மாயம் 42

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இந்நாள்
எந்நாள்
வருமென்று
தவம்கிடந்த
காதல் நெஞ்சத்திற்கு
வரமாய்
கிடைத்துவிட்டது
உன்
அழைப்பு...

அந்த டெரஸ்னுள்ளே ஒரு மேசையிருக்க அதன் மேலே ஒரு கேக்கும் இருந்தது... அந்த இடம் முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க அதோடு அந்த டெரஸ் பகுதிக்கு வெளிச்சமூட்டும் விதமாக சிவப்பு வெள்ளை நிற மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தது. அந்த மேசைக்கு பின்புறமாக இருந்த சுவரில் “ஹாப்பி பர்த்டே மை லவ்விங் ஹபி” என்ற பெயரட்டை இருந்தது. அந்த பெயரட்டை தடிமனான கார்போர்ட்டினால் ஆக்கப்பட்டு சிவப்பு நிற வண்ண விளக்குகளால் இணைக்கப்பட்டு ஒளிர்ந்துகொண்டிருந்தது.. டெரசின் ஒருபுறம் சுவரோடிணைந்திருக்க மறுபுறம் நிலத்திலிருந்து பாதிவரை மட்டும் மூடப்பட்டிருக்க மீதி திறந்தவெளியாயிருந்தது..

அந்த வெளியினூடு முழுநிலவின் பிரகாசம் டெரஸ்ஸினுள் பாய அது அந்த இடத்தின் அழகை இன்னும் மெருகூட்டியது... இயற்கையொளி செயற்கையொளியென்று அந்த இடத்தில் வெளிச்சம் பரவியிருக்க தன் மன்னவனை கைபிடித்து உள்ளே அழைத்து சென்ற பெண்ணவள் அந்த மேசையருகே அழைத்து சென்று கேக்கினை வெட்டுவதற்காக கத்தியினை கையில் கொடுத்தாள்... அவன் கத்தியை வாங்கியதும் அந்த கேக்கின் மீதிருந்து அந்த ஒற்றை மெழுகுதிரியை ஏற்றியவள் பிறந்தநாள் கீதம் பாட கேக்கை வெட்டினான் ரிஷி. வெட்டிய கேக் துண்டில் அவளுக்கு ஊட்டி விட ஶ்ரீயும் அந்த கேக்கில் பாதித்துண்டை ரிஷிக்கு ஊட்டிவிட்டாள். பின் டெர்ரஸ்ஸின் ஒரு ஓரமாய் வைத்திருந்த பையை கையில் எடுத்து வந்தவள் அதை ரிஷியிடம் நீட்டி

“அத்தான்.. உங்க பர்த்டேக்கான என்னோட மொதல் கிப்டு..ஹ ஓபன் பண்ணி பாருங்க...”என்ற ஶ்ரீ கூற

“அப்போ கீழே இருந்ததெல்லாம்...”

“அது... ஹேய் நீங்க அதை ஓபன் பண்ணி பார்த்துட்டீங்களா???”

“இல்லையே அம்லு... அது பிரிச்சிப்பார்க்கலாம்னு கையில எடுத்தப்போ சத்தம் கேட்டு மேல வந்துட்டேன்...”

“ஓ... அப்போ ஓகே... இப்ப இத பிரிச்சிப்பாருங்க...” என்றதும் பெட்டியை திறந்து பார்த்தவனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை..

“என்ன அம்லு இது??”

“ஏன் அத்தான் என்னதுனு தெரியலையா???”

“அதெல்லாம் தெரியிது... ஆனாலும்??”

“என்ன ஆனாலும்... உங்களுக்கு புடிச்சிருக்குதானே???”

“எனக்கு புடிக்காம இருக்குமா?? ஆனா??”

“நீங்க பல்பு வாங்கிட்டீங்க அதானே??” என்றுவிட்டு ஶ்ரீ சிரிக்க ரிஷியோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டான்...

“என்ன அம்லு சிரிக்கிற???”

“சும்மா.. சும்மா.. நீங்க காண்டாகாதீங்க... எல்லாம் இருக்கா?? இல்லை ஏதாவது மிஸ் பண்ணிட்டேனா??”

“எல்லாம் இருக்கு அம்லு... எப்படி கரெக்டா எல்லாத்தையும் வாங்குன??”

“நெட்டுல தேடுனேன்.. அதை வச்சி எனக்கு சிக்குன அடிமை ரெண்டுகிட்டயும் சொல்லி தேடி வாங்குனேன்.. இதுக்கு அவனுங்க ஒரு வீக் வேஸ்ட் பண்ணானுங்க”

“ரொம்ப தாங்ஸ் அம்லு.. ரொம்ப சின்னப்புள்ளத்தனமான விஷயம் தான் . ஆனாலும் மாத்திக்கமுடியலை.. இதெல்லாம் நீ கொடுத்ததால இப்போ ரொம்ப ஸ்பெஷல்... லவ் யூ அம்லு..” என்றபடி ஶ்ரீயை அணைத்துக்கொண்டான் ரிஷி..

என்ன மக்களே அப்படி என்ன ஶ்ரீ ரிஷிக்கு கொடுத்திருப்பானு தானே நினைக்கிறீங்க😂😂 பொம்மைகள்😂😂😂 அதாவது மாவல் கொமிக் கெரெக்டர்ஸ் பொம்மைகள்... ரிஷியிற்கு சிறுவயதிலிருந்து இதுபோன்ற காமிக் கரெக்டர் பொம்மை சேர்ப்பதென்றால் அலாதி விருப்பம்.. பயபுள்ள இப்ப வரை எங்க பார்த்தாலும் பொம்மையை வாங்கிட்டு வந்து தன்னோட செல்ப்ல அடுக்கிருவான்.... ரொம்ப சின்னப்புள்ளத்தனாம இருக்குனு எல்லாரும் கிண்டல் பண்ணியும் அவனுக்கு அந்த பொம்மை பையித்தியம் போகல😂😂 இதை நம்ம ஶ்ரீ தெரிஞ்சிக்கிட்ட அவனோட பிறந்தநாள் அன்னைக்கு வச்சி செய்யமுடிவு பண்ணிட்டா😂😂

“ஏன் அத்தான் உங்களுக்கு சின்னபுள்ளைங்க விளையாடுற பொம்மை மேல இவ்வளவு லவ்வு??”

“அதுதான் தெரியல அம்லு... எங்க பார்த்தாலும் வாங்கிட்டு வந்து செல்பில் அடுக்கிருவேன்.. செல்ப்ல அதுங்க எல்லாம் கெத்தா நிற்கிறத பார்க்கிறப்போ அவ்வளவு ஹேப்பியா இருக்கும்...”

“புள்ளைக்கு பொம்மை வாங்கிகுடுக்குற வயசுல நீங்க பொம்மை வாங்கி சேர்க்கிறீங்களா??கொடுமைடா...”

“அது வேற வாங்கி கொடுத்துக்கிறேன்.. நீ என்ன பண்ணுறனா நம்ம பசங்க இந்த பொம்மையில தொடாம பார்த்துக்கனும்... சரியா??”

“ஆமா வேற வேலை இல்லை பாருங்க.. உங்களை மேரேஜ் பண்ணுறதுக்கு இந்த பொம்மைக்கெல்லாம் நான் பார்டிகார்ட் வேலை வேற பார்க்கனுமா???”

“உன் அத்தான் கஷ்டப்பட்டு சேர்த்த கலெக்ஷன்மா அதெல்லாம்... நீ தான் அதெல்லாம் கவனமா பார்த்துக்கனும்..”

“அத்தான் எனக்கு ஒரு சந்தேகம்...”

“சொல்லு அம்லு...”

“நீங்க உண்மைக்குமே பிஸ்னஸ் மேன்தானா??”

“ஏன் அம்லு உனக்கு இப்படி ஒரு சந்தேகம்??”

“பின்ன என்ன தமிழ் இலக்கியத்துல பூந்து விளையாடுறீங்க, பைக்குனா உயிரை விடுறீங்க, பொம்மை கலெக்ஷன்ஸ் கெதர் பண்ணுறீங்க??? இது மட்டுமா??? கெத்து காட்ட மாட்டேங்கிறீங்க... கோபப்படமாட்டேங்கிறீங்க... இதெல்லாம் ஒரு பிசினஸ் மேன் பண்ணுற விஷயமா???” என்று ஶ்ரீ கேட்க நகைத்தவன்

“ஏன் அம்லு பிசினஸ் மேன்னா எப்படி இருக்கனும்னு நினைக்கிற??”

“சும்மா கெத்தா இருக்கனும்.. உணர்ச்சி துடைச்ச முகம் இருக்கனும், நிறைய பேசக்கூடாது, அவங்கள பார்த்தாலே சலூட் அடிக்கனும்னு தோணனும்..” என்றதும் மீண்டும் நகைத்தவனை முறைத்தாள் ஶ்ரீ.

“ஏன் ஶ்ரீ தமிழ்படம் நிறைய பார்ப்பியோ?? பிசினஸ் மேனுக்கு இவ்வளவு அழகா டெபினிஷன் சொல்லுற??”

“என்ன கிண்டல் பண்ணுறீங்களா???”

“இல்லை அம்லு கிளேரிபை பண்ணுறேன்... பிசினஸ் மேன்னு சொல்லுறியே.. அவங்களும் மனிஷன் தானே. அவங்களுக்கும் தனி விருப்பு வெறுப்பு இருக்கும் தானே.... அம்லு பிசினஸ் மேன் இப்படி தான் இருக்கனும்னு எந்த வரைமுறையும் இல்லை.. நீ சொல்லுற கரெக்டரிஸ்டிக்ஸ் எல்லாம் அந்த காலத்துல உள்ள பிசினஸ் மேக்னட்சோட தியரி.. இப்போ யாருமே அப்படியொரு எம்பிளோயரை விரும்பமாட்டாங்க... அதோடு அப்படி இருந்து தான் சம்பாரிக்கனும்னு இல்லை... எதுக்கு டெக்னாலேஜினு ஒன்னு இருக்கு.. அதை யூஸ் பண்ணி நம்ம வர்க் லோட்டை குறைச்சிக்கிட்டு லைப்பை பாலண்ஸ் பண்ணலாம்...”

“நல்லா பேசுறீங்க????”

“உன்னை விடவுமா அம்லு???”

“ம்ம் நக்கலு...”

“யாயாயா...”

“ஐயே... போதும்.. சரி வாங்க... உங்களுக்கு இன்னொரு சப்ரைஸ் இருக்கு...” என்றவள் அவனை அழைத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.
அங்கு அவனது புது மாடல் என்பீல்ட் புல்லட் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது...

அதை பார்த்தவன் அதனருகே சென்று வட்டமிட்டவன் ஶ்ரீ அருகே வந்து
“அம்லு.. இந்த பைக் எப்படி இங்க??”

“நான் தான் ரித்வி அத்தானை கொண்டு வர சொன்னேன்.. இந்தாங்க சாவி... இப்போ என்னை ஒரு லாங் ட்ரைவ் கூட்டிட்டு போங்க..” என்றவள் ரிஷி கையில் சாவியை திணிக்க
“இப்போவா???”

“ஆமா.. இப்போ தான்..” என்றதும் ரிஷி

“வா போகலாம் அம்லு...”

“உண்மையாவா அத்தான்??”

“அப்போ நீ சும்மா தான் கேட்டியா??” என்று ரிஷி கேட்க

“அப்படி இல்லை.. நீங்க இவ்வளவு சீக்கிரம் ஓகே சொல்லுவீங்கனு நான் எதிர்பார்க்கலை...”

“ஹாஹா... கரும்பு தின்ன யாருக்குமா கசக்கும்??”

“ம்ம்.. போய் அந்த தள்ளுவண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க..”

“தள்ளுவண்டினா சொல்லுற?? இன்னையோட இந்த பெயருக்கு ஒரு முடிவுகட்டுறேன்...” என்றவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய அதில் இருபுறமும் காலிட்டு
அமர்ந்துக்கொண்டாள் ஶ்ரீ.

“அம்லு டைட்டா புடிச்சிக்கோ.. 120 ஸ்பீட்ல போகப்போறேன்....”

“சரிசரி நீங்க போங்க..” என்றதும் காற்றைக்கிழித்துக்கொண்டு பறக்கத்தொடங்கியது அந்த புல்லட்.. நடுச்சாமம் என்பதால் தெருவில் வாகனங்கள் எதுவுமில்லாமல் இருக்க சரட்டென பறந்தது புல்லட்.. ஶ்ரீயோ நொடிக்கு நொடி அவளது அணைப்பை நெறுக்கினாள்.. அதனை அனுபவித்த ரிஷி மெதுமெதுவாய் வேகத்தை அதிகப்படுத்தினான்..கிட்டத்தட்ட ஶ்ரீ கண்மூடி அவன் முதுகோடு நன்றாக ஒட்டிக்கொள்ளும் வரை வேகத்தை அதிகப்படுத்தியவன் அதற்கு பிறகு வேகத்தை குறைத்தான்.

திடீரென வேகம் குறையவும் அதை உணர்ந்த ஶ்ரீ மெதுவாக கண்களை திறந்து பார்த்தவள் அவளது அணைப்பை சற்று தளர்த்தி
“என்ன அத்தான் ஸ்பீடை குறைச்சிட்டீங்க??”

“சும்மா தான் அம்லு..” என்றவன் மைண்ட் வாயிசில்

“ஏதோ உன்னை பயமுறுத்துறதா நினைச்சி ஸ்பீடா போனா நீ என்னை கட்டிப்புடிச்சி என் பிரம்மச்சரியத்துக்கு செய்வினை வச்சிருவ போல இருக்கு...” என்று புலம்பினான்.

“ஏன் அத்தான்.. உங்களுக்கு ஏன் பைக்னா ரொம்ப புடிக்கும்..??”

“எனக்கு பைக்குல ட்ராவல் பண்ண ரொம்ப புடிக்கும் அம்லு.. அதுனால பைக் ரொம்ப புடிக்கும்..”

“புரியலையே...??”

“எனக்கு சின்ன வயசுல இருந்தே ட்ராவலிங்னா ரொம்ப பிடிக்கும்... ட்ரெயின், பஸ், கார்னு,ப்ளைட்னு எல்லாத்துலயும் ட்ராவல் பண்ணியிருக்கேன்... ஆனா நான் எதிர்பார்த்த சந்தோஷத்தை அந்த ட்ராவல் கொடுத்ததில்லை... ஆனா இந்த புல்லட்டுல ட்ராவல் பண்ணப்போ நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை... இயற்கை என்மேல இருக்க மாதிரியும் அதில் ஒவ்வொரு படைப்பையும் நான் உள்ளெடுத்து அனுப்பவிக்கிற மாதிரியும் பீல் பண்ணேன்... மலைப்பிரதேசம் போகும் போது சில பாதைகளில் பைக்கை தவிர வேற எதுவும் போகமுடியாமல் இருக்கும்... அப்போ அந்த பாதையை பைக்கில கடக்கும் போது அவ்வளவு கெத்தா இருக்கும்.. ஏதோ ஒரு ஜெயித்த உணர்வு இருக்கும்.. இது என்ன லூசுத்தனமானு உனக்கு தோணலாம்.. ஆனா அது ஒரு வித்தியாசமான எக்ஸ்பீரியன்ஸ்.. அதுவும் பனி அதிகமான இடங்களில் பைக்கில் ட்ராவல் பண்ணுறது வித்தியாசயான அனுபவம்... அதோடு பைக்கில் ட்ராவல் பண்ணும் போது இயற்கையை இன்னும் அழகாக பார்க்கலாம்... உன்னை ஒருநாள் கூட்டிட்டு போறேன்... அப்போ உன்னால அதை உணரமுடியும்...”

“கேட்க நல்லா தான் இருக்கு..ஆனா ரொம்ப தூரம் இப்படி உட்கார்ந்து ட்ராவல் பண்ணா பென்டு கழண்டுறாதா??”

“ஹாஹா... உனக்கு உன் பிரச்சனை... சரி இப்போ நாம போகலாமா??”

“ம்ம்.. போகலாம்..” என்றதும் ரிஷி பாம் ஹவுஸ் நோக்கி பைக்கை திருப்பினான்...

ஶ்ரீயும் வரும் வழி நெடுகிலும் ரிஷியை அணைத்தபடி வளவளத்துக்கொண்டு வந்தாள்.. இடையிடையே அவன் காட்டி இரவு நேர அழகினை ரசித்தபடி வந்தவளுக்கு அந்த பயணம் இனிமையாய் அமைந்தது....

பாம் ஹவுஸ் வந்திறங்கியதும் ரிஷியை அழைத்துக்கொண்டு இரண்டாம் தளத்திற்கு சென்றாள் ஶ்ரீ. அங்கிருந்த மேசையின் மீதிருந்த பரிசுப்பொதியை ரிஷியிடம் கொடுத்தவள் அதை பிரித்துபார்க்கக்கூறினாள்.
அவளின் அதை பிரித்தவன் அதில் கண்டது ஒரு அழகிய பென்சில் ஸ்கெட். அதில் அவனும் ஶ்ரீயும் இருந்தனர். ஶ்ரீ அவனது மார்பின் மீது கைவைத்து தலைசாய்ந்திருக்க அவன் செல்பி எடுத்த ஒரு போட்டோவே பென்சில் ஸ்கெட்ச் செய்யப்பட்டிருந்தது.. அதன் கீழே ரிஷி-தானு என்று கையொப்பமிடப்பட்டிருந்தது..

அதை பார்த்த ரிஷி அதை தடவிக்கொடுத்து
“அம்லு இது நம்ம என்கேஜ்மண்ட் அப்போ அந்த ரூம்ல வச்சு எடுத்தது தானே??? சூப்பரா இருக்கு அம்லு...ரொம்ப உயிரோட்டமா இருக்கு இந்த ஸ்கெட்ச்... ரொம்ப தாங்ஸ் அம்லு...”

“தாங்ஸ்லா இருக்கட்டும்.. இப்போ நீங்க எனக்கு ஒரு கிப்ட் தர போறீங்க...”

“என்ன கிப்ட்??” என்று ரிஷி கேட்க

“அந்த கிப்டையும் அங்கே இன்னொரு கிப்ட் இருக்கே அதையும் எடுத்துக்கிட்டு மேல வாங்க..” என்று பணித்துவிட்டு மேல்மாடியிற்கு சென்றாள் ஶ்ரீ.
அவள் கூறியவற்றை எடுத்துக்கொண்டு ரிஷியும் அவளை பின்தொடர்ந்தான்...

மேலே வந்ததும் அவன் கையிலிருந்தவற்றை வாங்கி வைத்தவள் அவனிடம் ஒரு பெட்டியை நீட்டி அதை திறந்து பார்க்க சொன்னாள்.
அவள் சொல்படி அதை திறந்து பார்த்தவன் அதனுள் ஒரு தங்கச்சங்கிலி இருக்க அதை கையில் எடுத்தவன்
“இது எனக்கா அம்லு...?”

“இல்லை அய்த்தான் எனக்கு.. நாம இப்போ கல்யாணம் பண்ணிக்க போறோம்..” என்றதும் அதிர்ந்த ரிஷி

“அம்லு என்ன விளையாட்டு இது??”

“ஐயோ இது விளையாட்டு இல்லை அத்தான்... நிஜமா தான் சொல்லுறேன்..”

“என்னது நிஜமாவா?? என்னை வச்சி காமடி பண்ணனும்னு ஏதும் முடிவு பண்ணியிருக்கியா??”

“ஆமா இந்த நடுராத்திரியில உங்களை வச்சி காமடி பண்ண நான் என்ன லூசா?? நான் நிஜமா தான் சொல்லுறேன்... இப்போ நீங்களும் நானும் மேரேஜ் பண்ணிக்க போறோம்..”

“அம்லு...”

“அத்தான்.. எனக்கு வீட்டுக்கு தெரியாம ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு பெரிய கனவே இருக்கு.. ஆனா என் தாய்குலத்துக்கு பயந்து அந்த ரிஸ்கை எடுக்க விரும்பலை... அதைவிட முக்கியமான விஷயம் எனக்கு லவ்வும் செட்டாகலை... ஆனாலும் அந்த ஆசை இன்னும் வரை இருக்கு.... அதுனால நாம ரெண்டு பேரும் திருட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்.. தாலியெல்லாம் கட்டதேவையில்லை... இந்த செயினை தாலியா நினைச்சு என்னோட கழுத்துல போட்டுவிடுங்க... இந்த முழு நிலாவை சாட்சியா வைத்து என்னை உங்களோட சரிபாதியாக ஏத்துக்கோங்க..”

“அம்லு நீ நிஜமா தான் சொல்லுறியா??”

“நான் என்ன இவ்வளவு நேரம் கதையா சொல்லிட்டு இருக்கேன்... என்னை நீங்க இப்போ மேரேஜ் பண்ணிக்காட்டி நம்ம பேரண்ட்ஸ் பிக்ஸ் பண்ணியிருக்க கல்யாணத்தன்னைக்கு மண்டபத்துல இருந்து ஓடி போயிருவேன்..அவ்வளவு தான்..”

“யார்கூட அம்லு..??” என்று ரிஷி சீரியஸாக கேட்க

“தனியா..” என்றபடி ரிஷியை முறைக்க அவனோ சிரிப்பை கட்டுப்பட்டுத்த ப்ரம்மபிரயத்தணப்பட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது..
அவனை சரிமாரியா அடித்தவள்

“நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. நீ சிரிச்சிட்டு இருக்கியா??”

“பின்ன என்ன அம்லு?? நீ பண்ணுற காமெடிக்கு வேற என்ன பண்ணுறது??? தனியா ஓடி போகப்போறியா??”

“அத்தான் ரொம்ப பண்ணுறீங்க... இப்போ நாம மேரேஜ் பண்ணிக்க போறோமா இல்லையா???”

“இப்போ என்னை உனக்கு திருட்டு கல்யாணம் பண்ணிக்கனும் அவ்வளவு தானே?? வா பண்ணிக்கலாம்..”

“நிஜமா.. ஐயோ சோ ஸ்வீட் அத்தான் நீங்க..” என்று அவன் கன்னம் பிடித்து கொஞ்சியவள்

“செயினை போட்டு விடுங்க அத்தான்..” என்று ஶ்ரீ கூறியதும்

“ஏன் ஶ்ரீ உனக்கு எல்லாத்துலையும் அவசரம் தான்.. கொஞ்சம் இரு... திருட்டு கல்யாணம்னாலும் சரியா நடக்க வேணாமா??” என்றவன் அவளை பால்கனியருகே அழைத்து சென்றவன் அங்கு நிலவொளி அதிகமாய் இருக்கும் இருத்தில் ஶ்ரீயை நிற்கச்செய்தவன் அவளை சற்று நேரம் காத்திருக்க சொன்னவன் மாடியிலிருந்து கீழிறங்கி சென்று தன் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றவன் காரை திறந்து க்ளோவரில் இருந்து அந்த குங்கும பொட்டலத்தை கையில் எடுத்தவன் கார் கதவை அடைத்துவிட்டு மாடியிற்கு சென்றான்..
மாடியிற்கு வந்தவன் அங்கு ட்ரெசில் இருந்த மெழுதிரியினை எடுத்து வந்தவன் அதை ஏற்றி நிலத்தில் நிலை நிறுத்தியவன் தன் மொபைலை எடுத்து அதில் ஒரு பாடலை ஓடவிட்டான்.

மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன கேத்துனா
கண்டே பத்நாமி சுபகேத்தவம்
ஜீவா சரதாம் சதம்

ஶ்ரீயின் கையிலிருந்த டாலர் பென்டனிருந்த அந்த செயினை வாங்கியவன் அவள் கழுத்தில் அணிவித்து அந்த குங்கும பொட்டலத்திலிருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் அணிவித்தான்.
ஶ்ரீயிற்கோ நடப்பவை அனைத்தும் ஏதோ கனவு போலிருந்தது... அந்த இரவு நேரத்தில் அவனது அதிரடியில் அவள் சற்று திகைத்துவிட்டாள்.. ஆனால் அவளது விருப்பம் அது என்று அறிந்ததும் மறுக்காது அவளுக்காய் அவன் அதை ஏற்றுக்கொண்டு செய்தது அவன் மீதான் அவளது இன்னும் பெருகச்செய்தது...
அவன் அந்த செயினை அணிவித்தபோது அவளுள் ஒரு சிலிர்ப்பு... முழுதாய் அவனதாகிவிட்டோம் என்ற எண்ணத்தினால் தோன்றிய சிலிர்ப்பு.... அவனது கைகள் அவள் கழுத்தில் உரசிச்சென்ற அந்த சிறுநொடியில் அவளது உடலில் ஆயிரம் மாற்றங்கள்... இதுவரை அவனுடன் இருந்த பொழுதுகளில் தோன்றாத எண்ண அலைகள்... காதலையும் தாண்டிய ஒரு உணர்வு... அப்போதும் எனக்கானவனாய் எனக்குரியவனாய் மட்டும் இருக்க வேண்டுமென்ற உணர்வு... அவன் கண்களை நோக்கி மறுத்துவிட்டன ஶ்ரீயின் கண்கள்... அது அச்சமா நாணமா என்று பெண்ணவளுக்கு புரியவில்லை..
தன் கையில் இருந்த குங்கும பொட்டலத்திலிருந்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றில் வைத்துவிட்டவன் மொபைலில் இன்னுமொரு பாடலை ஒலிக்கசெய்துவிட்டு அவள் எதிர்பாராத நேரத்தில் அவளை கைகளில் ஏந்தியவன் அந்த மெழுவர்த்தியை வலம் வரத்தொடங்கினான்.

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்

செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்

கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும்
எந்தன் காதல் தீரேன்

மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
தாய் மடியாவேன்

சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்

உன் கனவுகள் நிஜமாக
என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என் உயிர் தருவேன்

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN