இந்த ஒற்றை சொல்லுக்காய்
இந்தனை காலம்
யானிருந்த தவம்
இன்று
உன் அணைப்பால்
நிறைவேறியது கண்ணே...
ஹேமாவை ஆஸ்பிடலிற்கு அழைத்து சென்ற ரித்வி டாக்டரின் அறைக்கு வெளியே ஹேமாவுடன் காத்திருந்தான்... அவர்களுக்கு முன் இன்னும் இருவர் காத்திருந்தனர். அப்போது டாக்டரின் அறைக்கதவு திறக்கப்பட ஒரு ஜோடி வெளியே வந்தது... அவர்கள் இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி அலைபாய்ந்து கொண்டிருந்தது... அந்தப்பெண்ணின் கையிலிருந்த ரிப்போட்டை கையில் வாங்கிய அவளது கணவன் அந்த பெண் எதிர்பாரா நேரத்தில் அவளை கைகளிரண்டிலும் ஏந்திக்கொண்டு நடக்கத்தொடங்கினான்... அந்த பெண்ணோ அவனிடம் கீழே இறக்கிவிடுமாறி கெஞ்ச அவனோ மறுத்துவிட்டு குழந்தை வெளியே வரும் காலம்வரை அவளை ஏந்தியபடியே நடக்கப்போவதாக கூறி சிரித்தான்... அதற்கு அந்த பெண்ணோ வெட்கத்தில் சிவந்துக்கொண்டே அவனை முறைத்தாள்.... ஆஸ்பிடலில் இருந்தவர்கள் அனைவரும் இவர்களையை பார்த்தபடியிருப்பதை கண்ட அந்தப்பெண் மீண்டும் தன் கணவனிடம் கெஞ்ச அவனோ தன் முடிவிலிருந்து மாறாது அவளை ஏந்தியபடி அவளது மூக்கை உரச அவளோ கூச்சத்தில் அவனது மார்பில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.
அவர்களது செல்ல விளையாட்டை சுவாரஸ்யமாய் ரசித்துக்கொண்டிருந்த ரித்வி ஹேமாவை திரும்பி பார்க்க அவளுமே அதைதான் ஒரு வித ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது முகமோ தனக்கு இப்படியொரு கொடுப்பனை கிடைக்கவில்லையே என்று வருத்தத்தை வெளியிட்டிருந்தது.... அதை கண்டவனுக்கு அவளை எப்படி தேற்றுவதென்று தெரியவில்லை..... குழந்தை உருவாகியிருந்ததை அறிந்தவள் அதை கலைக்க அவள் புரிந்த தர்க்கத்தை ஶ்ரீ மூலம் அறிந்தவனுக்கு அவளது துக்கம் புரிந்தது... அவளது நிலையால் யாரிருந்திருந்தாலும் இவ்வளவு விரைவாக அதன் தாக்கத்திலிருந்து மீண்டிருக்க மாட்டார்கள்...
ஹேமா இவ்வளவு தூரத்திற்கு தன் கவலை மறந்திருப்பது பெரிது என்று நினைத்தவன் அவளது சிந்தனையை கலைக்கும் பொருட்டு
“ஹேமா உனக்கு குட்டிப்பையன் வேணுமா.. குட்டிப்பாப்பா.. வேணுமா??”
“இந்த குழந்தையை நல்லபடியா பெத்தெடுத்தாலே எனக்கு போதும்...அது பையனா இருந்தாலும் சரி பொண்ணா இருந்தாலும் சரி...”
“அது சரிமா... ஆனா உனக்கு ஒரு ஆசையிருக்குமில்ல... அதை சொல்லு....”
“எனக்கு பொண்ணு தான் வேணும்...”
“ஹேய்..... சூப்பர்... ஆனா வழமையா அம்மாருக்கு பையன்னா தான் பிடிக்கும்... ஆனா நீ பொண்ணு வேணும்னு கேட்குற?? ஏதாவது ஸ்பெசிவிக் ரீசன் இருக்கா??”
“எனக்கு தாலி கட்டுனவன் என்னைக்கும் குழந்தையை எந்த சந்தர்ப்பத்திலும் உரிமை கொண்டாடக்கூடாது... அது நடக்கனும்னா எனக்கு பெண் குழந்தை தான் பிறக்கனும்...” என்றவளது குரலில் அத்தனை உறுதி...
“அது மட்டும் ரீசன் இல்லைனு எனக்கு தெரியும்... அதுனால உண்மையான ரீசனை சொல்லுமா..” என்று ரித்வி கூற அவனை திரும்பி பார்த்தவளின் கண்களில் ஆச்சரியம்...
அதை கண்டுகொண்டவன் மெலிதாக புன்னகைத்து
“உன்கூட இத்தனை வருஷம் பழகுனதுல இது கூட தெரியலன எப்படிமா..?? சொல்லு..”
“எனக்கு ஶ்ரீ மாதிரி ஒரு பொண்ணு வேணும்.. அவளை மாதிரியே துறுதுறுனு....”
“ஹாஹா நல்லா ஆசை தான் போ... அவ ஒருத்தியை சமாளிக்கவே இங்க யாராலேயும் முடியல... இதுல இன்னொன்னா... யப்பா சாமி எங்க வீடு தாங்காதுமா...” என்று ரிஷி கூறி சிரிக்க அவன் கூறியதன் அர்த்தத்தை சரியாக புரிந்துகொள்ளாது ஹேமாவுடன் அவனுடன் சேர்ந்து சிரித்தாள்... டாக்டர் உள்ளே வருமாறு அழைப்பு விடுக்க ரித்வியும் ஹேமாவும் உள்ளே சென்றனர்.
அவர்களிருவரும் உள்ளே சென்றதும் இருவரையும் அமருமாறு பணித்த டாக்டரிடம் தனது ரிப்போட்சை நீட்டினாள் ஹேமா...
ரிப்போர்ட்டை படித்துப்பார்த்த டாக்டர் அவளை தனியே பரிசோதிக்கவேண்டுமென அருகே மறைப்பின் பின் போடப்பட்டிருந்த கட்டிலிற்கு அழைத்து சென்றார்.
சில மணிநேர பரிசோதனைக்கு பின் அந்த மறைப்பின் பின்னிருந்து வெளியே வந்த டாக்டர் தன் கைகளை அலம்பிவிட்டு தனது இருக்கையில் அமர அவரை பின்தொடர்ந்த ஹேமா ரித்வியிற்கு அருகில் அமர்ந்தாள்..
“மிசஸ் ஹேமா லாஸ்ட் டைமை விட இந்த டைம் உங்களோட ஹெல்த்தில் நிறைய இம்ப்ரூவ்மன்ட் இருக்கு... இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க.. இன்னும் நல்லா சத்தான ஆகாரமா எடுத்துக்கோங்க... அது தான் உங்களுக்கும் உங்க வயிற்றில் வளருகின்ற கருவுக்கும் நல்லது... இன்னும் வாமிட்டிங் இருக்க???”
“இருக்கு டாக்டர்... ஆனா ஆரம்பத்துல இருந்த அளவுக்கு இல்லை...”
“குட்...நான் ப்ரிஸ்க்ரைப் பண்ண டேப்லட்சை கண்டினியூவஸ்ஸா எடுங்க.. இப்போ உங்களுக்கு த்ரீ மன்த்ஸ் கம்ப்ளீட் ஆகுது...சோ கொஞ்சம் கொஞ்சமா ஹெவியா இல்லாமல் சின்ன சின்ன வேலைகள் பாருங்க... வார்க்கிங் போங்க... கார்டனிங் செய்ங்க... இல்லைனா ப்ரெக்னென்சி பிட்னஸ் வர்க்கௌட் ப்ரவைட் பண்ணுற இன்ஸ்டிடூட்ஸ் இருக்கு ..... அங்க போங்க... இதெல்லாம் பிசிகல் ஹெல்த்துக்கு... இது மட்டும் போதாதது மென்டல் ஹெல்த்தையும் பில்ட் பண்ணனும்... நல்ல மெல்லிசை பாடல்கள் கேளுங்க....நல்ல புக்சை தேடி வாசிங்க.. இப்படி நிறைய இருக்கு..... குழந்தைக்கான ஐ.கியூ பீடிங் டைம் இது... இதை நீங்க எபிஷன்டா யூஸ் பண்ணுறது குழந்தைக்கு நல்லது.... குழந்தையோட தினமும் பேசுங்க... நீங்க பேசுறதை குழந்தை கேட்கும்... அதோடு உங்க ஹெல்த்தையும் கவனிக்க மறந்துடாதிங்க..”
“ஷ்யூவர் டாக்டர்...”
“சார்... நீங்க தான் அவங்க இதெல்லாம் கரெக்டா பாலோ பண்ணுறாங்களானு கவனிக்கனும்... நீங்க உங்க மிசஸ்ஸை எவ்வளவு சந்தோஷமா வச்சிருக்கீங்களோ அவ்வளத்துக்கு உங்க குழந்தையும் ஆரோக்கியமா இருக்கும்...” என்று டாக்டர் கூறிக்கொண்டிருக்கும் போது அவரை தடுக்க வந்த ஹேமாவை எதுவும் கூறவேண்டாமென கைபிடித்து தடுத்தான் ரித்வி....
முதல்முறை செக்கப்பிற்கு வந்தபோது ஹேமாவின் கணவரை எங்கேயென்று டாக்டர் கேட்க ராதாவோ அவரால் வரமுடியாத சூழ்நிலையென்று சொல்லி சமாளித்தார்...இம்முறை ரித்வியை கண்டதும் டாக்டர் ரித்விதான் ஹேமாவின் கணவரென்று நினைத்து அவனிடம் அவளை கவனித்துக்கொள்ளுமாறு கூறினார்..
ஹேமாவிற்கோ ஒரு இது நிஜமாகயிருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும் என்ற ஏக்கம் எழுந்தது... மறுநொடியே நடவாத ஒன்றை பற்றி சிந்திப்பது மடத்தனம் என்று தன் சிந்தனைகளுக்கு அணையிட்டவள் ரித்வியும் டாக்டரும் உரையாடுவதை கவனிக்கத்தொடங்கினாள்... ரித்வி தன் சந்தேகங்களை டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டவன் டாக்டருக்கு நன்றியுரைத்துவிட்டு ஹேமாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
அவளை காரில் இருக்குமாறு கூறிவிட்டு அருகிலிருந்த பாமசியிற்கு சென்று மருந்துகளை வாங்கிக்கொண்டு தன் காரினருகே வந்தவன் கண்ட காட்சி அவனுள் கோபக்கணலை உண்டாக்கியது....
காரிலிருந்து ஹேமாவை வலுக்கட்டாயமாக இருவர் வெளியே இழுக்க முயல ஹேமாவோ தன் பலம் கொண்ட மட்டும் அவர்களுடன் போராடிக்கொண்டிருந்தாள்...
விரைந்து காரினருகே வந்தவன் அந்த இருவரையும் வெளியே இழுத்து கீழே தள்ளிவிட அவர்கள் இருவரும் தரையில் விழுந்தனர்...
அந்த இடைவெளியில் ஹேமாவை உள்ளே அமருமாறு பணித்துவிட்டு தன் கையிலிருந்த மருந்து பையை அவளிடம் ஒப்படைத்துவிட்டு ஹேமா கதவை பூட்டிவிட்டாள் என்று உறுதிப்படுத்தும் போது ரித்வியை பின்னாலிருந்து ஒருவன் லாக் செய்ய அவனிடமிருந்து லாவகமாக தப்பித்தவன் அவனையும் அவனது கூட்டாளியையும் அடித்து துவம்சம் செய்துவிட்டான்....
அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட ஹேமாவோ மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் நடுங்கியபடி காரினுள்ளே இருந்தாள்... அவளது மூளையோ வேலைநிறுத்தம் செய்துவிட மனமோ பயத்தில் நடுங்கியபடியிருந்தது...
சில நிமிடங்களில் போலிஸ் வந்துவிட அவர்களிடம் அந்த இருவரையும் ஒப்படைத்த ரித்வி தன்னுடைய அடையாள அட்டையை போலிசிடம் காட்டி விவரம் கூறினான்.. போலிஸ் அவனை ஸ்டேஷனுக்கு வருமாறு பணித்துவிட்டு அந்த இரு நபர்களையும் தங்களது வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்ல அவர்கள் சென்றதும் காரிற்கு வந்த
ரித்வி காரை ஸ்டார்ட் செய்ய அப்போது ஹேமா அவனை அணைத்துக்கொண்டு
“ராஜ் என்னை உங்ககூட உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா???? ப்ளீஸ்...” என்றுகேட்டுவிட்டு அவனது தோளில் முகம் புதைத்து அழுதவளின் வார்த்தைகளில் குழம்பிநின்றான் ரித்வி...
முதலில் பயத்தில் அவள் ஏதோ உளறுவதாக நினைத்த ரித்வி அவளது வார்த்தைகளின் அர்த்தத்தை சில நொடிகள் தாமதித்தே புரிந்துகொண்டான்.. அதை புரிந்துகொண்ட மறுநொடி அவனது மனம் எல்லையில்ல சந்தோஷத்தை அள்ளித்தந்தது... அப்படியானால் ஹேமாவிற்கு திருமணத்தில் சம்மதமென்று தானே அர்த்தம்... என்று அவனது மனம் கூக்குரலிட்டது... இந்த இக்கட்டான நிலையில் தன்னை காப்பாற்றுமாறு கூறாது தன்னை அழைத்து செல்ல கூறியவளின் மனதில் இருந்த காதல் அந்தநொடி வெளிப்பட்டது.....
அதை எண்ணி மகிழ்ந்தவனுக்கு ஏதோ வானத்தில் பறப்பது போன்றதொரு உணர்வு... அவளை சற்று நேரம் அணைத்திருந்தவன் எதுவும் கூறாது காரை ஸ்டார்ட் செய்து போலிஸ் ஸ்டேஷன் நோக்கி செலுத்தினான்...