எத்தனையோ
நொடிகள்
யுகமாய்
தோன்றியபோதிலும்
உன் கழுத்தில்
மங்கலநாண்
சூட்டிய அந்த நொடியில்
என் பிறப்பின்
பயனை அடைந்ததாய்
எண்ணி யான்
பரவசைமடைந்ததை
உன் கண்கள்
கண்டுகொண்டதை
என் காதல் மனம்
புரிந்துகொண்டது..
ரிஷி-ஶ்ரீ ஒருபுறம் தம் வேலையில் மும்முரமாயிருக்க (அதாங்க சைட் அடிக்கிற வேலை) ரிஷியின் அருகில் ரவியோடு பேசியபடியிருந்த ரித்வி தன்னவளை கண்களால் விழுங்கிக்கொண்டிருந்தான்.
சிவப்புக்கறையுடைய மஞ்சள் நிற பட்டுடுத்தியிருந்தவள் கைகளுக்கு வளையல், கழுத்தில் நீண்ட மஞ்சள் மற்றும் சிவப்புக்கல் பதிக்கப்பட்ட ஆரம், காதில் சிவப்பு நிற ஜிமிக்கியுடன் கூடிய மாட்டல், நெற்றியில் ஒற்றை தட்டுடைய நெற்றிச்சுட்டி, இடுப்பிற்கு வயிற்றை அழுத்தாத வகையில் மெல்லிய ஒட்டியாணம், காலிற்கு கொலுசு என்று ஆடை ஆபரணங்கள் ஒருபுறமும் முகத்தில் ஶ்ரீயின் கைவண்ணத்தால் ஒப்பனையும் சேர்ந்து அவளை ஜொலித்திட செய்தது... கூந்தல் முடியப்பட்டு பூக்களால் அரணிடப்பட்டிருக்க முன்னுச்சியில் ப்ரென்ச் கட்டின் விளைவால் கூந்தல் கற்றை அசைந்தாடியபடியிருந்தது...
இவையனைத்தும் படிப்படியாய் ரசித்தபடியிருந்தான் ரித்வி. முன்னுச்சியை மறைக்கும் கூந்தல் கற்றையை அவள் விலக்கும் விதமும் இடையிடையே நாக்கினால் ஈரப்படுத்தப்படும் அந்த செவ்விதழும் சிரிக்கும் போதும் பேசும்போதும் பல கதைகள் சொல்லும் அந்த விழிகளும் அவனை கைது செய்து சிறைபிடித்தது..
இவனது முகமாற்றங்களை தன் ஓரக்கண்ணால் ரசித்தபடியிருந்தால் ஹேமா... வந்திறங்கிய நொடியிலிருந்தே தன்னை நொடிக்கூட விலகாது பின்தொடரும் பார்வையை கவனிக்காதது போல் ரசித்துக்கொண்டிருந்தாள் ஹேமா..
அது மட்டுமல்லாது பட்டு வேஷ்டி சட்டையில் இன்னொரு மணமகனாய் நின்றவன் புல் சேவ் செய்திருந்த தன் தாடையை அடிக்கடி தடவியபடி பேசும் தோரணையும் அந்த புல் ஸ்லீவ்வை மடித்துவிட்ட அழகும் அவனை பேரழகனாய் காட்டியது... தன் தமையனை போல் ஆறடி இரண்டு அங்குலத்திற்கு உயர்ந்து நின்றவனுக்கு உயரம் கூட கம்பீரத்தை கொடுக்க அதோடு இணைந்து கொண்டது அவனது இதழ்களின் விரிகை....
இவ்வாறு இரு ஜோடிகளும் தத்தமது இணைகளை சைட் அடித்துக்கொண்டிருக்க பூசாரியின் சொற்படி பெரியவர்கள் தத்தமது வேலைகளை முடித்ததும் பூசாரி
“இரண்டு ஜோடியும் அம்மன் சன்னிதானத்துக்கு முன்னுக்கு வாங்க..” என்றதும் ரிஷியும் ஶ்ரீயும் தாம் நின்ற இடத்திலிருந்து நகர ரித்வியோ ஹேமா நின்றிருந்த இடத்திற்கு வந்து தன் கையை நீட்ட அவளோ புரியாத பாவனையில் பார்க்க ரித்வியோ தன் கண்களை மூடித்திறந்து ஏதோ கூற அதை புரிந்து கொண்டதற்கு பதிலாக ஹேமா ரித்வியின் கையின் மேல் தன் கையினை வைக்க அதை தன் கையால் மூடியவன் அவளை சன்னிதானத்திற்கு முன் அழைத்து சென்றான்.
ஆண்கள் இருவரும் வலப்புறம் நின்றிருக்க பெண்கள் இருவரும் இடப்புறம் நின்றிருந்தனர். பூசாரி அம்மன் வீற்றிருந்து கருவறையினுள் சென்றவர் அங்கு எரிந்து கொண்டிருந்த ஒற்றை விளக்கியிலிருந்து நெருப்பினை கற்பூரத்தின் உதவியால் சூடத்திற்கு இடம்மாற்றியவர் அதை வெளியே எடுத்து வந்து கோயிலிற்கு வெளியேயிருந்த அக்னிகுண்டத்திற்கு மாற்றியவர் சில மந்திரங்களை உச்சாடனம் செய்தார்...
பின் சில பொருட்களை மணமக்களிடம் கொடுத்து அந்த அக்னிகுண்டத்தில் இடச்சொன்னவர் அதற்கு தூபம் காட்டினார்.. பின் அம்மன் காலடியில் வைத்திருந்து மாலை தட்டை எடுத்து வந்தவர் நால்வரையும் அந்த மாலையை கையில் எடுக்கச்சொல்லி பணித்தார்.
நால்வரும் கையில் எடுத்ததும்
“மாலை மாற்றுவதோட பொருள் இவ்வளவு நாளா இரண்டு வேறு ஜீவன்களால இருந்த நாம இரண்டு பேரும் இந்த நொடியிலிருந்து மனதால் ஒரு ஜீவனாக நமக்கான வாழ்க்கையை இந்த நொடியில இருந்து ஆரம்பிக்கிறோம் என்று பொருள்... மாப்பிள்ளை இரண்டு பேரும் இந்த மாலையை உனக்கு அணிவிக்கிற இந்த நொடியில இருந்து உன்னோட மகிழ்ச்சி, துக்கம் எல்லாமா உனக்கு நான் இருப்பேன்னு அம்மனை சாட்சியா வைத்து சங்கல்பம் எடுத்துக்கிட்ட மாலை பொண்ணு கழுத்துல முதல்ல போடுங்க...” என்று கூறியதும் ரிஷியும்,ரித்வியும் அதன்படி செய்ய பெண்களிருவரும் வெட்கத்தால் சிவந்து தலைகுனிந்து தங்கள் மணமாளன் இட்ட மாலையை மனதில் காதலுடனும் , ஆனந்தத்துடனும் வாங்கிக்கொண்டனர்....
“அடுத்து கல்யாணப் பொண்ணு இரண்டு பேரும் உங்க துணைக்கு ஒரு நல்ல தாரமாகவும், உங்க சந்ததியை பேணிக்காக்கும் தாயாகவும் இருந்து நம்ம வாழ்க்கையை செழிப்பாக வளரச்செய்வேன்னு அம்மன் முன்னாடி சங்கல்ப்பம் எடுத்துக்கிட்டு உங்க கையில இருக்க மாலையை பையன் கழுத்துல போடுங்க...” என்றதும் ஹேமாவும், ஶ்ரீயும் தத்தமது துணையை நெருங்க அவர்களும் சற்று குனிந்து அவர்களை கையில் வைத்திருந்த மாலையை அணிவதற்கு ஏதுவாக நின்றிருந்தனர்.
சற்று வெட்கத்தோடு தம் துணைகள் அணிவித்த மணமாலையை வாங்கிய ரிஷியும், ரித்வியும் தத்தமது ஜோடிகளுக்கு உதடுகளை குவித்துகாட்டி பறக்கும் முத்தத்தை தெறிக்கவிட்டனர்... அதை பார்த்த ஹேமாவும் ஶ்ரீயும் வெட்கத்தில் தலையை குனிந்துகொள்ள அங்கு நின்றிருந்த இளைஞர்பட்டாளம் ஒரு ஓ போட பெரியவர்கள் பட்டாளம் அவர்களை முறைத்தது....
மாலைமாற்றும் சடங்கு முடிந்ததும் அம்மன் கையில் தொங்கவிடப்பட்டிருந்த மஞ்சள் தாலியை எடுத்துவந்த பூசாரி ரிஷியின் அன்னை தந்தையை அழைத்து அவர்கள் கையால் தாலியெடுத்து கொடுக்கச்சொல்ல சுபாவும், மூர்த்தியும் தம் குலதெய்வமான வடுவச்சம்மனை மனதால் நன்றாக பிரார்த்தித்துக்கொண்டு தாலி கோர்க்கப்பட்டிருந்த அந்த மஞ்சள் கையிற்றை ரிஷியின் கையிலும், மற்றொரு தாலி கயிற்றை ரித்வியிடமும் கொடுத்துவிட்டு அட்சதையை கையில் எடுத்துக்கொண்டனர். மற்றவர்களும் கையில் அட்சதையை வாங்கிக்கொண்டதும் மணமகன் இருவரும் அம்மனை வேண்டிக்கொண்டு பூசாரி கூறிய அந்த காயத்ரி மந்திரத்தை மூன்றுமுறை உச்சரித்தபடி தத்தமது துணைகளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டனர்.
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன கேத்துனா
கண்டே பத்நாமி சுபகேத்தவம்
ஜீவா சரதாம் சதம்
அனைவரும் அட்சதயை தூவ இரு மணமகன்களும் முடிச்சிட்டு நிமிர அவர்களை தம்பதி சமேதராய் அக்னி குண்டத்திற்கு எதிரே அழைத்து சென்ற பூசாரி அதன் மேல் பூத்தூவி வழிபடக்கூறியவர்
“அந்த வடுவச்சம்மன் சாட்சகயாகவும்,பரிசுத்தத்தின் கடவுளாக விளங்குகின்ற அக்னி தேவனையும் சாட்சியாகவும் வைத்து நடந்த கல்யாணத்துக்கு என்னைக்கும் துணையாகவும், அரணாகவும் பஞ்சபூதங்களும், முக்கோடி, மூவுல தேவர்களும் இருக்கனும்னு வேண்டிக்கிட்டு இந்த பூவை அக்னிகுண்டத்துல போடுங்க..” என்று பூசாரி கூற தம்பதிகள் இருவரும் அதேபோல் செய்தனர்...
பின் மீண்டும் அம்மன் சன்னிதானத்திற்கு அழைத்துவந்த பூசாரி அம்மன் கையிலிருந்து குங்குமத்தை ரிஷி மற்றும் ரித்வியின் கையில் கொடுத்து ஶ்ரீ மற்றும் ஹேமாவின் வகிட்டில் இடச்சொல்ல அவர்களும் தம் மோதிர விரலால் திலகத்தை எடுத்து தம் துணைகளின் வகிட்டில் இட்டனர்.
திலகமிட்டதும் தம்பதிகளை பெற்றோரிடம் ஆசிவாங்கக்கூறியவர் பின் அம்மன் சன்னிதானத்தை வலம் வரச்சொன்னார்...
இரு தம்பதிகளும் முதலில் மூர்த்தி மற்றும் சுபாவின் காலில் விழுந்து ஆசி பெற அவர்களும் ஆனந்தக்கண்ணீருடன் தன் இரு மக்களையும் அட்சதையிட்டு ஆசிர்வதித்ததனர். பின் ராதாவும் ராஜேசும் ஆசிர்வதிக்க அவர்களை தொடர்ந்து ராஜரட்ணமும் ரஞ்சனியும் இரு தம்பதிகளையும் ஆசிர்வதித்தனர். அவர்களை தொடர்ந்து சஞ்சு, அனு, ப்ரீதா, ரவி, சுந்தர்,ஹரி என்று அனைவரும் அவரவர் முறைப்படி இரு தம்பதிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். பின் அம்மன் சன்னிதானத்தை வலம் வந்தவர்கள் பெற்றோர் சகிதம் பூசாரிக்கு தட்சணையை கொடுத்துவிட்டு அனைவரும் கிளம்பினர்.
ரிஷி,ஶ்ரீ, மற்றும் ஹேமாவின் குடும்பத்தார் அந்த மினி பஸ்ஸில் கிளம்பிவிட ரிஷி-ஶ்ரீ, ரித்வி-ஹேமா அவர்களது காரில் வருமாறு பணிக்கப்பட்டனர். ரிஷி தன்னுடைய காரை எடுக்க ரித்வியும் ஹேமாவை அழைத்துக்கொண்டு தன் காரை நோக்கிச்சென்றான்...
இரு ஜோடிகளும் திருமணத்திற்கு பின்னான தம் இணைகளுடனான முதல் பயணத்தை காதலால் ரசித்துபடி அதை எதிர்கொள்ள தயாராகினர்...
இரவாக நீ நிலவாக நான்
உறவாடும் நேரம் சுகம்தானடா
தொலையும் நொடி கிடைத்தேனடி
இதுதானோ காதல் அறிந்தேனடி
கரை நீ பெண்ணே
உனை தீண்டும் அலையாய் நானே
ஓ நுரையாகி நெஞ்சம் துடிக்க
ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என்னுயிரே காதோரோம் காதல் உரைக்க
ஓ ஒரு பார்வை வேண்டும் இறக்க
என்னுயிரே மறு பார்வை போதும் பிறக்க
இரவாக நீ நிலவாக நான்
உறவாடும் நேரம் சுகம்தானடா
தொலையும் நொடி கிடைத்தேனடி
இதுதானோ காதல் அறிந்தேனடி
விழி தொட்டதா விரல் தொட்டதா
எனதாண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா
அனல் சுட்டதா குளிர் விட்டதா
அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா
நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும்
உன் தோள் சாயும் இடம் போதுமே
உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும்
இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்
ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க என் உயிரே
காதோரம் காதல் உரைக்க
மழை என்பதா வெயில் என்பதா
பெண்ணே உன் பேரன்பை நான் புயல் என்பதா
மெய் என்பதா பொய் என்பதா
மெய்யான பொய் தான் இங்கே மெய் ஆனதா
அடியே பெண்ணே அறியாத பிள்ளை நானே
தாய் போல் என்னை நீ தாங்க வா
மடி மேல் அன்பே பொன் ஊஞ்சல் நானும் செய்தேன்
தாலாட்ட உன்னை அழைப்பேன்