மாயம் 40

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கண்டுகொள்வேனென்று
கண்மூடி மறைக்க
நினைத்தாய்...
ஆனால் உன்
மனமோ உன்
விழியினூடு
நீ மறைக்க
நினைத்தது
என்னிடம்
எடுத்துரைத்துவிட்டது....

ஹேமாவை வீட்டில் விட்டுவிட்டு ரித்வி கிளம்பியதும் ஹேமாவாயை தனது அறைக்கு தள்ளி சென்றாள் ஶ்ரீ...
அறைக்கதவை சாற்றிய ஶ்ரீ ஹேமாவிடம்
“என்ன பப்ளி எல்லாம் ஓகேவா??”

“நீ எதை கேட்குற??”

“ஏய் பார்த்தியா?? என்கிட்ட கூட சொல்லமாட்டேன்குற???”

“நீ எதை கேட்குறனு தெரிஞ்சாதானே சொல்லமுடியும்??”

“அப்போ நான் எதை கேட்குறேனு உனக்கு புரியலை... அப்படி தானே??”

“சத்தியமா புரியலை...”

“சரி..அத்தானுக்கு என்ன பதில் சொன்ன??? உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே???”

“யாரு கல்யாணத்துக்கு..?? என்கிட்ட சம்மதம் கேட்கிற??”

“ஹேமா பீ சீரியஸ்... நான் உனக்கும் அத்தானுக்கும் நடக்கப்போற கல்யாணத்துக்கு சம்மதமானு கேட்டேன்...??”

“ஏன் ஶ்ரீ நீ புரிஞ்சி தான் பேசுறியா??”

“இதுல புரியாம பேச என்ன இருக்கு?? நீயும் அத்தானும் ஆல்ரெடி விரும்புனவங்க தானே... இப்போ மேரேஜ் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன கஷ்டம்..??”

“அதுக்கு பிறகு எனக்கு கல்யாணம் நடந்தது உனக்கு தெரிஞ்சுமா இப்படி பேசுற???”

“அப்படி வாய்ல ஒன்னு போட்டேனா தெரியும்.... எதுடி கல்யாணம்?? ஒரு மஞ்சத்தாலி கட்டிட்டா அது கல்யாணமாகிருமா?? அதுவும் உன்னை பழிவாங்குறதுக்காக
ஒருத்தன் கட்டுன மஞ்சள் கயிறை தாலினு சொல்லி கொச்சைப்படுத்தாத...”

“நீ என்ன சொன்னாலும் அவன்கிட்ட நான் தாலி வாங்கினதும் அதுக்கு சாட்சியா இந்த குழந்தையை நான் சுமக்குறதும் தானே உண்மை...”

“ஹேமா... என்னோட கோபத்தை கிளப்பாத... அது உன்னோட பாஸ்ட்.. இந்த குழந்தை அந்த அயோக்கியன் கொடுத்தாக இருந்தாலும் இது உன்னோட குழந்தை.. நீயும் அத்தானும் மேரேஜ் பண்ணிக்கிட்டீங்கனா அந்த குழந்தைக்கு நீயும் அத்தானும் தான் அம்மாவும் அப்பாவும்... அது ஏன் உனக்கு புரியமாட்டேன்குது??? தாலி தாலினு சொல்லுறியே... அதை நீ விரும்பியா வாங்கிக்கிட்ட?? இல்லை அவனும் உன் கூட வாழவா அந்த தாலியை கட்டுனான்??? அப்படியே தாலி கட்டிட்டான்னு நீயும் அவன்கூட சந்தோஷமா வாழ்ந்திருந்தா பரவாயில்லை. அவன்கிட்டயிருந்து தப்பிச்சு வந்துட்டு இபீபோ தாலி மஞ்சள் கயிறுனு பேசிட்டு இருக்க?? உனக்கு கொஞ்சமாவது மண்டையில மசாலானு ஏதாவது இருக்கா?? வந்துட்டா பேச??? தாலியோட அருமை தெரியாம.....”

“ஆமா... எனக்கு தெரியாதுடி.. அது தெரியாம தான் அதை வாங்கிக்கிட்டு இப்படி அனுபவிக்கிறேன்..”

“அன்னைக்கு ஆண்டியும் அங்கிளும் அவ்வளவு சொன்னதுமே நீ அங்கேயிருந்து கிளம்பியிருந்தா உனக்கு இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது... எல்லாம் அந்த வரட்டு கவுரவத்தால வந்தது.. அது தானே இப்பவும் உன்னை தடுக்குது??? உனக்கு என்னதான்டி பிரச்சனை...?? இரண்டாவது கல்யாணம் பண்ணுறது பிரச்சனையா?? இல்லை குட்டிப்பையனை நினைச்சு கவலைப்படுறியா??”

“எனக்கு பிடிக்கலை..”

“ஏன்டி பொறுமையா கேட்குறேன் அப்படீங்கிறதுக்காக என்னோட பொறுமையை ரொம்ப சோதிக்காத... அப்படி புடிக்காதவ தான் அத்தானுக்கா அப்படி உருகுனியா??? சும்மா காரணம் சொல்லனும் அப்படீங்கிறதுக்கா ஏதாவது சொல்லாத. . உண்மையை சொல்லு.. எதனால கல்யாணம் வேணாம்னு சொல்லுற?? மறுபடியும் பொய் சொல்ல ட்ரை பண்ணாத... உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்... சோ சொல்லு..”

“என்னை பத்தி தெரியும்னு சொல்லுறியே... அப்போ ஏன்டி என்னோட மனசு உனக்கு புரியலை...???”

“அது புரியாமலில்லை.. ஆனா எனக்கு புரிஞ்ச விஷயம் சரியானு தெரிஞ்சுக்க தான் உன்கிட்ட இவ்வளவு தூரம் கேட்டுட்டு இருக்கேன்.... சொல்லு... ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லுற??” என்று ஶ்ரீ கேட்டதும் ரித்வியிடம் கூறிய காரணத்தை ஹேமா கூற

“பப்ளி... நீ கல்யாணத்தை மறுக்குறதுக்கு இது காரணம்னு எனக்கு தோணலை.. நீ அவ்வளவு வீக்கான பர்சனாலிட்டி இல்லை... நீ சொல்லுறதை அத்தான் நம்புவாரு... நான் நம்பமாட்டேன்... அத்தான் பக்கத்துல இருக்கும் போது நீ எவ்வளவு கம்படபல்லா பீல் பண்ணுவனு நான் கண்ணால பார்த்திருக்கேன்... அப்படி இருக்கும்போது எப்படி உனக்கு அவனோட நியாபம் வரும்?? அப்படியே வந்தாலும் நீ அத்தானை தேடுவாயே தவிர அவரை விலகியிருந்து கஷ்டப்படமாட்ட.... சோ உண்மையை சொல்லு... எதுனால மறுக்குற???” என்று ஶ்ரீ கேட்டதும் அதற்கு மேலும் உண்மையை மறைக்கத்தோன்றாதவள்

“என்ன சொல்ல சொல்லுற?? என்னை மேரேஜ் பண்ணுறதால அவருக்கு பிரச்சனையே ஒழிய நிம்மதியில்லை... அந்த வேந்தன் அவ்வளவு சீக்கரம் அடங்கமாட்டான்... அவனுக்கு வஞ்சம் தீர்க்ககறது அப்படீங்கிறது பசிமாதிரி... அது அடங்கும் வரை அவன் ஓயமாட்டான்..ஜெயில்ல இருந்து வெளிய வந்ததும் அவன் ராஜை டார்கட் பண்ணுவான்... நான் அவர்கூட இருந்தா அவனோட வெறி இன்னும் அதிகமாகி அது ராஜ்ஜை தான் கஷ்டப்படுத்தும்... எனக்காக அவரு கஷ்டப்படுறதை நான் விரும்பல.. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவருக்கு தலைகுனிவு தான்.... ராஜ் எப்படியும் எனக்கு ஏற்கனவே மேரேஜ் ஆனதை சொல்லமாட்டாரு.. ஆனா வயித்துல குழந்தையோட மணவரையில் நான் உட்காரும் போது அது எங்க ஒழுக்கத்தை தப்பாக பேசுறமாதிரி போயிரும்.. பார்க்கிறவங்க என்னை தப்பா பேசுனாகூட பரவாயில்ல... ஆனா ராஜ்ஜை தப்பா பேசுறதை என்னால ஒருகாலமும் ஏத்துக்கமுடியாது... இது ராஜோட குடும்பத்துக்கும் ஒரு தலைகுனிவு தான்... என்னால அவங்க எல்லாரும் கஷ்டப்பட வேண்டாம்... என்னோட ராஜ் எப்பவும் சந்தோஷமா ராஜா மாதிரி இருக்கனும்... அவருக்கு என்னால ஒரு பிரச்சனையோ கெட்டபெயரோ வரகூடாது...குழந்தை பிறந்ததும் அம்மா அப்பாவை கூட்டிட்டு அவுஸ்ரேலியா போயிருவேன்.. அதற்கு பிறகு ராஜிற்கு என்னால எந்த பிரச்சனையும் வராது... அவரு சந்தோஷமா இருக்கனும்..”

“லூசு மாதிரி உளராதடி.... நீ பேசுறதுல எந்த ஒரு லாஜிக்குமே இல்ல... ஊரு உலகம் ஆயிரம் பேசும்...அதெல்லாம் யோசிச்சா நாம சந்தோஷமா வாழமுடியுமா?? தலைகுனிவுனு ஏதோ சொன்னியே... உனக்கு ஒன்னு தெரியுமா?? ரித்வி அத்தானை விட அவங்க பேமிலி தான் நீ எப்போ சம்மதம் சொல்லுவனு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க... அத்தை கூட நான் ஹேமாகிட்ட பேசுறேன்னு ரித்வி அத்தான்கிட்ட சொல்லியிருக்காங்க.. ஆனா அத்தான் தான் அவளா ஒரு முடிவு எடுக்கட்டும்னு சொல்லியிருக்காரு... நீ விலகி போயிட்டா அந்த அயோக்கியன் அத்தானை சும்மா விட்டுருவானு நினைக்கிறியா?? இது எல்லாத்தையும் விடு... நீ விலகி போய்ட்டா அத்தான் அத்தான் வேறொரு பொண்ணை தன்னோட லைப் பாட்னரா அக்செப்ட் பண்ணிப்பாருனு நினைக்கிறியா??? அவர் கடைசிவரை தனியா இருப்பாரே தவிர இன்னொரு லைப்பை அக்செப்ட் பண்ணமாட்டாரு... ஹேமா ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ...... நீ இந்தநொடிவரை அத்தானை விரும்புற..அத்தானும் உன்னை ரொம்ப விரும்புறாரு.. .. உன்னை மட்டும் உன்னோட வயித்துக்குள்ள உள்ள குட்டிப்பையனும் அவரோட பையன் தான்னு அவரு எப்பவோ ஏத்துக்கிட்டாரு.. நீயா விலகி போக நினைத்தாலும் உன்னை அவரு விலக விடமாட்டாரு... அதோடு நீ சொன்ன காரணங்கள் எல்லாதையும் எப்படி உடைக்கிறதுனு அவருக்கு தெரியும்..... உன்னை கஷ்டப்படுத்தக்கூடாதுனு தான் அவரு ரொம்ப பொறுமையா இருக்காரு.... உனக்கு இன்னும் இரண்டு நாள் தான் டைம்... அதுக்குள்ள நல்லா யோசிச்சி ஒரு முடிவை எடு... ஏதும் தப்பா யோசிச்சனா அத்தான் உன்னை கவனிக்கிற விதத்துல கவனிப்பாரு... அதுனால சரியா யோசி.... திருமண வாழ்க்கை இரண்டு மனம் சம்பந்தப்பட்டது.. இதுல ஊரு உலகத்துக்கு எந்த வேலையும் இல்லை.. இன்னைக்கு தப்பா பேசுற உலகம் நாளைக்கு ஆஹா ஓஹோனு சொல்லும்... அதுனால அதைபத்தி யோசிக்காம உன்னோட மனசு என்ன சொல்லுதோ அதை கேளு..... தேவையில்லாததை யோசிச்சு மனசை குழப்பிக்காத.... புரிஞ்சிதா??? இப்போ போய் ரெஸ்ட் எடு...” என்ற ஶ்ரீ அறைக்கதவை திறந்துக்கொண்டு வெளியே சென்றாள்..

ஶ்ரீ வெளியே சென்றதும் கட்டிலில் சாய்ந்தவளின் மனம் குழம்பித்தவித்து.. ஆனாலும் அவள் காதல் மனம் ஶ்ரீ கூறியது சரியென்றே வாதிடியது.... ஆனால் தன்னால் வேதனையை தவிர எந்த மகிழ்ச்சியையும் கொடுக்கமுடியாது என்று எண்ணியவளுக்கு கண்களில் நீர்முட்டியது.... ஆனாலும் இதற்கு முடிவு தான் என்ன என்று அறியமுடியாமலேயே களைப்புமிகுதியால் உறங்கிவிட்டாள் ஹேமா.....

(அடுத்த எபியில் நம்ம ஶ்ரீயோட சப்ரைஸ் பிளான் என்னனு பார்ப்போம் நட்புக்களே...🙈🙈 ஶ்ரீ என்ன பிளான் பண்ணியிருப்பானு ஏதாவது guessing இருந்தா கமெண்டுல சொல்லுங்க நட்பூக்களே...... 😊😊சப்ரைஸ் பிளான் நம்ம ரிஷியோட பாம் ஹவுசுல நடக்கபோறதா முடிவு பண்ணியிருக்காங்க... அதுனால ஶ்ரீ அப்படி என்ன சப்ரைஸ் குடுக்க போறானு கண்டுபிடிச்சு சொல்லுங்கோ மக்களே...😂😂 உங்க பதில்களை ஆவலோட எதிர்பார்க்கிறேன்😜😜)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN