என் போர்
முத்தூர் கோட்டை பெரும் பலம் வாய்ந்தது. ஆனால் மேற்கு வாயிலில் பக்கம் அமைந்துள்ள காடுகள் இடையே அமைந்திருந்த மரங்கள் இடையே பல ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்த ஒரு லட்சம் வீரர்கள் அந்த கதவினை உடைத்துக் கொண்டு உள்ளே போக முயன்றனர். ஆனால் கோட்டை கதவுகள் திறந்திருந்த காரணத்தினால் அவை எளிதாக உள்ளே சென்றனர். நேராக சென்று தெற்கு புறம் நடக்கும் சண்டையில் கலக்க முயன்றனர். ஆனால் அங்கே சண்டை எதுவும் இல்லாததை கண்டு திகைத்தனர்.
மேலும் தங்கள் கடற்படை கலங்கள் அனைத்தும் தோல்வியுற்று அழிந்து கிடப்பதையும் கண்டனர். வேறு ஒரு தலைவனாக இருந்தால் வருத்தம் கொண்டிருப்பான். ஆனால் கஜவர்மன் மகிழ்ச்சியே கொண்டான். தன் கடற்படை அளிந்தாலும் அதன் பலனாக தன் படை நகருக்குள் நுழைந்ததை வெற்றியாவே கொண்டான். அடுத்து அரண்மனையை அடைய வேண்டியது தான் என எண்ணினான். சுமார் 110000 வீரர்கள் கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் போருக்கு தயாராக இருந்தன.
படுத்திருக்கும் பெரும் பிசாசு போல் தெரிந்தது அவர்கள் உருவம். முத்தூரின் வெளிக் கோட்டைக்கும் உள்ளே இருந்த நகருக்கும் இடையே அரை காதம் தூரம் கொண்டது. அதனை கடந்தால் நகரையையும் அங்கே உள்ள அரண்மனையையும் அடையலாம். அந்த பயணத்தை அவர்கள் தொடர எண்ணினார்கள் அப்பொழுது அந்த அதிசயம் நடந்தது. எதிரி கப்பல்களை அழித்து விட்டு முன்னே வந்து நின்ற முத்தூர் கப்பல்களில் ஒன்றில் இருந்து ஒரு பெரிய திரிமுக அம்பு ஒன்று பெரும் வேகத்துடன் பாய்ந்து வந்தது. அந்த அம்பினை யாரும் காண இயலவில்லை இரவின் காரணமாக.
ஆனால் அது பொறியில் இருந்து விடுபட்ட சத்தம் பெரும் இடியோசை போல் கேட்டது. அதனை கேட்டு அதிர்ந்த வீரர்கள் பெரும் ஆபத்தில் சிக்கினர். வந்த அம்பு அவர்கள் மேல் உடைத்து சிதறியது. அதில் இருந்து ஆயிரக்கணக்கில் தோற்பைகள் கொட்டினர். வீரர்கள் மேல் விழுந்த பைகள் விழுந்த வேகத்தில் வெடித்து சிதறின. அதனால் வீரர்கள் அனைவரும் எண்ணெயில் முழ்கியது போல் கோழ கோழ என ஆகினர்.
இது என்ன மர்மம் என அவர்கள் சிந்திக்கும் முன்பு அடுத்து நெருப்பு மழை பொழிந்தது. அந்த அம்பில் இருந்து கொட்டிய நெருப்பு துளிகள் வீரர்கள் மேல் படர்ந்து இருந்த எண்ணையின் மேல் எளிதாக தீ பற்றியது. சில நொடிகளிலே தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. பெரும் அபய குரல் எழுப்பி கொண்டு எந்த பகுதியில் எல்லாம் எண்ணெய் தெரித்து தீ பற்றியதோ அவர்கள் அனைவரும். நெருப்பில் சிக்கி கதறிக் கொண்டே அழிய தொடங்கினர். பெரும் அபய குரலும் கேட்டது.
கஜவர்மன் நடந்த அதிசயத்தை கண்டான். தன் படையின் ஒரு பகுதி பற்றி எரிவதை கண்டான். பயந்து ஓடும் அவர்களுக்கு தன்னால் கட்டளை இட முடியாத சூழலை கண்டான். முதல் முறையாக கலங்கினான். இந்த வீரர்கள் தெற்கு புறம் உடைந்து இருந்த வாயில் வழியாக வெளியே தப்பி செல்ல இயலவில்லை. ஏனென்றால் அந்த வாயிலுக்கும் கடற்கரைக்கும் இடையே தான் திரிபுர அம்பு வீசப்பட்ட வீரர்களை எரித்துக் கொண்டு கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
உடனே தப்பி கிழக்கு புறம் ஓடி நகரை அடைந்து அதனை அழிக்கலாம் என சென்றவர்கள் மேலும் அதிர்ச்சி கொண்டனர். அவர்கள் முன்னே அமைக்கப்பட்டிருந்த பொறிகள். படபடவென பல ஆயிரம் அம்புகளை அந்த சேனையின் மேல் எரிய தொடங்கினர். ஒரே நேரத்தில் எய்யப்பட்ட பல ஆயிரம் அம்புகள் தாக்கி முன்னாலே ஓடி சென்ற பல வீரர்கள் மாண்டனர் அவர்கள் ஏரி சென்ற குதிரைகளும் தாக்கப்பட்டு அழிந்தன.
அந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க எண்ணி முன்னால் சென்ற வீரர்கள் பின்னால் திரும்பி ஓட நினைத்தனர். ஆனால் விவரம் புரியாமல் பின்னால் வந்த வீரர்கள் அவர்களை முன்னே தள்ள அவர்கள் மாண்டனர். அடிக்கு அடி பல ஆபத்துகளை அழகாக செதுக்கி வைத்திருக்கும் இந்த போர்களத்தை விட்டு பின் வாங்குவதே தன் சேனையை காக்க ஒரே வழி என எண்ணிய கஜவர்மன் மேற்கு வாயில் பக்கம் தாங்கள் வந்த பக்கமே செல்ல முரசு கொட்டினான்.
படை பெரும் வேகத்துடன் பின்வாங்கி ஓடியது. அந்த மேற்கு புற வாயில் வழியே சென்று தன் கூடாரங்களில் பதுங்குவதே தப்ப ஒரே வழி என எண்ணி ஓடினார்கள். யானை படையின் பெரும் பகுதியும் குதிரை படையின் பெரும் பகுதியும் திரிபுர அம்பில் அழிய. காலாட்படை கிழக்கு புறம் இருந்து பொழிந்த அம்பு மழையினால் அழிய மீதம் உள்ள படையை காக்க கிழக்கு பக்கம் ஒடினார்கள். ஆனால் அங்கும் அவர்களுக்கு ஏமாற்றமே காணப்பட்டது. அந்த வாயிலின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன.
அதற்கு முன்னால் முத்தூரின் படை இருபதானாயிரம் வீரர்கள் அணிவகுத்து நின்றனர். அப்பொழுது தொடங்கியது பெரும் போர். இரு சேனைகளும் பெரும் வேகத்துடன் மோதி கொண்டனர். இரத்த வெள்ளமும் விரைவாக ஓட தொடங்கியது. அப்பொழுது வெளியே காடு பற்றி எரியும் சூழலும் மரங்கள் வெடிக்கும் சத்தமும் கேட்டது. அந்த புறம் எய்யப்பட்ட மற்றொரு திரிபுர அம்பு விழைவித்த நாசமே அவை என புரிந்தது.
அதனை கண்ட கஜவர்மனுக்கு இந்த போரில் வென்றால் தான் வாழ்வு இல்லை எனில் அவ்வளவு தான் பின்வாங்க கூட இடமில்லை என புரிந்தது. அந்த யோசனை வீரர்களுக்கும் புரிய பெரும் வேகத்துடனும் வீரத்துடனும் போரிட்டனர். தன் படையில் ஒரு பகுதி அழிந்திருந்தாலும் இங்கே மீதமுள்ளவர்களை எளிதாக அழிக்கலாம் என எண்ணி போராடினான். சில நாழிகைகள் கழிய அந்த எண்ணத்தையும் பொய்யாக்கும் வகையில் தெற்கு புறம் இருந்து ஐயாயிரம் குதிரை வீரர்கள் பெரும் வேகத்துடன் பாய்ந்து வந்தனர்.
வந்த வேகத்திலேயே எதிரி படையுடன் மோதி மறு புறம் வந்தனர். எதிரி படை இரண்டாக கத்தியால் பிரிக்கப்படுவது போல் பிரிக்கப்பட்டதால் பலம் குறைந்து போராட வேண்டியது. யார் அந்த வீரர்கள் என எண்ணிய கஜவர்மன் அவர்கள் கப்பல்களில் இருந்து குதிரையுடன் இறங்கி தாங்கள் இந்த புறமும் அந்த புறமும் படையுடன் ஓடிய சமயங்களில் அணிவகுத்து திரிபுர அம்பின் தாக்கம் குறைந்த உடன் உள்ளே வந்தவர்கள் என உணர்ந்தான்.
பெரும் போர் ஒரு ஜாமம் வரை தொடர்ந்தது. முத்தூர் வீரர்கள் என்னதான் வேகத்துடன் போரிட்டாலூம் எதிரிகளின் எண்ணிக்கை பலம் அவர்கள் வீரத்தை சளைக்கவே செய்தது. கஜவர்மன் பெரும் வேகத்துடன் போரிட்டான். இத்தனை அழிவை தந்த இந்திர ராணியை எப்படியும் அழித்து விட வேண்டும் என போரிட்டான். அந்த போரின் இடையே அவள் போர்களத்தில் இருக்கிறாளா? என தேடினான். அவளை கண்டு பிடித்து தன் கைகளால் அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் போராடினான்.
அப்பொழுது தூரத்தில் அவள் கையில் வாழ் ஏந்தி போராடுவதை கண்டான். அவன் கண்கள் நெருப்பை கக்க வேகத்துடன் அவளை நெருங்கினான். அவன் குதிரையின் மேல் அமர்ந்து தன்னை நோக்கி வருவதை கண்ட அவள் தன் குதிரையை அவன் பக்கம் திருப்பினான். சில கணங்களில் இருவரது வாழ்களும் முட்டிக் கொள்ளும் நிலை நெருங்க. பெரும் மணிகள் "டங்டங் " என ஒலித்தன. அப்பொழுது மேற்கு புற வாயில் திறந்தன. அந்த சம்பவங்களை அவளை தாக்குவதை விடுத்து கவனித்தான் கஜவர்மன்.
ஒரு பத்தாயிரம் குதிரை வீரர்கள் காற்றிலும் கடுகிய பெரும் வேகத்துடன் போர்களத்தை நோக்கி வந்தனர். சற்று தூரம் தள்ளி மற்றொரு பத்தாயிரம் வீரர்கள் முன்னவர் வந்த வேகத்திலேயே வந்தனர். ஒரு பெரும் யானைகள் கொடிய வேகத்தில் வந்து மரத்தினை மோதுவது போல் வந்து. படையிலுள் நுழைந்தன. அந்த படைபிரிவுகளில் வேகமாக முதலாவதாக காற்றில் செல்லும் அம்பை போல் சீறி வந்தது ஒரு பெரும் வெள்ளை நிற புரவி அதன் மேல் அமர்ந்திருந்தான் ஒரு வீரன். அவன் முகம் தெரியாதவாறு கவசம் அணிந்திருந்தான். ஆனால் அந்த இருபதாயிரம் புரவிகளை விட வெகு விரைவாக வந்தது அந்த வீரனின் புரவி தான்.
அவர்கள் விளைவித்த போர் கொடூரமாக தொடங்கியது. இதனை கண்ட கஜவர்மன் தன் வெற்றி தள்ளி போவதாக உணர்ந்தான். ஆகவே இந்திர ராணியை அழிக்க எண்ணி வாளை கையில் பிடித்து தாவினான். அவள் அதனை அருமையாக தடுத்தாலும் சற்று பின்வாங்கினாள். அந்த இடைவெளியில் அங்கே வந்தான் அந்த கவசம் அணிந்த வீரன். தன் கவசத்தை கழட்டி எரிந்து " இது என் போர் " என்றான் பயங்கரமான குரலில். அதனை பார்த்து கஜவர்மன் பெரும் அதிர்ச்சி அடைந்தான் ஏனென்றால் அந்த வீரன் அருள்வர்மன் என்ற காரணத்தினால்.....
புது விடியல்
தன் கண்களையே நம்ப முடியாமல் ஒரு கணம் பார்த்தான் கஜவர்மன். தன் முன்னாலே நிற்பது அருள்வர்மன் தான் அவன் அமர்ந்திருப்பதும் அவனது செல்ல புரவி வீரா தான். அவனது எண்ணங்கள் அன்றைய போர்களத்தில் இருந்து விடைபெற்று பல நாட்களுக்கு முன்னாலே ஒரு ஒற்றன் பல வீரர்களை கொன்று விட்டு தப்பி சென்ற காட்சியும் அவன் மேல் கோடாரி வீசப்பட்ட நிமிடமும் முன்னே தோன்றின. கழுத்தில் கோடாரி வீசப்பட்டு பெரும் இரத்த களரியில் சென்ற வீரன் எவ்வாறு பிழைத்தான்? என்ற கேள்வியுடன் முடிந்தது.
அவன் எதிரே குதிரையில் அமர்ந்திருந்த இந்திர ராணியின் எண்ணமும் ஏறத்தாழ அவ்விதமே இருந்தன. குதிரை அவனை தாங்கி வந்த காட்சியும் தெரிந்தது. ஆனால் அந்த காட்சிகள் கேள்வியில் முடியவில்லை மாறாக பதிலில் முடிந்தன.
அருள்வர்மனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில் காட்சி தொடங்கியது. அங்கே " இவன் உண்மை வீரர் தான் " என கூறிய பொழுது அவனது செல்ல புரவி இவளை முட்டி தள்ளுவதை உணர்ந்து திரும்பி பார்த்தாள். அந்த புரவி பழைய நினைவுகளை கிளப்பி விட்டது அந்த புரவியில் இருந்து விழப் போன இவள். அவளை காத்து பின் பழகிய அருள்வர்மன். பின் இருவரையும் தாங்கி கொண்டு சென்ற இதே புரவி பின் அதில் அமர்ந்திருந்த போதே தன் காதலை சொன்ன அவன். என பல எண்ணங்கள்.
ஆனால் இந்த நினைவுகளை களைக்கும் வண்ணம் அந்த புரவி பெரும் சத்தம் போட்டு கனைத்தது. அங்கே ஓரிடத்தில் நிற்காமல் அந்த அறையிலேயே ஓடியது சுவரில் சென்று முட்டி அழுதது. இளவரசியின் சேலை தலைப்பை வாயால் கடித்து இழுத்தது. இதனை கண்ட இந்திர ராணிக்கு ஒரு எண்ணம் தோன்றியது அந்த புரவி தன்னிடம் எதனையோ தெரிவிக்க எண்ணுகிறது என்று. ஆனால் அது என்னவென்று புரியவில்லை.
அந்த புரவியை கூர்ந்து நோக்கினாள். அதன் கழுத்துக்கு அடியில் ஒரு சிறிய தோற்பை தொங்குவதை கண்டாள். அந்த பை இருந்த புறத்தை விட்டு மறு புறத்தை அந்த புரவி முட்டுவதை அறிந்தாள். உடனே அருகே சென்றாள். அதன் அருகே செல்ல வேண்டாம் என தோழிகளும் மருத்துவரும் தடுப்பதை காதில் வாங்காமல் அருகே சென்று அந்த பையை அவிழ்த்தாள். குதிரையும் சாதுவாக அவள் அருகே நின்றது.
அதனை பிரித்து பார்த்த அவள் ஆச்சரியம் அடைந்தாள். அதில் சிறிய சிறிய மண் குப்பிகள் வகை வகையாக பிரித்து தோற்பையின் உற்புறம் சொறுகி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு பெயர் எழுதப்பட்டிருந்தது. விஷக்கடி, விஷம், எலும்பு முறிவு, மரண காயம், என எழுதியிருந்தது. அதில் மரண காயம் என இருந்த பிரிவில் நான்கு குப்பிகள் இருந்தன. அவற்றை எடுத்தாள்.
ஒன்றில் காயத்திற்கு, அருந்த, முகர என இருந்தன. அவை அனைத்தும் நோய் தீர்க்கும் மருந்துகள் என உணர்ந்தாள். அவற்றை மருத்துவரிடம் கொடுக்க அவர் சிறிது நெருப்பு கங்கு கொண்டு வரச் சொன்னார். பின் காயம் என இருந்த குப்பியில் இருந்த திரவத்தை எடுத்து பஞ்சில் வைத்து அவன் காயத்தில் வைத்தார். பின் அருந்த என இருந்த மருந்தில் சில துளிகளை குடிக்க கொடுத்தார். கொண்டு வந்த நெருப்பில் நுகர என இருந்த குப்பியில் இருந்த பொடியை நெருப்பில் போட்டு முகர விட்டார். இந்த மருத்துவத்தினை அமைதியாக இந்திர ராணியும் அவனது புரவி வீராவும் கவனித்துக் கொண்டு இருந்தனர்.
அப்பொழுது புரவியின் முகத்தினை அவள் பார்த்தாள் அதில் கவலையும் கண்ணீரும் தெரிந்தாளும் சாதுவாக இருந்தது. என்னே ஒரு அதிசய புரவி என உள்ளூர வியந்து கொண்டாள். அந்த ஔடதங்களை தன்னிடம் இருப்பதை காட்டவே அவ்வளவு நேரம் இந்த பாடு பட்டு இருக்கிறது அந்த புரவி என புரிந்தது. சில நொடிகளில் இரத்தம் சுத்தமாக நின்று போய் இருந்தது. அந்த சில துளிகள் மருந்தினையும் குடிந்த அவன் முகம் பொலிவு பெற்றது. சுவாசம் சீராக வந்தது. இறுதியாக அந்த பொடியை நெருப்பில் போட்டதால் வந்த புகையினை சுவாசித்த அவன் சிறிய குரலில் இறுமினான். பின் கண்களை திறந்தான்.
அங்கே நடந்த காட்சிகளை அதிசயமாக பார்த்தாள் இந்திர ராணி. உயிர் காக்கும் மருந்துகளை எப்பொழுதும் உடன் வைத்திருக்கும் அவனது திறமையை கண்டு மகிழ்ந்தாள். " தேவி " என மெல்லிய குரலில் அழைக்க அருகே ஓடிச் சென்று அவனை அணைத்தவாறு தூக்கி அவன் தலையை மடியில் வைத்துக் கொண்டாள் அவள். அவனது புரவியும் அருகே வர அதன் முகத்தை தடவி கொடுத்தான். அதுவும் மகிழ்ச்சியாக அமர்ந்து கொண்டது.
மெல்லிய குரலில் மருத்துவரை அழைத்து மேற் கொள்ள வேண்டிய வைத்திய முறைகளை பற்றி கூறினான். அதனை கேட்ட அவள் அவனுக்கு வைத்தியமும் அத்துப்படி என புரிந்தது. பின் தான் இறந்து விட்டதாக அந்த நகர் முழுவதும் பரவ சொன்னான்.
இந்த நிகழ்வுகள் அரை நொடியில் அவள் சிந்தையில் வந்து சென்றன. அதன் விளைவாக முகத்தில் புன்னகையும் வந்தது. " தேவி விலகி கொள்ளுங்கள் " என கூறிக் கொண்டே கீழே இறங்கினான். பின் நிதானமாக " வா நண்பா போரிடலாம் " என அழைத்தான். கஜவர்மனும் தரையில் இறங்கி போராட தொடங்கினர். வாழ் சண்டை கண் கொள்ளா காட்சியாக இருந்தது. சுற்றி இருந்தவர் தங்கள் சண்டையை நிறுத்தி விட்டு அதனை காண தொடங்கினர்.
போர் இரண்டு நாழிகைகள் கழித்தும் தொடர்ந்து நடைபெற்றன. இருவரும் துளியும் சளைக்காமல் கீரியும் பாம்பை போல் போரிட்டனர். நிலவொளியில் தோன்றிய அதிசய மின்னல்கள் போல இருவரது வாழ்களும் பெரும் வேகத்துடன் மோதிக் கொண்டன. அப்பொழுது " நம் சண்டை யுகமானாலும் முடியாது " என்றான் பெரும் சிரிப்புடன். அப்பொழுது அருள்வர்மன் " ஆனால் சண்டையை தவிர்க்க முடியும் " என்றான்.
அப்பொழுது நிகழ்ச்சிகள் அரை நொடியில் நடந்து முடிந்தன. நாற்புறம் இருந்தும் நான்கு சுறுக்கு கயிறுகள் கஜவர்மன் உடலை சுற்றி விழுந்து நெருக்கின. அருள்வர்மன் தன் வாழை இருமுறை காற்றில் சூழற்ற வெற்றி முரசுகள் கொட்டினர். கஜவர்மனை கயிற்றை கொண்டு பிடித்த நான்கு வீரர்கள் மேலும் சில வீரர்கள் அவனை இழுத்துக் கொண்டு சென்றனர். " நண்பனை என் அறைக்கு அழைத்து செல்லுங்கள் " என்றான்.
அப்பொழுது பொழுது புலரும் நேரம் நெருங்கியது. விடிந்த அந்த பொழுது முத்தூர் மக்களுக்கு நல்ல பொழுதாக விடிந்தது. எதிரிகளின் பெரும் படை திரிபுர அம்பினாலும், தீ அம்புகள் வீசும் பொறிகளாளும் அழிந்து விட்டதாலும், எதிரி படையினால் அவர்கள் படைகள் பல சிறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டதாலும், இறுதியாக போரில் கலந்த இருபதானாயிரம் வீரர்களின் புயல் வேகத்தை கண்டு அவர்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்ததாலும்
இறுதியாக தங்கள் தலைவரும் இளவரசரும் கைது செய்யப்பட்டதாலும் அவர்கள் தொடர்ந்து போராட விரும்பவில்லை மாறாக தப்பி செல்லவே முயன்றனர். இந்தனை காரணங்களால் முத்தூர் படை அந்த பெரும் படையை வென்றது. விடிந்த அந்த பொழுது கபாட வீரர்களுக்கு பெரும் துயரங்களால் தோல்வி சுமையாக இருந்தது. அவை சிதறியும் ஓடினர். ஆனால் முத்தூர் மக்களுக்கு வெற்றி விழாவாக அமைந்தது.