யாசிக்கிறேன் உன் காதலை - 10

Ramya Anamika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖 யாசிக்கிறேன் உன் காதலை -10 💖

"ஆமா இந்த பையன் யாரு?? புதுசா இருக்கு" என்றார் தாத்தா. அனைவரும் அதிர்ச்சியுடன் அப்படியே நின்றனர்.

"அது வந்து தாத்தா" என்றனர் பயத்தில்.


"யாரு டா இந்த பையன் முதல்ல என்னை திரும்பி பார்த்து பேசுங்க டா" என்றார் கோபமாக. அனைவரும் திரும்பி பார்த்தனர்." சொல்லுங்கடா யாரு" என்றார் கோபமாக.

"தா....த்...தா" என்றான் ரிஷி வார்த்தைகள் தந்தியடித்தபடி.


"சந்தோஷ் சொல்லுடா இவன் என்ன தந்தியடிக்கிறான்" என்றார் கோபமாக.


"அது வந்து இது... இது..." என்றான் சந்தோஷ் தயங்கியபடி.


"சொல்லு டா யாருன்னு இவன்.. இவன்.. யாருன்னு தாத்தா கிட்ட சொல்லு துரு சொல்லிடு" என்றான் விரு பயத்தில்.

"ஆமா துரு நீயே சொல்லிடு பெட்ரா" என்றான் சந்தோஷ் வேகமாக.


"இவன் வந்து தாத்தா " என்று பக்கத்தில் இருந்த நேகாவின் தோளில் கைபோட்டு,"நம்ம நம்ம நந்துவோட ஃப்ரெண்ட் தான்" என்றான் வேகமாக.


"என்னது என் ஃப்ரெண்டா?? ஈஈஈஈ.. ஆமா ஆமா என் ஃப்ரண்டு தான் என் ஃப்ரெண்டு தான் தாத்தா" என்றான் பயத்தில்.


"டேய்! நாயே அர்த்தராத்திரியில ஒருதனா கூட்டிட்டு வந்திருக்கியே! வீட்ல வயசு பொண்ணுங்க இருக்காங்கன்னு கொஞ்சமாச்சும் புத்தி இருக்க புத்தி கெட்டவன், அவனுக்கு தான் ஒரு கருமமும் இல்ல நீங்க எதுக்குடா இந்த பையன கூட்டிட்டு வந்துடீங்க" என்று நந்துவிடம் ஆரம்பித்து மற்றவர்களிடம் முடித்தார். எல்லாரும் அமைதியாக தலைகுனிந்து நின்றனர்.


"ஏன் தம்பி அவன் வீட்டுக்கு கூப்பிட்டா இப்படித்தான் அர்த்தராத்திரியில் வரதா?? உன் வீட்ல உன் அப்பா அம்மா தேட மாட்டாங்களா??" என்றார் நேகாவிடம்.


நேகா வாயை திறக்க போகும்போது நந்து அவள் கையைப் பிடித்தான், துரு தோளில் இருந்த கையை லேசாக அழுத்தினான்."என்ன டா சத்தத்தை காணோம்" என்றார் முறைப்புடன்.


"அவனுக்கு பயத்துல வாய திறக்க முடியல தாத்தா" என்றான் நந்து வேகமாக.


"சரி போய் படுங்க காலைல பேசிக்கலாம்" என்றார் கோபமாக. அனைவரும் வேகமாக மாடி ஏறி சென்றனர். தாத்தா லைட்டை அனைத்து விட்டு உள்ளே சென்றார்.

"ஏய்! நீ பாட்டுக்கு தாத்தா கிட்ட பேசா போற" என்றான் நந்து.

"பையன் கெட்ட போட்டா பையன் மாதிரி பேசிடுவியா??" என்றான் ரிஷி கிண்டலாக.


"சரி விடுங்க டாலு நீ இந்தப்பக்கம் வழியா வீட்டுக்குள்ள போயிடு நாங்க வர முடியாது இப்ப" என்றான் துரு வேகமாக.


"வா நேகி உன்ன கதவு கிட்டவிட்டு வரேன்" என்று சந்தோஷ அவளை அழைத்து சென்றான். கீழே செல்ல முடியாமல் கதவு பூட்டியிருந்தது மீண்டும் அழைத்து கொண்டு வந்தான்.


"என்னாச்சுடா இவள மறுபடியும் கூட்டிட்டு வந்திருக்க" என்றான் விரு.

"எம்டான் விவரமா எல்லாத்தையும் பூட்டி வச்சு இருக்காரு ".


"இப்ப என்ன பண்றது" என்றான் நந்து.


"இட்ஸ் ஓகே இங்கயே! படுத்துக்குறேன் நானும் தானே உங்க கூட வந்தேன்" என்று கீழே உட்கார்ந்தாள். மற்றவர்களும் உக்கார்ந்தனர்.

"சரி நா சந்தியா, மித்ரா, அபிக்கு கால் பண்ணி பார்க்கிறேன்" என்று மூவருக்கும் போன் செய்தான்." மூணு பேரும் நல்லா தூங்குறாங்க போல போனே எடுக்க மாட்டிக்கிறாங்க".


"சரி இப்படியே படுக்க வேண்டியது தான்" என்று நேகா தலையில் போட்டிருந்த தொப்பியை கலட்டிவிட்டு அப்படியே படுத்தாள்.

"ஹேய்! பனிவே கொட்டுது அப்படியே படுக்குற" என்றான் விரு வேகமாக‌


"போய் பேச்சிட் தலைகாணி பேட் எடுத்துட்டு வரியா?? எதுவும் எடுக்க முடியாதுல படு மேன்" என்றாள்.


"நமக்கு வேற வழி இல்ல இப்படியே படுக்க வேண்டியது தான்" என்று நந்து அவள் பக்கத்தில் படுத்தான். மறுபக்கம் சந்தோஷ் படுத்தான். நந்துவின் பக்கத்தில் துருவும், துருவின் பக்கத்து ரிஷி படுத்தனர். சந்தோஷ் பக்கத்தில் விரு படுத்தான்.


பேபி டால் படுத்தவுடனே தூங்கிவிட்டாள். ஆண்கள் சிறிது நேரம் பேசி அப்படியே தூங்கிப் போனார்கள். மறுநாள் காலையில் சந்தியாவுப் மித்ராவும் மாடிக்கு வந்து பார்த்தனர்.


பேபிடால் சந்தோஷின் கையில் தலை வைத்து நந்துவின் மேல் கால் போட்டு இருந்தாள். அவளின் பாதி கால் நந்துவை கட்டி அணைத்த படி படுத்து இருந்த துருவன் மேலும் இருந்தது. ரிஷி உருண்டு மூலையில் போய் படுத்து இருந்தான். விரு சந்தோஷின் மேல் கை போட்டு படுத்திருந்தான்.

இருவரும் கீழே சென்று அபியை அழைத்து மேலே வந்தனர். அவர்களை பார்த்ததும் சிரிப்புடன் அபி போட்டோ எடுத்து விட்டு, பேபிடாலை நேராக படுக்க வைத்துவிட்டு சந்தோஷின் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். பேபிடால் நந்துவின் மேல் காலை போட்டு படுத்துக்கொண்டாள். சந்தியா விருவை நகர்த்தி சந்தோஷ் மற்றும் விருவின் நடுவே படுத்துக்கொண்டாள். மித்ரா முதுகு காட்டி படுத்திருந்த துருவின் மேல் கையைப் போட்டு படுத்துக் கொண்டாள்.


பேபி டாலின் கை நந்துவின் முகத்தில் உரசி கொண்டே இருக்கவும் முழித்து பார்த்தான்."எப்பா.. மனுஷன் இவ கிட்ட தூங்கவே முடியாது போல" என்று திட்டியபடி எழுந்தான்.



அபி சந்தோஷின் பக்கத்தில் படுத்திருப்பதை பார்த்தும் அபி சிரித்தாள். நந்து எழுந்து பேபிடாலை நகர்த்தி விட்டு அவள் பக்கத்தில் படுத்தான். அபி அவன் பக்கத்தில் திரும்பி அவன் மேல் கையைப் போட்டுக் கொண்டாள். பேபி டால் நந்துவின் மேல் கையும் காலையும் தூக்கி போட்டாள். நந்து அவளின் கை காலை மறுபக்கம் போட்டுவிட்டு அபியின் பக்கத்தில் படுத்துக் கொண்டான்.



பேபி டால் துருவின் பக்கத்தில் அவன் மேல் கையையும் காலையும் போட்டு நெருங்கிப் படுத்தாள். துரு தூக்க கலக்கத்தில் அவளை அணைத்துக் கொண்டான். ரிஷி மீண்டும் உருந்து மித்ராவை பக்கத்தில் வந்தான். மித்ரா சிரிப்புடன் அவன் மேல் கையும் காலையும் போட்டு கண்களை மூடினாள்.


"உப்... ஹேய்!! குளுதுல" என்றாள் சந்தியா எழுந்தது.


"நாங்க நைட்ல பனியில படுத்திருக்கோம் மேல வரப்ப பேச்சீட் கொண்டு வரணும் தோணுதா?? நீ எல்லாம் என்ன பாசமலரோ!" என்றான் நந்து கிண்டலாக.


"போடா தாத்தா கீழ எல்லார்கிட்டயும் பேசிட்டு இருந்தாரு, தாத்தாக்கு தெரியாம தான் நாங்க மூணு பேரும் மேல வந்திருக்கோம், யாராச்சும் வந்தா எங்களுக்கு சங்குதான்".


"அப்புறம் எதுக்கு வந்த பாசமலரே! பாசமலர் பார்க்க வா" என்றான் கிண்டலாக.


"அத விடு நந்து உங்க கூட பேபி டால் எப்ப வந்தா?? அவ உங்க கூட இருக்குறத தாத்தா சொல்லவே இல்லையே" என்றாள் அபி குழப்பமாக.


"ஆமா பேபி டால் உங்க கூட எப்படி வந்தா??" என்றாள் மித்ரா எழுந்து உட்கார்ந்து. சத்தம் கேட்டு சந்தோஷ் மற்றும் விரு முழித்துப் பார்த்தனர்.

"ஏன் டி நிம்மதியா தூங்க விட மாட்டீங்களா??" என்றான் விரு முறைத்துக்கொண்டே.


"இதுங்களுக்கு
வேற வேலையே இல்ல டா" என்று திரும்பியவன் அபி பக்கத்தில் படுத்து இருப்பதை பார்த்ததும்,"ஏய்! அபி நீ எப்ப இங்க வந்த??" என்றான் சிரிப்புடன்.


"பேபி டால் உங்க ரெண்டு பேரும் நடுவுல படுத்திருந்தத பார்த்ததும் எனக்கு ஆசை வந்துருச்சு" என்றாள் சிரிப்புடன்.


"நீ படுத்துக்கோ டி செல்லம்" என்று தன் கையை அபிக்கு தலையணை போல் வைத்து திருப்பி படுத்தான்.

"ஆமாக்கா" என்று நந்து படுத்து அவள் மேல் கையைப் போட்டுக் கொண்டான்.

"அடடா என்ன ஒரு பாசமலர்கள் ஆமா நேகி எங்க??" என்றான் விரு எழுந்து. விரு, சந்தியா, மித்ரா மூவரும் இருவரும்(நேகி,துரு) அணைத்து படுத்து இருப்பதை பார்த்ததும் லேசாக சிரித்தனர்.


"ரொம்ப குளுருது" என்றான் விரு.


"ஆமா" என்றனர் சந்தியா மற்றும் மித்ரா.


"மித்து துருவயும் ரிஷியையும் எழுப்பு" என்றான்.

"ரிஷி அண்ணா துரு அண்ணா" என்று தட்டினாள்.


"ஏய்! எரும ஓடி போயிடு தூங்குறப்ப எழுப்புனா பாவம் பிடிக்குமாம்" என்று மீண்டும் திரும்பிப் படுத்து கண்ணை மூடினான்.


"அண்ணா உங்களுக்கு கீழ பஞ்சாயத்துக்கு இருக்கு எல்லாரும் எழுந்துட்டாங்க அங்க பாரு" என்றாள் அவனை உலுக்கி.


ரிஷி திரும்பி பார்த்துவிட்டு,"உன்ன அடிங்க" என்று அடிக்கத் துரத்தினான். மித்ராவும் எழுந்து ஓடினாள். மற்றவர்களும் எழுந்து உட்கார்ந்து இவர்களைப் பார்த்து சிரித்தனர்.


சத்தம் கேட்டது துரு தூக்க கலக்கத்தில் முழித்து பார்த்தான். நேகாவின் முகம் மிக அருகே இருப்பதை பார்த்ததும் அதிர்ந்தான். நேகா முழித்து இவன் முகத்தை பார்த்து," என்னாச்சு உனக்கு??" என்றாள் தூக்க கலக்கத்தில்.

"நீ எப்ப என் பக்கத்துல வந்த??".


"யாருக்கு தெரியும் எனக்கு தெரியாது தேவ் எனக்கு தூக்கம் வருது அட் தி சேம் டைம் எனக்கு குளிருது" என்று அவன் மார்பில் புதைந்தாள்.


"உன் முகத்த காட்டேன்" என்றான் ஒரு கையால் அவள் முகத்தை நிமிர்த்தி.


"ஏன்??" என்றாள் குழப்பமாக.

"ஆளும் மீசையும் பாரு" என்று சிரிப்புடன் நேகாவின் முகத்தில் இருந்த மூடியை ஒதிக்கு விட்டான்.


"நா தம்பி அப்படித்தான் இருப்பேன் தாத்தாவே சொல்லிட்டாரு" என்றாள் சிரிப்புடன்.

"தாத்தா சொன்னா நீ தம்பியாகிடுவியா" என்றான் அவள் நெற்றியில் முட்டி.


நேகா சிரிப்புடன்,"நாட்டாமை சொல்லிட்டாரு அவரு எவ்ளோ! பெரிய ஆளு அவரே சொல்லிடாரே!!" என்றாள் கிண்டலாக.


"தாத்தாவையே!! கிண்டல் பண்றியா??" என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினான்.


"ஆ...வலிக்குது" என்றாள் அவன் கையை எடுத்துவிட்டு.


"வலிக்க தானே கிள்ளுறது" என்றான் கிண்டலாக.


"ஓ... அப்படியா" என்று அவன் கன்னத்தில் கடித்தாள்.

"ஏய்!! ரட்சசி வலிக்குது" என்று கத்தினான்.

"நேகி அம்மா அத்த வராங்க வா மேல போலாம்" என்று வேகமாக சந்தோஷ் மற்றும் விரு நேகாவை அங்கிருந்த சிறிய மாடியை இழுத்து மறைத்து வைத்தனர். "நாங்க சொல்லாம கீழ வராத" என்று விட்டு சென்றனர்.


"டேய்! என்னடா இதெல்லாம் என்ன பண்ணி வச்சுருக்கீங்க " என்றார் பார்வதி கோவமாக. ஆண்கள் தலை குனிந்து நின்றனர்.


"ஏன் இப்படி பண்றீங்க?? நீங்க திட்டு வாங்குறதுனா வாங்குகாங்க டா எதுக்கு டா எங்கள திட்டு வாங்க வைக்கிறீங்க" என்றார் செல்வி(சந்தோஷின் அம்மா) சலிப்புடன்.



"ஆளு தான் பனமரம் சைஸ்கு வளர்ந்துருங்கீங்ளோ தவிர மூளை கொஞ்சம் கூட வேலை பாக்ககுல" என்றார் முல்லை(ரிஷியின் அம்மா) கோபமாக.


"நீங்க சீட்டில போகாத டேட்டரா டா இந்த ஊர்ல கட்டி வச்சுருக்காங்க??" என்றார் வனிதா(நந்துவின் அம்மா) கோபமாக.


"சரி விடுங்க பசங்க ஆசைக்கு போயிட்டு வந்துட்டாங்க" என்றார் அகிலா சமாதானமாக.


"என்ன அண்ணி நீங்களும் புரியாம பேசுறீங்களா இத அப்பா சும்மா விடமாட்டாரு இதுக்கு தான் ஊருக்கு வந்தீங்களா டா கிளம்பி போங்க டா" என்றார் பார்வதி ஆத்திரமாக.


"அக்கா சின்ன பசங்க தானே, அப்பா தான் அந்த காலத்து ஆளு புரியாமல் பேசறாரு நாம ஏன் கா அப்படி பண்ணனும் விடுங்க" என்றார் மல்லிகா(மித்ராவின் அம்மா) சமாதானமாக.


"வாய மூடு டி நீ செல்லம் கொடுத்து தான் கெட்டுப் போயிடானுங்க" என்று துரு, விரு, ரிஷியின் லேசாக தோளில் அடித்தார்.

"அத்த எதுக்கு அடிக்கிறீங்க??" என்றான் நந்து வேகமாக.

"அப்படி தான் டா அடிப்பேன்" என்று அவன் காதை பிடித்து திருகினார். சிறியவர்களுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றனர். நேகா மறைந்து உட்கார்ந்து பார்த்து சிரித்தாள்.

சந்தோஷ் நேகாவை பார்த்ததும்,"அட விடுங்க மம்மிஸ் இதுலாம் ஒரு விஷயமா"என்று முல்லையை அணைத்து நேகாவை உக்கார சொல்லி சைகை செயதான்.

"டேய்! நாயே விடு டா என்னைய" என்று சந்தோஷின் முடுகில் அடித்து விலகினார்.

"கம் ஆன் சித்தி இது ஒரு தப்பா உங்க ஃபாதர் பேட் ஃபாதர்னு உங்களுக்கு தெரியும்ல" என்று துரு அணைத்தான்.

"ஆமா ஆமா" என்று மற்றவர்களும் முல்லையை சுற்றி அணைத்தனர்.

பெரியவர்கள் முகம் மென்மையாக மாறியது. "சரிடா என்னைய விடுங்க பல்லை கூட விலக்காம பக்கத்துல வந்து பேசாதீங்க டா நாத்தம் தாங்க முடியல" என்று விலகினர்.

"உள்ள வந்தா தான் வாஷ் பண்ண முடியும்" என்றனர் சிறியவர்கள் பொய்யான சோகத்துடன்.

பிறகு ஒவ்வொரு அம்மாவையும் அணைத்து சமாதானம் செய்தனர். "அக்கா நேகா எங்க ஆளையே காணோம் " என்றார் வனிதா அகிலாவிடம்.


"ஆமா நீங்க எல்லாரும் இங்க இருக்கீங்க எங்க அவள காணோம்" என்றார் யோசனையுடன்.

"அச்சோ! அத்த அவ தான் மேல இருக்காலே! " என்றாள் மித்ரா மேலே காட்டி.

"என்னது??" என்றனர் தாய்மார்கள் அதிர்ச்சியுடன்.


"அவ பொய் சொல்லுறா இன்னைக்கு ஏப்ரல் ஒன்ல" என்றான் நந்து வேகமாக.

"இல்லையே!" என்றனர் அம்மாக்கள்.


"நானும் அதான் சொல்றேன் போங்க போயி சாப்பிட ஏதாச்சும் கொடுத்து அனுப்புற வழிய பாருங்க" என்றான் கிண்டலாக.


"உனக்கு வாய் இல்லனா" என்று வனிதா ஆரம்பிக்கும்போதே,

"நாய் கூட சட்ட பண்ணாது அதானே எத்தன தடவ ஒரே பழமொழியே சொல்லுவீங்க கேட்டு கேட்டு அழுத்துப்போச்சு" என்றான்.

"சரி சரி ரொம்ப பேசாத உனக்கு காபி கொண்டு வரேன்" என்றார் அகிலா.

"அகிமா என்னைய நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்க ஈஈஈஈஈஈ.." என்று இழித்தான்.


"அண்ணி இவங்களுக்கு எதுவும் தரக்கூடாதுன்னு அப்பா சொன்னது ஞாபகம் இல்லையா" என்றார் பார்வதி. அகிலா முழித்தார்.


"அம்மா.. பெரியம்மா உங்க எல்லாரையும் கீழ வர சொன்னாங்க பெரியய்யா வந்துட்டாங்க" என்று வேகமாக வந்து சொன்னார்.


"நம்ம வீட்டு எம்டன் வந்துட்டாரு சீக்கிரம் ஓடுங்க" என்றான் ரிஷி கிண்டலாக.


"ஐயோ! ஆமா டா நாங்க வந்தது தெரிய வேணா" என்றார் முல்லை வேகமாக.


"அங்க நாங்க அடிப்போம் திட்டுவோம் அழக் கூடாது " என்றார் பார்வதி கிண்டலாக.


"ம்மா.. அத்த.." என்றனர் வேகமாக.


"சரி சரி கீழ போலாம் அப்பறம் அவ்ளோ தான் வாங்க" என்று செல்வி அனைவரையும் அழைத்து சென்றார்.


"ஏய்! மித்து வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா??" என்றான் வரு.


"நா என்ன பண்ணுனேன் அண்ணா" என்றாள் முழித்துக் கொண்டே.


"நேகி மேல இருக்கானு போட்டுக் கொடுக்குற அப்படி நீ சொன்னால தொண்ட தண்ணி வத்துர அளவுக்கு பேச வேண்டியதா போச்சு" என்றான் நந்து சலிப்புடன்.


"நா தான் உங்க கூட மூவி வந்தேனே எதுக்கு ஒளிய வச்சீங்க" என்றாள் நேகா பக்கத்தில் வந்து.


"நல்ல வேலை அம்மா வந்தப்ப கீழே வந்து கேட்காமல் இருந்தியே அதுவே பெரிய விஷயம்" என்றான் துரு பெருமூச்சுடன்.


"ஆமா ஆமா" என்றனர் மற்ற நான்கு பேரும்.


"என் செல்லக்குட்டி மீசையெல்லாம் போட்டுருக்கா" என்றாள் அபி அவள் தோளில் கைபோட்டு. நேகா நடந்த அனைத்தையும் சொன்னாள்.

"தாத்தா உன்ன பையன்னு நம்பிடாரா??" என்றனர் மூன்று பெண்களும்.


"ஆமா" என்றாள் சிரிப்புடன்.


"பேபி நீ கேப்ப போட்டுட்டு வா நாம செல்பி எடுக்கலாம்" என்றாள் அபி.

"ஆமா நாங்களும்" என்றனர் மற்ற இருவரும்.


"ஓகேடா லெட்ஸ் டேக் எ செல்பி" என்று கொண்டயை போட்டு தொப்பை போட்டாள். அனைவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்தனர்.


"தம்பி.. பாப்பா.. பெரியய்யா உங்களக் கூப்பிடறாங்க" என்றார் வேலையால் வந்து.


"சரி நீங்க போங்க நாங்க வரோம்" என்றான் துரு. அவர் சென்றதும்,"டாலு நீ இந்த மீசையை அழி" என்றான் வேகமாக.


"ஏன் தேவ் இது நல்லா தானே இருக்கு" என்றாள் மீசையை வருடியபடி.

"ஹேய்! நேகி முதல்ல இத கழுவு" என்று விரு இழுத்து சென்று பைப்பைத் திறந்து விட்டான். நேகா முகத்தை கழுவினாள்.துரு தன் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து மீசையை நன்றாக அழுத்தித் துடைத்தான்.


"நேகி நாங்க மட்டும்தான் மூவி போனதால் இருக்கட்டும் நீ வந்தது தெரிய வேணா" என்றான் சந்தோஷ்.


"இல்ல நானும் தானே வந்தேன், எனக்கும் பனிஷ்மெண்ட் கிடைக்கட்டும்" என்றாள் வேகமாக.


"அம்மா தாயே நாங்க மட்டும் போனோம்னா கம்மியா தான் கிடைக்கும், உன்னையும் கூட்டிட்டு போனேன்னு தெரிஞ்சது அவ்ளோ தான் வீட்டை விட்டு வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்னு உன்னோட சேர்ந்து எங்களை துறத்திவிட்டுருவாரு" என்றான் நந்து பாவமாக.


"இருந்தாலும் என்னால அப்படி இருக்க முடியாது" என்றாள் சோகமாக.


"தம்பி பாப்பா ஐயா கூப்புடுறாங்க" என்று மீண்டும் வேலையால் வந்து சொன்னார்.

"சரி வாங்க போலாம் டாலு நீ பேசவே கூடாது" என்றான் துரு. தாழ்வாரத்தில் தாத்தா கோபமாக நடந்து கொண்டிருந்தார். மற்றவர்கள் பாவமாக பார்த்துக் கொண்டு நின்றனர். ஆண்கள் கீழே வந்து தலைகுனிந்தபடி நின்றனர். பெண்கள் நான்கு பேரும் ஐந்து நிமிடம் கழித்து வந்தனர்.


"என்ன டா இதெல்லாம் நீங்கல என்ன பொருக்கீங்களா டா அந்த நேரத்துல திருடன் மாதிரி வீட்டுக்குள்ள குதிச்சு வரீங்க??" என்றார் நேசமணி ஆத்திரமாக.


"கேட்டு பூட்டியிருந்த தாத்தா" என்றான் நந்து மெதுவாக. பக்கத்தில் நின்றவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றனர்.


"ஆளு வளர்ந்துருக்கீங்களே தவிர மூளை வளர்ல" என்றார் கோபமாக.


"என்ன சொல்றாரு தாத்தா பிரைன் வளருமா அஸ் அ டாக்டர எனக்கே டவுட்டா இருக்கு" என்றாள் நேகா இவர்கள் பின்னால் நின்றபடி.

ஐந்து பேரும் பின்னால் திரும்பி பார்த்து விட்டு முன்னால் திரும்பி சிரிப்பை அடக்கினர். அபி,மித்து, சந்தியா வாயை பொத்திக் கொண்டு நின்றனர்.


"என்னடா பின்னாடி பாக்கறீங்க இங்க நா உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன், அங்க என்ன இருக்கு?? உங்கள இப்படி சும்மா விட்டு வச்சது தப்பாப் போச்சு" என்றார் கோபமாக.


"ஆமா தாத்தா இழுத்து கட்டி போடுங்க எங்கள விட்டுட்டு போனாங்களா??" என்றாள் மித்ரா மெதுவாக.

"நா தான் உன்ன கூப்பிட்டனே!" என்றாள் நேகா மித்ராவிடம்.


"சின்ன குட்டி அங்க என்ன சத்தம்" என்றார் கோவமாக.


"சும்மா பேசிட்டு இருந்தோம் தாத்தா" என்றாள் இழிப்புடன்.

"நீயும் இந்த நாயிங்க கூட போகாம இருந்தியே அதுவே பெரிய விஷயம் விட்டா உன்னையும் இழுத்துட்டு போயிடுவானுங்க அப்படி பட்ட ஆளுங்க" என்றார் கோபமாக.


"இழுத்துட்டு போனதே இவதான் இத எங்க போயி நாங்க சொல்றது" என்றான் ரிஷி மெதுவாக சலிப்புடன். மற்ற ஆண்களும் தலையை ஆட்டினர்.


"சரி விடுங்க அப்பா சின்ன பசங்க தானே!" என்றார் குணா சமாதானமாக.

"எப்படிடா விட முடியும் குணா, எல்லாரும் கிளம்புங்க முதல்ல, ஊருக்கு போங்க இந்த வருஷம் திருவிழாக்கு நீங்க இருக்க வேணா" என்றார் கோபமாக.


"தாத்தா.. அப்பா.. மாமா.." என்றனர் அனைவரும் பதறி.

"தாத்தா இவங்க மேல எந்த தப்பும் இல்ல நா தான் நா.. தான் காரணம் நா வேணும்னா கிளம்பி போயிடுறேன்" என்றாள் நேகா முன்னால் வந்து. பெரியவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

"டாலு சும்மா இரு, தாத்தா எங்கள மன்னிச்சிடுங்க நாங்க திருவிழா அப்ப ஊருக்கு போனா உங்களுக்கு எவ்ளோ! கஷ்டமா இருக்குன்னு எங்களுக்கு நல்லவே தெரியும், இனிமே நாங்க இப்படி பண்ண கூடாதுன்னு தானே இப்படி சொல்றீங்க, நாங்க உங்க பேர பிள்ளைங்க தாத்தா திட்ட ,அடிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு, இப்ப என்ன நாங்க போகணும் சரி போறோம் நீங்க ரிலாக்ஸாகுங்க" என்று துரு அவரை அணைத்தான்.

"சரி சரி நீங்க ரொம்ப பெரிய தப்புல பண்ணல தான் நைட் வந்தது தப்பு தான் ஆனா சின்ன குட்டி நீ என்ன பண்ணுன" என்றார் துருவிடம் இருந்து விலகி.


"நேகி உண்மைய சொன்ன துரு பேசி சமாதானம் பண்ணுனது எல்லாம் வேஸ்ட்டா போயிடும், அப்புறம் நாம எல்லாரும் கேட்டுக்கு வெளிய தான்" என்றான் விரு மெதுவாக.


"அது வந்து தாத்தா நேத்து மதியம் மூவி பாக்கலாம்னு தோணுச்சு நைட் சோ போய் பார்த்தா எப்படி இருக்குனு கேட்டேன்?? அதுக்கு டாடி அங்க போக கூடாதுன்னு சொன்னாங்க, இவங்களோட ஆர்வத்தை நா தூண்டி விட்டுட்டேன் அதுனால தான் நைட் இவங்க எல்லாரும் போனாங்க" என்று உளறி சமாளித்தாள்.

"இதுல உன்னால தானா?? இவனுங்க சும்மா இருந்தாலும் நீ சும்மா இருக்க மாட்டியே உனக்கும் தண்டனை இருக்கு, அவ சொன்னா உங்களுக்கு புத்தி எங்கேடா போச்சு, ஒரு வாரத்துக்கு உங்களுக்கு வீட்ல சாப்பாடு இல்ல, வயல்ல வந்து வேலை பார்க்கணும், திருவிழா வேலையெல்லாம் நீங்க தான் பண்ணனும்" என்றார் கோபமாக.

"ஓகே தாத்தா" என்றாள் நேகா சிரிப்புடன். மற்றவர்கள் அவளை முறைத்தனர்.


"தாத்தா நேகாவால வெயில் தாங்க முடியாது" என்றான் சந்தோஷ்.


"தாத்தா ஒரு வாரமா? இதுல அநியாயம் படமே இரண்டரை மணி நேரம் தான்" என்றான் நந்து வேகமாக.


"ஆமா தாத்தா" என்றார் விரு மற்றும் ரிஷி வேகமாக.

"சுவர் ஏறி குதிக்க தெரிதுல அது அநியாயமா தெரியலையாடா, நீங்க யாருக்கும் சமைச்சு தரக்கூடாது, சந்தியா , மித்ரா உங்களுக்கு சமைக்க தெரியாது எனக்கு நல்லாவே தெரியும், அவங்களுக்கு எதுவும் கொண்டு போய் கொடுக்க கூடாது" என்றார் பெண்களிடம் கட்டளையாக.


"தாத்தா..." என்றனர் வேகமாக.

"சொன்னது சொன்னதுதான்" என்றார் அழுத்தமாக.

"தாத்தா இவங்க பண்ணுனது தப்புதான் ஒத்துகிட்டாங்க அப்புறம் ஏன் தாத்தா?? சாப்பாடு கூட கொடுக்காம பாவம் தாத்தா, நா உன்கிட்ட எதுவுமே கேட்டதில்ல, இவங்கள விட்டுடுங்க" என்றாள் அபி தாத்தாவின் கையை பிடித்து கெஞ்சலாக.

"சரி அபிமா நீ கேட்டனால சும்மா விடுற ஆனா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீங்களே சமைச்சு சாப்பிட்டு வயலுக்கு வந்து வேலை பாருங்க" என்றார் கட்டலையாக.


"தேங்க்யூ தாத்தா" என்று சந்தோசமாக அவரை அணைத்தாள். தலையைக் கோதி விட்டு விலகினார்.

"எல்லாரும் கிளம்புங்க வீட்ல நீங்களா இருந்தா சமைச்சு குடுத்திடுவீங்க, திருவிழாவுக்கு சமான்ல வாங்குற வேல எல்லாம் நிறைய இருக்கு உடனே கிளம்புங்க" என்றார் பெரியவர்களிடம் கட்டளையாக.


சிறியவர்கள் நொந்தபடி ரூமுக்கு போக போனார்கள்." ஒரு நிமிஷம் நில்லுங்க நந்து உன் ஃப்ரெண்டுன்னு ஒரு பையன அழைச்சிட்டு வந்தியே அவன் எங்க??" என்றார். சிறியவர்கள் அதிர்ச்சியுடன் நின்றனர்.


அடுத்து என்ன நடக்கும்?? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.....


💘யாசிப்பு தொடரும்💘 .........





 

Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 10
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN