நீயே

வாழ்க்கையென்று

இனி வாழும்

நாட்கள் எல்லாம்.....

அன்று காலை தலைக்கு குளித்துவிட்டு ட்ரெஸ்சிங் டேபிளின் முன் நின்று தயாராகிக்கொண்டிருந்தாள் ஹேமா. அப்பொழுது தான் கண்விழித்த ரித்வி கண்களை கசக்கிக்கொண்டு மனையாளை தேட அவள் உடைமாற்றிக்கொண்டிருப்பதை கண்டவன் கட்டிலில் படுத்தபடியே விசிலடித்து தன்னவளை அழைத்தான்... ஹேமாவோ கண்ணாடி வழியே கண்களாலே என்னவென்று கேட்க ரித்வியோ உதடுகளை குவித்துக்காட்ட ஹேமாவோ முறைத்துவிட்டு தன் வேலையை கவனிக்கத்தொடங்கினாள்... மீண்டும் ரித்வி அதேபோல் செய்ய அவனை இப்போது நேரடியாகவே திரும்பி முறைத்த ஹேமா

“இப்போ உனக்கு என்ன வேணும்???” என்று சேலை மடிப்பை கையில் வைத்தபடி ரித்வியை முறைக்க ரித்வியோ

“என்னோட ஸ்வீட் மிக்கி மவுஸ் ஏன் இப்போ இவ்வளவு கோபமா இருக்கு???”

“மிக்கி மவுசுனு கூப்பிடாதனு எத்தனை தடவை சொல்லுறது???”

“ஹாஹா... அந்த பெயரை வாய்நிறைய கூப்பிட்டா மனசுக்கு சும்மா குளு குளுனு இருக்கு மிக்கி மவுஸ்...” என்று மீண்டும் ஹேமாவை ரித்வி கடுப்பேற்ற சேலைமடிப்பை இடுப்பில் சொருகியவள் கட்டிலருகே வந்து தலையணையை எடுத்து அவனை மொத்தத்தொடங்க முதலில் சில அடிகளை விரும்பி பெற்றவன் பின் அவளை தடுக்கும் முகமாக இடுப்பை வளைத்து கொசுவத்தை இழுத்துவிட ஊசியால் சரிப்படுத்தப்படாத கொசுவம் கழன்றுவிட அதை பிடிக்க முயன்றவள் பின்னே விலக முயல ரித்வியோ கழன்ற கொசுவத்தின் மறுமுனையை பிடித்துக்கொள்ள ஹேமாவோ

“டேய் சேலையை விடுடா.... முழுசா கழண்டுற போகுது... இன்னும் சரியா பின் பண்ணலடா...” என்று கொசுவப்பகுதியை ஒரு கையாலும் முந்தானை துண்டினை மறுகையாலும் பிடித்தபடி ஹேமா கெஞ்ச ரித்வியோ

“இவ்வளவு நேரம் என்னை என்னா அடி அடிச்ச... இன்னைக்கு உன்னை விடுறதா இல்லை....” என்று மீண்டும் கொசுவப்பகுதியை இழுக்க ஹேமாவோ இன்னும் கழன்றுவிட கூடாது என்று ரித்வியருகே செல்ல அவனோ ஹேமாவை இழுத்து தன்மடி மீது அமர்த்தியவன் அவளை கட்டிக்கொண்டு

“மாட்டுனியாடி மிக்கிமவுஸ்.... உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை அடிப்ப..... இன்னைக்கு உனக்கு அதுக்காக பனிஷ்ட்மண்ட் கொடுத்தே ஆகனும்....” என்று அவன் விரல்கள் அவள் மேனியில் ஊர்வலம் நடத்த அதை தட்டிவிட்டவள் அவன் எதிர்பாராத நேரத்தில் சேலையை வாரிச்சுருட்டிக்கொண்டு எழ அவளை கைபிடித்து தடுத்தவனிடம் பேசாத தன் வயிற்றில் துயில் கொண்டிருக்கும் அந்த ஆறுமாத கருவிடம்

“இங்கபாரு பேபி... அம்மா அப்பா மேல செம்ம காண்டுல இருக்கேன்னு சொல்லு... காலையிலேயே திட்டுவாங்காம வேலைக்கு கிளம்ப சொல்லு....”

“ஏனாம் பேபி உங்க அம்மா அப்பா மேல கோபமா இருக்காங்களாம்??” உங்க அப்பா என்ன தப்பு பண்ணாறாம்??? உங்க அம்மாகிட்ட கேட்டு சொல்லு பேபி...”என்று ரித்வியும் குழந்தையிடமே தங்கள் பஞ்சாயத்தை கொண்டு செல்ல அவனை முறைத்தபடியே

“ஆமா எல்லாம் சொன்னா தான் இவருக்கு நியாபகம் வரும்...” என்று முணுமுணுத்தபடி சென்றவளிடம்

“என்ன மிக்கி சொன்ன... கேட்கலை...” என்று குறும்பு சிரிப்புடன் கேட்டவனுக்கு முறைப்பை பரிசாய் கொடுத்துவிட்டு மீண்டும் உடையை சரிபடுத்த தொடங்கியவளை தடுத்தவன் எழுந்து சென்று வாட்ரோப்பில் இருந்து ஒரு பொதியை எடுத்துவந்தவன்

“இந்தா மிக்கி இதை கட்டிக்கோ...” என்று ஹேமாவிடம் நீட்ட கண்களில் ஆர்வத்துடன் ஹேமா ரித்வியை பார்க்க அவனோ

“நேற்று ஒரு க்ளையண்டை மீட் பண்ண அவரோட ஜவுளிக்கடைக்கு போயிருந்தேன்... அப்போ இந்த சாரியை பார்த்தேன்.. உனக்கு செட்டாகும்னு தோணுச்சி... அதான் வாங்கிட்டு வந்தேன்... நைட்டே கொடுக்கலாம்னு நினைச்சேன் மறந்துட்டேன்...” என்று கூற ஹேமாவின் முகம் மீண்டும் கடுப்பாக அதை மனதினுள் ரசித்தவன்

“மிக்கி இதை கட்டிட்டு ரெடியாக இரு.... நாம உன்னோட அம்மா அப்பாவை பார்த்துட்டு வரலாம்... அத்தையும் மாமாவும் உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க...” என்று கூற அதற்கு உம் கொட்டியவள் வேறு ஏதும் பேசாது இருக்க அவள் பார்க்காதவாறு சிரித்தவன் டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்...

ஹேமாவோ அவனை திட்டிக்கொண்டே அவன் கொடுத்த சேலையை மாற்றத்தொடங்கினாள்.

குளித்துவிட்டு இடுப்பில் டவலோடு வந்த ரித்வி ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன்னமர்ந்து முன்னுச்சியில் திலகமிட்டுக்கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன் தலையை சிலுப்ப அப்போது தான் நனைக்கப்பட்டிருந்த சிகையிலிருந்த நீர் ஹேமாவினை தீண்ட

“ராஜ் என்ன பண்ணுறீங்க???? பாருங்க சாரியில எல்லாம் தண்ணி....” என்று ஹேமா கூற மறுபடியும் ரித்வி அவ்வாறே செய்ய

“டேய் சொல்லிட்டே இருக்கேன்... மறுபடியும் அதையே பண்ணுற???? அப்புறம் வரமாட்டேன் சொல்லிட்டேன்...” என்று ஹேமா கூற அவள் முகத்தருகே குனிந்தவன்

“ஏன் மிக்கி எப்பவும் ஹாட்டாவே இருக்க?? நீ ஹாட்டா இருப்பதை பார்க்கும் போது எனக்கு என்னென்னவோ தோனுது பேபி.....”

“காலையிலேயே ரொமான்சா??? கடுப்பை கிளப்பாமல் போயிட்டு ரெடியாகு...” என்றவள் எழுந்து சென்று அறையிலிருந்து வெளியேறினாள் ஹேமா...

ரித்வியோ “மேடம் செம்ம காண்டுல இருக்காங்க போல... அதான் ஒரு சின்ன ரெஸ்ட்பான்ஸ் கூட இல்லை... பார்ப்போம் இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இதை மெயின்டெயின் பண்ணுறாங்கனு...” என்றவன் கிளம்பத்தயரானான்...

அறைக்கு இரண்டு காபி கப்புடன் வந்த ஹேமா ரித்வியிற்கு ஒன்றை கொடுத்துவிட்டு மற்றையதை எடுத்துக்கொண்டு பால்கனியில் சென்று அமர்ந்துகொண்டாள்... காபியை குடித்துமுடித்தவன் பால்கனிக்கு வர கண்களில் நீருடன் அமர்ந்திருந்த ஹேமாவை பார்த்ததும் பதறியவன் அவளருகே சென்று

“ஹேய் மிக்கி... என்னாச்சு... எதுக்கு அழுற????”

“நீ மறந்துட்டல...??”

“ஹேய்... அப்படி...”

“இல்லை நீ மறந்துட்ட... ஏன்டா மறந்த.... மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?? நான் நேத்து நைட்டுல இருந்து நீ விஷ் பண்ணுவனு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. ஆனா உனக்கு அது நியாபகத்துலயே இல்லை.... அப்போ நீயும் மத்தவங்க மாதிரி தானா??? கல்யாணம் முடிஞ்சதும் எல்லாத்தையும் மறந்திடுவியா??? போடா என்கிட்ட பேசாத... ஐ ஹேட் யூ..... போடா..” என்று அழுதுபடியே சொன்னவள் அவன் மார்பில் சாய்ந்து அழ அதில் அவள் எதிர்பார்ப்பு புரிய

“ஹேய் மிக்கி... இங்க பாரு.. நான் சொல்லுறதை முழுசா கேளு.... நான் எதையும் மறக்கலடி... இந்த சாரி கூட இன்னைக்கு என்ன நாள்னு மறக்காததால தான் வாங்கிட்டு வந்தேன்... உனக்கு சப்ரைஸ் கொடுக்கலாம்னு சும்மா கதை சொன்னேன்...” என்று ரித்வி கூற ஹேமாவோ

“சும்மா என்னை சமாதானப்படுத்துறதுக்காக ஏதாவது சொல்லாத...”

“இல்லை மிக்கி... நிஜமாக தான் சொல்லுறேன்... இரு உனக்கு நான் சொன்னது உண்மைனு ப்ரூவ் பண்ணுறேன்...” என்றவன் எழுந்து சென்று இன்னொரு பொதியுடன் வந்தான். அதை ஹேமாவிடம் கொடுத்தவன் பிரித்துபார்க்க சொன்னான்.

அந்த பொதியினுள் காட்பரி சாக்லேட் ஒரு பண்டல் இருந்தது... அதை பார்த்தவள் ரித்வியை பார்க்க

“இப்போவாவது நம்புறியா????”

“அப்போ ஏன்டா இவ்வளவு நேரம் விஷ் பண்ணலை...??”

“நீ ஏன் மிக்கி விஷ் பண்ணலை....”

“எப்பவும் நீ தானே விஷ் பண்ணுவ... அதான் உன்னோட விஷசுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. நீ ஏன் விஷ் பண்ணலை...??”

“சும்மா உன்னை கொஞ்ச நேரம் கடுப்பேற்றி பார்க்கலாம்னு தான்..”

“எனக்கு எவ்வளவு பீல் ஆச்சு தெரியுமா???”

“நீ கோபப்படுவனு தான் நினைச்சேன்... இப்படி பீல் பண்ணி அழுவனு நான் நினைக்கலை மிக்கி... சாரி மிக்கி...”

“எனக்கு நீ விஷ் பண்ணலனு ரொம்ப அப்சட் ஆகிடுச்சு ராஜ்.. அதான் அழுகை வந்திடுச்சு...”

“சரி... வா கோயிலுக்கு கிளம்பலாம்..”

“அம்மா அப்பாவை பார்க்க கூட்டிட்டு போறேன்னு சொன்ன??”

“அதுவும் சும்மா தான்...”

“நல்லா வருவீங்க பாஸ்....”

“தாங்க்யூ...” என்றவனது தலையை கலைத்துவிட்டவள் ரித்வியோடு வெளியே கிளம்பினாள்.

முதலில் கோவிலுக்கு சென்றவர்கள் பின் தாம் படித்த காலேஜிற்கு அருகிலிருந்த காபிஷாப்பிற்கு சென்றார்கள்.

இது கடந்த நான்கு வருடங்களாக இந்நாளில் இடம்பெறும் முக்கிய நிகழ்வு... இந்நாளில் தான் ஹேமா ரித்வியின் காதலை ஏற்றுக்கொண்டாள்.. பிறந்தநாளை மறந்தால் கூட பெரிதுபடுத்தாதவள் இந்த நாளை மறந்தால் ரித்வியை உண்டு இல்லையென்றாக்கிவிடுவாள். ஒருமுறை இந்நாளில் ரித்வி ஹேமாவிற்கு அழைக்க சற்று தாமதமாகிவிட அவனுக்கு அழைத்தவள் நன்றாக திட்டிவிட்டு அவன் நம்பரை பிளாக் செய்துவிட்ட போனை அணைத்துவிட்டாள். அவளை தொடர்புகொள்ள முயற்சி செய்தவனுக்கு பலன்கிடைக்கமால் போக ஶ்ரீயின் உதவியோடு ஹேமாவை அணுகியவன் பெரும்பாடு பட்டு அவளை மலையிறக்கினான்...

காபி ஷாப்பிற்கு வந்ததும் காபி ஆடர் செய்துவிட்டு எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை... எப்போதும் அவர்கள் இருவரும் தத்தமது காதலை உணர்ந்த தருணத்தை எண்ணி மகிழ்ந்தவர்கள் காபி வந்ததும் தத்தமது காபி கப்பினை எடுத்துக்கொண்டனர்.

காபியின் முகப்பில் வெள்ளைநிற இதயவடிவ உருவம் இருந்தது... காபி ஒரு மிடறு குடித்தவர்கள் பின் தத்தமது துணைக்கு தாம் வாங்கியிருந்த பரிசிப்பொதியை கப்போடு வைத்து தத்தமது துணையின்புறம் தள்ளினர் இருவரும்...

ஹேமாவின் கோப்பையினை எடுத்து ருசித்தவன் அவளது பரிசை திறந்து பார்க்க உள்ளே சென்றமுறை இருவரும் வாங்குவதாய் முடிவு செய்திருந்த பாதி இதயம் பதிக்கப்பட்டிருந்த டயமண்ட் மோதிரம் இருந்தது... அதை கையில் எடுத்தவன் அவளிடம் நீட்ட அவளும் அதை வாங்கி அவன் விரலில் அணிவித்தவள் காட்பரி சாக்லேட் ஒன்றையும் நீட்டினாள்... அதை ரித்வி வாங்கியதும் அவனது காபி கோப்பையிலிருந்த பரிசினை எடுத்தவள் அதை திறந்து பார்க்க அதில் மறுபாதி இதயம் பதிக்கப்பட்ட டயமண்ட் மோதிரம் இருக்க அதை எடுத்து ரித்வியிடம் நீட்ட அதை வாங்கி அவள் கையில் அணிவித்தவன் அவனது பாக்கெட்டில் வைத்திருந்த காட்பரி ஒன்றை ஹேமாவிடம் நீட்ட அதை சிரித்தபடி வாங்கினாள் ஹேமா...

இருவரும் அந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கும் முகமாக ஒரு செல்பியை எடுத்தவர்கள் பின் காபியை காலி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பி உணவருந்த ரெஸ்டாரண்ட் சென்றனர்.... இவ்வாறு அந்த நாளை முழுதும் வெளியிலேயே கழித்தவர்கள் இரவு வீடு வந்து சேர்ந்தனர்.

இரவு படுக்கையில் விழுந்த இருவருக்கும் மனம் முழுதும் மகிழ்ச்சி கொட்டிக்கிடந்தது...

படுத்திருந்தபடியே ஹேமாவிடம் ரித்வி

“மிக்கி நீ ஹாப்பியா???”

“ரொம்ப ஹாப்பி மாம்ஸ்.. இந்த வருஷம் எப்பவும் கொண்டாடுறதை விட ரொம்ப ஹாப்பியா கொண்டாடுனேன்... உனக்கு எப்படி பீல் ஆகிச்சு மாம்ஸ்...??”

“கொஞ்சம் கவலையா இருந்துச்சு..”

“ஏன் ராஜ்... ??”

“உன்னை இந்த மாதிரி நேரத்துல ரொம்ப அழவச்சிட்டேனே.. அதான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது...”

“அதெல்லாம் ஒன்றும் இல்லை... நான் லைட்டா தான் கவலைபட்டேன்... அதை விட ரொம்ப ஹாப்பியா இருந்தேன்...”

“அப்படியா... சரி அப்போ உன்னை சந்தோஷப்படுத்துன எனக்கு என்ன கிப்ட் தரப்போற???”

“என்ன வேணும்னு கேளு... தாரேன்...”

“எது கேட்டாலும் தருவியா??”

“ம்.. நீ கேளு...”

“உம்மா தா...”

“எங்க தர...??”

“பார்டா... என் பொண்டாட்டி இன்னைக்கு செம்ம பாம்ல தான் இருக்கா....”

“நீ தானே கேட்ட....”

“நீ தர வேணாம்... நானே எடுத்துக்குறேன்... நீ கொஞ்சம் வசதியா எழும்பி உட்காரு... பேபிமாவை டிஸ்டர்ப் பண்ணாம கொடுக்கனும்...”

“டேய் கால் ரெண்டும் கடுக்குதுடா... இப்போ எழும்ப முடியாது... இப்படியே குடுக்குறேன் வாங்கிக்கோ...”

“கால் கடுக்கதுனு முன்னாடியே சொல்லவேண்டியது தானே... இரு வர்றேன்” என்று எழுந்து சென்ற ரித்வி அவளுக்கு ஒத்தடம் கொடுப்பதற்கான பொருட்களை எடுத்து வந்தவன் கால்களிரண்டிற்கும் ஒத்தடம் கொடுத்துவிட்டு கால்களை பிடித்துவிட்டான்... அது தந்த சுகத்தில் ஹேமா கண்ணயரந்துவிட அவளுக்கு போர்த்திவிட்டவள் விளக்கை அணைத்துவிட்டு ரித்வியும் அருகில் படுத்துவிட்டான்...

பாரதி காதலியே

கண்ணம்மா கண்ணம்மா

தீராத காதல் நீயே

செல்லம்மா செல்லம்மா

உன் மடியில் மயங்கி கிடந்து

என் மனதை தொலைக்கிறேன்

உன் விரல்கள் பிடித்து நடந்து

என் துயரம் துடைக்கிறேன்

கண்ணம்மா கண்ணம்மா

என் வாழ்வின் அர்த்தம் நீயம்மா

மனதோரம் மழை தூவும்

நீ வந்தால் பக்கத்திலே

விழியோரம் சிறையானேன்

பெண் உந்தன் வெட்கத்திலே

அறிவாயா என் தோழி

அழகே நீ என் ராணி

அருகே கொஞ்சம் வா நீ

செல்லம்மா

கண்ணம்மா கண்ணம்மா

என் வாழ்வின் அர்த்தம் நீயம்மா..

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.