பண்ணிக்கோ அய்த்தான்னு சொல்லுவேன்..” என்றவளை அணைத்துக்கொண்டான் ரிஷி...
அவனது அழைப்பை விலக்கியவள்
“சரி மத்ததையும் சொல்லு அய்த்தான் கேட்போம்..” என்று ஶ்ரீ கேட்க கூறத்தொடங்கினான் ரிஷி.