மாயம் 38

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யாரென்று
அறிந்த பின்னும்
எதற்காய்
அந்த உறவை
ஏற்க மறுக்கின்றது
மனம்??

அனைவரும் சென்றதும் கட்டிலில் கண்மூடியிருந்த படுத்திருந்த ஹேமாவின் கையை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டவன் அவளது கையில் இதழ் பதித்தான்...

அவனது ஸ்பரிசம் உணர்ந்ததும் மெல்ல கண்விழித்தவள்
“ராஜ்.... “

“மிக்கி .. பெட்டரா பீல் பண்ணுறியா??” என்று ரித்வி நலம் விசாரித்ததும் தான் அவளுக்கு நடந்ததனைத்தும் நினைவில் வந்தது..

“ராஜ்.... ராஜ்.... நீங்க... உங்களுக்கு.... ஆக்சிடண்ட்..” என்றபடி விரைந்து எழுந்து உட்கார முயன்றவளை தடுத்தவன்

“ஹேய் மிக்கி கையில் ட்ரிப்ஸ் ஏறிட்டு.... அமைதியா இரு... ஐயம் ஆல்ரைட்...” என்றவனது கன்னத்தில் தன் மறுகையை வைத்தவள்

“ராஜ்... உங்களை.... அந்த..... அந்த... ராட்சசன்.... கொல்லப்போறேன்னு...”

“ஹேய் மிக்கி... உனக்கு யாரு அப்படி சொன்னது???”

“அவன்... தான்...” என்றவள் அவன் தனக்கு அழைத்த கதையை கூறினாள்....

அன்று மாலை அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஹேமாவை கலைத்தது அவளது அலைபேசி அழைப்பு... சிவரஞ்சனி ராதாவுடன் கடைக்கு சென்றிருக்க ஹேமாவின் தந்தை மட்டும் ஹாலில் இருந்தார்...

அழைப்பை எடுத்த ஹேமா கேட்ட வார்த்தைகள்
“ஹலோ பொண்டாட்டி எப்படி இருக்க??” இந்த வார்த்தைகளை கேட்டவளுக்கு சில நாட்களாய் மனதில் புதைந்திருந்த பயம் விஸ்வரூபம் எடுத்தது... கைகள் நடுங்க மொபைலை வைத்திருந்தவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள முகத்தினை வியர்வைத்துளிகள் நனைத்திருந்தது...

“நீ..நீ..”

“நான் தான்.. உன் புருஷன்.... வேந்தன்.. என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டதா நினைச்சி சந்தோஷமா இருக்க போல?? அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுடுவேனா?? உனக்கான தண்டனையை நான் இன்னும் சரியா கொடுக்கலையே... இப்போ அதுக்கான சரியான துருப்பு சீட்டு எனக்கு கிடைச்சிருக்கு..”

“நீ.... நீ.... என்ன சொல்லுற??”

“உன்னோட முன்னாள் காதலன்...”

“வேணாம்.... அவரை எதுவும் பண்ணிடாத...ப்ளீஸ்...”

“ஹாஹா... அவன் இருக்க தைரியத்துல தானே நீ சந்தோஷமா இருக்க??? அவனை உருத்தெரியாம அழிச்சிட்டா???”

“நீ... நீ... பொய் சொல்லுற.... அவரு.... அவரு...”

“நான் எதுக்கு பொண்டாட்டி பொய் சொல்லனும்.. அவன் கதையை முடிச்சிட்டு பொணத்தை அனுப்பி வைக்கிறேன்.. அப்போ நான் சொல்லுறது உண்மைனு நம்பு பொண்டாட்டி...” என்றதும் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட ஹேமாவோ கதிகலங்கி நின்றாள்... ரித்வி ரஷ்யா சென்றிருக்க வேந்தன் கூறியதை எண்ணி பயந்தவள் ரித்விக்கு அழைக்க தொடர்பு கொள்ளமுடியவில்லை... அப்போதுதான் ரித்வி கூறிச்சென்றது நியாபகம் வர சற்று ஆசுவாசம் அடைந்தவள் அவன் தன்னை மிரட்டுகிறான் என்று எண்ணியவள் அந்த அழைப்பை பற்றி யாரிடமும் கூறவில்லை.. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு பயம் வேரூன்றியிருக்கு ஒரு பயத்துடனே அந்த நாளை கடத்தினாள்.... மறுநாள் ரித்விக்கு அடிபட்டது தெரிந்ததும் தான் வேந்தன் கூறியது உண்மை என்று புரிந்தது..

“ராஜ்... அவன் சொன்னபடி...”

“மிக்கி... இனி அவனை பத்தி நாம கவலைப்பட தேவையில்லை...”

“என்ன சொல்லுறீங்க ராஜ்??”

“ஆமா மிக்கி.. அவன் இப்போ ஜெயில்ல...”

“ராஜ்..”

“ஆமா மிக்கி..... அவனை தகுந்த ஆதாரங்களோட போலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க..” என்று வேந்தனை கைது செய்ய அவன் உதவியதை கூறியவன்

“ஆனா மிக்கி... அவனுக்கு எப்படியோ நான் யாருனு தெரிஞ்சிருக்கு.... என்னோட மொபைல்ல இருந்து தான் அவன் உன் நம்பரை எடுத்து உன்கிட்ட பேசிருக்கனும்...”

“ஆமா ராஜ்... அவனுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு.... அப்போ அவன் தான்.. உங்களை.. ஆக்சிடன்ட் பண்ணதா ...??”

“சரியா தெரியல மிக்கி...” என்றவனுக்கு நன்றாக தெரியும் அவனை ஆக்சிடண்ட் செய்ய முயன்றது வேந்தன் என்று.. ஆனாலும் அதை கூறி ஹேமாவின் பயத்தை அதிகரிக்க விரும்பவில்லை ரித்வி...

“சரி மிக்கி... ஏதாவது நினைத்து மனசை குழப்பிக்காத ... அது உன்னை விட என்னோட பேபிமாவை தான் பாதிக்கும்.. சோ சமத்து மிக்கியா தூங்குவியாம்... என்னோட பேபிமாவும் மிக்கியோட தூங்குவாங்களாம்..”

“ஓ... அப்போ உனக்கு இந்த மிக்கியை விட என்னோட குட்டிமா தான் பெருசா போய்ட்டாங்களா??”

“பார்டா... என்னோட மிக்கிமௌசிற்கு கோபம்லா வருது... உன்னை பார்த்துக்க நான் இருக்கேன் மிக்கி... ஆனா என்னோட பேபிமா பாவமில்லையா??? அதான் உன்னைவிட பேபிமாவை பத்திரமா பார்த்துக்க சொன்னேன்..” என்று கூறி சிரித்தவனை முறைத்தாள் ஹேமா...

எதிர்காலம் பற்றி சரியாய் எந்த ஒரு முடிவும் எடுக்காத போதிலும் இருவருக்கும் மற்றவரது அருகாமை ஒரு வித அமைதியை தந்தது... பிரச்சினைகள் அனைத்தும் பின் தள்ளப்பட்டு தற்போது உள்ள சுமூக நிலையை மட்டும் எண்ணி மகிழ்ந்திருந்தனர்...
அப்போது ஶ்ரீ மற்றும் சிவரஞ்சனி, ராதா , அனு உள்ளே வர அவர்களுடன் உள்ளே வந்தார் சுபா... தன் அன்னையை கண்ட ரித்வி ரிஷியை தேட அவனோ அவருக்கு பின்னால் திருதிருவென முழித்தபடியிருக்க ஶ்ரீயோ அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்...

ஹேமா அருகில் வந்த சுபா
“ஹேமா... இப்போ உடம்புக்கு எப்படி இருக்குமா???”

“இப்போ பரவாயில்லை.. ஆண்டி...”

“அம்மா இங்க உன் பிள்ளையும் இருக்கேன்மா.... அதுவும் அடிப்பட்டு கை கால்ல எல்லாம் பாண்டேஜூடன். ..”

“நீ தான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முதல்ஷ ரஷ்யால இருக்கேன்னு சொன்னியே??அதுக்குள்ள எப்படி இங்க வந்த???”

“அதுமா... அது...”

“பொய் சொல்லிட்டு ஊரு ஊரா சுத்திட்டு இப்போ அடிபட்டு வந்து நிற்கிற?? இதுல உங்க அண்ணனும் உனக்கு கூட்டு... இப்போ என் மருமக மட்டும் எனக்கு கால் பண்ணியிருக்காட்டி நானும் இவனுங்க சொல்லுறத நம்பிட்டு இருந்துருப்பேன்... “

“ஏன்மா.. ஶ்ரீ... நீ தான் இந்த படத்துக்கு ஸ்ரிப்ட்ரைட்டரா???”

“ஆரம்பம் மட்டுமே இந்த ஶ்ரீயோடது மீதியெல்லாம் அத்தையே முடிச்சிட்டாங்க...”

“எதுக்குடா அவகிட்ட விசாரிச்சிட்டு இருக்க?? அவ சொன்னதால தான் உனக்கு அடிபட்டது எனக்கு தெரியும்... என்னடா நினைச்சிட்டு இரண்டு பேரும்... ??? நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் நீங்க இரண்டு பேரும் இன்னும் என்னோட பிள்ளைகள் தான்... உங்களுக்கு என்ன ஏதுனு நான் தெரிஞ்சிக்க கூடாதா??”

“இல்லைமா.. நீங்க கஷ்டப்படுவீங்கனு தான்..” என்று ரித்வி இழுக்க

“என்னடா கஷ்டம்... உங்களுக்கு ஒரு பிரச்சனைனா பெத்தவ எனக்கு தெரிய வேணாமா??? அப்படியே கஷ்டப்பட்டாலும் சொல்லாம இருந்துடுவீங்களாடா???”

“சாரி மா... இனிமே இப்படி பண்ணமாட்டோம்..” என்று ரிஷி கூற

“அவனை கூட மன்னிச்சிடுவேன்டா... உன்னை... எல்லாம் தெரிஞ்சும் என்னமா நடிச்ச என்கிட்ட??? ரஷ்யால மீட்டிங்ல இருக்கான்.. ப்ளைட்ல பறந்துட்டு இருக்கான்னு...” என்று ரிஷியிற்கான அர்ச்சனையை தொடங்க அவனோ பாவமாய் முகத்தை வைத்திருக்க அவனை பார்த்த ஶ்ரீயிற்கு சிரிப்பை கட்டுப்படுத்தமுடியவில்லை...
அவளை ஓரகண்ணால் முறைத்தபடி தன் அன்னையின் வசவுகளை வாங்கிய ரிஷி

“தெய்வமே என்னை மன்னிச்சுரு... இனிமே எதையும் மறைக்கமாட்டேன்... இவனுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு எனக்கு இது தேவை தான்...” என்ற ரிஷி ஜகா வாங்க சுபா ரித்விக்கான அர்ச்சனையை ஆரம்பிக்க தொடங்கியதும்

“அம்மா சாரி..மா... இனி இப்படி பண்ணமாட்டேன்... ப்ராமிஸ்..” என்று குழந்தை போல் இரு காதினையும் பிடித்தபடி பாவமாய் முகத்தை வைத்தபடி மன்னிப்பு கேட்ட

ரித்வியின் தடவிய சுபா
“உங்க அப்பா சாமர்த்தியம் மட்டும் உன்கிட்ட நிறைய இருக்குடா.. சரி வீட்டுக்கு போவோமா?? அடிபட்டதோட அப்படியே ட்ராவல் வேற பண்ணியிருக்க... உடம்பு ரொம்ப வலிக்கும்.. வா வீட்டுக்கு கிளம்பலாம்...”

“அம்மா ரித்வியை இங்க ஆஸ்பிடலிலேயே ஆட்மிட் பண்ண அரேன்ஜ் பண்ணியிருக்கேன்... ஒரு புல் செக்கப் பண்ணிட்டு அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்... இவனோட பிடிவாதத்தால தான் டாக்டரை கெஞ்சி இவனை டிஸ்சார்ஜ் பண்ணி இங்க அழைச்சிட்டு வந்தேன்.. “

“அதுவும் சரி தான்டா.. மறுபடியும் செக்கப் பண்ணிட்டு இவனை வீட்டுக்கு அழைச்சிட்டு போவோம்... நீ அட்மிட் பண்ணுறதுக்கான ஏற்பாட்டை கவனி... நான் வீட்டுக்கு போய் சாப்பாட்டு அரேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்...”என்றவர் ராதாவிடம்

“அண்ணி வர்றீங்களா நம்ம வீட்டுக்கு போயிட்டு சாப்பாடு எடுத்துட்டு வருவோம்???”

“உங்களுக்கு எதுக்கு அண்ணி சிரமம்... அதோடு நீங்க ரொம்ப தூரம் போகனும்... நம்ம வீடு பக்கத்துல தானே.. ரித்வி தம்பிக்கும் நானே சாப்பாடு எடுத்துட்டு வந்திர்றேன்... ஹேமாவையும் நாளைக்கு தான் டிஸ்சார்ஜ் பண்ணுறதா சொல்லியிருக்காங்க.. அப்போ இரண்டு பேருக்கும் ஒரேடியா எடுத்துட்டு வந்திர்றேன்..”

“எனக்கு எந்த சிரமமும் இல்ல அண்ணி...வீட்டுல சமையல்காரங்க இருக்காங்க.. அவங்க தான் சமைக்க போறாங்க... ட்ரைவர் இருக்காரு... அவரோட வரப்போறேன்... இதுல எனக்கு எந்த சிரமும் இல்ல அண்ணி...உங்களுக்கு தான் சிரமம்...”

“இல்ல அண்ணி... துணைக்கு ஹேமா அம்மா இருக்காங்க.. அதுனால எனக்கு எந்த சிரமும் இல்லை.. நான் பார்த்துக்கிறேன்...”

“சரி அண்ணி... நான் உங்களுக்கு உதவிக்கு ட்ரைவரை அனுப்பி வைக்கிறேன்..”என்று அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்... ரித்வியும் அங்கு அட்மிட் செய்யப்பட பரிசோதனைகள் அனைத்தும் முடித்துக்கொண்டு ஹேமாவுடனே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான் ரித்வி...
இவ்வாறு இரண்டு கிழமைகள் கடந்திருக்க அன்று ஹேமாவை பார்க்க வந்திருந்தான் ரித்வி...

கையில் மட்டும் சிறு பாண்டேஜ் இருக்க மற்றைய காயங்கள் அனைத்து ஆறியிருந்தது... வீட்டிற்கு வந்தவனை சிவரஞ்சனியும், ராதாவும் நலம் விசாரித்தனர்.... ஹோமாவை விசாரித்தவனிடம் அவள் அறையில் வேலையில் இருப்பதாக கூறிய ரஞ்சனி ரித்வியை உள்ளே சென்று பார்க்குமாறு கூறினார்...
அறையில் லாப்டப்பில் அலுவலக வேலையில் மும்முரமாக இருந்தவள் உள்ளே வந்த ரித்வியை கவனிக்கவில்லை.. வேலையில் மும்முரமாய் இருந்தவளை தொந்தரவு செய்யாது அவளை ரசித்தபடி நின்றவனது கண்கள் அவளருகே இருந்த மேசையில் மூடி வைக்கப்பட்டிருந்த ஜூஸ் கோப்பை கண்ணில் பட்டது... அதை கண்டவனது உதடுகள் சிறு புன்னகையை தவழவிட்டபடியிருக்க நடந்து சென்று கோப்பையை கையிலெடுத்தவன் அவள் முன் நீட்ட அவளோ தன் அன்னை என்று எண்ணியவள்

“அம்மா... இதை முடிச்சிட்டு வந்து குடிக்கிறேன்மா...பீளீஸ்...”

“அதெல்லாம் முடியாது... முதல்ல இதை குடிச்சிட்டு அப்புறம் வேலையை பாரு..” என்று ஹேமாவின் அன்னையின் வாயிஸில் ரித்வி மிமிக்ரி செய்ய அது தெரியாத ஹேமா ஜூஸை வாங்கி வேகமாய் குடிக்க புரையோடியது...

அதன் பலனாய் அவள் இருமத்தொடங்க அவளது தலையில் மெதுவாக தட்டியவன்
“ஹேய் மிக்கி.. மெதுவா... மெதுவா..” என்று ரித்வி கூற சடாரென திரும்பியவள்

“நீங்களா???”

“ஏன் நீ யாருனு நினைச்ச??”

“நான் அம்மானு... ஹேய் அப்போ அம்மா மாதிரி மிமிக்ரி பண்ணியா??? உன்னை...” என்றவள் எழுந்து எதையோ தேட

“என்ன மிக்கிமௌஸ் தேடுற???”

“வெயிட்டா ஏதாவது இருக்குதானு தேடுறேன்... மிக்கிமௌஸ்னு கூப்பிட்தனு சொன்னா கேட்கமாட்டியா நீ???”

“அது தான் உனக்கு சூப்பரா செட்டாகுது மிக்கி... அதான் அப்படி கூப்பிட்டேன்..”

“ வரவர உன் சேட்டை ரொம்ப கூடிப்போச்சு... டீன் ஏன் பையன் மாதிரி பண்ணிட்டு இருக்க...”

“ஹாஹா... என்னமா பண்ணுறது.. பழகிருச்சி... “

“சரி.. டாக்டர்ட போனியா?? எப்போ பேன்டேஜ் ரிமூவ் பண்ண சொன்னாரு...??”

“காயம் ஆறிடுச்சாம்.. இன்னும் டூ டேஸ்ல ரிமூவ் பண்ண சொன்னாரு.. உனக்கு எப்போ செக்கப்??”

“அடுத்த புதன்கிழமை ஈவினிங் 5.30 க்கு அப்பாயிண்ட்மன்ட்.. “

“சரி நான் கூட்டிட்டு போறேன்... இப்போ வா அப்படியே பார்க்குக்கு போயிட்டு வரலாம்...”

“இல்லை ராஜ்.. கொஞ்சம் வர்க் முடிக்கவேண்டி இருக்கு.. இப்போ முடியாது...”

“ஹேய் என்ன ரொம்ப பண்ணுற??? இதை இப்ப முடிக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. . பாவம் வெட்டியா இருக்கேனு பீல் பண்ணுறாளேனு வீட்டுல இருந்தபடி வேலை செய்யட்டுமேனு அரேன்ஜ் பண்ணா இவ வேலையே கதினு கிடந்து உடம்பை கெடுத்துக்கிறா... இனி நீ வேலை எதுவும் செய்ய வேண்டாம்... ரெஸ்ட் எடுத்தா போதும்... நான் மேனேஜர்ட்ட சொல்றேன்...”

“ப்ளீஸ் ராஜ்.. அப்படியெல்லாம் பண்ணிடாத... ரொம்ப போர் அடிக்கும்பா... இனிமே இப்படி பண்ணமாட்டேன் சரியா???”

“இல்லை நீ இப்போ இப்படி தான் சொல்லுவ..... மறுபடியும் வேலை வேலைனு அதை தான் கட்டிட்டு அழுவ...அதனால இனிமே நீ எதுவும் செய்ய வேணாம்... பேசாம ரெஸ்ட் எடு.....”

“ப்ளீஸ்டா மாம்ஸ்... இப்போ என்ன நான் வெளியில போக ரெடியாகனும் அதானே...இதோ இப்போ கிளம்புறேன்..” என்றபடி துவாயை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தவளை ஒரு அதிர்ந்த பாவனையும் பார்த்தபடியிருந்தான் ரித்வி..
அவனது அந்நிலைக்கு காரணம் ஹேமாவின் மாம்ஸ் என்ற அழைப்பே... அவனை தாஜா பண்ணும்போது அவனை அவள் அழைக்கும் செல்லப்பெயரிது.... இத்தனை நாட்கள் அவள் வாயில் வர மறுத்த அந்த பெயர் இன்று அவள் உணராமல் வந்ததை நினைத்தவனுக்கு அதிர்ச்சியே... அன்று அவள் அழுதபோது அவளை துயரிலிருந்து மீட்பது கடினமென்று எண்ணியிருந்தவன் இந்த அழைப்பால் நம்பிக்கை பெற்று தான் நினைத்ததை செயல்படுத்துவதில் தீவிரமானான்...
அறையில் இருந்து வெளியே வந்தவனை வெளியே இழுத்து சென்றாள் ஶ்ரீ..

“ஹேய் நீ எப்போ வந்த??”

“நான் எப்பவோ வந்துட்டேன்... இப்போ அதுவா முக்கியம்... உங்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பொன்றை ஒப்படைக்க போறேன்... அதை சரியா செய்து முடிக்கனும்...”

“என்ன ஆர்டர் எல்லாம் பலமா இருக்கு... என்ன விஷயம்...”

“நெக்ஸ்ட் வீக் மை பியூச்சர் ஹபி பொறந்தநாள் வருது...”

“அட ஆமா... நீ சொன்னதும் தான் எனக்கு நியாபகம் வருது..”

“அதுக்கு ஒரு சின்ன சப்ரைஸ் பார்ட்டி அரேன்ஜ் பண்ணலாம்னு இருக்கேன்...”

“சரிமா... அதுக்கு நான் என்ன பண்ணனும்...??”

“அந்த பார்ட்டிக்கு தேவையான ஹெல்ப்பெல்லாம் நீங்க தான் பண்ணனும்... பைனான்சியல் ஆன்ட் நொன்பைனான்சியல்....”

“நல்லா இருக்குதுமா உன் ஆர்டர்.. சரி யாரெல்லாம் இன்வைட் பண்ணனும்??” என்று ரித்வி கேட்க தலையில் அடித்துக்கொண்டாள் ஶ்ரீ....

“சப்ரைஸ் பார்ட்டினு சொல்லுறேன்... யாரெல்லாம் இன்வைட் பண்ரதுனு கேட்கிறீங்க...?? உங்களை எப்படி இந்த ஹேமா ஐந்து வருஷம் கட்டி மேய்ச்சா??”

“ஓ... நீ மட்டும் அண்ணாவுக்கு குடுக்கப்போற சப்ரைசா??? இப்படி தெளிவா சொன்னா தானே தெரியும்??”

“இப்போ தான் தெரிஞ்சிருச்சுல்ல.. அதுனால அதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணுங்க...”

“ம்ம்ம்... ரொம்ப கெஞ்சி கேட்குற.. சரி பண்ணுறேன்... எங்க பார்ட்டி குடுக்கப்போற???”

“உங்க பாம் ஹவுசுல... அத்தானை அங்க வரவைக்க வேண்டியது உங்க பொறுப்பு... அவரோட பர்த்டே பஸ்ட் விஷஸ் நானா தான் இருக்கனும்... புரியிதா??”

“எல்லாம் புரியிதுமா... ஆனா நீ எப்படி லேட் நைட்ல வருவ?? அத்தைகிட்ட என்ன சொல்லுவ??”

“அதுக்கு தான் அத்தான்னு நீ இருக்கியே?? பிறகு என்ன??”

“அடிப்பாவி நீ சர்ப்ரைஸ் பாட்டி கொண்டாட நான் பலியாடா?”

“இல்லை அத்தான்.... பார்டிகார்ட்...”

“நல்ல கார்ட் தான்போ... சரி என்னென்ன அரேன்ஜ்மென்ட்சுனு சொல்லு நான் பண்ணித்தாரேன்..” என்று ரித்வி கேட்க ஶ்ரீ தனது பிளானை கூறினாள்..

“சரி நான் எல்லாம் பார்த்துக்கிறேன்... நீ டிசைன்சை மட்டும் செலெக்ட் பண்ணிரு..”

“சரி நீங்க கிளம்புங்க... உங்க பெஞ்சாதி காத்திட்டு இருக்கும்...”

“நீதான் பெஞ்சாதினு சொல்லுற... ஆனா ஒத்துக்க வேண்டியவ ஒத்துக்கமாட்டேங்கிறாளே....”

“அவளை ஒத்துக்க வைக்க வேண்டியது உங்க சமார்த்தியம் மிஸ்டர் ரித்விராஜ்...”

“வைக்கிறேன்.. இன்னைக்கே இதுக்கொரு முடிவை தெரிஞ்சிக்கிறேன்...”

“அதை செய்ங்க... கிளம்புங்க அத்தான்...” என்று ஶ்ரீ ரித்வியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் வர ஹேமா ஹாலில் காத்திருந்தாள்...
ஒரு டாப்புப் பெக்கி பேண்டும் அணிந்திருந்தவள் கழுத்தில் ஷால் அணிந்திருந்தாள்... டாப் சற்று பெரிதாக இருந்ததால் சற்று மேடிடத்தொடங்கியிருந்த வயிறு தெரியவில்லை...
அனைவரிடமும் விடை பெற்றவன் ஹேமாவை அழைத்துக்கொண்டு சென்றான்...
செல்லும் முன் ஶ்ரீ அவனிடம் தனது கட்டைவிரலை தூக்கிக்காட்ட அவனோ அதை ஆமோதித்ததாய் கண்களை மூடித்திறந்து அவளிடமிருந்து விடை பெற்றான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN